PDA

View Full Version : கூகிளாண்டவரின் புதிய உலாவி - குரோம்

ஸ்ரீதர்
04-09-2008, 03:54 AM
நண்பர்களே ,

கூகிளில் இப்போது IE க்கு போட்டியாக உலாவி (Browser) க்ரோம் என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள்.

நான் குரோம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கியுள்ளேன்.

இதில் மெனுக்களே காணவில்லை. உதாரணத்திற்கு Favorites பார்க்க வேண்டும் என்றால் எப்படி பார்ப்பது??

மற்ற மன்ற நண்பர்களை குரோம் பற்றிய தங்களின் கருத்துக்களை தெரிவிக்க கோருகிறேன்.

நன்றி.

aren
04-09-2008, 04:04 AM
நானும் படித்தேன். நல்ல போட்டிதான்.

நான் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை. உபயோகப்படுத்தி பார்க்கவேண்டும்.

எனக்கென்னவோ கூடியவிரைவில் மைக்ரோசாஃப்ட் கூகுளுக்கு ஒரு பெரிய ஆப்பு வைக்கும் என்றே நினைக்கிறேன்.

யாகூவை வெகுவிரைவில் மைக்ரோசாஃப்ட் வாங்கிவிடும் என்று தோன்றுகிறது.

ஓவியன்
04-09-2008, 04:05 AM
கூகிளின் புதிய இணைய உலாவி (Google Chrome)

இண்டர்நெட் எக்ஸ்புளோரர், ஃபயர் ஃபாக்ஸ், ஓபரா, நெட்ஸ்கேப், சஃபாரி, Sleipnir என்று நீளும் இணைய உலாவிகளில் புதிதாக கூகிள் நிறுவனம் தன் புதிய அறிமுகமான கூகிள் குறோமையும் இந்த செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி களத்தில் இறக்கியுள்ளது. முதலில் வெளியாகியுள்ள Google Chrome இன் பிரதி மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டங்களுக்கே வடிவமைக்கப் பட்டுள்ளது. மற்றைய ஆபரேட்டிங் சிஸ்டங்களுக்கான ( Mac OS X, Mac OS X) பிரதிகள் தயாரிப்பு நிலையில் இருப்பதாகவும் வெகு விரைவில் அறிமுகப் படுத்தப் படுமென கூகிள் நிறுவனம் கூறுகிறது.

இணையத்திலிருக்கும் வேண்டாத மென்பொருட்களின் தாக்குதலுக்கு எதிரான வலிமையான பாதுகாப்புத் திட்டங்களை உள்ளடக்கியதுடன் மற்றைய உலாவிகளான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7, 8, ஃபயர் ஃபாக்ஸ் 3, சஃபாரி போன்றவற்றிலும் வேகம் மிகுந்ததாக இந்த உலாவி காணப்படும் அதே வேளை இதன் வேகம் ஓபரா உலாவியுடன் இன்னமும் ஒப்பீடு செய்யப்படவில்லை என்றும் கூறுகிறார்கள் (:D). ஆனால் முன்னர் ஃபயர் ஃபாக்ஸ் 3 உடனான ஒப்பீட்டில் ஓபரா ஃபயர் ஃபாக்ஸ் 3 ஐ விட வேகம் குறைந்ததாக நிரூபிக்கப் பட்டிருந்ததாம்.

பார்வைக்குப் பெரும்பாலும் விண்டோஸ் எக்ஸ்புளோர் போன்றே தோற்றமளிக்கும் கூகிள் குரோம் மற்றைய உலாவிகளை விட எனக்குக் கொஞ்சம் கவர்ச்சிகரமானதாகத் தெரியும் அதே வேளை அட்ரஸ் பாரிலேயே தேடும் தளத்தினை உள்ளடக்கியுள்ள விதம் மிகவும் கவர்ந்துள்ளது. ஹோம் பேஜாக ஒரு தேடும் தளத்தினை வைத்திருக்கும் தேவையினை இந்த உலாவி இல்லாமல் செய்கிறது. அத்துடன் தொடர்ச்சியாக நாம் உலாவும் தளத்தின் முதற்பக்க தொடுப்பை சிறிய படங்களாக சேமித்து வைத்திருக்கும் முறை நன்றாக இருக்கின்றது.

இருந்தாலும் தமிழ் மன்றத்தினுள் நுளைந்து தமிழிலே தட்டச்சினால் எழுத்துக்கள் தம் இஸ்டத்துக்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கோளாறு செய்வது நம் எல்லோரையும் பொறுத்த வகையில் மிகப் பெரிய குறையே....

இருந்தாலும் ஒரு தடவை இந்த உலாவியை நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள் நண்பர்களே....

இந்த உலாவி தொடர்பான கூகிள் நிறுவனத்தின் அலுவலக அறிக்கை இதோ... (http://googleblog.blogspot.com/2008/09/fresh-take-on-browser.html)

இந்த உலாவியனைப் பற்றிய விளக்கங்களுக்கு.... (http://www.google.com/googlebooks/chrome/index.html)

இந்த உலாவியினைத் தரவிறக்கம் செய்ய... (http://www.google.com/chrome/index.html?hl=en&brand=CHMG&utm_source=en-hpp&utm_medium=hpp&utm_campaign=en)

ஓவியன்
04-09-2008, 04:11 AM
Favorites பார்க்க வேண்டும் என்றால் எப்படி பார்ப்பது??

Favorites என்பது இதிலே இல்லை, ஆனால் இதற்கு இணையாக Bookmarks வசதி இதில் இணைக்கப்பட்டுள்ளது. உலாவியின் இடதுபக்கத்தில் அட்ரஸ்பாருக்கு அருகே உள்ள நட்சத்திரத்தினைக் கிளிக் செய்தால் அந்த நேரம் அந்த அட்ரஸ் பாரிலுள்ள இணைய முகவரி புக்மார்ஸினுள் இணைக்கப்படும். அதே வேளை உலாவியின் வலது பக்கத்திலுள்ள Other Bookmarks என்பதைக் கிளிக் செய்தால் இதுவரை நீங்கள் மார்க் செய்துள்ள தளங்களின் லிஸ்ட் கிடைக்கும்...

ராஜா
04-09-2008, 04:34 AM
தடேல் (தேடல்) பூச்சியா..?

அப்போ நமக்கு சரிப்பட்டு வராதுப்பா..?

ஓவியன்
04-09-2008, 05:35 AM
தடேல் (தேடல்) பூச்சியா..?

இது கொஞ்சம் நல்ல பூச்சியாகப் படுகிறது அண்ணா..!! :)

ஸ்ரீதர்
04-09-2008, 05:43 AM
கூகிளின் புதிய இணைய உலாவி (Google Chrome)

இருந்தாலும் தமிழ் மன்றத்தினுள் நுளைந்து தமிழிலே தட்டச்சினால் எழுத்துக்கள் தம் இஸ்டத்துக்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கோளாறு செய்வது நம் எல்லோரையும் பொறுத்த வகையில் மிகப் பெரிய குறையே....

ஆமாங்க !! என் உபயோகிப்பாளர் பெயரை தட்டச்சுசெய்து , அலுத்துப்போய் , மீண்டும் இண்டர்நெட் எக்ஸ்புலோரருக்கே வந்துவிட்டேன். நம் மன்றத்தை இந்த உலாவியில் பார்க்கமுடியாதது ஒரு குறையே!!

poornima
04-09-2008, 07:24 AM
கூகிளின் புதிய இணைய உலாவி (Google Chrome)

பார்வைக்குப் பெரும்பாலும் விண்டோஸ் எக்ஸ்புளோர் போன்றே தோற்றமளிக்கும் கூகிள் குரோம் மற்றைய உலாவிகளை விட எனக்குக் கொஞ்சம் கவர்ச்சிகரமானதாகத் தெரியும் அதே வேளை அட்ரஸ் பாரிலேயே தேடும் தளத்தினை உள்ளடக்கியுள்ள விதம் மிகவும் கவர்ந்துள்ளது. ஹோம் பேஜாக ஒரு தேடும் தளத்தினை வைத்திருக்கும் தேவையினை இந்த உலாவி இல்லாமல் செய்கிறது. அத்துடன் தொடர்ச்சியாக நாம் உலாவும் தளத்தின் முதற்பக்க தொடுப்பை சிறிய படங்களாக சேமித்து வைத்திருக்கும் முறை நன்றாக இருக்கின்றது.

[COLOR="Red"]இருந்தாலும் தமிழ் மன்றத்தினுள் நுளைந்து தமிழிலே தட்டச்சினால் எழுத்துக்கள் தம் இஸ்டத்துக்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கோளாறு செய்வது நம் எல்லோரையும் பொறுத்த வகையில் மிகப் பெரிய குறையே....

ஆம் ஓவியன் நா.. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.இன்னொன்று தேடலின் போது நம் இணைய உலவியில் உள்ள ஹிஸ்டரியையும் பயன்படுத்திக் கொள்கிறது..என்ன என்ன செய்தோம் எங்கு போனோம் என்பதையும் பட்டியலிடுகிறது.. ஆனால் நீங்கள் சொன்ன தமிழுடன் பின்னிப் பிணையும் பிரச்னை முகவரிப் பட்டையிலும் வருகிறது.கவனித்தீர்களா.. என்னால் அதன் தேடுபெட்டிக்குள் ஒருவார்த்தை முழுவதுமாய் தமிழில் தட்ட முடியவில்லை.

பீட்டா பதிப்பென்றாலே கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. இருந்தாலும்
இ.எ - வை வெற்றிக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க
வேண்டும்

ஓவியன்
04-09-2008, 07:59 AM
உண்மைதான் பூர்ணிமா, தமிழுடன் கூகிளின் குரோம் எல்லா இடங்களிலும் சிண்டு பிடிக்கிறது..!! :rolleyes:

அறிஞர்
05-09-2008, 10:03 PM
குரோம் நன்றாக உள்ளது.. தமிழ் பிரச்சனை உள்ளது.

ஆனால் 10 மடங்கு குறைவான இடத்தையே ஆக்கிரமிக்கிறது (மெமரியில்). இது பெரிய சாதனை.

அவர்களுக்கு மடல் அனுப்பியுள்ளேன்.. முடிந்தால் பிரச்சனை பற்றி தாங்களும் மடல் அனுப்புங்கள்.... (10 கோடி தமிழ் மக்கள் என கூறியுள்ளேன்).

வெற்றி
06-09-2008, 12:31 PM
குரோம் நன்றாக உள்ளது.. தமிழ் பிரச்சனை உள்ளது.

ஆனால் 10 மடங்கு குறைவான இடத்தையே ஆக்கிரமிக்கிறது (மெமரியில்). இது பெரிய சாதனை.

அவர்களுக்கு மடல் அனுப்பியுள்ளேன்.. முடிந்தால் பிரச்சனை பற்றி தாங்களும் மடல் அனுப்புங்கள்.... (10 கோடி தமிழ் மக்கள் என கூறியுள்ளேன்).

னுபிடேன்றே

அனுப்பி விட்டேன் அறிஞரே ...
(இந்த வாசகம் தான் மேலே குரோமில் அப்படி வந்து இருக்கிறது )

செல்வா
06-09-2008, 01:00 PM
நல்லாவே இருக்குங்க... நான் பாமினி முறையில் இயங்கும் இ-கலப்பை பயன் படுத்துகிறேன். தமிழில் தட்டச்சும் போது எந்தப் பிரச்சனையும் இல்லை.... அதிலிருந்து தட்டச்சியது தான் இது...

பாரதி
06-09-2008, 02:43 PM
நல்ல தகவல் நண்பர்களே. ஆரோக்கியமான போட்டி தமிழுக்கும் எல்லா வகையிலும் உதவினால் மகிழ்ச்சியே.

நன்றி.

ஷீ-நிசி
14-09-2008, 03:55 AM
http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx

இன்ஸ்டல் செய்யுங்க.. nhm software.

press alt+2 தமிழில் டைப் செய்ய..... கூகிள் குரோமிலும் சப்போர்ட் செய்யுது!

ஓவியன்
14-09-2008, 06:26 AM
நான் பாவிப்பதும் nhm software தான்...
ஆனா எனக்கு சப்போர்ட் பண்ணலையே........??? :confused: :confused: :confused:

பாரதி
14-09-2008, 07:22 AM
நான் பாவிப்பதும் nhm software தான்...
ஆனா எனக்கு சப்போர்ட் பண்ணலையே........??? :confused: :confused: :confused:

அன்பு ஓவியன்,
நீங்கள் முன்பு நிறுவியிருந்த மென்பொருளை குறிப்பிடுகிறீர்கள் எனில் அது உதவாது. அதை நீக்கி விட்டு, தற்போதைய பதிப்பை பதிவிறக்கி நிறுவுங்கள்.

அன்புரசிகன்
14-09-2008, 03:42 PM
எனக்கு அந்தமாதிரி தெரியுது... அதெப்படி ஒவ்வொரு இடத்திலும் விதம் விதமாக தோன்றுகிறது????

http://img27.picoodle.com/data/img27/3/9/14/f_Capturem_6e33f3a.jpg

சூரியன்
14-09-2008, 03:47 PM
இன்று அந்த உலவியில் சென்று பார்த்தேன் ஏதோ இருக்கிறது.

மயூ
16-09-2008, 06:22 AM
இருந்தாலும் தமிழ் மன்றத்தினுள் நுளைந்து தமிழிலே தட்டச்சினால் எழுத்துக்கள் தம் இஸ்டத்துக்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கோளாறு செய்வது நம் எல்லோரையும் பொறுத்த வகையில் மிகப் பெரிய குறையே....

இந்தப் பிழை குரோம் கட்டடமைப்பில் உள்ள பிழையினால் ஏற்படுகின்றது.தமிழ் மன்றம் மட்டுமல்ல அனைத்து யுனித்தமிழ் தளங்களிலும் குழப்பம் வரும். BACKSPACE விசையை தட்டும் போது அந்த கட்டளையைக் குழப்பி விடுகின்றது குரோம். புதிய பதிப்பில் இந்தப் பிழை நீக்கப்படுமாம்.

NHM Writer இதற்கான மாற்றத்தை தமது மென்பொருளில் உள்ளமைத்து புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர். இதைப் பயன்படுத்தி குரோமில் தட்டச்சிடலாம்.

மன்மதன்
16-09-2008, 12:27 PM
என்னால் க்ரோம் நிறுவ முடியவில்லை..

மற்ற எந்தவொரு மென்பொருளும் என் அலுவலக கணிணியில் இன்ஸ்டால் செய்ய முடியுது. ஆனால் இதை முடியலையே..

அறிஞர்
16-09-2008, 03:32 PM
என்னால் க்ரோம் நிறுவ முடியவில்லை..

மற்ற எந்தவொரு மென்பொருளும் என் அலுவலக கணிணியில் இன்ஸ்டால் செய்ய முடியுது. ஆனால் இதை முடியலையே..
குரோம் தற்பொழுது கிடைப்பது பீட்டா வெர்சன்.

அதாவது சோதனைக்காக ஏற்படுத்தப் பட்டது.

சோதனைக்காக தளங்கள் இருக்கும்பொழுது.. பாதுகாப்பு குறைவாக இருக்கும் என்பதால்.. பல அலுவலகங்களில் அனுமதிப்பதில்லை.