PDA

View Full Version : நடுகல்



நாகரா
03-09-2008, 05:32 AM
உளி தரும் இரணங்களே
உன்மத்தக் கல்லின் உறக்கம் கலைத்து
உயிர்ப்புள்ள சிலையாய்
அதை விழிக்க வைக்கின்றன

பாதையின் முட்களால்
பண்படாத வரை
நீயும்
உன்மத்தக் கல் தான்

இரணங்களுக்குப்
பயந்தது போதும்

உன்னைச் செதுக்கும்
பாதைக்கு வா

இரணங்களின் ஈரமேந்திப்
பாதையில் நட

பண்படுத்தும் பயணமின்றேல்
நீ
ஜீவனில்லாத வெறுங்கல்லே

நடுகல்

poornima
03-09-2008, 10:46 AM
ஆன்மீக பதிவுகளில் அதிர்கிறது மன்றம்..
ஆன்மிகம் மட்டுமே சுகம் தரும் என்றும்

உங்கள் நடுகல் அறிவைச் சீர்படுத்தும் உரைகல்லாய்..

பாராட்டுகள்..

இளசு
17-09-2008, 08:01 PM
தெய்வதமும் பேய்த்தனமும் கலந்து சமைந்த கல்..
சிந்தனைப் பக்குவ உளி ஒவ்வாததைச் செதுக்கிச் செதுக்கி... ...

தெய்வமாய் முழுதாய் ஆகாவிட்டால் என்ன?
தினமும் கொஞ்சமேனும் செதுக்கிக்கொண்டாலே போதும்!


பாராட்டுகள் நாகரா அவர்களே!

( எங்கே சில நாட்களாய் உங்கள் வரவு இல்லை???)

நாகரா
23-09-2008, 12:24 PM
உம் பாராட்டுகளுக்கு நன்றி பூர்ணிமா.

நாகரா
23-09-2008, 12:33 PM
தெய்வதமும் பேய்த்தனமும் கலந்து சமைந்த கல்..
சிந்தனைப் பக்குவ உளி ஒவ்வாததைச் செதுக்கிச் செதுக்கி... ...

தெய்வமாய் முழுதாய் ஆகாவிட்டால் என்ன?
தினமும் கொஞ்சமேனும் செதுக்கிக்கொண்டாலே போதும்!


பாராட்டுகள் நாகரா அவர்களே!

( எங்கே சில நாட்களாய் உங்கள் வரவு இல்லை???)

ஆணவப் பேய்
சில்லுகளாய்ச் சிதற
ஆண்டவராய்(ஆண் தவராய்)
முழுதாய் நீர் செதுக்கப்படும்
கணம் அதி விரைவில் வரும்!

உம் பாராட்டுகளுக்கு நன்றி இளசு.

பல புதிய ஆன்மீக வெளிப்பாடுகள் உலகோடு பகிரத் தயார் படுத்தப் படுகிறேனா?! காலம் தான் பதில் சொல்லும்! அகத் தவம் தொடர்கிறது, எனவே மன்றத்தில் என் வரவு தடைப்படுகிறது, நம்மிடையே அன்பு மட்டும் தடையின்றித் தொடர்கிறது! உம் அன்புக்கு நன்றி இளசு!