PDA

View Full Version : துணுக்குகள்



DivyaBharathi
02-09-2008, 04:07 AM
இனிப்புகள் மீந்து போனால், பிரிட்ஜில் வைக்கிறோம். இரண்டு நாட்களாகி விட்டால், அவை கெட்டிப் பட்டு சுவை குறைந்து விடுகின்றன. இந்த இனிப்புகளை கையால் உதிர்த்து, பால் ஊற்றி, அடி கனமான பாத்திரத்தில் போட்டு, நெய் ஊற்றி பதமாகக் கிளறினால், புதிய இனிப்பு தயாராகி விடும். கூடுதலாக இனிப்பு தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

ஓவியன்
02-09-2008, 04:14 AM
வாருங்கள் திவ்யபாரதி..!!

உங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தினை, அறிமுகப் பகுதியில் தரலாமே..??

____________________________________________________________________

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே....!!

இந்த திரியில் தொடர்ந்து இது போன்ற நல்ல விடயக் குறிப்புக்களைத் தொடரலாமே...??

DivyaBharathi
04-09-2008, 06:17 AM
உழைப்பு

கடும் வெயில்
மழையாய் கொட்டுகிறது
உழைப்பாளி வியர்வை

ஓவியா
04-09-2008, 09:05 AM
உழைப்பு

கடும் வெயில்
மழையாய் கொட்டுகிறது
உழைப்பாளி வியர்வை

திவ்யா,
இந்த ஹைக்கூ நீங்கள் யோசித்து எழுதியதா?

ஆம் எனறால் தொடருங்கள் உங்கள் சுய படைப்புக்களை.

இந்த ஹைக்கூ என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
சிறப்பாக இருக்கின்றது. உயர்ந்த சிந்தனை.

நன்றி.

ஆர்.ஈஸ்வரன்
04-09-2008, 09:43 AM
தங்களின் ஹைக்கூவிற்கு என்து பாராட்டுக்கள்

DivyaBharathi
20-11-2008, 09:42 AM
தோசை வார்க்கும் போது சுண்டிப்போனால் கவலைப்பட வேண்டாம். தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை ஸ்பூன் உப்புப் போட்டு கல் முழுவதும் தேய்த்து விட்டு பிறகு வார்த்தால் சுண்டாது.

வசீகரன்
20-11-2008, 11:54 AM
திவ்யா...தங்களின் ஹைகூவும் அருமை.. சமையல் டிப்பும் அருமை...
நிறைய ஹைகூக்களை கொடுங்கள்...!