PDA

View Full Version : சிலரும் பலரும்..!!



ஓவியன்
01-09-2008, 06:52 AM
இருள் சூழ்வதாய் சிலர்,
தோற்கடிக்கப் படுவதாய்
இன்னும் சிலர்,
தோற்று விடுவோமோ..?
நம்மிலும் சிலர்..
மூன்று சிலரும் பலராகிப்
பயமுறுத்துகிறார்கள்
நம் வாழ்வை...

சிந்தனையில் தெளிவு,
பாதையில் உறுதி,
அனுபவத்தின் செம்மை,
மூன்றும் கொண்டு
பலர் சிலரை வெல்ல
சிலர் பலரை வெல்லும்
காலம் ஒன்று கனியும்
விரைவினில்.....!!

இளசு
01-09-2008, 11:48 AM
எறும் படிகள் கடினம்
இறக்கும் வழுக்கல் எளிது..

சிலர் பலராவது, வெல்வது போல் தோன்றுவது அதனால்தான்..

முனைப்பும் கவனமும் வைத்து இக்கணக்கை சாதமாக்க
வாழ்க்கை வசமாகும்.

தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை கவிதைக்குப் பாராட்டுகள் ஓவியனுக்கு!