PDA

View Full Version : வாடாமல்லி.....



செல்வா
30-08-2008, 05:28 PM
என்னைக் பார்த்தவள்
தன் விரல்களால் கொய்து
கூந்தலில் சூடினாள்...
படிய வாரியக் கூந்தலில்
ஒற்றை அரசனாய்
கர்வத்துடன் அமர்ந்திருந்தேன்....

என்னிடம் பிடித்தது எது ?

அடர்ந்த என் வண்ணமா?
உருண்ட என் தேகமா?
கேட்டேன்
அமைதியான உன் சுபாவமும்
பற்று வோரை பற்றிக் கொள்ளும் பாசமும் ...
எனப் பதில் தந்தாள்...

தன் கரத்தால்
என்னிருப்பை எப்போதும்
உறுதிப் படுத்திக் கொண்டாள்

அவள் கரங்களின் கதகதப்பில்
களித்தேன்....
எங்குச் சென்றாலும் என்னைத்
தன்னோடு வைத்திருந்தாள்...

அடுத்த சில நேரத்தில்
என்னிலும் மென்மையான
வெண்மையானச் சிலர்
அவள் கரத்தில் குடிவந்தனர்...
நறுமணம் பரவியது அவர்களிடமிருந்து...
அந்த மணம் அவளுக்குப் பிடித்திருந்தது..
ஆனால் அது எனக்குப் பிடிக்கவில்லை...

எனது இதழ் முட்களால் என்னிருப்பைத்
தெரிவித்தேன்....
சட்டைசெய்யவில்லை..

என்னை ஓரத்தில் விலக்கி விட்டு
புதியவர்களை
கூந்தலில் குடிபுகுத்தினாள்...

சில நாளில்
வண்ணமயமாய் வந்தவர்கள்
தன்னிலை கலைத்தனர்
நிறம் தொலைத்தனர்
அவர்களிடமிருந்த வாசமும்
வீசிய தென்றலோடு தொலைந்து போனது...
அவர்களும் காற்றோடு கலந்து உதிர்ந்து மறைந்தனர் .....

கலைந்த கூந்தலின்
இடையில் ஓடிய நாரும்
நாரோடு ஒட்டியபடி நானும்
இன்னும் மீதமிருந்தோம்

நாரைத் பிய்த்தவள்
நாரோடு சிக்கியிருந்த
என்னையும் சேர்த்து
எறிந்தாள்....

நிறமும் குணமும்
மாற்றத் தெரிந்த
மல்லிகையாயிருந்தால்
நாரை விட்டு எப்போதோ
உதிர்ந்திருப்பேன்

நிறமும் குணமும்
மாற்ற இயலாத
வாடா மல்லியாகிய நான்
இன்னும் அவள் புடவை நூலில்
தொங்கியபடி அவளைத்
தொடர்கிறேன்....

அவளுக்குத் தெரியாமலேயே..
என் ...
நிறமும் குணமும் மாறாமலேயே...

இளசு
30-08-2008, 11:23 PM
எறிவது பூவையர் இயல்பு - வாடாமல்
இருப்பது இப்பூவின் இயல்பு!

அவரவர் இயல்பு சரி அவரவர்க்கு!
இரண்டுமே சரி - சராசரி பார்வையாளனுக்கு!

பல எண்ணங்களை மனத்திரையில் ஓடவைத்த கவிதை!

பாராட்டுகள் செல்வா!

செல்வா
31-08-2008, 12:50 AM
எறிவது பூவையர் இயல்பு - வாடாமல்
இருப்பது இப்பூவின் இயல்பு!

அவரவர் இயல்பு சரி அவரவர்க்கு!

பல எண்ணங்களை மனத்திரையில் ஓடவைத்த கவிதை!



ஆஹா..... நீங்களும் நிறைய யோசிக்க வைக்கிறீங்களே.......... :confused::confused: :D



பாராட்டுகள் செல்வா!

நன்றி அண்ணா..... :)

ஓவியன்
31-08-2008, 02:01 AM
ஒவ்வொரு பூவும் மலரும் போது, ஒவ்வொரு இலட்சியத்துடன் மலர்ந்திருக்கும்...
இறைவனின் சன்நிதானத்துக்கு போகவென்று சில...
இளம் பெண்களின் தலையில் அமரவென்று சில...
எல்லாப் பூக்களுக்கும் இத்தகைய இலட்சியம் இலகுவில் நிறைவேறுவதில்லை...
இந்நிலையில் எதாவது ஒரு இலட்சியம் நிறைவேறினாலே அது பூக்களின் வெற்றி தானே.....

அந்த வெற்றியுடனேயே வாடாமல்லி திருப்தியடையப் பார்க்கணும்...
தான் பெற்ற பேற்றைத் தன் இளையவர்களும் அடைய வேண்டுமென்று ஒதுங்க வேண்டும்....

அதுதான் அழகு, நிறம் குணம் மாறவில்லையே இன்னு தலையில் இருப்பேன் என்று
கிரிக்கட் அணியில் இன்னும் இடம் பிடிக்க துடிக்கும் சச்சின் டெண்டுல்கர் போல அடம் பிடிக்கக் கூடாது...!! :D:D:D

பாராட்டுக்கள் செல்வா, என்னையும் நிறைய யோசிக்க வைச்சிட்டீங்க..!! :)

செல்வா
31-08-2008, 07:08 AM
அதுதான் அழகு, நிறம் குணம் மாறவில்லையே இன்னு தலையில் இருப்பேன் என்று
கிரிக்கட் அணியில் இன்னும் இடம் பிடிக்க துடிக்கும் சச்சின் டெண்டுல்கர் போல அடம் பிடிக்கக் கூடாது...!! :D:D:D

பாராட்டுக்கள் செல்வா, என்னையும் நிறைய யோசிக்க வைச்சிட்டீங்க..!! :)

இதே கேள்வியைத் திருப்பியும் கேட்கலாம் அல்லவா... அதுதான் அழகு, நிறம் குணம் மாறவில்லையே அப்புறம் ஏன் தலையை விட்டு இறங்கணும்...???

பாராட்டுக்களுக்கு நன்றி ஓவியன்.... :)

ஓவியன்
31-08-2008, 07:10 AM
இதே கேள்வியைத் திருப்பியும் கேட்கலாம் அல்லவா... அதுதான் அழகு, நிறம் குணம் மாறவில்லையே அப்புறம் ஏன் தலையை விட்டு இறங்கணும்...??? :)

அப்புறம் ஏன் இன்னும், இன்னும் பல வாட மல்லிகள் பூத்துக் கொண்டிருக்கின்றன...??
அவைக்கு வாய்ப்புக் கொடுக்க கீழே இறங்குவதுதான் பெருந்தன்மை..!!

அமரன்
31-08-2008, 08:15 AM
நீ
பூவைப்பற்றிப் பாடி இருக்கியா..
பூவையரைப் பற்றிப் பாடி இருக்கியா.
பூ வையல் பற்றிப்பாடி இருக்கியா.

செல்வா
31-08-2008, 08:42 AM
நீ
பூவைப்பற்றிப் பாடி இருக்கியா..
பூவையரைப் பற்றிப் பாடி இருக்கியா.
பூ வையல் பற்றிப்பாடி இருக்கியா.

நான் எதைப் பற்றிப் பாடியிருக்கிறேன்கிறத அப்புறம் சொல்றேன் உனக்கு என்ன தோணுதுங்கிறத முதலில் சொல்லு....

ஆமா... அது என்ன பூ வையல் - மையலா? இல்லை வைதலா?

ஓவியன்
31-08-2008, 08:43 AM
அது என்ன பூ வையல் - மையலா? இல்லை வைதலா?

தையலை வைதல் என நினைக்கிறேன்..!! :D:D:D

செல்வா
31-08-2008, 08:44 AM
தையலை வைதல் என நினைக்கிறேன்..!! :D:D:D

தையல்கள் இணைந்து தையலிட்டுவிடுவார்கள் கவனம்.... :D:D

ஓவியன்
31-08-2008, 09:12 AM
தையல்கள் இணைந்து தையலிட்டுவிடுவார்கள் கவனம்.... :D:D

தையலை வைதல் செய்யும் எண்ணத்தை
இங்கு விதைத்ததே அமரனாயிருக்க
அதை ஏன் எனக்குச் சொல்லி வதைக்கிறீர்...?? :aetsch013:

செல்வா
31-08-2008, 09:17 AM
தையலை வைதல் செய்யும் எண்ணத்தை
இங்கு விதைத்ததே அமரனாயிருக்க
அதை ஏன் எனக்குச் சொல்லி வதைக்கிறீர்...?? :aetsch013:
விதைத்தவர் அவராயினும் நீரூற்றி வளர்த்தவர் நீரே... விதை(னை)யால் விளைவதும் உமக்கே...

ஓவியன்
31-08-2008, 09:56 AM
நீரூற்றி வளர்த்தவர் நீரே......

நீர் எங்ஙனம் நீரை ஊற்றும்...?? :D:D:D

செல்வா
31-08-2008, 10:08 AM
நீர் எங்ஙனம் நீரை ஊற்றும்...?? :D:D:D

நீரூற்று கேள்விப்பட்டதில்லையோ நீர் ...? :D:D:D:D

ஓவியன்
31-08-2008, 10:17 AM
நீரூற்று கேள்விப்பட்டதில்லையோ நீர் ...? :D:D:D:D

அப்போ நீரை ஊற்றுவதால் தான் நீரூற்றா...
சரி, சரி, விளக்கத்துக்கு நன்றி செல்வா..!! :icon_rollout:


நீரூற்று கேள்விப்பட்டதில்லையோ நீர் ...? :D:D:D:D

:D:D:D:D

ஓவியன்
31-08-2008, 10:33 AM
செல்வா அதென்ன வாடா மல்லி, போடா மல்லி...???
மல்லியை இப்படி வாடா, போடா என்று ஒருமையில் அழைக்கலாமா..??? :D:D:D

செல்வா
31-08-2008, 10:35 AM
அப்போ நீரை ஊற்றுவதால் தான் நீரூற்றா...
சரி, சரி, விளக்கத்துக்கு நன்றி செல்வா..!! :icon_rollout:



:D:D:D:D

நீரை நீரே (தண்ணீர்) ஊற்றினால் நீரூற்று என்ற பொருளைச் சொல்லும்
நீரை நீர் (ஓவியன்) ஊற்றினால் நீரூற்று (தண்ணீர் ஊற்றுவாய் ) என்ற வினையையும் சொல்லும்..

ஓவியன்
31-08-2008, 10:52 AM
நீர் (ஓவியன்)

இறுதியாக நீர் சொல்ல வருவது புரிகிறது...
அதாவது 'நீரும் ஓவியனும் ஒன்றே'..!! :icon_rollout:

நீரின்றி அமையாது உலகு...!! :lachen001:

செல்வா
31-08-2008, 10:56 AM
செல்வா அதென்ன வாடா மல்லி, போடா மல்லி...???
மல்லியை இப்படி வாடா, போடா என்று ஒருமையில் அழைக்கலாமா..??? :D:D:D

தாராளமாக அழைக்கலாம்.....
எந்த மல்லியை அழைக்கிறீர் என்பதைப் பொறுத்தும்....

மல்லிக்கும் உமக்குமான உறவைப் பொறுத்தும்....

நீர் அழைப்பது என் தங்கைக் காதில் விழுகிறதா இல்லையா ?

என்பதைப் பொறுத்தும்...

பின் முன் பக்க விளைவுகள் இருக்கும்..... :D:D:D

ஓவியன்
31-08-2008, 11:04 AM
திரிக்கு தலைப்பிட்டு வாடாவென அழைத்து விட்டு, இப்படிக் :spudnikbackflip: அடிக்கிறீரே...??

செல்வா
31-08-2008, 11:05 AM
இறுதியாக நீர் சொல்ல வருவது புரிகிறது...
அதாவது 'நீரும் ஓவியனும் ஒன்றே'..!! :icon_rollout:


நீரும் ஓவியனும் ஒன்றே என்றுச் சொல்ல ஏலாது.... ஆனால்
நீரையும் ஒவியன் என்றுச் சொல்லலாம்....

உலக வரைபடத்தைப் பார்த்தால் புரியும் நீர் வரைந்த ஓவியங்கள் :D:D



நீரின்றி அமையாது உலகு...!!

ஆம் நீ சொல்வது உண்மை தான்...
நான் இறக்கும் வரை இந்த வாக்கியம் சரியே.... :) அதற்காக எனக்கு மரியாதை தரவேண்டாம் நீ என்றேச் சொல்லலாம்...

செல்வா
31-08-2008, 11:10 AM
திரிக்கு தலைப்பிட்டு வாடாவென அழைத்து விட்டு, இப்படிக் :spudnikbackflip: அடிக்கிறீரே...??

மல்லியை அழைத்தால் நீர் வந்து மல்லுக்கு நிற்கிறீரே(றதே) .... :eek::eek:

பிச்சி
01-09-2008, 09:21 AM
பூவுக்கு கவிதை படைத்த உங்களை வணங்குகிறேன்.

அன்புடன்
பிச்சி

தீபன்
01-09-2008, 10:21 AM
நல்ல கவிதை.
என்ன சொல்ல வருகிறீர்கள்....?
வாடா மல்லியை சூடாத மங்கை குற்றமிழைக்கிறாளா...?
அல்லது,
அது வாடாதவரை சூடாதது தப்பென்கிறீர்களா....?
மங்கையரென்ன என்றும் மலரை தாங்கும்
மலர்த் தாங்கியென நினைத்தீர்களா...
வாடா மல்லியும் வாடும் மல்லியும்
குடித்தனம் புரியவே குமரிகள் பிறந்தனரா...?
மன்றப் பெண்ணியம் எங்கே போனது...!?
மாதரை மலரோடு மட்டுப்படுத்தும் செல்வத்தை என்ன செய்வது...!?

(ஏதோ, நம்மால முடிஞ்சது....!)