PDA

View Full Version : கணிணியின் இணையத்தினை மொபைலில் பெற முடியுமா?



ஷீ-நிசி
29-08-2008, 06:21 AM
நண்பர்களே!

நாம் உபயோகபடுத்திக்கொண்டிருக்கும் Bsnl அல்லது Airtel அல்லது Sify இந்த ப்ராட்பேண்ட் இணையத்தை ப்ளுடூத் வழியே மொபைலில் ப்ரவுஸ் செய்ய முடியுமா? என்றால் முடியும். ஆனால் கூகிளில் இதற்கான வழிமுறைகள் மண்டை காய வைக்கிறது. அதில் ஒன்று Gnubox. நான் கடந்த ஒரு வாரமாக முயற்சித்தும் சிறிதும் பலனுமில்லை..

(wi-fi modem, wifi மொபைல் இருந்தால் பிரச்சினை இல்லை, அதன் வழியே பகிர்ந்துகொள்ளமுடியும்)

உங்களிடம் இதற்கான வழிகள் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

praveen
29-08-2008, 09:06 AM
வழி இருக்கிறது, தமிழ்படுத்தி டைப் செய்யத்தான் நேரமில்லை.

சரி உங்கள் மொபைல் போனில் சிம்பியன் எந்த பதிப்பு என்று சொல்லுங்கள்.

ஷீ-நிசி
29-08-2008, 03:42 PM
S60V3

எனக்கு signed gnubox application வேண்டும்!

சுட்டிபையன்
30-08-2008, 04:57 AM
Bluetooth ஐ பற்றி தெரியவில்லை ஆனால் Infrared மூலம் தொடர்பு பண்ணலாம். நோக்கியா போங்களிலையே infrared modem கொடுத்திருப்பார்கள். மற்றும் wlan நெட்வேர்க் மூலம் N95, N95 8GB மற்றூம் N96 ஆகியவற்றை தொடர்பு படுத்தலாம்

சுட்டிபையன்
30-08-2008, 05:02 AM
உதவிக்கு (http://www.allaboutsymbian.com/forum/showpost.php?p=255370&postcount=1)

praveen
30-08-2008, 05:14 AM
அதற்கு உங்கள் sis + உங்கள் மொபைல் IMEI எண் வேண்டும். நான் அனுப்பிய தனிமடல் பாருங்கள்.

பட்டாம்பூச்சி
05-10-2008, 05:05 AM
சில குறிப்பிட்ட தயாரிப்புக்களுக்கு அதன் தயாரிப்பாளர்களே உரிய மென்பொருட்களைக் கொடுத்துள்ளனர். நோக்கியா தயாரிப்புகளுக்கு அதன் மென்பொருளான "நோக்கியா பிசி ஸ்யூட்" மூலம் இந்த ஏற்பட்டைச் செய்ய இயலும். உங்கள் ப்ராட்பேண்டு இணைப்புள்ள கணினியில் ப்ளூடூத் இணைக்கும் சாதனம் இருந்தால் (லேப்டாப்களில் இருக்கும், சில புதிய மாடல் டெஸ்க்டாப்களில் இருக்கும்) இணையத்தை உங்கள் மொபைல் போன் மூலம் பார்க்கலாம்.

நாஞ்சில் த.க.ஜெய்
30-11-2010, 04:56 PM
இது போல் usb கேபிள் வழியாக எவ்வாறு இணையத்தை அலைபேசியில் இணைப்பது நான் வைத்திருப்பது நோக்கியா 3110 c

என்றும் நட்புடன்
த.க.ஜெய்

vasishta
13-12-2010, 04:03 AM
நான் வைத்திருப்பது நோக்கியா 7210. sim aircell. இதில் நான் உபயோகபடுத்திக்கொண்டிருக்கும் Bsnl ப்ராட்பேண்ட் இணையத்தை ப்ளுடூத் வழியே மொபைலில் ப்ரவுஸ் செய்ய முடியுமா?

நாஞ்சில் த.க.ஜெய்
15-12-2010, 12:17 PM
நான் இன்று ஒரு வன் பொருள் பொறியாளர் ஒருவரை சந்தித்தேன் அவரிடம் இந்த சந்தேகங்களை விவரித்த போது அவ்வாறு ப்ளுடூத் மூலமும் யு எஸ் பி மூலமும் இணையத்தை கணினியில் இருந்து அலை பேசிக்கு எடுக்க முடியாது வை பி மூலம் மட்டுமே இணையத்தை எடுக்க முடியும் நமது மோடம் மற்றும் அலைபேசி யில் வை பி இருக்க வேண்டும் என்று கூறினார் .இது பற்றி தெரிந்த நம் மன்ற நண்பர்கள் கூறினால் நன்றாயிருக்கும் .....
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

nambi
15-12-2010, 12:49 PM
இது பற்றி விரிவாக பிறகு பதிவிடுகிறேன்...முன்பே இதற்கான படங்கள் தயாரித்து வைத்திருந்தேன்...நேரமின்மையாலும்...வேறு பல இடர்பாடுகளாலும் பதிவிட முடியவில்லை...
................

நோக்கியா என்றால் நோக்கியா பிசி சூட் இறக்கி கொள்ளுங்கள்...டேட்டா கேபில் வாங்கி கொள்ளவேண்டும்..அதனுடன் டிரைவர் சிடியும் தருவார்கள் அதை க்கொண்டு கணினியில் அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின் படி நிறுவிக்கொள்ளலாம்..

(டேட்டா கேபில் விலை 150... இருக்கலாம்..குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்..இந்தியா ரூபாயில்...அந்த மாடல் எண்ணை குறிப்பிட்டு வாங்க வேண்டும் கைப்பேசியுடன் பொருந்துகிறதா? என்று பார்த்து வாங்கவேண்டும்...டேட்டா கேபில்பற்றி கைப்பேசி பயனர் கையேட்டிலும் கொடுத்திருப்பார்கள் அதிலிருந்தும் அறியலாம்)
...................................
நிறுவிய பின் உங்கள் கைப்பேசி சேவை வழங்குநரை தொடர்பு கொள்ளவும் அவர்களே இதற்கான வழிகாட்டுதல்களை இலவசமாக வழங்குவார்கள்... ( கைப்பேசி சேவை வழங்குநர்களை )அவர்களைத் தொடர்பு கொள்ள இலவச சேவைத் தொடர்பு எண் கொண்டும் அணுகலாம்.
.....................
இருப்பினும்...
முறையாக படங்களுடன் பதிவிட நேரமாகும் என்பதால்...இப்போதைக்கு

நோக்கியா கைப்பேசி இருந்தாலும் அதை வைத்து யுஎஸ் பி மோடம் பயன்படுத்தவில்லை...சாம்சங் வைத்து மோடமாக பயன்படுத்தியதை இங்கு பகிரந்து கொள்கிறேன்...இதே வழிமுறைதான் அதற்கும்...

முதலில் டேட்டா கேபிள் கொண்டு அதனுடன் இணைத்து கொடுத்துள்ள டிரைவர் சிடி மூலம் டிரைவரை நிறுவிக்கொள்ளவேண்டும்...

இல்லையேல் சாம்சங் இணையதளம் சென்றும் இதற்கான நிறுவல் மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம். அதே போன்று தான் நோக்கியாவிலும்...நோக்கியாவிற்கு பிசி சூட், சாம்சங்கிற்கு நியு பிசி ஸ்டுடியோ...எந்த மென்பொருள் தேவை என்பதை நோக்கிய மற்றும் சாம்சங் இணையதளம் சென்று கைப்பேசியின் மாடல் எண்ணை குறிப்பிட்டால் அதற்குரிய சரியான மென்பொருள் வந்துவிடும். அப்படி பெற்று நிறுவியப்பின்பு....

உங்கள் கைப்பேசியின் தொலைபேசி சேவையளிப்போரை இலவச அழைப்பெண் கொண்டு அழைத்து இது பற்றி தெரிவித்தால் அதற்கான குறுந்தகவல் தகவல் (கட்டணமில்லா சேவை எண் மூலம்) அனுப்ப வலியுறுத்துவார்கள்....அதன் பின் உங்களை கைப்பேசியின் IMEI எண்ணை குறிப்பிட்டு தகவல் அனுப்ப வலியுறுத்துவார்கள்....இது அனுப்பியவுடன் உங்கள் கைப்பேசிக்கான மென்பொருள் உடனடியாக உங்கள் தொலைபேசிக்கு குறுந்தகவலாக வரும் அதை அப்படியே தொலைபேசியில் நிறுவிக்கொள்ளவேண்டும். (Install) இன்ஸ்டால் என்ற ஆப்சனுடன் வரும் அதை அழுத்தினால் நிறுவல் முடிந்துவிடும்.


அதன் பின் ''கன்ட்ரோல் பேனல்'' சென்று ''நெட்வொர்க் கனெக்சன்'' என்ற ஐக்கானை கிளிக் செய்து இடது பக்கம் உள்ள ''கிரியேட் நியு நெட்வோர்க்...'' என்ற பொத்தானைஅழுத்தி வரும் ''விசார்ட்'' அதாவது ''மாயாவி'' இல் நெக்ஸ்ட் என்ற பொத்தனை அழுத்தவும்...

அடுத்து வரும் விண்டோ...''நெட்வொர்க் கனெக்சன் டைப்'' என்பதில் வரும் பட்டியலில் ''கனெக்ட் தி நெட்வொர்க் அட் மை வொர்க் பிளேஸ்'' எனபதை தேர்வு செய்யவும்...பின்பு ''நெக்ஸ்ட்''.....


அடுத்து ''நெட்வொர்க் கனெக்சன்'' என்ற விண்டோ...
அதில் ''டயல்அப் கனெக்சன்'' என்பதை தேர்வு செய்யவும்...பிறகு நெக்ஸ்ட்...

அடுத்து....''கனெக்சன் நேம்''...இதில் வரும் கட்டத்தில் உங்களுக்கு விருப்பமான பெயரை தேர்வுசெய்து கொடுக்கலாம்....அல்லது தொலைபேசி சேவை வழங்குனர்களின் பெயர்களை சுருக்கெழுத்தாகவோ அல்லது உங்கள் விருப்பம் போலவோ கொடுக்கலாம்.....மீண்டும் நெக்ஸ்ட்...

அடுத்து ''தொலைபேசி எண்''...(''போன் நம்பர்'')...இதில் உள்ள கட்டத்தில் தொலைபேசி எண்...தமிழகமாக இருந்தால்...*99***1# என்று...

(இப்போது மாறியுள்ளது...இந்த 3 ஜி சேவையினால் மாறியுள்ளது என நினைக்கிறேன்...*99**1*1#.....இப்படி மாறியுள்ளது இதையெல்லாம் தொலைபேசி சேவை வழங்குநர்களை இலவச அழைப்பின் மூலம் அணுகி பெற்றுக்கொள்ளலாம்.)

குறிப்பிட்டு முடித்தபின் மறுபடியும் ''நெக்ஸ்ட்''....
விசார்ட் முடிந்ததற்கான் விண்டோ வரும் உடனடியாக ''பினிஷ்'' அழுத்தாமல் அதிலேயே ''ஆட் அ ஷார்ட் கட்.....டெக்ஸ்டாப்'' என்ற ஆப்சன் இருக்கும் அதில் உள்ள கட்டத்தில் கிளிக் செய்து டெக்ஸ்டாப்பிலேயே இந்த ஜக்கானை வைக்கலாம். (அப்படி குறிப்பிட மறந்துவிட்டாலும்....''நெட்வர்க் கனெக்சன்'' சென்று கனெக்சன் செட்டிங்கை.... டெக்ஸ்டாப்பில் வரவழைத்துக்கொள்ளலாம்)

அதன் பின் கன்ட்ரோல் பேனல் சென்று மோடம் என்ற ஐக்கானை கிளிக் செய்தால் ''டயலிங் ரூல்ஸ்'' என்ற விண்டோ வரும் இதில் நீங்கள் இருக்கும் வசிப்பிடத்தின் தொலைபேசி குறியீட்டு எண்...040, 044....என்று எஸ்.டி.டி கோட் கொடுக்கவேண்டும். அதன்பின் உள்ள ஆப்சனான மோடம் என்ற உங்கள் மொபைலை இணைத்தால் அது எந்த யு எஸ்பி போர்ட் இல இணைக்கப்பட்டுள்ளது என்ற தகவல்....தானாக வரும்...அதை முடித்தபின்.....

அதன்பின் ''டயல் அப் கன்க்சன்'' செட்டிங்கை சொடுக்கினால்...வரும் விண்டோவில் ''டயல் அப்'' என்ற பொத்தானை சுட்டினால் கணினி இணைக்கப்பட்டுவிடும். அப்படி இணையவில்லை என்றால் ''பிரப்பர்ட்டீஸ்'' சென்று...செட்டிங்குகளை மாற்றிப்பாருங்கள்....இணைந்து விடும். இல்லையேல் ஒருமுறை கைப்பேசியை அணைத்து மீண்டும் துவங்குங்கள்.....இணைந்து விடும்..

இன்னும் தொல்லைக் கொடுத்தால் சேவை வழங்குநரை தொடர்பு கொள்ளுங்கள்...பெரும்பாலும் சேவை வழங்குநர்களால் தான் பிரச்சினை ஏற்படும்.

குறிப்பு....சாம்சங் என்றால் பிசி. ஸ்டுடியோ அல்லது நோக்கியா என்றால் பி சி சூட் கொண்டு இணைத்தால் மிகச் சுலபமாக இணையும். அதுவே தொலைபேசி எண்களை தானாக அமைத்து கொள்ளும்.

புரியும் படி தெரிவித்திருக்கிறேனா? என்பது தெரியவில்லை? குறிப்பிட்டால் மாற்றுகிறேன்...

புளுடூத் பற்றி பிறகு குறிப்பிடுகிறேன்.... அதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.....

நன்றி!

நாஞ்சில் த.க.ஜெய்
15-12-2010, 01:16 PM
நன்றி நண்பரே !நீங்கள் கூறிய தகவல்கள் அலைபேசியி லிருந்து கணினியில் இணையத்தை பயன் படுத்தும் முறை நான் கேட்டது கணினி மூலம் அலைபேசியில் இணையத்தை பயன்படுத்துவது எப்படி என்று தான் நண்பரே...நம்பி அவர்களின் பதிவினை நம்பி மறு பதிவிடுகிறேன் ..
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

nambi
15-12-2010, 01:31 PM
தொலைபேசியை கொண்டு புளுடூத் வழியாக இணையச்சேவை பெறுவதற்கான வழிமுறைகள் எல்லாம் அதே பிசி.சூட் அல்லது நியு பிசி ஸ்டுடியோ கொண்டு அமைக்கலாம்...

இதற்கான வழிமுறைகளை (ஏர்செல், வொடாபோன், பி.எஸ்.என் எல்.....) சேவை வழங்குநர்களை தொடர்பு கொண்டால் வழிமுறைகளை கூறுவார்கள்...இது (விண்டோஸ்) டியுஎன் புளு டூத் மோடம் என்ற டிரைவர் வழியாக தொடர்பை ஏற்படுத்தும். இதற்கு ''புளு டூத் டோங்கல்'' என்ற சிறிய கூடுதல் வன்பொருள் தேவை...அது ஏதாவது ஒரு மின்னனுப் பொருள் விற்கும் கடையில் வாங்கிக் கொள்ளலாம்...விலை 175...என்று வெவ்வேறு மாடல்களில்.... யு எஸ் பி மாடலாக விலைக்கேற்றபடி கிடைக்கும்...

அதை பொருத்துவதற்காக டிரைவைர் சிடி தருவார்கள் அதையும் கணினியில் நிறுவல் செய்து கொள்ளவேண்டும். இது எல்லாவற்றிற்கும் ஒன்று தான்..நோக்கியா..சாம்சங் என்று தனித்தனியாக இல்லை...

அதன்பின் உங்கள் கைப்பேசியில் புளு டூத்தை ஆன் செய்து....புளுடூத் டோங்கில் (Blue tooth Dongle) மென்பொருள் மூலமே இணைக்கலாம்....இதிலும் சேவை வழங்குநர்களினால் சிக்கல்கள் ஏற்படுகிறது...அதை அவர்களை தொடர்பு கொண்டு இதற்கான வழிமுறைகளை பெற்றுக்கொண்டு சீர்படுத்திக்கொள்ளலாம்...

அதற்கு முன் கைப்பேசியில் நிறுவ வேண்டியவைகள் எல்லாம் சேவை வழங்குநர்களை தொடர்பு கொண்டு நிறுவிக்கொள்ளவும். (யு.எஸ்.பி மோடம் நிறுவும் பொழுது நிறுவியிருந்தால் மீண்டும் நிறுவத்தேவையில்லை) நிறுவியபின் கைப்பேசியை ஒருமுறை அணைத்து மீண்டும் ஆன் செய்யவும்....இணைந்து விடும்...ஆனால் தொடர்ச்சியாக இதன்மீலம் இணையம் இணைவதில்லை...அப்படி இணைத்தால் அதன் வழிமுறைகளை இங்கு தெரிவிக்கலாம்.

nambi
15-12-2010, 01:38 PM
இது பற்றி தெரியவில்லை...

அலைபேசி மூலம் இணையத்தை பயன்படுத்துவதற்குத்தான் அலைபேசியிலே இணையச் சேவை வழங்குகிறார்களே...? கணினியில் இருப்பவைகளை எப்படி அவ்வளவு சின்னத்திரையில் பார்க்கமுடியும்....? என்பது தெரியவில்லை.. ஒருவேளை இந்த மாடல்களில் முடியுமோ? .....

நானும் இதற்கான பதிவை எதிர்பார்க்கிறேன்...?

அறிஞர்
15-12-2010, 02:16 PM
கருத்துக்கு நன்றி நம்பி.
---------
2008ல் கேள்வி கேட்டுள்ளார்.

2 வருடத்தில் தொழில்நுட்பம் மாறிவிட்டது.

3G, 4G வந்துவிட்டது.

iphone 4ல் எல்லாம் இருக்கிறது...

நாஞ்சில் த.க.ஜெய்
15-12-2010, 03:10 PM
நண்பர் அறிஞர் அவர்களுக்கு எனது வணக்கங்கள் பதிவுகள் பழதாயினும் அதன் விடயங்கள் இன்றும் பயன் படும்.அதுபோல் இன்று 3 ஜி 4 ஜி வந்திருந்தாலும் என்போன்றவர்கள் பயன் படுத்தும் அலை பேசிகளில் இது மிகவும் பயன் படும் குறிப்பாக ப்ளூ டூத் மூலம் நாம் இணையத்தை பயன்படுத்த முடிந்தால் ஒரே நேரத்தில் இருவர் இணையத்தில் உலவ முடியும் அல்லவே என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவில் என் கேள்விகளை பதித்தேன் மேலும் இதனை புதிய நிகழ்ச்சி கோவையாக தொடராமல் ஒரே கோவையாக தொடர்ந்தால் நன்றாக இருக்கும் ....

என்றும் அன்புடன்
த.க.ஜெய்