PDA

View Full Version : எனது நகைச்சுவை கவிதைகள்மதுரை மைந்தன்
28-08-2008, 06:13 PM
வேலையில்லாமல் உடகார்ந்து சாப்பிட்டதில்
தொப்பை போட்டது
வேலை கிடைத்தது-போலீஸாக
_____________________________________________________________

திரையரங்கின் வெளியே மழை
உள்ளேயும் மழை
ஓடிக்கொண்டிருக்கிறது-பழய படம்
_____________________________________________________________

அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்
விதி சதி செய்தது
அவளது அண்ணனும் நோக்கினார்
_______________________________________________________________

பேருந்து நிலையத்தில் திடீர் மணிச் சத்தம்
அனைவரும் தங்கள் செல் போனை எடுத்தனர்
மணிச் சத்தம் உன் சிரிப்பு சத்தம்
_____________________________________________________________

நீ இல்லாமல் நான்
வாள் வீசத் தெரியாத எம.ஜி.ஆர்.
வசனம் பேசத் தெரியாத சிவாஜி கணேசன்
காதலிக்கத் தெரியாத ஜெமினி கணேசன்
ஸடைல் பண்ணத் தெரியாத ரஜனி காந்த்
நடனமாடத் தெரியாத கமல ஹாஸன்

mukilan
28-08-2008, 07:30 PM
நல்ல கல கல ரகக் கவிதைகள். குறிப்பாக அவளது அண்ணனும் நோக்கிய கவிதை.

ஓவியா
28-08-2008, 07:35 PM
எல்லாம் சூப்பர், :D:D

ஆனால் இதுட்தான் தே எவெர் பேஃஸ்ட்.


நீ இல்லாமல் நான்
வாள் வீசத் தெரியாத எம.ஜி.ஆர்.
வசனம் பேசத் தெரியாத சிவாஜி கணேசன்
காதலிக்கத் தெரியாத ஜெமினி கணேசன்
ஸடைல் பண்ணத் தெரியாத ரஜனி காந்த்
நடனமாடத் தெரியாத கமல ஹாஸன்


:lachen001::lachen001::lachen001:

அமரன்
28-08-2008, 07:47 PM
சமுகம், காதல்,பொழுது போக்கு எல்லாத்தையும் எள்ளி உள்ளீர்கள். கண்ணோடும் போது உதட்டோரம் சிறு பூ பூப்பதை தடுக்கவோ தவிர்க்கவோ இயலவில்லை. பாராட்டுகள் மதுரைவீரன்.

இதே போல சிவா கொளுத்திய திரி கொழுந்து விட்டு எரிந்ததை நினைத்துப் பார்க்கின்றேன்.

ஷீ-நிசி
29-08-2008, 02:06 AM
நகைச்சுவை கவிதைகள் அதிகம் வலம் வர வாழ்த்துக்கள்!

இளசு
29-08-2008, 07:05 AM
புன்னகை தந்தன.. சுவையும் இருந்தது.
பாராட்டுகள் மதுரைவீரன்.

திரை அரங்கின் உள்ளும் மழை - பழைய பிரதியினால்!
மிகவும் ரசித்தேன்!

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் - நல்ல காதல் கவிதை!

அண்ணல் நோக்கிய கவிதை -
அப்பன்காரனும் நோக்கினான் எனப் படித்திருக்கிறேன்!

மதுரை மைந்தன்
29-08-2008, 12:05 PM
இத்திரியை படித்து ரசித்து பின்னோட்டம் எழுதிய mukilan ஓவியா அமரன் ஷீ-நிசி இளசு ஏனைய மன்றத்து நண்பர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றி.

இதோ மற்றும் சில கவிதைகள்.

_______________________________________________________________

பெண்கள் முன்னால்
குனிந்த தலை நிமிர மாட்டான்
-- குட்டை பாவாடையில் பெண்கள்
_______________________________________________________________

ஊரெங்கும் மழை
தெருவெங்கும் வெள்ளம்
குடிப்பதென்னவோ பிஸ்லேரி
_______________________________________________________________

வெள்ளம்- தமிழ்நாட்டில் பெருமழை பெய்தால்
வெள்ளம்-கேரளாவில்
சிறுமழை தூறினாலே
______________________________________________________________

நீ இல்லாமல் நான்....

அச்சாணி கழன்ற மாட்டுவண்டி
தண்டவாளம் இல்லாத ரயில்
தரை தடடிய கப்பல்
என்ஜின் இல்லாத பேருந்து
எரிபொருள் இல்லாத ஏவுகணை
பறக்க முடியாத விமானம்


நீ இல்லாமல் நான்.......

முற்றின வெண்டைக்காய்
சூம்பிய கத்தரிக்காய்
அழுகிய தக்காளி
பழுத்த பாகற்காய்
வெதும்பிய வாழைக்காய்
காரலான சேனைக் கிழங்கு
முளை விட்ட உருளைக் கிழங்கு

நீ இல்லாமல் நான்.......

சிதைந்த ஓவியம்
உடைந்த சிலை
கலைந்த கோலம்
எழுதாத வெள்ளை காகிதம்
அபசுரமான சங்கீதம்

நீ இல்லாமல் நான்.......

சர்க்கரை போடாத காபி
உப்பு இல்லாத உப்புமா
அரை வேக்காட்டுச் சோறு
வேகாத பருப்பு
கருகின தோசை
கல்லு மாதிரியான இட்லி
வெண்டைக்காய் விளக்கெண்ணெய்
சோற்றுக்கற்றாளை சேர்ந்த அவியல்
பத்திய சாப்பாடு

நம்பிகோபாலன்
29-08-2008, 12:34 PM
மிக அருமை.
"ஊரெங்கும் மழை
தெருவெங்கும் வெள்ளம்
குடிப்பதென்னவோ பிஸ்லேரி " என்னை மிகவும் கவர்ந்தது.

நேசம்
29-08-2008, 02:44 PM
ரசிக்கும்படி இருந்தது.அதிலும் நி இல்லாமல் நான்... அதிகமாக இருப்பதுஇ ஏன்.

பிச்சி
01-09-2008, 09:26 AM
கலக்கிறீங்க மதுரை அண்ணா. முதல் பதிவு நகைச்சுவை கவிதை அத்தனையும் டாப். அப்பறமா எழுதியிருக்கிறது சமுதாய கவிதை மாதிரி இருக்கு.

அன்புடன்
பிச்சி

poornima
02-09-2008, 06:50 AM
உங்கள் முதல்பத்தி நகைச்சுவை கவிதைகளை சற்றே தட்டி நிமிர்த்தினால்
நல்ல ஹைக்கூ கவிதைகள் கிடைக்க வாய்ப்பிருக்கின்றன.உண்மையில் அதன்
கடைசி கவிதைதான் நகைச்சுவைக்கான அங்கதம் இருக்கிறது..

இரண்டாம் பத்தியின் முதல் மூன்று கவிதைகளுமே அவ்விதம் தான்..

நீ இல்லாமல் நான் ஹா..ஹா..ஹா :-)
எப்போதாவது உங்கள் காதலி (உண்டா? ) கோபமாக இருக்கையில் இந்த கவிதையை 'சத்தம் இல்லாத யுத்தம் கேட்டேன்' நடையில் வாசிக்க கோபம் குறைந்து பூவாய் காதல் மலர வாய்ப்பிருக்கிறது..

பாராட்டுகள் மதுரைவீரன் ஸார்..

பென்ஸ்
03-09-2008, 01:43 AM
ஹைக்கு பட்டாம்பூச்சியின் கூட்டுபுழு பருவத்தில் உதிரும் கவிதைகள்
சுற்றியிருக்கும் கூடு போனால் , பறப்பீர் இனிதாக....

அனைத்தும் இனிமை...