PDA

View Full Version : சொல்லுங்களேன் பிளீஸ்



அகத்தியன்
28-08-2008, 08:58 AM
நண்பர்களே,


http://4.bp.blogspot.com/_dSjWyO0FKMc/SLZn3KDbshI/AAAAAAAAAE4/5Sl8RDeLFoQ/s400/untitled+%E0%AE%85.bmp


ஒரு உதவி.. படத்தில் காணப்படும் விரிதாளில் (Worksheet) உள்ள Row இலக்கங்களினை இடப்பக்கமிருந்து வலப்பக்கத்திற்கு மாற்ற என்ன வழி? அதாவது, அரபு எழுத்து முறைக்கு இயைபாக........

sasikumar
28-08-2008, 12:43 PM
http://office.microsoft.com/en-us/ork2003/HA011402101033.aspx

http://www.lib.uchicago.edu/e/su/mideast/Multilingual_Computing_with_Arabic_and_Arabic_Transliteration.pdf

அகத்தியன்
28-08-2008, 01:50 PM
இப்படி சொன்னா எப்படி அப்பு? எப்படி எண்டு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களன்.

poornima
28-08-2008, 02:05 PM
வெகு எளிது.

நாம் பயன்படுத்தும் எழுத்துரு,அதன் அளவு,தடித்த,சாய்வு,அடிக்கோடிடுதல் ,எழுத்துகளுக்கான வண்ணம் தீட்டுதல் மற்றும் இன்னபிற வசதிகளை கொண்டிருக்கும் பட்டைக்கு ஃபார்மேட் பார் (Format Toolbar) என்று பெயரில்.அதில் அம்புக்குறியை இடப்புறம் போட்டார்போல் ஒரு அடையாள குறும்படம் (icon) இருக்கும்.அதன் மேல் கர்சரை வைத்தால்
sheet right to left என்று தெரியவரும். அதை அழுத்துங்கள் உங்கள் பிரச்னை போயே போச்சு.

பிரச்னை என்னவென்றால் இது உங்கள் டூல்பாரில் நீக்கப்பட்டிருந்தால் இருக்காது.
அதைக் கொண்டுவர அந்த டூல்பாரின் இறுதியில் எழுத்துகளுக்கு வண்ணம்தரும் ஐகானுக்கு அப்பால் முடியும் இடத்தில் |> என்றிருக்கும்.அதை அழுத்த அந்தப் பட்டையில் மேலும் பொருள்கள் சேர்க்கும் வசதிகள் கொண்ட பட்டியல் விரியும்.அதில் போல் தேர்ந்தெடுத்த கிளிக்க அட உங்கள் பாரில் இப்போது
இடப்பக்கம் முதல் வலப்பக்கம் வரை எழுதும் வசதி..!

mukilan
28-08-2008, 02:10 PM
வாவ்! புதிய விடயம் கற்றுக் கொடுத்தமைக்கு பூர்ணிமாவிற்கும், அதற்கு காரணமாயிருந்த அகத்தியனுக்கும் என் நன்றி.

அகத்தியன்
28-08-2008, 02:10 PM
நன்றி பூர்ணிமா,

ஆனாலும் எனக்கு விளங்கவில்லை நான் பாவிப்பது ஒபீஸ் 2007. நீங்கள் சொல்வது மாதிரி ஒன்றும் இதில் காணவில்லையே???????? பிளீஸ். சொல்லுங்களேன்..

poornima
28-08-2008, 02:15 PM
ஓ ஆஃபீஸ் 2007 - ஆ அதில் கொஞ்சம் மாறி இருக்கும்
இருங்கள் பார்த்துவிட்டு சோதித்து வருகிறேன்

அகத்தியன்
30-08-2008, 04:45 AM
பார்த்துவிட்டு வருகிறேன் என்ற பூர்ணிமாவை இன்னும் காணவில்லையே......

ப்ளீஸ் வாருங்கள். தீர்வினை சொல்லுங்கள் நண்பி..

உங்கள் வருகைக்காக காத்திருக்கின்றேன்..

ஓவியன்
30-08-2008, 05:07 AM
Tools -> Options -> International -> Click on View current sheet right to left

என்பதை ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன் அகத்தியன்....

ஓவியன்
30-08-2008, 05:41 AM
ஆபிஸ் 2007 இல் இந்த வசதி கிடையாது போல (நான் இன்னமும் 2007 பாவிக்கத் தொடங்கலை :D)

இந்த லிங்குசாமியை (http://www.rondebruin.nl/sheetdirection.htm)க்கிளிக் பண்ணிப் பாருங்க, சில வேளைகளில் உதவுவார்....

அப்படியே இந்த லிங்குசாமி (http://www.omgili.com/newsgroups/microsoft/public/excel/newusers/C304B364-FF99-4DDE-903D-E711509C6FB8microsoftcom.html&q=Microsoft+Office+from_date:20071101++to_date:20071105)யையும்....

பாரதி
30-08-2008, 07:11 AM
அன்பு நண்பரே,

ஓவியன் கூறியதை முயற்சி செய்தீர்களா?

அல்லது page layout - sheet options - Sheet Right-to-Left என்பதை தேர்வு செய்து பாருங்கள்.

என்னிடமும் ஆஃபிஸ் 2007 இல்லை. இணையத்தில் தேடி கிடைத்த தகவலை சொல்லி இருக்கிறேன்.

poornima
30-08-2008, 07:16 AM
பார்த்துவிட்டு வருகிறேன் என்ற பூர்ணிமாவை இன்னும் காணவில்லையே......

ப்ளீஸ் வாருங்கள். தீர்வினை சொல்லுங்கள் நண்பி..

உங்கள் வருகைக்காக காத்திருக்கின்றேன்..

மன்னிக்கவும் அகத்தியன்,
ஆஃபீஸ் 2007 ல் இந்த வசதி எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது.
நான் உபயோகித்துக் கொண்டிருப்பதும் 2003 தான்..
மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறேன் தீர்வுக்கு

பாரதி
30-08-2008, 07:27 AM
நண்பரே,
உங்கள் xls கோப்பை திறந்து கொள்ளுங்கள்.
உங்கள் worksheet முழுவதையும் தேர்வு (high light) செய்து கொள்ளுங்கள்.
Data Tab - Sort Button - Options button - Sort Right to Left
என்று தேர்வு செய்து பாருங்கள்.

poornima
30-08-2008, 07:33 AM
அது தவறாக கணக்கிட வாய்ப்பிருக்கிறது பாரதி அவர்களே..
எண்களுக்கும் மட்டும் அது பொருந்தும் என்று நினைக்கிறேன்

ஓவியன்
30-08-2008, 07:36 AM
அது தவறாக கணக்கிட வாய்ப்பிருக்கிறது பாரதி அவர்களே..
எண்களுக்கும் மட்டும் அது பொருந்தும் என்று நினைக்கிறேன்

நான் பதிவு எண் 10 இல் கொடுத்த லிங்கில் இருந்த VBA மூலம் செய்யும் முறையை முயன்று பார்த்தீர்களா பூர்ணிமா..??

என்னிடம் ஆபிஸ் 2007 இல்லாததால் முயற்சி செய்ய முடியாமலுள்ளது....

poornima
30-08-2008, 07:43 AM
இல்லை..முயற்சி செய்கிறேன்.இப்போது உபயோகிக்கும் கணிணியில் ஆஃபீஸ் 2007 இல்லை. அதை வேறிடத்தில் பரிசோதிக்கிறேன்

அகத்தியன்
30-08-2008, 11:15 AM
அனைவருக்கும் எனது நன்றிகள்
ஓவியன் பதிவு 10ல் தந்த லிங்குகள் மூலம் எனது பிரச்சினை தீர்ந்தது. நன்றி ஓவியன்.

ஒபீஸ் 2007ல் காணப்படும் ஒபீஸ் பட்டனினை கிளிக்கினால், திறபடும் மெனுவில் காணப்படும், Excel Option----->custamize----> All Commands ல் காணப்படும் Right to Left Document ஐ செலக்ட் செய்து அதனை quick access Tool bar உடன் இணைக்க வேண்டும், பின் அந்த ஐகனினை கிளிக்கினால் வேண்டிய இடத்திற்கு மாற்றலாம்.

மிக்க நன்றி பூர்ணிமா, பாரதி மற்றும் ஓவியனுக்கும்.சசி குமாருக்கும், முகிலுக்கும்.

selvamurali
30-08-2008, 01:05 PM
அட டே உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்

poornima
31-08-2008, 05:23 AM
அப்பாடா..நல்ல வேளையா உங்க பிரச்னையும் தீர்ந்திச்சி..மன்றத்துக்கும் ஒரு உபயோகமான பதிவு கிடைச்சிடுச்சி..

சிறப்பு நன்றி ஓவியனுக்கு.. (பிரச்னையை தீர்த்தமையால் :-) )

நேசம்
31-08-2008, 02:07 PM
உடனுக்குடன் விளக்கம் கொடுத்துதவிய அனைத்து உள்ளங்களுக்கு நன்றி