PDA

View Full Version : மழையின் அவதாரங்கள்



ஆதி
27-08-2008, 05:01 PM
நனைய ஆட்களின்றி
பெய்த மழையின்
மிச்சங்களை
தூறி கொண்டிருக்கின்றன
சாலையோர மரங்கள்..

மழையும் கொடியினம்தான்
நேற்று படர்ந்ததில்
பூத்திருக்கிறது சேற்று பூ..

அடைப்புகுள் அடங்க மறுத்து
உடைப்பெடுக்கையில்
போர்துவம் விளக்கும்
போராளியாய்..

மழைகுளித்து சிலுப்பும்
பறவை சிறகிலிருந்து
சிதறும்
குளிரின் திரவமாய்..

செம்மண் பூமி
சேர்ந்தளாவி
செம்மை பூக்கையில்
பொது உடமை குறிப்பாய்..

தெருவில் சாலைகுழிகளில்
தேங்கும் தருணங்களில்
சரியாய் போய்சேராத
சாமான்யர்களுக்கான
சலுகையின் மாதிரியாய்..

மழை சூல் உறா
மேகங்களால் ஆகாத
மகசூலாய்..

இன்னும் என்னென்னவோ
விதமாய்
சிந்து மழைக்குதான்
எத்தனை அவதாரங்கள்..

tamilambu
27-08-2008, 05:14 PM
மழைக்குள் இருக்கும் பல முகங்களை கவியில் தந்த ஆதிக்கு வாழ்த்துக்கள்.

poornima
28-08-2008, 06:13 AM
முதல் இரண்டு பத்திகளில்
காணும் மழையழகு
என்றும் மனதை விட்டகலா
மகிழ்ச்சியைத் தரும்..

மழை பிடிக்காதவர்கள் யாரும் உண்டா என்ன?

ஷீ-நிசி
29-08-2008, 02:24 AM
வார்த்தை அமைப்புகள் மிக நன்றாக உள்ளது ஆதி!


அடைப்புகுள் அடங்க மறுத்து
உடைப்பெடுக்கையில்
போர்துவம் விளக்கும்
போராளியாய்..

மழைகுளித்து சிலுப்பும்
பறவை சிறகிலிருந்து
சிதறும்
குளிரின் திரவமாய்..

அழகான வரிகள்.....

பிஞ்சு குழந்தையின் பஞ்சு கன்னங்களில் பட்டு தெரிக்கும்!
சுடிதார் தேவதையொருத்தி ஏந்தி நிற்கும் கரங்களினுள்ளே தஞ்சம் அடையும்!பூக்களை நனைத்து காம்பிலே வழிந்து பூமியை நோக்கி செல்லும்!

மழைத்துளிகள் ஒவ்வொன்றும் மனதை களிப்பூட்டும் மணித்துளிகள்!

அமரன்
29-08-2008, 08:02 AM
ஆதி...
ஆரம்பத்தில் மன்றத்தில் நீங்கள் தந்த கவிதைகள் உண்ர்ச்சிகளின் குவியலாக இருந்தன. போகப் போக அப்படியான கவிதைகள் உங்களிடமிருந்து வரவில்லை அல்லது வந்தவை என்னைச் சேரவில்லை. அப்படியான கவிதைகளை உங்களிடமிருந்து காணும் அவா மிகுகிறது உங்கள் கவிதைகளின் சொல் நயங்களைக் காண்கையில்...

கவிதைக்கு அழகு சேர்க்கும் வார்த்தை தோரணங்கள் அனைத்தும் வனப்பூ. எதை எடுத்துக் காட்ட.. எதை விட.... சேற்றுப்பூ... நறுந்தமிழ்ப்பூ...

பொதுவாக பெண்கள்தான் மழையில் நனைய ஆசைப்படுவார்கள். வானம் கானமழை மொழிய, துளிகள் நிலத்தில் தட்டி ஜதிகள் மொழிய நனைந்து அசைந்து ஆடுவார்கள் பெண்கள். ஆடவர்கள் மறைந்திருந்து காணுவார்கள் காட்சீயை. இனி ஆடவரெல்லாம் ஆடுவார்கள்.. மழையைப் பெண்ணாக உருவகித்த விதத்தால் என்னை வதம் செய்து விட்டீர்கள்.

மழையை எனக்கு மிகவும் பிடிக்கும்.

முகில் மரங்கள்
தூவும் பூக்களன்றோ
மழைத்துளிகள்

இளசு
29-08-2008, 07:08 PM
கடல் அலைபோல்
காதலி பேச்சுபோல்
மழலைக் கன்னம்போல்
மழையும் அலுக்காதது!

ஆதி கண்ட அவதாரங்களால்
அது இன்னும் அழகானது!

வாழ்த்துகள் ஆதி!

பிச்சி
01-09-2008, 10:30 AM
மழையின் அவதாரங்கள் எல்லாமே சூப்பார்ப். அழகான சொற்கள்.

ஷீ அண்ணாவின் வரிகளும் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

பாராட்டுக்கள் ஆதியண்ணா