PDA

View Full Version : விழியின் கதை - ழார் பத்தாய் ,ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்



தங்கவேல்
27-08-2008, 04:10 AM
எனது நண்பரும், பெரும் வாசகருமான ராஜநாயஹம் அவர்களின் மூலம் ழார் பத்தாய் எழுதிய நூலின் தமிழ் மொழியாக்கம் படிக்க நேர்ந்தது. இனி அந்த தொகுப்பை வெளியிடும் பிளாக்கரின் எழுத்தும் தளமும் கீழே.

விழியின் கதை - ழார் பத்தாய் ,ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் (http://nagarjunan.blogspot.com/2008/06/1_3109.html)

ழார் பத்தாய் (Georges Bataille - 1897-1964) என்ற ஃப்ரெஞ்சு எழுத்தாளர் எழுதிய Histoire d'Oeil - அதாவது The Story of the Eye என்ற இந்த நாவலை வாசிக்க, தைர்யம் வயதுவந்தோர்க்கு வேண்டும். இவர், 1928-ஆம் ஆண்டு இந்தக் குறுநாவலை Lord Auch என்ற புனைபெயரில்தான் எழுதினார். இவர் பற்றி 1993-94 காலகட்டத்தில் சென்னையிலிருந்து வெளியான ஆய்வு என்ற இதழில் எழுதியிருக்கிறேன்.

பிறகு ஃப்ரெஞ்சு மொழி பயின்றபோது இந்த நாவல் பற்றி வகுப்பில் விவாதிக்க நேர்ந்தது. எல்லா மாணவர்களும் ஃப்ரெஞ்சிலிருந்து மொழியாக்கம் ஏதாவது தாய்மொழியில் செய்ய வேண்டும் என்றபோது நான் தேர்வுசெய்தது ஷார்ல் போதலேர், ஆர்தர் ரைம்போ கவிதைகளை. அவற்றையும் பதிந்து வருகிறேன். கவிதை பகுதியில் வாசிக்கலாம்

யூரேக்கா இந்தக் குறுநாவலைச் செய்துகொண்டிருக்கிறார். இதைப் பதியத்தான் உங்கள் அனுமதியைக் கேட்டிருந்தேன். குறுநாவலை வாசிப்பதற்கு முன்னர் மீண்டும்:

1. தைர்யமில்லை என்று தெரிந்தால் நிறுத்திவிடவும். தொடர்ந்து வாசிக்க வேண்டாம்.

2. தமிழிலக்கியம் பழகி உள்ளொளி, அகதரிசனம், ரசனை, ஒழுக்கவியல் சார்ந்திருப்பவர்கள் மேலே வாசிக்க வேண்டாம். உங்களுக்கில்லை இது. கொச்சையான-மனிதவிரோத எழுத்து என்று இதை எளிதாக விமர்சித்துவிடலாம். பத்தாயும் விமர்சிக்கப்பட்டார்.

3. வெறும் போர்னோ எழுத்தென நம்பி வாசிக்க விரும்பிவரும் லாட்ஜ்-விடலை ஆண்கள் வாசிக்க வேண்டாம். உங்களுக்குமில்லை இது.

4. இதைக்கேட்டு உடன் அகல்வோருக்கு நன்றி. பிற பதிவுகளில் சந்திக்கலாம்.

5. மொழியாக்கம் யூரேக்கா. என் பொறுப்பு சரிபார்ப்பது மாத்திரம்.

6. கொச்சை வார்த்தைகள் வரலாம் என்பது உங்களில் பெரும்பான்மையோர் கருத்து. நன்றி. ஆனால், யூரேக்காவின் விருப்பப்படி கொச்சை வார்த்தைகள் #?*# தாம். இப்போது மாற்றியாகி விட்டது.

7. தொடரலாமா, வேண்டாமா என்பதும் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில்.


நன்றி : நாகார்ஜுனன்