PDA

View Full Version : திருமலையை தொடர்ந்து வவுனியாவில் புலிகளின் வானூர்தி தாக்குதல்



தீபன்
26-08-2008, 10:39 PM
*************************************************************************************************
இன்று(09.09.2008) இடம்பெற்ற வவுனியா தாக்குதல் பற்றிய செய்தி பதிவிற்கு இங்கே அழுத்துங்கள். (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=380888#post380888post380888)
*************************************************************************************************

திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் வானூர்தி தாக்குதல்

திருகோணமலைத் துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி இன்று (26.08.2008) செவ்வாய்க்கிழமை இரவு 9:05 மணியளவில் அதிரடித்தாக்குதல் நடத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளின் வானூர்தி துறைமுகத்தினுள் இரண்டு குண்டுகளை வீசியுள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் அங்கு பாரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தனர் என்றும் குறிப்பிட்ட சில நிமிட நேரமாக துறைமுகப்பகுதியிலிருந்து பயங்கர வெடியோசைகள் கேட்டதாகவும் - அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருகோணமலைக்கான தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தாக்குதல் நடத்திவிட்டுச்சென்ற விடுதலைப் புலிகளின் வானூர்திகளை கலைத்துச்சென்று தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னிப்பகுதிக்கு விரைந்துள்ளன என்று வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா வான் பரப்பிற்கு மேலாக வன்னி நோக்கி தொடர்ச்சியாக சிறிலங்கா வான்படையின் வானூர்தி சென்று கொண்டிருப்பதாக அவை மேலும் தெரிவித்தன.

சேத விவரம் தொடர்பாக இதுவரை கிடைத்த தகவல்படி சிறிலங்கா கடற்படையினர் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
திருகோணமலை துறைமுகப் பகுதியிலிருந்து வாகனங்கள் வேகமாக சென்று வந்துகொண்டிருப்பதாகவும் - அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருகோணமலைக்கான தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தை அண்டிய பிரதேங்கள் எங்கும் பதற்றம் நிலவியது.

ஜெட்லைனர் மீது தாக்குதல் என்று கடற்படை தெரிவிப்பு

திருகோணமலை கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: -

யாழ்ப்பாணத்துக்கு படையினரை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் 'ஜெட்லைனர்' என்ற துருப்புக்காவி கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்றது. படையினரை ஏற்றிச்செல்ல ஆயத்தமாக நின்றவேளை அதனை இலக்குவைத்தே விடுதலைப் புலிகளின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளின் வானூர்தி கடல்பக்கமாக இருந்து தாழப்பறந்து வந்து மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து திருகோணமலை கடற்படை தலைமையகம் மற்றம் சீனன்குடா வான்படைத்தளம் ஆகியவற்றிலிருந்து வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்குதல் நடப்பட்டது. எனினும் அது தப்பிவிட்டது.

தாக்குதல் இடம்பெற்ற நேரம் இருள் கவிழ்ந்து கிடந்ததால் விடுதலைப் புலிகளும் இலக்கை சரியாக தாக்கவில்லை. படையினரும் புலிகளின் வானூர்தியை தாக்கமுடியாமல் போய்விட்டது என்று அவை தெரிவித்தன.

திருகோணமலை துறைமுகம் மீது மீண்டும் புலிகளின் வானூர்தி தாக்குதல்
திருகோணமலை துறைமுகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வானூர்தி இரவு 9:05 மணியளவில் தாக்கியிருந்தது. மீண்டும் அதிகாலை 12:15 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வானூர்தி ஒன்று துறைமுகப்பகுதியை நோக்கி ஒரு குண்டினை வீசிதியதாகவும் அதனால் பாரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானூர்தியை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை 10 நிமிடம் வரை தீர்த்ததாகவும் மேலும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்தி மீண்டும் தாக்குதல் நடத்தியது தொடர்பாக சிறிலங்காப் படைத்தரப்பு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

மீண்டும் நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பான மேலதிக விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

நன்றி: தமிழ்வின்.கொம்

அன்புரசிகன்
27-08-2008, 01:06 AM
இதுவரை நான் படித்த செய்திகள் அனைத்தும் கண்ணால் யாரோ பார்த்தவற்றை சொல்லுவது போல் உள்ளது. (தமிழ் நெட் உட்பட) ஆனால் உண்மை விபரம் இதுவரை யாரும் சொல்லவில்லை... புலிகள் அல்லது அரசு வெளியிட்டால் தான் ஏதாவது தெரியவரும்...

இது இலங்கை பாதுகாப்பு அமைச்சி்ன் இணையத்தில் உள்ள செய்தி...


LTTE terrorists launch abortive air raid at Trincomalee navy camp

LTTE terrorists have launched an abortive air raid at the Trincomalee Naval base tonight (Aug 26).
According to Navy sources , the navy base has been alarmed on approaching terror aircraft by Sri Lanka Air Force around 9 PM. After few minutes , naval troops have detected the aircraft and engaged them with anti air guns . The machine gun fire has caused the aircraft to make away without entering into the naval dockyard, said the sources.
However , the terrorists have dropped two improvised bombs into the the navy camp. The sources said that only one out of two bombs has exploded. According to the available information , 4 sailors have suffered injuries in the attack.

ஓவியன்
27-08-2008, 01:54 AM
இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தாக்குதல் நடைபெற்றதால், சுயாதீனச் செய்திகள் எதுவும் வரப் போவதில்லை.....

அரசு சொல்வதைத்தான் நாம் நம்ப வேண்டும்...!! :lachen001:


ஆனால், சில நாட்களின் முன்னால் ‘புலிகள் இனிமேல் வான் தாக்குதல்களை நடாத்த மாட்டார்களென அரசு சார்பாக யாரோ கூறிய ஞாபகம்..!! :lachen001:

ராஜா
27-08-2008, 03:22 AM
என்னமோ போங்க..!

வருஷம் பூரா தீபாவளி கொண்டாடுறவங்க உங்க ஆளுகதான் போலிருக்கு..!

அதென்னாது..? புலிகளின் வானூர்தி அப்பப்போ டவுன் பஸ் மாதிரி வந்து டிக்கெட்டை இறக்கி விட்டுட்டுப் போகுது..?

தாக்குதல் முடிந்து தரை இறங்கிய 2 மணி நேரத்தில் வானூர்தியை அக்கு அக்கா பிரிச்சு, ட்ராக்டர்ல ஏத்திகிட்டு வேற இடத்துக்குப் போயிடுவாங்களாமே..?

அன்புரசிகன்
27-08-2008, 03:40 AM
அதென்னாது..? புலிகளின் வானூர்தி அப்பப்போ டவுன் பஸ் மாதிரி வந்து டிக்கெட்டை இறக்கி விட்டுட்டுப் போகுது..?

தாக்குதல் முடிந்து தரை இறங்கிய 2 மணி நேரத்தில் வானூர்தியை அக்கு அக்கா பிரிச்சு, ட்ராக்டர்ல ஏத்திகிட்டு வேற இடத்துக்குப் போயிடுவாங்களாமே..?

இல்லேன்னா டிஞ்சர் செலவு அதிகமாகிடும். அதனால தான் முன்கூட்டியே அக்கு பஞ்சர் வேல பண்ணவேண்டிகிடக்கு.... :D

தெரியுமுல்லே..... நம்ம ஆளுங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இறக்கீட்டு போய்டுவாங்க...

ராஜா
27-08-2008, 04:01 AM
இம்முறை வந்திருக்கும் தகவல்களை ஆய்வு செய்யும்போது, புலிகளின் துல்லியம் குறைந்திருப்பதாக ஒரு உணர்வு எழாமலில்லை.

அடுத்தடுத்த வானூர்தித் தாக்குதல் வெற்றிகளால் கொஞ்சம் அலட்சியம் வெளிப்படுமேயாயின், அதற்கான பாரிய விலையை புலிகள் கொடுக்க வேண்டியிருக்கும்..!

குசேலன் போல..!!!

மறத்தமிழன்
27-08-2008, 06:05 AM
புலிகளின் வானூர்தி தாக்குதலுடன் சாதாரண சினிமாவை ஒப்பிடுவது அபத்தம். வன்னியில் இருக்கும் நெருக்கடியில் கடும் பாதுக்கப்பு வலயமாக இருக்கும் திருகோணமலை துறைமுகத்தில் தாக்குதல் நடத்துவதென்பது சேதத்தை ஏற்படுத்தும் நோக்கினால் அல்ல. இதுவொரு உளவியல் ரீதியிலான தாக்குதல். அந்த காரியத்தை புலிகள் வெற்றிகரமாகவே செய்துள்ளனர். உயிரோடு விளையாடுபவர்கள் ஒருபோதும் அலட்சியமாக திட்டமிடுவதில்லை.
தலைநகரில் தமிழன் பறந்தான் என்று பெருமிதப்படுவோம்.

tamilambu
27-08-2008, 06:06 AM
இதோ போர் முடிந்துவிட்டது; ஒரு சிறிய நிலப்பகுதிதான் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது; அவர்கள் பலமிழந்து விட்டார்கள்; அவர்களால் இனிமேல் எதுவும் செய்யமுடியாது; என்று கொக்கரித்த அரசே இந்தத் தாக்குதலை ஒப்புக்கொண்டதோடல்லாமல் தனது தரப்பில் இவ்வளவு சேதம் என கூறியிருப்பதைப் பார்த்தால் உண்மையை ஓரளவுக்கு ஊகிக்கக் கூடியதாக உள்ளது.

இரண்டாவது தாக்குதல் இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை என நினைக்கிறேன்.

தேவன்1
27-08-2008, 08:20 AM
அரசு மிகப்பெரிய விலையில் பொய்யை மேடை போட்டது, போராளிகளோ மிகச்சிறிய விலையில் அவர்கள் முயற்சியை செல்லாக்காசாக்கி விட்டனர்.
அவர்களை விட பத்தில் ஒருவீததினரான தமிழர்களாகிய நாங்கள் எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் நூறுதடவைக்குமேல் யோசிக்கவேண்டியனவாய் இருக்கும். எம்மிடம் இருக்கும் அனைத்து வளங்களும் அளவு வரையறை உடையது. "காலம் அறிந்த காக்கையின் போர் ஆந்தையை வெல்லும்" என்பது போலவேதான் புலிகளின் நடவடிக்கைகளுக்கு காலநேரம் அவசியம்!

lolluvathiyar
27-08-2008, 08:54 AM
தாக்குதல் முடிந்து தரை இறங்கிய 2 மணி நேரத்தில் வானூர்தியை அக்கு அக்கா பிரிச்சு, ட்ராக்டர்ல ஏத்திகிட்டு வேற இடத்துக்குப் போயிடுவாங்களாமே..?

அது சிறிய ரக பயற்ச்சி விமானம் அதை கழுட்டி வைக்க வேன்டியதில்லை. புலிகள் இருக்கும் காடு பகுதியில் அதை சுலபமாக மறைத்து வைக்க முடியும். ஏன் என்றால் அது ஒரு பஸ் சைஸ் தான் இருக்கும். அடர்ந்த காடு பகுதியில் அதை கன்டுபிடுக்கும் அளவுகு சிரிலங்கா ரானுவத்துக்கு போதுமான கருவிகள் இல்லை

அமரன்
27-08-2008, 09:07 AM
திருகோணமலை அதி உச்சப் பாதுகாப்பு வலயம். இந்தியா, சீனா, வொய்ஸ் அமெரிக்கா போன்ற பன்னாட்டு பாதுகாப்புக்கு மத்தியில் மயிர்கூச்செறியும் தாக்குதல் சாகசம். செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டும் இலங்கையில் இந்த தாக்குதல் தொடர்பான அரசு வெளியிடும் விபரங்களைத்தான் நம்ப வேண்டியுள்ளது. அவர்கள் இழப்புகளை குறைத்துச் சொன்னாலும் உளவியல் யுத்தத்தில் ராணுவத்துக்கு ஒரு பின்னடைவு. போரரங்குகளில் இது எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தேவன்1
27-08-2008, 09:15 AM
அது சிறிய ரக பயற்ச்சி விமானம் அதை கழுட்டி வைக்க வேன்டியதில்லை. புலிகள் இருக்கும் காடு பகுதியில் அதை சுலபமாக மறைத்து வைக்க முடியும். ஏன் என்றால் அது ஒரு பஸ் சைஸ் தான் இருக்கும். அடர்ந்த காடு பகுதியில் அதை கன்டுபிடுக்கும் அளவுகு சிரிலங்கா ரானுவத்துக்கு போதுமான கருவிகள் இல்லை

விஞ்ஞானத்தொழில் நுட்பத்தின் உச்சத்தை இலவசமாக அநுபவிக்கும் வாழ்கை இலங்கை அரசுக்கு கிடைத்திருக்கின்றது. ஆனால் என்ன செய்வது ஒவ்வொன்றுக்குமான புலிகளின் பதிலளிப்புக்கள்தான் அவர்களைத் திக்குமுக்காட வைக்கின்றது.
உலோக மோப்பசக்தியுடைய கருவி இருந்தால் பிடிக்க முடியும் என்றால் வன்னியில் உள்ள ஒரே உலோகமாக புலிவிமானம் இருந்தால்த்தான் உண்டு கண்டுபிடிக்க!
அரசுக்கு எது அது வசதிகளாக வைத்திருந்தார்களோ அவற்றைக் கொண்டே போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு உடனுக்குடன் புதுப் புது அநுபவங்களை புலிகள் கொடுத்து விடுவார்கள். உதாரணமாக ஒன்றை சொல்கின்றேன்; இஸ்ரேலிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆள் இல்லாவிமானம் மிகத்துல்லியமாக பட உளவு வேலை செய்யக்கூடியது. அதை வாங்கிய பலனுக்குத்தான் மணலாறு என்ற இடத்தில் மிகப்பெரிய அடி புலிகளிடம் வாங்கக் காரணமாய் இருந்தது. மிகப்பெரிய டம்மி முகாம் ஒன்றை உருவாக்கி இராணுவத்தை வரவளைத்து 150 அதிகமான உயின் இழப்புக்களையும் படைக்கல இழப்புக்களையும் கொடுத்தார்கள்!
எனவே
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற!

அன்புரசிகன்
27-08-2008, 10:48 AM
இம்முறை வந்திருக்கும் தகவல்களை ஆய்வு செய்யும்போது, புலிகளின் துல்லியம் குறைந்திருப்பதாக ஒரு உணர்வு எழாமலில்லை.

அடுத்தடுத்த வானூர்தித் தாக்குதல் வெற்றிகளால் கொஞ்சம் அலட்சியம் வெளிப்படுமேயாயின், அதற்கான பாரிய விலையை புலிகள் கொடுக்க வேண்டியிருக்கும்..!

குசேலன் போல..!!!

அமரன் சொன்னது போல் இது நடந்தேறியிருக்கும் இடத்துக்கு தனிமவுசே இருக்கு... இந்த இடத்தில் நடாத்தப்பட்ட தாக்குதலால் கேள்விக்குறியாகியிருப்பது பலவிடையங்கள்... கடந்தகால சுவடுகளை எடுத்து நோக்கினால் உங்களுக்கே தெரியும். புலிகளின் பலதாக்குதல்கள் சேதங்களை உண்டுபண்ணுவதற்கல்ல.... அண்மையில் அனுராதபுர விமானத்தள தாக்குதலில் விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதலும் நிகழ்ந்தது. உண்மையில் அந்த விமான தாக்குதல் சண்டைக்காக வரவில்லை என்பது அரசுக்கும் தெரியும்...

மதுர படத்தில் விஜய் சொல்வார். இதெல்லாம் பிஸினஸ் ட்ரிக்ஸ். புரிஞ்சுக்க என்பது போல் இது WAR TRICKS :)

அமரன்
27-08-2008, 10:54 AM
இன்னொரு சமாச்சாரம்..
இதுவரை காலமான ஈழபோராட்டக் கட்டங்களின் தொடக்கம் திருகோணமைலையே.. அந்த வகையில் இந்தத் தாக்குதலை அடுத்த கட்ட போர்களின் பிரகடனமாகவும் கொள்ளலாம்

அன்புரசிகன்
27-08-2008, 10:55 AM
இன்னொரு சமாச்சாரம்..
இதுவரை காலமான ஈழபோராட்டக் கட்டங்களின் தொடக்கம் திருகோணமைலையே.. அந்த வகையில் இந்தத் தாக்குதலை அடுத்த கட்ட போர்களின் பிரகடனமாகவும் கொள்ளலாம்
ஆமால்லே...

ரணசுறு சுறயா போலவா??? :rolleyes:

விகடன்
27-08-2008, 11:00 AM
மறத்தமிழன், வாத்தியார், அன்பு,
மூவருமே சொல்ல வேண்டியதை அழகாக சொல்லிவிட்டீர்கள்.
--------------------
ஏனையா தீபன். இன்னோர் இணையத்தில் வரும் செய்தியை போட்டதுதான் போட்டீர்கள். அதனோடு உங்கள் சார்பான பதிவுகள் ஒன்றையுமே காணோம். தேசப்பற்று மிகுந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் உங்களின் பால்ய நண்பரின் மூலம். ....

தீபன்
27-08-2008, 01:00 PM
மறத்தமிழன், வாத்தியார், அன்பு,
மூவருமே சொல்ல வேண்டியதை அழகாக சொல்லிவிட்டீர்கள்.
--------------------
ஏனையா தீபன். இன்னோர் இணையத்தில் வரும் செய்தியை போட்டதுதான் போட்டீர்கள். அதனோடு உங்கள் சார்பான பதிவுகள் ஒன்றையுமே காணோம். தேசப்பற்று மிகுந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் உங்களின் பால்ய நண்பரின் மூலம். ....

அத்தோட விடாட்டா செய்திகள செய்தியா பாருங்கன்னு கண்டனம் வரும்னு கம்முன்னு இருந்திட்டேன்.
(ஏம்பா... பப்ளிக்கில சொல்லி நாம ஊரில இருக்கேலாம பண்ணிடுவிங்கபோல...)

தீபன்
28-08-2008, 05:07 AM
வானூர்தி தாக்குதலில் திருமலை துறைமுகத்தில் பாரிய அழிவு: விடுதலைப் புலிகள்

திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையின் கிழக்கு தலைமையகத் தளத்தின் மீது வான் புலிகள் நடத்திய தாக்குதல்களில் பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் நான்கிற்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 35-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

திருகோணமலை உட்துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது நேற்று முன்நாள் இரவு 9:15 மணிக்கு வான்புலிகளின் வானூர்திகள் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் கடற்படையினருக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

கடற்படைத் தலைமையகத்தில் இருந்த படைய தங்ககங்கள் வான் புலிகளின் துல்லியமான குண்டுவீச்சுக்கு இலக்காகின.

இதில் நான்கிற்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டனர். 35-க்கும் அதிகமான கடற்படையினர் படுகாயமடைந்தனர்.

அத்துடன் படையத்தளப் பகுதியும் பாரிய அழிவுக்கு உள்ளானது. தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய வான் புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.கொம்

ராஜா
28-08-2008, 06:14 AM
அமரன் சொன்னது போல் இது நடந்தேறியிருக்கும் இடத்துக்கு தனிமவுசே இருக்கு... இந்த இடத்தில் நடாத்தப்பட்ட தாக்குதலால் கேள்விக்குறியாகியிருப்பது பலவிடையங்கள்... கடந்தகால சுவடுகளை எடுத்து நோக்கினால் உங்களுக்கே தெரியும். புலிகளின் பலதாக்குதல்கள் சேதங்களை உண்டுபண்ணுவதற்கல்ல.... அண்மையில் அனுராதபுர விமானத்தள தாக்குதலில் விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதலும் நிகழ்ந்தது. உண்மையில் அந்த விமான தாக்குதல் சண்டைக்காக வரவில்லை என்பது அரசுக்கும் தெரியும்...

மதுர படத்தில் விஜய் சொல்வார். இதெல்லாம் பிஸினஸ் ட்ரிக்ஸ். புரிஞ்சுக்க என்பது போல் இது WAR TRICKS :)


நீங்கள் குறிப்பிடுவது ஆபரேஷன் எல்லாளன் தானே..?


அப்படியென்றால் அந்தத் தாக்குதலில் உயிரிழந்த விடுதலைப்புலிகளின் விதியும் பிசினஸ் ட்ரிக்ஸ்தானா மாம்ஸ்..?

:confused::fragend005::confused::fragend005::confused:

ராஜா
28-08-2008, 06:21 AM
புலிகளின் வானூர்தி தாக்குதலுடன் சாதாரண சினிமாவை ஒப்பிடுவது அபத்தம். வன்னியில் இருக்கும் நெருக்கடியில் கடும் பாதுக்கப்பு வலயமாக இருக்கும் திருகோணமலை துறைமுகத்தில் தாக்குதல் நடத்துவதென்பது சேதத்தை ஏற்படுத்தும் நோக்கினால் அல்ல. இதுவொரு உளவியல் ரீதியிலான தாக்குதல். அந்த காரியத்தை புலிகள் வெற்றிகரமாகவே செய்துள்ளனர். உயிரோடு விளையாடுபவர்கள் ஒருபோதும் அலட்சியமாக திட்டமிடுவதில்லை.
தலைநகரில் தமிழன் பறந்தான் என்று பெருமிதப்படுவோம்.



எது அபத்தம் என்பதை வருங்காலம் உணர்த்தும்..!

அதுவரை அமைதி காக்கிறேன்.. வாதத்துக்கு அஞ்சி அல்ல.. மன்றத்திலிருக்கும் இலங்கைத் தோழர்களை எண்ணி..!

'விரைவில்' தமிழீழம் 'அதிக உயிர்ப்பலி' இன்றி மலருமேயானால் எனக்கும் மகிழ்வே..!

ஓவியன்
28-08-2008, 06:30 AM
:confused::fragend005::confused::fragend005::confused:

ராஜா அண்ணா, இலங்கையில் இப்போது இரண்டு விதமாக போர் நடந்து கொண்டிருக்கிறது...
ஒன்று நேரடியாக நடைபெறும் போர், புலிகளின் கோட்டையான வன்னியை ஆக்ரமிக்க நினைக்கும் இராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையானது அது, மற்றையது போரிலீடு படும் தரப்பினர் பரப்புரைகள் மூலம் நடாத்தும் உளவியல் போர்.

முன்னைய போரில் அரசு முன்னிற்கிறதோ இல்லையோ, பின்னைய போரில் அரசு சமீப காலமாக முன்னிலை வகித்து வந்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக இருந்த சில பகுதிகளை ஆளரவமற்ற சூன்ய பிரதேசங்களாகக் கைப்பற்றி விட்டு, புலிகளின் முதுகெலும்மை ஒடித்தாயிற்று, பிரபாகரனை சுற்றி வளைத்தாயிற்று, இனி விமானத் தாக்குதல்களைப் புலிகள் மேற்கொள்ள முடியாது என்றெல்லாம் பல விதமான பரப்புரைகளை சிங்கள அரசு நிகழ்த்தி வந்தது. இதில் மிகக் கொடுமையான விடயம் யாதெனின் யதார்த்த நிலை அறியாது, பெரும்பான்மையான மக்கள் அரசின் பரப்புரைகளை நம்பி வந்ததுதான்.

அத்தனை பரப்புரைகளுக்கும் விழுந்த மரண அடிதான் இந்த விமானத் தாக்குதல், இந்தத் தாக்குதல் இராணுவ ரீதியாக பெரிய வெற்றியைக் கொடுத்தது, கொடுக்காமை ஒருபுறமிருக்க, இந்த தாக்குதல் தந்த உளவியல் ரீதியிலான வெறிகளைச் சிந்தித்தால் அது கணிசமானது.

இன்னும் ஓரிரு மாதங்களில் வன்னியில் மழைக்காலம் ஆரம்பித்து விடும், மழைக்கால வன்னி எப்படியிருக்குமென அங்கிருந்தவர்களுக்குத் தான் தெரியும். அதுவரையும் மக்களின் மனோபலத்தை அரச பரப்புரைகளால் சோர்ந்து போகாதிருக்க செய்யப்பட்ட ஒரு தாக்குதலாக இதனைக் கருதலாம்.

மழைக்காலத்தில் இராணுவத்தின் விமானப் படையும், பீரங்கி அணிகளும், டாங்கி அணிகளும் கணிசமான அளவில் முடங்கி விடும். அப்போது மண்ணின் மைந்தர்கள் வீறு கொண்டு எழுவார்களென பரவலாக எதிர்பார்க்கப் படுகிறது. எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

ராஜா
28-08-2008, 06:38 AM
நல்லதொரு விளக்கத்துக்கு நன்றி தம்பி..!

தங்கள் பதிவின் கடைசி சொற்றொடருடன் நானும் முழுமையாக ஒத்துப்போகிறேன்.

சுட்டிபையன்
28-08-2008, 06:52 AM
தமிழீழத்தின் தலை நகரத்தில் இராணுவத்தின் இரும்பு பிடிக்குள் இரு தடவை நடந்த தாக்குதல் அழிவு தாக்குதலில்லை ஒரு உளவியல் தாக்குதலே. பொதுவாகத் தமிழர்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பகுதிக்குள் படைத்தரப்புப் பிரவேசித்திருப்பது சற்றுக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து விடுவார்களோ? என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு நிலை தோன்றுமாக இருந்தால், அது தமிழ் மக்களைச் சிங்களவர்கள் மத்தியில் அடிமை நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற அச்சம் தமிழர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இவ்வாறான ஒரு நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வெற்றியளித்ததா? அல்லது தோல்வியடைந்ததா? என்ற கேள்வியைக் காட்டிலும் இந்தத் தாக்குதல் தற்போதைய சூழ்நிலையில் நடத்தப்பட்டுள்ளமை இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் மீண்டும் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

ராஜா
28-08-2008, 07:00 AM
தமிழீழத்தின் தலை நகரத்தில் இராணுவத்தின் இரும்பு பிடிக்குள் இரு தடவை நடந்த தாக்குதல் அழிவு தாக்குதலில்லை ஒரு உளவியல் தாக்குதலே. பொதுவாகத் தமிழர்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பகுதிக்குள் படைத்தரப்புப் பிரவேசித்திருப்பது சற்றுக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து விடுவார்களோ? என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு நிலை தோன்றுமாக இருந்தால், அது தமிழ் மக்களைச் சிங்களவர்கள் மத்தியில் அடிமை நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற அச்சம் தமிழர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இவ்வாறான ஒரு நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வெற்றியளித்ததா? அல்லது தோல்வியடைந்ததா? என்ற கேள்வியைக் காட்டிலும் இந்தத் தாக்குதல் தற்போதைய சூழ்நிலையில் நடத்தப்பட்டுள்ளமை இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் மீண்டும் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.



ஏழு வயசுக் குழந்தையாக இருந்தாலும், நடப்பு நிலையை நச்சென்று படம்பிடித்துக் காட்டிய சுட்டியாருக்கு பாராட்டுகள்..!

அடிக்கடி வரமாட்டுறியே.. ஏம்பா..?

வலைப்பூவெல்லாம் அசத்தலா இருக்கு வில்லண்ணே..!

சுட்டிபையன்
28-08-2008, 07:16 AM
ஏழு வயசுக் குழந்தையாக இருந்தாலும், நடப்பு நிலையை நச்சென்று படம்பிடித்துக் காட்டிய சுட்டியாருக்கு பாராட்டுகள்..!

அடிக்கடி வரமாட்டுறியே.. ஏம்பா..?

வலைப்பூவெல்லாம் அசத்தலா இருக்கு வில்லண்ணே..!

ரஜா அண்ணா மம்மி விடுறாங்களில்லை 6வயசு பையணுக்கு எதுக்கு இதெல்லாம் என்னு அடிக்கிறாங்கண்ணா:traurig001::traurig001::traurig001:

ராஜா
28-08-2008, 07:33 AM
வயசை எடிட் பண்ணினா மம்மி அடிக்க மாட்டாங்களா குட்டிப் பாப்பா..?

தேவன்1
28-08-2008, 11:09 AM
வாதம் என்றுவந்தால் அனைத்து முட்டுக்களும் இறக்கி வைக்கப்படலாமே
தெளிவும் ஏற்பட வழி பிறக்குமே! உண்மை வைத்திருப்பவர்கள் வாதத்துக்கு அஞ்ச வேண்டியதில்லையே.
வாதத்துக்கே வாடிவிடுவார்களா ஈழத்தவர்கள்?

விகடன்
28-08-2008, 11:23 AM
(ஏம்பா... பப்ளிக்கில சொல்லி நாம ஊரில இருக்கேலாம பண்ணிடுவிங்கபோல...)

நீங்க ஈழத்திலேயே இல்லை என்று எனக்கு தெரியும் தீபன்.

தீபன்
28-08-2008, 11:41 AM
நீங்கள் குறிப்பிடுவது ஆபரேஷன் எல்லாளன் தானே..?


அப்படியென்றால் அந்தத் தாக்குதலில் உயிரிழந்த விடுதலைப்புலிகளின் விதியும் பிசினஸ் ட்ரிக்ஸ்தானா மாம்ஸ்..?

:confused::fragend005::confused::fragend005::confused:
மாம்ஸ் பிஸினஸ் ட்ரிக்ஸ் என்று சொன்னது எல்லாளன் நடவடிக்கையில் ஈடுபட்ட வான்புலிகளின் தாக்குதல் பங்களிப்பையே.
அந்த நடவடிக்கையில் வான்புலிகளின் பங்களிப்பின் தேவை இருக்கவில்லை. ஆனாலும் ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தவும் ஒரு உத்தியாக அதை கையாண்டிருந்தனர். இதனால் எந்த போராளியும் உயிரிளந்திருக்கவில்லை. (தரைவளியாகா தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகளே உயிரிளந்திருந்தனர். இது, போரியல் நோக்கிற்காக செய்யப்பட்ட தாக்குதலே, பிஸினஸ் ட்ரிக்ஸிற்காகவல்ல!)
உங்கள் கூற்று, சும்மா ட்ரிக்ஸிற்காகாகூட போராளிகளின் உயிரை மதிக்காமல் தாக்குதல் நடத்துகின்றனர் என்ற தொனியில் உள்ளது.


நீங்க ஈழத்திலேயே இல்லை என்று எனக்கு தெரியும் தீபன்.
நான் நானென்று சொல்லவில்லை.. நாம என்று சொன்னேன்.. மேலும், விரைவிலேயே மீள திரும்பும் எண்ணத்திலிருக்கிறேனே...!

kampan
28-08-2008, 01:25 PM
மறத்தமிழன், வாத்தியார், அன்பு,
மூவருமே சொல்ல வேண்டியதை அழகாக சொல்லிவிட்டீர்கள்.
--------------------
ஏனையா தீபன். இன்னோர் இணையத்தில் வரும் செய்தியை போட்டதுதான் போட்டீர்கள். அதனோடு உங்கள் சார்பான பதிவுகள் ஒன்றையுமே காணோம். தேசப்பற்று மிகுந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் உங்களின் பால்ய நண்பரின் மூலம். ....

மணி கட்டுவதுதான் சிரமம் கட்டியபின் அதனை எல்லாரும் இலகுவாக அடித்துவிடலாம் இதைத்தான் தீபன் செய்திருக்கிறார். இவ்வாறான் கேள்விகளின் நோக்கம் எனக்கு புரியவில்லை.

தொடக்க நினைத்தவனுக்கு துடைப்பது சிரமமில்லை

தீண்டியவனை தீண்ட நினைத்தால் என்று எம்மினம் இத்தனை தடைகளையும் தாண்டுவது?

சொல்பவன் எல்லாவற்றையும் செய்வதில்லை
செய்பவன் எல்லாவற்றையும் சொல்வதில்லை
ஆனால் சொல்வதற்கு என்று ஒருவன் வேண்டும்
செய்பதற்கு ஒரு கூட்டம்
சொல்பதற்கு ஒரு கூட்டம் என் எம்மினம் திரண்டெழுகிறது. இதில் எதையாவது செய்ய மாட்டோமா என்று ஏங்கி தவிக்கும் ஒரு கூட்டம்.

எந்த மூளைமுடுக்கிலும் முளைக்கும் எம் இனத்தின் எழுச்சிகள்
சங்கத்தமிழை மறந்தாலும் பொங்கு தமிழை மறக்காது எம் தமிழினம்
எங்கு சென்றாலும் எமக்கொரு நாடு வேண்டுமென்று சொன்னவேலைகள் அத்தனையும் சோர்ந்து விடாமல் முடித்துவிடும் எம் தமிழினம்
உழைப்பாழி வர்க்கமாக உலக நாடுகளில் ஓங்கி நிற்கும் எம்தமிழினம்
அயல் நாட்டிலிருந்து அமெரிக்கா வரை எமக்கு உதவ பயப்படும் இராணுவ பரிமாணங்களில் பரந்து நிற்கும் எம் தமிழினம்
ஆட்சி செய்யாமலேயே ஆட்சி செய்யும் அரசியல் அறிவாளிகள் எம் தமிழினம்
கப்பலின்றி கடலிலே கங்கணம் கட்டும் எம் தமிழினம்
ஓடு தளமின்றியே வானத்தில் ஓடி விளைாடும் எம் தமிழினம்

தோல்விகள் எமை சூழ்ந்தாலும் காலங்கள் கதை சொல்லும் கட்டப்பொம்பனில் இருந்து கரிகாலன் வரை தமிழனத்தின் வீரத்தை

விகடன்
28-08-2008, 01:56 PM
கம்பா...
உமது பெயரை வம்பா என்று ஏன் மாற்றக்கூடாது? (பகிடிக்குத்தான் கேற்கிறேன். கோபம் வேண்டாம்))

எதற்காக எனது பதிவை மேற்கோள் காட்டி உங்களுடைய பதிவை இட்டீர்கள். அதற்கான காரணம் எனக்கு அறவே விளங்கவில்லை.

ராஜா
28-08-2008, 02:26 PM
வாதம் என்றுவந்தால் அனைத்து முட்டுக்களும் இறக்கி வைக்கப்படலாமே
தெளிவும் ஏற்பட வழி பிறக்குமே! உண்மை வைத்திருப்பவர்கள் வாதத்துக்கு அஞ்ச வேண்டியதில்லையே.
வாதத்துக்கே வாடிவிடுவார்களா ஈழத்தவர்கள்?


உண்மை இல்லையென்றே எடுத்துக்கொள்ளுங்கள்..!

ஓவியன்
28-08-2008, 02:37 PM
மணி கட்டுவதுதான் சிரமம் கட்டியபின் அதனை எல்லாரும் இலகுவாக அடித்துவிடலாம் இதைத்தான் தீபன் செய்திருக்கிறார். இவ்வாறான் கேள்விகளின் நோக்கம் எனக்கு புரியவில்லை.

அன்பின் கம்பா..!!

தமிழ் மன்றத்தில் என்றுமே வேற்றுத் தளச் செய்திகளை வெறுமனே வழங்குவதற்கு வரவேற்புக் கிடையாது...

அப்படி வேற்றுத்தளச் செய்திகளை வழங்கினால், அந்தச் செய்தியை அப்படியே இங்கே பதிவிடத் தேவையில்லை....

அந்த தளத்தின் சுட்டியை இங்கே வழங்கினால் போதும்....

தேவையானவர்கள் அங்கே சென்று படித்துக் கொள்ளலாம்...

மாறாக முழுச் செய்தியையும் வெட்டி ஒட்டினால், அத்துடன் அந்த திரி தொடங்குபவரின் கருத்தும் இணைந்திட்டால் அது அந்த திரிக்கு சிறப்பாக இருக்கும்...

இதுவே மன்றத்தின் வழமையும் கூட....

அந்த வகையிலேயே விராடனின் கேள்வியும் அமைந்திருந்தது....

இதில் மன்ற நலனே மேலோங்கியிருந்தது, வேறு எந்தக் காரணங்களுமல்ல.....

மறத்தமிழன்
29-08-2008, 06:17 AM
பிந்திய தகவல்கள்: நன்றி: புதினம்.கொம்

புலிகளின் வானூர்தி தாக்குதலில் 10 படையினர் பலி- 40 பேர் காயம்: கொழும்பு தகவல்

சிறிலங்கா கடற்படையின் கிழக்கு கட்டளைத் தலைமையக தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் பத்து கடற்படையினர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர் என்று சிறிலங்கா படைத்துறை ஊடாக பெறப்பட்ட கொழும்பு மையத்தகவல் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் வானூர்தி நான்கு குண்டுகளை வீசின. இரு அதிகாரிகளின் விடுதிப் பகுதிகள் மீது குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இரண்டு கடற்படைப் படகுகள் இதில் அழிந்தன என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீபன்
09-09-2008, 02:08 AM
வவுனியா சிறிலங்கா படைத்தலைமையகம் மீது புலிகளின் வானூர்திகள் தாக்குதல்

வவுனியாவில் அமைந்துள்ள வன்னிப் பிராந்தியத்துக்கான சிறிலங்கா படைத்தலைமையகமான ஜோசப் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை(9.9.2008) கடுமையான வானூர்தி தாக்குதலையும் ஆட்டிலறி எறிகணை தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வன்னியிலிருந்து வவுனியா இராணுவத் தலைமையகம் மீது கடுமையான ஆட்டிலறி எறிகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், மேலதிக விபரங்கள் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆறு படையினர் வவுனியா அரசினர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவிலேயே விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் வவுனியா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிப்பதை ராடர்கள் மூலமாகத் தாம் கண்டு உணர்ந்ததாக இராணுவ வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்தன.

இதனையடுத்து பதில் தாக்குதலை நடத்துவதற்காக சிறிலங்கா வான்படை உடனடியாக உயர் விழிப்பு நிலைக்கு உட்படுத்தப்பட்டது.

கட்டுநாயக்க வானூர்தி தளத்திலிருந்த சிறிலங்கா வான்படையின் தாக்குதல் வானூர்திகள் இடைமறித்துத் தாக்குதலை நடத்துவதற்காக உடனடியாகவே வவுனியாவுக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில் வவுனியாவுக்குள் பிரவேசித்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்தின.

இரண்டு வானூர்திகளிலிருந்தும் நான்கு குண்டுகள் வான் படைத் தளத்தின் மீது போடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில், வன்னியிலிருந்தும் இத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான ஆட்டிலறி எறிகணை தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல்களால் இன்று அதிகாலையில் அரை மணித்தியாலத்துக்கும் அதிகமாக வவுனியா நகர் அதிர்ந்துகொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தாக்குதலை நடத்தியபோது படை முகாமிலிருந்து தொடர்ச்சியாக வானை நோக்கி வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகளும், துப்பாக்கிகளும் வானை நோக்கி தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தமையால் வான்பரப்பு ஒளிப்பிளம்பாகக் காணப்பட்டது என வவுனியா மக்கள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல்களால் எழுந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களால் வவுனியா நகர மக்கள் அதிகாலையிலேயே பெரும் அச்சத்துடன் எழுந்துவிட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளையில், தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகளில் ஒன்றை தமது வானூர்திகள் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தியதாக சிறிலங்கா வான்படை பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது தாக்குதல் வானூர்திகள் துரத்திச் சென்றதாகவும், முல்லைத்தீவு காட்டுப் பகுதிக்கு மேலாகச் சென்றுகொண்டிருந்த போது அவற்றில் ஒன்றைத் தாம் சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை.

நன்றி: தமிழ்வின்.கொம்

தீபன்
09-09-2008, 06:18 AM
பிந்திய செய்திகள்...
11 படையினர் பலி 15 பேர் காயம்

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை ஆகாய, தரைவழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகள் தரைவழியாகவும் ஊடுருவி படைத் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலையும் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலையும் நடத்தினர்.

விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வன்னியிலிருந்து வவுனியா படைத் தலைமையகம் மீது கடுமையான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் படைத் தலைமையகத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், முழுமையான விபரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி 11 படையினர் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவர் என்றும் 15 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்களில் 5 பேர் வான்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு இந்திய அரசு வழங்கிய இந்திரா இரு பரிமாண ராடர்கள் இருந்த கட்டடத் தொகுதிக்கே விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியதாகவும், இந்திரா ராடர்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் அதனை இயக்கிக்கொண்டிருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த இரு பொறியியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் உடனடியாக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கான சிகிச்சை வசதிகளை இந்தியத் தூதரகம் தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் 10 உடலங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா வான்படைத் தளபதி ரொசான் குணதிலக்க அனைத்துலக ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவிலேயே விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் வவுனியா சிறிலங்கா படை கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிப்பதை ராடர்கள் மூலமாகத் தாம் கண்டு உணர்ந்ததாக படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்தன.

இதனையடுத்து பதில் தாக்குதலை நடத்துவதற்காக சிறிலங்கா வான்படை உடனடியாக உயர்விழிப்பு நிலைக்கு உட்படுத்தப்பட்டது.

கட்டுநாயக்க வானூர்தி தளத்திலிருந்து சிறிலங்கா வான்படையின் தாக்குதல் வானூர்திகள் இடைமறித்துத் தாக்குதலை நடத்துவதற்காக உடனடியாகவே வவுனியாவுக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில் வவுனியாவுக்குள் பிரவேசித்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய படைத் தலைமையகத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்தின.

இரண்டு வானூர்திகளிலிருந்தும் நான்கு குண்டுகள் வான்படைத் தளத்தின் மீது போடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில், வன்னியிலிருந்தும் இத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான எறிகணைகள் படைத்தலைமையக பகுதிக்குள் வீழ்ந்து வெடித்ததாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல்களால் இன்று அதிகாலையில் அரை மணித்தியாலத்துக்கும் அதிகமாக வவுனியா நகர் அதிர்ந்துகொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தாக்குதலை நடத்தியபோது படை முகாமிலிருந்து தொடர்ச்சியாக வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகளும், துப்பாக்கிகளும் வானை நோக்கி தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தமையால் வான்பரப்பு ஒளிப்பிளம்பாகக் காணப்பட்டது என வவுனியா மக்கள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல்களால் எழுந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களால் வவுனியா நகர மக்கள் அதிகாலையிலேயே பெரும் அச்சத்துடன் எழுந்துவிட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நகர் பகுதியில் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று சிறிலங்கா படைத்தரப்பு அப்பகுதி மக்களை எச்சரித்திருப்பதனால் அங்கு அதிகாரபூர்வமற்ற ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளையில், தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகளில் ஒன்றை தமது வானூர்திகள் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தியதாக சிறிலங்கா வான்படை பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது தாக்குதல் வானூர்திகள் துரத்திச் சென்றதாகவும், முல்லைத்தீவு காட்டுப் பகுதிக்கு மேலாகச் சென்றுகொண்டிருந்த போது அவற்றில் ஒன்றைத் தாம் சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான தடயம் எதுவும் தமது ராடர் திரையில் பதிவாகவில்லை என இந்திய தரப்பு கூறியதாக கொழும்பில் உள்ள இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை.

(www.puthinam.com)

சுட்டிபையன்
09-09-2008, 08:16 AM
கிழக்கு தலமையகத்தை தொடர்ந்து வன்னி தலமையகம் மீது மும்முனை அதிரடி தாக்குதல் நிக்ழ்ந்த்துள்ளது. விமான படையின் 2விமானங்கள் மற்றும் இந்தியாவின் அதிநவீன ராடர்கள் உட்பட பலத்த சேதங்கள். தற்போதைய தகவல்படி 11படையினர் பலி என்கிறது இராணுவம், சேதம் என்னும் அதிகமாக இருக்கும் புலிகள் தரப்பில் 10 கரும்புலிகள் உயிரிழந்து உள்ளனர்

நதி
09-09-2008, 08:20 AM
தற்போதைய தகவல்படி 11படையினர் பலி என்கிறது இராணுவம், சேதம் என்னும் அதிகமாக இருக்கும் புலிகள் தரப்பில் 10 கரும்புலிகள் உயிரிழந்து உள்ளனர்

புதுப்புதினம். வான்புலிப்பாய்ச்சலா? கரும்புலிவெடிப்பா? பீரங்கிப்புயலா? மேலதிக தகவல்களை எங்கே படிக்கலாம்.

உதயசூரியன்
09-09-2008, 11:19 AM
திட்டமிட்ட தாக்குதல்.. இலக்கை அடிக்கும் திறன்.. இவைகளை.. போர் முறையை.. கையாளாகாத இலங்கை அரசு கற்று கொள்ள வேண்டும்..

இலங்கை ராணுவத்தினில்.. ராணுவ வீரர்கள் ஓடிவிடுவதும்..
விடுமுறைக்கு சென்றவர்கள்.. வருவதில்லை என்றும்.. வராதவர்களை கைதுசெய்தும் இருப்பது.. ஒரு நாட்டு ராணுவத்துக்கு பெருத்த அவமானம்.. இப்படி ஒரு வீரர்களா..மெச்சினேன் சிங்கலர்களே..????தூ

ராணுவ வீரர்களுக்கு புரிந்து விட்டது.. கடைசி தமிழன் உள்ளவரை அவர்கள் செய்த கொடுஞ்செயல்களுக்கு.. தண்டனை எப்பொழுதும் ஏதாவதொரு வழியில் உண்டென...


இது போல் ராணுவ வீரர்கள் ஓடிய நிகழ்வு.. கொஞ்ச வருடத்திற்கு முன்பும் நடை பெற்றது..

பல ஆயிரம் முறை மக்கள் மீது குண்டு மழை பொழிந்த ராணுவம்..

ஒருமுறை.. புலிகளின் தாக்குதலுக்கே ஆடி போகிறதே,, ஏன்..?/
அதற்கே.. ஊரட்ங்கு உத்தரவை அமல் படுத்தி இருக்கிறார்களே..என்ன கொடுமைங்க..
கையாகாலா இலங்கை அரசே.. நரி தனத்துக்கு சொந்தமானதா. புத்தமதம்..
மக்கலை கொன்று குவிப்பதா.. புத்த மதம்.. வெட்கம் வெட்கம்.. தூ

ஈழ நாடு என்று வந்தால் இன்னும் பல விமானங்கள் பறக்கும்.. உரிமையோடு..

போராட்டம் புலிகள் பார்த்து கொள்ளட்டும்..

புலம் பெயர்ந்த தமிழர்களே..
மற்றும் அனைத்து தமிழர்களே..
உலக அரங்கத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீரல்.. பற்றி எடுத்து கூறுங்கள்..
ஈழத்தின் சுதந்திர போராட்டத்தினை எடுத்து கூறி நியாய படுத்துங்கள்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

சுட்டிபையன்
09-09-2008, 02:05 PM
புதுப்புதினம். வான்புலிப்பாய்ச்சலா? கரும்புலிவெடிப்பா? பீரங்கிப்புயலா? மேலதிக தகவல்களை எங்கே படிக்கலாம்.

ரவுத்திரா நீங்கள் சொன்ன மூன்று பாய்ச்சலும் சம நேரத்தில் நிகழ்ந்தது. மேலே உள்ள செய்தி சுட்டியிற்க்கு செல்லுங்கள்

அன்புரசிகன்
09-09-2008, 02:46 PM
வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு; வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின: விடுதலைப் புலிகள் (http://www.puthinam.com/full.php?2bbmOA4ce3cc0e00Mttae4d43VD6UQdd0eeYmcYAc24d3044OOOdb0ac4We1ffcce00b5Vo6C33b44AAmIycde)

அன்புரசிகன்
09-09-2008, 02:55 PM
ரேடார் ற்கு ஒரு தமிழ் பதம் கண்டேன்... கதுவீ...

தீபன்
09-09-2008, 03:34 PM
இருளின் நாயகர்கள் இம்முறை நாயகிகளுடனும் புது பரிமாணத்தில்...!

மூச்சடைத்த சிங்களம் புலிகளின் ஒரு விமானத்தை சுட்டுவிட்டதாக கூறியதைகூட வெற்றிக்களிப்பாய் கொண்டாடமுடியாத அளவுக்கு வலி...
இந்தியாவுக்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.. இலங்கை அரசுக்கு யுத்த ரீதியிலான எந்த உதவியும் செய்யவில்லை, பயிற்சிகளும் மனிதாபிமான உதவிகளுமே வழங்குகிறோமென்ற நிலையில் யுத்த களத்தின் கட்டளைபீடத்தில் இரு இந்தியர்கள் காயம்...!
யார் உதவினாலும் முடிவு ஒன்றுதான்... அதுவும் மிக விரைவிலேயே...!
நன்றி உதயசூரியன்... ஆனால் உணர்ச்சி வேகத்தில் சற்று காட்டமாகவே பேசிவிடீர்கள்...

subas
09-09-2008, 05:31 PM
வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாகத் தாக்கியழிப்பு; புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாகத் தளம் திரும்பின: விடுதலைப் புலிகள்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2008, 01:17.52 PM GMT +05:30 ]
வவுனியாவில் அமைந்துள்ள சிறிலங்காப் படைத் தலைமையகத்தின் மீது கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் அங்கிருந்த கண்காணிப்புக் கதுவி (ராடர்) முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. வான்புலிகளின் வானூர்திகளும் தளத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளன. படைத்தளத்தின் மீது கேணல் கிட்டு பீரங்கிப்படைப் பிரிவினர் மேற்கொண்ட செறிவான ஆட்லறித் தாக்குதலில் படையினருக்குப் பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை விடிகாலை வவுனியாவில் அமைந்துள்ள சிறிலங்காப் படைத்தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அவர்கள் தெரிவித்திருப்பதாவது:-

சிறிலங்கா படையினரின் வன்னித் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படையினரின் வான் கண்காணிப்புக் கதுவீ அல்லது ராடார் நிலையத்தை இலக்கு வைத்து இன்று செவ்வாய்க்கிழமை விடிகாலை 3.05 மணிக்கு கரும்புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர். இதில் அந்தக் கதுவீ (ராடார்) நிலையம் முற்றாக அழிக்கப்பட்டது.

அதி உயர் பாதுகாப்புக் கொண்ட சிறிலங்கா வான்படை மற்றும் வன்னிப்பகுதி கூட்டுப்படை நடவடிக்கைத் தலைமையகம் உள்ளடங்கிய தளத்தினுள் கரும்புலிகள் ஊடுருவி உள்நுழைந்து தாக்குதல் நடத்திய அதேவேளை, இவர்களின் உதவியுடன் படைத்தளத்தின் மீது வான்புலிகளின் வானூர்தி தாக்குதல்களும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரின் செறிவான ஆட்லறிப் பீரங்கித் தாக்குதலும் நடத்தப்பட்டன.

இத்தாக்குதல்களில் சிறிலங்காப் படையினர் 20 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். வெடிபொருட் களஞ்சியங்களும் தொலைத்தொடர்புக் கோபுரமும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வகமும் வானூர்தியெதிர்ப்பு ஆயுதமும் முற்றாகத் தாக்கி அழிக்கப்பட்டன. சிறிலங்காப் படையினரின் வன்னித் தலைமையகமும் சிறப்புப் படையணியின் வன்னித் தலைமையகமும் பெரும் சிதைவுக்குள்ளாயின.

தாக்குதல் நடத்திய வான்புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாகத் தளம் திரும்பின.




வான் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு இந்திய ராடார் தொழில்நுட்பவியலாளர்கள் காயம்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2008, 11:58.23 AM GMT +05:30 ]
வவுனியா இராணுவப் படைத்தளம் மீது தமிழீழ வான் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் இரண்டு இந்திய ராடார் தொழில்நுட்பவியலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற வான் புலிகளின் தாக்குதல்களில் ராடார் தொழில்நுட்பவியலாளர்களாகப் பணியாற்றிய இரண்டு இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் தினகர் அசந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னணி தனியார் மருத்துவமனையொன்றில் குறித்த இருவரும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறு காயங்களே இந்திய தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக ஏனைய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்தத் தாக்குதல்களில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட இரண்டு ராடார்களும் சேதமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நன்றி - TamilWin-

அய்யா
21-02-2009, 05:21 AM
இம்முறை வந்திருக்கும் தகவல்களை ஆய்வு செய்யும்போது, புலிகளின் துல்லியம் குறைந்திருப்பதாக ஒரு உணர்வு எழாமலில்லை.

அடுத்தடுத்த வானூர்தித் தாக்குதல் வெற்றிகளால் கொஞ்சம் அலட்சியம் வெளிப்படுமேயாயின், அதற்கான பாரிய விலையை புலிகள் கொடுக்க வேண்டியிருக்கும்..!

குசேலன் போல..!!!
:confused:

அமரன்
21-02-2009, 07:14 AM
அய்யா!

புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்ற செய்தியை கேள்விப்பட்டதும் ராஜா அண்ணானின் இந்தப் பதிவு ஞாபகமாடியது. ஆனால் வீரச்சாவடைந்த வானோடியின் இடுப்பு பெல்டை கண்டதும் திட்டமிட்ட கரும்புலித் தாக்குதல் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். இந்த நேரத்தில் இத்தைகைய கரும்புலித்தாகுதல் எதற்கு? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகள் காலப்போக்கில் வெளிவரும்.