PDA

View Full Version : என் விழிப்புத் தவம்



நாகரா
26-08-2008, 08:20 AM
கொத்துக் கொத்தாக
சிவப்புப் பூக்கள்
பூத்துக் குலுங்கும்
அந்த மரங்களில்
என் பார்வைகள்
மொட்டுக்களாய்

பூத்துக்
காய்த்துக்
கனிந்து
வெடித்து
விதை சிந்தி
மண்ணில் புதைந்து
செடிகளாய் முளை விட்டு
மரங்களாய் நெடிதுயர
விழிப்புத் தவம்
செய்கிறேன்
நான்
இமைகளும்
இலைகளாகி
ஒளிச் சேர்க்கை
நடத்த

இளசு
30-08-2008, 07:11 AM
நான் வாசித்தவற்றில் மிக அழகிய கவிதைகள் பட்டியலில் இதைச் சேர்ப்பேன்.

பார்வை - கவனம் - இப்போது மொட்டு!
அது பூத்து............ மறுசுற்று செடிகளாய் மாற
பார்வை - கவனம் - விழிப்பு தீவிரமாய்!

விழிக்கும்போது இமைகள் விரிந்திருக்கும்!
இமைகளை இலைகளாக்கி..
கவனம் வளர்க்க
விழிப்பே உதவி, ஊட்டம் என உவமை!

மிக மிக மிக ரசித்தேன் நாகரா அவர்களே!

எந்தக் கவிஞனும் ' அடடா, நான் எழுதத் தவறிட்டேனே இவ்வுவமையை'
என ஏங்க வைக்கும் அழகு!

மனமார்ந்த வாழ்த்துகள்!

நாகரா
30-08-2008, 10:47 AM
பார்வை - கவனம் - இப்போது மொட்டு!
அது பூத்து............ மறுசுற்று செடிகளாய் மாற
பார்வை - கவனம் - விழிப்பு தீவிரமாய்!

விழிக்கும்போது இமைகள் விரிந்திருக்கும்!
இமைகளை இலைகளாக்கி..
கவனம் வளர்க்க
விழிப்பே உதவி, ஊட்டம் என உவமை!


கவிதையின் கருவைப் பிடிக்கும் உம் அழகிய வரிகளுக்கும் உம் வாழ்த்துக்களுக்கும் நன்றி இளசு