PDA

View Full Version : நீ!



நாகரா
26-08-2008, 08:07 AM
நீ
ஒரு அழகான
அர்த்தச் செறிவுள்ள
அருங்கவிதை

படிக்கப் படிக்கக்
காதல் பெருகும்
மோகக் கவிதை

கண்டு
கேட்டு
உண்டு
உயிர்த்து
உற்று
உணர்ந்து
அறியும்
காமக் கவிதை

கவிஞனைத்
தான் எழுதும்
அதிசயக் கவிதை

சுகந்தப்ரீதன்
26-08-2008, 08:32 AM
நீ நீயில்லை நாந்தான்..!!

அழகு மிளிரும் ஆன்மிக கவிதையண்ணா...!!

வாழ்த்துக்கள்..!!

நாகரா
30-08-2008, 10:50 AM
நீ நீயில்லை நாந்தான்..!!


ஆம், ஆம், ஆம் சுகந்தத் தம்பி, உன் வாழ்த்துக்களுக்கு நன்றி

"பொத்தனூர்"பிரபு
01-09-2008, 02:38 AM
இவை என்று இல்லை
நாகரா உங்கள் கவிதைகள் எல்லாமே அருமை

நாகரா
01-09-2008, 05:18 AM
உம் ஊக்க வர்ரிகளுக்கு நன்றி "பொத்தனூர்" பிரபு

ஓவியன்
01-09-2008, 05:22 AM
நீ நானாகி
நான் நீயாகி
இரண்டறக் கலந்து
நாமான
நம் இருவருக்கும்
பொருந்தும் கவி..!!

வாழ்த்துக்கள் அண்ணா..!!

பிச்சி
01-09-2008, 10:16 AM
சூப்பார் நாகரா அண்ணா. பெண்கள் மடித்து வைக்கப்பட்ட மரபுக் கவிதைகள்.

நாகரா
03-09-2008, 08:29 AM
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி ஓவியன், பிச்சி

poornima
03-09-2008, 10:44 AM
மெய்யே மெய்யென்று நினை..
அந்த மெய்போற்றுதல் எல்லாவற்றிற்கும் தலை
நல்ல கருத்துள்ள கவிதை ஐயா..
*


பெண்கள் மடித்து வைக்கப்பட்ட மரபுக் கவிதைகள்.

அன்பு பிச்சி,
உங்கள் வரிகளில் வசியப்பட்டேன்
வரிகளின் கருத்தில் முரண்பட்டேன்
பாராட்டுகள்

பென்ஸ்
03-09-2008, 09:24 PM
மெய்யே மெய்யென்று நினை..
அந்த மெய்போற்றுதல் எல்லாவற்றிற்கும் தலை
நல்ல கருத்துள்ள கவிதை ஐயா..


மெய்யென்று சொல்லவில்லை
கவிதை என்று சொல்கிறார்
பொய்யால் அழகான மெய்யை..!!!!

நாகரா... மெய் மெய்யாலுமே பொய்யா..???
இல்லை கவிதையாயிருப்பதால் மெய்யா...!!!

குழப்புறிங்களே...!!!!:D


அன்பு பிச்சி,
உங்கள் வரிகளில் வசியப்பட்டேன்
வரிகளின் கருத்தில் முரண்பட்டேன்
பாராட்டுகள்

ஒரு பெண் இப்படிதான்... (definite):)
சில பெண்கள் இப்படிதான்...(probable):rolleyes:
பெண்களே இப்படிதான்...!!!! (impossible):D

ஜெனரலைஸ் செய்வதை என்னாலும் ஏற்றுகொள்ள முடியவில்லை.

lolluvathiyar
28-09-2008, 06:10 AM
நீ என்னை கவிஞ்ன் ஆக்கி, காதலனாக்கி, அன்புக்கு ஏங்கும் மானிடனாக்கி விட்டாய் அடுத்த கட்டமாகிய பித்தனாக்குவதற்க்கு முன்பு நான் எஸ்கேப் ஆகிவிடுங்கள்.