PDA

View Full Version : சுகிப்பு



ஆதி
25-08-2008, 07:36 PM
திடுக்கென பறக்கிற
ஒரு பறவையின் இறகுதிர்வாய்
நேரங்கள் விட்டு செல்கின்றன
எதாவதொரு சம்பவத்தை..

மழைத்துளியாய்
சுடு மணலாய்
கொடுங்குளிராய்
குலைந்த சேறாய்
இன்னும் பல முகமாய்
தங்கிவிடுகிற அந்த நிகழ்வுகள்
தந்து செல்கின்றன சில அனுபவங்களை..

நொடி நொடிகளாய் கடக்கும்
நிமிடங்கள் இன்னும்
கொடுக்க காத்திருக்கும்
சுகா அனுபவங்களை
சுகிக்க ஆவலாய் இருக்கும்
வாழ்கையின் நாவுகள்
முடுக்கி விடுகின்றன
மற்றொரு தேடலை...

நாகரா
26-08-2008, 08:47 AM
திடுக்கென பறக்கிற
ஒரு பறவையின் இறகுதிர்வாய்
நேரங்கள் விட்டு செல்கின்றன
எதாவதொரு சம்பவத்தை..

மழைத்துளியாய்
சுடு மணலாய்
கொடுங்குளிராய்
குலைந்த சேறாய்
இன்னும் பல முகமாய்
தங்கிவிடுகிற அந்த நிகழ்வுகள்
தந்து செல்கின்றன சில அனுபவங்களை..

நொடி நொடிகளாய் கடக்கும்
நிமிடங்கள் இன்னும்
கொடுக்க காத்திருக்கும்
சுகா அனுபவங்களை
சுகிக்க ஆவலாய் இருக்கும்
வாழ்கையின் நாவுகள்
முடுக்கி விடுகின்றன
மற்றொரு தேடலை...

திடுக்கென பறக்கிற
ஒரு பறவையின் - வெட்டவெளியில் அருளொளியின் அசுரப் பாய்ச்சல்

இறகுதிர்வாய்
நேரங்கள் விட்டு செல்கின்றன
எதாவதொரு சம்பவத்தை.. - காலவெளியில் அருளொளியின் பாய்ச்சல் நின்று உருவாகும் திடங்கள்

மழைத்துளியாய்
சுடு மணலாய்
கொடுங்குளிராய்
குலைந்த சேறாய்
இன்னும் பல முகமாய்
தங்கிவிடுகிற அந்த நிகழ்வுகள்
தந்து செல்கின்றன சில அனுபவங்களை.. - உருவாகுந் திடங்களின் பன்முகங்கள், அப்பன்முகப் பளிங்குகளின் பிரதிபலிப்புகளாய் அனுபவங்கள்

நொடி நொடிகளாய் கடக்கும்
நிமிடங்கள் - கால வெளியின் நீட்சி(Expansion of time-space)

கொடுக்க காத்திருக்கும்
சுகா அனுபவங்களை - கால வெளியில் உருவாகும் திடங்கள் உணர்வில் பதிக்குந் தடங்கள்

சுகிக்க ஆவலாய் இருக்கும்
வாழ்கையின் நாவுகள் - திடங்களின் இன்பத் தடங்களுக்குப் பசித்திருக்கும் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உலக உயிர்த் திரள்(இனபம் அடைதல் உயிரியற்கை)

முடுக்கி விடுகின்றன
மற்றொரு தேடலை... - எல்லாந் தழுவிய முழுமையாம் அன்பெனும் ஒருமையாய் எழும் எழுமையை(எழும் 'ஐ'யை) நோக்கி ஒன்று முதல் ஆறு வரையிலான உலக உயிர்த் திரளின் பரிணாம ஏற்றம்

கடைசி இரண்டு வரிகள் கவிதையின் ஜீவக் கரு, அக்கருவை நோக்கி மற்ற வரிகளின் இற(ர)க்கம்.

அர்த்தச் செறிவுள்ள அருங்கவிதை தந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றியும் ஆதி.

இளசு
26-08-2008, 06:41 PM
அடுத்து என்ன என அறியாத மனம்
அடுத்து என்ன எனத் தேடும் மனம்


கலவைகளே வாழ்வின் ருசி..
காத்திருத்தல் வாழ்வின் பசி..


இளம்வயதில் விடியல்கள் மிக சுகமானவை.
பொழுதுகள் நீண்டவை..
கலவைகள் கனமானவை.. வண்ணம் கூடுதலானவை!

அவை மெல்ல மங்கும் பின்னாளில்
மாதங்கள் கூட நாள் போல் விரையும்.

கற்றலும் தேடலும் மனவறை நிரப்ப இன்னும் முயல்வதும் -
பசி, ருசி குன்றாமல் காக்கும் காயகல்பங்கள்!

கல்பங்கள் வாய்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

கவிதைக்கு வாழ்த்துகள் ஆதி!

சிவா.ஜி
26-08-2008, 06:56 PM
நகரும் நொடிகளெல்லாம் நல்ல சேதி சொல்லிப்போனதா...?
பகரும் சொற்களெல்லாம் இனிப்பை இறைத்துப்போனதா...?
ஓடும் நிமிடங்கள் சுகத்தை சிந்திவிட்டு செல்கிறதா...
ஆடும் மனநாவு அதில் பழகி சுகிப்பத்தேடி ஓடுகிறதா...?

வாழ்க்கையை வாழவேண்டுமே என அலுப்பான சுமையாய் கருதாது...வாழவேண்டுமே...எனும் ஆவலாய் பார்க்கச் சொல்லும் கவிதைக்கு வாழ்த்துகள் ஆதி.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-08-2008, 07:03 PM
வென்றால் வெற்றி. தோற்றால் அனுபவம். யாரோ கூறிய வாசகம்தான். அனுபவ சுகித்தலை அற்புதமாக வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.