PDA

View Full Version : ரோபோ மரம்



தங்கவேல்
25-08-2008, 11:53 AM
ரோபோ மரம் .. காற்றில் இருக்கும் அசுத்தக் காற்றை உறிஞ்சும் மரம். ஆக்ஸிஜனை வெளியிடும் மரம். செய்தி உதவி : ஆனந்த விகடன்



இயற்கையான மரங்களைப் போலவே ரோபோ மரங்களுக்கும் வேர், தண்டு, இலை எல்லாம் உண்டு. மரத்தைப் போலவே உயரமான பிளாஸ்டிக் கம்பங்களை நிறுவி அதன் மேல் பகுதியில் இடைவெளிகளுடன் கூடிய சூரியத் தகடுகள் (சோலார் ப்ளேட்ஸ்) பொருத்தப்படும். இப்பகுதி மர இலைகளைப் போலச் செயல்படும். தண்டுப் பகுதியின் பக்கவாட்டில் துளைகள் மற்றும் சிறு குழாய்கள் இருக்கும். இதன் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு கலந்த வெளிக்காற்று உறிஞ்சப்படும். தண்டின் உள் பகுதியில் கால்சியம் ஹைட்ராக்ஸைடு கரைசல் இருக்கும். இந்தக் கரைசலில் அசுத்தமான கார்பன் டை ஆக்ஸைடு கரைக்கப்படும். அதே சமயம், மேலேயுள்ள சூரியத் தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தண்டில் உள்ள கரைசலில் பாய்ச்சப்படும். அது வேதி வினைகளைத் தூண்டி கார்பன் டை ஆக்ஸைடை கார்பன், ஆக்ஸிஜன் என்று தனித்தனியாகப் பிரிக்கும். ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் மற்றும் நீராவி ஆகியவை வாயுவாக ரோபோ மரத்தில் இருந்து வெளியேறிவிடும். மீதி இருக்கும் கார்பன் நீருடன் கலந்து கார்பானிக் அமிலமாக மாறியிருக்கும். அந்த கார்பானிக் அமிலம் பூமிக்குள் செலுத்தப்பட்டுவிடும். இந்த கார்பானிக் அமிலம் இயற்கை உரத்துக்கு ஈடானது. மண்ணுக்குக் கெடுதல் விளைவிக்காது. ஒரே நேரத்தில் மண்ணையும் காற்றையும் காப்பாற்றலாம்.

ஒரு ரோபோ மரம், ஒரு இயற்கை மரம் உறிஞ்சு வதைவிட ஆயிரம் மடங்கு அதிக கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சும் திறன்கொண்டது. அதாவது, ஒரு ரோபோ மரம் ஆயிரம் இயற்கை மரங்களுக்குச் சமமானது. ஒரு ரோபோ மரம் ஒரு ஆண்டுக்கு 90,000 டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி சுத்தப்படுத்தும். இது ஓராண்டில் 15,000 கார்கள் வெளியிடக்கூடிய கார்பன் டை ஆக்ஸைடின் அளவு.


இன்னும் என்னவெல்லாம் வரப்போகிறதோ தெரியவில்லை.

சுகந்தப்ரீதன்
26-08-2008, 08:17 AM
நல்லதொரு செய்தி..!! பகிர்தமைக்கு நன்றியண்ணா..!!

நனமைகள் பற்றி சொன்னீர்கள்.. தீமைகள் ஏதுமில்லையென்றால் தாராளமாய் வளர்க்கலாம்..!!