PDA

View Full Version : தலைவராகும் தகுதி ரஜினிக்கு உண்டா?



ஐரேனிபுரம் பால்ராசய்யா
25-08-2008, 10:13 AM
தமிழகம் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தான். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி, கொடி என்று தமிழகமே களை கட்டத் தொடங்கிவிடும்.

பி.எம்.கே ( பாரத முன்னேற்ற கழகம்) எனும் புதுக்கட்சிக்கு ரஜினி தலைவராகி, மஞ்சள் கறுப்பு எனும் கொடியின் மத்தியில் ரஜினி அமர்ந்திருப்பது போல் கொடி தயாரிக்கப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தலைப்பு செய்திகளில் இடம் பெறக்கூடும்.

உலகத் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தமிழகம் நோக்கி படை எடுப்பார்கள்.ஜப்பானில் வெடிச்சத்தம் முழங்க ஊர்வலம் துவங்கி தமிழகம் நோக்கி வரலாம்.

மத்தியிலுள்ள ஆளும் கட்சி ப.சிதம்பரத்தையும் பி.ஜே.பி துக்ளக் ஆசிரியர் சோவையும் தூதனுப்பி கூட்டணி வைத்துக்கொள்ள ரஜினியின் ஒரு குரலுக்கு காத்திருப்பார்கள்.

வசை பாடியபடியே ஜெயலலிதாவும், ஸ்டாலினும், விஜயகாந்தும், ராமதாசும் தோல்வி பீதியில் நெளிய ஆரம்பிப்பார்கள். அனைத்து கட்சியிலிருந்தும் சிலர் கழண்டு ரஜினி கட்சியில் சேர்வார்கள்.

தேர்தல் நேரத்தில் ரஜினி இமயமலைக்குச் சென்றால் கூட முன்பு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படுத்துக்கொண்டே ஜெயிப்பார் என்று பிரச்சாரம் செய்ததுபோல் ரஜினி இமயமலையில் இருந்தாலும் ஜெயிப்பார் என்ற பிரச்சாரம் தமிழகமெங்கும் ஒலிக்கும்.

தமிழக ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி அரசியலுக்கு வந்ததே ஒரு மாபெரும் இனிப்பு செய்தி என்ற குதூகலத்தில் இருப்பார்கள். இதற்கு முன்பு வரை தி.மு.க, ஆ.தி.மு.க ஆண்ட காலங்களில் மக்களுக்கு அதிருப்தி ஏற்ப்பட்டு தமிழகத்தை தலைநிமிர்த்த எம்.ஜி.ஆரைப்போல ஒரு தலைவர் தமிழகத்துக்கு தேவை என்று அடையாளப்பட்டவர் தான் ரஜினி

தனது ஸ்டையில் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தன்வசப்படுத்தி இந்தியாவிலேயே அதிக ரசிகர்களையும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வருபவர் ரஜினி.

ரஜினி தமிழகத்தை ஆண்டால் ஏழை எளிய மக்கள் பயன் அடையக்கூடிய வகையில் எம்.ஜி.ஆரைப்போல நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி ஏழை மக்களின் வாழ்வு வளம் பெற ரஜினி எதையாவது செய்வார் என்று கனவு கண்டனர் அவரது ரசிகர்கள்.

ஆனால் ரஜினியோ அரசியல் சாக்கடையில் விழுந்தால் தான் ஒருவன் மட்டும் நல்லவனாக இருந்தாலும் தன் கட்சியிலுள்ளவர்கள் லஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகம் என்று சிக்கிகொள்ளும்போது தனது பெயரும் அடிபட்டு இதுவரை ரசிகர்களிடமிருந்த அன்பும் ஆதரவும் பறிபோய்விடுமோ என்ற தயக்கத்தில் கட்சி என்ற விசயத்தில் மௌனமே பதிலாக இருந்தது


தமிழகத்தில் ரஜினிக்கு தலைவராகும் தகுதி உண்டா என்று அப்பொழுது ஒரு ரகசிய சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயில் ரஜினி ஒரு சிறந்த நடிகர் அவர் அரசியலில் விழுந்து தனது செல்வாக்கை இழக்கப் போகிறார் அவருக்கு அரசியல்வாதிகளைப்போல பொய், பித்தலாட்டம், வாக்குறுதி தந்து ஏமாற்றுவது, அந்தர் பல்டி அடிப்பது இது எதுவுமே ரஜினிக்கு தெரியாது, அவர் ஒரு சொக்கத்தங்கம் அவருக்கு அரசியலில் தலைவராகும் தகுதி இல்லை என்றே அடித்து கூறியது

ரஜினியும் இதுதான் உண்மை என்று நம்பி அரசியல் ஆருடம் கணிக்கும் போதெல்லாம் இமயமலைக்குச் சென்று அமைதி காண்பார். காலம் உருண்டோடினாலும் தமிழக ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.எப்படியாவது அரசியல் சாக்கடையில் அவரை தள்ளி விடவே காத்திருந்தனர்.
அந்த எண்ணம் தற்பொழுது ரஜினிக்கு கை கூடி வந்திருக்கிறது.

தற்பொழுது எடுத்த ரகசிய சர்வேயில் ரஜினிக்கு தலைவராகும் தகுதி உண்டா என்ற கேள்விக்கு நூற்றுக்கு எண்பது சதவிகிதம் பேர் ரஜினிக்கு தலைவர் ஆகும் முழுத் தகுதி உண்டு என்று அடித்துச் சொல்கிறார்கள்

அரசியல் நடத்த அடிக்கடி பொய் மூட்டைகளை அள்ளி விட வேண்டும், முரண்பாடுகளின் மூட்டையாக வாய்க்கு வந்தபடி எதையாவது உளற வேண்டும், ஒரு தடவை சொன்ன விசயத்தை திருப்பி கேட்டால் நான் அந்த அர்த்தத்துல சொல்லல என்று அந்தர் பல்டி அடிக்கவேண்டும்.

வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டும் அதை நிறைவேற்ற தருணம் வரும்பொழுது நான் எப்போ சொன்னேன் என்று திருப்பி கேட்க வேண்டும். தெளிவற்ற பேச்சும் கொள்கையில் உறுதியும் இல்லாமலிருக்க வேன்டும். இதுதான் ஒரு அரசியல்வாதியின் இன்றைய முகம்.

இவை அனைத்தும் தற்பொழுது ரஜினியிடம் அமைந்துள்ளது. எனவே அரசியலில் தலைவராகும் தகுதி ரஜினிக்கு கட்டாயம் உண்டு. இதற்கு சமீபத்தில் அவர் அடித்த அந்தர் பல்டிகள் உதாரணமாக உள்ளது.

ஓக்கேனக்கல் பிரச்சனையில் ரஜினி பேசிய வார்த்தையால் தமிழர்கள் ஒவ்வொருவரின் இதயங்களும் குளிர்ந்தது ஆனால் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வேண்டி அவர் பேசிய வார்த்தைகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு நீண்ட ஒரு கடிதத்தை கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தார் இப்படி அந்தர் பல்டி அடித்ததால் அரசியலுக்கு தகுதியானவர் என்ற பட்டம் அவரை போய் சேர்கிறது

நான் எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என்று ஒரு திரைபடத்தில் வசனம் பேசினார். ரஜினி ரசிகர்களும் அதை உண்மை யென்று நம்பி இத்தனை வருடம் காத்திருந்தனர்.

சமீபத்திய குசேலன் திரைப்படத்தில் அது யாரோ ஒரு ரைட்டர் எழுதிய வசனம் அதை நான் பேசி இருக்கேன் அதை உண்மையின்னு நீங்க எடுத்துகிட்டா நான் என்ன செய்யறது என்ற பதில் மூலம் ஒரு உண்மையான அரசியல்வாதியின் முகம் அவரிடம் பளிச்சிட்டது. இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் தலைவராகும் தகுதி அவரிடம் ஒட்டிக்கொண்டுவிட்டது

அரசியல் கட்சி தலைவர்கள் தவறாக எதையாவது பேசினால் தயங்காமல் மன்னிப்பு கேட்கவேண்டும் மக்கள் குளிர்ந்து போவார்கள் அந்த வகையில் ஒகேனக்கல் பிரச்சனையில் கர்நாடகத்திடமும், குசேலன் படத்தில் பேசிய வசனத்திற்க்காக ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறார் ரஜினி. இப்படி எதற்க்கெடுத்தாலும் மன்னிப்பு கேட்க தயாராகிறார் என்றால் அவர் தலைவர் தானே.

முன்பு ஜெயலலிதா மீதான் கோபத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்று அவர் விட்ட அறிக்கை ஒரு மாபெரும் மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியது

பின்பு அதே ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ஜெயலலிதாவை பாராட்டி பேசினார். இப்படி திட்டுவதும் பிறகு பாராட்டுவதும் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை. அந்த கலை தற்பொழுது ரஜினிக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.

காவிரி நதி நீர் பிரச்சனை வரும்போதெல்லாம் இதற்கு ஒரே தீர்வு தேசிய நதி நீர் திட்டம் தான் என்றும் அதற்கு நான் ஐந்து லட்சம் தரத் தயார் என்று அறிக்கை விட்டதோடு சரி, அதற்கென்று ஒரு பைசா செலவளித்துள்ளாரா என்றால் அது தான் இல்லை.

ஆக ரஜினிக்கு அரசியல் தலைவர் ஆகும் தகுதி நிச்சயம் உண்டு.தமிழக மக்கள்தான் பாவம், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகிப்போன பிறகு ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன, ஏழைகள் பாடு எப்பொழுதும் திண்டாட்டம் தான்.

குமரியிலிருந்து வெளிவரும் குமரிகடல் மாதம் இருமுறை இதழில் வெளிவந்தது

sakthim
25-08-2008, 11:50 AM
ரஜினிக்கு வேண்டுமானால் தலைவராகும் தகுதி இப்பொழுது வந்து இருக்கலாம்,

ஆனால் தமிழக மக்கள் அந்த அளவுக்கு ஒன்றும் புத்தி கெட்டு போய் விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

ஏனெனில் குசேலன் படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவே அதற்கு சாட்சி.

சுகந்தப்ரீதன்
25-08-2008, 12:00 PM
ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்துல கண்ணா இருக்கிறவங்க அப்பு இவுங்களெல்லாம்...!!

சட்டி சுட்டதடா.. கைவிட்டதடா...
புத்தி கெட்டதடா.. நெஞ்சை சுட்டதடா.. ன்னு
தமிழக மக்கள் தற்போது பாடிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..!!

விகடன்
25-08-2008, 12:01 PM
எந்த இதழில் எப்படி வெளிவந்தால் என்ன?
இந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது.
உங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை. அது ரஜினியாக இருந்தால் என்ன? வேறு யாராக இருந்தால்த்தான் என்ன?
தேர்ந்தெடுக்கப்போவது, நீங்கள் எல்லோருமாக சேர்ந்துதானே....
அப்படி ரஜினியும் ஓர் தெரிவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் சரியான தேர்வை தெரியுங்கள்.
வீணாக அந்த செய்தியில் வந்தது, இந்தச் செய்தியில் வந்தது என்று கற்பனைக் கட்டுரைகளை பரப்பி ரஜினி இரசிகர்கள் மத்தியில், உங்களுக்கு நீங்களும் மன்றத்திற்கும் ஏன் அவப்பெயரை தேடுகிறீர்கள்.

ஓவியா
25-08-2008, 02:14 PM
எந்த இதழில் எப்படி வெளிவந்தால் என்ன?
இந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது.
உங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை. அது ரஜினியாக இருந்தால் என்ன? வேறு யாராக இருந்தால்த்தான் என்ன?
தேர்ந்தெடுக்கப்போவது, நீங்கள் எல்லோருமாக சேர்ந்துதானே....
அப்படி ரஜினியும் ஓர் தெரிவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் சரியான தேர்வை தெரியுங்கள்.


வீணாக அந்த செய்தியில் வந்தது, இந்தச் செய்தியில் வந்தது என்று கற்பனைக் கட்டுரைகளை பரப்பி ரஜினி இரசிகர்கள் மத்தியில், உங்களுக்கு நீங்களும் மன்றத்திற்கும் ஏன் அவப்பெயரை தேடுகிறீர்கள்.


விராடா,
நேற்று ஒரு அழகிய மாலைப்பொழுதில் இந்த விசயத்திற்க்காக 2நண்பர்களுக்குள் வாக்குவாதம் முற்றி பின் கண்ணீரில் முடிந்தது!!!!

- ஃவெரி டேஞ்சரஸ் டோஃபிக்.

அறிஞர்
25-08-2008, 02:28 PM
ரஜினி ஒரு நல்ல நடிகர்...

தலைவரென்று சொல்ல பல தகுதிகள் வேண்டும்.. அது அவரிடம் இருக்கிறதா என்பதை சரியாக யாராலும் கணிக்க இயலாது...

மேலும் 1996ல் அவர் அரசியலில் இறங்கியிருந்தால்.... சில மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பார்.

இனி அரசியலில் அவர் ஈடுபடப்போவதில்லை....
--------------
இங்கு எந்த வாதமாக இருந்தாலும்... மென்மையாக.. யாரையும் தாக்காமல் பதிவோம்.

நேசம்
25-08-2008, 02:51 PM
அந்த கட்டுரையின் நோக்கம் மக்களை தெளிவு பெற செய்ய வேண்டும் என்பதே. இதை விவாதமாக வந்தால் கூட தப்பில்லை.இதில் என்ன அவப்பெயர் மன்றத்திக்கு வரபோகிறது விராடன்.

ராஜா
25-08-2008, 04:07 PM
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்..!

அவர் ஒரு நடுத்தர வர்க்க மனோபாவம் கொண்டவர்.. புகழுக்கு ஆசை இருந்தாலும், ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்.

தான்.. தன் குடும்பம், ஆன்மீகம் என்று அமைதியாக வாழ்க்கையைக் கழிக்கவே விரும்புவார்.

ஆர்ப்பாட்ட அரசியல் அவருக்கு ஒத்து வராது.

அமரன்
25-08-2008, 04:15 PM
ரஜினிக்கு வேண்டுமானால் தலைவராகும் தகுதி இப்பொழுது வந்து இருக்கலாம்,
ஆனால் தமிழக மக்கள் அந்த அளவுக்கு ஒன்றும் புத்தி கெட்டு போய் விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
ஏனெனில் குசேலன் படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவே அதற்கு சாட்சி.

வாங்க சக்தி..
சில கணினித் திரிகளிலும் ரஜினி தொடர்பான திரிகளிலும் பதிவுகள் தரும் நீங்கள் உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளலாமே..

அமரன்
25-08-2008, 04:15 PM
இரகசிய வாக்கெடுப்பை தனது வசதிக்கேற்ப பயன்படுத்திய இக்கட்டுரையாளரை விடவா ரஜினி அரசியல் முதிர்ச்சி பெற்றவர்..

sakthim
26-08-2008, 03:45 AM
வாங்க சக்தி..
சில கணினித் திரிகளிலும் ரஜினி தொடர்பான திரிகளிலும் பதிவுகள் தரும் நீங்கள் உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளலாமே..

கண்டிப்பாக அமரன்,நேரம் இன்மை காரணமாக பதிக்க இயல் வில்லை,விரைவில் பதிக்கிறேன்,நன்றி.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
27-08-2008, 12:44 PM
இனியவர் விராடன் அவர்களுக்கு,
ரஜினி எனும் மாபெரும் மனிதர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு நிச்சயம் அவர் வரமாட்டார் என்பதே எனது யூகமும், ஆனால் ஓக்கேனக்கல் பிரச்சனையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு நீண்ட ஒரு கடிதத்தை கர்நாடகாவுக்கு அனுப்பி அந்தர் பல்டி அடித்ததை தமிழன் வாழ்நாளில் மறக்கமாட்டான்.

உயிர் ரஜினிக்கு உடல் மண்ண்க்கு என்றும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பிக்கொன்டிருந்த ரசிகனுக்கு குசேலன் படத்தில் சொன்ன கருத்து எத்தனை ரணங்களை தந்திருக்கும் என்ற இந்த இரண்டு காரணங்களை கருத்தில் கொண்டு ரஜினியை நையாண்டி செய்து எழூதப்பட்ட கட்டுரை என்பதாலும், ஏற்கனவே திரு ஞானி எழுதி குமுததில் வெளிவந்த கட்டுரை தமிழ் மன்றத்தில் பதியப்பட்டிருந்ததாலும் நானும் பதிவுசெய்திருந்தேன். இது அவைக்கு அவப்பெயரும் ரஜினி ரசிகர்களுக்கு வேதனை தரும் என்று எப்படி சொல்ல முடியும். விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் மன்றத்தாரிடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் பதிவு செய்திருந்தேன் அது இல்லையென்றால் மன்னிக்கவும் இதுபோன்ற கட்டுரைகளை இனி பதிவு செய்வதில்லை

ஷீ-நிசி
27-08-2008, 02:27 PM
எனக்கு ரஜினிய பிடிக்கும்...

என் அண்ணன் தம்பியோடு நான் அதிகம் வாக்குவாதத்தில் ஈடுபடுவேன்... குசேலன் பட விவகாரத்தில் கர்நாடகாவில் மன்னிப்பு கடிதம் கொடுத்ததும் கூட பட அதிபர்கள் தன்னால் நஷ்டம் அடைந்துவிடக்கூடாது என்ற நல்லென்னம் என்று ஏற்றுக்கொண்டேன்..

ஆனால் பஞ்ச் வசனம் பேசிப்பேசியே ரஜினின்னா இப்படின்னு தன்னை ரசிகர்களிடம் அடையாளப்படுத்திக்கொண்டவர், திடீரென்று, நான் எழுதிக்கொடுத்ததைதான் பேசினேன்னு சொன்னார் பாருங்க... அங்க போச்சுங்க எனக்கு ரஜினி மேல இருந்த நல்ல எண்ணம், அபிப்ராயம் எல்லாம். இனி அவர் என்னைப்போன்ற ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடிப்பது அரிது.

தீபன்
28-08-2008, 12:29 AM
ஆனால் பஞ்ச் வசனம் பேசிப்பேசியே ரஜினின்னா இப்படின்னு தன்னை ரசிகர்களிடம் அடையாளப்படுத்திக்கொண்டவர், திடீரென்று, நான் எழுதிக்கொடுத்ததைதான் பேசினேன்னு சொன்னார் பாருங்க... அங்க போச்சுங்க எனக்கு ரஜினி மேல இருந்த நல்ல எண்ணம், அபிப்ராயம் எல்லாம்.

"இதுவும் குசேலன் வசன கர்த்தா எழுதிய வசனம்தானே... இதை ஏன் நான் சொன்னதாய் கருத வேண்டும்..?"
நாளை இப்படி ஒரு அறிக்கை வரும் ரஜினியிடமிருந்து. கவலைப்படாதிங்க ஷீ-நிசி.:lachen001:

"பொத்தனூர்"பிரபு
28-08-2008, 01:03 AM
ரஜினி ரசிகர்கள் திருந்துவார்கள் என்றா நம்பிக்கை எனக்கு இல்லை.சினிமா ஒருவசிய மருந்து
அதன் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்ட ரசிகர்கள் திருந்தும் வாய்ப்பு குறைவு...

உதயசூரியன்
28-08-2008, 04:50 AM
இனியவர் விராடன் அவர்களுக்கு,
ரஜினி எனும் மாபெரும் மனிதர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு நிச்சயம் அவர் வரமாட்டார் என்பதே எனது யூகமும்,


என்ன கொடுமைங்க..
ரஜினி மாபெரும் மனிதரா...?? அப்ப காந்தி ???

திரி தொடங்கியயவரின் ரஜினி அக்கறை ரொம்ப கொடுமை..
ரஜினி இன்று மட்டுமா பல்டி அடித்திருக்கிறார்..
4 வருடங்களுக்கு முன்னரே.. இந்தியா டுடே கிழித்திருந்ததை கட்டுரையை படித்திருக்கிறீரா....

இன்று தமிழர்கள் வளம் காண்பது.. நடிகர் மற்றும் நடிகையர்களின் பிச்சையா..

தலைவர்களை மக்கள் எங்கிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.. ????
குறைந்த பட்ச்சம் மக்களுக்கான போரட்டங்களில் எப்படி கலந்து இருக்க வேண்டும்..????


ரஜினிக்கு முதலில் நடிகர் என்ற தகுதிக்கே அவர் இன்னும் சரியாக உழைக்க வில்லை..

அவரை விட்டு விடுங்கள்..!!!

தங்களின் சுய நலத்துக்காக.. ரசிகர்கள் என்ற பருந்துகள்.. இருந்து.. ரஜினியிடமிருந்த அதேரசிகர்கள்.. விஜயகாந்து விடமும்.. சரத் குமாரிடமும்.. ஜெ விடமும்.. சரணடைந்து சம்பாதிக்க வழி பார்க்க தொடங்கி ரொம்ப நாளாகுது..

நடிகனாகும் முன்பே எதையும் எதிர்பார்க்காமல்.. பொது வாழ்வில் இருந்திருந்தால் அவர்கலை பற்றி பேசலாம்..
ஆனால் எந்த நடிகனுக்கும் அந்த தகுதி இல்லை..
படங்கள் ஓடாத போது.. உடனே.. ரசிகர்களை வைத்து முதல்வராக ஆகிவிடனும்..?????

அது தான் பார்த்து கொண்டிருக்கிறதே.. தமிழ் நாடே..
மக்கள் இனி அது போல். சினிமாவை மாட்டு மந்தைகளாக ஆதரிப்பது கடினம் தான்..

விஜய் அடுத்து சிலம்பரசன், அஜித், இன்னும் கொடுமைகள் வர இருக்கு..
இந்த கொடுமைகள் தொடராமல் இருக்க.. இப்பொழுதே.. கொடுப்போம் ஆப்பு..

ரஜினிக்கு தலைவராகும் தகுதி நிச்சயம் கிடையாது..
நம் மன்றத்தின்.. மூலம் எந்த ஒரு பலனை எதிர் பாராமல்..
தமிழ்.. மற்றும்.. பிறந்த இனத்துக்காக உணர்வோடு தமிழ் வளர்த்து.. அதே நேரத்தில் உறுப்பினர்களை கட்டியணைத்தும், கண்டித்தும் அன்புடன் நிர்வாகம் செய்யும்..
தமிழ் மன்ற.. திரு. இராச குமாரன்,
திரு.அமரன்,
திரு.அறிஞர்,
திரு.ஆதவன்
போன்றோரின் தலைவர் தகுதி கூட நடிகர் ரஜினிக்கு வராது..
அது அவருக்கே தெரியும்....

ம்ம்ம்ம்
வாழ்க தமிழ்

சிவா.ஜி
28-08-2008, 05:45 AM
கனிமொழியும், அன்புமணி ராமதாஸும், கீதா ஜீவனும்...இன்னும் சில அரசியல் வாரிசுகள் எந்த போராட்டங்கள் நடத்தினார்கள்? எத்தனை வருடம் பொதுவாழ்க்கையில் இருந்தார்கள்?

உதயசூரியன்
28-08-2008, 06:14 AM
அவர்களை முன்னிறுத்தியும் சொல்ல வில்லையே..
ஆனாலும்.. அவர்கள் நடிகர்கள் இல்லையே...
அவர்கள் மட்டும் ஏன் கண்ணுக்கு தெரிகிறார்கள்..

ஆனாலும்.. சினிமாவில் வசனம் பேசி நேராக முதல்வராகும் கேவலமான லிஸ்டில் அவர்கள் வரவில்லை..

அதே நேரத்தில்.. அவர்களும் அந்த பயனத்தை துவக்கியுள்ளனர்.. ரஜினி போல் வீட்டினில் உட்கார்ந்து கொள்லவில்லை..
இயக்கத்தில் தனது பங்கலிப்பை முரை படி செய்கிறார்கள்..

சசிகலா குடும்பத்தை போலும் அல்ல...

ஆனால்.. ரஜினி இன்னும் வாய் சொல் வீரர் தானே.

பொது வாழ்க்கையில் வந்து பேசும் போதும் இன்னும் அலச படும்..

முன்பு இருந்த பெயரையும் விஜயகாந்த் கெடுத்து கொண்டாலும்.. அவரும் இறங்கியிருக்கிராரே..
அந்த விஷயத்தில் ரஜினி ஜீரோ தான்..

போட்டியாக இருந்தாலும்..
பல பெயர்கல் இருக்கிறது சிவா அவர்களே..

எ.கா.
எனக்கு பிடிக்காதவர்களும் இருக்கிரார்கள்.. ஆனாலும் பொது வாழ்விர்கு சொந்த காரர்கள்..

வைகோ
ராமதாசு
திருமா வலவன்
ப.சி
இ.வி.கேஎஸ்.இளங்கோவன்
னல்ல கண்ணு
வரதராஜன்

னம் பார்வை எதில் இருக்கிறது பாருங்கள்..
ரஜினியை அரசியல் தலைவராக கூட அல்ல.. நேற்று முளைத்த காளான் களிடன் ஒப்பீடு செய் கிறது..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

lolluvathiyar
30-08-2008, 02:59 PM
ஜாதிவெறியை மொழிவெறியை மதவெறியை தூன்டி விட்டு குளிர்காயும் பல தலைவர்கள் இருக்கும் போது, மக்களால் தேர்ந்தெடுக்கபடாமலெ பலர் மந்திரி ஆகும் போது, கிரிமினல் வழக்கில் சிக்கியவர்கள் கூட தலைவர் ஆகும் போது தீவரவாத இயங்கங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தலைவராகும் போது தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இதுவரை நாட்டுக்கு ஒரு கெடுதலும் செய்யாத ரஜனிக்கு தலைவராகும் தகுதி நிச்சயம் உன்டு


இந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது. உங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை.

இந்தியாவின் ஜன நாயக தற்போதைய நிலைபடி பெரும்பான்மை மக்கள் விருப்பாதவர்கள் கூட தலைவர் (எம்பி, எம்எல்ஏ ஆக முடியும்)

ஏகா : ஒரு தொகுதியில் 5 பேர் நிற்கிறார்கள். அதில் 3 பேர் 20 சதவீதம் வாக்கு பெருகிறார்கள். 1 நபர் 19 சதவீதம் வாக்கு பெறுகிறார். ஒரு நபர் 21 சதவீதம் வாக்கு பெறுகிறார். இப்ப 21 சதவீதம் பெற்றவர் ஜெயித்தவர். ரிவர்சாக யோசித்து பார்க்கும் போது 80 சதவீத மக்கள் இவரை வேண்டாம் என்று கருதி அடுத்தவர்களுக்கு வாக்களித்திருந்தாலும் இவர் தலைவர் ஆக முடியும்.

அடுத்தது மக்களால் தேர்ந்தெடுக்கபடாமலே அன்டர்ஸ்டான்டிங் மூலம் ராஜியசபா உருப்பினர் ஆகாமுடியும். மக்களுக்கு முற்றிலும் அறிமுகமில்லாத இவர் மந்திரிகூட ஆக முடியும்.

அடுத்தது மக்களால் விரும்பாதவர்கள் கூட அரசு அமைக்க முடியும் பிரதமர் முதல்வர் கூட ஆக முடியும். ஓரளவுக்கு மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட கட்சியை ஆள விடாமல் செய்யவும் முடியும். அது தேர்தலுக்கு பிறகு கூட்டனி ஆட்சி மற்றும் கட்சி தாவல் மூலம் செயல்படுத்த முடியும்.

சட்டபடி ஆட்சி அமைக்க 50 சதவீத சீட்டு தான் தேவை (நாட்டு மக்கள் வாக்கு சதவீதம் அல்ல)
ஒரே ஒரு கட்சி மட்டும் 40 சதவீதம் தான் வாங்கியது மீதி கட்சிகள் அனைத்தும் 20 30 சதவீதம் தான் வாங்கியது. இந்த இடத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு மக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.(ஆனால் தொங்கு பார்லிமென்ட்தான்)

இங்கு ஒரு சித்து வேலை செய்ய முடியும் அதாவது வெறும் 10 சதவீதம் சீட்டு வாங்கிய ஐந்து கட்சிகள் ஒன்று சேர்ந்தால் ஆட்சி அமைக்க முடியும். இதுதான் தற்பொதைய நிலை. (90 சதவீத மக்களையும் முட்டாளாக்க முடியும்)

நான் எந்த கட்சியையும் ஆட்சியையும் குறிப்பிடவில்லை பொதுவான கருத்தை தான் குறிப்பிட்டேன். மக்கள் தீர்மானிக்காதவர்கள் கூட தலைவனாகி ஆட்சி அமைக்க முடியும் என்பதற்க்கு எடுத்து காட்டினேன். இ ந்த விவாதத்துக்கு கட்சி சாயம் பூச வேன்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

உதயசூரியன்
30-08-2008, 07:39 PM
வாத்தியாரே இந்த கணக்கு கூட தெரியாதா என்ன....?? இது இங்கு மட்டும் அல்ல உலக்மெங்கும் இருக்கும் அரசியல் கணக்கு தானே....???(ஒரு சில இடங்கள் தவிர...)




தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இதுவரை நாட்டுக்கு ஒரு கெடுதலும் செய்யாத ரஜனிக்கு தலைவராகும் தகுதி நிச்சயம் உன்டு

இப்படி ஒரு சுத்தமான, சத்தியமான கருத்து இருக்கும் போது..!!!!!!!??
ஒரு நடிகர் ரசிகர்களை உருவாக்கியதையும்.. அதுவும் இதுவரை கெடுதல்(?????????) எதையும் செய்யாததாலும்.. இனி வரும் காலங்களில் கெடுதல் செய்யவும்.. இதுவரை.. கொஞ்சமாவது நல்லது செய்தவர்களை தூர எறியலாம்..

இதே கருத்து ரஜினிக்கு மற்றும் சொந்தமில்லை..
ஒரு கெடுதலும் செய்யாத(????)
கார்த்திக்
விஜயகாந்த்
சரத்
டி.ஆர்
போன்றோரும் அதற்கு தானே வந்துள்ளனர்...

ஒரு கெடுதலும் செய்யாத(????)
குஷ்பு
சுகாசினி
ஷகீலா(இவருக்கு ரஜினியை விட ரசிகர்கள் அதிகம் என்பது தெரியுமா??)

விஜய்
சிம்பு
அஜித்
பிரபு
தனுஷ்
விஷால்
கமல்
விக்ரம்
சூர்யா
பிரசாந்த்
னமிதா
அசின்
சிம்ரன்
னயன்
திரிஷா
சினேகா....

இவர்களை போன்று..
மானாட மயிலாட நடத்தி ரசிகர்களை பெற்று எந்த கெடுதலும்.. செய்யாத.. கலா மாஸ்டர்
ரம்பா
இவர்களுக்கும் தலைவராகும் தகுதி உண்டு அல்லவா..
(என்ன கொடுமைங்க??)

ஆமாம் என்றால்.. தமிழர்களின் பரம்பரியத்தை கிண்டல் செய்யும் வட இந்தியர்களும் மற்றவர்களும்.. சொல்லுவதில் தப்பே இல்லை..

அவர்கள் முகத்தில் முழிக்க வெட்க பட வைக்க..
மேலுள்ளவர்கள் மட்டுமே.. மக்களின் தலைவர்கள்.. என்று தெரிவு செய்யுங்கள்..

ம்ம்ம்
இதில் அந்த காலத்து ஆளுங்களை மட்டும் குறை சொன்னர் சிலர்.. அப்போ எல்லாம்.. சினிமாவை நிஜம் என்று அதில் இருந்து மக்கள் பிரதினிதியை தேர்ந்தெடுத்தனர்.. தற்போது படித்தவர் செய்யும் தவறுகளுக்கு.. அந்த காலமே தேவலை..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

kulirthazhal
16-09-2008, 03:17 PM
ரஜினி என்பவர் நடிகர், அவ்வளவுதானே..
ஒரு நடிகர் தலைவராக முடியாது என்று தமிழகத்தில் யாரும் சொல்லிவிட முடியாது.
ஒரு நல்லவன் அரசியலுக்கு வரக்கூடாது என்று பலரும் சொல்ல முடியும், காலகட்டம் அதைத்தான் சொல்கிறது.
ஒரு தனிமனிதன் தவறு செய்வான், தலைவர்கள் தப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,காலகட்டம் அதைத்தான் சொல்கிறது.

ரஜினியை தனிமனிதன் என்று சொன்ன பலரும் குறை சொல்கிறீர்களென்றால் பொது இடத்தில் தனிமனித விமர்சனத்திற்கு பேனாவை எடுத்தல் நிச்சயம் நாகரீகமாக கருதப்படாது.
ரஜினியிடம் மனிதசக்தி உள்ளது என்று பேசுவதானால் அவரை வேண்டாம் என்று சொல்லும் உரிமை வெறுப்பவர்களுக்கு இல்லை.
தனிமனிதனா? இல்லை தலைவனா? என்ற தெளிவில்லாமல் பேசுவது நகைப்பளிக்கிறது.
மேலும் மனித சக்தி உள்ள தனிமனிதனில் இவர் மற்றவர்களை விட நல்லவர் என்பதை மறுப்பவர்கள் குறைந்தபட்சம் தனிமனிதர்களோடு ஒப்பிட்டு பாருங்கள்.

மறத்தமிழன்
16-09-2008, 04:58 PM
தகுதி இருக்கா இல்லையா என்பதை விட, மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் மனதை வெல்லக் கூடிய வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

arun
19-11-2008, 06:16 PM
ரஜினி சொல்லே மந்திரம் என்று பல ரசிகர்கள் அவருக்கு இருந்தார்கள்

ஆனால் குசேலனில் பேசிய ஒரு வசனத்தால் ரஜினியின் இமேஜை அவரே உடைத்து விட்டார் என்றே சொல்லலாம்

இனி ரஜினி அரசியலுக்கு வந்தாலும் முன்பு இருந்த ஒரு கிரேஸ் இருக்காது என நினைக்கிறேன் இது எனது கருத்து மட்டுமே

paarthiban
19-11-2008, 08:36 PM
இவர்களெல்லாம் நல்ல 'தலைவர்'கள் என்று மக்கள் நம்ப காரணமே தற்போதய தலைவர்களின் செயல்களும்(செயலின்மையும்),சுயநல வெறிபிடித்த கீழ்த்தரமான அரசியலும்தான்!

lolluvathiyar
20-11-2008, 06:51 AM
அதுவும் இதுவரை கெடுதல்(?????????) எதையும் செய்யாததாலும்.. இனி வரும் காலங்களில் கெடுதல் செய்யவும்.. இதுவரை.. கொஞ்சமாவது நல்லது செய்தவர்களை தூர எறியலாம்..

அரசியலுக்கு வ ந்தவர்கள் எல்லாம் கெடுதல் செய்யதான் என்று ஒத்துகொண்டீர்கள்.




ஒரு கெடுதலும் செய்யாத(????)
ஷகீலா(இவருக்கு ரஜினியை விட ரசிகர்கள் அதிகம் என்பது தெரியுமா??)
இவர்களுக்கும் தலைவராகும் தகுதி உண்டு அல்லவா..

தாரளமாக உன்டு இன்றைய தலைவர்களை ஒப்பிடும் போது ஷகீலா எவ்வளவோ பரவாயில்லை என்றே கருதுகிறேன்.


ஆமாம் என்றால்.. தமிழர்களின் பரம்பரியத்தை கிண்டல் செய்யும் வட இந்தியர்களும் மற்றவர்களும்.. சொல்லுவதில் தப்பே இல்லை..


அதென்ன தமிழர் பாரம்பரியம் இந்தியா முழுவது குறிப்பாக தென்இந்தியா அரசியலில் சினமா ஆதிக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. அவர்கள் கின்டல் செய்கிறார்களா என்பதற்காக நம் மக்கள் மாறுவார்கள் என்று நினைகிறீர்களா?

anna
20-11-2008, 07:27 AM
ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்சி அமைத்தால் நல்லது தான் ஆனால் தற்போது உள்ள ரஜினி போல் அல்லாமல் 1996 அன்று வாய்ஸ் கொடுத்த ரஜினி போல் இருந்தால் நல்லது. இப்போதுள்ள ரஜினி சந்தர்ப்பவாதி ஆகிவிட்டார்.முன்னுக்குப்பின் முரணாக பேச ஆரம்பித்து விட்டார்.ஒரு பக்காவான அரசியல் வாதி போல் நான் சொன்னது வேறு அதை மீடியாக்கள் தவறாக எடுத்து கொண்டன என்பது போல பேச ஆரம்பித்து விட்டார்.இந்த நிலைமையில் உள்ள ரஜினியால் அரசியலுக்கு வந்து ஒண்ணும் கிழிக்க முடியாது. அவரும் பதொட ஒண்ணு பதிணொன்னு என்ற நிலைமைக்கு தான் போவார்.இப்படிப்பட்ட ரஜினி போல் பல அரசியல் சாக்கடையில் ஊறிய பல பெருச்சாளிகள் உள்ளன.இன்னும் ஒரு பெருச்சாளி தேவை இல்லை.
இல்லை இல்லை ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு தான் வரவேண்டும் எனறால் பெரிய நன்மைகள் ஏதும் தமிழக மக்களாகிய நமக்கு ஒண்ணும் ஏற்பட போவதில்லை . குறிப்பாக சொல்ல வேண்டுமானல் 03.11.08 அன்று ரசிகர்கள் கூட்டத்தில் பேசிய ரஜினி " நான் இரண்டு ஆண்டுகள் திரைப்பட கல்லுரியில் பயின்று விட்டு தான் சினிமாவுக்கே நடிக்க வந்தேன்.அது போல் அரசியல் என்பது என்ன தெரியாமல் இறங்க மாட்டேன் என்று சொன்ன ரஜினி அடுத்த வரியில மேல ஒருத்தன் இருக்கான் அவன் சொன்னா அடுத்த நாளே அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன இந்த ஆள எப்படி எவனும் நம்புவான். இவர நம்பி பின்னால் எவனாவது போன அவன் கதிஅதோ கதி தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. மக் களுக்கு நல்லது செய்யணு நினைக்கிறவன் இப்படி எல்லாம் பேச மாட்டான். தற்போது பேசும் ரஜினியால் கண்டிப்பாக அரசியலுக்கு வரும் எல்லா தகுதிகளும் வந்து விட்டது என கருதுகிறேன்.மீண்டும் சொல்கிறேன் இந்த வகை ரஜினியால் மக்களுக்கு ஏதும் நன்மை ஏற்பட போவது கிடையாது.இல்ல தமிழ்நாட்டோ தலை எழுத்து இது தான் என்றால் அதை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது.
அவர் ரசிகர் கூட்டதில் பேச்சு இங்கே

http://in.youtube.com/watch?v=-_KGq2puhFE

geminisenthil
20-11-2008, 07:54 AM
ரஜினி ஒரு சிறந்த நிடிகர் மட்டுமல்ல.. ஒரு சிறந்த வியாபாரியும்கூட...
இது அவரை தாழ்த்தி கூறியதாக நினைக்கக் கூடாது...

மதுரை மைந்தன்
20-11-2008, 11:14 AM
தலைவர் ஒரு வருக்கு திடமாக முடிவு எடுக்கும் திறன் வேண்டும். சுயமாக சிந்தித்து நல்லதோ கெட்டதோ தனது தீர்மானங்களில் நிலையாக இருக்க வேண்டும். (கலைஞர் கருணாநிதி போல).
தலைவருக்கு ஒரு முக வசீகரம் வேண்டும். (எம்ஜி.ஆர் போல). தலைவருக்கு உலக நடப்புகள் நன்கு அறிந்திருக்க வேண்டும். தலைவர் உணர்ச்சி வசப்படக்கூடாது. எதிராளிகளை நேர் கொண்டு போராட வேண்டும். இமய மலைக்கு ஓடி விடக் கூடாது.

ரஜனி அவர்களுக்கு மேற் சொன்ன எந்த லட்சணமும் கிடையாது தலைவராவதற்கு.