PDA

View Full Version : தொழிற்கூடம்......



Nanban
02-08-2003, 10:18 AM
முத்தெடுக்க கடலினுள்
மூழ்கக் கூப்பிடுகிறார்
தந்தை.
அவர் அறிய மாட்டார் -
நன்முத்துகள்
உன் வாயின் அகத்தே
அடங்கிக் கிடப்பதை....
ஆம் -
நீ சிரித்தால் அல்லவா
நான் முத்தெடுக்க முடியும்?

*****

பூப்பறித்து
இறைவனுக்குச் சார்த்த
அம்மா அன்பொழுக
அழைக்கின்றார்....
பெண்ணே,
உன் புன்னகைப் பூக்கள்
பூப்பதை நிறுத்திவிடாதே -
பூக்குடலை
இன்னமும் நிரம்பவில்லை...

*****
மூணு மணிக்கு
வாரிச் சுருட்டி எழுந்து
டெம்போ வண்டியைக்
கிளப்பிக் கொண்டு
பழங்கள் வாங்கி
வியாபாரம் செய்யக்
கிளம்பிவிட்டார் மாமா...
நீ
ஒரு பழத்தோட்டமாய்
பக்கத்து வீட்டில்
வசிப்பது
எனக்கு மட்டும் தானே ரகசியம்....

*****

வெண்டைக்காயை
ஒடித்துப் பார்த்து வாங்கு...
முருங்கைக் காயை
முறுக்கிப் பார்த்து வாங்கு...
பையைக் கையில் கொடுத்து
விரட்டுகிறாள் அக்கா -
ஐயோ!
உன் விரல் ஒடித்து
உன் கை முறுக்கி
எப்படித் தான்
வாங்கப் போகிறேனோ...

****

உன்னைப் பார்த்தால்
நடந்து செல்லும்
வியாபாரம் / சிறுதொழில்
கூடம் போலத்தான்
தோன்றுகிறது....
அதனால் தான்
தெரூமுனி இளைஞர்கள்
தேடும் வேலையை
உன்னிடம் தேடுகின்றனர் போலும்.....

பாரதி
02-08-2003, 06:10 PM
அன்பு நண்பரே,
விதம் விதமாய் வர்ணிக்கும் வித்தகரே...
தொழிற்கூட அதிபராக ஆசையோ..? :)

poo
02-08-2003, 06:16 PM
கவிதைகளின் அதிபரே... தங்களின் கவிதைத் தொழிற்சாலையின் உற்பத்திகள் அனைத்தும் நல்ல தரம்!!

பாராட்டுக்கள்!!!

karavai paranee
03-08-2003, 05:07 AM
நண்பா
காண்பவை யாவற்றையும் வர்ணித்து தள்ளுகின்றீரே
உங்கள் வர்ணனைக்கு சொந்தக்காரி நல் பாக்யம் செய்தவள்தான்

வாழ்த்துக்கள் நண்பா

இளசு
04-09-2003, 12:39 AM
நகைக்கடை, பூக்கடை என ஒரு திரைப்பாடல் உண்டு.
தரம் உயர்த்தி தொழிற்கூட உவமை சொல்ல நண்பன் இங்குண்டு.

வாழ்த்துகள்.

(எனக்கும் புரியும் வகையில் எளிமையாய் தந்தமைக்கு நன்றி நண்பனே..) :)

சேரன்கயல்
04-09-2003, 05:01 AM
நண்பா நண்பன்...
காதலியை புதிதாய் வர்ணித்து நீர் (கவித்)தொழிற்புரட்சி செய்திருக்கிறீர்...பாராட்டுக்கள்...

இப்போது வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது...
மீசை அரும்பாத பால்குடி சிறுவர்கள்கூட "தொழில்கூடத்தை" பார்க்கும் விதம் மாறிக்கிடக்கிறது...கலியும் முத்தி இந்த சிறுசுகளும் முத்திவிட்டன...

இ.இசாக்
07-09-2003, 05:09 PM
நண்பனின் கவிதை சிறப்பான நடையை பெற்றிருக்கிறது
வித்தியாசமான பார்வையும் கூட