PDA

View Full Version : மாமாவுக்கு கல்யாணம்



"பொத்தனூர்"பிரபு
24-08-2008, 05:38 PM
என் அத்தை மகன்,என்னைவிட நான்கு வயது மூத்தவர்,நான் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்திருந்த சமயம் அவருக்கு திருமணம் நிச்சயைக்க பட்டது
அந்த செய்தி கிடைத்ததும் நான் அவருக்கு எழுதிய கடிதம்

குறிப்பு:

அவரின் தொழில் வீடுகளுக்கு வர்ணம் பூசுவது(பெயிண்டர்),பட்டி,தின்னர் ஆகியவை வர்ணம்பூசுவபர்கள் பயன்படுத்துவது
மணப்பெண்னின் பெயர் சத்யா
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மாமா உனக்கு இப்போ
மாங்கனி கசக்குமே?
மாப்பி(ள்)ள எம்பேச்சு
மட்டும் இனிக்குமா???
சத்தியமா சொல்லு
சத்யா பேச்சுபோல
வருமா?? ( இல்லவே இல்லை )

அவுங்க அழைப்பு
இல்லாட்டி -
செல்போனும் செங்கல்லாகுமே!

கண்ணை மூடினாலும்
மூடாட்டியும் -
கனவுவந்து கபடியாடுமே!!

உன்வீட்டு கண்ணாடியும்
உன்னை -
அழகாய் காட்டுமே!!! (வேறு வழி)

சாப்பிட தோனுமா? -
என்அத்தை அவ(ள்)
சமைத்தால் இனி ருசிக்குமா??
(சீசீ...... உவேவே....)

ஏட்டு சுரக்காய்
கறிக்கு உதவாது -
cell-ல் ஊட்டிவிட்டால்
வயிறு நிறையாது........

5 AM GOOD MORNING
முதல்
10 PM GOOD NIGHT
வரை
எஸ்.எம்.எஸ் அனுப்பியே
எகிறுது பில்லு
அப்பப்போ
அரைமணி நேர
அரட்டை லொல்லு........
(பில்லு யாரு கட்டுவா??)

என்னேன்ன செய்கிறாயோ??

கதவுக்கு வச்ச பெயிண்(ட்)ட
வீட்டுக்காரன்
முதுகுக்கு அடித்தாயோ?
இதை
வெளியே சொல்ல
வெட்கப் பட்டு
மனசுக்குள்ளேயே மறைத்தாயோ???
(யாருக்கு தெரியும்?)

இந்த
கூத்தையேல்லாம்
கூடயிருந்து பார்க்க
குடுத்து வைக்கல............

பா(ர்)த்து மாமா பா(ர்)த்து
சுண்ணாம்பு தண்ணிய
சூப்புன்னு குடிச்சுடாதே............

பெயிண்ட் - யை
fair&lovely - ன்னு
நினச்சுடாதே............
பட்டியை எடுத்து
பல் விளக்கிடாதே.............

Thinner ஒன்றும்
தேனீர் அல்ல............
எமரிசீட் ஒன்றும்
கர்சீப் அல்ல............

பொத்தனூருக்கும்
திருப்பூருக்கும்
50 km இருக்குமா?
இப்ப கேட்டால்
5 inch என்பாய்!!!! (எல்லாம் நேரக் கொடுமை)

ஆணியில் தொங்கும்
காலாண்டராய் மனசு
அங்கிட்டும் இங்கிட்டுமா
ஆஆஆஆஆ..............டும்
எவனாச்சும் வந்து
ஏட்ட கிழிங்கடா - ன்னு
எகிறி எகிறி குதிக்கும்

நாள் ஆக.. ஆக..
பத்தாம் வகுப்பு
பரிச்சைக்கு போகும்
பையன் போல
மனசு துடிக்கும்............

கல்யாண நாளில்
கேள்விதாளை பார்த்தவன்
போல இருப்பாய்..........
(பார்க்க சூப்பர இருக்கும்)


எப்படியோ
எழுதி முடிச்சாலும்...............
பத்தாவது பரிச்சைக்கு
ரிசல்ட்டு உண்டு
உன் பரிச்சைக்கு
ம்ம்கும்..................
(வடிவேலு ஸ்டைலில்
“மாட்டிகிட்டாய்யா......
மாட்டிக்கிட்டாய்யா..........”)
:lachen001::lachen001::lachen001::lachen001:








http://priyamudan-prabu.blogspot.com/

இளசு
24-08-2008, 11:25 PM
உங்கள் மாமன் - மைத்துனன் உறவின் அந்நியோன்யம், அன்பு
மிக அழகாக...
இயல்பு நடையும், தொழில் பொருட்கள், செல்போன் உதவியுமாய்..

களைகட்டுகிறது கவிதை!

வாழ்த்துகள் பிரபு அவர்களே..

மாமாவுக்கும் எங்கள் வாழ்த்துகளை சொல்லுங்கள்.

நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலம் இருக்கே..
அது மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் போல..


இருக்கும்.. ஆனா இருக்காது - என்னெத்த கன்னையா சொல்வது போல!

சிவா.ஜி
25-08-2008, 04:30 AM
ரொம்ப இயல்பான, கலகலப்பான கவிதை. அந்யோந்யம் அழகாகத் தெரியும் ஆர்பாட்டமில்லாத வரிகள். அடைப்புக்குறிக்குள் இருப்பவை, இதழ் விரிக்க வைக்கின்றன. பாராட்டுகள் பிரபு.

"பொத்தனூர்"பிரபு
03-09-2008, 12:26 AM
நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலம் இருக்கே..
அது மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் போல..

இருக்கும்.. ஆனா இருக்காது - என்னெத்த கன்னையா சொல்வது போல!

அப்புடிங்களா??????
(அனுபவம் பேசுது...........)

"பொத்தனூர்"பிரபு
04-09-2008, 01:37 AM
நன்றி சிவாஜி

lolluvathiyar
25-09-2008, 08:40 AM
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் கவிதை அருமையான நையாண்டி கவிதை மாமாவின் மனதை அப்படியே நக்கலடித்து கலக்கீட்டீங்க*, மிக*வும் ர*சித்தேன் பாராட்டுக*ள்.



[B]பொத்தனூருக்கும்
திருப்பூருக்கும்
50 km இருக்குமா?
இப்ப கேட்டால்
5 inch என்பாய்!!!! (எல்லாம் நேரக் கொடுமை)


மிகவும் ரசித்த வரி. ஒரிஜினலாக இருப்பது 60 கீமி

"பொத்தனூர்"பிரபு
27-09-2008, 02:08 AM
/////////
மிகவும் ரசித்த வரி. ஒரிஜினலாக இருப்பது 60 கீமி
///////////

நன்றி வாத்தியார்

60 கீமி சொன்னதுக்கு நன்றி

அமரன்
27-09-2008, 08:04 AM
சிரிச்சபடி படிச்சேங்க.. எதனால் வந்தது சிரிப்பு.
உங்களிருவர் நெருக்கத்தால்.. கவிதையில் ஆங்காங்கே தொங்கும் நக்கல் தோரணங்களால்..
கவிதையும் பொருத்தமான பின்னூட்டங்களுமாய் கலகலக்குதுங்க இழை.

"பொத்தனூர்"பிரபு
28-09-2008, 02:17 PM
நன்றி அமரன்