PDA

View Full Version : இலவச ஸ்பைவேர் நீக்கி - ஸ்மிட்பிராடு பிக்ஸ்praveen
24-08-2008, 07:44 AM
நண்பர்களே, இனி நேரம் கிடைக்கும் போது முற்றிலும் இலவசமான மென்பொருட்கள் பற்றி அறிய தருகிறேன். அவசரம் கருதி இந்த மென்பொருளை முதலில் தருகிறேன்.


http://siri.urz.free.fr/Fix/SmitfraudFix.exe

Mirrors: Alternate official download locations for Smitfraudfix.zip
http://siri.geekstogo.com/SmitfraudFix.exe
http://downloads.securitycadets.com/SmitfraudFix.exe


இந்த மென்பொருளை கீழே கண்ட சூழ்நிலைகளுக்கு பயன்படுத்தலாம்.

1) நமது கம்ப்யூட்டரில் ஆண்டிவைரஸ் மென்பொருள் இருந்தும், சில சமயங்கள் தானே சில நச்சு மென்பொருள் பதிவிறங்கி உங்கள் கம்ப்யூட்டரில் 1008 வைரஸ் உள்ளது, உடனே நீக்கவா என்றும், சரி நீக்கு என்றால் அந்த மென்பொருளை வாங்க சொல்லும் பக்கம் செல்லும். அதனை நான் Control panel > Add/Remove Program சென்றாலும் நீக்க முடியாது.

2)அடிக்கடி டாஸ்க் பார் அருகில் உங்கள் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டிருக்கிறது இந்த மென்பொருள் உபயோகியுங்கள் என்ற பாப் அப்

3)இண்டர்நெட் எக்ஸ்புளோராரையோ அல்லது வேறு உலவியையோ திறந்தால் தானே, அல்லது ஏதாவது ஒரு சுட்டியை அழுத்தினால் அது எப்போதும் ஒரே சுட்டி(அது தான் வைரஸ் புரோகிராம் வாங்குங்கள் என்பது) சென்றால்.

4)இனையத்தில் உங்களிடம் இலவசமாக ஸ்கேன் செய்யட்டுமா என்று கேட்டு தேவையில்லாமால் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு தொல்லைதரும் மென்பொருள் பதிவாகி வலது ஓரத்தில் மஞ்சள் நிறத்தில் ஒரு பலூன் பாப் அப் ஆகி தொந்தரவு செய்தால்


இந்த மென்பொருளை பதிவிறக்கி (எப்போதும் வைத்து கொள்வது நல்லது) பின் கம்ப்யூட்டரை சேஃப் மோடில் இயக்கி, (சேஃப் மோடில் கம்ப்யூட்ட்ரை இயக்க அதனை ரீஸ்டார்ட் செய்து அது பூட் ஆகும் முன் F8 அழுத்தி வரும் மெனுவில் அதனை தேர்ந்தெடுத்து உள் செல்ல வேண்டும்.) அதில் இதனை ரண் செய்தால் பலன் 100%, இல்லாவிட்டால் நார்மல் மோடில் சில ஆண்டிவைரஸ் மென்பொருள் (குறிப்பாக மெஃகபி இதில் உள்ள process.exe reboot.exe இவைகளை தேவையில்லாத பைல்கள் என்று நீக்கி விடும்) தொந்தரவு செய்யும்.

ஸ்பைவேர் தொந்தரவு இருக்கையில் செய்து பார்த்து ஒரு பதிலிடுங்கள்.

poornima
24-08-2008, 08:37 AM
நன்றி நண்பரே.. இந்த தொற்றுக்கிருமிகளின் தொல்லை தாங்கவே முடியவில்லை

ஏ.வி.ஜி ஸ்பை வேரும் நன்றாக தொற்று நீக்குகிறது.. இப்போது புதிய பதிப்பும்
இலவசமாக கிடைக்கிறது.

sakthim
24-08-2008, 11:11 AM
நல்ல பயனுள்ள தகவல்கள்,நன்றி நன்பரே.

பாரதி
24-08-2008, 09:11 PM
நல்ல தகவலுக்கு நன்றி பிரவீண்.

ஷீ-நிசி
25-08-2008, 01:17 AM
anti spam தானா இந்த மென்பொருள்?

நான் avg உபயோகபடுத்துகிறேன்..

praveen
25-08-2008, 04:14 AM
anti spam தானா இந்த மென்பொருள்?

நான் avg உபயோகபடுத்துகிறேன்..

நண்பரே இது முழுமையான anti Sapam மென்பொருள் அல்ல, நான் மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காக மற்றும் ஏற்கெனவே கம்ப்யூட்டரில் பதிந்துள்ள ஆண்டிவைரஸ் சாப்ட்வேர்கள் நீக்காத தொல்லை தரும் மென்பொருளை முடிவுக்கு கொண்டுவர ஒருமுறை இயக்குவது.

இதனை பதிந்து இயக்க வேண்டிய அவசியமில்லை, அப்படியே கிளிக் செய்து பயன்படுத்த வேண்டியது தான்.

நான் கண்டவரை AVG அப்படி ஒன்றும் சிறந்த இவ்வகை மென்பொருள் அல்ல. அநேக வைரஸை கண்டு பிடிப்பதாக கூறும் ஆனால் முக்கியமானவற்றை கண்டு கொள்ளாமல் விட்டு விடும். மேலும் இலவச மென்பொருள் செயற்பாடு கேள்விகுறி தான்.

நல்ல மென்பொருள் வேண்டும் என்றால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

சிவா.ஜி
25-08-2008, 04:37 AM
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த தொல்லை எனக்கும் வந்து மிகவும் அலைக்கழித்தது. அந்த சமயம் இந்த மென்பொருள் இருந்திருந்தால், மீண்டும் ஃபார்மேட் செய்திருக்க வேண்டியதில்லை. மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி பிரவீன். AVG Internet Security 8 நல்லதா? அதைத்தான் நான் பயன்படுத்துகிறேன்.

SathyaThirunavukkarasu
25-08-2008, 04:42 AM
நன்றி, உங்களின் பங்களிப்பிற்கு வாழ்த்துக்களும் வரவேற்பையும் உரித்தாக்குகின்றேன்

தமிழ் மகன்
25-08-2008, 04:40 PM
இத இதைதான் நான் தேடிகொண்டிருந்தேன். தக்க நேரத்தில் தாங்கள் எனக்கு கொடுத்து உதவியிருக்கிறீர்கள். தங்கள் உதவிக்கு மிக்க நன்றிகள்.

அன்புரசிகன்
26-08-2008, 01:40 AM
போற்றி காக்கப்படவேண்டிய திரி... இதுபோன்ற பிரச்சனைகளை நான் கண்டிருக்காவிட்டாலும் நண்பர்கள் அலுவலக தோழர்களிடம் கண்டிருக்கிறேன்... அந்த நேரத்தில் எல்லாம் நீங்கள் தந்த பூச்சி நாசினியைத்தான் நிறுவி நீக்கியிருக்கிறேன்... இதையும் தக்க நேரங்களில் பயன்படுத்தி சொல்கிறேன்... நன்றி பிரவீன்(தமிழ் மன்ற பூச்சி நாசினி ஏகவிநியோகஸ்த்தர். :D சும்மா )

வெற்றி
04-09-2008, 05:44 AM
சுமார் இரண்டு வருடம் முன்பு இந்த பிரச்சனை இருந்த்து....எப்படி நீக்குவது என தெரியாமல் கடைசியில் பார்மேட் அடித்து விட்டேன் ..அதன் பின் மெஃக்காபி போட்ட பிறகி இந்த பிரச்சனை வரவே இல்லை ..மிக்க நன்றி ப்ரவீண் ...மிக மிக நன்றி