PDA

View Full Version : பெண்வண்டுகள்- லேடி பீட்டில்ஸ்mukilan
24-08-2008, 01:02 AM
பெண் வண்டுகள்- லேடி பேர்ட் பீட்டில்ஸ்

சில வாரங்களுக்கு முன் தென்றல் நம் மன்றத்திற்காகச் சுவரொட்டி வரைந்து இ-காசு பெற்றார் நினைவிருக்கிறது அல்லவா! இ-காசு கொடுத்தவர்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இ-காசு கொடுக்காத புத்திசாலிகள் சீக்கிரம் ஏமாறக்கடவது.

சரி அது அல்ல விசயம்! அப்பொழுது அதில் சில வண்டுகளையும் வரைந்திருந்தார். நான் அவற்றை மன்றத்தின் நிர்வாகக் குழுவோடு ஒப்பிட்டிருந்தேன். அவ்வண்டுகள் பயிர்களை அழிக்கும் பூச்சிகளை உண்டு பயிர்களைக் காக்கின்றன என்று. பென்ஸீம் சில விவரங்கள் கேட்டிருந்தார். அத்தகைய வண்டுகள் பற்றியும் பொதுவாக பூச்சிகள் பற்றியும் இப்பகுதியில் காண்போமா?

பொதுவாக தாவர வளர்ச்சிக்கு தடையாக உயிருள்ள(Biotic) மற்றும் உயிரற்ற (abiotic) காரணிகள் உள்ளன. உயிரற்ற வற்றில், தட்பவெப்பம், ஈரப்பதம், வறட்சி, களர் உவர் நிலத் தன்மை, மண்ணின் அமில-காரத் தன்மை போன்றன அடங்கும்.

உயிருள்ள தடைக்காரணிகளுல் பூச்சிகள் (Insect Pests), பூஞ்சை, பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் (Pathogens), எலி, குருவி போன்ற விலங்குகள், மைட்ஸ் (Mites) எனப்படும் மற்ற உயிரினங்கள் அடங்கும். இத்தடைக்காரணிகள் அனைத்துமே அந்தந்த சூழ்நிலைக்குத்தக்க காணப்படும். கனடா போன்ற குளிர்நாடுகளில் பூச்சிகளால் விவசாயத்திற்கு ஏற்படும் நஷ்டம், இந்தியா போன்ற வெதுப்புநாடுகளை விடக் குறைவுதான். ஆனால் கனடாவில் நோய்க்கிருமிகளின் தாக்கம் இந்தியாவை விட அதிகம்.

சரி விஷயத்திற்கு வருவோம். பூச்சிகள் வெவ்வேறு பருவ நிலைகளில் வளர்ச்சி அடைவதால் அவற்றால் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு உணவு வகையை உண்ண முடியும். சிறுவயதில் படித்திருப்போமே, முட்டை- புழு- கூட்டுப்புழு- வளர்ச்சிபெற்ற பூச்சி என பூச்சியினங்கள் பல வளர்ச்சி நிலைகளை அடைகின்றன என்று. இதில் புழுப்பருவம்தான் தாவரங்களை அழிக்கும் பருவம். அழகாக பறக்கும் வண்ணத்துப் பூச்சி, தான் புழுவாக இருக்கும் பொழுது தாவரங்களை அழித்துத்தான் வளர்கிறது. பயிர்களுக்கு அதிகம் சேதம் விளைவிக்கும் Order( தமிழில் பெருங்குடும்பம் எனச் சொல்லலாமா?) வண்ணத்துப் பூச்சியின் Lepidoptera (லெப்பிடாப்டீரா) தான்.

பூச்சியினங்களின் வகைப்பாட்டியல் (Taxonomy) சுவாரசியமாக இருக்கும். பூச்சியினங்களின் Orderகளின் பெயர் அவற்றின் இறக்கை அமைப்பை வைத்தே இருக்கும். “ptera” – என்றால் கிரேக்க மொழியில் இறகு என்று பொருள். “Lepido” என்றால் “செதில்” என்று பொருள். வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை உற்றுக் கவனித்தால் அந்த வண்ணப் பூச்சுகள் எல்லாம் செதில்கள் என்பது புரியும்.அதே போல நமது வீட்டில் இருக்கும் ஈ, இரண்டு இறகுகள் மட்டும் உள்ளதால் Diptera (Di- இரண்டு). தேனீக்கள் Hymenoptera எனப்படும் வேறு order (Hymen- தோல்). மே ஃபிளைஸ் –Mayflies, Ephemroptera எனப்படும் order(Ephemeros- குறுகிய ஆயுள்; Ephemeralன் எதிர்ப்பதம் Eternal(நீண்ட).

நமது கதாநாயகி பெண்வண்டு Coleoptera எனப்படும் பெருங்குடும்பத்தைச் சார்ந்தவள். Coleo என்றால் மூடப்பட்ட என்று பொருள். நன்கு கவனித்துப் பாருங்கள் பெண்வண்டுகளின் கடினமான இறகுகளின் கீழ் மெல்லிய இறக்கைகளும் காணப்படும். இந்தப் பெருங்குடும்பத்தில் உள்ள சிற்றினங்களின் (Species) எண்ணிக்கை தெரியுமா? அதிகமில்லை 350,000 தான். இன்னமும் புதிது புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்தப் பெருங்குடும்பத்தைச் சேர்ந்த பூச்சிகளை பீட்டில்(beetles) என்றுதான் அழைக்க வேண்டும். Bug –பக் எனப்படுபவை, Hemiptera எனப்படும் வேறு பெருங்குடும்பத்தைச் சார்ந்தவை.

இந்தப் பெருங்குடும்பத்தில் நல்லவர்களும் உண்டு தீயவர்களும் உண்டு. ஆனால் நமக்கு கதாநாயகி ஆன பெண்வண்டு நல்லவள். பெண்வண்டுகள் புழுப்பருவத்தில் பயிர்களின் சாறு உறிஞ்சும் அசுவினிப் பூச்சிகளை அப்படியே சாப்பிடும். பெண்வண்டுகள் அனைத்துமே மாமிசப் பட்சினிகள்தான். அதனால்தான் அவை தாவரத்தை உண்பதில்லை. அதிலும் யாரோ சிலர் காதல் மணம் புரிந்து கொண்ட அசைவாள் வேறு ஆகிவிட்டனர் (Colarodo potato beetle, Mexican bean beetle).

பெண்வண்டுகள் நிறைய முட்டையிடும். பெண்வண்டுகளின் முட்டைகள் நேர்த்தியாக இடப்பட்டு சூரியஒளியினால் பொறிக்கப் படும்.

http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/Ladybeetle/Egg.jpg

குஞ்சுகள் அசுவினிப் பூச்சிகள், மாவுப்பூச்சிகள், தத்துப்பூச்சிகள், போன்ற சாறுண்ணிகளை மட்டுமே சாப்பிடுவேன் என அடம்பிடிக்கும்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/Ladybeetle/2416.jpg

அசுவினிப் பூச்சியை உண்ணும் பெண்வண்டின் புழு


http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/Ladybeetle/ladybeetle_larva-1.jpg

பெண்வண்டு புழுவிடம் மாட்டிக் கொண்ட ஈ.


பின்னர் கூட்டுப் புழு பருவத்தில் மோன நிலையெய்தி, முழு வளர்ச்சி பெற்ற பெண்வண்டாக வெளிவந்து மறுபடியும் சில பல பூச்சிகளை உள்ளே தள்ளிவிட்டு தன் பரம்பரையை நிலை நாட்ட முட்டைகளை இட்டு மடிந்து விடும்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/Ladybeetle/emergingout.jpg

கூட்டுப்புழுவில் இருந்து வெளிவரும் வளர்ச்சி பெற்ற பெண்வண்டுhttp://i27.photobucket.com/albums/c182/Rajmirra/Ladybeetle/620078606NXFog3lph_9156LadybirdB-1.jpg
வளர்ந்த நிலையில் உள்ள பெண்வண்டு அசுவினிப் பூச்சியை அப்படியே சாப்பிடும் காட்சி.

ஆனால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பினால், குறிப்பிட்ட அளவிற்கு மேல் போகும்பொழுது, நன்மை தரக்கூடிய பெண்வண்டுகளும் அழிந்து போகின்றன. இது நேரடி விளைவு என்றால் மறைமுக விளைவானது பெண்வண்டுகளின் உணவுப் பற்றாக்குறையால் வருவது. பெண்வண்டுகளின் உணவான மற்ற பூச்சிகள், பூச்சிக் கொல்லியால் அழிந்து போவதால் பெண்வண்டுகளுக்கு உணவு கிடைப்பதில்லை. பயிர்களைப் பூஞ்சைகள் அழிப்பது போல இந்தப் பெண்வண்டுகளையும் பூஞ்சைகள் தாக்குகின்றன. இதனால் தான் நன்மைதரக்கூடிய பூச்சிகள் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகின்றது.

சில சுவாரஸ்யமான தகவல்கள்:

பூச்சிகளைப் பற்றிப் படிப்பதற்கு Entomology என்று பெயர். Entomo- என்றால் வெட்டப்பட்ட உடலமைப்பு கொண்ட (பூச்சிகள் அவ்வாறு இருப்பதால்)- Logy என்றால் கற்றல்.

பூச்சிகள் Hexapoda (Hexa- ஆறு; Poda- கால்கள்) என்ற Phylum- ஃபைலத்தைச் சார்ந்தன. ஆறுகால்கள் கொண்டால் மட்டுமே அது பூச்சி. அதனால்தான் சிலந்திக்கு எட்டுக்கால் பூச்சி என்ற பெயர். சிலந்தி பூச்சியினத்தைச் சார்ந்தது அல்ல.

நன்மை செய்யும் சில பெண்வண்டு இனங்கள்- ஆசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன.

1999ம் ஆண்டு NASA வால் விண்வெளிக்கு 4 பெண்வண்டுகள் எடுத்துச் செல்லப்பட்டன. அவை புவியீர்ப்பு விசையில்லாத நிலையிலும் அசுவினிப்பூச்சிகளை அழிக்கின்றனவா என்று சோதனையிட.

பெண்வண்டுகளும்- பொன்வண்டுகளும் (jewelbeetle) ஒன்றல்ல.

பூச்சிகளின் உடம்பில் இரத்தச் சுற்று மண்டலம் எனத் தனியாக இல்லை. பூச்சிகளின் இரத்தத்தில் சிவப்பு நிறக்காரணியான ஹீமோகுளோபின் (Haemoglobin) இல்லை. ஆனால் பூச்சிகளுக்கும் இரத்தம் உண்டு.

Cicadas எனப்படும் சில்வண்டுகளில் ஆண் வண்டுகள் மட்டுமே சத்தமிடும். உலகிலேயே அமைதியான எதிர்த்துப் பேசாத மனைவியரைக் கொண்ட ஒரே விலங்கு சில்வண்டாகத்தான் இருக்க முடியும்.:D:D

சிறுவயதில் பிடித்து விளையாடுவோமே தட்டான் பூச்சிகள் அவை நீரில்தான் முட்டையிடும். அந்தப் பூச்சிகளின் புழுக்கள் நீரில் உள்ள கொசுக்களின் புழுக்களை அழித்து விடும்.

உங்களைக் கடிக்கும் கொசு பெண் கொசுதான். ஆண் கொசுவால், பாவம் கடிக்க முடியாது.:D:D

ஓவியன்
24-08-2008, 01:25 AM
உவ்வே பதிவுகளுக்குப் பின் எனக்கும் பூச்சி இனங்களுடன் ஒரு காதல்..!! :D
உங்கள் பதிவினைக் கண்டதும், ஓடோடி வந்து பார்த்தேன்...
பெண் வண்டுகளைப் பற்றியும், பூச்சிகளைப் பற்றியும் இத்தனை தகவல்களா...??
மிக்க நன்றி முகிலன்!! :)

முகில் ஜி, தொடர்ந்தும் விவசாயிகளுக்கு உயிரியல் ரீதியில் உதவி புரிந்து வரும் நல்ல பூச்சி இனங்களைப் பற்றி சுவை பட எழுதலாமே..?? :)

mukilan
24-08-2008, 01:45 AM
தங்கள் ஆதரவிற்கு நன்றி ஓவியன். பார்த்து பூச்சிகளைக் காதலிக்கிறேன் பேர்வழி என்று சொல்வதை வீட்டில் யாரேனும் வேறுவிதமாகப் போட்டுக் கொடுத்து விடப் போகிறார்கள். :D

தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் ஓவியன்.:icon_b:

ஓவியன்
24-08-2008, 02:04 AM
பூச்சிகளைக் காதலிக்கிறேன் பேர்வழி என்று சொல்வதை வீட்டில் யாரேனும் வேறுவிதமாகப் போட்டுக் கொடுத்து விடப் போகிறார்கள். :D

ஹீ, ஹீ..!!

அதுக்கு முன்னர் நாமளே வீட்டில சொல்லிட்டமிலே..!! :D:D:D

பென்ஸ்
24-08-2008, 02:55 AM
பெண்வண்டுகளை பற்றிய முதல் ஆசிரியர் என் சகோதரியின் குழந்தைகள்... அவர்கள் தோட்டத்தில் இருக்கும் இந்த பெண்வண்டுகளை மகிழ்ச்சியுடம் பார்த்தபோது அவர்கள் அதன் பலனை பற்றி கூற.... முதல் ஆர்வம்...
நேரமின்மை கழுத்தை நேருக்கும் இந்த நாட்க்களில் அதை தேடிப்ப்படிக்க மறந்துபோக....

ஆசை இங்கு தேவைக்கு அதிகமாகவே நிறைவேறப்பட்டு....

எனக்கு சையத் அலி என்று ஒரு ஆசிரியர் உண்டு.. பொறியியலை பொரிக்கடலை போல ருசியாக ரசிக்க சொல்லி கொடுத்தவர் அவர்...
இன்று தாவரவியலை.. நீங்களும்...

சிவா.ஜி
24-08-2008, 04:41 AM
பொன்வண்டுகளைப் பார்த்திருக்கிறேன். பிடித்து வைத்து தீப்பேட்டி வீட்டுக்குள் வளர்த்தும் இருக்கிறேன். ஆனால், பெண் வண்டுகளைப் பற்றி இத்தனை விவரங்கள்...வாவ்...அழகுதமிழில் முகிலனின் வரிகள் சுவாரசியக் குவியல். தாவரங்களின் நன்பர்கள் உணவின்றி எண்ணிக்கை குறைந்து வருவதுதான் வருத்தமாக இருக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகள் முகிலன்.

பாரதி
24-08-2008, 06:07 AM
படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது முகிலன். இயற்கையிலேயே உயிரினங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிந்திருக்கும் போலிருக்கிறது!

கற்றவற்றை கற்றுத்தரும் அன்பிற்கு நன்றி முகிலன்.

விகடன்
24-08-2008, 06:48 AM
பூச்சியினங்களைப் பற்றியும் பொன், பெண் வண்டுகளைப் பற்றியும் பல விடயங்கள் அற்றிய முடிந்தது.
விலங்கியலில் பல "லொயி"க்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் அதற்குண்டான விளக்கத்தை அறிந்திருக்கிறேன். அந்தக்காலத்தில் என்ன என்று தெரியாமலேயே ஒப்புவித்திருந்தேன். :D
----------------------
ஆண் நுளம்பு கடிப்பதில்லை என்று சொல்லியிருந்தீர்கள் முகிலன். ஏன்? அவற்றிற்கு பல்லுக்கிடையாதா?

மன்மதன்
24-08-2008, 07:25 AM
சுவாரஷ்யமான கட்டுரை..

பத்திரிக்கைகளில் வரும் கட்டுரைகளுக்கு
இது சவால் விடுகிறது..

அருமை முகில்ஜி..

ஓவியன்
24-08-2008, 08:10 AM
ஆண் நுளம்பு கடிப்பதில்லை என்று சொல்லியிருந்தீர்கள் முகிலன். ஏன்? அவற்றிற்கு பல்லுக்கிடையாதா?

பல்லிருந்தால் தான் கடி, இல்லைனா அது மொக்கை...
மேலதிக விளக்கங்களுக்கு ‘நாயும் வாயும்' திரியைப் பாருங்க..!! :D

ஆகவே, ஆண் நுளம்புகளுக்கு பல்லுக் கிடையாது..!! :icon_b:

அமரன்
24-08-2008, 08:31 AM
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தந்தே... நண்பனே.. நண்பனே..
கிளாஸ்களை கட்டடிக்காது படிச்ச காலத்துல கூட இந்தளவுக்கு சுவாரசியமாக இருந்ததில்லை. (அதுசரி.. கட்டடிக்காவிட்டால் எப்படி சுவாரஸ்யம் இருக்கும்) அருமையான தரமான எல்லாராலும் புரிந்துகொள்ளக்க் கூடிய வகையில் அமைந்த கட்டுரை. பாராட்டுகள் முகிலன்.

ஆண் நுளம்பு தாவச்சாறுகளை அருந்தி வாழ்கின்றன என்றுபடித்த ஞாபகம்.. பாதுகாப்பான பசித்தேடல்...

poornima
24-08-2008, 08:51 AM
அழகிய கட்டுரை.. நன்றி முகிலன்..

சின்ன வயதில் பொன் வண்டு பிடித்து சின்ன டப்பாவில் இலைகளுடன் அடைத்து வைத்து வண்ண வண்ண முட்டைகள் இடுவதை விழி விரிய பார்த்து இரசித்து..

அந்த நாள் ஞாபகத்தில்... நன்றி நன்றி

இளசு
24-08-2008, 09:18 AM
கற்பிக்கும் கலை சுவைபடக் கைவந்த முகிலனுக்கு,

ருசித்தேன் இக்கட்டுரையை ... உவ்வே என்னாமலே!

கதாநாயகி பெருங்குடும்பம் சட்டென கிளியோபாட்ரா என வாசித்து, திருத்திக்கொண்டேன்.

தட்டான்பூச்சிகள்தான் உண்மையான குட்நைட் போல!

ஆண்சில்வண்டுகள் மேல் அதீத பொறாமையானேன்!

தமிழ்க்கலைச் சொற்களும், நம் மக்களுக்குப் பிடித்தமான நகைச்சுவையும் கலந்து
நீ பரிமாறும் அறிவியல் விருந்து.. ஜோர்!


( இளசு: ஆமாம், மரபணு மாற்றப் பயிர்கள் என்னாச்சு?

முகில்ஸ்: அறிவியல் மைல்கற்கள் என்னாச்சு????)

பென்ஸ்
24-08-2008, 03:39 PM
கதாநாயகி பெருங்குடும்பம் சட்டென கிளியோபாட்ரா என வாசித்து, திருத்திக்கொண்டேன்.

ஹா... மீண்டும்... நானும்...

மதி
25-08-2008, 12:01 PM
ஆஹா.. சுவையான தகவல்கள்.. எளிய நடையில் அனைவருக்கும் புரியும்படியாய் எழுதியமைக்கு நன்றி.

திறமையான கட்டுரையாளர் என மீண்டும் நிரூபித்துள்ளீர் முகிலன். வாழ்த்துகள்

தீபா
25-08-2008, 03:02 PM
முகிலனுக்கே உரிய முத்தான அறிவியல் கட்டுரை. மிக எளிதாக அல்வா போல உள்ளே நுழைந்தது பாடம்.

(இ-காசு தராதவர்களுக்கு ஒரு வாய்ப்பு : இக்கட்டுரை உருவாக மிக மிக மிக மிக முக்கிய காரணியான எனக்கு இம்முறை மின்பணம் தரலாம்.:D )

சில அறிவியல் பெயர்களையும் அதற்கான காரணிகளையும் விளக்கும்போது அவை எளியதமிழாகவே தெரிகின்றன. ஒரு இனத்தை விளக்கும்போது அதன் உடன் இனத்தையும் சேர்த்து விளக்கியாகவேண்டிய கட்டாயத்தில், மற்ற இனங்களை அழகாகவே விளக்கியிருக்கிறீர்கள்.

பெண்வண்டு முட்டையிடும் காட்சியைத் தந்தது மகிழ்ச்சி. அதன் நேர்த்தியைக் கண்டு இயற்கையை வியக்கிறேன். ஒரு அசைவப் பூச்சியாகவே பிரவேசிக்கும் இவ்வண்டை எங்கள் பழைய வீட்டுத் தோட்டத்தில் பார்த்திருக்கிறேன். இவ்வண்டுகளை நசுக்கினால் எழும் சப்தத்தில் லயித்து தேடிப்பிடித்து நசுக்கிய காலம் உண்டு.

ஹீமோக்ளோபின் இல்லாமல் வெள்ளை ரத்தம் இருக்கும் இல்லையா திரு.முகிலன்?

கொசுவும் கூட கடிப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தன் நாக்கினால் ஊசியைவிட்டு ஏதோ (ரசாயனம் ?) செலுத்தி குருதி எடுக்குமாமே!!

துள்ளும் தமிழழகும் தோய்த்தத் தெளிவழகும் மனதுள்ளும் புறமும் கூச்செறிந்த பதிவிது.

mukilan
25-08-2008, 11:09 PM
பொறியியலை பொரிக்கடலை போல ருசியாக ரசிக்க சொல்லி கொடுத்தவர் அவர்...
இன்று தாவரவியலை.. நீங்களும்...

நன்றி பென்ஸ். பொறியியலை பொரிகடலை போலச் சொல்லிக் கொடுத்த அந்த ஆசிரியர் எனக்கும் கிட்டி இருக்க கூடாதா?

எல்லாம் நீங்கள் கொடுத்த ஊக்கம்தான் பென்ஸ்.

mukilan
25-08-2008, 11:14 PM
தாவரங்களின் நண்பர்கள் உணவின்றி எண்ணிக்கை குறைந்து வருவதுதான் வருத்தமாக இருக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகள் முகிலன்.

நன்றி அண்ணா. மனிதன், முக்கியமாக விவசாயிதான் சுற்றுச்சூழல் சமநிலையை நிர்ணயம் செய்பவன். ஒன்றை அழித்து ஒன்றை அடைய வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. விவசாயத்தின் மூலம் மனிதைனம் பெற்ற நன்மைகள்.. அது பேராசையாக மாறியதால் தானே இப்பொழுது தீமைகள் வர ஆரம்பித்திருக்கின்றன.
கற்றவற்றை கற்றுத்தரும் அன்பிற்கு நன்றி முகிலன்.

கற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு உங்கள் போன்றோர் இருப்பதால் தான் அண்ணா என்னால் அவ்வப்பொழுது கட்டுரைகள் எழுத முடிகிறது. நீங்கள் சொன்னது சரிதான்; இயற்கையாகவே பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

mukilan
25-08-2008, 11:22 PM
பூச்சியினங்களைப் பற்றியும் பொன், பெண் வண்டுகளைப் பற்றியும் பல விடயங்கள் அற்றிய முடிந்தது.
விலங்கியலில் பல "லொயி"க்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் அதற்குண்டான விளக்கத்தை அறிந்திருக்கிறேன். அந்தக்காலத்தில் என்ன என்று தெரியாமலேயே ஒப்புவித்திருந்தேன். :D
----------------------
ஆண் நுளம்பு கடிப்பதில்லை என்று சொல்லியிருந்தீர்கள் முகிலன். ஏன்? அவற்றிற்கு பல்லுக்கிடையாதா?

நானும் உங்களைப் போலத்தான் விராடன். புரியாமல் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன். எனக்கு வாய்த்த ஒரு நல்லாசிரியர் கற்கும் விதத்தை எனக்குப் புரிய வைத்தார். அன்றோடு மனப்பாடத்திற்கு முற்றுப்புள்ளி.

நுளம்பு என்றால் ஈழத்தமிழில் கொசுவா? நன்றி அப்படி ஒரு வார்த்தையைக் கற்றுக் கொடுத்ததற்கு. கொசுக்களின் வாயமைப்பு உறிஞ்சிக் குடிப்பதற்கு ஏற்றது. ஆண் கொசுவும், பெண்கொசுவும் அமரன் கூறியிருப்பது போல முதன்மை உணவாக தாவரச்சாறுகள்தான் உண்ணும். பெண் கொசுவிற்கு முட்டையிடுவதற்குத் தேவையான, புரதங்கள், இரும்புச் சத்துகள், வைட்டமின்கள் போன்றவை ரத்தத்தில் இருந்துதான் பெறமுடியும் என்பதால் அவை ரத்தத்தை ருசி பார்க்கின்றன.சுவாரஷ்யமான கட்டுரை..

பத்திரிக்கைகளில் வரும் கட்டுரைகளுக்கு
இது சவால் விடுகிறது..

அருமை முகில்ஜி..

நன்றி ஜி! உங்களுக்கும் ஜி தானா????:eek:


பல்லிருந்தால் தான் கடி, இல்லைனா அது மொக்கை...
மேலதிக விளக்கங்களுக்கு ‘நாயும் வாயும்' திரியைப் பாருங்க..!! :D

ஆகவே, ஆண் நுளம்புகளுக்கு பல்லுக் கிடையாது..!! :icon_b:

மொக்கைனு சொல்லி இந்தத் திரில பின்னூட்ட மிட்டிருப்பவர் யாரையோ நீங்க வம்புக்கிழுக்கிறதி தெரியுது! ஆனா அவர் மதினு சொல்ல மாட்டேன் ஓவியன்.

mukilan
25-08-2008, 11:27 PM
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தந்தே... நண்பனே.. நண்பனே..
கிளாஸ்களை கட்டடிக்காது படிச்ச காலத்துல கூட இந்தளவுக்கு சுவாரசியமாக இருந்ததில்லை. (அதுசரி.. கட்டடிக்காவிட்டால் எப்படி சுவாரஸ்யம் இருக்கும்) அருமையான தரமான எல்லாராலும் புரிந்துகொள்ளக்க் கூடிய வகையில் அமைந்த கட்டுரை. பாராட்டுகள் முகிலன்.

ஆண் நுளம்பு தாவச்சாறுகளை அருந்தி வாழ்கின்றன என்றுபடித்த ஞாபகம்.. பாதுகாப்பான பசித்தேடல்...

உங்கள் ஊக்க வார்த்தைகளுக்கு என் நன்றி அமரன். நீங்கள் சொன்னது சரிதான். ஆண், பெண் கொசுக்கள் உணவாக தாவரச்சாறுகள் உண்டு வாழ்வன.அழகிய கட்டுரை.. நன்றி முகிலன்..

சின்ன வயதில் பொன் வண்டு பிடித்து சின்ன டப்பாவில் இலைகளுடன் அடைத்து வைத்து வண்ண வண்ண முட்டைகள் இடுவதை விழி விரிய பார்த்து இரசித்து..

அந்த நாள் ஞாபகத்தில்... நன்றி நன்றி

விமர்சன வித்தகரின் ஊக்கமருந்துக்கு நன்றி! அந்த பொன்வண்டுகள் தக தகவென ஜொலிக்குமே! அதற்கு உணவாக ஆதாலை என்ற செடியின் இலையைக் கொடுப்போம். அது உண்ணுமா என்வது தெரியாது:D

mukilan
25-08-2008, 11:31 PM
கற்பிக்கும் கலை சுவைபடக் கைவந்த முகிலனுக்கு,

ருசித்தேன் இக்கட்டுரையை ... உவ்வே என்னாமலே!

கதாநாயகி பெருங்குடும்பம் சட்டென கிளியோபாட்ரா என வாசித்து, திருத்திக்கொண்டேன்.

தட்டான்பூச்சிகள்தான் உண்மையான குட்நைட் போல!

ஆண்சில்வண்டுகள் மேல் அதீத பொறாமையானேன்!

தமிழ்க்கலைச் சொற்களும், நம் மக்களுக்குப் பிடித்தமான நகைச்சுவையும் கலந்து
நீ பரிமாறும் அறிவியல் விருந்து.. ஜோர்!


( இளசு: ஆமாம், மரபணு மாற்றப் பயிர்கள் என்னாச்சு?

முகில்ஸ்: அறிவியல் மைல்கற்கள் என்னாச்சு????)

ஊக்கமருந்தளிக்கும் மருத்துவருக்கு என் நன்றி:icon_b:

ஆம் அண்ணா, சில் வண்டுகள் போல் இல்லாமல் சில சொல்வண்டுகள் மிகவும் தொல்லைகள் தருகின்றன. என்ன செய்ய வாழ்க்கை பொட்டலமாகத்தான் கிடைக்கும் (Life comes as a package). தனித்துப் பிரித்து நமக்கான பொட்டலங்கள் கிடைப்பதில்லை:D:D:D

கிளியோபட்ராவை ஒத்த உச்சரிப்பினாலோ என்னவோ இந்த வண்டுகளும் அந்தக் கருப்பழகி போல அழகுதான்.

மரபணு மாற்றப் பயிர் 95 % முடிந்து விட்டதே! சீக்கிரம் மங்கலம் பாட வேண்டியதுதான். ஆனால் அறிவியல் மைந்தர்கள் இன்னமும் பல பகுதிகள் வர வேண்டுமே!!!


ஹா... மீண்டும்... நானும்...

உங்கள் இருவருக்கும் ஒத்த ரசனை இருப்பது தெரியும். சின்ன விசயங்களில் கூடவா:fragend005:

mukilan
25-08-2008, 11:38 PM
ஆஹா.. சுவையான தகவல்கள்.. எளிய நடையில் அனைவருக்கும் புரியும்படியாய் எழுதியமைக்கு நன்றி.

திறமையான கட்டுரையாளர் என மீண்டும் நிரூபித்துள்ளீர் முகிலன். வாழ்த்துகள்

நன்றி மதி, திறமையான கட்டுரையாளர் ஆவதற்குத்தான் இங்கே பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோமே! செதுக்குங்க பாஸ். நாங்க சிலையாகிடறோம்.:icon_ush:


முகிலனுக்கே உரிய முத்தான அறிவியல் கட்டுரை. மிக எளிதாக அல்வா போல உள்ளே நுழைந்தது பாடம்.

(இ-காசு தராதவர்களுக்கு ஒரு வாய்ப்பு : இக்கட்டுரை உருவாக மிக மிக மிக மிக முக்கிய காரணியான எனக்கு இம்முறை மின்பணம் தரலாம்.:D )

நன்றி தென்றல். இங்கேயும் கடை விரிச்சாச்சா?:eek: மக்களே உஷார்.


இவ்வண்டுகளை நசுக்கினால் எழும் சப்தத்தில் லயித்து தேடிப்பிடித்து நசுக்கிய காலம் உண்டு.
சித்திர குப்தர், பிளீஸ் நோட் திஸ் பாய்ண்ட்:mad:


ஹீமோக்ளோபின் இல்லாமல் வெள்ளை ரத்தம் இருக்கும் இல்லையா திரு.முகிலன்?

துள்ளும் தமிழழகும் தோய்த்தத் தெளிவழகும் மனதுள்ளும் புறமும் கூச்செறிந்த பதிவிது.

ரத்தம் வெள்ளையாக இருக்காது. நிறமின்றிதான் இருக்கும். ஆனால் பூச்சிகளுக்கு திறந்த ரத்தச் சுற்று மண்டலம் என்பதால் பூச்சிகளை நசுக்கும் பொழுது அதன் உடலின் திசுக்களும் கலந்து வருவதால் அப்படித்தெரியும்.

ஓவியா
26-08-2008, 12:56 AM
பொறுப்பாளராக கட்டி வைத்ததும் இப்படி பொக்கீஷமாக அள்ளி போடுறீகளே நண்பா!!!

உங்கள் எழுத்து நடைக்கே நாங்கள் ஓடி வந்து படிப்போம்.

எனக்கு தமிழ் சொற்களில் பொண்வண்டு என்றால் என்ன பூச்சிவைகள் என்றே தெரியாது. படித்தது அனைத்தும் மலாய்யாச்சே அதான். :D

மிகவும் அருமையான பதிவு பல அரிய விசயங்களை கற்றுக்கொண்டேன். தக்கப்படங்களை இணைத்ததும் பதிவு பார்க்க படிக்க இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.


பகிர்வுக்கு நன்றிகள்.

சுகந்தப்ரீதன்
26-08-2008, 08:38 AM
பெண்வண்டுகள் பற்றிய தகவல்கள் மிகவும் உபயோகமாக இருக்கிறது முகில்ஸ்...!! கிராமத்தில் இருந்தாலும் எல்லா பூச்சிகளைப்போலவும் இதுவும் பயிர்களுக்கு தீமை விளைவிப்பவை என்றே இதுவரை எண்ணியிருந்தேன்..!!

விளக்கமா புட்டுவைத்து புரியவைத்து விட்டீர்கள்...!! நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாய்வதை போலத்தான்... தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்க பயம்படுத்தும் மருந்துக்களால் இவைகளுக்கும் நாம் தீங்கு விளைவிக்கிறோம் என்று புரிகிறது..!!

நன்றி..முகில்ஸ்.. தொடர்ந்து நிறைய வேளாண்மை கட்டுரைகள் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..!!

mukilan
27-08-2008, 12:37 PM
நன்றி சுபி! ஆமா எந்த புட்டு வைத்தேன்.....:D ச்சும்மா! தொடர்ந்து ஆதரவு தாருங்கள் என்னால முடிந்த அளவு சுவாரசியமாக வேளாண்சார்ந்த கட்டுரைகள் எழுதுகிறேன்.

mukilan
27-08-2008, 08:33 PM
பொறுப்பாளராக கட்டி வைத்ததும் இப்படி பொக்கீஷமாக அள்ளி போடுறீகளே நண்பா!!!

ஐய் நல்லா இருக்கே... பொறுப்பாளாரா இருந்தா பதிவு போட வேண்டாமா?? :wuerg019::wuerg019:உங்கள் எழுத்து நடைக்கே நாங்கள் ஓடி வந்து படிப்போம்.

ஓடி வந்து படிக்கும் உங்கள் ஆதரவிற்கே என் எழுத்து நடை ஓடுமே.

தக்கப்படங்களை இணைத்ததும் பதிவு பார்க்க படிக்க இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

படம் காட்டினாத்தான் படிக்குறீங்க..... என்ன செய்ய எல்லாம் விளம்பர உத்தி....

பதிவு உங்களை ரொம்ப பாதிச்சிடுச்சோ..:D

நன்றி அன்பு தாதா!

கண்மணி
24-11-2008, 10:33 AM
ஐயா ஒரு சந்தேகம்..

இந்தப் பெண் வண்டுகளில் ஆணினம் உண்டா?

அப்படி இருந்தா அதற்கு என்ன பெயர்?

:D :D :D

சிறுபிள்ளை
25-11-2008, 09:29 AM
ஐயா ஒரு சந்தேகம்..

இந்தப் பெண் வண்டுகளில் ஆணினம் உண்டா?

அப்படி இருந்தா அதற்கு என்ன பெயர்?

:D :D :D

நீங்க பொன்வண்டு பத்தி கேக்குறீங்களா?? சின்ன பிள்ளைகளா இருக்கும்போது மரத்திலிருந்து பிடிப்போமே அதுவா?

சிறுபிள்ளை

இளந்தமிழ்ச்செல்வன்
04-12-2009, 08:04 PM
மிக்க நன்றி முகிலன்.

சிறுவயதில் பார்த்திருந்தும் பலன் தெரியவில்லை. பின்னாளில் சில நிறுவனத்தார்கள் இதை விளக்கத்திற்க்காக காட்டியபோதும் பெரிதாய் தோன்றவில்லை.

உங்கள் புண்ணியத்தால் முழுதும் அறிந்தேன். நன்றி.

குணமதி
05-12-2009, 01:35 AM
அரிய செய்திகள்.

சுவையாகச் சொல்லி இருக்கிறீர்கள்