PDA

View Full Version : இன்னுமொரு உலாவி.



பாரதி
23-08-2008, 09:42 PM
Sleipnir

இண்டர்நெட் எக்ஸ்புளோரர், ஃபயர் ஃபாக்ஸ், ஓபரா, நெட்ஸ்கேப் போன்ற பல உலாவிகளை உபயோகித்திருப்பீர்கள் நண்பர்களே.

சமீபத்தில் Sleipnir (எப்படி உச்சரிப்பது...?!) என்ற உலாவி ஜப்பானில் தயாரிக்கப்பட்டு, வேகமாக மக்களைக் கவர்ந்து வருவதாக செய்திகள் வருகின்றன.

விண்டோஸ் 98க்கு பின்னர் தயாரிக்கப்பட்டு வெளிவந்த மைக்ரோசாஃப்ட்டின் எல்லா இயங்குதளங்குகளிலும் இயங்குமாம்.

தங்களுடைய விருப்பம் போல் திரையில் தோன்றக்கூடிய வர்ணத்தை மாற்றுவதற்கான மென்பொருள்களும் கிடைக்கின்றன.

நான் பதிவிறக்கி, நிறுவி சோதனை செய்து பார்த்தேன். இண்டர்நெட் எக்ஸ்புளோரரை விட வேகமாகத்தான் திறக்கிறது. தமிழ்மன்ற இணையத்தளத்தை பார்வையிடவும் எந்தப்பிரச்சினையுமில்லை. ஆனால் பதிவுகள் செய்ய முனையும் போது எழுத்துருக்கள் கொக்கிகளாகி விடுகின்றன...!

பயன்பாட்டிற்கு நன்றாகவே இருப்பதாகத்தோன்றுகிறது. நண்பர்கள் முயற்சித்துப்பார்க்க வேண்டுகிறேன்.

அதைப்பற்றி மேலும் அறியவும் பதிவிறக்கவும் விரும்புபவர்கள்
http://www.fenrir-inc.com/in/sleipnir/
சுட்டியைத்தட்டுங்கள்.

இளசு
23-08-2008, 09:44 PM
தேடல், சோதனை, முயற்சி, சோராமை,பகிர்தல், மாற்றங்களை ஏற்றல்,
மாற்று(க் கருத்து)களை திறந்த மனதுடன் அணுகல் = பாரதி!

உன் வல்லமை எனக்கும் அமையாதா என ஏங்கவைக்கிறாய்..


(அது சரி, இன்னும் உறங்கலையா????)

செல்வா
23-08-2008, 11:49 PM
தேடல், சோதனை, முயற்சி, சோராமை,பகிர்தல், மாற்றங்களை ஏற்றல்,
மாற்று(க் கருத்து)களை திறந்த மனதுடன் அணுகல் = பாரதி!

உன் வல்லமை எனக்கும் அமையாதா என ஏங்கவைக்கிறாய்..


(அது சரி, இன்னும் உறங்கலையா????)

:D:D:D:D:eek::eek::)

mukilan
24-08-2008, 12:51 AM
நானும் முயற்சி செய்து பார்த்து விடுகிறேன். தகவலுக்கு நன்றி அண்ணா.

ஓவியன்
24-08-2008, 02:16 AM
பகிர்வுக்கு நன்றி அண்ணா..!!

அப்பிள் நிறுவனத்தின் சஃபாரி உலாவி எனக்கு மிகப் பிடிக்கும், ஆனால் என்ன செய்ய அதன் வழி தமிழ் மன்றத்தில் தமிழ்ப் பதிவுகளை இட முடியவில்லை....

இங்கும் அதே பிரச்சினை எனும் போது, கவலையாக இருக்கிறது..!! :frown: