PDA

View Full Version : இந்தியாவில் ஐபோன்!-சென்னையில் உற்சாகம்!!ராஜா
23-08-2008, 02:42 PM
http://www.aol.in/tamil/img/2008/08/iphone250_22082008.jpg


சென்னை: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் இந்தியாவுக்கு வந்து விட்டது. பார்தி ஏர்டெல் நிறுவனமும், வோடோபோனும் ஐபோனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளன.

8 ஜிபி போனின் விலை ரூ. 31,000 என்றும், 16 ஜிபி வகை போன் ரூ. 36,000 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனைக்கு வந்துள்ளது. 19 ஆப்பிள் விற்பனையாளர்கள், ஏர் டெல் விற்பனை நிலையங்களில் இவற்றை வாங்கலாம். அதேபோல பார்தி, வோடோபோன் ஸ்டோர்களிலும் இவை விலைக்குக் கிடைக்கும்.

நள்ளிரவில் போன் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட பெரும் திரளானோர் போனை வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.

சென்னை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராப்த ஆகிய நகரங்களில் ஐபோன் கருவிகள் கிடைக்கும். நாளை முதல் 65 நகரங்களில் இந்த வகை போன்கள் விற்பனைக்கு வருகின்றன.

சமீப காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சாதனங்கள் பெருமளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. கள்ளச் சந்தையில் இவை விற்பனையில் இருந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நேரடியாக மார்க்கெட்டுக்கு வந்துள்ளது ஐபோன்.

மற்ற செல்போன்களில் இல்லாத பல சிறப்பு வசதிகள் ஐபோனில் உள்ளன. ஆனால் விலைதான் மிகவும் ஜாஸ்தியாக உள்ளது. இருப்பினும் படிப்படியாக இது குறையக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன.

ஐபோனுக்கு ஏர் டெல் நிறுவனம் 2 லட்சம் புக்கிங்களை பெற்றுள்ளது. 2 மாதங்களுக்கு முன்பே இத்தனை புக்கிங்குகளும் நடந்து முடிந்து விட்டன.

சென்னையில் உற்சாகம்:

சென்னையிலும் ஐபோனுக்கு செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளது. இது எதிர்பாராத பிரமாண்ட வரவேற்பு என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைமை செயலதிகாரி ராஜீவ் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் முன்பதிவு செய்துள்ள 2 லட்சம் பேரில் 60 சதவீதம் பேர் சென்னை உள்ளிட்ட நான்கு பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றார் அவர்.

ஜிபிஎஸ் மேப்பிங், அதி விரைவு வயர்லஸ் அக்சஸ், டெஸ்க்டாப் கிளாஸ் வெப் பிரவுசர், விரைவான டெளன்லோட், தெளிவான வீடியோ உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் இந்த ஐபோனுக்கு ஏக கிராக்கியாகியுள்ளது.

சென்னையில் நடந்த ஐபோன் தொடக்க விழாவில் ஆற்காடு நவாப் முகம்மது அலி ஆசிப் கலந்து கொண்டு பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடமிருந்து முதல் போனை வாங்கிக் கொண்டார். நடிகர் பிரசன்னாவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Source: Oneindia

ஷீ-நிசி
24-08-2008, 03:56 AM
இதன் கேமரா தரம் அவ்வளவு சரியில்லை என்பது பரவலான கருத்து!

தங்கவேல்
25-08-2008, 11:47 AM
இன்னும் சிறிது நாட்களில் போனிலேயே குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுவார்கள் போலும். இந்த செல்போன் தொல்லை இருக்கே , அதை எழுத ஆரம்பித்தால் சிந்துபாத் கதை மாதிரி தொடர்ந்து கொண்டே இருக்கும். வெறும் 2000 ரூபாய் செல்போனை 20,000 ரூபாய்க்கு விற்கும் விற்பனையாளர்கள் இந்தியாவில் உண்டு. அதை வாங்கி பெருமை அடித்துக் கொள்ளும் அடிமுட்டாள்களும் இங்கு உண்டு.

ஷீ-நிசி
25-08-2008, 12:48 PM
இன்னும் சிறிது நாட்களில் போனிலேயே குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுவார்கள் போலும். இந்த செல்போன் தொல்லை இருக்கே , அதை எழுத ஆரம்பித்தால் சிந்துபாத் கதை மாதிரி தொடர்ந்து கொண்டே இருக்கும். வெறும் 2000 ரூபாய் செல்போனை 20,000 ரூபாய்க்கு விற்கும் விற்பனையாளர்கள் இந்தியாவில் உண்டு. அதை வாங்கி பெருமை அடித்துக் கொள்ளும் அடிமுட்டாள்களும் இங்கு உண்டு.


அடிமுட்டாள்களின் கதைகளை கொஞ்சம் சொல்லுங்களேன்....
அப்படியே அந்த செல்போன் தொல்லைகளையும் சொல்லுங்கள்.. சிந்துபாத் கதை மாதிரி நீளுதானு பார்க்கலாம்... ஏன்னா சிந்துபாத் கதை செம புரூடானு எல்லாருக்கும் தெரியும்...

அறிஞர்
25-08-2008, 01:53 PM
தொழில் நுட்ப வளர்ச்சிகளில்.. இது ஒரு பெரிய மைல் கல்.

இங்கு போனின் விலை கிட்டத்தட்ட 350 டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ. 15000). இந்தியாவில் விலை வெகு அதிகம்.

இண்டர்நெட் பலரை அடிமையாக்கியுள்ளது போல.... ஐபோன் பலரை அடிமையாக்கும்...

ஐபோனில் கிறுக்கிக் கொண்டே இருப்பார்கள் பலர்.
10 நிமிடத்திற்கு ஒரு முறை மெயில் செக் பண்ணுவார்கள்.
கம்பெனி மீட்டிங்கில் ஒருவர் கத்திக்கொண்டிருப்பார். பலர் ஐபோனில் விளையாடிக்கொண்டிருப்பர்...

ஸ்டாக்கில் விளையாட உபயோகமானது.

தீபன்
26-08-2008, 04:38 AM
ஐ போன்... பொருத்தமான பெயர்... நான் போன்!
இன்றைய காலங்களில் நான் வேறு போன் வேறு இல்லை என்பதை சுட்டும் பெயர்..!

aren
26-08-2008, 05:09 AM
பிளாக்பெரி அளவிற்கு மின்னஞ்சல் வசதிகள் ஐபோனில் கிடையாது என்று சொல்கிறார்கள். எனக்கு என்னுடைய கணக்கிற்கு ஒரு போன் உடனே கொடுக்கிறார்கள். நான் இப்பொழுது வேண்டாம், விலை குறையட்டும் என்று சொல்லிவிட்டேன்.

ஆனால் விலை கொஞ்சம் அதிகம்தான். 50% விலை குறைந்தால் வாங்கமுடியும் என்று நினைக்கிறேன்.

அறிஞர்
26-08-2008, 03:31 PM
பிளாக்பெரி அளவிற்கு மின்னஞ்சல் வசதிகள் ஐபோனில் கிடையாது என்று சொல்கிறார்கள். எனக்கு என்னுடைய கணக்கிற்கு ஒரு போன் உடனே கொடுக்கிறார்கள். நான் இப்பொழுது வேண்டாம், விலை குறையட்டும் என்று சொல்லிவிட்டேன்.

ஆனால் விலை கொஞ்சம் அதிகம்தான். 50% விலை குறைந்தால் வாங்கமுடியும் என்று நினைக்கிறேன்.
பிளாக்பெரியை ஐபோன் சிறப்பானது.....

உங்க ஊரில் என்ன விலை....

இங்கு விலை குறைவுதான்...

ஓவியன்
27-08-2008, 02:15 AM
நொக்கியாவின் E வ்ரிசையிலான மாடல்களும், அழகாக இணைய வசதிகளை வழங்குகின்றன...

இருந்தாலும் ஐ-போனுக்கு ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது..!!

ராஜா
27-08-2008, 04:28 AM
இங்கு விலை குறைவுதான்...
எங்களுக்கு வாங்கி அனுப்புங்க அறிஞரே.. (உங்க செலவுல..!)

அறிஞர்
27-08-2008, 08:21 PM
எங்களுக்கு வாங்கி அனுப்புங்க அறிஞரே.. (உங்க செலவுல..!)
தனி மடலில் ஒருத்தர் கேட்டுவிட்டார்...

பேசாம... தனி வியாபாரத்தை உங்க முதலில் தொடங்கிவிடலாமா என யோசிக்கிறேன்.

ஷீ-நிசி
28-08-2008, 12:02 AM
தனி மடலில் ஒருத்தர் கேட்டுவிட்டார்...

பேசாம... தனி வியாபாரத்தை உங்க முதலில் தொடங்கிவிடலாமா என யோசிக்கிறேன்.

கூட்டி கழிச்சி பாருங்க அறிஞரே! கணக்கு சரியா வந்தா தட்டி விடுங்க! :icon_b:

உதயசூரியன்
28-08-2008, 04:26 AM
நான் இரண்டு அதிகமான வசதிகள் கொண்ட போன் வாங்கி உபயோகித்தேன்..
ஆனால் அதில் பல பிரச்சினைகள்.. அப்புறம் தான் முடிவு பண்ணேன்.. தற்போது.. நோக்கியாவின் இந்திய தயாரிப்பை பேச மட்டும் பயன் படும்.. சிரிய போனை வைத்துல்லேன்.. கொஞ்சம் நிம்மதியாக உறங்குகிறேன்..
கொஞ்சம் பார்துட்டு தரேன் என்பவர்கள் கூட என் பக்கம் இல்லை..
..
ம்ம்ம்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அறிஞர்
28-08-2008, 03:52 PM
புதிய ஐபோனை இன்று உபயோகித்து பார்த்தேன்...

நன்றாக உள்ளது... ஆனால் சிறு சிறு குறைகள் உள்ளது..

ஜிபிஎஸ் சிஸ்டத்தில் திசையை சொல்லும் சத்தம் இல்லை (No voice).

Notepadல் டைப் வசதி உள்ளது.. எழுதும் வசதி இல்லை... (பேனா வைத்து கிறுக்குவது போல்)....

hotmail ஆக்ஸஸ் பண்ண இயலவில்லை (ஜிமெயில், யாகூ ஓகே)

கூகுள் தேடுதல் 0.22 செகண்டில் கண்டுபிடித்தது....

Youtube நன்றாக வேலை செய்தது....

இன்னும் பல பல வசதிகள்...
வெட்பநிலை....
ஸ்டாக் மார்க்கெட்......

ஷீ-நிசி
30-08-2008, 02:14 AM
http://www.gametrailers.com/player/usermovies/73353.html

http://in.youtube.com/watch?v=YgW7or1TuFk

வீடியோ இங்கே ப்ளே ஆகவைக்க முடியவில்லையே?!

அறிஞர்
02-09-2008, 03:39 PM
http://www.gametrailers.com/player/usermovies/73353.html

http://in.youtube.com/watch?v=YgW7or1TuFk

வீடியோ இங்கே ப்ளே ஆகவைக்க முடியவில்லையே?!
இன்னும் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது.. விரைவில் சரி செய்யப்படும்.