PDA

View Full Version : அவை எனக்கான தருணங்கள்..!



வசீகரன்
23-08-2008, 10:51 AM
அந்தி வேளை ஒன்றில்..
ஆரவாரங்கள்
அண்டாத நீர்ப்பரப்பு ஒன்றின்
கரையில்ஆழ்ந்த அமைதியை மட்டும்
அருங்கே கொண்டு
நான் அமர்ந்திருந்தேன்.,

பார்வை நீர்ப்பரப்பின் மீது
நிலை குத்தி இருந்தது...
எண்ணங்கள் எங்கோ..
நிலைப்பெற்றிருந்தது..

இதே நதிக்கரையில் ஒரு
தருணத்தில்.. என்னை
இழந்திருக்கிறேன் அவள் காதலில்..!

தன்னை மறந்திருக்கிறேன்...
அவள் புன்னகையில்...

நேர பொழுதுகள்
அந்த நதியின் நீரோடு நீராக..
நிறைய கரைந்திருக்கிறது...,

அப்பொழுதெல்லாம்
தென்றல் அற்புதமாக உடன்
இருந்து உள்ளம் நிறைத்திருக்கிறது...

வானப் பிரதேசம் பரபரப்பான
உலகத்தை எங்களைவிட்டு
எங்கோ தள்ளி
வைத்து..கவிதையான
காலநிலையை மட்டும் எங்களுடன்
இணைத்திருந்தது...

அந்த நேரங்கள் நிரம்ப அழகானவை.!

அவை எப்போதும் நான் என்னை
கரைந்த பொழுதுகளில்
மட்டும் என்னுடன் இருக்கும்.,

ஒரு மழை நேர ரயில் பயணத்தில்
ஜன்னலோரம் பார்வையை
பதித்திருந்த பொழுது...

நண்பன் ஒருவனுடன் பின்னிரவை
தாண்டிய ஒரு அமைதியான
இரவு பொழுதில்
மனம் விட்டு பேசிக்கொண்டிருந்த
ஒரு தொலைபேசி உரையாடலின் போது...

ஆழ்ந்த உறக்கம் ஒன்றில்
கனவில் நான் எங்கோ என்னை
கரைந்திருந்த போது...

நிறைய தடவை காதல் கவிதைகள்
எழுதும்போது..!

இப்போது இந்த நதியின் கரையில்
தனிமையில் அமர்ந்திருக்கும் போது,

இன்னும் சில தருணங்களில்..!

அவை எனக்கான தருணங்கள்...

அவை எனக்கு எப்போது கிடைத்தாலும்
நான் ஆத்மார்த்தமாக அதனுடன்
கரைகிறேன்.,

பிச்சி
23-08-2008, 10:59 AM
இதமாக இருக்கிறது.. இனம் புரியாத உணர்வை என்னுள் ஏற்படுத்துகிறது.

கவிதை மிகுந்த அழகு படைத்தது.

அன்புடன்
பிச்சி

சிவா.ஜி
23-08-2008, 11:27 AM
கவிதை அழகில், எழுத்துப்பிழை கற்கள் இடறுவது சங்கடமாக இருக்கிறது வசீ. அந்தி வேளை...'வேலை' யானதும், அருகே...'அருங்கே' ஆனதும், பிழையாகவும்,என்னைக் கரைகிறேன்...என்பது என்னைக் "கரைக்கிறேன்" என்று வரவேண்டுமோ? அர்த்த வேறுபாடு் இருப்பது தெரிகிறது. இடைப்பட்ட பத்திகள் மிக அருமை. வாழ்த்துகள் வசீ.

தீபா
23-08-2008, 11:32 AM
அப்பொழுதெல்லாம்
தென்றல் அற்புதமாக உடன்
இருந்து உள்ளம் நிறைத்திருக்கிறது...

,

யாரு நானுங்களா? :D

வசீகரன்
23-08-2008, 11:42 AM
இதமாக இருக்கிறது.. இனம் புரியாத உணர்வை என்னுள் ஏற்படுத்துகிறது.

கவிதை மிகுந்த அழகு படைத்தது.

அன்புடன்
பிச்சி

மிக்க நன்றி பிச்சி... காதல், அழகு, மென்மை., சோலை.. ரம்மியம்..
இதெல்லாம் நாம் வாழ்க்கையில் இணை பிரியா ஒன்று..
இவையை வைத்து கவிதை எழுதினால் மனதிற்க்கும் இதமாக இருக்கிறது..!

வசீகரன்
23-08-2008, 11:47 AM
சிவாண்ணா.. திருத்திவிட்டேன் இப்போது பாருங்கள்..
ஆனால் சிவா அண்ணா.. அருங்கே என்பது அருகே என்பதின் இலக்கண சொல் என நினைக்கிறேன்
அதனால் தான் மாற்றவில்லை... இல்லை என்றால் சொல்லுங்கள் மாற்றி விடுகிறேன்..
அதேபோல் கரைக்கிறேன் என்பது மிக அழுத்தமாக இருக்கிறது என்பதால் அதை உபயோக
படுத்தவில்லை.. சரியா என பார்த்து சொல்லுங்கள் அண்ணா..

வசீகரன்
23-08-2008, 11:50 AM
யாரு நானுங்களா? :D

ஹா.. ஹா... நீங்கள்தானா அந்த தென்றல்...

தீபா
23-08-2008, 12:01 PM
ஹா.. ஹா... நீங்கள்தானா அந்த தென்றல்...

நானேதான்.. உங்கள் கவிதை அருமை.

சிவா.ஜி
23-08-2008, 12:03 PM
அருகே மற்றும் அருங்கே ஒரே சொல்லா என்பதில் எனக்கு சந்தேகமே. அதே போல என்னைக் கரைக்கிறேன் என்பது நான் கரைகிறேன் என்று வரலாம். ஆனால் என்னை கரைகிறேன் என்பது சரியல்ல என்றே நினைக்கிறேன். ஆதி, ஆதவா, அல்லது தாமரைதான் சொல்ல வேண்டும். சொல்லுங்க மக்கா...நாமளும் தெரிஞ்சிக்குவோமில்ல....

தீபா
23-08-2008, 12:28 PM
அருங்கே = அருகே!

சிவா.ஜி
23-08-2008, 01:57 PM
நன்றி தென்றல்.

ஷீ-நிசி
23-08-2008, 02:13 PM
மிக நல்ல கரு! மனம் அப்படியே அமைதியாகிறது அந்த சூழ்நிலையை நினைத்துப் பார்க்கையில்..

வசீகரன்.. இன்னும் நீங்கள் இந்த சிற்பத்தை செதுக்கியருக்கலாம் என்பது என் கருத்து... இப்பொழுது அழகாயிருக்கிறது... இன்னும் அழகாய் உருப்பெற்றிருக்கும்!

வாழ்த்துக்கள்!

சுகந்தப்ரீதன்
15-09-2008, 03:55 AM
கலக்கிட்டடா வசீ.. மனசையும் உணர்வையும்..!!

உனக்கான தருணங்கள் உனக்காக எப்போதும் காத்துக்கிடக்கும்..!!

வாழ்த்துக்கள்...மாப்ப்பு..!!

lolluvathiyar
25-09-2008, 08:30 AM
கவிதை நன்றாக இருக்கிறது உங்களுக்கான தருனங்கள் அவற்றை யாராலும் பிரிக்க முடியாது. வரிகள் அருமை.