PDA

View Full Version : கிங் சாஃப்ட் ஆபிஸ் 2007பாரதி
22-08-2008, 09:13 PM
கிங்சாஃப்ட் ஆஃபிஸ் 2007 - KingSoft Office 2007

அன்பு நண்பர்களே,

மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸை (Microsoft Office) பலரும் உபயோகித்து வருகிறோம் அல்லவா..? சிலர் அந்த மென்பொருளை நேரடியாக வாங்காமல் பிற நண்பர்களிடமிருந்து பெற்ற குறுவட்டைக் கொண்டு நமது கணினியில் நிறுவி இருக்கக்கூடும்.

அங்ஙனம் செய்யாமல் முழுவதும் இலவசமாக கிடைக்கக்கூடிய மென்பொருளான ஓபன் ஆஃபிஸை http://download.openoffice.org/ சுட்டியில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவி இருப்பவர்களும் உண்டு. இந்த மென்பொருளும் மிகச்சிறப்பான ஒன்றுதான் என்றாலும், மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் தொகுப்பை உபயோகித்தவர்களில் சிலருக்கு சிரமம் இருப்பதை அறிந்திருந்திருக்கிறேன்.

இன்று மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் மென்பொருளுக்கு மாற்றாக இருக்கக்கூடிய இன்னொரு மென்பொருள் கிங்சாஃப்ட் ஆஃபிஸ் 2007 - KingSoft Office 2007 பற்றி படித்தேன். இந்த மென்பொருள் அப்படியே அச்சு அசலாக மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸை போலவே இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் அறிந்தவர்கள் புதிதாக எதையும் கற்காமலேயே இந்த மென்பொருளை கையாள முடியும்.

இதில் கிங் சாஃப்ட் ரைட்டர், கிங்சாஃப்ட் ஸ்ப்ரெட்ஷீட், கிங்சாஃப்ட் பிரசெண்டேஷன் (Kingsoft Writer, Kingsoft Spreadsheets Kingsoft Presentation) ஆகியவை மட்டுமே உள்ளன. இவை முறையே மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் உள்ள வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாயிண்ட் (equivalent to Word, Excel and PowerPoint) ஆகியவற்றிற்கு இணையானவை.

இந்த மென்பொருள் மைக்ரோசாஃப்ட் மற்றும் ஓபன் ஆஃபிஸ் மென்பொருட்களில் உண்டாக்கப்பட்ட கோப்புகளை எந்தவித சிரமமுமின்றி கையாளும்.
மேலும் ஓபன் ஆஃபிஸ் போலவே உண்டாக்கிய கோப்புகளை நேரடியாக பி.டி.எஃப் கோப்புகளாக மாற்றி சேமிக்கவும் முடியும்!

இந்த மென்பொருளைக் குறித்து மேற்கொண்டு விபரங்கள் அறிய
http://kingsoft-office.en.softonic.com/
சுட்டியைத் தட்டுங்கள்.

முதலில் வியட்நாம் மற்றும் சீனாவில் இந்த மென்பொருள் முழுவதும் இலவசமாக வெளியிடப்பட்டதாக ஒரு வலைப்பூவில் படித்தேன். அந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வலைப்பூவில் தந்த சுட்டிகளை கீழே இணைத்துள்ளேன்.
பதிவிறக்கம் செய்ய
http://depositfiles.com/en/files/6554876 அல்லது
http://phanmem.dec.vn/ProductDetails.aspx?ProductID=23
சுட்டியைத்தட்டுங்கள்.

நானும் இந்த மென்பொருளை பதிவிறக்கிக் கொண்டிருக்கிறேன். இதை அறிந்தவர்களும் உபயோகிப்பவர்களும் இருப்பீர்களேயானால் அதைக்குறித்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள். நிறைகுறைகள் தெரியுமாயின் மன்ற உறவுகளுக்கு உதவியாக இருக்கக்கூடும்.

அமரன்
22-08-2008, 09:53 PM
மிக்க நன்றி அண்ணா...
பதிவிறக்கிக் கொண்டு இருக்கின்றேன். பயன்படுத்திய பின்னர் பகிர்ந்துகொள்கின்றேன்..

ஷீ-நிசி
23-08-2008, 01:35 AM
தகவலுக்கு நன்றி பாரதி அவர்களே!

சிவா.ஜி
23-08-2008, 04:18 AM
இதை நிறுவுவதால் நிறைய இடத்தை சேமிக்கலாமெனத் தோன்றுகிறது. வெறும் 45 MB மட்டுமே உள்ளதால் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது. பகிர்வுக்கு நன்றி பாரதி. உபயோகித்துப் பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன்.

poornima
23-08-2008, 05:56 AM
நல்ல தகவல். எனக்கென்னவோ ஆஃபீஸ் 2003 வரை தந்த எம்.எஸ்.ஆபீஸ் பயன்பாடுகள் 2007 - ல் திருப்தி தரவேயில்லை. ஒரே படம் காட்டுதலுக்கு மட்டும் குறைவில்லாமல் இருக்கிறது

இளசு
23-08-2008, 07:33 AM
நல்லதைக் கண்டால் உடன் மன்றம் வந்து பகிரும் பாரதியின் இப்பண்பு
என்றும் என்னை வியப்பில் ஆழ்த்தத் தவறியதில்லை!

இன்றும்...!

பாராட்டுகள் பாரதி!

leomohan
23-08-2008, 08:27 AM
பயனுள்ள தகவல். சுவையானதும் கூட. தனி மனிதனுக்கு மென்பொருட்கள் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதை ஆதரிப்பவன் நான்.

ஆனாலும் மைக்ரோசாப்டின் தாக்கத்திலிருந்து வெளிபட முடியாமல் இருப்பவர்கள் பலர்.

பல மாற்று மென்பொருட்கள் வந்தாலும் பயனர் இடைமுகத்தில் மைக்ரோசாப்ட் எப்போதுமே முதலிடம் தான்.

இந்த மாதிரி பல மென்பொருட்கள் வந்தால் நல்லதே.

நன்றி அண்ணா.

praveen
23-08-2008, 11:41 AM
இந்த மென்பொருள் பதிய வேண்டுமென்றால் சீரியல் எண் கொடுத்தால் முழுப்பதிபபு அல்லது சோதனை பதிப்பாக தான் பதிப்பேன் என்கிறதே, இலவசம் என்று சொல்வதெல்லாம் வியபார தந்திரத்திற்காக அந்த மென்பொருள் நிறுவனம் சொல்லும் வார்த்தையா?.

நான் விடுவேனா?, அந்த சீரியல் நம்பரை கண்டு பிடித்து பதிந்தும் விட்டேன். ஆனால் இதில் சில பிழைகள் உள்ளதாக தெரிகிறது. நான் விண்டோஸ் 2000 SP4 உபயோகிக்கிறேன். (ஆனால் இந்த மென்பொருள் விண்டோஸ் 98 கூட வேலை செய்யும் என்று கண்டேன்).

அதாவது இந்த அப்ளிகேசனை (உதாரணத்திற்கு ஸ்பிரட்ஸீட் என்பதை) இயக்கி அதன் மூலம் புதிதாக செய்ய முடிகிறதே அன்றி, முன்னரே உள்ள ஒரு எக்ஸல் பைலை திறக்க முடிவதில்லை. ஓப்பன் என்ற மெனுவை அழுத்தி அழுத்தி பார்த்தால் அந்த விண்டோவே திறக்க மாட்டேன்கிறது. சரி எக்ஸ்புளேரரில் சென்று ஓப்பன் வித் என்று இந்த அப்ளிகேசன் பெயரை கொடுத்து திறக்கலாம் என்று கொடுத்தால் தான் முடிகிறது.

இதன் பெயர் 2007 என்றிருப்பதால் இது ஆபிஸ் 2007 பைல்களை திறந்திடும் என்று பார்த்தால், ஏமாற்றமே.

யுனிகோடும் முழுதாக சப்போர்ட் செய்வதில்லை போல தெரிகிறது, எழுத்துக்கள் தேவையில்லாமல் இடைவெளி விட்டு காட்சியளிக்கிறது

அதற்கு மேல் இதனை சோதிக்க மனதில்லை, விட்டு விட்டேன்.

பாரதி
23-08-2008, 09:14 PM
கருத்துக்களுக்கு மிக்க நன்றி அமரன், ஷீ-நிசி,சிவா, பூர்ணிமா, அண்ணா, மோகன், பிரவீண்.

அன்பு பிரவீண்,

நான் கொடுத்த சுட்டிகளில் இருந்து பதிவிறக்கிய கிங்சாஃப்ட் ஆபிஸ் மென்பொருளை எனது கணினியில் நிறுவும் போது வரிசை
எண் எதுவும் கேட்கவில்லையே...?!

முன்னரே இருந்த ஸ்ப்ரெட்ஷீட் கோப்புகளையும் வழக்கம் போல திறக்க முடிகிறது. எந்த பிரச்சினையும் இல்லை. (உங்கள் கணினியில் ஒரு வேளை default..ஆக மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் இருந்திருக்கும் என எண்ணுகிறேன்.)

என்னிடம் 2007 இல்லாததால் அவ்வகை கோப்புகளை திறப்பது குறித்து தெரியவில்லை.

யுனிக்கோடில் தமிழ் - நீங்கள் கூறி இருப்பவை சரி. எழுத்துருப் பகுதியில் நாம் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருக்குமா என பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

praveen
24-08-2008, 03:44 AM
அன்பு பிரவீண்,

நான் கொடுத்த சுட்டிகளில் இருந்து பதிவிறக்கிய கிங்சாஃப்ட் ஆபிஸ் மென்பொருளை எனது கணினியில் நிறுவும் போது வரிசை
எண் எதுவும் கேட்கவில்லையே...?!

நான் நீங்கள் கொடுத்த சுட்டியில் பதிவிறக்கவில்லை, கீழே உள்ள அவர்கள் அபிசியல் சுட்டியில் இருந்து பதிவிறக்கினேன். அதில் பதிவிறக்கியவர் 2 & 3 கருத்தை இறுதியில் பாருங்கள்.
http://kingsoft-office.en.softonic.com/முன்னரே இருந்த ஸ்ப்ரெட்ஷீட் கோப்புகளையும் வழக்கம் போல திறக்க முடிகிறது. எந்த பிரச்சினையும் இல்லை. (உங்கள் கணினியில் ஒரு வேளை default..ஆக மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் இருந்திருக்கும் என எண்ணுகிறேன்.)
என்னை ஆரம்பநிலை கம்ப்யூட்டர் பயனாளர் என்று நினைத்து கொண்டீர்கள் :)

நான் சொல்வது ஸ்பிரட்சீட் புரோகிராமை திறந்து கொண்டு பின்னர் அதில் பைல் மெனுவில் உள்ள ஒப்பன் என்பதை அழுத்தினால் பிரவுஸ் என்று ஒரு விண்டோ வருமே அதையே காணோம் (வர மாட்டேன்கிறது)என்கிறேன்.

மற்ற நண்பர்கள் யாரும் உபயோகிக்க வில்லையா?. பாரதி சொல்கேட்டு செய்து பார்த்தவன் நான் மட்டும் தான் போல :)

பாரதி
24-08-2008, 05:55 AM
கிங்சாஃப்ட் ஆபிஸ் பற்றி தெரிந்துகொள்ள மட்டுமே http://kingsoft-office.en.softonic.com/ (http://kingsoft-office.en.softonic.com/) சுட்டியைக்கொடுத்தேன். அதில் இருந்து பதிவிறக்கினால் குறிப்பிட்ட காலம் மட்டுமே இலவசமாக வேலை செய்யும் என அங்கேயே குறிப்பிட்டு இருந்த காரணத்தால் மேலும் இதைக்குறித்து இணையத்தில் தேடினேன்.

வியட்நாம் சுட்டியில் இருந்து பதிவிறக்கிய மென்பொருளை நிறுவ வரிசை எண் எதுவும் தேவை இல்லை என்பதைக் குறித்து பல வலைப்பூக்களிலும், இதர இணையத்தளங்களிலும் படித்தபின்னர்தான் பதிவிறக்கம் செய்ய வேண்டிய சுட்டிகளை நான் இணைத்தேன்.

மறுபடியும் நீங்கள் கூறியபடி ஸ்ப்ரெட்ஷீட் திறந்து பார்த்தேன். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதில் உள்ள ஃபைல் மெனுவின் மூலமும் எக்ஸெல் கோப்புகளைத் திறக்க முடிகிறது.

வேண்டுகோளை ஏற்று பதிவிறக்கி, நிறுவி சந்தேகங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பிரவீண்.

உங்களை நான் நன்கறிவேன் நண்பரே. நான் என்றுமே உங்களை நீங்கள் குறிப்பிட்டது போல எண்ணியது கிடையாது. உங்கள் வேலைப்பளுவிற்கிடையிலும் தமிழ்மன்றத்தில் கணினிப்பகுதியில் நண்பர்களுக்கு ஏற்படும் எண்ணற்ற சந்தேகங்ளை தீர்த்து வைக்கும் உங்களின் அரிய பணியை மறந்தால் நான் நன்றி மறந்தவனாவேன்.

என் எழுத்துக்கள் உங்களை காயப்படுத்தியிருப்பதாக நீங்கள் கருதினால் மன்னிக்க வேண்டுகிறேன்.

சூரியன்
24-08-2008, 06:18 AM
நல்ல தகவல் பகிந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா.

மன்மதன்
24-08-2008, 07:02 AM
பகிர்தலுக்கு நன்றி பாரதி..

praveen
24-08-2008, 07:24 AM
மறுபடியும் நீங்கள் கூறியபடி ஸ்ப்ரெட்ஷீட் திறந்து பார்த்தேன். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதில் உள்ள ஃபைல் மெனுவின் மூலமும் எக்ஸெல் கோப்புகளைத் திறக்க முடிகிறது.

வேண்டுகோளை ஏற்று பதிவிறக்கி, நிறுவி சந்தேகங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பிரவீண்.

என் எழுத்துக்கள் உங்களை காயப்படுத்தியிருப்பதாக நீங்கள் கருதினால் மன்னிக்க வேண்டுகிறேன்.

நான் மன்றத்து நண்பர்கள் யாருடனும் கருத்து வேறுபாடு கொண்டதில்லை. இந்த திரியில் நீங்கள் வருந்தும் படி எனது பதிவு அமைந்து விட்டதால் உண்மையிலே வருந்துகிறேன். மற்றபடி இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த பகுதியில் சில தகவல்/இலவச மென்பொருள் தரப்பார்க்கிறேன்.

பாரதி
24-08-2008, 09:00 PM
நன்றி சூரியன், மன்மதன்.

புரிந்துகொண்டதற்கு நன்றி பிரவீண்.

sownthar
26-08-2008, 08:07 AM
அருமையான தகவல்.........

பாரதி
26-08-2008, 10:56 AM
மேலே குறிப்பிட்ட தளத்தில் இருந்து சோதனைப்பதிப்பை பதிவிறக்கி நிறுவிய நண்பர்கள் கிங்சாஃப்ட் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி வரிசை எண்ணைப் பெற்று முழுமையாக உபயோகிக்கலாம்.

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: freelicense@kingsoftresearch.com

மின்னஞ்சல் பொருளடக்கத்தில் தரவேண்டியது: Request for free genuine seial key for kingsoft office 2007

நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு அவர்கள் இரு தினங்களில் வரிசை எண்ணுடன் பதில் தந்துள்ளார்கள். தேவைப்படுவோர் முயற்சித்துப்பாருங்கள்.

நன்றி.