PDA

View Full Version : நாய் வாங்கினான்..



ஆதி
22-08-2008, 08:43 PM
வளர்க்க நாய்
வாங்கினான் குமார்..

நாற்புறம் இருந்தும்
குழுமினர் திரண்ட
குடும்பத்தார்..

வாய் கறுப்பாய் இருப்பது
வீட்டுக்கு நல்லதென்றாள்
பாட்டி..

நெடிய கால்களொடு
ஐவிரல் இருத்தலால்
நல்ரக நாயென்றார் அப்பா..

முட்டைகோஸ் போன்ற
மென்காது பற்றி தூக்க
கத்தியதால்
சுரணை அதிகமென்றாள்
அக்கா..

சுருட்டை வாலுடையதால்
முரட்டு நாயாக வருமென்றாள்
அம்மா..

குவிந்த இதழ்களால்
ஜு ஜுவென ஒலித்து
தலைதடவி
ஷே கன் கொடு
ஷே கன் கொடு என்று
விளையாடினான் தம்பி..

சற்று நேரத்திற்கெலாம்
அவரவர் பணிக்கு
அனைவரும் மீள
பசித்த வயிறொடு
பால்கணியில் கட்டப்பட்டு
நின்றிருந்தது நாய்..

அனாதையாய்.

அக்னி
23-08-2008, 12:43 AM
நமது செல்லப் பிராணிகள்,
சொல்ல முடிந்தால்,
சோகம் சொல்லுமா...
சுகம் சொல்லுமா...

பாராட்டுக்கள் ஆதி...

நாய் வாங்கினான்...
யார் வாங்கினான்?
(கவிதையில் வந்த) குமார் வாங்கினான்.
அப்போ... அப்போ... :icon_shades:

ஷீ-நிசி
23-08-2008, 01:04 AM
சற்று நேரத்திற்கெலாம்
அவரவர் பணிக்கு
அனைவரும் மீள
பசித்த வயிறொடு
பால்கணியில் கட்டப்பட்டு
நின்றிருந்தது நாய்..

அனாதையாய்.


பல வீடுகளில்,
தாய்களும் கண்டுகொள்ளபடுவதில்லை!

ஓவியன்
23-08-2008, 02:06 AM
பல வீடுகளில் நாய்களுக்கு மட்டுமில்லை,
சில நல்ல உள்ளங்களுக்கும் இந்த நிலைதான்...!!

பாரட்டுக்களும் வாழ்த்துக்களும் ஆதி..!! :)

சிவா.ஜி
23-08-2008, 04:22 AM
நாயின் அங்கலட்சணம் பார்த்தவர்கள், அதனை பராமரிக்க மறந்தது வேதனை. வீட்டுக்குப் புதிதாக வரும் மருமகள்களும் சில நேரங்களில் இப்படி பால்கனிக்கு பதில் சமயலறைக்குள் சிறை வைக்கப்பட்டுவிடுகிறார்கள். பன்முக சிந்தனையை தெளிக்கும் கவிதை. வழங்கிய ஆதிக்கு பாராட்டுகள்.

shibly591
23-08-2008, 05:19 AM
சற்று நேரத்திற்கெலாம்
அவரவர் பணிக்கு
அனைவரும் மீள
பசித்த வயிறொடு
பால்கணியில் கட்டப்பட்டு
நின்றிருந்தது நாய்..

அனாதையாய்.

இதை ஒரு குறியீட்டுக்கவிதையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்...

ஒன்றை முதலில் பெறும்போது இருக்கும் அக்கறை கடைசியில் அலட்சியமாகப்போகிறது என்கிற மாபெரும் தத்துவம் இந்தக்கவிதையில் வெகு இயல்பாக பொதிந்துள்ளது...

வாழ்த்துக்கள் ஆதி..பிரமாதம்...

தீபா
23-08-2008, 06:08 AM
பெரும்வானம் பிரண்டு அழுததில் ஜீவனிரண்டு ஒதுங்கியது. கொட்டிய நீரில் நழுவிய நாணமாய் குதித்தெழ, சற்றைக்கெல்லாம் சிரித்தது வானம். ஏன் சிரித்தாய் என்று கேட்கவில்லை ஜீவனிரண்டு. என்ன செய்தது தெரியுமா?

மழையில் புரண்ட நொடிகளை அங்கேயே அவிழ்த்துவிட்டது.

அவரவர் வாழ்வு அவரவர்க்கு ஆதி. இடைநுழைந்து இழைந்தோட ஈரம் இருப்பதாகத் தெரியவில்லை.

சட்டெனப் பொட்டில் அறைந்தவாரு சொன்ன ஷீ-நிசி, மொத்த கவிதைக்கான வலியை ஒற்றை வார்த்தையில் பிளந்து விட்டார்.

பாராட்டுக்கள் இருவருக்கும்..

poornima
23-08-2008, 06:10 AM
நண்பர் ஆதி அவர்களுக்கு..

என் தாழ்மையான சிறு குறிப்பு இக்கவிதை பற்றி...

கவிதைகளில் பெயர் குறிப்பிடலாகாது என்று எழுதப்படாத ஒரு விதி
இருக்கிறது.பெயர் குறிப்பிட ஒரு சிறுகதை தோற்றம் பெற்றுவிட்டது
இக்கவிதை..

வளர்க்க நாய் வாங்கி பால்கணியில் கட்டிப் போட்டு என்பது வீண் பெருமையையே
குறிக்கிறது.ஷீப்லி சொன்னது போல் இதை ஒரு குறியீட்டுக் கவிதையாகக்
கூட எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்சுவதும் குணாதிசயங்களை எடைபோடுவதுடன் முடித்துக் கொள்கிறார்கள்
நாய்களுடனான தம் உறவை.. இந்த ஒரு பகுதி மட்டும் ஷீ நிசி சொன்ன "பல வீடுகளில் தாயும் கண்டுக்கொள்ளப்படுவதில்லை" என்ற உண்மையை பளாரென்று
அறைந்து சொன்னது போல் இருந்தது..

வளர்ப்பு பிராணிகள் குணம் மாறுவதில்லை.ஆனால் வளர்க்கும் நாம் நல்ல மூடில்
வீடு நுழைந்தால் கொஞ்சுவோம்.சரியில்லை எனில் சீ போ நாயே என எட்டி உதைப்போம்.இரண்டையும் அதனால் புரிந்து கொள்ள முடிவதில்லை..

இன்னும் என்னன்னவோ சொல்ல வருகிறேன்.. முடியவில்லை.பாராட்டுகள் ஆதி

தீபா
23-08-2008, 06:14 AM
நண்பர் ஆதி அவர்களுக்கு..

என் தாழ்மையான சிறு குறிப்பு இக்கவிதை பற்றி...

கவிதைகளில் பெயர் குறிப்பிடலாகாது என்று எழுதப்படாத ஒரு விதி
இருக்கிறது.பெயர் குறிப்பிட ஒரு சிறுகதை தோற்றம் பெற்றுவிட்டது
இக்கவிதை..

வளர்க்க நாய் வாங்கி பால்கணியில் கட்டிப் போட்டு என்பது வீண் பெருமையையே
குறிக்கிறது.ஷீப்லி சொன்னது போல் இதை ஒரு குறியீட்டுக் கவிதையாகக்
கூட எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்சுவதும் குணாதிசயங்களை எடைபோடுவதுடன் முடித்துக் கொள்கிறார்கள்
நாய்களுடனான தம் உறவை.. இந்த ஒரு பகுதி மட்டும் ஷீ நிசி சொன்ன "பல வீடுகளில் தாயும் கண்டுக்கொள்ளப்படுவதில்லை" என்ற உண்மையை பளாரென்று
அறைந்து சொன்னது போல் இருந்தது..

வளர்ப்பு பிராணிகள் குணம் மாறுவதில்லை.ஆனால் வளர்க்கும் நாம் நல்ல மூடில்
வீடு நுழைந்தால் கொஞ்சுவோம்.சரியில்லை எனில் சீ போ நாயே என எட்டி உதைப்போம்.இரண்டையும் அதனால் புரிந்து கொள்ள முடிவதில்லை..

இன்னும் என்னன்னவோ சொல்ல வருகிறேன்.. முடியவில்லை.பாராட்டுகள் ஆதி

அட சகோதரி... என்னே ஒற்றுமை இருவருக்குள்ளும்.. :icon_b:

poornima
23-08-2008, 06:26 AM
அட ஆமால்ல உங்க பதிவிலயும் சொல்லியிருக்கீங்க.. நன்றி தென்றல்

ஆதி
23-08-2008, 06:57 AM
பூர்ணிமா, பெயர் குறிப்பிட்டு கவிதை எழுதல் எனும் பழக்கம் 10 ஆண்டுக்கு முன்பே கவிதையில் நுழைந்துவிட்டன.. கவிதையில் ஏன் பெயர் க்குறிப்பிடுவதில்லை என்றால் வாசன் மூன்றாம் நபரை கவிதையில் பாராமல் தன்னை தானே பார்க்க வேண்டும் என்பதால்தான்.. ஆனால் நவீனங்கள் இதையும் உடைத்துவிட்டனவே..

உண்மையில் இந்த கவிதை நாய் வளர்ப்பதைப் பற்றியன்று இது ஒரு குறியீட்டு கவிதைதான்.. இந்த கவிதையை பொருத்த மட்டில் நான் இதைதான் குறிவைத்து எழுதினேன் என்று சொல்வதற்கில்லை.. அன்றாட வாழ்வின் ஆயிரமாயொரம் சம்பவங்கள் செயல்கள் அடக்கம்.. தேடிப்பார்த்தால் முகம் காணலாம்..

poornima
23-08-2008, 07:03 AM
நன்றி ஆதி. இது கண்டிப்பாய் நாய் பற்றிய கவிதை அல்ல என்பதை நான் அறிவேன். புரிதலுக்கு மீண்டும் நன்றி

சாலைஜெயராமன்
23-08-2008, 07:13 AM
. அன்றாட வாழ்வின் ஆயிரமாயொரம் சம்பவங்கள் செயல்கள் அடக்கம்.. தேடிப்பார்த்தால் முகம் காணலாம்..

உண்மைதான் ஆதி. வீ்ட்டு வேலைக்காக நம் நாட்டு அன்னைமார்கள் அந்நிய மண்ணுக்கு புலம் பெயரும் காலங்களில் அவர்களின் தகுதியை எடைபோட்டு அனுப்பும் இடைத்தரகர்கள், அப்பெண்மணிகளை அடிமைகொள்ளும் அரபு ஷேக்குகள் மற்றும் பெரியதனக்காரர்கள் அனைவரும் நம் தாய்க் குலத்தைப் படுத்தும் பாடு வெளிநாட்டில் வாழும் அனைவரும் அறிந்திருக்கக் கூடும். அப்படிச் சென்ற எல்லார் வாழ்வும் வளம் பெருவதில்லையே.

ஒரு வேளைச் சாப்பாட்டிற்காக அன்னிய தேசத்தில் உழைத்து தன் எஜமான் உண்டு உறங்கும் வரை காத்திருந்து பின் இருப்பதை உண்டு இன்னும் பல கொடுமையான வக்கரங்களைக் தாங்கிக் கொண்டு இந்தியாவில் வாழும் தன் குடும்ப பரிபாலனையை மட்டுமே சிந்தனையில் கொண்டு பொய்வாழ்வு வாழ்ந்து வரும் நம் குலப் பெண்கள் எத்தனையோபேர் இந் நாயைப் போல்தானே வாழ்ந்து வருகிறார்கள்.

கலங்க வைத்த சிந்தனை ஆதி.

நல்ல சமுதாயச் சிந்தனையைத் தாங்கி வந்த கவிதைக்கு வாழ்த்துக்கள் ஆதி.

இளசு
23-08-2008, 07:40 AM
பார்ப்பவர் பார்வை, பட்டறிவுக்கேற்ப பல பட்டைகள் காட்டும் கவிதை!

படைத்த ஆதி, அலசிய அன்புறவுகள் அனைவருமே அசத்தியிருக்கிறார்கள்.

பாராட்டுகள்.

சாலை அய்யா சொன்ன சுடும் உண்மை - கீழைத்தேசத்தின் பல நாட்டுப் பெண்களுக்கும்... பல வகையில்!

அடிமைப்படுத்த, தன்னிஷ்டம் போல் பயன்படுத்த/விளையாட
மனிதன் என்னும் மிருகம் வாய்ப்புகளை வீணாக்கியதாய் வரலாறு இல்லை!

அடுத்த உயிரினம், அடுத்த மனித நிறம்,
அடுத்த பாலினம், அடுத்த தேசம், அடுத்த மொழியினன்,
அடுத்த மதச்சாதியினன்,
அடுத்த மாநிலன், அடுத்த ஊரினன், அடுத்த வீட்டினன்,
பின்......???

கவனம் குவித்து மேலெழும்பாத எல்லாக் கணங்களும்
மனிதன் மற்றொரு மிருகம் என்பதை உரக்கச் சொல்லும்!

நாகரா
23-08-2008, 07:58 AM
பொய்யுறவுகளைக்
கைவிட்டு
அவ்வுறவுகளின் பால்
பற்றறப்
பசித்தும்
தனித்தும்
விழித்தும்
அம்மனிதன்
(முற்பிறவியில்
ஆதியின் கவிதையின் பரிதாபக் கருவான நாய்
தான்
நாயாக இருந்தும்
பசித்தும்
தனித்தும்
விழித்தும்
நன்றி மறவா
நெறி பிறழாது
ஆற்றிய தவத்தால்
மனிதப் பிறவியில்
இப்போது இருக்கும்
என் கவிதையின் உன்னதக் கருவான நாயகன்)
தான் ஆற்றிய
அகத் தவத்தால்
தன்னுட்கலந்த கடவுளைப் போல்
காணாமல் போனான்

மெய்யாகவே!
(ஒரே மனிதப் பிறவியில்
பேராப் பெருநிலையா,
நம்ப முடியாதென்றாலும்
நிஜந்தான்
நிஜந்தான்!)

குறியீட்டுக் கவிதை நன்று, வாழ்த்துக்கள் ஆதி.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-08-2008, 02:22 PM
நாயின் அங்கலட்சணம் பார்த்தவர்கள், அதனை பராமரிக்க மறந்தது வேதனை. வீட்டுக்குப் புதிதாக வரும் மருமகள்களும் சில நேரங்களில் இப்படி பால்கனிக்கு பதில் சமயலறைக்குள் சிறை வைக்கப்பட்டுவிடுகிறார்கள். பன்முக சிந்தனையை தெளிக்கும் கவிதை. வழங்கிய ஆதிக்கு பாராட்டுகள்.

நீங்க சொல்றது சரிதான் சிவாஜி!இதுக்கு மாற்றமா மாமியாரை சிறை வைக்கிற மருமகள்களும் இருக்காங்களே!:traurig001:

சிவா.ஜி
24-08-2008, 02:40 PM
நீங்க சொல்றது சரிதான் சிவாஜி!இதுக்கு மாற்றமா மாமியாரை சிறை வைக்கிற மருமகள்களும் இருக்காங்களே!:traurig001:

நிச்சயமா அந்த வகைதான் அதிகம் ஜுனைத். நான் சொல்வது சொற்பமே.

rajatemp
24-08-2008, 05:06 PM
பல வீடுகளில் நாய்களுக்கு மட்டுமில்லை,
சில நல்ல உள்ளங்களுக்கும் இந்த நிலைதான்...!!

பாரட்டுக்களும் வாழ்த்துக்களும் ஆதி..!! :)


முற்றிலும் உண்மை ஓவியன் அவர்களே

மனிதனுக்கே இந்த கதி என்றால் பாவம் அப்பிராணி என்ன செய்யும்