PDA

View Full Version : பவள விழா காணும் மேட்டூர் அணை!mgandhi
22-08-2008, 06:18 PM
பவள விழா காணும் மேட்டூர் அணை!

http://tinypic.com/mct8wh.jpg
11 காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கி வரும் மேட்டூர் அணைக்கு வயது 75. இத்தனை காலமானாலும் கூட, கம்பீரம் குறையாமல் தவித்த வயல்களுக்கு தண்*ர் கொடுத்து வருகிறது மேட்டூர் அணை.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ளது மேட்டூர். காவிரியில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்திலிருந்து பாசனப் பகுதி மக்களைக் காப்பாற்ற பிரமாண்ட அணை கட்ட வெள்ளையர் அரசு முடிவு செய்தது. இதையடுத்து அணை குறித்த திட்ட ஆய்வு பணி 1905ல் துவங்கி 1910 வரை நடந்தது. இறுதியில் மேட்டூரில் அணை கட்ட முடிவு செய்து, 1924 மார்ச் 31ம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு, டிச.11ம் தேதி அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, 1925 ஜூலை 20ம் தேதி மேட்டூர் அணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு என்ஜினியர் எல்லீஸ், நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமையர், முதன்மை தலைமை இன்ஜினியர் முல்லிங்க்ஸ் தலைமையில் 24 என்ஜினியர்கள் அடங்கிய குழு அணை கட்டும் பணியை தொடங்கியது. 1934ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கடைசி கல் வைக்கப்பட்டு கட்டுமானப் பணி நிறைவு பெற்றது. அணையைக் கட்டி முடிக்க அப்போது ஆன செலவு ரூ.4.80 கோடியாகும். அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜான் பெடரிக் ஸ்டான்லி, 1934ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பாசனத்திற்கு நீரை திறந்து வைத்து, அணையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆளுநர் ஸ்டான்லியின் பெயரையே அணைக்கும் சூட்டி, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என வைத்தனர்.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களுக்கு மேட்டூர் தண்*ர் போகிறது. மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அது மட்டுமல்லாமல், மேட்டூர் அணையை நம்பி 4000 மீனவர்கள் குடும்பங்களும் உள்ளன. மேட்டூர் நீர்த்தேக்க வளாகத்திலேயே 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையமும் உள்ளது. அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் மொத்த நீர் தேக்க அளவு 120 அடியாகும். அதில் அதிகபட்சம் 93.4 டிஎம்சி தண்*ரை தேக்கி வைக்க முடியும்.

3 முறை மேட்டூர் அணையை மின்னல் தாக்கியது. இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டுக் குலையாமல் புதுக் கருக்கு கலையாத புதுப்பெண் போல இன்றும் எழிலுற திகழ்கிறது மேட்டூர் அணை. இந்தியாவின் மிகப் பழமையான, மிகப் பெரிய அணைகளில் மேட்டூர் அணையும் ஒன்று.

ராஜா
23-08-2008, 04:27 AM
எங்கள் தாய் மண்ணுக்கு உயிர்நீர் வழங்கும் கற்பகத்தருவுக்கு அகவை எழுபத்தைந்தா..? வாழ்த்துகள் ஸ்டான்லி..!

நல்ல நல்ல தகவல்களை இணையம் முழுதும் சேகரித்து இங்கு சேர்க்கும் 'செய்தித் தேனீ'க்கு நன்றி..!

சிவா.ஜி
23-08-2008, 04:36 AM
பெருமைப்படத்தக்கவைகளில் ஒன்று மேட்டூர் அணை. அதன் வழியே செல்லும்போதெல்லாம், கடல்போன்ற காவிரியின் பிரம்மாண்டத்தைப் பார்த்து அதிசயித்துப்போவேன். தகவலுக்கு நன்றி மோகன்காந்தி.

mgandhi
23-08-2008, 06:21 PM
பெருமைப்படத்தக்கவைகளில் ஒன்று மேட்டூர் அணை. அதன் வழியே செல்லும்போதெல்லாம், கடல்போன்ற காவிரியின் பிரம்மாண்டத்தைப் பார்த்து அதிசயித்துப்போவேன். தகவலுக்கு நன்றி மோகன்காந்தி.

மிக்க நன்றி சிவா

mgandhi
23-08-2008, 06:22 PM
எங்கள் தாய் மண்ணுக்கு உயிர்நீர் வழங்கும் கற்பகத்தருவுக்கு அகவை எழுபத்தைந்தா..? வாழ்த்துகள் ஸ்டான்லி..!

நல்ல நல்ல தகவல்களை இணையம் முழுதும் சேகரித்து இங்கு சேர்க்கும் 'செய்தித் தேனீ'க்கு நன்றி..!மிக்க நன்றி ராஜா

அமரன்
23-08-2008, 06:52 PM
செய்தித்தேனீ-மிகப்பொருத்தமான பெயர்.

செய்திகளில் அடிக்கடி கேள்விப்பட்ட பெயர். மேலதிக தகவல் தந்த காந்திக்கு நன்றி.

இளசு
23-08-2008, 09:26 PM
நன்றி காந்தி அவர்களுக்கு.
பொது அறிவை வளர்க்கும் பதிவு.

இந்த ஸ்டான்லி பெயர்தான் வடசென்னையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கும் இடப்பட்டது.

http://www.telegraphindia.com/1041103/asp/careergraph/story_3940631.asp

ஓவியன்
24-08-2008, 02:11 AM
மேட்டூர் அணை..!!

பார்த்ததில்லை, படித்ததும் கேட்டதும்தான் அதிகம்...
இன்று, இந்தப் பதிவிலும்...

செய்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி காந்திணா..!! :)

செல்வா
24-08-2008, 08:20 AM
தமிழகத்திலிருந்தும் நான் இன்னும் பார்க்காத அணை. காந்தி அண்ணாவின் பதிவினால் பார்க்கும் ஆசை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
விரைவில் பார்க்க வேண்டும்.
பகிர்தலுக்கு நன்றி அண்ணா...

மன்மதன்
24-08-2008, 09:57 AM
செய்தி பகிர்வுக்கு நன்றி காந்தி..

Keelai Naadaan
24-08-2008, 11:51 AM
மேட்டூர் அணையருகே காவிரியில் நீராடி மகிழ்ந்ததுண்டு.
மேட்டூருக்கு செல்லும் உயரமான சாலையிலிருந்து அனையை காணும் போது அதன் அழகே அழகு.
"நடந்தாய் வாழி காவேரி" என்ற பாடலை கேட்கும்போது மனசு விம்மும்.

நல்ல தகவல்கள் வழங்கும் தங்களுக்கு மிக்க நன்றி.

mgandhi
24-08-2008, 06:23 PM
செய்தித்தேனீ-மிகப்பொருத்தமான பெயர்.

செய்திகளில் அடிக்கடி கேள்விப்பட்ட பெயர். மேலதிக தகவல் தந்த காந்திக்கு நன்றி.

நன்றி அமரன்

mgandhi
24-08-2008, 06:24 PM
நன்றி காந்தி அவர்களுக்கு.
பொது அறிவை வளர்க்கும் பதிவு.

இந்த ஸ்டான்லி பெயர்தான் வடசென்னையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கும் இடப்பட்டது.

http://www.telegraphindia.com/1041103/asp/careergraph/story_3940631.asp

தகவலுக்கு நன்றி இளசு

mgandhi
24-08-2008, 06:25 PM
மேட்டூர் அணை..!!

பார்த்ததில்லை, படித்ததும் கேட்டதும்தான் அதிகம்...
இன்று, இந்தப் பதிவிலும்...

செய்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி காந்திணா..!! :)
நன்றி ஓவியன்

mgandhi
24-08-2008, 06:35 PM
தமிழகத்திலிருந்தும் நான் இன்னும் பார்க்காத அணை. காந்தி அண்ணாவின் பதிவினால் பார்க்கும் ஆசை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
விரைவில் பார்க்க வேண்டும்.
பகிர்தலுக்கு நன்றி அண்ணா...

நன்றி செல்வா

mgandhi
24-08-2008, 06:38 PM
செய்தி பகிர்வுக்கு நன்றி காந்தி..

மிக்க நன்றி மன்மதன்

mgandhi
24-08-2008, 06:40 PM
மேட்டூர் அணையருகே காவிரியில் நீராடி மகிழ்ந்ததுண்டு.
மேட்டூருக்கு செல்லும் உயரமான சாலையிலிருந்து அனையை காணும் போது அதன் அழகே அழகு.
"நடந்தாய் வாழி காவேரி" என்ற பாடலை கேட்கும்போது மனசு விம்மும்.

நல்ல தகவல்கள் வழங்கும் தங்களுக்கு மிக்க நன்றி.
நன்றி கீழை நாடான்