PDA

View Full Version : தடயங்கள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
22-08-2008, 05:49 PM
எவருமற்ற அனாயச சூழல்களில்
இறக்கி விடப்படும்
பாலைவன கால் தடங்களாய்
இருத்தி விடப்படுகின்றன
சிலர்களின்
மறைவுகளுக்குப் பின்னாலான
மிஞ்சிய வாழ்க்கைத் தடயங்கள்!
காற்றோடு சேர்ந்து காலங்களும்
கபளீகரம் செய்து விடுகின்றன
எந்த வடுவையும் மிச்சமிடாமல்

கூடிக் கழித்த பொழுதுகளில்
கற்பாறைச் சிதைவுகளிலோ
வானுயர்ந்த மர மட்டைகளிலோ
உரித்துச் சிதைத்துப் பொறிக்கப்படும்
ஈரடிப் பெயர்களாய்
எந்த ஆக்கப் பூர்வமுமின்றி
வெறும் பெயர்களாய் எஞ்சி நிற்கின்றன
தான்தோன்றினர்களின்
சில தற்புகழ்ச்சித் தடயங்கள்

பருந்துகளும் கோட்டான்களும்
நோட்டமிட்டுத் திரியும்
பழைய பாழ் பங்களாக்களாய்
சோக கீதமிசைத்துத் திரிகின்றன
எல்லாம் பெற்று வாழ்ந்து
எதுவுமற்று மறைந்த
மாண்புமிகுக்கள்
மண்ணில் விட்ட தடயங்கள்

நாலைந்து செந்நாய்கள் கூடி
மிச்சமிட்டுச் சென்ற
பருத்துக் கொழுத்த
பிணத்தின் தடயங்களாய்
உருட்டிப் புரட்டிக் கொழுத்த
ஊளைச் சதைகளின்
பெருகி வலுத்தத் தடயங்களைக் கூட
தின்று தெறித்து ஏப்பம் விடுகின்றன
பிணந் திண்ணி மணல்கள்.

எவரோ எப்போதோ விதைத்து
வளர்ந்து வலுத்து நிற்கும்
உருண்டு திரண்ட ஆலமரமாய்
தன் காலத்திற்கப்பாலும்
நிழலிட்டுக் குளிரூட்டிக் கொண்டிருக்கின்றன
நான் வருத்தி நாம் வளர்த்த
நல்லவர்கள் தடயங்கள் மட்டும்.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

தீபா
23-08-2008, 05:47 AM
அருமை அருமை அருமை... (முதல் பின்னூட்டம்,, ஐகாசு தரணும்)

ஒவ்வொரு தடயங்களையும் அதனை விவரித்தமுறையும் மனதில் தடயத்தை எழுதிவிட்டுப் போகிறது.

அனாயசம் தான் சரி.. அனாயாசம் இல்லை.

குறிப்பிட்ட தலைப்பைச் சுற்றி எழுத உங்களுக்கு நன்கு வருகிறது... (நமக்கு ஜிவ்வினு இருக்கு!)

கலக்குங்க மச்சான்

சாலைஜெயராமன்
23-08-2008, 07:34 AM
எவரோ எப்போதோ விதைத்து
வளர்ந்து வலுத்து நிற்கும்
உருண்டு திரண்ட ஆலமரமாய்
தன் காலத்திற்கப்பாலும்
நிழலிட்டுக் குளிரூட்டிக் கொண்டிருக்கின்றன
நான் வருத்தி நாம் வளர்த்த
நல்லவர்கள் தடயங்கள் மட்டும்.
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

நல்லவர்கள் தடயங்களை உயர்த்திச் சொன்ன பாங்கு உங்களை மிக உயரத்தில் ஆழ்த்திவிட்டது ஹஸனீ. இன்றைய சீர் கெட்ட சமுதாயத்தை இன்னும் ஏதோ ஒன்று தாங்கிப் பிடித்து வாழ்வித்து வருகிறது எது என்றால் அது நல்லோர்களின் நன் நாத்தடயங்கள்தான்.

மறை உண்மையை வெகு இயல்பான கவிதையில் கொண்டு வந்த உங்களைப் புகழ வார்த்தையில்லை ஹஸனீ. வயதை மீறிய உங்கள் முதிர்ச்சியின் வெளிப்பாட்டுச் சிந்தனையை உலகம் போற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை.

வாழ்த்துக்கள். மேலும் புதிய சிந்தனைகளை உங்கள் நற் தடயங்கள் தமிழ் மன்றத்தில் தாங்கி வரட்டும்.

இளசு
23-08-2008, 08:00 AM
கால நெருப்பு
கூளங்களை எரித்தழிக்கும்!
தங்கப்பாளங்கள் மட்டுமே
பின்னும் மின்னும்!

''நெம்புகோல் புரட்சி நாயகர்கள்'' என
நம்பப்பட்டவர்களின் கல்லறைகள்..
பின்னாளில் நிஜமறிந்து வெகுண்ட
மாணவர்களின் சிறுநீரால் நனைத்தழிக்கப்பட்டது வரலாறு !


சாலை அய்யா சொன்னதுபோல் ஜூனைத்தின்
உயரச்சிந்தனைகளைக் கண்டு நானும் வியந்து வந்தனை செய்கிறேன்!

வாழ்த்துகள் ஜூனைத்!

leomohan
23-08-2008, 08:46 AM
அற்புதம் அற்புதம் சுனைத்.

பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்கும் கேடு கெட்ட மானிடரே கேளீர் என்ற பாடலை நினைவு படுத்தியது.

உங்கள் கோபம் உங்கள் வரிகளில் தெரிகிறது. சுவடில்லாமல் வந்து செல்லும் பதர்களை நினைத்து ஏங்கும் உங்கள் சமூக பார்வைக்கு வாழ்த்துகள்.

நாகரா
23-08-2008, 11:34 AM
எவருமற்ற அனாயாச சூழல்களில்
இறக்கி விடப்படும்
பாலைவன கால் தடங்களாய்
இருத்தி விடப்படுகின்றன
சிலர்களின்
மறைவுகளுக்குப் பின்னாலான
மிஞ்சிய வாழ்க்கைத் தடயங்கள்!
காற்றோடு சேர்ந்து காலங்களும்
கபளீகரம் செய்து விடுகின்றன
எந்த வடுவையும் மிச்சமிடாமல்

கூடிக் கழித்த பொழுதுகளில்
கற்பாறைச் சிதைவுகளிலோ
வானுயர்ந்த மர மட்டைகளிலோ
உரித்துச் சிதைத்துப் பொறிக்கப்படும்
ஈரடிப் பெயர்களாய்
எந்த ஆக்கப் பூர்வமுமின்றி
வெறும் பெயர்களாய் எஞ்சி நிற்கின்றன
தான்தோன்றினர்களின்
சில தற்புகழ்ச்சித் தடயங்கள்

பருந்துகளும் கோட்டான்களும்
நோட்டமிட்டுத் திரியும்
பழைய பாழ் பங்களாக்களாய்
சோக கீதமிசைத்துத் திரிகின்றன
எல்லாம் பெற்று வாழ்ந்து
எதுவுமற்று மறைந்த
மாண்புமிகுக்கள்
மண்ணில் விட்ட தடயங்கள்

நாலைந்து செந்நாய்கள் கூடி
மிச்சமிட்டுச் சென்ற
பருத்துக் கொழுத்த
பிணத்தின் தடயங்களாய்
உருட்டிப் புரட்டிக் கொழுத்த
ஊளைச் சதைகளின்
பெருகி வலுத்தத் தடயங்களைக் கூட
தின்று தெறித்து ஏப்பம் விடுகின்றன
பிணந் திண்ணி மணல்கள்.


அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.




எவரோ எப்போதோ விதைத்து
வளர்ந்து வலுத்து நிற்கும்
உருண்டு திரண்ட ஆலமரமாய்
தன் காலத்திற்கப்பாலும்
நிழலிட்டுக் குளிரூட்டிக் கொண்டிருக்கின்றன
நான் வருத்தி நாம் வளர்த்த
நல்லவர்கள் தடயங்கள் மட்டும்.


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

உம் ஜீவனுள்ள கவிதையின் காலடித் தடங்களாய்த் திருக்குறட் பாக்கள் இரண்டு!

அருமை ஹஸனீ, தொடரட்டும் உம் ஞானக் கவிப் பெருக்கு, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றியும் உமக்கு!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-08-2008, 03:54 PM
அருமை அருமை அருமை... (முதல் பின்னூட்டம்,, ஐகாசு தரணும்)



அதான பாத்தேன். தென்றல் விஸயமில்லாம பின்னூட்டமிடாதே.! கொடுத்து கொடுத்து தேஞ்ச கைமா இது. கேட்டதால 10 ரூபாய் தர்றேன். சந்தோஸம்தானே!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-08-2008, 03:58 PM
சாலை ஐயா இளசு அண்ணா நாரதா மற்றும் லியோ அண்ணா அனைவரின் பின்னூட்டத்தில் மகிழ்ந்து அகம் குளிர்ந்து போய் இருக்கிறேன். அதுவும் சாலை ஐயாவின் கருத்து அளவு கடந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-08-2008, 05:34 PM
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.



ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

உம் ஜீவனுள்ள கவிதையின் காலடித் தட்ங்களாய்த் திருக்குறட் பாக்கள் இரண்டு!

!
மிக்க நன்றி நாகரா. பொருத்தமான தங்கள் குறட்பாக்களுக்கு.

அமரன்
03-10-2008, 07:15 AM
கவிதை, கவிதைக்கு வந்த கருத்து எல்லாமே நன்று.

தலைப்பு புள்ளியை வைத்து அழகாக போட்ட கோலம். அழியாத தடயமாக எல்லார் மனதில் இருக்கட்டும். நல்லார் தடங்கள் உலாகமெங்கும் வியாபிக்கட்டும்.

பாராட்டுகள் சுனைத்