PDA

View Full Version : எடை கூடுதலாய்!(குட்டிக்கதை)ஐரேனிபுரம் பால்ராசய்யா
22-08-2008, 12:50 PM
அரிசி வாங்கும் ஒவ்வொருவருக்கும் இலவசமாக மரக்கன்று ஒன்றை தந்தார் ரேசன் கடைக்காரர் பொன்னுமணி.

“ செல்லாத்தா இந்த மரக்கன்ற உன் வீட்டு முற்றத்து ஓரத்துல நட்டு வளர்த்தணும், அதிகாரியிங்க வந்து பார்ப்பாங்க, நல்லா வளர்ந்துடிச்சுன்னா வருசத்துல ஒரு நாள் பத்து கிலோ அரிசி, ரெண்டு கிலோ சர்க்கர இலவசமாக குடுத்துடுவோம்!” செல்லாத்தா சரியென்று தலையாட்டி விட்டு அரிசியோடு மரக்கன்றும் வாங்கிச் சென்றாள்.

“ஏங்க அரிசி தர்றப்போ மரக்கன்று தரணுமுன்னும் வருஷத்துல பத்து கிலோ அரிசி, ரெண்டு கிலோ சர்க்கர இலவசம், இப்பிடி எதுவும் அரசாங்கத்துல அறிவிக்கலையே நீங்க சொல்றீங்க!” அரிசி வாங்க வந்த வேறொரு பெண் கேட்ட போது பொன்னுமணியின் குரல் தாழ்ந்தது.

“வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்முன்னு சொல்றதோட சரி, யார் செய்யறா, அதனால தான் என் சொந்த செலவுல மரக்கன்று வாங்கி வந்து, தினமும் பத்து பேருக்கு இலவசமா தர்றேன். என்னொட ஆர்வத்த பார்த்துட்டு பத்து கிலொ அரிசி, ரெண்டு கிலோ சர்க்கர வீதம் எல்லாருக்கும் தர்றதா ஒரு தொண்டு நிறுவனம் ஏத்துகிட்டாங்க, இத அரசாங்கம் செய்தா நல்லா தான் இருக்கும், யார் செய்வா?” என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது எடை கூடுதலாய் கிடைப்பதை உணர்ந்தாள் அந்த பெண்.

அக்னி
22-08-2008, 01:04 PM
தனியார் தொண்டு நிறுவனங்களிடமிருந்தும், தனியான மனிதர்களிடமிருந்தும்,
அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டியதும், நடைமுறையிற் கொள்ள வேண்டியதும், நிறைய உள்ளன.

அவற்றில் ஒன்றிற்கான பெரு விளக்கம், இந்தக் குட்டிக் கதை.

அபிவிருத்தியடையவைக்கவும், நடைமுறைப்படுத்தவும் ஏதுவான செயற்பாடுகளைச் செய்யாமல்,
திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா...

பெரும் சாட்டை கொண்டு விளாசுது, உங்கள் குட்டிக் கதை...

பாராட்டுக்கள் ஐ பா ரா அவர்களே...

தீபா
22-08-2008, 02:38 PM
பலே!!!! அருமையான குட்டிக்கதை... சிறப்புப் பாராட்டுக்கள்.

என் வீட்டைச் சுற்றி, மரங்களையும் செடிகளையும் வளர்த்து வருகிறேன்.. சமுதாயத்திற்காகவா என்று எனக்குத் தெரியாது. ஆனால் எங்களுக்காக...

Keelai Naadaan
22-08-2008, 03:29 PM
கதையோடு சேர்த்து நல்ல ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.

mukilan
22-08-2008, 04:24 PM
மூர்த்தி சின்னதா இருந்தாலும் கீர்ர்த்தி பெரிசுன் சொல்வாங்களே அந்த ரகம். தொண்டு நிறுவனங்கள் இது போல இருந்தால் நல்லதுதான். அரசியல்வாதிகளையும் மிஞ்சி விடும் தொண்டு நிறுவனங்களை கண்டதால் எனக்கு அவர்கள் மீது நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது.

குட்டிக் கதை மூலம் சமூக அவலங்களைக் குட்டிக் காண்பிக்கும் உங்களுக்கு என் பாராடுகள் குட்டிக் கதைஞரே!

சிவா.ஜி
22-08-2008, 05:43 PM
நிஜமாகவே எடைகூடுதலான கதைதான். நல்லதொரு கருத்தை சொன்ன அருமையான குட்டிக்கதை. பாராட்டுக்கள் பால் ராசய்யா அவர்களே.

அமரன்
22-08-2008, 09:06 PM
மரம் வளர்த்தால் அரிசி. நல்ல ஊக்கம். இப்படியாவது பசுமைப் புரட்சி மலரட்டும்.

ஷீ-நிசி
23-08-2008, 02:42 AM
குட்டிக்கதை! ஆனால் விஷயம் அதிகம்!

இருப்பதையும் அழிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்!


வாழ்த்துக்கள் நண்பரே! அழகிய கதை!

Mano.G.
23-08-2008, 04:52 AM
நம்ம சமூதாயம் எப்ப தான்
திருந்துமோ ? அங்க மட்டுமல்ல
இங்கேயும் அப்படிதான்.
எதிர் பார்த்து பிறகு ஏமாறுவது.

உலகை பச்சையாக வைத்திருக்க ரேஷன் கடைக்காரரின் முயற்சி கதையாக இருந்தாலும் பாரட்ட பட வேண்டியது

மனோ.ஜி

ஐரேனிபுரம் பால்ராசய்யா
18-09-2008, 01:11 PM
இனிய தமிழ் இதயங்களுக்கு,

எடை கூடுதலாய் எனும் குட்டிகதைக்கு
நீங்கள் தந்த மேலான ஆதரவு கண்டு வியந்து அந்த கதையை குமுதம் வார இதழுக்கு அனுப்ப 24.09.08 இதழில் ”அடடே” எனும் பெயரில் அது வெளி வந்த்துள்ள்து என்பதை மிக தாழ்மையுடன் தெரியப்ப்டுத்துகிறேன். எழுத்தாள நண்பர்களே நீங்களும் இதுபோல் உங்களது படைப்புகளை பிரபல வார இத்ழ்களுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சுகந்தப்ரீதன்
18-09-2008, 01:18 PM
வாழ்த்துக்கள் பால்ராசய்யா...!!

பெரிய பெரிய விசயங்களை சின்ன சின்ன கதைகளின் மூலம் வலியுறுத்தும் உங்கள் முயற்சி தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துகிறேன்..!!

அக்னி
25-09-2008, 08:14 PM
”அடடே” என்னும் தலைப்பில் 24.09.2008 குமுதத்தில் இந்தக் கதை...
ஐரேனிபுரம் பால்ராசய்யா என்ற பெயரைப் பார்த்ததும்,
”அடடே” நம்மாளு என மகிழ்ந்தது மனம்.
பாராட்டுக்கள் ஐ பா ரா அவர்களே...

sukanya
26-09-2008, 05:43 AM
அருமையான கருத்து.

மௌனி

அன்புரசிகன்
26-09-2008, 08:39 AM
இலவசங்களைக்காட்டினால் தான் சில நல்லதையே செய்யலாம் என்பது கசப்பான உண்மையாகிறது....

பாராட்டுக்கள் ஐ.பா. ராசையா...

ஐரேனிபுரம் பால்ராசய்யா
26-09-2008, 09:09 AM
அன்புள்ள சூரிய புத்திரன் எனும் அக்னி அவர்களுக்கு,

24.09.08 குமுதத்தில் என்னுடைய ம்ற்றுமொரு கதை ’அப்பப்பா ’ வெளிவந்துள்ளது . கதைக்கு ருபாய் 100 சன்மானம் அனுப்புவார்கள் அதை நான் வாங்குவதைவிட என் மனைவி வாங்கினால் சந்தோஷப்படுவாள் என்று ஊரிலிருக்கும் ம்னைவியின் முகவரி தந்திருந்தேன். அவர்களோ சி.கே ஜமுனாராஜன் என்று என் மனைவி பெயரிலும் என் பெயரிலும் இரண்டு கதைகள் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். குமுதத்தை பார்த்ததும் என்னை நினத்துக்கொண்ட உங்களுக்கும் என் கதையை படித்து பாராட்டி ஊக்கப்படுத்திய மன்றத்தார்கும் என் நன்றிகள்.

shibly591
26-09-2008, 10:56 AM
வித்தியாசம் என்றுமே சோடை போவதில்லை

வாழ்த்துக்கள்

அக்னி
29-09-2008, 05:26 PM
அன்புள்ள சூரிய புத்திரன் எனும் அக்னி அவர்களுக்கு,
உங்கள் விளிப்புக்கு மிக்க நன்றி...


24.09.08 குமுதத்தில் என்னுடைய ம்ற்றுமொரு கதை ’அப்பப்பா ’ வெளிவந்துள்ளது . கதைக்கு ருபாய் 100 சன்மானம் அனுப்புவார்கள் அதை நான் வாங்குவதைவிட என் மனைவி வாங்கினால் சந்தோஷப்படுவாள் என்று ஊரிலிருக்கும் ம்னைவியின் முகவரி தந்திருந்தேன். அவர்களோ சி.கே ஜமுனாராஜன் என்று என் மனைவி பெயரிலும் என் பெயரிலும் இரண்டு கதைகள் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். குமுதத்தை பார்த்ததும் என்னை நினத்துக்கொண்ட உங்களுக்கும் என் கதையை படித்து பாராட்டி ஊக்கப்படுத்திய மன்றத்தார்கும் என் நன்றிகள்.
ஆமாம்...
உங்களுடையது எனத் தெரியாமலேயே, அந்தக் கதையையும் வாசித்திருந்தேன்.
அதற்கும் விசேட பாராட்டுகள்.

எல்லாவற்றையும் விட,
சின்னச் சின்ன சந்தோஷங்களையும் உங்கள் மனைவிக்கு கொடுக்கும் இயல்பு,
உங்களை உயர்த்தி நிற்கின்றது.

மென்மேலும் புகழ் பெற வாழ்த்துகள்...

இளசு
30-09-2008, 06:00 PM
நல்ல சேதி புகட்டும் சிறுகதை!

இரட்டைப் பாராட்டுகள் திரு. பால்ராசய்யா அவர்களுக்கு -
இரு கதைகள் குமுதம் இதழில் வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி!!

தீபா
04-10-2008, 02:49 PM
எப்போதுமே குமுதம் வாங்கியதில்லை... நண்பன் வீட்டில் எதேட்சையாகக் கன்டேன்.... உங்கள் பெயர்..

எனக்குப் பெருமை.. உங்களைப் போன்றவர்களோடு நானும் பேசியிருக்கிறேன் என்று என்னும் போது.

Congrats

ஓவியன்
24-01-2009, 07:20 AM
எண்ணற்ற மரங்களை வெட்டி வீழ்த்தி நாம் இழைத்த தவறுக்கு நாம் தானே பிராயசித்தம் தேட வேண்டும்...

அரசு செய்யும் வரை பாத்திராது,
நாமே களமிறங்குவது நலமென்ற நல்ல கருத்து...

மனதார வாழ்த்துகிறேன் திரு பால்ராசையா அவர்களே..!!