PDA

View Full Version : உன்னை..



poo
01-08-2003, 06:55 AM
இருளின் ஒளியில்
ஒலியின் கீதத்தில்
கீற்று நிலவில்
நிலவின் குளிரில்
குளிர்ந்த பனியில்
பனியின் படர்வில்
படர்ந்த கொடியில்
கொட்டிய மழையில்
மலர்ந்த மலரில்
மடிந்த விட்டிலில்
விடியலின் காலையில்
வீசிய தென்றலில்
விழுந்த சூரியனில்
முளைத்த விதையில்
சிறகடித்த பூச்சியில்
சீறிப்பாய்ந்த அருவியில்
வளைந்த வானவில்லில்
வசந்த மேகத்தில்..
இலக்கில்லாமல்
காணுமிடமெங்கும்
கவிதையைத் தேடினேன்..
உன்னைக்காணும்முன்!!..

சேரன்கயல்
01-08-2003, 08:31 AM
அப்பாடி!!! கவிதையை ஒருவழியா கண்டுபிடிச்சிட்டீங்க...
கவிதையைக் கண்ட கவியே...அருமையான முயற்சி...

பி.கு:
நானும் அப்படித்தான் தேடுகிறேன் என்றால், மனைவி அடிக்க வருகிறாள்...

gankrish
01-08-2003, 10:56 AM
கவிதையை ஒரே மூச்சில்
படித்து விழுந்தேன் மயங்கி

இளசு
04-09-2003, 12:47 AM
அருமை பூ...
அழகிய வரிகள்.. கருத்து!
அண்ணனின் பாராட்டுகள்.

பாரதி
04-09-2003, 02:19 AM
அன்பு பூ.. வார்த்தைகள் பிரமாதம்..
ஆமாம்.. யாரைக் கவிதை என்கிறீர்கள்? எனக்கு மட்டும் சொல்லுங்கள்..

karavai paranee
04-09-2003, 03:14 PM
உன்னைக்கண்டபின்தான் கவிதையை நான் அறிந்தேன்

அருமையான ஒரு பதிப்பு
வாழ்த்துக்கள் நண்பரே

poo
05-09-2003, 02:36 PM
அண்ணன்..பாரதி..கரவையார்..

இதயம்கனிந்த நன்றிகள்!!




அன்பு பூ.. வார்த்தைகள் பிரமாதம்..
ஆமாம்.. யாரைக் கவிதை என்கிறீர்கள்? எனக்கு மட்டும் சொல்லுங்கள்..


பாரதி அவர்களே.. உங்களுக்கு மட்டுமல்ல ஊருக்கே சொல்கிறேன்.. என் மனைவியைத்தான் கவிதையென்றேன்!!!

இக்பால்
05-09-2003, 02:58 PM
சரிதான் பூ தம்பி...

தங்கையைக் காணும் முன்
காணும் இடங்கள் என
எல்லா இடங்களையும் கண்டீர்.
கவிதையும் தேடினீர்.
தங்கையை கண்டபின்
இடங்களைச் சுற்றுவதை
விட்டு விட்டீர் போலிருக்கு.
ஆகவே திருமணம் செய்யாதவர்கள்
இப்பொழுதே இடங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கவிதை எழுதாவிட்டாலும் கூட பரவாயில்லை.
-அன்புடன் அண்ணா.

poo
05-09-2003, 03:05 PM
சரிதான் பூ தம்பி...

தங்கையைக் காணும் முன்
காணும் இடங்கள் என
எல்லா இடங்களையும் கண்டீர்.
கவிதையும் தேடினீர்.
தங்கையை கண்டபின்
இடங்களைச் சுற்றுவதை
விட்டு விட்டீர் போலிருக்கு.
ஆகவே திருமணம் செய்யாதவர்கள்
இப்பொழுதே இடங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கவிதை எழுதாவிட்டாலும் கூட பரவாயில்லை.
-அன்புடன் அண்ணா.

ஆம்.. அண்ணா.. மணமானபின் வாழ்க்கை மிகவும் சுருங்கிவிட்டது... சுருங்கிய வாழ்க்கைக்குள் விரிந்த உலகில் கிடைக்காத அத்தனையும் கிடைப்பதுதான் அதிசயமாய்!!!...

அதுதானோ காதல் மண(ன)ம்?!!...

இக்பால்
05-09-2003, 03:25 PM
இணையவலை மாதிரி எனச் சொல்லுங்கள்.-அன்புடன் அண்ணா.

இ.இசாக்
07-09-2003, 05:04 PM
பூ சிறப்பாக வார்த்தை விளையாடுகிறது
உங்கள் கவிதையில் உங்களைப்போலவே மென்மையாக

Nanban
08-09-2003, 07:40 AM
தேடுதல் சுகமானது தான் -
அதுவும் கவிதையைத் தேடுதல்
இன்னமும் சுகமானது தான்.
தேடும் கவிதை காதலில் கிட்டியது
இன்னும் சுகமானது.
தேடித் தேடிக் கிடைத்ததை
தொலைத்து விடாமல்,
நந்தவன ஆண்டியாய்
கூத்தாடிக் கூத்தாடிப்
போட்டுடைக்காமல்
பத்திரமாய் வைத்துக்
காப்பாற்றுவது மட்டுமல்லாமல்
இன்னமும்
காதலிப்பது தான் பெருமை -
கவிதையை, காதல் மணைவியை!!!

வாழ்த்துகள் பூவிற்கு.....

gans5001
13-09-2003, 02:00 AM
இலக்கில்லாமல்
காணுமிடமெங்கும்
கவிதையைத் தேடினேன்..
உன்னைக்காணும்முன்!!..


இந்த நான்கு வரிகளே நல்ல ஹைக்கூ பூ அவர்களே

Mr.பிரியசகி
13-09-2003, 05:39 AM
அண்ணா....
கவிதை பிரமாதம்... ஒரு தடவை வாசித்த பின்.... உடனே இன்னொரு முறை வாசிக்க தோன்றியது.... வாழ்த்துக்கள்.. ".....கவிதை தெடினேன் உன்னை காணுமுன்" இந்த இறுதி வரிகள் தான் உங்கள் கவிதைக்கு உயிர் கொடுத்து இருக்கிறது.... (உங்களுக்கும் தானே....)

என்னையும் உங்கள் நண்பர் கூட்டத்தில் ஒருவராக சேர்த்து கொள்ளவும்....

poo
13-09-2003, 05:54 AM
என்னையும் உங்கள் நண்பர் கூட்டத்தில் ஒருவராக சேர்த்து கொள்ளவும்....


நிச்சயமாக நண்பா!!!

balakmu
13-09-2003, 11:49 PM
வசந்த மேகத்தில்..
இலக்கில்லாமல்
காணுமிடமெங்கும்
உன்னைத் தேடினேன்..
கவிதையை காணும்முன்!!..

---------------------------------------------------
இப்படி மாற்றி எழுதினால்
அடிப்பதற்கு பதில் (விளக்கை)
அணைக்க வருவாள் மணைவி

- அன்புடன் பாலா -

puppy
23-09-2003, 05:49 PM
பூ...ரொம்ப அழகாக சொல்லியுள்ளீர்கள்