PDA

View Full Version : ஈழத்தின் தேடல்



kampan
21-08-2008, 08:13 PM
வாடி வீடு கட்டி கோடி பல ஈட்டி
ராஜ வாழ்க்கையல்ல எமது தேடல்கள்

நாடி ஒட்டியானாலும் நம் கோடியிலே
கூடி வாழும் வாழ்க்கையே எமது தேடல்

நாடு விட்டு நாடு ஓடி தேடி வைத்த
சொந்தங்களையெல்லாம்
தெருத்தெருவாய் அலையவிட்டு
ஓலக் குடிசையிலும் ஒட்டி மரத்தோடும்
நம் குலம் குற்றுயிராய் துடிப்பது
எட்டி நின்று பார்க்கும் நாட்டுக்கு புரியாவிட்டாலும்
எமமுடன் ஒட்டி நிற்கும் உங்களுக்கு புரியட்டும்
நம் தேடல் கோடியல்ல சொந்தக் குடிசையென்று.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-08-2008, 08:36 PM
நல்லதொரு தேசத்துக் கவிதை. வாடி வீடா அல்லது மாடி வீடா?

தீபன்
22-08-2008, 01:54 AM
வாடி வீடு - மீனவர்கள் கடற்கரையோரம் தற்காலிகமாக அமைக்கும் குடில்கள். இங்கு வாடி வீடென்றாலும் மாடி வீடென்றாலும் பொருத்தமே.

வாழ்த்துக்கள் கம்பன். சின்ன சின்ன பதிவுகளில் பெரிய பெரிய விடயங்களை அடக்கிவிடுகிறீர்கள்.... தொடருங்கள்.

ஓவியன்
22-08-2008, 04:30 AM
கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும்
நம் ஊர்க் காற்றைச் சுவாசித்து
நம் ஊர் மரத்தடியில் கிடைக்கும் சுகம்
எதிலும் கிடையாது
நாம் ஏங்குவதும் அதற்கே என்று சொன்ன
கம்பனின் வரிகளுக்கு வாழ்த்துக்கள்...!! :)

அக்னி
22-08-2008, 09:59 AM
அமைதியான வாழ்வைத்
தேடித் தேடி
ஓடி ஓடி
வாடிப் போகின்றோம்...

மர நிழல்களின்
நகர்வில்,
நகர்கின்றன..,
எங்கள் இருப்பிடங்களும்...

புதிதாக உலகத்தைக் கேட்டோமா...
அல்லவே...
அகதியாய் அலையும் எங்களை,
எங்கள் அகங்களில் வாழவிடுங்கள்..,
என்றுதானே கேட்கின்றோம்...

உணர்ச்சிக் கவி தந்த கம்பன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்...

அன்புரசிகன்
22-08-2008, 10:20 AM
சாணி மெழுகிய வீட்டிலி சாரத்துடன் படுத்து தூங்கும் போது கிடைக்கும் நிம்மதியான தூக்கம் குளிரூட்டிய அறையில் பிளாங்கட் உடன் தூங்கும் போது வந்ததில்லையே...

பாணும் சம்பலும் சாப்பிட்டு வராத வருத்தங்கள் இன்று ஏதாவது விரும்பி பார்த்தாலே அது கொலஸ்ரேல் இது சுகர் மற்றது பிறசர் என்று வெருட்டுது...

அரசு மட்டுமா எதிரியாக பார்க்கிறது. உணவு வீடு அனைத்துமே....

அனுபவித்த ஏக்கங்களை கவிதையாக பார்க்கையில் சிலிர்க்கிறது உடல்...

அமரன்
22-08-2008, 11:09 AM
கண்ணீர் துளி வடிவில்
இருப்பதாலோ என்னவோ
கண்ணீருக்கு பஞ்சமில்லை
ஈழத்தில்..

மாங்காய் வடிவில்
இருப்பாதாலோ என்னவோ
உப்புக் கண்டம் போடுறார்கள்
எல்லாரும்..

விட்டுத்தள்ளுங்கள்..
கிட்ட இருப்பவர்களைத்தான்
எம்மாலும்
எட்டி உதைக்க முடிகிறது..

முக்கியமானதொன்று..

யார் சொன்னது
இலங்கை சுதந்திர நாடென்று..
இன்றும் அது
அந்நியர் ஆதிக்கத்தில்தான் உளது..

சாடல் இல்லாவிட்டால்
சாமர வீச்சு
உச்சமாக இருந்திருக்கும்
கவிதையில்..

எதுகை மோனைச் சங்கதிகளும்
சிந்தும் சந்தங்களும்
சந்தனக்காற்றாக வீசி இருக்கும்.

அக்னி
22-08-2008, 01:48 PM
ஈழத்தின் உருவை வைத்து,
எழுந்த கவி ஆதங்கம்,
கவியான தங்கம்...

பாராட்டுக்கள் அமரன்...


சாடல் இல்லாவிட்டால்
சாமர வீச்சு
உச்சமாக இருந்திருக்கும்
கவிதையில்..

விளாசும் சாட்டையில்,
மென்மை இருக்காதுதானே அமரா...