PDA

View Full Version : விவசாயி!!!



poo
04-04-2003, 05:14 PM
அன்று..
கலப்பை தோளில் ஏந்தி..
களம் நிறைய நெல்மணிகள்..
கொள்முதலில் தில்லுமுல்-அரைவயிறை
அவசரமாய் நிரப்பினோம்!!

இன்று..
கலப்பைகள்
கால்நீட்டியபடி..
களங்கள் கண்ணீர்விட்டபடி..
ஏர்பூட்டிட ஏற்றம் இறைத்திட
ஏக்கமாய் நாங்கள்..

கால்வயிறை நிரப்பிக் கொள்கிறோம்..
விறகாய் கலப்பை...
அரிசியாய் விதைநெல்!!!

நாளை..
இல்லாத இரத்தத்தை
சுரண்டி சுரண்டி
தானம் செய்யப் போகிறேன்..

சுரண்டலால் வறண்டுபோன
எங்கள் வயிற்றில் பால்(லிடாயில்)
வார்க்க!!!

இளசு
04-04-2003, 05:27 PM
நரிமணம் வீசும் கவிதை.....
ஊருக்குச் சோறிட்டவனை
ஒருவேளைச் சோறுக்கு கையேந்த வைத்த நிலை....
இனியாவது யாருக்கும் வராது ஆக்க என்ன வழி.....?
உயிர் குடிக்கும் பாலிடால்தானா ஒரே வழி........?
ஓட்டு வாங்கி ஊராளப் போனாரே அவர் சட்டை பிடி!
ஆணையம் கூடுமுன்னே கோவணமும் போனதென்று நிரூபி!....
பாலிடாலில் பங்கு கொடு, வேண்டாமென்றால் அவர்
பங்களாவில் பங்கு எடு!

rambal
05-04-2003, 10:38 AM
விவசாயிகளின் சோகம்..
அதுதான் இப்போ
மதிய உணவு போடுவதாகக் கேள்விப்பட்டேன்.. (முட்டை பிரியாணி என்னாச்சு?)
எங்கும் நடக்காத அநியாயம்..
தொடரடும் இந்த அம்மாவின் பொற்காலம்..

மன்மதன்
29-08-2004, 09:20 AM
விவசாயிகளின் ஏக்கம் ..

வறண்ட பூமி..

என்று தணியும் இந்த சோகம்..

அழகான கவிதை வரிகளாய்..

அசத்தல் பூ..

அன்புடன்
மன்மதன்

பிரியன்
29-08-2004, 06:11 PM
சுரண்டலால் வறண்டுபோன
எங்கள் வயிற்றில் பால்(லிடாயில்)
வார்க்க!!!


வயிற்றில் பால் வார்க்க மழை வரும்...
இயற்கையை நம்பிடுவோம்....

kavitha
30-08-2004, 04:42 AM
ஓட்டு வாங்கி ஊராளப் போனாரே அவர் சட்டை பிடி!
ஆணையம் கூடுமுன்னே கோவணமும் போனதென்று நிரூபி!....
பாலிடாலில் பங்கு கொடு, வேண்டாமென்றால் அவர்
பங்களாவில் பங்கு எடு!
_________________

சபாஷ் அண்ணா.
ஆனால் அவருக்கும் இப்போதெல்லாம் மினரல் வாட்டர் தானே கிடைக்கிறது.
மழையின்றி யாது பயன்?
இப்படியே போனால்..
"பாலிடாயிலில் நீர் பிரிப்பது எப்படி?" என்று கூட ஆராய்ச்சி நடத்த வேண்டி வரும்.

கவிதை(கண்ணீர்) வடித்த பூவிற்கும், மேலெழுப்பிய மன்மதனுக்கும் நன்றிகள்

இளந்தமிழ்ச்செல்வன்
30-08-2004, 07:24 AM
நெஞ்சை உருக்கிவிட்டீர்கள் பூ. இன்றைய நிலையிது. இல்லாமல் ஆக்கவேண்டிய நிலையும் இது.

மன்மதனுக்கு நன்றி

Nanban
02-09-2004, 08:10 PM
சில கவிதைகள் எந்தக் காலத்தும், எந்த இடத்தும் பொருந்துவனவாக இருக்கும். அதே போலத்தான் இந்தக் கவிதையும். விவசாயின் வேதனை தொடர்கதையாய் ஆகிப்போகுமோ என்று அச்சம் எழுகிறது.

மழை பெய்யட்டும், அச்சம் தவிர்க்க....