PDA

View Full Version : அழகு குறிப்புகள்charika
20-08-2008, 10:25 AM
ஒவ்வொரு முறையும் நாம் கண்ணாடி பார்க்கும்போது பெரும்பாலும் கவனிக்காமல் விடும் பகுதி கழுத்துதான். சங்கோடும், அன்னப் பறவையோடும் ஒப்பிடப்படும் கழுத்து பெண்களின் அழகிற்கு மேலும் மெருகூட்டுகிறது.
தங்கள் முக அழகைச் சிரத்தையோடு பராமரிக்கும் பெண்கள் அதே அளவிலான அக்கறையைக் கழுத்தினைப் பராமரிக்கக் காட்டுவதில்லை. ஆனால் முகத்தைப் போலவே கழுத்தையும் பராமரிப்பது மிக அவசியமானது.

பல பெண்களுக்கு அழகான வளவளப்பான முகம் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் சுருக்கங்களோடு சொரசொரப்பானதாக இருக்கும். முகத்தை அழகாகப் பராமரிக்க முடியும்போது கழுத்தைப் பராமரிப்பதும் சாத்தியம் தான். இதை ஒரு சின்ன விஷயமாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உங்கள் தோற்றத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கக் கூடும்.

மென்மையான கழுத்துப் பகுதியை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் தோலின் தன்மை மிருதுவான தன்மையை இழக்கும். சுருக்கங்களோடு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுக்கும்.

எப்பொழுதெல்லாம் முகத்தைக் கழுவுகிறீர்களோ அப்பொழுது கழுத்தையும் சுத்தப்படுத்துங்கள். சுத்தப்படுத்தும் க்ரீம்களாலேயே மசாஜ் செய்யுங்கள். காட்டனால் துடைத்தெடுங்கள். இப்பொழுது உங்கள் பேஷ் வாஷ் க்ரீம்களால் முகத்தையும் கழுத்தையும் கழுவுங்கள். பிறகு ஒரு மாய்ச்சரைசிங் க்ரீமால் மசாஜ் செய்யுங்கள்.

மருத்துவ ரீதியான பிரச்சினைகளும் கழுத்து கருப்பாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். வழக்கமான இந்தப் பராமரிப்பு முறைகள் எதுவும் இதற்கு உதவாது. எனவே தோல் சிகிச்சை நிபுணரைப் பார்க்கலாம். கழுத்தின் பின் பகுதிக்கும் இந்தப் பராமரிப்பு முறைகள் மிக அவசியம்.

நீங்கள் பேஷ’யல் செய்வதற்காக ப்யூட்டி பார்லர்களுக்குப் போனால் கழுத்து, முகம் இரண்டிற்கும் பேஷ’யல் செய்யச் சொல்லுங்கள். ப்ளீச்சிங் செய்யும் ப்யூட்டீசியன் பொதுவாக முகம் மட்டுமா கழுத்திற்குமா என்று கேட்பார். நீங்கள் கழுத்து முகம் இரண்டிற்கும் ஓ.கே. சொல்லுங்கள். அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

இயற்கை மூலிகைகளைக் கொண்டு செய்யும் ப்ளீச்சிங் மற்றும் பேஷ’யலுமே சிறந்தவை. அதுதான் முகத்தையும் தோலின் தன்மையும் நல்ல முறையில் பாதுகாக்கும். பேஷ’யலோடு மசாஜ் செய்யும்போது கழுத்துப் பகுதியிலுள்ள தோலை மென்மையாக்குவதோடு இரத்த ஓட்டத்தையும் žராக்குகிறது.

வீட்டிலிருக்கும் போது முகத்தில் பேஸ் பேக் அணிவதை விரும்பினால் அதையே கழுத்திற்கும் சேர்த்துச் செய்யுங்கள். கழுத்திற்குப் போடுவது கொஞ்சம் சிரமம் தான். யாரையாவது அப்ளை பண்ணச் சொல்லலாம். 15 நிமிடங்களுக்குப் பிறகு அதனைக் கழுவுங்கள். ஒவ்வொருவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகிய கழுத்தை நீங்கள் பெறுவதற்கு இவை தான் எளிய வழிகள்.

charika
20-08-2008, 10:27 AM
எண்ணைய் பசை சருமத்திற்கு...!

ஒரு சிலருக்கு ஆயில் ஃபேக்டிரியே வைக்கிற அளவுக்கு எப்பவும் முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். அவர்கள் நேரம் கிடைக்கிறப்பவெல்லாம் ''ஃபேஸ் வாஷா''ல முகத்துல நுரை வர்ற அளவுக்கு தேய்ச்சுட்டு, பிறகு ஒரு டீஸ்பூன் சர்க்கரையை எடுத்து முகத்துல மெதுவா மசாஜ் பண்ணணும். இதனால வொயிட் ஹெட்ஸ், பிளாக் ஹெட்ஸ் எல்லாம் போறதோட முகத்துல இருக்குற துவாரங்கள்ல அடைச்சிருக்கிற அழுக்கும் வெளியேறிடும். முகமும் பார்க்கப் படு ஃப்ரெஷ் லுக் கொடுக்கும்.
இதே சிசிக்சையை கழுத்துக்கும் செய்யணும். அப்போதான் முகமும் கழுத்தும் ஒரே நிறத்துல இருக்கும்.

குளிக்கிறதுக்கு எப்பவுமே மைல்டான பேபி சோப்தான் பயன்படுத்தணும். எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிற அன்னிக்கு மட்டும் உடம்புக்கு சோப் போடாம, கடலைமாவுல கஸ்தூரி மஞ்சள் கலந்து குளிக்கலாம்.

தலைமுடியைப் பராமரிக்கிறதுக்கு சோம்பல்படவே கூடாது. மாசம் ஒரு தடவை ஹென்னா போடணும்.

ஹென்னா எப்படி தயாரிப்பது?

முந்தின நாளே நெல்லிக்காய் பொடி, மருதாணி, டீ டிக்காஷன் எல்லாத்தையும் தண்*ர் சேர்த்துக் கலந்து இரும்பு கடாயில நல்லா ஊற வச்சிடணும். மறுநாள் இந்தக் கலவையோடு முட்டையோட வெள்ளைக் கரு, தயிர் கலந்து தலையில தேய்ச்சு ரெண்டு மணி நேரமாவது ஊற வெச்சுக் குளிக்கணும். தயிர் கலந்து ஹென்னா போடறதால, பொடுகு தொல்லை ஒழியறதோட, தனியா கண்டிஷனர் போட வேண்டிய அவசியமும் இருக்காது. ஹென்னா போடுற அன்னிக்கு மட்டும் முடிக்கு ஷாம்பூ போடாம, தண்ணியாலதான் அலசணும். அப்போதான் அதோட சாரம் தலையில தங்கும்.

அழகுல உதட்டுக்கு முக்கிய பங்கு இருக்கு. தொடர்ந்து லிப்ஸ்டிக் உபயோகிச்சா உதடு கருத்துப் போயிடும். எப்பவும் லிப் கிளிசரின் அல்லது லிப் கார்ட் தடவிட்டு, அதுக்கு மேலதான் லிப்ஸ்டிக் போடணும். இதனால, உதட்டோட இயல்பான நிறம் மாறாது.

தினமும் தூங்கப், போறதுக்கு, முன்னாடி கை, கால்களை சுத்தமா கழுவிட்டு ஆலீவ் எண்ணெய் தடவணும். இப்படி ரெகுலரா செஞ்சா சருமம் பட்டுப்போல மிருதுவா மாறும்.''

ரெகுலரா பார்லர் போய் ஐ-ப்ரோஸ் ட்ரிம் பண்ணிக்கலாம். ஹேர் கட்-டும் செய்துக்கலாம். இப்படி நம்மள நாமே அழகுபடுத்திக் கொண்டால் எப்பவுமே நாம அழகுதான்.

பள பள பப்பாளிப் பழமே!

முகம் பள பளக்க பழுத்த பப்பாளி விழுது, நான்கு ஸ்பூன் தேன், சிறிது க்ளிசரின் சேர்த்து, கண்ணைச் சுற்றின பகுதி தவிர மீதி இடங்களுக்கு பாக் மாதிரி போட்டு பதினைந்து நிமிஷம் ஊறிப் பிறகுக் கழுவிப் பாருங்க.. முகம் தங்கம்போல ஜொலிக்கும்!

உடம்பு தோல் பள பளக்கவும் பப்பாளிப்பழம் நல்லது. ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சக்கரை (தேவையானால்) சேர்த்து காலை ப்ரேக், பாஸ்ட்டாக சாப்பிட்டுப் பாருங்க... முப்பதே நாளில் தோலில் மாற்றம் தெரியும். மலச்சிக்கல் தீரும், புத்துணர்ச்சி தரும் ரத்தம் சுத்தியாகும்.

பப்பாளிக் காயின் பால் பாத பித்த வெடிப்புக்கு நல்லது.

உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து சாப்பிடலாம்.

பழங்களினால் சாலட் செய்யும் போதும், ஜாம் செய்யும் போதும் பப்பாளிப் பழத்தை நிறைய சேர்க்கலாம்.

இந்தப் பழம் போலவே அத்தி பழமும் உடல் அழகுக்கு உதவும். இதயம் வலுப்பெறும்.

இரத்த அழுத்தம் žராக சாத்துகுடி ரசம், பித்தம் தணிய விளாம்பழம், ஜூரம் தணிய மலச்சிக்கல் நீங்க திராட்சைப்பழம் என்று நிறைய இருக்கிறது!

charika
20-08-2008, 10:29 AM
பொருத்தமான மேக்கப்...

கூந்தல்
* பெண்ணோ ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டும் சிறப்பு, கூந்தலுக்கு உண்டு. ஆனால் அதை பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை பலருக்கு. இதனால், நீண்டு அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக்கொள்ளும் பெண்கள் அதிகம்.

* முடி சின்னதாக இருக்கே என்று கவவைப்படாமல் நம் முக அமைப்பு எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால், எந்த மாதிரி தலையலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கழுத்தின் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்தக் கூடிய விதவிதமான கொண்டை, பின்னல்களை போட்டுக் கொள்ளுங்கள்.

charika
20-08-2008, 10:30 AM
குட்டை முடி

* உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கி வாரி கட்டிக் கொள்ளலாம். நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.

* நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கமும் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும்.

* அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும்படி வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.

* அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர் கட் பண்ணலாம். நெற்றி முழுக்க முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.

* குட்டைக் கழுத்து: குதிரை வால் கொண்டை பொருத்தம்.

* தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நேராக்கி ''சி'' வடிவமாக வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவது போல் அமையுங்கள் அழகாக, வித்யாசமாக இருக்கும்.

charika
20-08-2008, 10:31 AM
நீளமான முடி

* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக பொருந்தும்.

* ஃப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால், முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.

* முடியை தூக்கி வாரி கொண்டையின் மேல் ப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டால் அழகுதான்.

* நீளக் கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.

* மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக இருக்கும். கழுத்தை ஒட்டி வரும்படியாக சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.

* மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினார்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போன்ற கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.

* உருண்டை முகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.

* ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் இருந்து பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக் கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.

* சதுரமுகம்: தளர (காதை மூடிய பின்னல்), கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்க விட்டால் மேலும் அழகாக இருக்கும்.

* குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.

* உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம். ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளுங்கள்.

* குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.

* எல்லோருமே கொண்டை வலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை (ஓவராக அல்ல) ஒட்டி வைத்துக் கொண்டால் விசேஷங்களுக்கு செல்லும்போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.

charika
20-08-2008, 10:32 AM
பொட்டு

* உடைக்கேற்ற டிசைன் பொட்டு அதே நிறத்தில் தேர்ந்தெடுங்கள். பொதுவாக மெரூன் பொட்டு எல்லா நிற உடைகளுக்கும் பொருந்தும்.

* உருண்டை முகம்: வட்டம், உயரம் என எல்லா பொட்டும் பொருந்தும். சிறிய, நீட்டப் பொட்டு சூப்பர்.

* குறுகிய நெற்றி: சிறிய டிசைன் பொட்டுக்கள் பொருந்தும்.

* நீள முகம்: கலர் சாந்தினால் அகல டிசைன் வரைந்து கொள்ளலாம்.

* சதுர முகம், பரந்த நெற்றி: நீள டிசைன் பொட்டுக்கள் வைக்கலாம்.

* ஜ“ன்ஸ் அணிந்தால்கூட பாம்பு போன்ற வளைந்த, நீள டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.

charika
20-08-2008, 10:32 AM
வெயியிலில் சருமம் கருக்காமல் இருக்க...

குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.

charika
20-08-2008, 10:33 AM
உடல் சூடு தணிய...

தயிரில் ஊற வைத்த வெள்ளரித் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சூடும் குறையும்.

charika
20-08-2008, 10:33 AM
கண் கருவளைம்...

கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க, விளக்கெண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றைக் கலந்து கண்களைச் சுற்றித் தடவி வந்தால் கருவளையும் காணாமல் போகும்.

charika
20-08-2008, 10:34 AM
துர்நாற்றம் போக...

குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு வெப்பமூட்டி அந்த நீரில் குளித்து வந்தால் வேர்வை நாற்றம் குறையும்.

ஓவியா
20-08-2008, 10:34 AM
வணக்கம் சரிக, நலமா?

மன்றத்திற்க்கு நல் வரவுகள்.

இந்த தகவல்கள் பரபரப்பு பகுதிகளிருந்து (http://www.paraparapu.com/latestnews.php/2008/05/23/2958-2979-3021-2979-3016-2991-3021-2986-2970-3016-2970-2992-3009-2990-2980-3021-2980-3007-2993-3021-2965-3009.html) அப்படியே காபி சேய்து இங்கு பதிக்கப்பட்டுள்ளன.

கருவின் சுருக்கம் எழுதி அதன் சுட்டியை மட்டும் தாருங்கள்.

நன்றி பரபரப்பு என்றும் போடவில்லை!!

தமிழ் மன்ற விதிகளின் படி இது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

உங்கள் சொந்த படைப்புகளை தாருங்கள். இங்கு சொந்த படைபுகளுக்கே முக்கியதுவம்.

charika
20-08-2008, 10:34 AM
கண்களைக் காக்க...

வெளியில் காயும் அனல் உங்கள் கண்களை பாதிக்காமல் இருக்க வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைத்துப் பத்து நிமிடம் அமர்ந்திருங்கள். கண்கள் மெருகேறும்.

charika
20-08-2008, 10:35 AM
கூந்தல் பராமரிப்பு...

வாகனத்தில் போகும் போது தலையில் ஸ்கார்ப் அல்லது தொப்பியாவது அணியுங்கள். அடி முடியில் வெயில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இரவில் மீதமிருக்கும் சாதத்தில் ஊற்றி வைத்திருக்கும் நீரைக் கொண்டு காலையில் உங்கள் கூந்தலை அலசுங்கள். கவிபாடும் உங்கள் கூந்தல்.

தீபா
20-08-2008, 10:36 AM
இதையெல்லாம் எங்கெயோ கேட்டமாதிரியெல்லவா இருக்கு!!! பரபரப்பாக இருக்குமோ?

எங்கிருந்து சுட்டீர்களோ அவர்களுக்கு நன்றி போடுங்க மேடம்.. பரபரப்பு காரங்க அப்பறம் பரபரத்துருவாங்க.

charika
20-08-2008, 10:40 AM
கூலிங் ஐ மஸாஜ்:

இரவு, பகல் பாராமல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இச்சிகிச்சை ஒரு வரப்பிரசாதம். கண்களுக்கு உண்டாகும் அதிகக் களைப்பு, சூடு இவையெல்லாம் அடியோடு நீங்கிவிடும். இதற்கென்றே உருவாக்கப்பட்ட ''ஜெல் மாஸ்''கை ப்ரீசரில் வைத்து எடுத்து கண்களைச் சுற்றி அணிவித்து சிகிச்சை தரப்படுகிறது.

charika
20-08-2008, 10:41 AM
மைக்ரோ டெர்மா சிகிச்சை:

இது முக்கியமாக, சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் ஆக்க உதவுகிறது. வெயிலில் அதிகம் சுற்றி, வேலை பார்த்து சருமம் கறுத்துக் காணப்படுபவர்கள் குறிப்பாக இளைஞர்கள் இச்சிகிச்சையை மேற்கொண்டால் இழந்த அழகை மீண்டும் பெறலாம்.

charika
20-08-2008, 10:41 AM
ஐ ஸோன் ட்ரீட்மெண்ட்:

சிலருக்குக் கண்ணுக்கு அடியில் கருவளையம் தோன்றி, சருமம் பொலி விழந்து மங்கலாகக் காணப்படும். இச்சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள கரு வளையம், சுருக்கங்கள் நாளடைவில் மறையும்.

''சருமம் மினுமினுப்புடன் அழகாய் மிளிர்வதற்கு உடலில் கொஞ்சம் கொழுப்புச் சத்தும் அவசியம்'' என்கிறார் வீணா..

charika
20-08-2008, 10:42 AM
முகம் பொலிவு பெற:

சாதாரணமாக நடப்பதைவிட சற்று மெதுவாக நடக்க முயலுங்கள்.

மகிழ்ச்சியான, மனநிறைவான உணர்ச்சிகளை தினமும் பத்து நிமிடங்கள் மனதிலே கொண்டு வாருங்கள்.

சாதாரணமாகப் பேசுவதைவிட குறைவாகப் பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.

உங்களுக்காகத் தினமும் 30 நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்த முப்பது நிமிடங்களுக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள்.

சாப்பிட்ட உடனே எழுந்து ஓடாதீர்கள். அமர்ந்து பின்னர் எழுந்து செல்லுங்கள்.

பேருந்தில் போகும்போதும், ஒரு கூட்டத்தில் பங்கேற்கும் போதும், மற்ற நேரங்களிலும் மக்களின் முகங்களைப் பாருங்கள்.

பிறர்மேல் உள்ள அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.

உங்கள் கோபத்திற்கு உரிய காரணங்களைக் கண்டுகொள்ள இன்று முயலுங்கள்.

அழகான மரம், மலர் போன்ற இயற்கை காட்சிகளை நின்று ரசியுங்கள்.

உங்கள் முகம்கூட மலர்ச்சியாக இருக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பிறரைப் பார்க்கும்போது புன்முறுவல் பூத்துப் பழகுங்கள்.

வேகமாகப் போகிறவன் முகம் கவர்ச்சியாகவோ, அருளானதாகவோ இருக்க முடியாது என்பதை உணருங்கள்.

charika
20-08-2008, 10:43 AM
தண்*ரை மாற்றினால்!

வெளியூர் போனால், குடிநீர் குடிக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உள்ளூர் தண்*ரை குடித்துவிட்டு, வெளியூர் தண்*ர் குடித்தால், ஒத்துக்கொள்ளாது என்பது சிலருக்கு தெரியாது. குடித்த பின்னர் தொல்லை வரும் போதே உணர்வர். சிலர் ஊர் ஊருக்கு மாறுதல் கிடைக்கும் போது, அவர்கள் குளிக்க பயன்படுத்து தண்*ர் தன்மையும் மாறுகிறது. இதனால், பாதிக்கப்படுவது அவர்களின் தலைமுடி தான்.

charika
20-08-2008, 10:43 AM
கவலைப்பட்டாலும்...

மேற்கண்ட இரண்டைக் காட்டிலும், முக்கியமானது கவலை தான். ஒருவரின் கவலை தான், அவரின் தலைமுடி கொட்டவும் காரணம். குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். ஆறு மணி நேரமாவது தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி ஆரோக்கியத்துக்கும் இது தேவை. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு கவலை தானாக வரும். அப்படியிருக்கும் போது, முடிகொட்டத் தான் செய்யும்.

charika
20-08-2008, 10:44 AM
இதுக்கு என்ன செய்யணும்?

தலைமுடி, இந்த இரண்டு வகையில் எந்த "டைப்'' என்று தெரிந்து கொண்டால் தான் நாம் அதற்குரிய ஷாம்பூவை தேர்ந்தெடுக்க முடியும். ஆயில் முடியுள்ளவர்கள், அந்த ஆயிலை நீக்கி žராக்கும் வகையில் உள்ள "டீப் கிளீன்சிங்'' ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும். வறண்ட தலைமுடி உள்ளவர்கள், கண்டிஷனர் தரம் அதிகம் உள்ளதும், எஸ்.எல்.இ.எஸ்., என்று அழைக்கப்படும் ரசாயனம் கலந்த ஷாம்பூவை பயன்படுத்தினால் நல்லது.

charika
20-08-2008, 10:44 AM
வழுக்கை விழுதே...

ஆண்களில் முடிகொட்டி வழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. வானிலை, தண்*ர், கவலை ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் தான் பலரின் வழுக்கைக்கு பின்னால் உள்ளவை. கோடை வெயில் பிளந்தாலும், அதிக பனி பெய்தாலும் சிலருக்கு "முடி''வில்லா பிரச்னையாக தான் உள்ளது. கோடையில் வியர்த்து எண்ணெய் முடியாகிவிடுவதும், பனிக்காலத்தில், முடிகள் வறண்டுபோவதும் இவர்களுக்கு நேர்வதுண்டு.

charika
20-08-2008, 10:45 AM
முடிவெட்ட நாலணா

நாலணா கொடுத்து தலைமுடியை கத்தரித்துக்கொள்ளும் காலம் போய்விட்டது; சிகையலங்கார கூடத்தில் போய் முடிவெட்டும் போக்கு, இளைஞர்களிடம் அதிகரித்துவிட்டது. பியூட்டி பார்லர் போகாத பள்ளிச்சிறுமிகள் இல்லை. அந்த அளவுக்கு அழகாக்கிக்கொள்வதில் பலரும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டனர்.

மாதம் பல ஆயிரம் வரை செலவழிப்பவர்களும் உண்டு. அதனால், சந்தையில் கண்ட கண்ட ஆயில்கள், ஷாம்பூக்கள் குவிந்து வருகின்றன. தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாதவர்கள், இந்த தரம் குறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் வரும் ஆபத்து குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.

charika
20-08-2008, 10:45 AM
புரிந்து கொள்ளுங்கள்

உங்கள் முடி, ஆயில் முடியா, வறண்ட முடியா என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்? இதோ எளிய வழி. ஒரு "பிளாட்டிங்'' பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். தலைமுடியில் மிதமாக அழுத்தி, ஒரு நிமிடம் வரை வைத்திருங்கள். இப்போது எடுத்துப்பாருங்கள்; பேப்பரில் பிசுபிசுப்புடன் ஆயில் தன்மை இருந்தால், உங்கள் முடியில் ஆயில் தன்மை அதிகம் இருக்கிறது என்று பொருள். அப்படியில்லாமல், பேப்பரில், தலைமுடியின் காய்ந்த பகுதியின் துகள்கள் இருக்குமானால், உங்கள் தலைமுடி, வறண்ட தன்மை கொண்டது.

charika
20-08-2008, 10:46 AM
நீண்ட கூந்தலா?

நீங்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் பணியாற்றுகிறீர்கள் என்றால், உங்களால், தலைமுடியை பராமரிக்க போதுமான நேரம் இருக்காது. அதனால், தோளில் பரவும் வகையில் தலைமுடியை குறைத்துக்கொள்ளலாம். முடியை எப்போதும் "ட்ரிம்'' செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வறண்டுபோய் விடும். கூந்தலுக்கு ஏற்ற ஷாம்பூ, கண்டிஷனரை பயன்படுத்த தெரிய வேண்டும்.

charika
20-08-2008, 10:47 AM
எந்த சத்து தேவை?

முடிக்கு எந்த சத்துக்கள் தேவை தெரியுமா? ஒன்று; இரும்புச்சத்து. மற்றது; புரோட்டீன். இந்த இரண்டும் மிக முக்கியமானவை. இவற்றில் குறைபாடு இருந்தால், தலைமுடி கொட்டும்; ஆண்களுக்கு வழுக்கை ஏற்படும். சிலர் குண்டாக இருந்தாலும், ரத்தசோகை இருக்கும். அதுபோல, சிலருக்கு புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும். இவர்களுக்கு முடிகொட்டுவதை வைத்தே இதை தெரிந்து கொள்ளலாம். அதுபோல, ரத்தத்தில் "பெர்ரட்டின்'' அளவை வைத்தே, ரத்த சோகை அளவை கண்டுபிடிக்கலாம்.

charika
20-08-2008, 10:47 AM
பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு. நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்ப்போமா?
சுருக்கங்கள் மற்றும் கோடுகள்

கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர žக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம். கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் தரலாம். கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி விடும். சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஆயில் உபயோகிக்கலாம். மோதிர விரலால் மிகமிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம்.

தேயிலையைக் கொதிக்க வைத்த தண்*ரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினமும் செய்யவும்.

கருவளையம்:

சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகக் குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்ப்யூட்டர், டி.வி. முன் அதிக நேரம் இருப்பது என கருவளையங்களுக்கான காரணங்கள் பல. இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரியாக்கலாம்.

எட்டு மணி நேரத் தூக்கம் முதல் சிகிச்சை. பகல் நேரத்தில் உள்ளங்கைகளைக் குவித்து கண்களின் மேல் வைத்து மூடியப்படி அடிக்கடி செய்யலாம். கண்களை வேகமாக மூடித் திறப்பது போலச் செய்வது, அதற்கு ஒருவித மசாஜ் மாதிரி அமையும்.

கண்களை இறுக மூடவும். பிறகு அகலமாகத் திறக்கவும். இதே போல 5 முறைகள் செய்யவும். புருவங்களைக் குறுக்காமல், கண் இமைகள் மட்டும் மூடி, மூடித் திறக்க வேண்டும். நெற்றி, முகத் தசைகள் சாதாரணமாக இருக்கட்டும். இந்தப் பயிற்சி கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கான அற்புதப் பயிற்சி. கருவளையங்களைப் போக்க இதைத் தொடர்ந்து செய்து வரலாம்.

கருவளையம் ரொம்பவும் அதிகமிருந்தால் பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற ஐ மசாஜ் பலனளிக்கும்.

வீங்கின கண்கள்

சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதிரி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண்*ரால் மாறி, மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

சிவந்து, கண்*ர் வடியும் கண்கள்

கண்களுக்கு உபயோகிக்கிற மை, பிரஷ், ஐ லைனர், மஸ்காரா போன்ற ஏதேனும் அலர்ஜியானால் இப்படி கண்*ர் வடியலாம். வாயில் துணியை வைத்து ஊதி கண்களின்மேல் வைக்கிற பழக்கம் வேண்டாம். எச்சில் மூலம் தொற்றுக் கிருமிகள் கண்களுக்குள் போகும். கண்களைக் கழுவிவிட்டு அப்படியே காத்திருக்கலாம். அலர்ஜி காரணமாக உண்டாகியிருந்தால் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்களுக்கான மேக்கப் சாதனங்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

கண்களுக்கான மேக்கப்பை நீக்க வேண்டியதன் அவசியம்:

இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும். இரண்டு, மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும், கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி, கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.

சில டிப்ஸ்:

சுத்தமான தண்*ரால் அடிக்கடி கண்களைக் கழுவவும்.

சாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டியது முக்கியம்.

கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை சில நொடிகளாவது மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடிய பச்சை, நீல நிறங்களை அடிக்கடி சிறிது நேரம் பார்க்கலாம்.

கண்களைச் சுற்றி எப்போதும் மோதிர விரலால்தான். அதுவும் மிக மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

எட்டு மணி நேரத் தூக்கம். 10 முதல் 12 டம்ளர் தண்*ர் குடிப்பது இந்த இரண்டும் மிக முக்கியம்.

சிவா.ஜி
20-08-2008, 12:40 PM
சரிகா அவர்களே மன்ற உறுப்பினர்கள் எழுதியிருப்பதை, கவனிக்க மறந்துவிட்டீர்களா? ஒருவருக்கு இருவராக, இந்தப் பதிவுகளின் மூலத்தை சொல்லியும் தொடர்ந்து அதையே பதிக்கிறீர்கள். இது உங்கள் சொந்த எழுத்தாய் இல்லாத பட்ட்சத்தில், சுட்டியை மட்டுமோ அல்லது குறைந்த பட்சம் மூல தளத்துக்கு நன்றியோ குறிப்பிடுங்கள்.