PDA

View Full Version : ஈற்றடி கொ(க)ண்டு கவிபடி ........



செல்வா
20-08-2008, 04:04 AM
எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் இருந்தாலும் மன்ற கவிஞர்களின் திறமையில் எனக்கு அபார நம்பிக்கை அதனால் இந்தத் திரியைத் துவங்குகின்றேன்.

ஏற்கெனவே கவிச்சமர் ... சொற்சிலம்பம் ..... நிழலுக்கு உயிர் என பல கவிதைத் திரிகள் வெற்றியோடு வலம் வருகிறது. அந்த வரிசையில் இது என் ஒரு புது முயற்சி என்றாலும். நம் தமிழுக்கு இது மிக மிகப் பழையது.

ஈற்றடி கொண்டு கவிதை படைப்பது...

அதாவது ஒரு வரி (அ) அடி ஒருவர் கொடுக்க கவிதை எழுதுபவர் கவிதையின் கடைசி வரி அந்த வரியாக வருமாறு எழுத வேண்டும்.

கவிச்சமரில் முதலாமவரின் இறுதி வரி அல்லது வார்த்தையை வைத்து கவிதையை துவங்குவோம். இங்கே கொடுக்கப் படும் வரியை இறுதி வரியாகக் கொள்ள வேண்டும்.

நன்றாகக் கவனியுங்கள் இறுதி வரி ... வார்த்தையல்ல.

ஒருவர் கவிதை எழுதி விட்டால் அடுத்த கவிதைக்கான வரியை அவரே தரவேண்டும்.

இப்படியாகத் தொடரவேண்டும்....

கவிதைகள் எதைப்பற்றியும் இருக்கலாம்...
இரண்டே இரண்டு விதிகள்.

1. கவிதை குறைந்த பட்சம் நான்கு வரிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
2. இறுதி வரி முதலாமவர் கொடுத்த வரியாக இருக்க வேண்டும். இறுதி வரி கவிதைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும்.


அவ்வளவு தான் களம் புகலாமா?

ஏடும் எழுத்தாணியும் தயாரா கவிஞர்களே....

முதல் கவிதைக்கான ஈற்றடியை நானே கொடுக்கிறேன்.

முதல் கவிதை மன்றத்திற்கே ....


"களம் தந்தாய் தமிழ் மன்றமே...!"

இந்த அடியில் முடிவதாகக் கவிதை இருக்க வேண்டும்...

சிவா.ஜி
20-08-2008, 04:23 AM
வெற்று நிமிடங்களை வேதனையில் கழித்து
பற்றிக்கொள்ள கொழுவில்லா
ஒற்றைக்கொடியாய் ஊசலாடியபோது
உற்ற உறவுகளை பெற்று மகிழ்ந்திட
உளம் நிறைந்து உணர்வு பகிர்ந்திட
களம் தந்தாய் தமிழ் மன்றமே.....!

அடுத்த ஈற்றடி "தினம் தினம் கிரகணமே"

தீபா
20-08-2008, 04:25 AM
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் செல்வா.. புதுமை என்றும் தமிழ்மன்றத்திற்கே சொந்தம்... :)

எம்மைப் போன்ற இளங்கவிகளுக்கும்
உம்மைப் போன்ற இலக்கியப் பேராளிகளுக்கும்
களம் தந்தாய் தமிழ்மன்றமே!!!

ஏதோ நம்மளால முடிஞ்சது.!!! :D

தீபா
20-08-2008, 04:28 AM
வெற்று நிமிடங்களை வேதனையில் கழித்து
பற்றிக்கொள்ள கொழுவில்லா
ஒற்றைக்கொடியாய் ஊசலாடியபோது
உற்ற உறவுகளை பெற்று மகிழ்ந்திட
உளம் நிறைந்து உணர்வு பகிர்ந்திட
களம் தந்தாய் தமிழ் மன்றமே.....!

அடுத்த ஈற்றடி "தினம் தினம் கிரகணமே"

அருமை!!!

சொல்லத் தவிப்பதை சொல்லத்தகுந்தவர் சொல்லும்போது எனக்குச் சொல்ல வார்த்தை இல்லை திரு.சிவா.ஜி.

இம்மாதிரி அடிகள் எதுகை மோனைகளுக்கான பயிற்சியாக இருக்கும்... என்பது என் கருத்து.

தொடருங்கள்...... :icon_b:

சிவா.ஜி
20-08-2008, 04:31 AM
நன்றி தென்றல். அடுத்த ஈற்றடிக்கு..பொருத்தக் கவியை நீங்களே புனையலாமே...?

செல்வா
20-08-2008, 05:12 AM
வெற்று நிமிடங்களை வேதனையில் கழித்து
பற்றிக்கொள்ள கொழுவில்லா
ஒற்றைக்கொடியாய் ஊசலாடியபோது
உற்ற உறவுகளை பெற்று மகிழ்ந்திட
உளம் நிறைந்து உணர்வு பகிர்ந்திட
களம் தந்தாய் தமிழ் மன்றமே.....!

அடுத்த ஈற்றடி "தினம் தினம் கிரகணமே"

ஆகா... முதல் கவியே சகலகலா வல்லவரிடமிருந்து.....
நன்றி அண்ணா.... ரொம்ப நல்லா வந்திருக்கு.

வாழ்த்துக்கள்.

செல்வா
20-08-2008, 05:14 AM
அருமை!!!

சொல்லத் தவிப்பதை சொல்லத்தகுந்தவர் சொல்லும்போது எனக்குச் சொல்ல வார்த்தை இல்லை திரு.சிவா.ஜி.


அதே அதே..... இந்த வரி எனக்கும் பொருத்தம்... தொடருங்கள்....

அடுத்த ஈற்றடி

தினம் தினம் கிரகணமே

இதில் முடியுங்கள். :)

தீபா
20-08-2008, 05:21 AM
நன்றி தென்றல். அடுத்த ஈற்றடிக்கு..பொருத்தக் கவியை நீங்களே புனையலாமே...?

புனைவில் பொருத்தமானவளாக என்றும் எனதெண்ணம் பொருத்தப்படவில்லை. விண்டு நிற்கும் சொற்சிதறல்களைச் சேகரித்து அழகுபார்க்க நினைக்கமட்டுமே துள்ளுகிறேன் என்பதால் திறம் மிகுந்த நீங்கள் நடத்துங்கள் கச்சேரி. ஓரத்தூணைப் பிடியாக்கி, விரலை நாணத்தோடு கடித்து பார்வையிடுகிறேன்.

ம்ம்ம்... கிளப்புங்கள்>>!!!

(முதல் கவிதை மட்டும் எழுதலாம்னு நினைச்சேன்.. வெச்சிட்டீங்களே ஆப்பு!!!! :D)

தீபா
21-08-2008, 11:08 AM
அதே அதே..... இந்த வரி எனக்கும் பொருத்தம்... தொடருங்கள்....

அடுத்த ஈற்றடி

தினம் தினம் கிரகணமே

இதில் முடியுங்கள். :)

இன்ன்னும் யாரும் வரவில்லையா?

சுகந்தப்ரீதன்
25-08-2008, 10:26 AM
அவன் அவளை நோக்க
அவர்கள் அவனை நோக்க
அதன்பின் அவர்கள் நொக்க
பாவம் கவிதை எழுத ஆசைப்பட்டு
கவிதாவை நோக்கிய கரணுக்கு-இனி
தினம் தினம் கிரகணமே...!!

((முடில்ல.....அண்ணா... ரொம்ப கஸ்டபடுத்திட்டீங்கன்னு சொல்லலை கற்பனை வத்திப்போச்சுன்னு சொல்லுறேன்.. உங்களுக்கல்ல.. எனக்கு...))

சரி...அடுத்த ஈற்றடிக்கு தென்றலை அழைப்போமா..??

"தென்றல் காற்றும் தென்னங்கீற்றும்"

தாமரை
25-08-2008, 10:35 AM
சளசளவென
வம்பு பேசி
ஊரெங்கும் நம்காதலை
சொல்லிக் கொண்டிருக்கின்றன
தென்றல் காற்றும் தென்னங்கீற்றும்.

அடுத்த ஈற்றடி..

ஈரத்தில் நனைந்த கனவு

சிவா.ஜி
25-08-2008, 10:38 AM
முதிர்ந்த மோகத்தில் அவன்
மூச்சுக்காற்றில் அவளின்
நெளிகுழல் மேலும் நெளிந்து நெகிழ
நம்மைப்போலவே அவர்களென
நமுட்டுச் சிரிப்பு சிரிக்கின்றன
தென்றல் காற்றும் தென்னங்கீற்றும்...!

சிவா.ஜி
25-08-2008, 10:44 AM
ஆஹா...தாமரை முந்திட்டார். சரி என்னுடைய கவிதை இருக்கட்டுமா எடுத்துவிடட்டுமா?

தாமரை
25-08-2008, 10:58 AM
இருக்கட்டும். ஈரத்தில் நனைந்த கனவு.. பாடுங்க

நம்பிகோபாலன்
25-08-2008, 11:20 AM
என்னை விட்டு
நிழலாய் நீ பிரிந்திருந்தாலும்
நிஜமாய் வாழ்கிறது
உனக்கு பிடித்த பாடலை
என் உதடுகள்
முணுமுணுக்கும் பொழுதும்
கண்ணாடியில் தெரிந்து
மறையும்
உன் பிம்பம் சொல்கிறது
நம் காதலை கண்ணீருடன்
ஈரத்தில் நினைந்த கனவென்று......

அடுத்த ஈற்றடி
மரகிளையிலிருந்து உதிர்ந்த சிறகாய்

ஆதி
25-08-2008, 11:25 AM
வெட்டிய காட்டின்
மொட்டை நிலங்களில்
எழுந்த கான்க்ரிட் வெளிகளில்
விழுந்த மழைத்துளிகளுக்கும்
கால்சுட்டன...

நிழல் காலணி தயாரிக்கும்
நினைப்புகள் அந்த
சூட்டில் வெந்தன..

இலை விரித்தாடி
தலை குளிக்க இயலாததால்
காய்ந்த மணம் வீசியது
மரக்கட்டையின்
ஈரத்தில் நனைந்த கனவு..

அடுத்த ஈற்றடி..

எழுதிட ஈற்றடி இந்தா.. :)

venkat1210
23-05-2010, 10:58 AM
நற்றமிழில் கவி பயில
களம் தந்த தமிழ் மன்றம்
நல்லதொரு கவி நான் பயில
வள்ளல் ஆதன் சற்றேனும் சளைக்காமல்
எழுதிட அடி ஈந்தார்
எழுதிட ஈற்றடி இந்தா..

அடுத்த ஈற்றடி வளர்க என் கன்னி தமிழே

நதி
23-05-2010, 10:59 PM
அல்லடி நீ
அள்ளடி
வெல்லடி....!

சொல்லடி தெள்ளடி
சொல்லாதடி பொல்லடி

என்னடி கொல்லடி
எண்ணடி கொள்ளடி....!

வளர்க*
என் கன்னி
தமிழே..

தொடர்க...
என் சுவ(ட) டி..



.