PDA

View Full Version : கவிச்சமர் - களம்Pages : [1] 2 3 4 5 6 7

அமரன்
20-08-2008, 12:16 AM
பழைய திரி நீளமாக இருப்பதால் புதிய திரி தொடங்கியுள்ளேன். சுட்டிப்பையனின் வெற்றித்திரி அறிவிப்பு இதோ..


மன்றத்தில் எதற்க்கும் பஞ்சம் இருக்கும் ஆனால் கவிஞர்களுக்கு மட்டும் பஞ்சமில்லை, இதோ உங்கள் எல்லோருக்கும் ஒரு சிறு வேலை அதுதான் கவிச்சமர்

ஒருவர் முதலில் ஒரு கவிதை எழுதுவார் அவர் முடிக்கும் கடைசி சொல்லில் அல்லது கடைசி வரியில் அடுத்தவர் கவிதை வடிக்க வேண்டும் முதலாதவரின் கவிதைக்கு எதிராகவோ இல்லை அதை சம்பந்தப் படுத்தியோ. அது சம்பந்தப் படாமலோ இருக்கலாம்

குறைந்தது 4 வரிகளாவது இருக்க வேண்டும்


கடைசிக்கவிதை இதோ..


சீராகுமா? சீறுமா?
என்ற
விலைவாசிக் கேள்விக் கரைகளுக்குள்
நுரைதள்ள ஓடுகிறது
கோட்டு வர்க்க வாழ்க்கை.

ஓவியன்
20-08-2008, 03:13 AM
வாழ்க்கை
எழுத்திலும் சரி
நடப்பிலும் சரி
நம் கையில் தான்
தங்கியுள்ளது...!!

மதுரை மைந்தன்
20-08-2008, 03:55 AM
தங்கியுள்ளது
அனுபவம் மட்டுமே
இடம் மாறலாம்
பொருள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
தங்கியுள்ளது
அனுபவம் மட்டுமே

சுட்டிபையன்
20-08-2008, 06:53 AM
அனுபவம் மட்டுமே
எந்தன் வாழ்க்கையின்
வெற்றியென்பது
மடமையடா
அனுபவத்தையும்
தாண்டி ஆயிரமுள்ளது
நன் உலகில்

poornima
20-08-2008, 09:57 AM
உலகில் சிறந்த
ஒரு இலக்கியம்
படைக்க ஆசை
நின்று கொஞ்சம்
பேசி விட்டு
போயேன்...

நம்பிகோபாலன்
20-08-2008, 10:46 AM
போயேன் என்று
உதடுகள் உரைத்தாலும்
உன் விழி
என்னை போகாமல்
தடுப்பதை
நீ அறிவாயா

மதுரை மைந்தன்
20-08-2008, 12:41 PM
நீ அறிவாயா?
உன்னை நான் பூஜிக்கிறேன் என்று
நீ அறிவாயா?
நீ இல்லாமல் என் உலகம் இயங்காது என்று
நீ அறிவாயா?
நமது தொடர்பு புனர் ஜென்மனாது என்று
நீ அறிவாயா?
நீ இல்லாமல் நான ஒரு நடை பிணம் என்று
நீ அறிவாயா?
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்
உனக்குள் நான் இருக்கிறேன் என்று

அக்னி
20-08-2008, 03:54 PM
என்று
உன் மௌனம்
என்னை அழைக்கின்றதோ..,
அன்று
என் மூச்சு
உன்னோடு காதல் பேசும்...

poornima
20-08-2008, 04:24 PM
பேசும் வார்த்தைகள்
எல்லா புரியவே இல்லை
கொஞ்சம் தோள்சாய்ந்துக்
கொள்ள இடம் கொடு
அது போதும்..

மதி
20-08-2008, 04:25 PM
காதல் பேசும்
கண்களால்
சாகச் சொன்னாய்
நீ..!

மோதல் வந்தால்
வெல்லும் நான்
வீழ்ந்து போகிறேன்
உன் கண்ணில்..!

kampan
20-08-2008, 05:40 PM
உன் கண்ணில் இருக்கும் கரு விழிகள்
என் உள்ளங்களை கட்டிப்போடும் கைவிலங்குகள்

வாசல் வரை வந்து வழிகாட்டும் உன் கைகள்
எனக்கு நீ வீசும் பாசக்கயிறுகள்.
பற்றிழுக்கவல்ல என்னை பறித்தெடுக்க

அமரன்
20-08-2008, 08:01 PM
பறித்தெடுக்க முயன்றாலே
குத்திக் கிழிக்கும் முட்களும்
மலர்ந்துவிடுகின்றன
பறிக்கப்படாது வாடி வதங்கும்
பூக்களைப் பறிக்கையில்.

மதுரை மைந்தன்
20-08-2008, 08:58 PM
பூக்களைப் பறிக்கையில்
செடிகளுக்கு வாயிருந்தால் அவை அழும்
பூக்களைப் பறித்தல்
கன்றை பசுவிடமிருந்து பிரித்தலுக்கு சமம்
பறிக்கப் பட்ட பூக்கள் வாடிவிடும்
பிரிக்கப் பட்ட கன்றுகள் உயிரை விடும்

அமரன்
20-08-2008, 11:14 PM
உயிரை விடும்
கணம் அறிந்ததாலோ
வெடித்து அழுகிறது
விளக்கு!

அனுராகவன்
21-08-2008, 07:35 AM
விளக்கு
எரிய திரி
மனிதன்
மலர
தியானம்

அக்னி
21-08-2008, 01:32 PM
தியானம்
உன் நிறைவு...
தியாகம்
உன்னால் நிறைவு...

மதி
21-08-2008, 01:46 PM
நிறைவு கொண்டிருந்தேன்
உன்னை நினையா நாளில்
இன்று
நிறைய விரும்புகிறேன்
நீயும் வா அருகில்

அக்னி
21-08-2008, 02:28 PM
அருகில்
வந்தும் தீண்ட மறுத்த
உன் தாவணி முனை,
உரசியிருந்தால்
பற்றியிருக்குமா
என் நெஞ்சத்(தில்)துக்
காதல் தீ...

poornima
21-08-2008, 02:36 PM
காதல் தீயை
மூட்டிவிட்டு
நீ பாட்டுக்கு போய்விட்டாய்
பற்றி எரிகிறது
பசலை தீ

அக்னி
21-08-2008, 02:56 PM
பசலைத் தீ
உன் காகித மடலில்
எரிவது,
நீ சொல்லாமலே எனக்குத்
தெரிகின்றது...
கடலைத் தாண்டி வந்த
என்னால்,
இன்று
உன் காது மடல்களில்
என் முத்தத்தைச்
சத்தமாகத் தர மட்டுமே
முடிகின்றது...

poornima
21-08-2008, 02:58 PM
முடிகின்ற
இதையெல்லாமா
எழுதிக் கொண்டிருப்பது?
கடல் தாண்டி வர
முடிந்த உன்னால்
இந்த மடல் தாண்டி
வர முடியாதா
என்ன?

அக்னி
21-08-2008, 04:41 PM
”என்ன...”
கேட்டது
உன் இதழல்ல,
புருவம்...
”ஒன்றுமில்லை...”
என்றாடியது என் தலை.
ஆனால்,
விழி மட்டும்
உன்னை விட்டு
விலகவில்லை...

மதுரை மைந்தன்
21-08-2008, 04:51 PM
விலகவில்லை
சான்றோர் பலர் எடுத்துரைத்தும்
சாதி வேறுபாடுகள்

விலகவில்லை
சுதந்திரம் கிடைத்தும்
அடிமைத்தனம்

விலகவில்லை
இந்தியன் அன்னியன் படங்கள் வந்தும்
லஞ்ச லாவண்யங்கள்

அக்னி
21-08-2008, 04:57 PM
லஞ்ச லாவண்யங்கள்
அதிகரித்தன..,
இந்தியன், அந்நியன் படங்கள்
தந்த
நெளிவுசுளிவுகளால்...

அமரன்
21-08-2008, 08:12 PM
நெளிவு சுழிவுகள் அலங்கரித்த
கரிநிறச் சித்திரக்கதை
வண்ணம் பூசிக்கொண்டது
தங்கையின் வார்த்தைகளால் ..

kampan
21-08-2008, 08:44 PM
வார்த்தைகளால் கோப்பது கவிதை
கவிதைகளால் கோப்பது கற்பனை

நம்பிகோபாலன்
22-08-2008, 08:02 AM
கற்பனையில்
கவிதையாம்
யாரங்கே
என்னவளை பார்த்து
ஒருமுறை சொல்லுங்கள்
கவிதை கற்பனையில்
வருவதா
இல்லை காதலியால்
வருவதா என்று.

அமரன்
22-08-2008, 08:31 AM
கற்பனையால் வருவதா
காதலியால் வருவதா என்று தேடும்
சூழ்நிலை சூட்டில்
உதடுடைத்து வெளிவந்த
சொற்குஞ்சுக் கூட்டங்களும்
கவிதைகளாகின்றன..

இரை தேடி அவை
இதயத்தில் கொத்தினாலும்
இதம் பிறக்கிறது
கவிதையாக..

அக்னி
22-08-2008, 10:26 AM
கவிதையாக
வாழ்க்கை இருக்கும்
என்றுதான் நினைத்தேன்...
கவிதைக்குப் பொய்யழகு
என்பது
இப்போது புரிகின்றது...

மதி
22-08-2008, 10:42 AM
இப்போது புரிகின்றது
கண்கள் சிமிட்டுவதின்
ரகசியம்
மனத்திரையில் பிம்பமாய்
என்றும் உன் நிழல்படம்

அக்னி
22-08-2008, 11:16 AM
நிழல்படம் சொல்லுமா,
பாட்டியாகக் கதைகள்..?
நிழல்படம் ஏந்துமா,
தாத்தாவாகத் தோள்களில்..?
நாடு பிரித்த உறவுகள்,
நிழல்படங்களில்
இணைக்கப்படுகின்ற போதிலும்,
இழக்கப்படுகின்றன,
நிஜ ஸ்பரிசங்கள்...

அமரன்
22-08-2008, 11:23 AM
நிஜ ஸ்பரிசங்களை
பரிசளிக்கின்றன
செல்லரித்த புகைப்படங்கள்
தடவுகையில்.

அக்னி
22-08-2008, 11:29 AM
தடவுகையில்,
உருவத்தைத் காட்டாத,
புகைப்படங்கள்..,
உள்ளத்தில்
உருவங்களை
ஆரத் தழுவுகின்றன...

அமரன்
22-08-2008, 11:32 AM
ஆரத் தழுவுகின்றன
மறு பிறவி
எடுத்த உறவுகள்
வாக்குச் சாவடிகளில்..

அக்னி
22-08-2008, 12:03 PM
வாக்குச் சாவடிகளில்,
வடிகட்டப்பட்டுச்
சிம்மாசனமேற்றப்படுகின்றனர்,
நாட்டைச்
சாகடிக்கப் போகின்றவர்கள்...

மதுரை மைந்தன்
22-08-2008, 12:06 PM
வாக்குச் சாவடிகளில் வேட்டுகள்
இறைந்து கிடந்தன சீட்டுகள்
அனைத்தும் செல்லா வோட்டுகள்

வாக்குச் சாவடிகளில் கூட்டங்கள்
அவர் முகங்களில் வாட்டங்கள்
என்று நிற்கும் ஏழைகளின் ஓட்டங்கள்

வாக்குச் சாவடிகளில் காவல்
மக்களின் பாதுகாப்பு பற்றி ஆவல்
செய்ய வேண்டியது அவர்களின் ஏவல்

அமரன்
22-08-2008, 12:15 PM
நாட்டைச்
சாவடிக்கப் போகின்றவர்களை
விட்டுத்தள்ளுங்கள்..

உலகைச்
சாவடிக்கப் போகின்றவர்களை
சுட்டுக் கொல்லுங்கள்..

பூமியவள்
உடைந்து அழுகின்றாள் பாருங்கள்.
கண்ணீரில்
மூழ்கிப் போகிறாள் கவனியுங்கள்..

அக்னி
22-08-2008, 02:44 PM
கவனியுங்கள்...
உங்களுக்கு நெருக்கமாய்,
உங்களை ஏக்கமாய்க்
கவனித்தபடி
காத்திருப்போரை...
வீண்விரயமாகும் உணவு,
பலருக்குப் பலநேர உணவாகலாம்...

ஓவியன்
22-08-2008, 04:13 PM
உணவாகலாம்
பல நூற்றுக்கணக்கான
பசித்தவர்களுக்கு,
விருந்துகளில் நீங்கள்
வீணே சிந்தும்
ஒவ்வோரு கவளமும்..!! :)

மதுரை மைந்தன்
22-08-2008, 06:45 PM
ஒவ்வோரு கவளமும்
என்னுள் இறங்கும் போது
உன் நினைவு தான் அம்மா

சிறு குழந்தைப் பருவத்தில்
நிலாவைக் காட்டி
எனக்கு கவளம் ஊட்டினாய்

உள்ளங்கையில் கவளம் வைத்து
அதன் நடுவில் குளம்பை ஊற்றி
கதைகள் சொல்லி சாப்பிட வைத்தாய்

நீ முதுமையில் பிணியாகக் கிடந்த போது
ஒரு கவளம் சோற்றைக் கூட
உண்ண முடியாமல் தவித்தாய்
அந்த கவளம் தர முடியாமல் நான் வெந்தேன்

நீ கொடுத்தவை கவளங்கள் அல்ல
பாசத்தோடு நீ கொடுத்த கவசங்கள்

அமரன்
22-08-2008, 08:39 PM
கவசங்களை
நீ தான் கொடுத்தாய்
காயங்களாக...
காதலின்மிச்சங்களாக...

அக்னி
23-08-2008, 01:05 AM
காதலின்மிச்சங்களாக,
மிகுந்து போனது,
நினைவுகள்...
கலைந்துவிடாதிருக்கக்
காதலிக்கவில்லை...
தொலைந்துவிடாதிருக்கக்
காவலிருக்கின்றேன்...

ஷீ-நிசி
23-08-2008, 01:46 AM
காவலிருக்கின்றேன் என்கிறாய்!
யாருமில்லாத வேளைகளிலே
தாவியணைக்கிறேன் என்கிறாய்!

நீ காவலனா?!
இல்லையென் காதலனா?!

poornima
23-08-2008, 06:48 AM
காதலனாய
இருப்பதில் எனக்கொன்றும்
பிரச்னையில்லை...
காவலன் என்ற பொய்யை
மட்டும் விட்டு விடு

பூமகள்
23-08-2008, 08:08 AM
விட்டு விடு
என்றொரு நாள்...
புலம்பியது..
என் கை கடித்து
அகப்பட்ட கட்டெறும்பு..

தீப்பெட்டி இருப்பிடத்தில்..
ஒரு நாள் சிறை வைத்து..
வெளியனுப்ப..
முயல்கையில்..

மீண்டும் கை இறுக்கி
கிடுக்குப் பிடியில் கடித்து
உதறிய கை விட்டு..
ஓடியது..

மாற்ற முடியாதவை
மாறுவதே இல்லை..!!

ஓவியன்
23-08-2008, 09:49 AM
மாறுவதே இல்லை
மாற்றம் என்பது,
நாம் தான் சில வேளைகளில்
மாற்றத்தை ஏற்க
மறுத்து விடுகிறோம்...

ஆனால்,
மாற்றம் என்பது
காலத்தால், பணியால்
பதவியால் என்று
எதோ ஒரு காரணம் பற்றி
மாறிக் கொண்டேதான்
இருக்கிறது....!!

poornima
23-08-2008, 10:41 AM
இருக்கிறது
என்பதை உறுதியாகவும்
சொல்ல முடியவில்லை
இல்லை என்று
பொய்யாய் மறுத்துரைக்கவும்
முடியவில்லை
இடையே கண்ணாமூச்சி
காட்டிக் கொண்டிருக்கிறது
நமக்கிடையேயான
காதல்

அமரன்
23-08-2008, 10:44 AM
நமக்கிடையான காதல்
உன் இடையைப் போல..

நீ சேர்ந்த நானோ
குறுக்குச் சிறுத்தநேரத்து
நினைவுகளில் நனைந்தபடி...
மனதில் உனைத் தைத்தபடி..

poornima
23-08-2008, 11:19 AM
தைத்தபடியே இருக்கிறது
உன் வார்த்தைகள்..
இடையைப் பற்றி
எல்லாம் கவலைப்படுகிறாய்
அது பசலை நோய்
என்பதை அறியாதவனா நீ

அமரன்
23-08-2008, 11:26 AM
நீ
கொடுத்த சொந்தம்
கவிதைகளுக்கும் எனக்கும்
இடை:)யான பந்தம்..

தொடவும் முடியவில்லை..
விடவும் விடியவில்லை..
என் செய்வேன்
என் காதல் இயற்கையே!

அக்னி
23-08-2008, 02:38 PM
இயற்கையே
உன்னைக் காக்க
இயலாத கை,
செயல் கையானது
செயற்கையில்...

ஓவியன்
23-08-2008, 03:15 PM
செயற்கையின் வெற்றி
குழாயில் குழந்தை
குளோனிங் என நீண்டாலும்
இயற்கை
தன்னை நிலை நிறுத்துகிறது
மரணம் என்ற
ஒற்றைச் சொல்லால்....!!

அமரன்
23-08-2008, 03:22 PM
ஒற்றைச் சொல்லால்
கழுவி
துடைச்சு
துலக்கி
நிரப்பிப்போகிறது
காதல்
மனக்குவளையை....

கஜினி
23-08-2008, 03:26 PM
வார்த்தைகளல் நிரப்பமுடியாத
ஆயிரம் பக்க கதையை
உன் ஓரவிழி பார்வை
சொல்லிவிட்டதே
கள்ளி!

அமரன்
23-08-2008, 03:35 PM
கள்ளி!
உன்னைக் களவாட வரும்
என்னைக் களவாடும்
உள்ளங் கிள்ளி நீ.

தீபா
23-08-2008, 03:46 PM
கள்ளி!
உன்னைக் களவாட வரும்
என்னைக் களவாடும்
உள்ளங் கிள்ளி நீ.

நீ பிறையாகும் பொழுது
என்னுள் எழுந்தாடுகிறது சர்ப்பம்
முதிர்ச்சியின் முழுமைக்குள்
எட்டிய பொழுதும்
அலைகலைப்பின் ஓய்ச்சல் ஒழியவில்லை

நொடிகளை வீணடித்த காலம் கடந்து
நீ பிறை நீங்கச்
செல்லுகையில் சர்ப்ப நாக்கு
என்னை முழுவதுமாய் தின்றுவிட்டிருந்தது

அமரன்
24-08-2008, 08:37 AM
முழுவதுமாய் தின்றுவிட்டிருந்தது
காலப்பறவை என்று
நினைத்த வேளையில்
முளை தள்ளுகிறது விதை
யார் யாரோ ஊஞ்சலாடுவதுக்காய்

poornima
24-08-2008, 09:04 AM
யார் யாரோ ஊஞ்சலாடுவதற்காக
இல்லை என் மனம்
வரவேண்டிய மனசுக்கு
வழி தெரியவில்லை.
வெற்றிடமாய் ஆடுகிறது
மன ஊஞ்சல்

ஓவியன்
25-08-2008, 06:22 AM
ஊஞ்சலாடுகிறது
ஒற்றைக் கிளி
இடம் தேடி வந்த
ஜோடிக் கிளியை
கீழே தள்ளிவிட்டு....

(என் வீட்டிலுள்ள ஜோடிக் கிளிகளில் ஒன்றைத் தள்ளி விட்டு மற்றையது எப்போதும் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும்..!! :) )

poornima
25-08-2008, 07:46 AM
ஒருவேளை பொருந்தாத ஜோடியா இருக்குமோ

தள்ளிவிட்டு
நீயே எனக்கான
இடத்தை எடுத்துக் கோண்டதிலும்
வருத்தமில்லை எனக்கு
ஊஞ்சலில் மட்டுமா
இருக்கிறாய் நீ

நம்பிகோபாலன்
25-08-2008, 07:54 AM
நீ
தள்ளி நான் வீழ
காதல் ஊஞ்சலில்
மேலே செல்லும்
பொழுதெல்லாம்
உன்னை கீழிருந்து ரசிப்பவன்
உனக்காகவே வாழ்பவன்
வீழ்வது உனக்காகதானே
வலியும் கூட
சுகம் தான் எனக்கு....

poornima
25-08-2008, 08:08 AM
சுகம் தான் எனக்கு,
நீ சொல்லுகின்ற
பொய் எல்லாம்
உன்னால் இயலாமல்
போனால் கூட..

நாகரா
25-08-2008, 08:45 AM
கூட வருவாரா
ஆன்மக் காதலியோடு
கடவுட் காதலர்?!
விழித்தும்
தனித்தும்
பசித்தும்
நம்பிக்கையோடு
காத்திருப்பு தொடர்கிறது.

poornima
25-08-2008, 11:10 AM
தொடர்கிறது
என் தேடல்..
காதல் பற்றியும்
கடவுள் பற்றியும்
இரண்டும் விடைதெரியா
காத்திருப்புகளுடன்..

நம்பிகோபாலன்
25-08-2008, 11:14 AM
காத்திருப்பின் வலிகள்
உன்னை காணாத வரை
பார்த்தப்பின்னோ
தவிப்பேன்
உன்னை பிரியும் நேரமும்
அருகிலேயே இருப்பதால்.....

poornima
25-08-2008, 11:18 AM
அருகிலேயே இருப்பதால்
நேரம் கரைவதில்
உள்ள சிக்கலைத்தவிர
அலுப்பதேயில்லை
நீயும் உன் காதலும்

நம்பிகோபாலன்
25-08-2008, 11:26 AM
உன் காதலும்
உன் காதலில்
நானும் அனுபவிக்கின்ற
இனிமையான பொழுதுகளும்
சொன்னால் புரியாது
அனுபவித்து பார்
காதலின் சுகத்தை.........

நதி
25-08-2008, 06:57 PM
காதலின் சுகத்தை
கண்டெடுத்தேன்
ஒடித்த கிளைகளின்
குவியலுக்குள்..

ஆதி
25-08-2008, 07:49 PM
ஒடித்த கிளைகளின்
குவியலுக்குள்
நுழைந்த தீ குச்சியாக
உன்னை எரிக்கும்
என் கோபங்களின் சிறகுகளும்
பொசுங்கி மாய்கின்றன..
நீ உதிர்க்கும் விழியோர
ஒரு சொட்டில்..

அமரன்
25-08-2008, 07:56 PM
ஒரு சொட்டில்
நிறைகிறது வட்டில்.

நிலா முற்றச் சோற்றின்
ஒற்றைப் பருக்கைக்கு
எத்துனை வலிமை..

ஆதி
25-08-2008, 08:07 PM
எத்தனை வலிமையோடு
விரிக்கப்பட்டிருந்தாலும்
பொடிந்து தூளாகிவிடுகிறது
என் மௌனங்கள்
உன் சிறு முறுவலில்..

அமரன்
25-08-2008, 08:11 PM
சிறு முறுவலில்
செரித்துப் போகின்றன
மந்தம் தந்த
புளிச்ச சொற்கள்.

தேனீ(ர்) உற்சாகத்துடன்
மீண்டும் தொடங்குகிறது
தேன் தேடும் பயணம
கொடுக்குகளை மடித்தபடி..

ஆதி
25-08-2008, 08:45 PM
மடித்தபடி
ரீங்காரமிடும்
உன் வார்த்தைக் குளவிகளின்
கொடுக்கில் ஒட்டியிருக்கிறது
முன்னெப்பொழுதோ என்னை
கொட்டுகையில் கசிந்த
உதிரத்துளிகள்..

மதுரை மைந்தன்
25-08-2008, 11:32 PM
உதிரத்துளிகள் வியர்வைகளாக
உழைத்தாய் நீ வயலில்

உதிரத்துளிகள் வானத்து மின் விளக்ககளாக
ஆடுகின்றன உனது குழந்தை தூளியில்

உதிரத்துளிகள் நடனமாடுகின்றன
வயல் வெளியில் நெற் கதிர்களாக

அனுராகவன்
26-08-2008, 06:22 AM
நெற்கதிர்கள் பொன்நிறம்
அது தரும் அரிசி வெண்நிறம்
நாம் பெறுவதோ உயிர்சத்து
அதனால் அதை வளர்ப்போம்
சுத்தம் சுகம்
நல்ல குடும்பம்
அழகிய கோயில்,..

tamilambu
26-08-2008, 06:34 AM
அழகிய கோயில்
அமைதியான உள்ளம் - இதை
அறிந்தவர் வாழ்க்கை
அனுதினம் சொர்க்கம்

நாகரா
26-08-2008, 08:45 AM
சொர்க்கம்
பூமியைத் தழுவ
இற(ர)ங்கும்
ஜீவனுள்ள
மெய் வழியே
நீ

மதுரை மைந்தன்
26-08-2008, 12:40 PM
அழகிய கோயில் போன்ற மனம்
அழுக்காறுகளை தவிர்த்த மனம்
மனித நேயம் மிகுந்த மனம்
துன்பத்திலிருப்பவருக்கு
உதவத் துடிக்கும் மனம்
கருணைக் கடலான மனம்
போற்றுதலுக்குரிய மனம்
ஏனெனில் அது ஒரு அழகிய கோயில்

poornima
27-08-2008, 11:26 AM
கோயிலுக்கெல்லாம்
நீ வந்து போகாது
பூசாரி முதல் கொண்டு
வியக்கிறார்
உள்ளே உள்ள அம்மன்
ஏன் வெளியே வந்து
நிற்கிறது என்று..

மதுரை மைந்தன்
27-08-2008, 12:48 PM
என்று தான் ஒழியும் இந்த
வன்முறை வெடிகுண்டு கலாச்சாரம்?
என்று தான் அழியும் இந்த
திவிரவாத சிந்தனைகள்?
என்று தான் கழியும் நாடகள்
அப்பாவி மக்களுக்கு நிம்மதியாக?
என்று? என்று? என்று?

ஆதி
27-08-2008, 01:14 PM
என்று நடைமுறையாகும்
என்று எழுப்பப்பட்ட வினாவுக்கு
சிறு புன்னகையையும் பின்பு
ஒரு நீண்ட மௌனத்தையும்
பதிலளித்து நழுவின
வாக்குறுதிகள் காய்ந்த
அரசியல்வாதி உதடுகள்..

நம்பிகோபாலன்
27-08-2008, 01:24 PM
உதடுகள்
என் உள்ளத்தின்
உணர்வுகளை
சொல்ல தொடங்கியது
உன் பெயரை
இதயத்தின் வாயிலாக....

மதுரை மைந்தன்
27-08-2008, 02:33 PM
இதயத்தின் வாயிலாக
என் வார்த்தைகள் வெளி வர
உந்தன் இதயத்தில் சென்று அது பதிய
உன் இதயத்தில் குடி கொண்டேன்
என் இதயத்தின் வாயிலாக

poornima
27-08-2008, 02:48 PM
இதயத்தின் வாயிலாக
உன்னை அணுகி விட்டதில்
மகிழ்ச்சிதான்
எனக்கு..
எப்போது நேரில்
தருவாய் நான் கேட்கும்
வரங்கள்

மதுரை மைந்தன்
27-08-2008, 04:23 PM
வரங்கள் தர நான் கடவுளும் இல்லை
வரங்கள் கேட்க நீ தவமும் செய்யவில்லை
நன்றாக இசைக்கும் ஏழு ஸ்வரங்களே
நான் வேண்டும் வரங்கள்
நீ இசைப்பதோ அபசுரங்கள்
எப்படி கிடைக்கும் எனது வரங்கள்?

அமரன்
27-08-2008, 08:48 PM
வரங்கள் வாங்க
தவம் இருக்கிறார்கள்
தேவதைகள்
வீதி ஓரங்களில்..

மதுரை மைந்தன்
28-08-2008, 04:06 AM
வீதி ஓரங்களில் மக்கி
விதியின் கோரங்களில் சிக்கி
பாதி நேரங்களில் பசியில் வாடி
மீதி வாழ்க்கை முடியுமா என்று ஏங்கி
வாடும் ஏழைகள் வீதி ஓரங்களில்

நம்பிகோபாலன்
28-08-2008, 06:07 AM
வீதி ஓரங்களில்
நான் நிற்பேன்
என்னை பார்த்து
உன் தோழிகளின்
கூட்டத்தில்
நீ
மறைந்து செல்வாய்.
உன் வீட்டிற்க்கு உள்ளே
செல்லும் வேளையில்
என்னை பார்ப்பது
அட திரைபடங்கள்
காதல்கூட உன்னிடம்
தோற்று விடும் பெண்ணே!!!

poornima
28-08-2008, 06:14 AM
தோற்றுவிடும் பெண்ணே
என்று சொல்லியே
ஒவ்வொரு முறையும்
எதையாவது வாங்கிப்
போய்விடுகிறது
என்னிடமிருந்து...

ஓவியன்
28-08-2008, 07:15 AM
என்னிடமிருந்து
உதிர்ந்த ஒவ்வொரு
நினைவுச் சிறகுகளின்
வழி பற்றி, எனை நாடி
பொறுக்கி வந்த
நினைவுச் சிறகுகளால்
மீண்டும்
என்னை உயிர்(புது)ப்பித்தாய்
ஒரு ஃபீனிக்ஸாக...!! :)

poornima
28-08-2008, 07:57 AM
ஃபீனிக்ஸாய்
ஒவ்வொரு முறை
எரிந்த பின்னும்
உயிர்பெற்றுக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகள்
வரும்போது

சுட்டிபையன்
28-08-2008, 08:02 AM
ஒரு ஃபீனிக்ஸாக
என்
உடல் மட்டுமே
பயணிக்கிறது
என்னுயிர்
மீண்டும் சாம்பலாகவே...

poornima
28-08-2008, 08:11 AM
சாம்பலிலிருந்த்
உயிர் பெறுமாம் ஃஃபீனிக்ஸ்
காதல் பற்றி அறிந்த
பறவைகளை விட
காதலின் வலி உணர்ந்த
பறவை அது

நம்பிகோபாலன்
28-08-2008, 10:24 AM
வலி உணர்ந்த பறவை
அது மட்டுமா
கன்னிகளின்
கடைக்கண் பார்வை பட்டு
இங்கு எத்தனை பேர்
ஏர்வாடியில் வலியை
சுமந்து கொண்டிருக்கிறார்கள்
உனக்கு அது புரியுமானால்
என் காதல் ஏன் உனக்கு
தெரியாமல் போனது !!!

அமரன்
28-08-2008, 10:56 AM
ஏன் உனக்குத்
தெரியாமல் போனது..

காலைத் தேனீரில்
குவளை விளிம்பின் ஈரம்..
டிபன்களின் காரம்..
என் கண்களின் ஓரம்
பூத்த உப்பு..

எல்லாம் புதுசாய்..
உன் கண்களுக்கு மட்டும்
அவை தரிசாய்..

தினமும் காலையில்
அவசரப் பார்வையில்
வருடியதெல்லாம்
பத்தொடு பதினொன்றா..

இன்று முழுக்க
இதுதான் என் உணவு
வேலை முடித்து நீ
வரும் நொடிக்கு முதல் நொடிவரை

நம்பிகோபாலன்
28-08-2008, 11:42 AM
நீ வரும் நொடிக்கு
முதல் நொடிவரை
உனகாக நான் வாயிலில்
காத்திருப்பதும்
என்னை
சந்தோஷமடைய செய்ய
ஒரு முழம் பூவை
என் தலையில் வைத்து
உன் காதலை சொல்வதும்
திகட்டாத அன்பில்
என்னை காலன் அழைக்கட்டும்....

மதுரை மைந்தன்
28-08-2008, 12:41 PM
என்னை காலன் அழைக்கட்டும்
அன்னைத் தமிழை மதிக்காதவர்கள்
மத்தியில் வாழ்வதை விட
மண்ணை மதிக்காதவர்கள்
மத்தியில் வாழ்வதை விட
என்னை காலன் அழைக்கட்டும்

நம்பிகோபாலன்
28-08-2008, 12:58 PM
என்னை காலன் அழைக்கட்டும்
உன் கண்ணின் பார்வை
என்மீது படாத போதும்
உன் நிழல் கூட
என்னால் பயணிக்க
இயலாத பொழுது
என்னை காலன் அழைப்பதில்
தவறில்லை.....

poornima
28-08-2008, 02:50 PM
தவறில்லை
என்பதற்காக
தவறாமல்
செய்கிறாய்
காதல் குறும்புகள்..
இம்சையாய் இருப்பினும்
ரசிக்கவே செய்கிறேன்

மதுரை மைந்தன்
28-08-2008, 02:59 PM
ரசிக்கவே செய்கிறேன்
காதலுக்கு என் வாழ்வில்
இடமில்லை என்றாலும்
நமக்கு வயது பொருத்தம்
இல்லை என்றாலும்
உன காதல் குறுமபுகளை
ரசிக்கவே செய்கிறேன்

யாசிக்கவே செய்கிறேன் கடவுளிடம்
மறு பிறவி எனக்குத் தா என்று
மறு பிறப்பு எடுக்கும் வரை
உன் காதல் குறும்புகளை
ரசிக்கவே செய்கிறேன்

சுட்டிபையன்
28-08-2008, 03:00 PM
செய்கிறேன்
உனக்காக ஓர் தவம்
என்னை
நினைப்பதற்காக இல்லை
உன்னை
மறவாமலிருப்பதற்காக

செல்வா
28-08-2008, 03:05 PM
மறவாமலிருப்பதற்காக... அல்ல
மறக்கவே முயற்சிக்கிறேன்...
மனம் முழுக்க நிறைந்திருக்கும்
நினைவுகளை வெட்டிஎறியும்
வெட்டுக்கத்தி வேண்டும்....
என் மனநிலை பிரளாமல்
உன் நினைவுகளை மட்டும்
அறுத்தெறியும் அறுவைசிகிச்சை
இருக்கிறதா... சொல்...?

poornima
28-08-2008, 03:12 PM
ரசிக்கவே செய்கிறேன்
நீ சொல்லும் பொய்களை
ரசிக்கவே செய்கிறேன்
நீ பிற பெண்களை ரசிப்பதை
ரசிக்கவே செய்கிறேன்
இன்னபிற உன் செயல்களை
எல்லாம் என்னை அழ
வைப்பதற்காக என்றால்
உன் முடிவை மாற்றிக் கொள்
அது மட்டும் நடக்காது

மதுரை மைந்தன்
28-08-2008, 04:04 PM
அது மட்டும் நடக்காது
எனறார் இறைவன்
உனக்கு மறு பிறவி கொடுத்து
அவளைக் காதலிக்க வைப்பது
அது மட்டும் நடக்காது

அது மட்டும் நடக்காது
ஏனெனில் மறுபிறவியில்
அவள் அவனாகப் போகிறாள்
உனக்கு மறு பிறவி கொடுத்து
அவளைக் காதலிக்க வைப்பது
அது மட்டும் நடக்காது

அக்னி
29-08-2008, 02:50 AM
நடக்காது
என்று சொல்லக் கேட்டாலும்,
நடக்காது காது...
அதற்காகக்,
காது கேட்காது
என்றாகுமோ..?

ஓவியன்
29-08-2008, 04:03 AM
என்றாகுமோ..??
எப்படியாகுமோ...??
என்னவாகுமோ...??
இப்படிப் பல
எண்ணத்துடன் நாம்..!

அரைவயிற்றுக்
கஞ்சிக்குக் கூட
ஒன்றுமேயில்லாமல்
எதிர்பார்ப்புக்களைத்
தொலைத்து விட்டுப் பலர்..!

நம்பிகோபாலன்
29-08-2008, 11:04 AM
தொலைத்து விட்டு
பலரில்
நானும் தேடுகிறேன்
என் வாழ்க்கையை
ஆம்
என் காதல் புத்தகத்தை
புரட்டி பார்த்தால்
கிழிந்த காகிதமாய் நான்.......

மதுரை மைந்தன்
29-08-2008, 12:30 PM
கிழிந்த காகிதமாய் நான்
உடைந்த சிற்பமாய் நான்
அழிந்த கோலமாய் நான்
செல்லாத காசாய் நான்
இறந்த கணிணியாய் நான்
உன் முன் நிற்கிறேன்
ஏற்றுக் கொளவாயா நீ
இல்லையெனில் ஆகிவிடுவேன் மறுபடியும்
கிழிந்த காகிதமாய் நான்

நம்பிகோபாலன்
29-08-2008, 12:44 PM
கிழிந்த காகிதமாய் நான்
உன் முன்னால் வந்தால்
இதயம் தாங்குமா
உன் விழியோரநீரை பார்த்து
என்னால்தான் உயிர்வாழ இயலுமா
மன்னித்துவிடு பெண்ணே
உன்னை மறக்க முடியாது
என்னை மரணிக்க
முயற்சி செய்கிறேன்.

poornima
30-08-2008, 08:07 AM
முயற்சி செய்கிறேன்
உன்னைப் பற்றிய
நினைவுகளுக்கெல்லாம்
ஒரு அணைபோட்டு
விடவேண்டும் என்று
என்னை மீறி
வெள்ளமென
பிரவகிக்கிறது
நினைவுக்கட்டுடைத்து
எல்லாம்

ஓவியன்
30-08-2008, 08:10 AM
எல்லாம் முடிந்து விட்டதென
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
மீண்டும் வந்து பார்த்தால்
முற்றுப்புள்ளி காற்புள்ளியாகி
என்னைப் பார்த்து நகைக்கிறது
விட்ட குறை தொட்ட குறையாக...

(ஓன்றுமில்லைங்கோ, அலுவலகத்தில் நான் செய்து முடிந்த ஒரு பணி, மீண்டும் என்னை வருத்துகிறது, சில பிரச்சினைகளால்...!! :frown:)

poornima
30-08-2008, 08:12 AM
விட்டக் குறை தொட்டக்குறையாக
என்னன்னவோ சொல்லிவிட்டுப்
போய்விட்டாய் சில நொடிகளில்
யுகங்களாய் கனத்துக்
கிடக்கிறது மனம்
பேய்மழைக்குப் பின்னால்
உள்ள நிசப்தம் போல்

ஓவியன்
30-08-2008, 08:17 AM
நிசப்தம் போல்
நல்ல நண்பனில்லை
நினைவுகளை வருடவும்
கனவுகளை வளர்க்கவும்...!!

poornima
30-08-2008, 08:31 AM
கனவுகளை வளர்க்கவும்
கவிதைகளில் சேமிக்கவும்
களவுத்தனம் செய்யவும்
கற்றுக் கொடுக்கிறது
காதலின் துவக்கத்தில்

ஓவியன்
30-08-2008, 08:45 AM
காதலின் துவக்கத்தில்
கை நீட்டிக் கொடுக்கும்
சத்தியங்கள்
சாதலின் முடிவு வரை
தொடர்வதுதான்
அமரக் காதலோ..!!?!!

poornima
30-08-2008, 08:47 AM
அமரக் காதலோ
என்றெல்லாம் நீ பயப்படாதே
அமரக் காதல்கள் மட்டும்தான்
உலகில் இன்று
வரை பேசப்படும்
உயரக் காதல்கள்..

ஓவியன்
30-08-2008, 09:00 AM
உயரக் காதல்கள்
உயர்ந்து நிற்கும்
தாஜ்மகாலில் மட்டுமல்ல
காறை பெயர்ந்த
ஒற்றை வீடுகளிலும்
உயர, உயரப் பறக்கிறது
உண்மையாக, செம்மையாக..!!

poornima
30-08-2008, 09:08 AM
செம்மையாக
இருக்கவேண்டும்
என்பதற்காக எல்லாம்
வலிந்து செதுக்குவதில்
வலி வந்து விடுகிறது
காதலுக்கு..

ஓவியன்
30-08-2008, 09:13 AM
காதலுக்கும் நட்புக்கும்
இடை மெல்லிய ஒரு கோடு
நண்பர்கள் அதைத் தாண்டாமலும்
காதலர்கள் அதைத் தாண்டுமாறும்,

என்னே ஒரு விந்தைக்கோடு..!!

poornima
30-08-2008, 09:16 AM
கோடு போட்டு
பயணிக்கவும்
கோட்பாடுகளுடன்
அணுகுவதற்கும்
காதல் ஒன்றும்
வரையறுக்கப்பட்ட
சமன்பாடு இல்லை

ஓவியன்
30-08-2008, 09:17 AM
இல்லை என்ற
ஒரு சொல்லைப் பற்றி
உருட்டிப் புரட்டியபோது
ஆமென்று திறந்தது
என் காதலும் வாழ்க்கையும்..!!

poornima
30-08-2008, 09:20 AM
என் காதலும் வாழ்க்கையும்
இரண்டுமே அடங்கி உள்ளது
நீ இல்லை என்று
சொல்வதிலும்
ஆம் என்று சொல்வதிலும்

ஓவியன்
30-08-2008, 09:48 AM
சொல்வதிலும் நீ
செய்வது அதிகம்
அதனால்தான், நான்
காதலிக்கிறாயா என்ற போது
என்னைக் கட்டியணைத்து
குலுங்கிக், குலுங்கி
அழுது கொண்டிருந்தாய்..!!

பூமகள்
31-08-2008, 04:50 AM
அழுது கொண்டிருந்தாய்
நான் உன்னை
முதன் முதலாக
பார்க்கையில்..

ஆதரவு கரங்கள் தேடி..
கைகள் அசைத்து..
கண்கள் இறுக்கி..
கண்ணீர் வழியாத
உன் அழுகை..

சோகத்துக்கு பதில்
மகிழ்ச்சியை வரவழைத்தது..

ஆம்..
அப்போது தான்
என் கைகள்
பூமியுடனான
உனது பந்தத்தை
எழுதி முடித்திருந்தது..

(மழலை மொட்டுகளை மலர வைக்கும் மருத்துவ பிரம்மாக்களுக்காக..!!)

ஓவியன்
31-08-2008, 04:59 AM
எழுதி முடித்திருந்தது
நீ வெளியே தூக்கிப் போட்ட பேனா
உன் கவிதைகளையும்,
காதல் கடிதங்களையும்...!!

உனக்கென்ன இந்தப் பேனா
போனால் இன்னோர் பேனா,
அதுவும் உன் அன்பு
ஆசை, ஆற்றாமை
எல்லாவற்றையும் குழைத்து
உன் கவிதைகளையும்
கடிதத்தையும் எழுதி, எழுதி
மை முடிந்து ஓய்ந்து போகும்...!!!

அப்போது, நீ அதனையும்
வெளியே
தூக்கி வீசத்தான் போகிறாய்..!!

poornima
31-08-2008, 06:41 AM
வீசத்தான் போகிறாய்
சில குறும்பு பார்வைகளை
பிடிக்காதது போல்
நடித்துக் கொண்டே
ரசிக்கிறேன்
தொடர்கின்றன
காதலில்
நாடகமும்
பொய் விளையாட்டும்

ஓவியன்
31-08-2008, 06:45 AM
விளையாட்டும் வினையாகிறது
ஹர்பஜன் சிங்
அறைந்ததில் மட்டுமில்ல
இளையவர்களுக்கு விட்டுக் கொடாமல்
முதியவர்கள் இன்னமும்
முண்டியடிப்பதிலும் தான்...!!

poornima
31-08-2008, 06:58 AM
முண்டியடிப்பதிலும்
முன்னணியில்
இருக்கும் முதியவர்களை
என்ன செய்யக்கூடும்
தானாக தவிர்ப்பதை
தவிர..

ஓவியன்
31-08-2008, 07:02 AM
தவிர்ப்பதைத் தவிர
வேறு வழி தெரியவில்லை,
வீதியில் போகும் போதெல்லாம்
கடன்காரன் 'லிப்ட்' கொடுக்க
முன் வருகையில்....

பூமகள்
31-08-2008, 04:14 PM
முன் வருகையில்..
பிரிய மனமில்லை..

பின் வருகையில்..
இருக்க
மனமே இல்லை..

முன் வந்த பொழுது..
இரண்டு..

பின் வந்த பொழுது..
இருபது..

அந்நிய குடியுரிமை ரத்தத்தில்..
ஊறிப் போன
இந்தியக் குழந்தையின்..
இன்றைய நிலை..

நம்பிகோபாலன்
02-09-2008, 07:19 AM
இன்றைய நிலை
எண்ணி வருத்தம் வேண்டாம்
விடியல் வரும்
சூரியன் உதிக்கும் பொழுது
அமைதியும் சேர்ந்தே
உதிக்கும் நாள்
வெகுதொலைவில் இல்லை
அதுவரை
பெண்ணே உணர்வுகளோடு காத்திரு......

poornima
02-09-2008, 07:53 AM
உணர்வுகளோடு காத்திரு..?
ஒன்றும் புரியவில்லை
உணர்ச்சிகளின்றி
மரப்பாச்சி பொம்மையாய்
காத்திருக்க
என் காதல்
ஒன்றும்
அலங்காரப் பொருள்
அல்ல

ஓவியன்
02-09-2008, 08:05 AM
அல்ல, பொதுவில் அல்லாததல்ல
அல்ல, பாரில் பொல்லாததல்ல
அல்ல, முன்னர் வெல்லாததுமல்ல
பிறகேன் காதலுக்கு
இத்தனை எதிர்ப்புக்கள்..!!!

poornima
02-09-2008, 08:28 AM
எதிர்ப்புகள் இல்லாமல்
எதையும் வென்று
என்ன பயன்..
வலிக்குப் பிறகும்
நிகழும் ஜனனம்தானே
அர்த்தமுள்ளதாக்குகிறது
வாழ்க்கையை

நம்பிகோபாலன்
02-09-2008, 08:28 AM
எதிர்ப்புகள்
இருக்கும் வரை
போராட்டம் இருக்கும்
பெண்ணே நீ என்னை
எதிர்த்து கொண்டே இரு
உன்மீது என் காதல்
போராட்டம்
தொடர்ந்து கொண்டே இருக்கும்
வெற்றியடையும் வரை........

நாகரா
02-09-2008, 04:20 PM
வெற்றியடையும் வரை
தோல்விப் படிகளின் மீது
அயராமல்
ஏறிக் கொண்டேயிரு

அக்னி
02-09-2008, 10:09 PM
ஏறிக் கொண்டேயிரு,
உன் காலடிக்கு
இறங்கி வரும் சிகரங்கள்...
ஏற்றிக் கொண்டேயிரு,
உன் காலடி
தொடும் பல கரங்கள்...

மதுரை மைந்தன்
02-09-2008, 11:30 PM
தொடும் பல கரங்கள்
தன் காலடியை பார்த்து
மகிழ்ந்தார் ராஜீவ் அண்ணல்
தொட்டது ஒரு கரம் அவரது அடியை
மறைந்தார் ராஜீவ் அண்ணல்

poornima
03-09-2008, 11:39 AM
அண்ணல் என்ன
செய்து போனான்
மங்கை மருகி நின்றாள்
எல்லா திருமணத்துக்கு
முன்னும் நடக்கும்
காதல் சுயம்வரம்
இன்னொரு இராமாயணம்

மதுரை மைந்தன்
03-09-2008, 02:48 PM
இன்னொரு இராமாயணம் வேண்டாம்
என் பெயர் ராமன் என்றாலும்

இன்னொரு இராமாயணம் வேண்டாம்
என்னால் என் சீதையைத் தீக்குளிக்கச் செய்யலாகாது

இன்னொரு இராமாயணம் வேண்டாம்
எனக்காக என் தம்பி தன் மனைவியைப்
பிரிந்து வாழ வேண்டாம்

இன்னொரு இராமாயணம் வேண்டாம்
என் நண்பனை மறைந்திருந்து
கொல்ல இயலாது

இன்னொரு இராமாயணம் வேண்டாம்
இலங்கைக்கு பாலம் கட்ட என்னால் முடியாது
பழைய பாலத்தையே இடிக்கப் போவதால்

இன்னொரு இராமாயணம் வேண்டும்
லவ குசர்களைப்போல இரட்டை மகன்களுக்கு தந்தையாக

இன்னொரு இராமாயணம் வேண்டும்
குகன் ஜடாயூ பொன்ற நண்பர்களைப் பெற

இன்னொரு இராமாயணம் வேண்டும்
பரதன் போன்ற தம்பி கிடைப்பானானால்

aren
06-10-2008, 12:36 PM
தம்பி கிடைப்பானானால்
அவன் ஊமைத்துரை மாதிரி
இருக்கவேண்டும்!!!

தம்பி கிடைப்பானானால்
அவன் லட்சுமனான் மாதிரி
இருக்கவேண்டும்!!!

தம்பி கிடைப்பானானால்
அவன் ஒளரங்கசீப் மாதிரி
இருக்கவேண்டாம்
இருக்கவே வேண்டாம்!!!

poornima
06-10-2008, 02:44 PM
வேண்டாம் என்று
விலகிப் போகிறாய்
விட்டது தொல்லை
என்று இருக்க முடியவில்லை
வெட்கம் விட்டு
கேட்கவும் முடியவில்லை
எப்பொழுது கிடைக்கும்
இன்னொரு அவசர
முத்தம்?

மதுரை மைந்தன்
06-10-2008, 08:34 PM
முத்தம் தரும் சத்தம்
நித்தம் கேட்க வேண்டும்
முத்தம் என்ற சந்தம்
நித்தம் பாட வேண்டும்
முத்தம் நீ தந்தால்
பித்தம் தலைக்கேறுதம்மா
என் மழலைச் செல்வமே

அனுராகவன்
07-10-2008, 01:06 PM
செல்வமே
என் மகவே
நலமா
என்ன வேண்டும்
நீ வெளி வர!!
என் உயிர் நீதானே!!

பாரதி
14-10-2008, 05:08 PM
நீதானே நிலவே...
நிற்காமல் சுற்றிவரும்
உனக்கு மட்டும்
அலுப்பே இல்லையா?
பகலில் ஓய்வெடுத்து
இரவில் சுற்றி வரும்
பூமிக்காவலனா நீ?

நதி
19-10-2008, 12:19 PM
நீ
குடிவந்த போது
கண்மொழி அறிந்தேன்.

கூடி வந்தபோது
செம்மொழி அறிந்தேன்.

சாம்பவி
19-10-2008, 12:50 PM
அறிந்தேன் அவள் மொழி.,
அறியாது அவள் சொன்னதை.,.,
மணம் புரிந்த
அவன் தான் மறுக்கவில்லை
மனம் புரிந்த
நீயுமா கண்ணா... !!!

poornima
19-10-2008, 03:14 PM
கண்ணா
உனக்கென எழுதத்
தொடங்கினேன்
சில கவிதைகள்..
முடிக்கத் தெரியாத
கணங்களில்
மூச்சு முட்டுகிறது
கடிதத்தில் உள்ள
காதல்

சாம்பவி
19-10-2008, 03:42 PM
காதல் வந்தென் மூச்சை முட்ட....
சொன்னதும் .,
வாளைத் தூக்குகிறாயே...
மூக்கை வெட்ட..... !!!!


என்ன கொடுமை லக்ஷ்மணா இது.... !!!!!

நதி
19-10-2008, 03:47 PM
முக்கை வெட்டச்
சொன்னது யாருனக்கு.
அசோக வனத்தில்
இருக்கிறாள் பார் ஸ்ரீதேவி!

பாரதி
19-10-2008, 06:35 PM
ஸ்ரீதேவி அசோகவனத்திலா...!
பாலம் கட்ட "அனில்" உதவினால்..
போனி கபூர் போடும்
மூன்று கோடுகளும்
முதுகிலா... நெற்றியிலா?

மதுரை மைந்தன்
20-10-2008, 05:25 AM
நெற்றியிலா அடித்தார்கள் இல்லை
வயிற்றில் அல்லவா அடித்தாரகள்
பங்குச் சந்தை பங்கு பொட்டு சுருட்டினார்கள்
பேராசை பெரும் நஷ்டம்
பங்குச் சந்தையில் பணம் இட்டவர்களுக்கு
ஆசை காட்டி மோசம் செய்தாரகள்
பொது மக்களுக்கு

சிவா.ஜி
20-10-2008, 08:09 AM
பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு........
ஆறுமாதத்தில் இன்னுமொரு தேர்தல்...
காதுகுளிர கேட்கலாம்
தலைவர்களின் குளிர்ச்சியுரை
அலறலோடு அவர்கள் விடும்
இலவசங்களின் அறிவிப்பு....
உச்சி குளிர்ந்து
ஊமைகளாய் நின்றுவிடாமல்
சொச்சமுள்ள தன்மானத்தை
தக்கவைத்துக்கொள்ளுங்கள்...
மிச்சமுள்ள ஒரே உரிமையான
வாக்குரிமையை
வலிமையாய் பிரயோகியுங்கள்
அடுத்த தலைமுறைத் தமிழனுக்காவது
முதுகெலும்பு முறியாதிருக்கட்டும்
இனி வரும் தலைவர்களுக்கு நம்மை
முட்டாளாக்க முடியாதிருக்கட்டும்..!

poornima
20-10-2008, 08:31 AM
முட்டாளாக்க முடியாதிருக்கட்டும்
அரசியல்வாதிகளால்..
வருடத்திற்கொருமுறைதான்
ஏப்ரல் ஒன்று முட்டாள்தினமாய்
எல்லா நாளும்
முட்டாள் தினம் தான்
மக்களுக்கு

ஓவியன்
20-10-2008, 09:10 AM
மக்களுக்கு உணவில்லை
ஆயுதங்களை வாரி
வாரிக் கொடுக்கும்
வள்ளல்களின் கைகளிலிருந்து...

சிவா.ஜி
20-10-2008, 12:33 PM
கைகளிலிருந்து இந்தக் கறை,
கழுவினாலும் கரையவில்லை...
கண்டவனையெல்லாம் தொழுது
கசுமலத்தை பூசிக்கொண்ட கைகள்!

சுற்றத்துக்காக ஏந்தாமல்
சுயத்துக்காக ஏந்தும் கைகள்...
தேர்வில் தேறினால்
தேவனுடன் வாழலாமென
ஆசையூட்டப்பட்டவனாய்....
அழித்தொழித்தலையும் கூசாமல்
அரங்கேற்றி, அவனுக்குக் காட்டவேண்டி
ரத்தம் பூசிக்கொண்ட கைகள்.....

கழுவினாலும் கறைபோகாத கைகள்!

அமரன்
20-10-2008, 02:34 PM
கைகளில் கறைகளுடன்
உலகின் கறைகளைக் கழுவுகிறார்கள்.
தீவிரவாதத்துக் எதிரான
போரெனும் கோசத்துடன்.

poornima
20-10-2008, 02:35 PM
கறை போகாத
கைகளுடன் உழைப்பவன்
இன்னும் கால்வயிற்றுக்குதான்
சாப்பிடுகிறான்
கறைபடிந்த கரங்களோடு
வாழ்பவன்
கால்வயிற்றுக் காரனையும்
சுரண்டிக் கொண்டிருக்கிறான்

நம்பிகோபாலன்
21-10-2008, 07:05 AM
சுரண்டி கொண்டிருப்பது
தெரிந்தும்
அவனையே அரியனையில்
உட்கார வைப்பதும்
இறக்குவதுமதாய்
நாம்
மாற்று வழி தேடாமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்று இதை சிந்திப்போம்....

ஓவியன்
21-10-2008, 07:26 AM
சிந்திப்போமா இனி
மீள நாம்
சந்திப்பதை, இங்கனம்
ஒருவரை ஒருவர்
நிந்தித்த பின்......!!

பிச்சி
21-10-2008, 09:40 AM
பின் ஒருநாள்
சாரல் முத்தங்கள் பொழிய
சில நிமிடங்கள் என்னால்
குழந்தையாக இருக்க முடிந்தது.

poornima
21-10-2008, 10:44 AM
முடிந்தது என்று
இதழ்பிரிக்க முடியவில்லை
முற்றும் போடாமலே
தேவைப்படுகின்றன
உன் முத்தங்கள்

மதுரை மைந்தன்
21-10-2008, 12:22 PM
உன் முத்தங்கள் தந்த
உன்மத்தங்களால் வாடுகிறேன்
உன் முத்தங்களால் உண்டான
மின் பிம்பங்களால மயங்குகிறேன்
உன் முத்தங்கள் நிதம் வேண்டி
என் சித்தங்கள் இயங்குகின்றன
உன் முத்தங்களால் வந்த
பித்தங்களால் நான் வாடுவதை நீ அறிவாயோ

அமரன்
21-10-2008, 12:40 PM
நீ
அறிவாயோ இல்லையோ
நீ
வருவதற்காகவே
நான் வாடுகிறேன்.

ஒரு முறை வந்து
பார்த்துச் செல்
நான் சொல்வது
எத்துணை உண்மையென்று.

மதுரை மைந்தன்
21-10-2008, 12:49 PM
எத்துணை உண்மையென்று அறிந்தேன்
வழித்துணையினறி வாழ முடியாது என்பதை
அத்தனை சொல்லியும் கேட்காமல் இந்த
அத்தானை பிரிந்து ஏன் சென்றாய்
கற்றதனைத்தும் மறந்து
பித்தனைப் போல் வாழ்கிறேன்

பாரதி
25-10-2008, 07:33 PM
வாழ்கிறேன் இன்னும் கல்லாய்
தலையெங்கும் பச்சையம் பூத்தும்
வீசி விடும் காற்றின்றி
தூசி படும் நாளையெண்ணி....
இதுவே நன்றாகத்தான் இருக்கிறது.
வந்து விடாதே ராமா...

சாம்பவி
25-10-2008, 08:14 PM
ராமா
சூடாமணி தந்த சூடாமணியவளைச்
சூடாமலே சூட்டில் இட்டாயே..
அன்றவளைச்
சுட்டது சூடன்று
சூட்டியவன் உன்
சொல் நின்று... !!!!

மதுரை மைந்தன்
25-10-2008, 11:19 PM
சொல் நின்று விட்டதம்மா
நான் கோபத்தில் கூறிய சொல்
செயல் நிற்கவில்லையம்மா
நான் குணத்துடன் செய்த செயல்

வாசகி
28-10-2008, 06:28 PM
செயல் செய்யும்போது
கயல் துடிக்கும்.
செய்து முடித்தபின்
துளி விழும்.

பார்த்து விடுவது என்று
சபதமிட்டுச் சென்றாலும்
பார்க்க முடிவதில்லை
கயிற்றில் நடக்கும் சிறுமியை
கண்ணுக்குள் அவள்தாய்
எப்போதும் எத்துப்ப்டுவதால்.

சுட்டிபையன்
29-10-2008, 07:16 AM
எத்துப்படுவதால்
நான்
பந்தும் இல்லை
எத்துவதால்
நீ
கழுதையும் இல்லை :D

பாரதி
01-11-2008, 03:20 PM
இல்லை... இல்லை
என்று சொல்லிகொண்டே
இல்லாள் ஆனவளே!
இல்லாமல் இருக்கும்
போது இளைப்பதும்
மடலைப் பார்த்ததும்
புது இலையாய்
துளிர்ப்பதும் எங்ஙனம்?

வாசகி
05-11-2008, 11:25 AM
எங்ஙனம் சொல்வேன்
நீ விட்டுச்சென்ற
நினைவுச் சிதறல்கள்
என் இருட்டு இரவுகளில்
மின் மினிகளாய் பறந்து
விண் மினிகளாய்
எனக்கு வழிகாட்டுவதை.

மதுரை மைந்தன்
05-11-2008, 11:41 AM
எனக்கு வழிகாட்டுவதை
ஏன் நிறுத்தி விட்டாய்?
விழியிருந்தும் குருடனாய்
தடம் பெயர்ந்து சென்ற எனக்கு
கலங்கரை விளக்கமாய் வந்த நீ
ஏன் நிறுத்தி விட்டாய்?
எனக்கு வழிகாட்டுவதை

தாமரை
06-11-2008, 09:10 AM
வழிகாட்டுவதை
வணங்கித் தொடர்கிறேன்
பயணம் எங்கோ
போய்கொண்டிருக்கிறது..

அடுத்த மைல்கல்லும்
அதற்கடுத்த கைகாட்டி மரமும்
பிரியும் சாலைகளில்
எனக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.

மெல்லச் சிறகவிழ்த்து
மூக்கினால் சிக்கெடுத்து
பறக்கத் துடிக்கும் வெண்புறா
திடுக்கெனத் திரும்பி
படபடவெனப் பறப்பதைப் போல்
சற்றே இளைப்பாறி
சடசடக்கிறது மனம்..

பயணம் தொடங்குகிறது
மறுபடியும்.

அமரன்
06-11-2008, 09:53 AM
மறுபடியும்
பயணம் தொடங்குகிறது
யாரோ முடித்த இடத்திலிருந்து
புதிய பயணமெனும் பெயரில்.

பலர் பயணித்த பாதைகளில்
அவர்கள் தடம் பற்றியும்
புதியவர்கள் கரம் பிடித்தும்
புதிதாய்ப் பாதங்களைப் பதித்தும்

தொடரும் அப்பயணங்களும்
முற்றுப்பெறாமல் முறிகின்றன.
பாதைகள மட்டும்
நீண்டுகொண்டே போகின்றன.

தாமரை
06-11-2008, 09:56 AM
நீண்டு கொண்டே போகின்றன
மனைவியின் ஆசைகள்
குறைந்து கொண்டே போகின்றன
கணவனின் தலைமுடிகள்.

சாம்பவி
06-11-2008, 10:27 AM
தலைமுடிக்கு வந்ததடி.,
தடியடி இடியடி...
இப்படி தப்படி ...
அடிக்கடி விழுதடி அடிதடி. ...
பின் எப்படி
இருக்கும் தலைமுடி... !!!!!

தீபா
06-11-2008, 10:34 AM
தலைமுடியுதிர்ந்த
மொட்டையுருவம்
கரமிழந்த தேகம்
விழிகளற்ற கோளம்
வெடித்துப் போன கால்கள்
என

மிச்சத்தின் விளிம்பில்
அம்மரம்

காறி உமிழ்கின்றன பறவைகள்
கூடு கட்ட இயலாதென

சிவா.ஜி
06-11-2008, 10:42 AM
இயாலதென இருந்துவிட்டால்
முயலாது முடங்கிவிட்டால்....
இலக்கு கிட்டுமா...?
விளக்கு சூட்டுக்கு மட்டுமா?
வெளிச்சம் உடன்வர
பளிச்செனத் தெரியும் பாதை
பயன்படுத்த தெரிந்தால் அவன் மேதை!

தாமரை
06-11-2008, 10:49 AM
மேதையும் பேதையும்
மௌனமாய்
வித்தியாசமின்றி இருக்கிறார்கள்
சுற்றிலும் பெருங்கூட்டம்
யார் யாரெனப் புரியாமல்!

தீபா
06-11-2008, 10:56 AM
புரியாமல் போகிறேன்

இன்னமும் கைக்ககப்படாத
குழந்தை பாஷைகளை
உடன்கற்று எப்படி பேசமுடிகிறது
அம்மாக்களுக்கு?

தாமரை
06-11-2008, 11:01 AM
அம்மாக்களுக்கு
பத்து மாத பாரம்
தாயுமானவள் பிள்ளை!
அவளுக்கு
பத்து வருட பாரம்

தீபா
06-11-2008, 11:09 AM
அம்மாக்களுக்கு
பத்து மாத பாரம்
தாயுமானவள் பிள்ளை!
அவளுக்கு
பத்து வருட பாரம்

பாரம் ஆகாது
வயிற்றாலும்
தோளாலும் சுமப்பது.

சாம்பவி
06-11-2008, 11:18 AM
சுமப்பது ஒன்றானால்
சுமையும் வரமே....
சுமப்பது இரண்டானால்..
சுமையும் சுகமே...
சுமப்பது மூன்றானால்...
சுமையும் பாரமே..
உனைச்
சுமப்பது நான்கானால்..
இமயமும் சாயுமே.... !!!

தீபா
06-11-2008, 11:27 AM
சாயும் கதிரவன்
நிமிரும் இரவு
முழுபொழுது.

சாம்பவி
06-11-2008, 11:39 AM
பொழுதோடு போனவன்
பழுதோடு போனதென்ன..
அழுதோடும் எந்நெஞ்சே ஆகுதியாய்
கொழுந்துவிட்டெரி மதுரை நீ... !!!!

தாமரை
06-11-2008, 11:44 AM
நீ மதுரை
வைகையோடும் நெஞ்சும்
மாடத் தெருக்களும்
மீன் ஆட்சியும்
கண்டு கொண்டே சொல்கிறேன்
நீ மதுரை!(மது உரை)

தீபா
06-11-2008, 11:49 AM
நீ
என்னுள் ஒளிந்திருக்கும்
எதிர்மறை சொல்

நீ
என்னுள் ஒளிந்திருக்கும்
கேள்விகளுக்கான பதில்

நீ நீயாக இருக்க,
என்னுள் நுழைந்து
எதிர்மறையை நேராக்கு
பதில்களை கூராக்கு

நானும் நீயும் ஒன்று

என்னுள் நீயாக
உன்னுள் நானாக

நீயன்றி
ஆவதில்லை
என்னுள் முழுமை

தாமரை
06-11-2008, 11:56 AM
முழுமை
கொட்டிய பின்னரும்
பாக்கி இருந்தது
சிறுமை ;)

சாம்பவி
06-11-2008, 12:14 PM
உரையில் உறைய*
இரையும் இரையுமே
இரையாதிருக்க
இரையாமோ தாமரை....... !!!!

சாம்பவி
06-11-2008, 12:25 PM
முழுமை
கொட்டிய பின்னரும்
பாக்கி இருந்தது
சிறுமை ;)

மையிட்ட இளமையோ...
இளமையில் இளமயில்...
கிழமையில் கிடக்கையில்
தாமரை தேடுதோ...
தாமரையோ...
தமையனும் அரையோ......
பழமாவுண் பழமே.... !!!!

தாமரை
06-11-2008, 12:37 PM
பழமே நீ
வெம்பிப் பழுத்தாயோ
வெக்கையில் பழுத்தாயோ
புகையில் பழுத்தாயோ
வகையில் பழுத்தாயோ
நான்றியேன்.

நீ பழுக்கும் வரை
நான் காத்திருந்தேன்..
நீ காத்திரு
நான் பழுக்கும் வரை
.

சாம்பவி
06-11-2008, 12:44 PM
பழுக்கும் வரைக்கும்
இழுக்கும் இழுக்கும்.... !
இருக்கும் வரைக்கும்
பழுப்போடிருக்கும்
வரம் வேண்டும் வேழமே.......!!!

தாமரை
06-11-2008, 04:33 PM
வேழமே
நாலும் தேவையில்லை
மூன்றும் தேவையில்லை
போதும்
வேழம் தோற்குமவள்
வேங்கை!

சாம்பவி
06-11-2008, 05:53 PM
வேங்கை மங்கை...
கூடயில் கூடலில்
கூடையில்
அங்கை அழுகுங்கை

.....

தாமரை
06-11-2008, 06:01 PM
அழுகுங்கை நிறைய
தங்க வளை

அழுங் கைகளுக்கு தேவை
தன் கவளை

அவரவர் கவலை
பெருங்கவலை!

மதுரை மைந்தன்
06-11-2008, 07:40 PM
பெருங்கவலை உலகை ஆளகிறது
பொருளாதார சரிவுகளிலிருந்து
மீள்வோமா அல்லது மாள்வோமா
பிணம் திண்ணும் பண முதலைகளைவிட
பண்டமாற்று முறையே சரி

தாமரை
07-11-2008, 02:16 AM
சரி சரி
தலையாட்டி
சரி சரி
வாலாட்டி
சரி சரி
கையாட்டி
சரி சரி வாழ்க்கை
சராசரி வாழ்க்கை

சாம்பவி
07-11-2008, 05:27 AM
வாழ்க்கை தர*
வாக்களித்து
தூக்கி வந்து மறுதலித்து
போக்கிடமின்றி புலம்ப வைத்தாய்...


தீக்கிரையானேன் உன்னாலே
சாக்காடுனக்கு என்னாலே..

...

தாமரை
07-11-2008, 05:33 AM
என்னாலே என்ன
சிலபொழுது யோசிக்கிறேன்
என்னாலே எல்லாம்
சிலபொழுது யோசிக்கிறேன்
என்னை விட்டு வெளியே வர
உன்னாலே என்றாது
உலகம்.

சாம்பவி
07-11-2008, 05:44 AM
உலகமும் ஒரு ஜீவனென்றாய்...... அதில்
சகலமும் ஜீவிக்குமென்றாய்
அண்ட பிரபண்டமும் ஜீவிக்க..
ஒற்றை ஜீவனை ஜீரணிக்க*

ஒன்றைக்கு கொன்று
ஒன்று வாழ*
என்னைக் கொன்றே
இன்றும் வாழ்கிறேன்... !!!!!

தாமரை
07-11-2008, 06:50 AM
இன்றும் வாழ்கிறேன்
மெல்லச் சாகிறேன்
உன் பார்வையும்
உதாசீனங்களும்
என்னையும் வாழவும் விடாமல்
முழுதாய் சாகவும் விடாமல்
மெல்லக் கொல்லும் விஷமாய்
மயக்கத்தில் என்னை
மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.

எதையெதையோ உளறிக் கொண்டு
வாழ்க்கை நகர்கிறது
என்னை விட்டு
உன்னை விட்டு
தறிகெட்டு

சாம்பவி
07-11-2008, 07:12 AM
தறிகெட்டுப் போமோ..
இழைவிட்டுப் போமோ..
ஊடலிது...
ஊடூடே ஊடுவது...
ஓடுவதெங்கே
உன் வீட்டுக்
கட்டுத் தறி... !!!!!

தாமரை
07-11-2008, 07:44 AM
தறிகள்..
நெய்து கொடுத்த காலம் போய்
சிலந்திகள்
தறிகளுக்கு
ஆடை நெய்கின்றன..

அங்கும்
பூச்சிகள் இரையாயின..
வார்த்தை வலைகளில்
இங்கும் பூச்சிகள்!

சாம்பவி
07-11-2008, 08:05 AM
பூச்சியில்லை புழுவில்லை...
பூப்பூக்க ராசியில்லை
பூசிக்கும் உனையன்றி
ஆசிக்க நாதியில்லை...
வேசிக்கும் ஆசித்தாய்...
யாசிக்குமெனை துவேஷித்தாய்........


கோவலனே....
நானுனக்கு
கேவலமா.... !!!!!

அமரன்
07-11-2008, 08:08 AM
கேவலமா நானுனக்கு
கண்ணஹியா மேலுமக்கு.
அவனை மட்டுமேந்தி
குப்பையில் வீழ்ந்திட்ட
குப்பியன்றோ நான்.!!!

சாம்பவி
07-11-2008, 08:54 AM
நானென் செய்ய ...
குப்பியில் குப்பை...
எனவே..
குப்பையில் குப்பி...
தானிக்கி தீனி
சரி போயிந்தி.....

கண்ணஹி எனக்கா
கண்ணகி உமக்கா...
நீர்
களவாணியாச்சே
சிலை
காணாமல் போச்சே... !!!!!!

தாமரை
07-11-2008, 09:45 AM
போச்சே போச்சே
அழுகையும் சிரிப்பும்
இருப்பவைகளை மறந்து
இருந்தவைகளை நினைந்து
போனதோடு போனது
காலமும்
வருவதை கவனிக்க
யாருமில்லை!

சாம்பவி
07-11-2008, 10:20 AM
இல்லையெனில்
இல் விடுத்துப் போவானென*
இறைஞ்சினேன்
இறைவனை. தோழி

கனியும் கனிக்கு
கனி கொடுத்தானடி

இனிக்கும் இக்கனி
அக்கனி வேறென*
எவ்விதம் இவ்வித*ம்
வினவிக் கணித்தவன்
இல் விடுத்தேப் போனானடி... !!!

தாமரை
07-11-2008, 10:32 AM
போனானடி தோழி
எதையெதையோ களவாடி
இன்னதென்று அறியேன்
என்னவென்று நான் சொல்வேன்

தேடிப் பார்க்க பார்வையின்றிக்
கண் கவர்ந்து போனான்
தடவிப் பார்க்க திராணயின்றி
உணர்வும் கவர்ந்து போனான்
எண்ணிப் பார்க்க வழியுமின்றி
நினைவும் கவர்ந்து போனான்
சொல்லித் தேட வழியுமின்றி
என் மொழியும் கவர்ந்து போனான்

என்னென்னவோ எடுத்துச் சென்றவன்
விட்டுச் சென்றது ஒரு தடயம்
தடயம் கொண்டு தேடுகிறேன் எங்கும்
அதுவன்றி எதுவுமில்லை

அதனால்
அவனுக்கு அவனையே தூதுவிட்டேன்
அவனுக்கு அவனே காத்திருப்பேன்
அவனில்
இன்று நான்
அவனில்

சாம்பவி
07-11-2008, 10:59 AM
அவனில் அவனிருக்க
என்னில்
ஒன்றழிய
ஒன்றுகூட*
அவனே இவனெனெ
சொக்கித்தான்
இவனென்
சொக்கந்தான்... !!!!!!!

தீபா
07-11-2008, 03:29 PM
சொக்கன் இல்லத்திலும்
பிரச்சனைகள் உண்டு
சதிகளிரண்டுக்குள்
சச்சரவு
கோவிக்கும் ஆறுதலை
அந்தோ பரிதாபம்
தனிமையிலே
யானை

சாம்பவி
07-11-2008, 03:35 PM
யானைப் போரடிக்க...
களமெங்கும் கதிராமே..
யானும் போரடிக்க.. (bore)
களமெங்கும் கவிதையாமே...

மதுரை மைந்தன்
08-11-2008, 04:04 AM
களமெங்கும் கவிதையாமே...
தளமெங்கும் அதே பேச்சாமே...
வளமான நாட்டிலே கவிதை
பெருக்கெடுக்கும் தானே....

ஓவியன்
08-11-2008, 07:13 AM
தானே தன் கண்களைக்
குத்தி விட்டு,
தானே தன் பார்வையைத்
தேடிப் பிடிக்க
கண்களின்றித் தவிக்கிறான்
நவயுக மனிதன்...!!

சாம்பவி
08-11-2008, 09:44 AM
மனித வக்கிரத்தின்
மற்றுமொரு பரிமாணம்....

இளிப்புகளுக்கிடையே
இனிப்புகளின் கபளீகரம்....

அங்கீகரிக்கப்பட்ட*
பார்வை பலாத்காரம்....

பெற்றவர் முன்னிலையில்
கண்ணில்
துச்சாதனத் துகிலுரிப்பு...

இலவச இணைப்பாய்
ஐந்து நிமிடப் பேச்சு....


உடலெங்கும் கூச*
நாணித்தான் நிற்கிறேன்....
அசூயைக்கு
வெட்கமென*
சாயம் பூசப்பட*
உடலெங்கும்
கம்பளிப்பூச்சி....

தாமரை
08-11-2008, 12:09 PM
கம்பளிப்பூச்சி
பட்டம் சுமந்து
கண் பழிப் பூச்சிகள்
முடியுதிர்த்து புழுக்களாயின

யாரோ ஒரு பிருத்விராஜனுக்கு
ஜன்னலோர சம்யுதைகள்

ஜாக்பாட் குதிரைகளுக்காக
வண்டிக் குதிரைகள்
கழுதைகளாய்
பெயரிடப்பட்டன

காத்திருப்புகள் கசந்தபொழுது
கழுதைகள் கூட
குட்டிச் சுவர்களுக்குப் பின்

சாம்பவி
08-11-2008, 01:10 PM
வருகிறார்கள் அன்றாடம்...
கீசகர்கள்
இவர்கள்
அம்மாவின் முந்தானைக்குள்
ஒளியும் பிருகநளைகள்...

காய்த்த மரமாம்
கல்லடி படுமாம்....
திருப்பியடிக்க மனமின்றி
மரமாய்....

சாம்பவி
08-11-2008, 01:13 PM
பின் வாங்கும் மாமா..
வருகிறார்கள் என*
பின்னிய பின்னல்...
பின்னிய பின்னர்..
இப்படி
பின் வாங்கலாமா....

தாமரை
08-11-2008, 01:23 PM
வாங்கலாமா
விற்கலாமா
யோசனைகளில்
தொலைந்து போனது
வாழ்க்கை!

சாம்பவி
08-11-2008, 01:49 PM
வாழ்க்கை முழுக்க*
பொய்யுரையாது
நாடிழந்து
காடிழந்து
பாதியிழ*ந்து
மீதியிழந்து
நந்தவனத்து
ஆண்டியாகிக்
கண்டதென்ன என்
கணவா...

இருக்கும் வேலையைத்
தக்க வைக்க.

மெய்யுரை மாங்கல்யம்
கண்படவில்லையென*
பொய்யுரைத்துப் போ நீ..... !!!!பி.கு.
பொருளாதாரம் சரியில்லை..
பில்கேட்ஸுக்கும் வேலையில்லை... !!!!!

தாமரை
08-11-2008, 01:56 PM
நீ நீர்
தெளிவானவள்
நீ நிலம்
தாங்கிக் கொள்கிறாய்
நீ காற்று
என்னுள் புகுகிறாய்
நீ தீ
நினைவில் எரிகிறாய்
நீ ஆகாயம்
என்னைச் சுற்றி எங்கெங்கும்
நான்?

சாம்பவி
08-11-2008, 02:10 PM
நான் காற்று...
உன் ஸ்வாசத்தில் என் வாசம்...
நான் நிலம்
உன் காலடிக்காய் என் தவம்...
நான் தீ....
உன் தீண்டலே என் வரம்...
நான் ஆகாசம்....
உன் நிறமே என் நிறம்......
நான் நீர்...
நீ... நீர்.... !!!!!

தாமரை
08-11-2008, 02:21 PM
நீர்
ஆவேசமாய் வந்து கொண்டிருக்கிறது
கரையோரப் பகுதிகளுக்கு
எச்சரிக்கை
தள்ளுமுள்ளு வேண்டாம்
வரிசையில் இருந்து எடுக்க வேண்டாம்..
குடங்களை

சாம்பவி
08-11-2008, 02:50 PM
குடங்களில் பச்சைக் கம்பளம்.
கர்நாடகம் கை விரித்தும் அமோக விளைச்சல்..
* முளைப்பாரி... !!!!

தாமரை
08-11-2008, 02:59 PM
பாரியும் மாரிதான்
கடலில் காயம்தான்

முல்லைக்குத் தேர் கொடுத்தான்
அத் தேரை யாரிழுத்தார்?

புலவர்க்கு பொன்கொடுத்தான்
யாருக்குப் பெண் கொடுத்தான்

கோவணம் கடைமடை
கோமனம் கொடைமடம்

சாம்பவி
09-11-2008, 06:48 AM
மடாதிபதி தில்லையம்பதி
அவம்பதி சிவம்பதி
எம்பதி
அவனெனவேப் பதி... !!!!!

தாமரை
09-11-2008, 04:07 PM
பதி நாலும்
பதி நாறும்
பதி நைந்தும்
பதி நெட்டும்
பதி

பாரதி
09-11-2008, 04:10 PM
பதிவுகளை கண்டதும்
பாதிக்கும் பதிவுகளை
பத்தி பத்தியாய்
பதிக்கத்தான் தோன்றுகிறது.
பாதியேனும் வேலை செய்யேன்
பாதிக்காத மூளையே.

தாமரை
09-11-2008, 04:17 PM
மூளையே!
இதயமும் சுவாசமும்
காதல் பலத்தில்
சுதந்திரப் பிரகடனம் செய்து விட்டன..

கைகால்களும் உடலும்
கால பலகீனத்தில்
சுதந்திரப் பிரகடனம் செய்து விட்டன..

இன்னும் என்ன வெட்டிப் பந்தா
நீயா சர்வாதிகாரி?

பாரதி
09-11-2008, 04:57 PM
சர்வாதிகாரிகளின் முடிவெல்லாம்
சரித்திரங்கள் சொல்லும்.
சமாதானப் புறாக்களை சாகடிக்கும்
உலோக உயிருருவியை
உண்டாக்கிய மூளையே
எதற்கு நீ இருக்கிறாய்?

மதுரை மைந்தன்
09-11-2008, 07:33 PM
எதற்கு நீ இருக்கிறாய்?
யாருக்கும் உதவாமல்
எங்கு நீ இருக்கிறாய்?
யாரும் அறியாமல்
எப்போது நீ திருந்துவாய்?
யாரும் உன்னை குறை கூற மாட்டார்கள்
என்று நீ திரும்புவாய்?
யாவரும் உன்னை வரவேற்கிறார்கள்.

தாமரை
10-11-2008, 02:08 AM
வரவேற்கிறார்கள்
என் கையில் இருக்கும்
பரிசுப் பொட்டலத்தை
திருமணவீடு.

பாரதி
10-11-2008, 02:35 PM
திருமணவீடுகளில்
காலியாக இருக்கின்றன
மனிதங்கள்.
நிரம்பி வழிகின்றன
சத்தங்களும்
செருப்புகளும்.

மன்மதன்
10-11-2008, 03:02 PM
செருப்பு
அணிந்து செல்ல
ஒரு சாராருக்கு
தடை போட்ட சாதி
தலைவருக்கு கிடைத்தது
தேர்தல் சின்னம்
செருப்பு.

சாம்பவி
10-11-2008, 05:53 PM
செருப்பின்
மறுப்பால்
இருப்பும்
நெருப்பாம்... !!!!!!

மதுரை மைந்தன்
11-11-2008, 02:01 AM
நெருப்பாம் அவள்
ஈட்டியாய் அவளது பார்வைகள்
சவுக்குகளாய் அவளது வார்த்தைகள்
பெண்ணே ஏன் இத்தனை கோபம்?
உன் முகத்தில் அதிகமாய் இருந்த
பவுடரை சரி பண்ணியதறகா?

அக்னி
11-11-2008, 03:07 PM
பண்ணியதற்கா
கல்லானாய்..?
பண்ணியது இதற்கா
கல்லாக்க..?
உடைய முன் வரட்டும் காதல்...
உடைக்க முன்வரட்டும் காதல்...

அமரன்
11-11-2008, 03:45 PM
வரட்டும் காதல்
வரட்டு கவுரங்களை
புரட்டிப்போட்டு
காதலின் கவுரம் காக்க.

மதுரை மைந்தன்
11-11-2008, 07:33 PM
காதலின் கவுரவம் காக்க
மோதல்களைத் தவிர்க்கவும்
காதலின் கவுரவம் காக்க
சாதலின் முடிவை நாடாதீர்

ஆதி
11-11-2008, 07:56 PM
நாடாதீர் என்றந்த
நாயகன் கூறிவிட்டான்
பாடாதீர் என்றவன்
பாட்டுக்கும் தடைவிதித்தான்
தேடாதீர் என்றவனோ
தெரியாமல் மறைந்துவிட்டான்
கூடாதீர் என்றுமக்கள்
கோவிலை பூட்டிவிட்டார்..

சாம்பவி
12-11-2008, 01:55 AM
பூட்டிவிட்டதைத்
திறக்க*
நாவுக்கரசனில்லை
பூட்டாமல் விட்டுவிட்டால்
நீ
நாவுக்கரசனில்லை... !!!!!

மதுரை மைந்தன்
12-11-2008, 12:34 PM
நாவுக்கரசனில்லை அவன்
பாவுக்கரசன் அவன்
சாவுக்கு அஞ்சாதவன் அவன்
சூத்திரங்கள் தெரிந்தவன் அவன்
சாத்திரங்கள் பல அறிந்தவன் அவன்

அமரன்
12-11-2008, 03:22 PM
அவனும் அவளும்
உரசி நடந்த பாதையெங்கும்
உதிர்ந்து கிடக்கிறது காதல்
மற்றவர் காலடிகளில் மிதிபட்டபடி.

நம்பிகோபாலன்
13-11-2008, 12:24 PM
மிதிபட்டதிற்காக
கவலை கொள்ளாதே
மனிதா
இன்று மிதிப்பவர்கள்
பலரும்
நாளை பூ தூவி
அழைப்பர்
இதுவும் கடந்து போகட்டும்
என்று எண்ணி
நம்பிக்கையும் விடாமுயற்ச்சியையும்
உடன் வைத்து போராடு
வெற்றி உனக்கே....

சாம்பவி
13-11-2008, 04:08 PM
உனக்கே
உனக்காய்..
இடமதில்
இருப்பினும்...

முழு மேனி
நான் தழுவ
பிறவேனோ
உன்
மடப்பள்ளிச் சாம்பலாய்.... !!!!

செல்வா
16-11-2008, 09:13 AM
மடப்பள்ளிச் சாம்பலோ
கழுவினால் நழுவிடும்
கழுவினில் கொழுவினும்
கணமேனும் பிரியாது
ஒட்டிய இரட்டையாய்
இருப்பதில் துயரேது?
அவ்வின்பத்திற் நிகரேது?

poornima
16-11-2008, 09:19 AM
நிகரேது
நீ என்னை தழுவி
ஆறுதலாய் தலைகோதி
அணைப்பில் புரிய
வைக்கும்
அன்புக்கும் அக்கறைக்கும்..

சுகந்தப்ரீதன்
16-11-2008, 11:47 AM
அக்கறைக்கும் குறைவில்லை
அக்கரையிலும் குறையில்லை..
ஆனாலும் நீளுது...
அக்கரைக்கும் இக்கரைக்கும்
இடையே இன்னும் எங்கள்
இரத்தம் சிந்தும் பூமி..!!

மதுரை மைந்தன்
16-11-2008, 11:56 AM
எங்கள் இரத்தம் சிந்தும் பூமி
அதைக் கண்டு கண்ணீர் சிந்தும் வானம்
தோள் கொடுக்கும் தொப்புள் கொடிகள்
அழுதவர் கெட்டதில்லை
சரித்திரம் பறை சாற்றட்டட்டும்