PDA

View Full Version : கவிச்சமர் - களம்



Pages : 1 [2] 3 4 5 6 7

பாரதி
28-11-2008, 02:43 PM
சரித்திரம் பறை சாற்றட்டட்டும்
கறை படிந்த ஏடுகளை.
கப்பலில் வந்திறங்கி
கள்ளத்தனமாய் உள்ளேவந்து
கண்மூடித்தனமாக எறிகுண்டுகளை வீசி
காணும் மனிதர் யாவரையும் சுட்டுத்தள்ளி
இனியேனும் அஞ்சுவரென
பயங்கரவாதிகள் கண்ட கனவு
எந்நாளும் நடக்கப்போவதில்லையென
சரித்திரம் மீண்டும் சொல்லும்
சத்தியம் நிச்சயம் வெல்லும்.

தமிழ்தாசன்
28-11-2008, 02:55 PM
சத்தியம் நிச்சயம் வெல்லும்.
சத்திய வேள்வியின் முடிவுகள் சொல்லும்.
சரித்திர வீரரின் கனவுகள் வெல்லும்.

அமரன்
28-11-2008, 08:42 PM
கனவுகள் வெல்லும்
வெல்லக் காலம் கனிந்தது.

தாயகத்துள் தவமிருக்கும்
அக்னிக்குஞ்சுகளின் கனவுகள் ஏற்றிய
தீபங்களின் சுடர்கள்
கம்பீரமாய்ச் சுழல்வதைப் பாருங்கள்.

நெஞ்சாக்கூட்டில் அவை நிரப்பும்
கனவு மைகளை சேமியுங்கள்.

தலைகோதும் தென்றலில்
கலந்து தவழ்ந்து வரும்
உயிர்க் காற்றை உணருங்கள்.

காதுகளின் அவை சொல்லும்
சேதிகளை கோர்த்து
நெற்றிப்பொட்டில் பத்திரப்படுத்துங்கள்.

சிலிர்க்கும் தேகத்தில்
குத்திடும் உணர்வு மயிர்களை
பேனாக்குழல் ஆக்குங்கள்.

சேர்த்து வைத்த மையெடுத்து
உணர்ந்த உயிர் காற்றை உள உரனாக்கி
கோர்த்த சேதியை மையப் படுத்தி
போர் தொடுக்கப் புறப்படுங்கள்.

துப்பாக்கியை கையில் திணித்த
துர்பாக்கிய வரலாற்றை
திருத்தி எழுதத் தொடங்குங்கள்.

தாமரை
02-12-2008, 02:48 AM
தொடங்குங்கள்
முடிந்து விடும்
முடியுங்கள்
தொடங்கிவிடும்

தொடக்கமும் முடிவும்
தேடிக் கொண்டே
தொலைந்து போகாதீர்கள்

பாரதி
02-12-2008, 11:13 AM
தொலைந்து போகாதீர்கள் -
தூரத்திலிருந்து கொண்டு
தூண்டித் தூண்டில் போட்டு
மூளைச்சலவையை முழுநேரம் செய்து
ஆண்டவன் பெயரை சொல்லி,
ஆயுதங்கள் மூலம் சாதிக்கலாம்
அச்சுறுத்தியே பிழைக்கலாம்
அத்தனையும் நடக்குமென
பகற்கனவு காணாதீர்கள் - கானற்
பாலையில் தொலைந்து போகாதீர்கள்.

அக்னி
02-12-2008, 11:53 AM
தொலைந்து போகாதீர்கள்,
மனிதத்திலிருந்து...
இல்லையேல்,
தொலைந்து போங்கள்,
மனிதர்களிடத்திருந்து...

சாம்பவி
02-12-2008, 10:49 PM
இருந்து
தொடங்கி....முடித்தும்.....
மீண்டும்
தொடக்கத்தில்......

சுழலும் வேகத்தில்
உழலும் சோகத்தில்

கழுத்தில் நுகத்தடி
பாரமாய் அழுத்தியபடி
விட்டத்திலேயே மறுபடி.... !!!!!

தாமரை
02-12-2008, 11:58 PM
மறுபடி விட்டத்தில்
அந்தப் பல்லி கத்தியது..
ச்ச்.. ச்ச். ச்ச்.

யாருக்குக் காட்டிய அனுதாபமோ
அமர்ந்தவனுக்கோ
விழுந்தவளுக்கோ

யவனிகா
03-12-2008, 01:47 PM
விழுந்தவளுக்கு
ஒற்றை விரல்
பிடிக்கத் தந்து, நடந்த பாதையெங்கும்
பாராட்டுப் பத்திரம் வாசித்துசென்றாய்.
ஒரு வயது அன்றெனக்கு...
எப்போதும் எனைத் தங்கிப்பிடிக்கவோ
பூமிக்குள் புதைந்தாய் நீ...
விழுவது பற்றி பயமேஇல்லை
தாங்க நீ இருப்பதால்...

அக்னி
03-12-2008, 08:31 PM
நீ இருப்பதால்,
நான் இயக்கமற்று...
நீ இருப்பதால்,
நான் இயக்கம்பெற்று...
பசி..!

அமரன்
04-12-2008, 08:40 AM
கலக்கல் அக்னி.:icon_b::icon_b:

பசி படர்ந்த வயிற்றுடன்
நடந்தவன் வழுக்கி விழுந்தான்
பாசி படர்ந்த அவனைப் பிடித்து
விழுந்தவன் எழுந்து வந்தான்!

அல்லிராணி
04-12-2008, 09:33 AM
எழுந்து வந்தான்
சோம்பல் முறித்தான்
ஏடும் தேநீரும்
பருகி முடித்தான்

சுத்தமானான்
குப்பைகளை வயிற்றில் திணித்தான்
பொய்களை கடைவிரித்தான்
உண்மைகளை யாசித்தான்
அழுக்கானான்

திட்டினான்
மேலும் மேலும் குப்பைகள்
சோம்பினான்
கவிழ்ந்தான்

ஒரு நாள் கழிந்தது!

வசீகரன்
04-12-2008, 09:48 AM
கழிந்தது கதிர் மேற்கில்...
கடந்தது கடமைகள் காற்றில்...

இளைப்பாரியது இதயம்...
இசைவு தேடியது இயக்கம்...

மெல்ல சாமரம் வீசிட பார்த்தது
மாலை..
கவிதைகளுடன் புறப்பட்டது
புன்னகை..
இதோ கவிந்துவிட்டேன் இயல்புடன்
இரண்டர கலந்துவிட்டேன் இனிமையுடன்...

அக்னி
04-12-2008, 11:15 AM
”இனிமையுடன் இருப்பாய்”
என்றாய்.
”இனி மையுடன் இருப்பாய்”
என்றது,
இப்போதுதான் எனக்குப் புரிகின்றது.

தாமரை
04-12-2008, 11:18 AM
எனக்குப் புரிகிறது...
அப்பா சொன்னது
அம்மா சொன்னது
அண்ணன் சொன்னது
அக்காள் சொன்னது
எல்லாம் எனக்குப் புரிகிறது

அவனிடம் தொலைந்து
அவர்களைத் தொலைத்து
அவனைத் தொலைத்து
வாழ்க்கையும் தொலைந்தபின்!

அக்னி
04-12-2008, 11:34 AM
தொலைத்தபின்
தேடலில் நான், என்னை...
தொலைக்குமுன்,
தேடியதோ நான், உன்னை...

ரங்கராஜன்
04-12-2008, 12:02 PM
உன்னை தொலைத்ததால்
வாழ்க்கையும் தொலைந்தது,
பார்க்கும் இடத்தில் எல்லாம்
நீ

அக்னி
04-12-2008, 03:24 PM
நீ
தள்ளிப் போ...
என்னை விட்டல்ல,
என்னை உன்னுடன்...

தமிழ்தாசன்
04-12-2008, 07:39 PM
உன்னுடன் என்னை விட்டேன்.
என்னுடன் நானில்லை.
பின்னொருநாள் நானிருந்தேன்
உன்னுடன்.

சாம்பவி
04-12-2008, 08:28 PM
உன்னுடன் வலம் வர*
உன்னுடல் இடம் பெற......
என்னுடன் வரன் வர*
என்னுடல் வரம் பெற......
ஸ்வயம்பூ.....வயம் பூ.... !!!!!

அல்லிராணி
04-12-2008, 11:31 PM
பூ
மொட்டாய்
குவிந்து குனிந்திருந்தது
மொட்டுக்களைப் பறித்த பூக்காரிக்கு
என்ன கரிசனமோ
இவளின் அதிர்ஷடமோ
பறிக்கப் படவில்லை..

காலம் வந்ததும்
ஒரு நாள் மாலை
மெல்ல மலர்ந்தாள்.
இதழவிழ்த்தாள் புன்னகைத்தாள்
உலகம் புதியதாக
உலகம் இவளையேச் சுற்றி
உலகம் இவளையேச் சுவாசித்து
உலகம் இவளுக்காக

அவள் பார்த்துக் களித்திருக்க
காலங்கள் போய்
சுற்றி இருந்தவர் போய்
வாடும் காலம் வந்தது

பளபளத்த இதழ்கள் சுருங்கின
உதிர்ந்தன வறண்டன
வைராக்கியச் சூலில்
கருத்தரித்த விதை
காத்திருக்கிறது காயாக
காலம் கனிய

காலூன்றி
இன்னொரு முயற்சி செய்ய,

யவனிகா
05-12-2008, 12:40 PM
முயற்சியே செய்யாமல்
முன்வந்த நாழிகைகள்...
நாம் பேசித்தீர்த்தபின்னும்
நம்மைப் பேசிக்கொண்டிருந்த மௌனம்...
படிக்கும் போதே விழிகள் நிறைய
பாதிக்கு மேல் தொடரமுடியாமல்
மூடிவைத்த புத்தகப் பொழுதுகள்...
தவிக்க வைக்கும் நிசப்சத்தை
ஒற்றைக்குரலால் கிழித்துப்போட்டபடி
மின்சாரக்கம்பியில் காக்கை கணங்கள்...
பேருந்து முன்னிருக்கையில்
நீ அமர்ந்து..முள் மீது நானிந்த நிமிடங்கள்...
இன்னும் கழுவப்படாத உதிர வாடையுடன்
முன்நெற்றி முழுக்க முடியே இல்லாமல்
முதல் குழந்தையை முத்தமிட்ட நொடிகள்...
எந்த வித முயற்சியும் இன்றி
எப்போது,எப்படி மலர்ந்ததென்றே தெரியாத
மொட்டுபூக்கள்...என் பொக்கிச பொழுதுகள்...

அல்லிராணி
05-12-2008, 01:01 PM
பொக்கிசப் பொழுதுகளை
பொசுக்கி
காய்கிறது கஞ்சி
உன் நினைவுகளைத்
தொட்டுக் கொள்கிறேன்
அமிர்தம்

பாரதி
05-12-2008, 01:47 PM
அமிர்தம்...?
வெங்காயமோ மிளகாயோ
ஊறுகாயோ உப்புக்கண்டமோ
ஊற வைத்த பழஞ்சாதத்திற்கு
இவையெதும் இல்லாவிடினும்
உன் நினைவு தருவதை
உள்நாக்கு உணருமே.

அல்லிராணி
05-12-2008, 01:50 PM
உள்நாக்கு உணருமே
வெளிப்படாமல்
விழுங்கப்பட்ட வார்த்தைகளை..
இருமல்களாய் செருமல்களாய்
சொன்னது அல்லவா!

மதுரை மைந்தன்
11-12-2008, 11:32 AM
இருமல்களாய் செருமல்களாய்
சொன்னது அல்லவா!

விம்மல்களாய் தும்மல்களாய்
வெளி வந்தவை அல்லவா!

ஜாடையாய் மாடையாய்
கூறியவை அல்லவா! என் காதல்

அதை அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்
இருந்தால் எப்படி?

அக்னி
12-12-2008, 10:51 PM
எப்படி இருந்தாய்
பிறக்க முன்...
எப்படி இருப்பாய்
இறந்த பின்...
இருக்கும்போது
மனிதனாக இரு...
இறப்பில் பிறப்பாய்...

loshan
28-01-2009, 08:39 AM
இறப்பில் பிறப்பாய்..
நெருப்பாய் இருப்பாய்..
நீசரை எரிப்பாய்..
ஈழத்தில் இருந்தால்..
இவையெல்லாம் சொல்லவும்,
திறக்காய் வாய்..

யவனிகா
30-01-2009, 04:11 PM
வாய் பிளந்து இரைக்காகக்
காத்திருக்கும் குருவிக்குஞ்சுகளுக்கோ,
தளை அறுத்து தாய்மடிமுட்டும்
செவலைக்கன்றுக்கோ,
மோவாயில் பால்தடத்தோடு
கிறங்கிக்கிடக்கும் மூன்றுமாதக்குழந்தைக்கோ,
தெரிந்திருக்கப்போவதில்லை...,
இன்னும் ஐந்துநிமிடத்தில்
அங்கே கண்ணிவெடியொன்று வெடிக்குமென்று....

செல்வா
30-01-2009, 04:24 PM
வெடித்திருந்தால் இறக்காதிருந்திருப்பேன்
மனம் நிறைத்த கனவுகளும்
தினம் சேர்த்த எதிர்பார்ப்புகளும்
அவள் சொன்ன ஒரு சொல்லால்
சிதறிய நேரத்தில்
வெடித்தழாது... அழுத்திய எண்ணங்களால்
இறக்காமல் இறந்துவிட்டேன்
வெடித்திருந்தாலோ இறக்காதிருந்திருப்பேன்.

loshan
03-02-2009, 04:50 AM
இறக்காதிருப்பேன்..
என்றுமே இறக்காதிருப்பேன்..
வால் பிடித்து..
வாய் பொத்தி..
முதுகு வளைத்து,
முகத்துக்கு நேரே எதுவும் பேசாமல்,
தேவையான இடத்தில்
தேவையானாவரைப் புகழ்ந்து பேசி
புழுவாய் வாழத் தெரிந்திருந்தால்
நானும் என்றுமே இறக்காதிருப்பேன்..

பூமகள்
06-02-2009, 08:03 AM
என்றுமே இறக்காதிருப்பேன்..

எழுத்துகளின் ஈரம்
என் ஆன்ம வேர் தீண்டும் வரையிலும்..

நல்லுறவுகளின் கீதம்..
என் மனச் சுவர்கள் முட்டும் வரையிலும்..

வல்லூறுகளின் வேசம்..
தூசாகி தீயில் பொசுங்கும் வரையிலும்..

காலங்கள் மாறினாலும்..
சூழல்கள் குழப்பினாலும்..

என்றுமே இறக்காதிருப்பேன்..
எழுதி விட்டுப் போன
ஒரு சில காகிதச் சிதறல்களிலேனும்...

தாமரை
06-02-2009, 08:41 AM
சிதறல்களில் சிதறாத
பிம்பங்கள்
கண்ணாடிகள் உடைந்தாலும்
இதயத்தில் உள்ள
காதலைப் போலவே
ஒவ்வொரு சி(செ)ல்லிலும்
முழுமையாக நீ!

அமரன்
06-02-2009, 09:24 AM
நீ
எழுந்து சென்றாலும்
எழுந்து தொடர மறுக்கின்றன
உன் காலடிதடங்கள்

நீ
காகிதங்களில் எழுதாமல்
மணலில் எழுதி இருக்கலாமோ

பூமகள்
06-02-2009, 01:31 PM
இருக்கலாமோ என்று
ஊகித்தபடியே நம்
ஒவ்வொரு பார்வையும்
பரிமாறப்படுகின்றது..

சில நொடிப் பரிமாறலில்
இம்சைபடும் இதயத்துக்கு
நீயாவது சொல்லேன்..

நம் ஊகங்கள்
ஒன்று தான் என்று...!!

அமரன்
06-02-2009, 01:53 PM
என்று என் பார்வைகள்
உன் கவிதைகளை
புரிந்து கொள்ளாமல் போகிறதோ
அன்றே என் கவிதைமொழி
செத்து விட்டதாய் நினைத்துக்கொல்
என் கவிதை தடயங்களை.

பூமகள்
06-02-2009, 02:23 PM
என் கவிதைத் தடயங்களை
தேட முற்படுகையில்..
கானல் நீர் தாரைகளையே
கண்ணுறுகிறது மனம்..

கானலான தடயங்கள்
நிஜமாவது எப்போது?

மதுரை மைந்தன்
06-02-2009, 10:18 PM
நிஜமாவது எப்போது?
காற்றோடு கலந்த உன் சிரிப்பலைகள்

நிஜமாவது எப்போது?
வெறும் தடங்களாய் மாறி விட்ட உன் வருகை

நிஜமாவது எப்போது?
கனவுகளாய் ஆன உன்னுடன் வாழ்க்கை

நதி
07-02-2009, 07:38 AM
வாழ்க்கையில் ஜெயித்து விட்டேன் என்று
எல்லாரும் உரக்கச் சொல்ல*
நான் மட்டும் ஓரமாக நின்று
நல்லவானாக இருந்தாலும்
நல்லவன் என்று மற்றவர் சொல்ல
ஆசைபடும் மனிதப் பொதுவிதிக்கு கட்டுப்பட்டு
நான் வாழ்கிறேன் என்று
சத்தமில்லாமல் சொல்லிக்கொண்டேன்

ஓவியன்
07-02-2009, 07:58 AM
சொல்லிக் கொண்டேன்
மனதினுள்ளே,
இன்னும் என்னைச்
சொல்லிக் கொள்ளும்
உறவுகளையும்
சொல்லிக் கொள்ளாது
நட்டாற்றில் விட்டு
வந்த பாவியென...!!

சிவா.ஜி
07-02-2009, 10:31 AM
பாவியென எவரை சொல்வது?
எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
இறைவனைப்போலவே
பாவிகளும் நிறைந்திருக்கும் உலகில்
தனியாக அடையாளப்படுத்தப்படாத
பாவியாக நானும் இருக்கையில்...!!

ஓவியன்
07-02-2009, 01:53 PM
இருக்கையிலிருந்து
இன்னொரு
இருக்கையென
தொடர்ச்சியாய் இருத்தி,
இறக்கைகளை
உதிர்த்து விடுகின்றன
பதவிகள்....!!

loshan
07-02-2009, 05:51 PM
பதவிகள் பாவிகள்
அமர்ந்து அமர்ந்து
பாவங்கள் தேடிக் கொண்டதனால்
பாவ விமோசனம் நாடித்
தவம் புரிய நினைத்தாலும்,
தனிமை அவற்றுக்குக் கிடைப்பதேயில்லை..

அமரன்
07-02-2009, 06:40 PM
கிடைப்பதேயில்லை என
எத்தனை முறை சலித்தாலும்
அவற்றையே தின்று
உரம்பெற்று ஓடத்தான் விளைகிறேன்
எதிர்பார்ப்புகளின் பின்னால்.

ஓவியன்
08-02-2009, 03:25 AM
பின்னால் துரத்தியவையால்
என்னைப் பிடிக்க முடியவில்லை
அன்று,
அவற்றின் பின்னால் துரத்துகையிலும்
என்னால் பிடிக்க முடியவில்லை
இன்று...!!

பூமகள்
09-02-2009, 03:04 AM
இன்று பெய்த மழையால்
துடைத்துவிடப்பட்ட வானத்தில்..
முளைத்துவிட்டிருந்தது
ஒன்றிரண்டு காளான் நட்சத்திரங்கள்...!

அல்லவை அழிக்க
எரி நட்சத்திரமாகுமாவென
அங்கலாய்த்தபடியே
இன்னும் என் மனம்...!!

loshan
09-02-2009, 04:07 AM
என் மனம்,
பாசி பிடித்த கிணறாய்
பாழடைந்து இருப்பினும் கூட
இடையிடையே தாவி
நினைவு நீருக்குள்
சலனம் ஏற்படுத்தும்
குட்டித் தவளைகளாய் நீ..

பூமகள்
09-02-2009, 06:43 AM
நீ
அழைக்கும் வரை
நம் வீட்டில்
பெரிய வரிசையில்
காத்திருக்கின்றன..

நம் வீட்டு அழைப்பு மணி
முதல்
அலைபேசி வரை..
என் பின்னாலேயே...!!

ஓவியன்
09-02-2009, 07:04 AM
பின்னாலேயே
துரத்தி, துரத்தி
கடைசியில்
களைத்துப் போன
நாய்க்குட்டிகளாய்
நம்
கனவுகளும் கற்பனைகளும்...!!

சிவா.ஜி
10-02-2009, 05:04 AM
கற்பனைகளும்,அவை
பிரசவித்த வார்த்தைகளுமாய்
என் எல்லா காகிதங்களும்
நிரம்பிக்கொண்டிருக்கின்றன
என்றோ ஒருநாள்
அச்சேறுமென்ற ஆசையில்!

ஓவியன்
10-02-2009, 07:16 AM
கற்பனைகளும்,அவை
பிரசவித்த வார்த்தைகளுமாய்
என் எல்லா காகிதங்களும்
நிரம்பிக்கொண்டிருக்கின்றன
என்றோ ஒருநாள்
அச்சேறுமென்ற ஆசையில்!

ஆசையில் எழுதியவை
அச்சேறாமலேயே,
மணம் கமழுகின்றன
மன்ற நந்தவனமாய்...!!

loshan
10-02-2009, 11:05 AM
நனதவனமாய்த் தானிருந்தன
எங்கள் நேற்றைய வாழ்க்கைகள்..
வந்த யுத்தப் புயலில் சிக்கி
மொட்டை மரங்களாய் நாமும்,
பாலைகளாய் எங்கள் நிலங்களும்..

நிரன்
10-02-2009, 11:26 AM
நிலங்களும் வளங்களும்
நினைத்தவை பெருவதும்,
நிகழுமா நம் வாழ்வில்
போர் களங்களின் மத்தியில்!

loshan
11-02-2009, 05:01 PM
மத்தியில் சுத்தியால் போடு போடென்று
போட்டு
மண்டையை உடை
நெஞ்சிலே பழுக்கக் காய்ச்சிக் கம்பியை இழு
கால் இரண்டிலும் லாடம் கட்டி
காத தூரம் இழுத்து செல்..
கிங்கரனுக்கு யமனின் ஆணை..
பூலோகக் கொடியவனுக்கு
எமனுலகில் தண்டனை..
சக்கரம் சுழலும் கவனம்

* மன்றத்தில் அடியேனது நூறாவது பதிவாம்..கணக்கு சொல்கிறது..:)

சிவா.ஜி
12-02-2009, 07:37 AM
கவனிக்காது வந்துவிட்டான்...
அவனின் இலக்கை நோக்கிய பயணத்தில்
இழந்துவிட்டவைகளையெல்லாம்!
பயணம் முடிந்தபோது
கட்டைகளுக்கு பதில்
பணக்கற்றைகள் இருந்தன
எரிப்பதற்கு....ஆனால்
எரியூட்டத்தான் யாருமில்லை...

ஆதி
12-02-2009, 09:04 AM
யாருமில்லை எனும் வேளையில்
ஆரும் தனிமை
தூரதூரங்களில்
தென்படாத தொலைவுகளில்
சுற்றி திரியும் எண்ணங்களை
கொணர்ந்து கொட்டி செல்கிறது
எனக்குள்..

பேர் தெரியாத சில எண்ணங்கள்
ஊர் தெரியாத சில வெறுமையை
என்னுள் பரப்பி
என்னையும் வெறும் உதடாக்கிவிடுகிறது..

அவமானங்கள் ஊற்றேடுக்கும்
நிராகரிப்பின் எண்ணங்கள்
என்னையும் ஒரு
பிதுக்கிய உதடாக்குகிறது..

களிறாய் பிளிறி என்னை
வெருட்டும் சில எண்ணங்கள்
கொடூர ஊசியாய் மாறி
என் உயிர் பொட்டை குற்றுகிறது..

என்னை அறிந்த
நானுமறிந்த சில
உறுத்தும் எண்ணங்கள்
அறுத்தும் போடுகிறது மனதை..

மறுநாளைய சூரியனிடம்
கையேந்தும் நிலாவாய்
அவ்வபோழ்து சில எண்ணங்கள்
வந்து போகின்றன..

யாருமில்லை எனும் வேளையில்
ஆரும் தனிமையில்
வரும் எண்ணங்கள்
பயங்கரமானவையாய் இருக்கின்றன..

samuthraselvam
12-02-2009, 09:13 AM
பயங்கரமாய் இருக்கின்றன, உன்னைப் பார்க்கும் நேரங்கள்.
நெடு நாட்களுக்கு பிறகு பார்க்க நேர்ந்தால்....
பேசமுடியும்.....
உன்னோடு அல்ல..
உன் மனதோடு.
கண்கள் மட்டும் பழைய காதல் வசனங்களை பேசும்.
கூப்பிடும் தொலைவில் இருந்தாலும், கூப்பிட முடியாது.
ஆம் அருகில் உன் துணையுடன் நீ.

ஆதி
12-02-2009, 10:06 AM
உன் துணையுடன்
நீ பேசிக் களித்திருக்கையில்
நானெங்கோ ஒரு ரயில் நிலையத்தின்
புத்தகடையில் வேடிக்கை பார்த்திருக்கலாம்..

உன் குழைந்தைக்கு
நீ நிலாசோறு ஊட்டுகைட்யில்
அறியாத அந்நியர்களோடு
நான் பேசிக்கொண்டிருக்கலாம்..

எதோ ஒரு மழையை
நீ ரசித்திருக்கையில்
இழுத்திப்போர்த்தி நான்
ஆழ்ந்து உறங்கியிருக்கலாம்..

இப்படி உனக்கும் எனக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை
என்றான பிறகும்..
உருகும் கண்களோடும்
இறுக்கமான இதழ்களோடும்
அறியாதவரை போல
நடந்து கொள்ள..
நமக்காக ஒரு சந்திப்பு
எங்கோ காத்திருக்கலாம்..

யவனிகா
14-02-2009, 03:45 PM
காத்திருக்கக் கூடும் இன்னும்,
என் விரல் தொட்டுப்பறந்த
வண்ணத்துப்பூச்சியும்,
என் விழிதொட்டுக்கலைந்த
வானத்து மேகமும்,
என் முகம் தழுவிப்போன
முன் பனிக்காற்றும்...
உன் வாசலில் இன்னும்
என் காதலைச் சொல்ல
கால் வலிக்க காத்திருக்கக்கூடும்

நீ உறக்கம் கலைந்து
வாயில் திறக்கும் நொடிக்காக...

கதவைத் திற தயவு செய்து...

தாமரை
14-02-2009, 05:37 PM
தயவுசெய்து இனி
கவிதைகள் எழுதாதே!

வெள்ளையாக உள்ள வரைதான்
உன்னோடு இருக்க முடியும்

கறை சுமத்தி
சிறையிலிட்டு
என்னை நாடுகடத்தாதே!

இப்படிக்கு
வெள்ளைத்தாள்.

ஓவியன்
15-02-2009, 01:20 PM
வெள்ளைத்தாள்
களங்கமாகிறது
கவிதை என்ற
பெயரில் நடக்கும்
தமிழ் கொலைகளால்... !!

மதி
15-02-2009, 03:17 PM
தமிழ்க்கொலை கூட
பெரிதாய் படவில்லை
தமிழே பேசியறியா
உன் செவ்விதழ் விரித்து
நன் உன்ன கதலிக்கறென்
என நீ சொன்ன போது

ஓவியன்
15-02-2009, 03:56 PM
சொன்ன போது சொல்லாமல்
விட்டுப் போன சொற்களைத்
தேடியெடுத்துக் காத்திருக்கிறேன்,
இன்னுமொரு தடவைக்காக....!!

யவனிகா
16-02-2009, 07:23 AM
ஒரு தடவையாவது
பெய்தே தீரவேண்டும்
கடுங்கோடையானாலும் சிறுதூறல்..,

நான் வைத்த செடியில்
இன்னும் பூக்காத பூவின் கோரிக்கை..
வானவில்லே பார்த்தறியாத
குட்டிமகனின் ஏக்கம்...
செய்து வைத்த காகித கப்பலை
என்ன செய்வதென்ற குழப்பம்...
மழைத்துளியை ஸ்பரிசித்திராத
நேற்றுஜனித்த பூனைக்குட்டி...

இவர்களின் பிரதிநிதியாய்
கேட்கிறேன்..எனக்காக,
மெல்லென தூறல்போடு
வானமே நீ ஒரு தடவை!!!

ஓவியன்
16-02-2009, 07:47 AM
ஒரு தடவை, இன்னும்
ஒரே ஒரு தடவையென
தன் கை கவளச் சோற்றை
என் வாயில்
நிறைத்தாலும் மனம்
நிறையாத தாயாக
தொடர்ந்து
பெய்துகொண்டிருக்கிறது மழை...!!

ஆதி
16-02-2009, 08:21 AM
ஒருதடவை உன்மடியில் இறக்க வேண்டும் - பின்
மறுநொடியே மீண்டும்நான் பிழைக்க வேண்டும்
பெரும்பொழுதில் என்மௌனம்நீ திறக்க வேண்டும் -அதில்
பெய்யாத மழையெல்லாம் பெய்ய வேண்டும்
அரும்பொழுதில் அடிஅடியாய் உருக்க வேண்டும் -நானுன்
அடிமையென்று ஆர்ப்பரித்து கூவ வேண்டும்
கிறுக்குண்டு உன்நினைவில் திரிய வேண்டும் - என்றன்
கிரக்கங்கள் யாவையும்நீ பெருக்க வேண்டும்

சண்டையிட்டு நீஎன்னை பிரிய வேண்டும் - ஒரு
சமரசத்தில் மீண்டுமென்னை அணைய வேண்டும்
கொண்டையுறும் பூவாய்நீ சிரிக்க வேண்டும் - என்
குழலிழதல் நீயெடுத்து இசைக்க வேண்டும்
அண்டையிலே எப்பொழுதும் முகைய வேண்டும் - உன்னை
அடிக்கடிநான் தேடிதேடி அலைய வேண்டும்
எண்சீரில் நீஎழுதும் பாட்டில் எல்லாம் - நான்
பெண்சீரின் இலக்கணமாய் அமைய வேண்டும்


(பி.கு:- எனக்குமுன் ஓவியர் முந்தி கொண்டார், ஆதலால் அவரின் இறுதி வார்த்தையில் இருந்து துவங்குக பா.. )

யவனிகா
16-02-2009, 05:50 PM
வேண்டும் ஒரே ஒரு நாள்..
பார்க்குமிடமெங்கும் பச்சையும்
உயிர் மீட்டும் இசையும்
பனி நனையும் சூரியனுமாய்
தாலாட்டும் காற்றுமாய்
ஒருநாள் வேண்டுமென்று
கனவில் மூழ்கியிருந்த மனதை
கலைத்து விட்டது...,
மாதக்கணக்கில் வறண்ட தலையும்
நாட்கணக்கில் ஒட்டிய வயிறுமாய்
பிச்சைக்காரியின் இடுப்புக் குழந்தையின் அழுகை

அவரவர் உலகம் அவரவர்க்கு....
கவலைப்பட்டபின் மீண்டும் பழைய
கனவுக்குள் நுழைகிறது மனது...

இளசு
16-02-2009, 05:56 PM
மனது ஒரு கூட்டுப்புழு
மனது ஒரு வண்ணத்துப்பூச்சி..

உருவமும் பருவமும் மாறிமாறி
இறுதிவரை அது என்னுடன் ஆடும்
இனிய கண்ணாமூச்சி..

யவனிகா
16-02-2009, 06:06 PM
கண்ணாமூச்சி ஆட்டம்
தெருவெங்கும் சிறார் கூச்சல்
மானசீகமாய் நானும் கண்களைக்
கட்டிக்கொண்டு தேடுகிறேன்...
தொலைந்து போன பிராயங்களை...
ஒவ்வொன்றாய் தேடியபின்,


கண்டு பிடித்தேன்...
அன்றைய இரவு உறக்கத்தின் போது.

இளசு
16-02-2009, 06:11 PM
உறக்கத்தின் போது
சிரிக்கும் மழலை

ஈரத்தினாலே
சிலிர்த்த ரோஜா

பனிப்புல் மீது
கூசும் பாதம்

பசித்த வேளை
ஒரு பிடி அன்னம்..

எத்தனை கோடி இன்பம்
வைத்தான் இறைவன்..

இனப் போர் அழிவையும்
ஏன் அளித்தான் அதே ஒருவன்?

யவனிகா
16-02-2009, 06:42 PM
ஒருவன் படைத்த உலகா?
தானாய் முளைத்த உலகா?
மரம் ஏன் வானம்பாத்து வளருது?
நிலா எப்படி விழாமல் நிக்குது?
தம்பிப்பாப்பா பொறந்தது எப்படி?
மாங்கொட்டை மரமானது எப்படி?

விடைகள் எதுவும் தெரியாது அப்போது
சௌகர்யமான பருவம் அது
வினாக்களுடன் வேலை முடிந்து விடும்
விடைதேடி ஓடிய நினைவில்லை
விடைகள் இல்லை வேதனையும் இல்லை...

தாமரை
17-02-2009, 12:04 AM
இல்லை அமைதி
விடைதேடாமல் கேள்விகேட்டவள்
இன்று விடைதேடுகிறாள்.

இன்று இவள் காதில் விழுந்த கேள்விகள்
கொஞ்சம் வித்தியாசமானவை
கொஞ்சமும் அதிசயம் தராதவை

எப்பொழுதும் தேடலில் தள்ளுபவை
யார் யாரோ கவனக்குறைவாய்
தூக்கி எறிந்தவைகளை!

மதி
17-02-2009, 01:31 AM
எறிந்தவைகள்
அவை என்னை
எரித்தவைகள்
மனத்தின் ஆழத்தில்
பதுங்கி நின்று
விசத்தைக் கக்கிய
கட்டுவிரியன்கள்

பூமகள்
17-02-2009, 02:11 AM
கட்டு விரியன்கள் பதுங்கிய
குழியில் புற்றொன்று முளைத்தது..
நாக தெய்வமென வணங்கி
பால் ஊற்றி வளர்த்தனர்..

ஊற்றியவருக்குத் தெரியவில்லை..
ஊராருக்கும் புரியவில்லை..
கட்டுவிரியனின் குணம் என்னென்று...

தாமரை
17-02-2009, 02:58 AM
என்னென்று சொல்ல

எழுத்துக்களின் இடையிடையே
ஒற்றில்லா இடத்தில்
இட்டு வைத்த புள்ளிகள்
ஒரு கோடி கதைசொல்லும்

கதைகளெல்லாம் சுகமானது
உறக்கம் வரவழைக்கும்
கனவுகள் எல்லாம் கனமானது
உறக்கம் தொலைக்கும்

கதைகளுக்கும் கனவுகளுக்கும்
இடைப்பட்ட காலத்தில்
இடப்படும் சில புள்ளிகள்
காலத்தின் களத்தில்
பாதை சமைக்கும்.

poornima
17-02-2009, 09:43 AM
சமைக்கும் கனவுகளை
பரிமாற வார்த்தைகள்
தேடினேன்..

நீயே கவிதையானாய்..

நினைத்த கவிதைகளை

உன்னிடத்தில் பகிர
வந்தேன்..
நீயே மீண்டும்
கனவுகள் ஆனாய்..

மதி
17-02-2009, 10:13 AM
கனவுகள் ஆனாய்
என்னை
காணாமல் போகச்
செய்தாய்

பார்த்தும்
பார்க்காதது போல்
இன்னும் ஏனடி
சித்ரவதை செய்கிறாய்?

poornima
17-02-2009, 10:22 AM
சித்ரவதை செய்கிறாய்
சில்மிஷங்களால்..
சிணுங்கல்களை
கண்டுகொள்ளாமல்
அத்துமீறுகிறாய்..
போதும் என்ற
கண்டிப்பில்
பொய்க்கோபத்தை
கண்டறிந்து எதையும்
நிறுத்துவதாய் இல்லை நீ..
தடுக்கவியலா அவஸ்தையில்
நானும் நம் காதலும்

மதி
17-02-2009, 10:29 AM
நானும் நம் காதலும்
பெருமையாகத் தான்
இருக்கிறது....
ஊருக்கே தெரிந்தது
உனக்குத் தெரியுமா?
நாமிருவரும்
காதலர் என்று.. :(

பூமகள்
18-02-2009, 04:13 AM
காதலர் என்று
கண்ணாமூச்சியாடும்
இரவுக்கும் பகலுக்குமான
ஊடலில் சிக்கியபடியே
வாழ்க்கை..!

இருள் தோய்ந்த
நள்ளிரவின் கீறலில்
சிக்கிக் கொள்ளும்
சில நியாபகங்கள்..

கலங்கி கண்கள்
காலையில் படிக்கும்
நாளைய பொழுதின்
அவசரப் பாடம்..!

எத்தனை வலித்தாலும்
வாய் முழுக்க பல்லுடன்
சிரித்து வைக்கிறேன்...

நம் பேச்சு புரியாத
எதிர்வீட்டு குழந்தையை
பார்க்கும் போதெல்லாம்..!!

மதி
18-02-2009, 06:02 AM
பார்க்கும் போதெல்லாம்
தடுமாறித் தான் போகின்றேன்
கண்கள் கூசும்
உன் அழகினில்...

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... தாங்க முடிலையா....:D)

ஓவியன்
18-02-2009, 11:15 AM
உன் அழகினில்
இருந்து உதிர்ந்த
இறகுகளாய்
உன் வார்த்தைகளும்,
உன்னழகைப் போலவே
என்னால் புரிந்து
கொள்ள முடியாமலேயே...!!

ஆதி
18-02-2009, 11:43 AM
உன் அழகினில்
உண்டாகி இருக்கும்
சிதைவுகளில் இன்னும்
புதைந்திருக்கின்றன
என்றன் மையல்கள்..

உன் கார்குழல் வெட்டும்
மின்னல் நரைகளில்
கன்னச் சுருக்கங்களில்
மேலும் கசிந்து கூடுகிறது
என் காதல்..

முகைகளாய் உதிர்ந்த
பல்லற்ற வாய்ச்சிரிப்புகள்
உன் பருவச் சிரிப்பை காட்டிலும்
மயக்கம் தருபவை..

கைக்கோலேந்தி கால் பின்ன
நீ நடக்கும் நடைகள்
அன்னங்களை மிஞ்சுபவை..

உன் சுருங்கிய கைகள்
என்னை சீந்து இன்பம்
தேவதைகளின் ஆசிக்கு
இணையானவை..

நடுங்கும் இதழ்களால்
நீயெனை அழைக்கும் வார்த்தைகள்
என் கவிதையைவிடினும் அழகானவை..

நீ என் காதல் பறவையின்
முதிய சரணாலையம்..

(ஓவியரே அடிக்கடி நீங்க என்ன முந்திக்கிறீங்க.. :) )

பூமகள்
21-02-2009, 07:07 AM
முதிய சரணாலயம்
முழுதும் சிதறிக் கிடக்கின்றன..

மட்கிப் போக காத்திருக்கும்
சருகுகள்..
முடை நாற்றம் வீசும்
மாமிசத் துணுக்குகளின்
மிச்சங்கள்..
சரணாலய அதிபதியாம்..
புல்லருவிகளின்
எச்சங்கள்...

பார்வையாளர் கவன ஈர்ப்புக்காக
பளபளப்பாகியிருக்கும்
முற்றம் தொடங்கி
எங்கும் வியாபித்திருக்கும்
சிரிப்பொலிகளும்
செருப்பொலிகளும்..

இத்தனை இருந்தும்
யாருக்குமே தெரியவில்லை..

வலை தாண்டி
வான் தொடப் பார்த்திருக்கும்
சரணாலயக் கைதிகளின்
ஏக்கம் மிகுந்த கண்கள்...

இளசு
21-02-2009, 08:39 AM
கண்கள் -

பெற்ற மகன் கால் துண்டானதைக்
கண்ட தாயின் கண்கள்..

உற்ற சகோதரி சிதறியதைக்
கண்ட உடன்பிறப்பின் கண்கள்..

கட்டிய வீடு மண்மேடானதைக்
கண்டவன் கண்கள்..

ஈழக்கண்கள் காணும் கோரக் காட்சிகள்..
எத்தனை..எத்தனை..

காட்சிகள் மாறியபின்னும்
கண்களின் ரணம் ஆற
கனகாலம் ஆகும்!

அமரன்
21-02-2009, 08:48 AM
கனகாலம் ஆகும்
தனி ஒருவன் பசிக்காக
அனல் வீசிய பாரதியின்
கண்ணனாக நினைத்து
வெந்து போன நஞ்சு
சுமக்கும் "வடுக்கள்" அழிந்துபோக.

இளசு
21-02-2009, 09:42 AM
வடுக்கள் அழிந்துபோகலாது...
எடுத்து வைக்கும் அடிகளுக்கு
படிக்கற்கள் அவை!

எழுந்து,நடந்து மீண்டும்
எம்மினம் முன்னைவிடவும்
மானமும் வளமும் ஓங்கிட
வாழ்ந்திட ஊக்கும் ஊக்கிகள்...!

வடுகள் கொடுத்த இனத்தை மன்னித்து
அணைத்து வாழும்போதிலும்
அடுத்து இப்படி நேராமல்
தடுத்தாட்கொள்ளும் எச்சரிக்கைக் குறிகள்..!

ஆதி
23-02-2009, 09:42 AM
எச்சரிக்கைக் குறிகளோடு
வீழ்ந்தவாரிருக்கிறது
உலக பொருளாதாரம்..

முதலீட்டாளர் முதல்
முடித்திருத்தகர் வரை
யாவரையும் தன் கோரக்குரலால்
குலை நடுங்க வைக்கிறது..

ஊதிய குறைப்பு
ஊக்கத்தொகை நிறுத்தம்
சலுகைகள் நீக்கம்
பணிப்பறி போதல் என்று
ஏதாவது ஒரு உருவத்தில்
ஏற்படுத்துகிறது மன அழுத்தத்தையும்
நாளை பற்றிய கேள்வியையும்
எல்லோரிலும்..

கூடும் பளுவால் உண்டாகிறது
குடும்பங்களிலும்
நெருக்க குலைவுகள்..


துண்டு விழும் செலவறிக்கை..
துண்டுகளோடு காத்திருக்கும் கடன் அட்டை..
துண்டு போட ஆயத்தமாகும் நிதிநிறுமவணங்கள்
என்று துண்டு மயமத்தில்
துண்டாகி கொண்டிருக்கின்றன நம்பிக்கைகளும்..

அமுதக்குடம் ஈயும் பணப்பாற்கடலில்
ஆலகாலம் மேல்வந்த பிறகுதான்
நிலையாமையின்
அர்த்தம் கசடற விளங்கியது..

நாகரா
23-02-2009, 10:00 AM
விளங்குது அன்பே
தலையில் அருளாய்!
இயங்குது அன்பே
தாள்களில் தயவாய்!
இருக்குது அன்பே
இருதய நடு நிலையாய்!
சிவமாம் அன்பே
தலை முதல் தாள் வரை
மெய்க்குள் உயிராய்!

சிவா.ஜி
23-02-2009, 11:15 AM
உயிராய் நினைத்த நாட்டில்
உயிரோடு வாழ இயலவில்லை
உயிருக்கு ஒரு விலையில்லை
இரக்கமில்லா அரக்கம்
அழிக்குது ஓர் இனத்தை...
ஆயினும் அழிவில்லா இனமிது என
அவனிக்குணர்த்துவோம்....!!

நாகரா
23-02-2009, 02:43 PM
ஓமென்னும் சுழிக்குள்ளே
மனந்தான் அடஙக
அகமென்னும் இருதய வாய் திறந்து
அருள் வழிய
மெய்யெங்கும் ஆனந்தம்!

அக்னி
24-02-2009, 11:45 AM
அவனிக்குணர்த்துவோம்....!!
அவனிக்குணர்த்துவோம்,
தமிழின அழிப்பை...
மறவர் கல்லறைகளை
அழித்தார்கள்...
மறத்தமிழன் என்று
கருவறையிலும் அழிக்கின்றார்கள்...
எங்கே பயங்கரவாதம்..?
யார் பயங்கரவாதிகள்..?
உணர மறுக்கும் உலகம்
உணர்வு பெறும்வரைக்கும்
உணர்த்துவோம்...

பூமகள்
25-02-2009, 10:10 AM
உணர்த்துவோம்..
எதிரிகள் வீழும் வரை..
தமிழனுக்கனுப்பும்
பீரங்கிக் குண்டுகள்
முள்ளங்கித் தண்டாக்கிய
பாவேந்தரின் வீரம்
கண்ட
தமிழின மாண்பை..

ஓவியன்
25-02-2009, 01:25 PM
தமிழின மாண்பை
சுட்டெரிக்க நினைப்போரே
ஒரு கணம் நின்றிடுவீர்....!!

ஊதி, அணைக்கும்
தீக்குச்சியல்ல நம் மாண்பு
ஊழித் தீயென புரிந்திடும்
நாளொன்று பிறக்கும்..!!

அது வரை
ஓடும், உழலும்,
இல்லாததைச் சொல்லி,
இருப்பதை மறைத்து,
உம் நாவுக்கு நல்லதை
உரைத்து விட்டு மகிழும்..!!

poornima
02-03-2009, 05:37 AM
மகிழும் தருணங்களில்
தவழும் புன்னகைகளில்
தமிழ் கொண்டு பேசிடு
தோழா...
பின் தேவையே இருக்காது
மன்னிப்புகளும்
தண்டனைகளும்..

சிவா.ஜி
02-03-2009, 04:36 PM
தண்டனைகளும் மன்னிப்புகளும்
தவறைத் திருத்திக்கொள்ளத்தானென்பதை
தெரிந்துகொள்ளாமல்....
மன்னித்த மறுநிமிடம்
மீண்டும் தவறு செய்பவரை
மன்னித்தல் மகா குற்றம்!

இளசு
02-03-2009, 11:00 PM
குற்றம் - உன் பார்வையில்
தீரம் - என் பார்வையில்...

தீவிரவாதி - உன் பார்வையில்
தியாகி - என் பார்வையில்..

ஏறி இறங்கி என்றும் ஆடும்..
சமூகச் சீசாப் பலகை!

நடுவில் சிக்கி நசுங்கி முனகும்
அச்சாணி எனும் உண்மை!

சிவா.ஜி
02-03-2009, 11:06 PM
உண்மை...
பாறைக்குள் புதைக்கப்பட்டாலும்
பிளந்து வெளிவரும்
தீவிரவாதியென
வாதிப்போர் வாதம்
நீர்த்துப்போகும்
எதிர் சக்தியையும் தன்னுடன்
சேர்த்துப்போகும்
நல்ல தேசமொன்றை
வார்த்துப்போகும்...!!

பூமகள்
03-03-2009, 10:25 AM
போகும் ஒவ்வொரு
கணமும் சொல்லும்
இழந்து விட்ட காலத்தையும்
இழக்கப் போகும் காலத்தையும்..

அந்த பொழுதின்
நிரந்தரமற்ற தன்மையில்
நிரம்பியிருக்கும்
நிதர்சனத்தின் நிழல்..

உழைக்காமல் தூங்கும்
திண்ணை தூங்கிகளின்
வாழ்க்கையில்
இல்லாமலே போகும்
இவ்வாறான பல
'வெட்டி'ப் பொழுதுகள்..

இவ்வகை
வெறும் பொழுதுகளை
வெட்டினவர்களே
காலத்தின் பொன்னேட்டில்
வாழ்பவர்கள்..!!

சுகந்தப்ரீதன்
05-03-2009, 09:23 AM
வாழ்பவர்கள்...
ஏட்டிலும் எழுத்திலும்
பாட்டிலும் பகட்டிலும்..!!

வாழ்ந்திருப்பார்களா
வையத்தில் வாழாத
எங்கள் வாழ்வினை..?!

அக்னி
05-03-2009, 04:07 PM
வாழ்வினை
வாழத்தானே நாமும்
பிறந்தோம்...
பின்னர் ஏன்
எமக்கு இந்த
ஊழ்வினை...

சசிதரன்
05-03-2009, 04:16 PM
எங்கள் வாழ்வினை
கொடுக்க மறுத்து...
உங்கள் கனவுகளை
ஏன் திணிக்கிறீர்கள்.

எங்கள் மின்மினிகளை சிறைபிடித்து
உங்கள் இரவுகளை அழகுபடுத்தாதீர்கள்.

உங்கள் வானத்தை பொலிவாக்க
எங்கள் நட்சத்திரங்களை பறிக்காதீர்கள்.

எங்களுக்கென்று உலகம் வேண்டாம்.
வாழும் உலகில் நாங்களும் இருக்கிறோம்
வழி விடுங்கள்.

சசிதரன்
05-03-2009, 04:17 PM
ஒரே நேரத்தில் பதிந்து விட்டேன் போல அக்னி அண்ணா... நண்பர்கள் அக்னி அண்ணாவின் வார்த்தையில் இருந்தே தொடங்கவும்...:)

பூமகள்
06-03-2009, 01:40 AM
(இதெல்லாம் சமரில் சகஜம் சசி.. உங்கள் கவிதையின் இறுதி வார்த்தையிலிருந்தே தொடருகிறேன்.. ;))

வழிவிடுங்கள்..

வேகாத வெயிலில்
வெந்து போன காலுடன்
பாரமிழுத்தபடி சாலை கடக்க
பெரியவர் வர கூடும்..

கூடை நிறைய
வத்தல் பொட்டலங்கள் கொண்டு
வதங்கிய முகத்துடன்
வயதான மூதாட்டி
நீரருந்த வரக் கூடும்..

வழி விடுங்கள்..

அபலை மனிதத்தை
குற்றுயிராக்கி
காசு பார்க்கும்
கயவர் கண் படாத படி
அவர்கள் செல்ல

வழி விடுங்கள்...

samuthraselvam
06-03-2009, 07:02 AM
வழி விடுங்கள் முதியவர்களே..!
மூளையைக் கசக்கி
சிந்தனை செய்தாலும்,
அந்த சிந்தனையை
இளையவர்கள் என்று
ஒரு இளப்பமுடன்
ஒதுக்கும் இனியவர்களே!

நாங்களும் சிந்திப்பதை
சிறப்பாக செயல்படுதுவோம்
உங்களின் துணை இல்லாமலே...!

பூமகள்
07-03-2009, 09:15 AM
துணை இல்லாமலே
தவிழ்ந்த வயதில்
தாமே எழுந்து நடந்ததை
வியந்து உச்சி முகர்ந்ததிலும்..

ஓடி விளையாடி
களைத்து திரும்பி
முந்தானை வாசத்தில்
தலை சாய்கையில்
சிகை கோதுகையிலும்..

புரியாத உன் பாசம்..
நீ பொக்கை வாயுடன்
முத்தம் கொடுக்கையில்
புரிந்தது என் செல்ல
அம்மாயி..

நீ இல்லாத வீட்டில்
உன் ஸ்பரிசத்தை
உணர
அதே மருதாணி மரத்தை
கட்டியபடி நான்..

வசீகரன்
07-03-2009, 11:58 AM
நான் என்னும் என்னில்
எனக்கான தேடல்கள்...
எனக்கான உயரியஉலகத்தை
நிர்மாணிக்க
எனக்கான ஓடல்கள்....

அவை சிலநேரங்களில்
வேகமாக...
சிலநேரங்களில் மௌனமாக...
சில கடமைக்காக....
சில உடைமைக்காக...

எதற்கோ ஏனோ...
எப்படியாகினும்
இறுதியில் வெற்றிபெறப்போவது
நான் அல்ல...

எனக்கு முன் ஓடி
கலைத்தவர்களும் அல்லர்....
எனக்குப்பின் ஓட காத்து
இருப்பவர்களும் அல்லர்...

வெற்றி பெறப்போவது
நேரங்கள்
மட்டுமே....!!!

பூமகள்
08-03-2009, 12:52 PM
நேரங்கள் மட்டுமே
நிரம்பி வழியும்
கோப்பைகளுக்குள்
தத்தளிக்கிறது மனம்..

நிற்கவோ,
நடக்கவோ
நேரமில்லை...

ஓடியபடியே
குடித்துப் போகிறேன்
ஒவ்வொருமுறையும்
நிமிட பானங்களை..

அவதியில் குடித்ததால்
அஜீரணமாகின்றன..
சில கசப்பான பொழுதுகள்..

இருந்தும்
எல்லாரும் போலவே
நிற்காமல் ஓடி
நேர பானத்தைக்
குடித்து வைக்கிறேன்
நானும்...!!

சுகந்தப்ரீதன்
11-03-2009, 10:22 AM
நானும்....
ஓடிக் கொண்டிருக்கிறேன்
ஓய்வின்றி....
ஓய்ந்துவிடப் போகிறேன்
என்ற உணர்வின்றி...!!

samuthraselvam
12-03-2009, 06:02 AM
உணர்வின்றி இருந்த என்
உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுத்தவன்
நீ.....
இன்று என் உணர்வுகளை தவிர்த்து
உயிரை பறிக்கிறாய்....

காலங்கள் கடந்தும் என்
காதலை உணரவைத்தவன்
நீ........

இன்று கண்ணீர் மட்டுமே
உன் சொந்தம் என்று
கலைப்பட வைகிறாய்
இது நியாயமா?

பூமகள்
12-03-2009, 11:16 AM
இது நியாயமா?

என் எல்லா சொற்களையும்
உன் கன்னக்குழியில்
புதைத்துவிட்டு
மீண்டும் மீண்டும்
சொல்லச் சொல்கிறாயே..

இது நியாயமா?

இதயச் சிறையில்
இன்பமாய் அமர்ந்து
நிதம் எனை
சிறையிலடைக்கிறாயே..

இது நியாயமா?

நான் பார்க்கையில்
நீ பாராமல்
நான் பாராமல்
எனைப் பார்க்கிறாயே..

இது நியாயமா??

இப்பிறவி முக்தியாகுமென
நீ சிலாகிக்க..
ஏழு பிறவியும் போதாதென
எண்ண வைக்கிறாயே...

இது நியாயமா??!!

சிவா.ஜி
13-03-2009, 06:01 AM
இது நியாயமா
காசுகொடுத்து வாக்கு கேட்கிறாய்
வெற்றியடைந்ததும்
வாக்கு தவறி வாழ்வை எடுக்கிறாய்
அரசியலை 'அரிசி'யியல் ஆக்கும்
மூத்த தலைவா.....
ஆட்சியமைத்தாயே...
மனசாட்சி படித்தாயா?

சுகந்தப்ரீதன்
14-03-2009, 04:34 AM
மனசாட்சி படித்தாயா?-என்று
மனசாட்சியில்லாமல் மக்கள் கேட்க
மன்னவன் சொன்னான்....
மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது
எனக்கு தெரிந்ததெல்லாம்....
என் "மனையாட்சி" மட்டும்தானென்று..!!

ஆதி
17-03-2009, 10:42 AM
தானென்று எண்ணிநிதம் தேனென்று அலையாமல்
வீணென்று வாழ்வதனை விட்டொதுங்கி ஏகவேண்டும்..

தத்துவத்தின் தத்துவமாய் சித்தபொருள் உனையேந்தி
செத்தபொருள் போலுலகில் நித்தம்நான் உலவவேண்டும்

மிளிர்மேனி நங்கைர்மேல் மீதுரும் என்பார்வை
தளிர்மேனி பிள்ளைகளை காண்பதுபோல் அமையவேண்டும்..

தாயென்று தகைமைதந்து தத்தைமொழி பாவையரை
நோயின்றி நோக்கியவர் சேயென்று பழகவேண்டும்..

மயக்கும் ஆசைமீது மோகமின்றி என்னுயிரை
இயக்கும் உன்நினைவில் இசைந்திசைந்து உருகவேண்டும்..

சிவா.ஜி
17-03-2009, 12:38 PM
வேண்டும் வேண்டும் என
வேண்டிக்கேட்டும்
வேண்டியது கிட்டாத நிலையில்
இறைவனைப் பார்த்து
பக்தன் கேட்டான்.....
உனக்கு என்ன வேண்டும்?
இறைவன் பதில் கூறினான்...
நீ உழைக்கவேண்டும்....!!!

அக்னி
23-03-2009, 08:01 PM
வேண்டும் வரங்கள்
அதிகமில்லை.
கூப்பும் கரங்களுக்கோ
குறைவுமில்லை.
குதறும் குண்டுகளேனும் உணர்ந்திடாதோ
கரம் கூப்பி நாம் கதறுவதை...

பூமகள்
24-03-2009, 09:42 AM
கரம் கூப்பி நாம் கதறுவதை
கண்டு கொள்ளவே இல்லை காலம்.

செழித்து வளர்த்த தன் தேகங்மெங்கும்
செங்குருதி பரப்பி..
சவக் குழிகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நொடியும்...

ஈனசுரத்தில் ஈச்சமர அடியில்
தனித்த குழந்தையின்
அழுகுரல் வெடிகுண்டு சத்தத்தில்
அமிழ்த்திச் சிரிக்கிறது..

கருப்பை கதகதப்பில்
கண்ணயரும் இளந்தளிரிலும்..
துளையிட்டு குண்டு பாய்ச்சும்
கயவர் கூட்டம் தொலைவதெப்போ??

நாகரா
25-03-2009, 02:57 AM
தொலைவ தெப்போ வன்பின் மாமாயை
நிலைப்ப தெப்போ அன்பு

பூமகள்
22-04-2009, 11:36 AM
நாகரா அண்ணா.. சமரின் விதியை மீறி விட்டீர்களே... குறைந்தது நான்கு வரிகளாவது அவசியம் சமராட..

முதல்முறை என்பதால் தவறொன்றுமில்லை.. இனி கவனமாக கவிச்சமர் புரிவோமாக..!

--

அன்பு பொழியும்
பொன் மனமெங்கும்
நிசப்தம் நிரம்பிக் கிடக்கிறது..

நினைவுப் பதுக்கிகள்
ஒவ்வொன்றாக விழி நீர்
பரப்புகிறது..

வெதும்பிக் கிடக்கும்
சன்னலோர புற்களைப்
பார்த்தபடியே
கழிகிறது ஒவ்வொரு நொடியும்...

வசீகரன்
25-04-2009, 01:09 PM
ஒவ்வொரு நொடியும்
எதிர்பார்ப்பு அதிலும் ஒரு
ஏகாந்தம்....
ஏக்கம் கலந்த தனிமை
இருந்தாலும் குறையாத
கர்வம்....

ஒவ்வொரு மணி நேரமும்
பார்வையில்.....
ஆனாலும் பாராமுகமாய்
செய்யும் பசப்பு

வீட்டுக் கொடுக்க
சொல்லி
மனம் ஆடும் திண்டாட்டம்

இருந்தும் வீம்பு
கொள்ளவே எண்ணும்
இளமைத்திமிரின்
கொண்டாட்டம்

அவ்வளவும் அவ்வளவுதான்
உன்னிடமோ இல்லை
என்னிடமோ
இருந்து வரும் ஒரு
அழைப்பில்
குப்பென்று
மலர்ந்து போகும்

இதயமெல்லாம்
இளகி ஓடும்

காதல் நேரங்களை
விட
காதலில் பொய்கோபம்
கொள்ளும்
நேரங்கள் எத்தனை அழகு
என் அடியே......

அக்னி
29-04-2009, 06:58 AM
என் அடியே!
பார்த்துப் படு பூமியில்...
மிதிவெடிகளில்
தடம் பதித்துத்
தடயமின்றிப் போய்விடாதே...

அமரன்
29-04-2009, 08:27 AM
போய் விடாதே
உடல் விடும் கண்ணீரே..
நீ
இருக்கும் வரைக்கும்தான்
பலர்
கவனம் படும் ஏழைகளில்.

பூமகள்
29-04-2009, 10:42 AM
ஏழைகளில் படிந்திருக்கும்
வறுமையைப் போக்க
வாக்குறுதிகள் குவிகின்றன..

அவை கொள்ளும்
முடை நாற்றம்
அடுத்த ஆண்டு தேர்தல் வரைக்கும்
நீடித்து நிஜம் சொல்கிறது...

யவனிகா
01-05-2009, 09:21 PM
நிஜம் சொல்லும்
காதோர நரை
கண்ணோரச் சுருக்கம்...
உடனடித்தேவை
கவிதை காயகல்பம்.

தாமரை
02-05-2009, 03:02 AM
காயகல்பம்
கவிதை
எல்லாமே
உன்
கண்ணோரச் சுருக்கங்கள்
மட்டும்தான்!

வசீகரன்
04-05-2009, 05:12 AM
சுருக்கங்கள் மனதினிற்....

சுவடுகள் காணா
பாதைகளில்....

புன்னகையை பாரா
நேரங்களில்....

மடி சாயா
மாலைகளில்.....

மதி மறைத்த முகில்
வானத்தில்....

(மன)புழுக்கங்கள் நிறைந்த
உறக்கங்களில்....

வெறுமையுடன் பயணிக்கும்
கனவுகளில்....
கவிதைகள் இல்லா
விடியல்களில்......

சுருக்கங்களினோடே மனதினிற்
தொடர்கிறது
சுருக்கங்களிலான இந்த
பட்டியல்...!

அமரன்
04-05-2009, 09:04 AM
பட்டியலில் தவம் கிடக்கின்றன
சட்டங்களும் திட்டங்களும்..

பட்டுகளில் சர சரக்கின்றன
வாக்குறுதிகளும் வாக்குகளும்.

என்னே ஒரு பட்டு இயல்.

யவனிகா
04-05-2009, 12:32 PM
இயல்பாய் இரு!

கட்டளைகளை
காதில் கேளாமல்..
நீர் உதிர்க்கும் கண்கள்,
உதடு கடிக்கும் பற்கள்,
துடித்துத் தணியும் மோவாய்...
உறிஞ்சி சிவக்கும் நாசி...
திரைக்கதை முடிவின் கனம்....!

திரையறை இருட்டு,
இளக்கிச் செல்கிறது
இயல்பாய் இருக்க வேண்டிய கட்டாயத்தை....

விரும்பியே வடிக்கிறேன்
இன்னும் இரு துளிச்சொட்டுகள்....

தாமரை
04-05-2009, 01:19 PM
இரு துளிச் சொட்டுகள்
கண்ணில் எட்டிப் பார்க்கின்றன
உன் இருப்பு
உணரப்படும் பொழுதெல்லாம்

பூமகள்
07-05-2009, 05:43 AM
பொழுதெல்லாம் பாடுபட்டு
வியர்வைக் குளியலோடு
சட்டையில் கசகசத்த
உழைத்த கூலி
உலரத் துவங்கியது

டாஸ் மார்க் வெம்மையில்...

aren
29-06-2009, 02:32 PM
டாஸ்மார்க் வெம்மையில் குளித்து
குளிர்ந்த பானம் அருந்தி
அங்கேயே சுருண்டு விழுந்து
காலையில் மறுபடியும்
வியர்வையில் குளித்து
மாலையில் டாஸ்மார்க் வெம்மையில் குளித்து
இதுவே ஏழையின் பிழைப்பு!!!!

அக்னி
30-06-2009, 07:10 AM
பிழைப்பு ஆகுது பிழைகள்...
மணித்துளிகள் தோறும்
உயிர்த்துளிகள் சிந்திப்,
போகும் மானத்தில்
வருமானம்...

பாரதி
11-07-2009, 02:00 PM
வருமானத்தை குறித்தே அரசுக்கும் வருத்தம்
பெருந்தனக்காரர்களின் வருவாய் குறைந்ததென;
நிதி நிலை அறிக்கையும் நீதி தவறாமல்
முதலாளிகளைக் கலந்தே தயாரிக்கப்படுகிறது.
எச்சிலைக்காகங்களாக மக்களை நினைப்பர்
மிச்சம் மீதி இருந்தால் மட்டும்.

ஓவியன்
18-07-2009, 05:58 AM
மீதி இருந்தால் மட்டும்
கெஞ்சும்,
இல்லையெனில்
என்றுமே மிஞ்சும்..!!

அமரன்
01-08-2009, 08:05 AM
மிஞ்சும் பஞ்சும்
மிஞ்சும் வெஞ்சினத்தால்
கஞ்சம் துஞ்சும்
வஞ்சியரைக் காண்கையில்..

சுட்டிபையன்
04-08-2009, 07:40 AM
காண்கையில்
என்
கண்ணிரண்டும் கலங்குதடி
என் தாய் தமிழ் மக்கள்
நிலை கண்டு
உதிரம் கொதிக்குதடி

அமரன்
04-08-2009, 07:47 AM
உதிரம் கொதிக்குதடி...

முழுநிலா
உந்தன் நெற்றிச் சுட்டி..

நட்சத்திரங்கள்
உந்தன் ஒட்டியானம்..

விடிவெள்ளி
உந்தன் மூக்குத்தி...

சூரியன்
உந்தன் அட்டிகை...

என்ன பிரயோசனம்
இருண்டு கிடக்கிறது வானம்..

(நலமா சுட்டி)

சுட்டிபையன்
04-08-2009, 07:52 AM
வானம் இருண்டு கிடக்கிறது
நிலவற்று
அதே போல்
என் மணமும் இருண்டு
கிடக்கிறது
நீயற்று

அமரா நான் நல்லா இருக்கேன், ரொம்ப நாளாய்ச்சு உங்களை எல்லாம் சந்தித்து, சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி

ஓவியன்
04-08-2009, 08:13 AM
நீயற்றுப் போனதில்
அற்றுப் போனவை
ஒவ்வொன்றாய்
பற்றிப் போட்டவை
இந்தக் கவிதைகள்..!!

(நலமறிந்து மகிழ்ச்சி சுட்டி, நேரம் கிடைக்கையிலெல்லாம் வந்திட்டுப் போங்கோ)

சுட்டிபையன்
04-08-2009, 08:49 AM
கவிதைகள் சொல்ல
வார்த்தைகள் தேவையல்ல
உந்தன் மௌனமே போதும்

ஓவியரே தாங்கள் எப்படி இருக்கிறீர்கள், உங்கள் சித்த படியே நடக்கட்டும்:lachen001:

ஓவியன்
04-08-2009, 09:08 AM
போதும்,
போதும்
இப்படி எழுதியது
இனிப் போதும்..!!

வேண்டும்
வேண்டும்
விரைவில்
அது வேண்டும்..!!

(உடலளவில் நான் நலம்தான் சுட்டி, மனதின் காயங்களுக்கு மருந்து தேடிக் கொண்டிருக்கின்றேன் நம்மில் பலரைப் போலவே..)

சுட்டிபையன்
04-08-2009, 10:10 AM
வேண்டும் ஓர் மருந்து
என் நண்பனின்
மனக்காயங்களுக்கு
கோடிகள் நன்றிகள்
சொல்வேன் இறைவனுக்கு.


உங்களை போல்தான் எனக்கும், என்ன செய்வது உலகத்தில் மனிதனாக அதுவும் தமிழனாக பிறந்து விட்டோமே

ஆதி
06-08-2009, 08:13 AM
இறைவன் இருக்கின்றான் நம் இதய மூலையிலே
முழுதும் விரிகின்றான் அவனை உணரும் வேளையிலே

கன்னி பெண்களிலும் கண்ணீர் விழிகளும்
தண்ணீர் பூக்களிலும் தாரகை கூட்டத்திலும்
முந்நீர் கடலிலும் மூங்கில் காட்டினிலும்
முகிழ்ந்து இருக்கின்றான் முகைந்து சிரிக்கின்றான்

இறைவன் இருக்கின்றான் நம் இதய மூலையிலே
முழுதும் விரிகின்றான் அவனை உணரும் வேளையிலே

குழந்தை தொட்டிலிலும் காமக் கட்டிலிலும்
தாகச் சொட்டினிலும் மயக்கும் மொட்டினிலும்
பிச்சை வட்டினிலும் பிரிவு வெட்டினிலும்
தானாய் இருக்கின்றான் தர்மம் செய்கின்றான்

இறைவன் இருக்கின்றான் நம் இதய மூலையிலே
முழுதும் விரிகின்றான் அவனை உணரும் வேளையிலே

கலைவேந்தன்
09-08-2009, 08:09 PM
அவனை உணரும் வேளையிலே மனக்
கவலை உலரும் நீயறிவாய்...

அவனியொன்றும் பசுஞ்சோலை இல்லை நிதம்
பவனிவரும் நெடுஞ் சாலையில்லை...

முள்ளும் மலரும் பாதையிலெ கடும்
பள்ளம் மேடுண்டு போகையிலே....

சோதனை வென்றவர் வாகையிட்டார் உளம்
வேதனை கொண்டவர் சோகையுற்றார்....

நீயிந்த நீதியை உணர்ந்துவிட்டாய் எனில்
நோயின்றி நீடித்து வாழ்ந்திடு வாய்....!

ஓவியன்
11-08-2009, 04:18 AM
வாய்கால்
கால்வாயென,
புரட்டிப் போட்டாலும்
ஒரு பொருள் தந்து
வாழ்வோமே வாழ்வாங்கு..!!

சிவா.ஜி
08-09-2009, 05:01 PM
வாழ்வாங்கு வாழ்ந்தவரெல்லாம்
ஓய்வாகிப் போவது
காலத்தின் கட்டாயம்....இதில்
தாழ்ந்தாரை தரைமிதித்து
வாழ்ந்தாரெவருமிலர்....

கிட்டிய கட்டுச்சோற்றை
ஒட்டிய வயிற்றுக்குமீந்து
வெட்டியான வாழ்க்கையை
கெட்டியாக்கி வாழ்வோம்....

aren
14-10-2009, 04:56 PM
வாழ்வோம்
நிச்சயம் வாழ்வோம்
இதுநாள்வரை நம்மை
மட்டமாக பேசிய*
மனிதர்களுக்கு எதிரில்
நாம் வாழ்ந்து காட்டுவோம்
அதில் வெற்றியும் பெறுவோம்!!!!

சரண்யா
15-10-2009, 02:39 AM
வெற்றியும் பெறுவோம்
வாழ்ந்து காட்டுவோம்
அகந்தை தவிர்ப்போம்
சாதனைகள் புரிவோம்
அமைதியுடன் இருப்போம்
என்றும் வெற்றி நமதே...

அக்னி
15-10-2009, 05:51 AM
நமதே என்பது மமதை அல்ல,
உரிமை,
நாமக்கும் என்றானால்...
நமதே என்பது உரிமை அல்ல,
மமதை,
நமக்கு மட்டும் என்றானால்...

சரண்யா
15-10-2009, 11:24 AM
நமக்கு மட்டும் என்றானால்...
சுயநலம்
நம் அனைவருக்கும் என்றால்
பொதுநலம்
முதலில் இருப்பது மறைந்து
இரண்டாம் இருப்பது வளர்ந்தால்
நாடு முன்னேற்றம் அடையுமா?!

சிவா.ஜி
15-10-2009, 05:19 PM
அடையுமா என் குரல் உன் உள்ளத்தை
உடையுமா உன் மௌனம்...சொல்லதை
அன்றொருநாள் நீ வசிக்கும் வீதிக்குள்
நான் நுழைந்த தருணம்,
உனக்கென ஒருத்தி இங்கிருக்கிறாள்
உள்ளத்தை அனுப்பு அது கண்டுவரும்
உன் காதலை உன்னிடம் கொண்டுவருமென்று
குரலொன்று காதில் கிசுகிசுத்தது....
உன் மௌனத்தால் என் ஆசை பிசுபிசுத்தது...
மௌனம் கலை... இல்லையேல் என்
மரணம் அதற்கு விலை...!

சரண்யா
16-10-2009, 07:18 AM
விலை?!
எல்லாவற்றிருக்கும்
விலையா?!
அன்பு
பாசம்
நட்பு
இவையெல்லாம்
விலைமதிப்பற்றவையே!

பூமகள்
22-10-2009, 12:09 PM
விலைமதிப்பற்றவையே..

பள்ளி நாட்களில்
காக்காய்க்கடி கடித்து
பங்கிட்ட மிட்டாயும்..

முழு ஆண்டுத் தேர்வின்
வெற்றிக்காக அம்மா தந்த
முத்தமும்..

பொக்கிசமாக்கிச்
சேகரிக்க நினைக்கிறேன்..

காலம் கரையானாகி
சேகரிப்பை செல்லரிக்கிறது..

சில மண் துகளையேனும் காக்கும்
அடி வேரின் வேட்கையோடு
ஓடிக் கொண்டிருக்கிறேன்..

சிவா.ஜி
22-10-2009, 12:16 PM
ஓடிக்கொண்டிருக்கிறேன்....
என்னை விட்டு விலகிப்போன
என் எதிரிகளைத் தேடி....
வெற்றியடையும் வரை எதிர்த்துவிட்டு
வெற்றியடைந்தபின் விலகிய
என் அன்பான எதிரிகளை தேடுகிறேன்....
என் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள....!!!

சரண்யா
24-10-2009, 07:34 AM
என் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள....!!!
அயராது பாடுப்பட
மேலும் உயர்ந்திட
முயற்சி செய்திட
முன்னேறி வாழ்ந்திட
இறைவன் இருந்திட
வெற்றியோடு தோல்வியும் சந்தித்திட
மனம் பக்குவமடைய
மீண்டும் நிரந்தரமாய் வெற்றியே....நிலைத்திட
கர்வம் அடையாமல் வாழ்வு இங்கு தொடரட்டும்..

அமரன்
24-10-2009, 08:05 AM
தொடரட்டும்
மூட நம்பிக்கைகள்..
புளிமரத்தடிப் பேய்..
அரச மரப் பிள்ளையார்..
ஆல மரக் கண்ணன்..
தொடரட்டும்
மூட நம்பிக்கைகள்..

சரண்யா
24-10-2009, 08:15 AM
மூட நம்பிக்கைகள்..
சில நேரத்தில்
வேற்றுமை எண்ணத்தை
வலுவடைய செய்யும்
சில நேரத்தில்
அனுபவத்தால் மட்டுமே
உணர்ந்து கொள்ள
வாய்ப்பாக அமையும்
வலிமையோ
வாய்ப்போ
நம்பிக்கையை கைவிடாதே

நாகரா
04-11-2009, 04:11 PM
தேடும் ஆண்டவனார் புகுந்துள மெய்வீடு
நாடு அகத்தவரைக் கூடு

சிவா.ஜி
04-11-2009, 04:51 PM
கை விடாதே....
வெற்றியின் உச்சியில்
ஒரு கை தொங்கலில்
இற்றுப்போகும் வலியிருக்கும்....
விழிதாழ்த்தி பள்ளம் பார்க்காதே...
உச்சியடைய வெற்றி நிச்சயம்
கைவிடாதே.....

aren
05-11-2009, 02:43 AM
கைவிடாதே
உன்மேல் நீ வைத்திருக்கும்
நம்பிக்கையை கைவிடாதே!!!

ஏற்றங்களைவிட இறக்கங்கள்
அதிகமாக இருந்தாலும்
இறக்கங்களை படிக்கட்டுகளாகக்
கொண்டு ஏறிவா!!!

நம்பிக்கையை கைவிடாதே
உன் மேல இருக்கும்
நம்பிக்கையை கைவிடாதே!!!

சரண்யா
05-11-2009, 02:45 AM
கைவிடாதே.....
தன்னை நம்பி வேலைத்தேடி
வந்தவரை...
உதவி செய்யாவிட்டாலும்
அலட்சிய படுத்தாதே...
கைக்கொடுத்து தூக்கி விட
வழி செய்வாய்..
வாழ்வில் உன்னால் ஒரு
ஜீவன் வாழட்டும்...

நாகரா
05-11-2009, 03:31 AM
தேடாமல் புறத்தே கூடாயோ அகத்தே
வீடாம்மெய் யுடம்பில் ஆண்டவர்

குணமதி
05-11-2009, 03:36 AM
உதவு!

உன் உதவி உணவிற்கும் தங்குதற்குமாகவே நீண்டுகொண்டிருக்கக் கூடாது!

வழிகாட்டு! ஊக்கமளி!

தெரிந்த வழிமுறைகளைத் திருத்தமாகச் சொல்!

ஆம்!

மீன் உணவு விருந்தளிப்பதை விட...

மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறப்பாம்!

நாகரா
05-11-2009, 03:37 AM
வாழட்டும் எவ்வுயிரும் வாழ்விக்கும் பரம்பொருளில்
ஆழட்டும் அன்புருவில் ஏறட்டும்

சரண்யா
05-11-2009, 03:58 AM
அன்பு என்பது
பணம் என்ற
மூன்று எழுத்தில்
சென்று விட்டது
அதனை மீட்க
மனம் என்ற
வாயில் திறக்கும்
என்ற நம்பிக்கை

jawid_raiz
03-12-2009, 09:10 AM
வாயில் திறக்கும்
என்ற நம்பிக்கையில்
வாய் மேல் கை வைத்திருந்த
காலம்
எம் முப்பாட்டனோடு
முடிந்து போகட்டும்

புதியதாய்...
மேம்பாலம் அமைத்தாவது
முன்னேறுவோம் எம் இலக்குகளில்

சரண்யா
03-12-2009, 09:15 AM
எம் இலக்குகளில்
ஏறிச்செல்லுவதில்
ஐயம் இருந்தாலும்
ஒருமுகத்தோடு
உழைத்து
பெறுவது
வெற்றியா...
வாய்ப்பா...

குணமதி
06-12-2009, 11:47 AM
வாய்ப்பு...
எல்லார் வாழ்விலும் வருவதுண்டு.
எப்படிப் பயன்படுத்துகிறோம்
என்பதிலதான்-
வெற்றியும் தோல்வியும்.
எல்லா ஏற்பாட்டுக்களுடனும்
இருக்கின்ற போதும்
அல்லது
எந்த ஏற்பாடுகளும்
இல்லாத நிலையிலும்-
வாய்ப்பு வந்தே தீரும்.
உறுமீன் கண்ட-
வாடியிருந்த கொக்கென
வாய்ப்பை -
உரிய நிலையில்
பயன்படுத்திக் கொண்டால்-
உறுதி!
வெற்றி உறுதி.

ஓவியன்
06-12-2009, 12:09 PM
உறுதி,
அறுதி
இரண்டையும் உருக்குலைத்தது
மறதி...!!


பி.கு :- உறுதி - அசையா சொத்துக்களின், சொத்துரிமை பற்றிய பத்திரம்

சிவா.ஜி
06-12-2009, 02:55 PM
மறதி......
மகத்தான மருந்து
நினைவுப்பூச்சிகள்
நெஞ்சத்தை செல்லரிக்காமல்
தடுக்கும் மருந்து....

மறதி....
கொடிய நோய்...
செய்நன்றி மறந்துவிட்டால்....

குணமதி
06-12-2009, 03:09 PM
செய்நன்றி மறந்துவிட்டால்
விடு, விட்டுவிடு!

எந்நன்றி கொன்றார்க்கும்
கீழானார் என்று விடு!

முன், நன்றி கொன்றார்
முழுதிழிந்தார் என்று விடு!

பின், நன்றிமறவாரைப்
பெரிதேத்திப் பேணிடு!

சிவா.ஜி
06-12-2009, 03:54 PM
நன்றி மறவாரைக் கண்டதுண்டு
நான் நன்றி மறவாதவனென
நவிலாத நல்லவரவர்....

ஒன்று பெற ஒன்றிழப்பது இயல்பு
ஒன்றையுமே வேண்டாமல்
ஊருக்கு உயிரிழப்பது உயர்வு....

சரண்யா
07-12-2009, 01:44 AM
richard அவர்களே ஒரு வேண்டுகோள் நீங்கள் இதன் கருத்துகளை துணைத்திரியில் தெரிவிக்குமாறு அன்போட கேட்டு கொள்கிறேன்....இங்கே தான் ...பாருங்க...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9311&page=42
நன்றிகள்...

சரண்யா
07-12-2009, 01:56 AM
ஊருக்கு உயிரிழப்பது உயர்வு....
என்றாலும் ராணுவத்தில்
சேர்வது என்பது மிகவும்
கடினமான ஒர் சாகசமே...
அப்படி தாய்நாட்டிற்க்காக
போராடி உயிரை விடும்
வீரர்களுக்கு செய்வது
வீரவணக்கத்துடன்
அஞ்சலி மட்டுமே...
ஆனாலும் அதே வீட்டில்
அடுத்த வாரிசும் வீரர் தான்..
தாய்நாட்டின் பற்று
உறவு மேல் பற்றற்று
அவர்கள் வாழ்வில்
என்றுமே உயர்வு...

விக்ரம்
06-01-2010, 09:43 AM
அஞ்சலி செலுத்தும்

அந்த ஒருநிமிடம் தொடங்கிவிட்டது

போரில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்காய்...

தொங்கப்போட்ட தலையும்

மௌனம் அப்பிய முகமுமாய்...மனிதர்கள் வரிசை

கேஸ் ஸ்டவ் அணைத்தோமா காலையில்?

போனவாரம் கொடுத்த கடன் திரும்புமா?இல்லையா?

இந்ததரமாவது மகன் பத்தாவது பாஸ் ஆவானா?

செல்லம்மா,துளசி,மாதவி கவலையெல்லாம் எப்பத்தீரும்?

ஆர் டி மெச்சூர் ஆகும் தேதி என்ன?


ஒரு நிமிட அஞ்சலி முடிவடைந்து விட்டது....

வீரர்கள் மோட்சம் பெறுவார்களாக.....!!!

சிவா.ஜி
13-01-2010, 02:34 PM
பெறுவார்களாக பாப விமோச்சனம்
நீர் கொடுக்கா நீசரும்
சோறு கொடுக்கா யாவரும்!!
நல்சோறு, நந்நீர்
அவர்களேனும் பெறட்டும்
எந்த ஜென்ம பாவமோ
எமக்கு அவை கிட்டவில்லை
இடாதவரை சபித்து
இன்னும் பாவமேற இட்டமில்லை....!!

சரண்யா
13-01-2010, 02:45 PM
இட்டமில்லை என்றாலும்
செய்யவில்லை என்றாலும்
புண்ணியமில்லை என்றோ
செய்த தீவினை என்றே
நேரத்தை சபிக்கும் மனிதம்
நம்பிக்கையை மண்ணுக்குள்
மனதை விரக்தியால் விதைக்கும்.

சிவா.ஜி
13-01-2010, 02:56 PM
விதைக்கும் விதைகளெல்லாம் முளைப்பதில்லை
முளைக்கும் செடிகளெல்லாம் தழைப்பதில்லை
தழைக்கும் மரங்களெல்லாம் காய்ப்பதில்லை
காய்க்கும் காய்களெல்லாம் இனிப்பதில்லை

இருந்தும் விதைப்பதை பறவைகள் விடுவதில்லை....
பாடம் பயில்வோம் பறவைகளிடம்
நாமும் நடுவோம் மரங்களை
மரங்கள் காக்கும் மனிதர்களை...

சரண்யா
14-01-2010, 02:17 AM
மனிதர்களை மனம் தன் வசம்
இழுத்தால் ஆசைகள் ஓங்கும்
தன் புத்தி வசம் சென்றால்
நடைமுறைகள் வழி நிற்கும்
அறிவையும் மனதையும்
ஆள கற்றுக் கொண்டால்
வாழ்வின் முழுமை புரியும்.

விக்ரம்
14-01-2010, 06:04 AM
புரியுமா புரியாதா?
யாருக்காவது
எப்போதும்
எதையாவது
புரிய வைக்கும்
முயற்சியிலேயே
வாழ்க்கை...
நாம் புரிந்ததை
நாம் புரிந்தது போலவே
நான்காமவரும் புரிந்து கொள்ள
பிரம்மப்பிரயத்தனம்...
ஒப்புதல் வரும் வரை
ஓயாமல் பேச்சு...
தப்பித்தால் போதுமடா என்று
எதிராளி நிராயுதபாணியாய்...

வெற்றி பெற்றதாய்
நாமே அறிவித்து விட்டு
வெளியேறவும் செய்கிறோம்...

எல்லாம் புரிந்ததாய் எண்ணிக்கொண்டு
வாழ்க்கையை புதைத்தோம்
அதே மண்மேட்டில் நின்றுகொண்டு
நாளைக்கும் யாருக்காவது உபதேசிப்போம்.....

எதையாவது புரிந்து கொள்ள விரும்புவோரே
எம்மிடம் வாருங்கள்
ஏராளம் உள்ளது உபதேசங்கள்...

சிவா.ஜி
14-01-2010, 06:12 AM
உபதேசங்கள்.....
ஒரு ரூபாய்க்குக் கிடைக்கும்
இலவசங்களைப்போல
எங்கும் இறைந்து கிடக்கின்றன
சாலையில் காறித் துப்பிவிட்டு
அசுத்தம் செய்யாதீர்களென்ற
விளம்பரப்பலகையை ஓரத்தில் நடுவார்கள்...
புண்படுத்தக்கூடாது என
பண்பட்டவர்களாய் சொல்லிவிட்டு
ஏற்காதவர்களை
மண்வெட்டியாய் குதறுவார்கள்...!

சரண்யா
14-01-2010, 06:17 AM
உபதேசங்கள் கொடுப்பது
சுலபம்
கொடுப்பதை விட பெறுவது
அதனை விட சுலபம்
அதன் படி நடப்பது
சத்தியமாய்
சாத்தியமா?

விக்ரம்
14-01-2010, 06:25 AM
சாத்தியமா?
கேள்விக்கு
பதில் தேடி புறப்பட்ட காலை
எதிர் வந்தான்
இரு விழியிலும்
ஒளி இழந்த
சகோதரன் ஒருவன்
கைத் தடியே அவன்
கண் ஒளியாய்...
வீதியெங்கும்
ஒளிவெள்ளம்...
அவன் விற்றுச்சென்ற
தாழம்பூ பத்திகள்...
நெருப்பிலே எரிந்தும் கூட
நறுமணம் தான் தருகின்றன....

அவன் தோழமை
கிடைத்த நாளிலிருந்து
சாத்தியங்களை
தேடுவதை விட்டுவிட்டு
சாதனைகளை தேடத் துவங்கினேன்

சிவா.ஜி
14-01-2010, 06:30 AM
தேடத்தொடங்கினேன்
அந்த நொடியிலிருந்து
தேறத்தொடங்கினேன்
சாதனைச் சிகரம்
ஏறத்தொடங்கினேன்....!!!

விக்ரம்
14-01-2010, 06:36 AM
ஏறத்துவங்கினேன்
என்ன மலையோ
என்ன வரமோ
தெரியவில்லை
மூச்சிறைக்க
கால் கடுக்க
தொண்டை வரள...
ஏறிக்கொண்டிருந்தேன்
எம்பெருமானின்
ஆனந்த சாகரத்தில்
முழுக்க முழுக்க
நனைந்து போய்
பரவசத்தில் விழி விரித்தால்
பக்கத்தில் நான் ஈன்றடுத்த தெய்வம்
படுக்கையோடு சேர்த்து
என்னையும் நனைத்துவிட்டு
என்னைப்போலவே
கடவுளுடன்
பேசிச்சிரித்துக்கோண்டிருக்கிறது
கனவில்....

சரண்யா
14-01-2010, 06:38 AM
ஏறத்தொடங்கினேன்
பல படிக்கட்டுகளை
மனதினால் மட்டுமே
வாய்ப்பு தேடி தேடி நம்பிக்கை
இழக்கவில்லை எனினும்
வாய்ப்பு கிடைக்குமோ....
என ஆவலும் ஆர்வமும்
காலங்கள் கரைவதால்
நம்பிக்கையும் குறைவதால்
ஏறிச்சென்று வெற்றியை
அடைந்திடமுடியுமோ...

சிவா.ஜி
14-01-2010, 06:43 AM
கனவில் மட்டும்
வண்டி வண்டியாய்
வரும் வார்த்தைகள்
நிஜத்தில் எங்கு போய் ஒழிந்தது
ஒரு வார்த்தை பேசாமல்
என் காதல் அழிந்தது

விக்ரம்
14-01-2010, 06:49 AM
அழிந்தே போயின
அத்துனையும்...
எந்தையும் தாயும்
கொஞ்சிக் குழாவிய வீடு...
அன்னமும் அஞ்சுகமும்
பாடித்திரிந்த தோட்டம்...
இறைக்க இறைக்க
நிறைந்து தழும்பிய கேணி...
புழுதியோடு புரண்டு
திரிந்த தெருக்கள்...
ஓரோர் நினைவுகளும்
ஓரோர் அகதிகளாய்...
ஓரோர் தேசத்தில்.

சரண்யா
14-01-2010, 07:06 AM
தேசத்தில் சிறப்பு
பண்பாடு,பக்தி
கலாச்சாரம்
இவற்றின் பின்னால்
நம் உன்னதமான
பற்று தாய்மையின்
பந்தமாய் விளங்கும்
பாரத்ததின் இன்றைய
நிலையில் நம் தேசம்
அந்த முன்னேற்றம்
அடைந்த நாட்டின்
வரிசையில் அமருமா...

விக்ரம்
14-01-2010, 07:13 AM
அமரு..
அமரு...
சகோதர வாஞ்சையுடன்
சலியாது பேசிவந்த
உள்ளம் ஒன்று
உதவி என்று கேட்டவுடன்
ஒற்றை எழுத்துடன்
முடிந்துக் கொண்டுவிட்டது
உறவை....

(சும்மா உலூலூவாயிக்கு)
சீரியஸா எழுதி போரடிக்குது

சரண்யா
14-01-2010, 07:19 AM
உறவை வைத்து பாசமாய்
இருப்பது இயல்பு
நட்பே உறவாய் வந்து பாசமாய்
இருந்தால் இன்பம்

விக்ரம்
14-01-2010, 07:27 AM
இன்பத்தின் எச்சங்கள்...
புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்
இரவின் எச்சங்கள்
இறைந்து கிடக்கின்றன
தெருவெங்கும்...
முகம்முழுதும்முடிவளர்த்த
பிச்சைக்காரனின் பை முழுதும்
நிறைந்து போயின பீர் பாட்டில்கள்...
ஆண்டின் துவக்கம்
அருமையாய் அமைந்தது
அவனுக்கும் கூட....

சுகந்தப்ரீதன்
14-01-2010, 10:22 AM
அவனுக்கும் கூட...
உணர்ந்திருப்பான்...
இரவின் கயமைகளை
வாரியெடுத்து விடியும்முன்
வீதியை கடக்கையில்
மனநோய் பீடித்த சமூகத்தில்
தன்னை ஓர் சீர்த்திருத்தவாதியாய்..!!

சிவா.ஜி
14-01-2010, 10:59 AM
சீர்திருத்தவாதியாய் செயல்பட்டு
திருந்தா சமுதாயத்தின் உதைபட்டு
தீண்டாத செல்லரித்த புத்தகமாய்,
வேண்டாத, ஒதுக்கப்பட்ட குப்பையாய்
தெருவோரம் சேர்க்கப்பட்ட
சிந்தனைவாதி.....
நூற்றாண்டுகள் கழித்து,
பள்ளிப்புத்தகங்களில் பாடமாகிறான்.

சுகந்தப்ரீதன்
14-01-2010, 11:21 AM
பாடமாகிறான்....
தகுதியிருந்தும்
தகுதியானவனை தள்ளிவிடும்
தன் தகுதியால் ஈசல்போலவே
இலக்கியம் முழுதும் எட்டப்பன்..!!

கலைவேந்தன்
14-01-2010, 12:13 PM
எட்டப்பன் இவனென்று ஏகவசனம் செய்யாதீர்
பட்டபாட்டை பசுவதைபோல் பகிர்ந்துகொண்டான் தவறா?
நட்டம் பெற்று நலலபல உறவுகளை இழந்தான்
கொட்டம் போட்டகொள்ளையரை போட்டுத்தந்தா தவறா?

சிவா.ஜி
14-01-2010, 02:39 PM
தவறா.....சரியா....?
ஆதிகாலந்தொட்டு
அனைத்துக்கும்
அடுத்து வரும் கேள்வி...

பார்வைகள் பலவிதம்
பதில்களும் அதேவிதம்
பரந்த பார்வை பார்ப்போம்
ஐயம்தனை தீர்ப்போம்...!!

விக்ரம்
14-01-2010, 03:35 PM
தீர்ப்போம் கவலைகளை
துடைப்போம் கண்ணீரை
செய்வோம் வசதிகளை
குறைப்போம் வரிகளை
ஏற்போம் இன்னல்களை
கொடுப்போம் உயிரைக்கூட
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
ஆயிரமாயிரம் போம் கள்....

முள்வேலிகளுக்குப் பின்னால்
முன்னால் சகோதரன்
ஒருவேளை உணவுக்காக
ஒற்றைக்காலில் நின்றால்
நமக்கென்ன?

இலவச வண்ணத்தொலைக்காட்சியில்
புதுவித மின்னும் உடையில் அபிமானநட்சத்திரம்
கொஞ்சுதமிழில் கெஞ்சிப்பேசுகிறது
இரண்டாம் கை தொலைபேசியில்
எத்தனை முறை முயற்சிப்பது
இன்னும் லைன் கிடைக்கவில்லை....

அக்னி
15-01-2010, 06:58 AM
கிடைக்கவில்லை...
எம் நிலம் முழுதும்
தெளிக்கப்பட்ட இரத்தத்தின்
ஒரு துளிக் கறையேனும்
இன்னமும் கிடைக்கவில்லை.

எம் நிலம் முழுதும்
சிதைக்கப்பட்ட உடலங்களில்
ஓரு துகள் கூட
இதுவரைக்கும் கிடைக்கவில்லை.

எம் நிலத்திற்குள் எம்மை விடுங்கள்..,
தேடாமலே கிடைப்பார்கள் எம் உறவுகள்...
கேட்காமலே ஒலிக்கும் அவர்களின் கதறல்கள்...

எம் நிலத்தில் நடக்கும்,
அவர்களுக்கும் அரக்கர் உங்களுக்கும்
இறுதிக்கிரிகை...

சிவா.ஜி
15-01-2010, 07:44 AM
இறுதிக்கிரிகை உன் நினைவுகளுக்கு
இன்றோடு....
வாழவைத்ததும் அவைதான்
வதைத்து வாட்டியதும் அவைதான்
குளிரூட்டியதும் அவைதான்
அனல்மூட்டியதும் அவைதான்
அவஸ்தைகள் அழியட்டும்
இன்றோடு.....
இறந்த என்னோடு....

jayashankar
15-01-2010, 09:17 AM
என்னோடு போகட்டும் ...
இந்த அழிவுப் பாதைகளெல்லாம்
ஆக்கப் பாதைக்கு ஆவன செய்வீர்
மரங்கள் வளர்ப்பீர் காடுகள் படைப்பீர்
ஏற்றம் இறைத்து விவசாயம் செய்வீர்
எட்டெண் கடையை ஏகிலோம் என்பீர்
அழிக்கும் படைப்பை அலட்சியம் செய்வீர்
புனிதம் காக்க அமைதி காப்பீர்
மனிதம் கொண்ட...
மனிதன் ஆவீர்.

அக்னி
15-01-2010, 09:20 AM
இறந்த என்னோடு,
வாழ்கின்றேன் நான்...
நாம் நடந்த பாதையில்,
நான் மட்டும் நடக்கையில்..,
நாம் பார்த்த பார்வைகள்,
என் பார்வையிற் படுகையில்..,
என் இறப்பை நான் உணர்கின்றேன்.
உன் இருப்பையும் என்னில் உணர்கின்றேன்.

குறிப்பு:
ஜெயசங்கர் முந்திப் பதிவிட்டுவிட்டார். எனவே ஜெயசங்கர் கவிதையிலிருந்து தொடரவும்.

சிவா.ஜி
20-01-2010, 08:09 AM
மனிதம் கொண்ட மனிதன் ஆவீர்....
மனிதம் கொல்லும் மனிதர்களிடையே
மனிதம் கொள்ளும் மனிதராகி
மனிதம் சொல்லி மற்றவரையும்
மனிதம் கொண்ட மனிதராக்குவீர்....!!!

சரண்யா
20-01-2010, 11:20 AM
மனிதராக்குவீர் முதலில்
சுற்றத்தில் இருப்பவர்களை
தயங்காமல் அவர் மற்றவர்
பற்றி அவதூறாக பேச வந்தால்
தவறென அறிவுறுத்தி மாற்றி
காட்டிட நினையுங்கள்-மனம்
அது நினைத்தால் முடியாதது
எதுவுமில்லையே உலகில்.

அக்னி
25-01-2010, 07:21 AM
உலகில்
உயிர் துடைக்கப்பட்ட
சவங்களுக்காக நீதி கேட்டு
மனிதவுரிமைக் குரல்கள்...
உயிருக்குக் கதறுகையில்
மௌனம் காத்து,
உயிர்போய்ச் சவங்களானபின்
உயிர் போக்கியவனுக்காகப்
போர்க்கொடி உயர்த்துது,
இன்றைய உலகநீதி...

சிவா.ஜி
25-01-2010, 07:26 AM
இன்றைய உலகநீதி
இறக்கும் இனத்தை
இன்று காக்காமல்
இறந்தபின் இரங்கல்,
இன்னும்பிற பாசாங்கு புலம்பல்...
இறந்தது பாவப்பட்ட இனமா?
இல்லை பாவம் செய்த நீதியா?

அக்னி
25-01-2010, 06:07 PM
நீதியா... அநீதியா...
சடலச் சிதைவுகளில்
ஆராய்ச்சி செய்கின்றது
அநீதிக்குத் துணை நின்ற
உலகம்...

சிவா.ஜி
26-01-2010, 07:30 AM
உலகம் ஒரு திடப்பொருள்
எதைக்கண்டும் அசையாமல்...
உலகம் ஒரு திரவப்பொருள்
நிலையாயில்லாது அலைபாய்ந்துகொண்டு
உலகம் ஒரு நாடக மேடை
மாற்றி மாற்றி முகம் காட்டிக்கொண்டு...

சரண்யா
26-01-2010, 02:48 PM
மனிதர்கள் நடித்து தான்
ஆக வேண்டியுள்ளது
தன் பாத்திரத்தை முழு
சிரத்தையோடு நடித்தால்
பரிசாக பெறுவது முக்தி
என்னும் தேவலோகம்
அந்த மாயை எண்ணத்தில்
இருந்து விடபட வேண்டுமெனில்
சுற்றமே தேவலோகமாகும் அன்பால்
என்பதை அறிவாயோ..

சிவா.ஜி
26-01-2010, 03:34 PM
கவிச்சமரின் விதிகளின் படி கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியிலிருந்துதான் அடுத்தக் கவிதை தொடங்கப்பட வேண்டுமென்பதால்....வேறு கவிதையைக் கொடுங்கள் சரண்யா. நன்றி.

அமரன்
26-01-2010, 09:03 PM
உலகம் ஒரு திடப்பொருள்
எதைக்கண்டும் அசையாமல்...
உலகம் ஒரு திரவப்பொருள்
நிலையாயில்லாது அலைபாய்ந்துகொண்டு
உலகம் ஒரு நாடக மேடை
மாற்றி மாற்றி முகம் காட்டிக்கொண்டு...

மாற்றி மாற்றி முகம் காட்டிக்கொண்டு
ஜாலம் காட்டும் வெற்றியே
சற்றே விலகி நில்...

தூரத்தில் தெரிபவர்கள்
நெருங்கி வரட்டும் என்னை..
நிஜ முகம் காட்ட வைக்கட்டும் உன்னை.

குணமதி
04-02-2010, 03:38 AM
உன்னை உருவாக்கும் உண்மை பொறுமையொடு

பின்னையுன் நன்னடத்தைப் பீடென்க! - என்னை

நெருக்கடியும் அன்பினால் நேர்கொண்டே என்றும்

பெருக்கமுறும் நெஞ்சைப் பெறு.

சிவா.ஜி
04-02-2010, 04:33 AM
பெறுவதற்கு ஏதுமில்லை இறையிடம்
நிம்மதியைத் தவிர....
செல்வமும், புகழும்,
வீடும், மனையும்,
குடும்பமும், குதூகலமும்
எல்லாம் கிடைத்தது....
அனுபவித்து திகட்டிய நிலையில்
அடி மனதிலோர் ஏக்கம்...
இப்போதைய தேவை
இருக்கும்வரை நிம்மதி...!!!

யவனிகா
04-02-2010, 06:01 AM
நிம்மதி
இப்போதையா தேவையா?
இருக்கும்.....வரை தேவையா?

எப்போதைக்கும் நிம்மதி
எப்படி?எப்படி?

அண்ணனின் கேள்விக்காக
அணுகினேன் கடவுளை...

கடவுள் சொன்னார்...

இந்த நிமிட நிம்மதிக்கு
எதிரே இருப்பரை நேசி...

எந்த நிமிடமும் நிம்மதிக்கு
எல்லோரையும் நேசி...

கண்ணைமூடி உன்னை நேசி
கண்ணைத்திறந்தால் உலகையே நேசி....

அக்னி
04-02-2010, 06:05 AM
உலகையே நேசி...
என
அக்காவுக்குச் சொன்ன கடவுள்,
அன்றும் இன்றும்
கொன்று குவித்த கொலைஞர்களுக்கு
ஏன் சொல்லவில்லை...
ஓ... இவர்கள்
கடவுளே தாமென நினைப்பவரோ...

யவனிகா
04-02-2010, 06:16 AM
கடவுளே தாமென்று நினைப்பவரும்
கடைசியாய் போவது மண்ணுக்குள்தான்...
ஆண்டவர் என்று தம்மை நினைப்பவருக்கும்
ஆணவம் அத்தனையும் அழிந்து போகும்
காலம் வரும்...
கண்கள் உள்ள அனைவருக்கும்
கண்ணீர் சொட்டுகள் பொதுவே...
கடவுளானாலும்...கட்டுண்டவனானாலும்...

ஆதி
04-02-2010, 12:16 PM
கட்டுண்டவனானாலும்
கட்டவிழ்ப்பு செய்து
பின்னவீனத்தின் சுந்திரத்தை
அனுபவிக்க விரும்பவில்லை..

முள்முடி சூடப்பட்டு
சிலுவையில் அறையுண்ட போதும்
மூன்றாம் நாள் உயிர்த்தெழ
எண்ணமில்லை அவனுக்கு...

அமுதம் கடைய முனைந்த வாழ்வு
ஆலகாலம் கக்கியும்
அதை பருகி சுவைக்கவே
எத்தனித்தான்..

அவள் நெருப்பை கக்கிய போதும்
காதல் நீருற்றி அதை அனைத்துக் கொண்டான்..

அவளோ அரக்க கால்கள் கொண்டு
அவனின் காதல் மலர்களை
கனமாய் மிதித்து கொண்டே இருந்தாள்..

சிவா.ஜி
04-02-2010, 01:46 PM
மிதித்துக்கொண்டே இருந்தாள்...
அவனின் மரண ஓலம்
கேட்டுக்கொண்டே இருந்தது...
காதல் சாகும்போது
அதன் ஓலம் இப்படித்தான் இருக்குமோ..
கேட்டவர்கள் நினைவில் வைத்துக்கொண்டனர்
இன்னொருமுறை இப்படியான ஓலம் கேட்டால்
தெரிந்துகொள்ளலாம்...
காதல் ஒன்று செத்துக்கொண்டிருக்கிறதென்று....!!

யவனிகா
04-02-2010, 03:36 PM
செத்துக்கொண்டிருக்கிறது
கழுத்தில் சுருக்கு மாட்டிய
சாம்பல் நிற ஓணான் ஒன்று...
ஒவ்வொன்றாய் இறக்கை பிய்க்கப்பட்டு
உயிருக்குப் போராடுகிறது வண்ணத்துபூச்சி ஒன்று...
ஊர்ந்து வந்த வண்டொன்று
ஒற்றைக்கண் இழந்து திரும்புகிறது
கால்களுக்கிடையே வாலைச்சுருட்டிக்கொண்டு
ஊளையிட்டு ஓட்டம் எடுக்கிறது கல்லடிபட்ட நாய்
புதிதாய் வாங்கிய ஸ்பைடர்மேன்
கைவேறாய் கால்வேறாய்
வைத்தியம் பார்க்க வேண்டிய ஸ்திதியில்...

குழந்தைகளை வெறுத்தேன்
தற்காலிகமாக...

கருப்புத்துணியால் கண்கள்கட்டப்பட்டு
துப்பாக்கி முணையில் நிர்வாணமனிதனொருவன்...

நமக்குப்பிறந்தவை தானே
குழந்தைகள்...!!!

ஆதி
05-02-2010, 08:07 AM
குழந்தைகள்
விளையாடும் தெருங்களில் தான்
அதிகமாய் உலவுகிறது
சப்தமும்..
குதூகலமும்..

பேரன் பேத்திகள் தொலைத்த
வீடுகளின் ஜன்னல்களில்
தாத்தா பாட்டிகளின் ஏங்கள் வழியும்...

இரவு பணிக்கு சென்று வந்தவர்கள்
குழந்தைகள் மேல் காட்ட இயலாத கோபத்தை
ஜன்னல் கதவுகளை அறைந்து தீர்த்துக் கொள்வார்கள்..

நிமிடங்களோடு தன்னையும்
நெடுந்தொடரில் புதைத்தவர்கள்
குழந்தைகளை திட்டியவாறு
தொலைக்காட்சியின் சத்தத்தை கூட்டுவார்கள்..

வேகடிக்கும் வெயிலை
விளையாட்டு ஜோரில் புறக்கணிக்கும்
துள்ளும் கால்களுக்கு
இவையாவும் ஒரு பொருட்டன்று..

அமைதியாகவே இருப்பினும்..
குழந்தைகள் இல்லா வீடும்
தெருவும் மயானம் தான்..

சிவா.ஜி
05-02-2010, 08:19 AM
"பேரன் பேத்திகளை கொஞ்சம் கவனியுங்க ஆதன்...."

மயானம் தான்
பல வாழ்வியல் ரகசியங்களை
தயவுதாட்சண்யம் பார்க்காமல்
முகத்திலறைந்து சொல்கிறது....
பொன்னும் பொருளும் சுமந்த உடல்
மண்ணும், புழுவும்
திண்ணும் பொருளாகிவிடுகிறது...
சிதைக்குத் தீயோ, குழிக்கு மண்ணோ
இட்டபிறகு திரும்பும் மனிதன்..
சற்றேனும் சிந்திக்கிறான்....!!

யவனிகா
05-02-2010, 11:30 AM
சற்றேனும் சிந்திக்கிறான்
சராசரி மனிதன்,
பதினைந்து தேதிகளில்...
உலகுக்காக ஒன்றுமே
செய்யவில்லை என்று!!!
மாத இறுதி
ஓட்டை பட்ஜெட் பாத்திரம்
ஒழுகவிட்டு விடுகிறது
உலகம் பற்றிய
அவன் கவலைகளை...
முதல் தேதி மீண்டும்
சிந்திக்கத் தலைப்படுவான்...
அதுவரை காத்திருப்போம்....

சிவா.ஜி
05-02-2010, 11:54 AM
காத்திருப்போம்
நாம் நட்ட விதையெல்லாம்
மரமாகும்வரை,
தோட்டத்துச் செடிகளெல்லாம்
பூப்பூக்கும்வரை,
வறண்ட வயலெல்லாம்
விளைந்து நிற்கும்வரை,
பின்...கையிலுள்ள மண்வெட்டியை
அடுத்த தலைமுறைக்கு கைமாற்றுவோம்!!

யவனிகா
05-02-2010, 12:01 PM
அடுத்த தலைமுறைக்கு
கை மாற்றுகிறோம்
அணு தினமும்...
நம் பொறாமை
இயலாமை
போர்க்குணங்களை...
குறைபட்டும் கொள்கிறோம்
இளைய தலைமுறை
இனி உருப்படபோவதில்லை என்று...

ஆதி
05-02-2010, 12:30 PM
உருப்பட போவதில்லை என்று
ஒதுக்கிவிட்டவைகள் எண்ணற்ற..

உருப்படாத காற்று
உருப்படாத நீர்
உருப்படாத கடவுள்
உருப்படாத காலம்
என
உருப்படாதவைகளின் பட்டியல்
மிக பெரியது..

உருப்படாதவைகள் தான்
பல சமயங்களில்
மேன்மை பொருந்தினவையாய் இருக்கின்றன..

ஆகையால்
ஒரு போதும் தயக்கங்கள் வேண்டாம்
உருப்படாதவைகளாக...

யவனிகா
05-02-2010, 12:33 PM
உருப்படாதவைகளாக
பெரிய பட்டியல்
விடுபட்டுப்போனவைகளை
நிரப்புகிறேன் நான்
வேறு எதும் இல்லை
நானும்
என் கவிதையும் தாம்

(மேன்மை பொருந்தியவைன்னு தம்பி சொல்லீட்டாரில்ல...அதான் )

தாமரை
05-02-2010, 12:42 PM
நானும் என் கவிதையும் தான்
(கவிதைகளும் தாம்-இலக்கணப் பிழை வரலாமோ? சாம்பவி இல்லைன்னு இப்படியா?)
கிறுக்கர்களாக..

படிப்பவர்களெல்லாம் டாக்டர்கள்
என்னைப்பார்த்தவர்
மனநலத்தில்

என் கவிதையைப் பார்த்தவர்
இலக்கியத்தில்

யவனிகா
05-02-2010, 12:46 PM
இலக்கியத்திலோ
இலக்கணத்திலோ
செய்த தப்பு
பரிசளித்தது...
பிழை பெற்றது
பெரியவர் கவிதை

அண்ணாத்தேவ இழுத்துட்டமில்ல,அதாவது பிழை பெற்றுத்தந்தது தாமரை அண்ணாவின் கவிதையை...தப்பு வுட்டா தவறாம வந்திருவாருன்னு போட்ட கணக்கு தப்பா போகல

தாமரை
05-02-2010, 01:38 PM
பெரியவர் கவிதை
வார்த்தைச் சுருங்கல்களில்
அனுபவத்தைச் சுமந்து கொண்டு

சிறியவர் கவிதை
மென்மையும் மழலையுமாய்

ஒரே ஒரு ஒற்றுமை

பொக்கை வாய்ச் சிரிப்பு!!!

சிவா.ஜி
05-02-2010, 01:43 PM
கவிதை கிடைக்காதபோது
காலை உணவுக்கு
டீயும் பொறையும்தான்...
மதிய உணவுக்கு,
மல்லாந்து படுத்து யோசித்து
இரண்டு கவிதையாவது தேற்றி
பிரியாணி உண்டு
தண்ணீர் குடித்துவிடுவோம்....

கவிதை விற்று காலம் ஓட்டும்
வேலையில்லா புலவர்கள்...!!!

தாமரை
05-02-2010, 01:48 PM
லேட்டு கண்ணா லேட்டு...
பாடு புதிய பாட்டு
பொக்கை வாய் சிரிப்பு!

சிவா.ஜி
05-02-2010, 02:05 PM
பொக்கைவாய் சிரிப்பு...
களங்கமில்லா பிள்ளையிலும்
காலம் முடிந்த முதுமையிலும்..
பிள்ளையின் சிரிப்பில்
தெரிவது ஒன்றே
முதுமையின் சிரிப்பில்
அறியவோ பலப்பல....

யவனிகா
05-02-2010, 02:06 PM
பலப்பல சிரிப்புகள்
பலரும் சிரிக்க....
பார்த்துச்சிரிக்கிறேன்
சின்னக்குழந்தையாய்
சிற்றடி வைக்கும் போதே
ரொம்பச் சிரிச்சா
அதிகம் அழுவே....
நினைவு தெரிந்தநாளிலிருந்தே
சிரிக்கும் போதெல்லாம்
கிடைத்த விமர்சனம்...
இறுதிவரை ஈறு தெரிய
சிரிக்கமுடியாமல்
சிறைக்குள் நிற்கிறது
எங்கள் சிரிப்பு
பெண்கள் சிரிப்பு

குணமதி
05-02-2010, 02:16 PM
பெண்கள் சிரிப்பும் பெரிது பொழியன்பும்

ஆண்கள் அழிழும் அளறு.

தாமரை
05-02-2010, 02:21 PM
பெண்கள் சிரிப்பு
கேட்குமிடம் கடக்கும் போதேல்லாம்
எனக்கு நாணம்
என்னைப்பற்றிதான்
ஜாலியாகவோ
கேலியாகவோ!

யவனிகா
06-02-2010, 08:46 AM
கேலியாகவோ
ஜாலியாகவோ
வேலியாகவோ
பயன்படுத்தப்பட்டு
தூக்கிஎறியப்படுகிறது
நட்பு

ஆர்.ஈஸ்வரன்
06-02-2010, 08:53 AM
நட்பு
புனிதாமானது
சுயநலமில்லாத
குழந்தை நட்பு

சிவா.ஜி
06-02-2010, 09:01 AM
நட்பு நல்லது....
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
எதிர்பார்ப்பு எதுவுமில்லாதிருந்தால்..

நட்பு நல்லது....
அவரவர் அவரவராகவே
அவரவர் குணத்துடன் இருந்தால்...!!

யவனிகா
06-02-2010, 09:17 AM
அவரவர் குணத்துடன் இருந்தாலும்
அப்படியே ஏற்றுக்கொள்வது தான் வாழ்க்கை
கண்மூடி உபதேசம் அடுத்தவருக்கு!
நாம் அப்படியே இருப்போம்.
உபதேசிப்பது நம் குணம்
ஏற்றுக்கொள்ள ஏராளம் பேர்.

ஓவியன்
06-02-2010, 09:55 AM
ஏராளம் பேர் சிரிக்க,
ஏராளம் பேர் அழ,
ஏராளம் பேர் தூற்ற,
ஏராளம் பேர் பழக,
ஏராளம் பேர் பரிமாற,
என ஏராளம் பேர்,
என்னைச் சுற்றி நிறைந்திருக்க,
தனியனாக நான்...!!

ஆர்.ஈஸ்வரன்
06-02-2010, 09:59 AM
தனியாக நான் தவிக்கிறேன்
மனதிலிருப்பதைக் கொட்டமுடியுமா?
கொட்டினால் அது என்னவாகும்?
என்னவாகும் அவரவர் எண்ணத்தல்?

சிவா.ஜி
06-02-2010, 10:54 AM
எண்ணத்தில் என்னென்னவோ...
தொலைக்காட்சி சீரியல்கள் ஒழிய வேண்டும்,
அரசாங்க ஊழியர்கள் திருந்தவேண்டும்,
நல்ல அரசியல்வாதி பிறக்கவேண்டும்,
கருணாநிதி ஓய்வு பெறவேண்டும்,
பெரியாறு அணை உயர வேண்டும்,
காவிரி தடையின்றி வர வேண்டும்,
பி.டி.கத்திரிக்காய்க்கு தடை வேணும்.....
பட்டியலிட்டால்...வானம்வரை நீளும்..
எதார்த்தத்தை நினைத்து,
இலவச டி.வி வரிசையில் நிற்போம்!

யவனிகா
06-02-2010, 12:47 PM
வரிசையில் நிற்போம்...நாம்

எதிரே இருக்கும்
ஏழுவயது சிறுமி
நிலா பிடிக்க எத்தனிக்கிறாள்...
சற்று தள்ளி தளிர் நடை பழகும்
அந்தச் சின்னக்குட்டிப்பாப்பா
மண்சுரண்டித் தின்ன ஆயத்தமாகிறாள்...
அவளுக்கு அப்புறமாய்
முன்பல்லில்லாத சிறுவன் ஒருவன்
காற்றை கைது செய்யமுயல்கிறான்
தன் கையில் இருக்கும் பலூனுக்குள்...
இன்னும் குழுவாய் சில வாண்டுகள்
சோப்புக்குமிழ் பரிசை இறைவனுக்கு
அனுப்ப முயல்கின்றன தீவிரமாய்...
வரிசையில் நிற்கிறோம்
ஏந்திய கரங்களுடன் அவர்களுக்கெதிரே
மகிழ்ச்சியை நம் கைகளில்
மாற்றிவிடும் மனம் அவர்களுக்குண்டு...
பதிலுக்கு பாடப்புத்தக மூட்டையைப்
பரிசளிப்போம் நாம்.

குணமதி
06-02-2010, 01:07 PM
நாமென்னும் ஒற்றுமை நல்லுணர்வே நமையுயர்த்தும்

ஆம்;அதுவே தேவையிப் போது.

சிவா.ஜி
06-02-2010, 01:07 PM
மூட்டையைப் பரிசளிப்போம் நாம்
உடனிருக்கும் எதிரிகளுக்கும்,
ஆர்வம் கொல்லும் மனிதர்களுக்கும்
தடைபோடும் துர்மனதுக்காரர்களுக்கும்
குழிபறிக்கும் குள்ள நரிகளுக்கும்
வெற்றியின் சந்தோஷத்தை நிரப்பி.....

சரண்யா
06-02-2010, 03:13 PM
சந்தோஷத்தை நிரப்பி
இருக்கும் பிறந்தநாள்
ஒரு சிறந்தநாள் வாழ்வில்
ஓர் உன்னதமான செயலில்
ஈடுபட நினைக்கும் நாளில்
இநத நாளும் ஒரு நாள்
இனிய நாள் மகிழ்ச்சியாய்
சென்ற நாள் வருடத்தின்
ஒரே நாள் இது தானோ..

யவனிகா
07-02-2010, 08:13 AM
இது தான்
என் ஃபிரண்ட் நச்சத்திரம்

இரவில் வெளியே நான்
வந்தால் ஹாய் சொல்லும்..
படுக்கப்போகும் போது
குட்நைட் சொல்லும்,
என்று ஒரேஒருநாள்
அறிமுகம் செய்து வைத்தேன்
என் மகனுக்கு.

பத்து நாட்கள் கழித்து
பயணித்துக்கொண்டிருந்தோம் வெளியே...
அம்மா இது டோனியோட நச்சத்திரம்
அவன் அதை பெட்ஸ்டாரா வெச்சிருக்கானாம்
இது ஹனாவோட நச்சத்திரம்
அவள் அதுக்கு பெட்டைம்ஸ்டோரி சொல்வாள்
இது ஆதியோட நச்சத்திரம்
அவன் அதுக்குஃபிங்கர் சிப்ஸ் கொடுத்தானாம்
இது அம்ரூவோட நச்சத்திரம்
அதுக்கும் பர்த்டேட்ரஸ் எடுக்கணும்

ஆகக்கூடி வகுப்பு சிறார்கள் முழுவரும்
தோழர்களாய் கிடைத்ததில்
அதிகமாகவே ஒளிவிடத்துவங்கின அவைகள்....

சிவா.ஜி
07-02-2010, 08:20 AM
(அசத்தல் கவிதைம்மா)

அவைகள்....
எங்கோ ஒரு மூலையில்
அடங்கி ஒடுங்கித்தான்
அமர்ந்திருக்கும்...

உண்ணக்கூடாது எனச்
சொன்னப் பலகாரத்தையும்,
எண்ணக்கூடாது என எண்ணியதை
எழுப்பிவிடும் காட்சிகளும்...
உசுப்பிவிடும் சபலத்தை....!!!

யவனிகா
07-02-2010, 08:27 AM
உசுப்பி விடும் சபலம்
யாரோ எறிந்த கல்லாய்
மன ஓடையெங்கும்
வளையல்கள் உடைக்கும்.
கண்மூடி பல்கடித்து
வலிபொறுத்தால்
சலனமின்றி
தரைதட்டும்
சற்று நேரத்தில்.
மீன்களுக்கு அவற்றை
விளையாடப் பரிசளித்துவிட்டு
வேலையை கவனிப்போம்
சுறாக்கள் நாம்.

சிவா.ஜி
07-02-2010, 08:32 AM
நாம் என ஆகத்தானே
நான் உனை மன்றாடுகிறேன்...
இன்றாவதோ இல்லை
என்றாவதோ...
ஒன்றாவதை உறுதிப்படுத்து..
இல்லையெனில் இதயம்
நின்றாலும் நின்றுவிடும்...!!