PDA

View Full Version : உன்னில் தொலைந்தவன்



நம்பிகோபாலன்
19-08-2008, 05:25 AM
என் விழி சிறையிலிருந்து
இன்றோடு நீ
மறைந்து இருபது நாட்கள்
மேலாகிறது

உன்னை நான் தொலைத்தேனா
இல்லை
உன்னில் நான் தொலைந்தது
உண்மை
இன்று
ஊமையாகி போகிறது

உன் விழி பார்வையிலா
இல்லை
உன் சிரிப்பிலா
இல்லை
என்னருகில் வந்து
போன வாசத்திலா
தெரியவில்லை
இருப்பினும்
உன்னில் தொலைந்தவனை
நான் தேட
முயலவில்லை..

இன்று நீ
எங்கிருக்கிறாய்
என்று
தெரியாமலேயே
தெடுகிறேன்
உன்னை

நிஜத்தில்
நீ என்னை விட்டு
மறைய முயற்சிக்கலாம்
ஆனால் நிழலாய்
என்னுள் என்றும்
நீ
என் மனதில்

செந்தமிழரசி
21-08-2008, 03:53 AM
கவிதை நன்று. விழி விசும்பின் பௌர்ணமி பூவை பலநாளாய் பார்க்காமல் இருக்கும் பெரு நோவு உங்களில் ஏற்படுத்திய தகிப்பை துயரை விரக்தியை வெதும்பலை விசும்பலை இவ்வாறான பல்து பல உணர்ச்சியை கவிதையினுள் ஊற்றியிருக்கலாம் நம்பிகோபாலன், வாழ்த்துகள்.

நன்றி.

வசீகரன்
21-08-2008, 09:49 AM
உன் விழி பார்வையிலா
இல்லை
உன் சிரிப்பிலா
இல்லை
என்னருகில் வந்து
போன வாசத்திலா
தெரியவில்லை
இருப்பினும்
உன்னில் தொலைந்தவனை
நான் தேட
முயலவில்லை..

நிஜத்தில்
நீ என்னை விட்டு
மறைய முயற்சிக்கலாம்
ஆனால் நிழலாய்
என்னுள் என்றும்
நீ
என் மனதில்

அருமையான வரிகள் நம்பி அவர்களே...
காதலில் தோல்வி வந்தால்
கவிதைகளுக்கு நல்ல தீனிதான் போலும்..!

poornima
21-08-2008, 09:57 AM
ஜெயிக்கும் வரை காதல் கவிதைகள் மத்தாப்பாய்..
ஜெயித்தபின் எழுதப்படும் எல்லாமே பிரகாசமாய்
தோற்றாலே ஜொலிக்கும் சுடராய் கவிதைகள்
நம்பி கோபாலனுக்கு மட்டும் விதி விலக்கா என்ன..?

நம்பிய ராதை என்ன ஆனாள் நம்பி கோபாலா.. ? :-)

தீபா
21-08-2008, 10:17 AM
கவிதை அருமை. இன்னும் முயன்று எழுதுங்கள்.

அறிஞர்
21-08-2008, 02:23 PM
நிஜத்தில்
நீ என்னை விட்டு
மறைய முயற்சிக்கலாம்
ஆனால் நிழலாய்
என்னுள் என்றும்
நீ
என் மனதில்
நீங்கியும்..
நீங்காது இருப்பவளை
பற்றி உம் வரிகள் அருமை.. நம்பி

நம்பிகோபாலன்
22-08-2008, 07:07 AM
அனைவருக்கும் என் நன்றிகள்..
என்னை ஊக்கபடுத்துகிற உங்கள் பின்னூட்டங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி.

lolluvathiyar
28-09-2008, 06:46 AM
ஓ நீங்களும் தொலைந்து விட்டீர்களா, அந்த நிழல் உங்களிடமே இருக்கல்ல அதுக்குள்ள நீங்க பத்திரமா இருக்கீங்க*