PDA

View Full Version : நாத்திகம்



நாகரா
18-08-2008, 02:48 PM
அன்பே சிவமாம்
அல்லா இல்லாத
இடமே இல்லை
என்றாலும்
அன்பில் நம்பிக்கை இல்லாத உன்னில்
அருளாளர் அவருக்கு
இடமே இல்லை

ஓவியன்
19-08-2008, 04:16 AM
அன்பே எல்லாவற்றுக்கும் அடிப்படை..!!

எந்த வடிவத்தில் இறைவனென்றாலும்
அன்புடையவனே ஆண்டவனால்
ஆசிர்வதிக்கப்படுவான்
என்ற அண்ணலின் கவிதைக்கு நன்றி..!!

நாகரா
19-08-2008, 06:53 AM
அன்பே எல்லாவற்றுக்கும் அடிப்படை..!!

எந்த வடிவத்தில் இறைவனென்றாலும்
அன்புடையவனே ஆண்டவனால்
ஆசிர்வதிக்கப்படுவான்


ஆதார அன்பைப் பற்றி
நெத்தியடி உண்மை சொன்ன
அன்புத்தம்பி ஓவியனுக்கு நன்றி