PDA

View Full Version : ஊர்க்காரர் (குட்டிக்கதை)ஐரேனிபுரம் பால்ராசய்யா
18-08-2008, 12:29 PM
நண்பனுக்கு ஆபரேசன் என்று கேள்விபட்டு அவனை பார்க்க குஜராத் அக்க்ஷதா மருத்துவமனைக்கு சென்றேன்.

ஆபரேசன் முடிந்து மயக்க நிலையில் படுத்திருந்தான் நண்பன். அவன் கண் விழிக்கும்வரை காத்திருப்போம் என்று வரவேற்ப்பறையில் அமர்ந்து தமிழ் வார இதழ் ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன்.

என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் “ ஆப் சவுத் வாலா” என்று இந்தியில் கேட்டார். நான் ‘ஆமாம் `என்று தலையாட்டினேன். அவர் முகம் மலர்ந்து தன்னை ஒரு ஆசிரியர் என்றும் தன்னோடு வேலை பார்பவர் ஒரு தமிழர் என்றும் சொன்னார்.

எனக்கு ஆர்வம் அதிகமாகி அந்த தமிழர் எந்த ஊர்காரர் என்று கேட்டேன் அவர் மார்த்தாண்டம் என்று சொன்ன போது நான் உச்சி குளிர்ந்தேன்.

எனது சொந்த ஊருக்கு பக்கத்து ஊர் என்பதால் அவரது அலைபேசி எண் கிடைக்குமா என்றேன். “ ஓ தாராளமா” என்றபடி அவரது நம்பரை தந்துவிட்டு, அவருடன் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் என்னை சந்தித்த விஷயத்தை கூறிவிட்டு அவரது அலைபேசியை என்னிடம் தந்தார்.

நான் அவரிடம் அறிமுகம் செய்து கொண்ட போது குஜராத்தில் சொந்த ஊர்க்கார நண்பர் கிடைத்தார் என்ற மகிழ்சி ஏற்பட்டது . தொடர்ந்து தொடர்பு வெச்சிக்குவோம் என்றபடி அலைபேசியை அவரது நண்பரிடம் தந்தேன்.

“கண்டவங்களுக்கெல்லாம் என்னோட நம்பர எதுக்கு தர்றீங்க” என்று இந்தியில் அவரது நண்பருக்கு கேட்ட குரல் மெல்லமாய் எனக்கும் கேட்டது.

poornima
18-08-2008, 01:46 PM
விகடன் குமுதம் இதழ்களுக்கேற்ற கால்நிமிட கதை வகைகளுக்கு ஏற்ற பதிவு
ஐ.பா.ராசைய்யா அவர்களே.. இன்னும் நிறைய எழுதுங்கள்..நேரமிருந்தால் மன்றத்திற்கு அப்பால் அந்த இதழ்களுக்கும் அனுப்பிப் பாருங்கள்..

தமிழன் என்றோர் இனமுண்டு.தனியே அவனுக்கோர் குணமுண்டு.
எளிதாய் எடுங்கள் இதை...

மன்மதன்
18-08-2008, 02:36 PM
“கண்டவங்களுக்கெல்லாம் என்னோட நம்பர எதுக்கு தர்றீங்க” என்று இந்தியில் அவரது நண்பருக்கு கேட்ட குரல் மெல்லமாய் எனக்கும் கேட்டது.

மனிதர்களில் இத்தனை நிறங்கள் உண்டு...

அருமையான ஒரு பக்க கதையாக அமைந்துவிட்டது..:icon_b:

mukilan
18-08-2008, 02:41 PM
எதிர்பாராத திருப்பம் கதையில் மட்டுந்தான்.

நிஜ வாழ்க்கையில்?

தமிழர்கள் அடுத்த தமிழர்களைக் கண்டால் முகம் திருப்பிக் கொண்டு செல்வது எங்கும் நடக்கிறது. நான் இங்கு வந்த புதிதில் அடுத்த தமிழர்களைக் கண்டால் ஓடிச் சென்று பேசுவேன். ஆனால் அவர்கள் முகம் கொடுத்தே பேச மாட்டார்கள். நான் ஏதோ உதவி கேட்பது போல இருப்பார்கள். பின்னர்தான் நானும் கண்டு கொள்வதேயில்லை.

நடக்கும் சிறு சம்பவங்களை வைத்து அருமையான குட்டிக்கதைகள் எழுதுகிறீர்கள். பாராட்டுகள். மேலும் தொடருங்கள்.

அமரன்
18-08-2008, 02:45 PM
சுருக்கமான கதை. நெற்றியை சுருங்க வைத்த கதையும் கூட. இன்னும் இன்னும் குட்டிக் குட்டிக் கதைகள் தாருங்கள்.

Keelai Naadaan
18-08-2008, 05:03 PM
குட்டிக்கதை மட்டுமல்ல. குட்டுக் கதையும் கூட.

மதி
18-08-2008, 05:20 PM
அழகான குட்டிக்கதை. சில நேரங்களில் சில மனிதர்கள்...
யாரை குற்றம் சொல்ல..?

வாழ்த்துகள்..ராசைய்யா

அகத்தியன்
18-08-2008, 05:30 PM
அர்த்தமுள்ள கதை.

நீங்கள் குமுதம் வார இதழுக்கு கதை எழுதும் பால் ராசையா தானே

arun
18-08-2008, 07:15 PM
அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதற்கு தங்களது அனுபவமும் ஒரு உதாரணம்

இது நமக்கும் ஒரு படிப்பினை தான்..

arun
18-08-2008, 07:17 PM
.அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானே திருடிவிட்டேன்
முதல் முறை திருடியகாரணத்தால்
முழுதாய் திருடவும் மறந்துவிட்டேன்
...
சூப்பரா இருக்கே தங்களின் படைப்பா?...

விகடன்
18-08-2008, 07:30 PM
சிலவரிகளில் சிறுகதையாக எழுதிவிட்டீர்கள்.
இப்படியும் மனிதர்கள் உளர்..... என்பதைச் சொல்லும் கதை.

பாராட்டுக்கள்.

mukilan
18-08-2008, 07:52 PM
சூப்பரா இருக்கே தங்களின் படைப்பா?...

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலிப் பாடல் என நினைக்கிறேன்.

அறிஞர்
18-08-2008, 10:07 PM
தைவானில் இருந்தபொழுது... இந்தியரை கண்டாலே ஒரு குஷி ஏற்படும். ஐ.எப்.எஸ் படித்த அதிகாரிகள் கூட நன்றாக பழகுவார்கள்.. தமிழர் என்றால் தனி சந்தோசம் தான்.

ஆனால் அமெரிக்காவில்... நிலை தலைகீழ்... சந்தித்தாலும் வியாபார நோக்கில் சந்திப்பர்....

ஆளுக்காளு வித்தியாசம்.. அருமையான கதை அன்பரே..

சிவா.ஜி
19-08-2008, 04:10 AM
உண்மையிலேயே எனக்கு இப்படியொரு அனுபவம் நேர்ந்ததில்லை. வலிய வந்து அறிமுகமாவார்கள். அதுவும் அவர்கள் ஊருக்கு அருகில் என்றால் இன்னும் நெருக்கமாக்கிவிடுவார்கள். சென்னைவாழ் தமிழர்கள் மட்டும் கொஞ்சம் ஒட்டமாட்டார்கள். தென்மாவட்ட மக்கள் பாசக்கார புள்ளைங்க.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
19-08-2008, 01:27 PM
அன்பான அகத்தியன் அவர்களுக்கு

எனது ஒரு சின்ன அறிமுகத்தில் உங்களின் கேள்விக்கான பதில் இருக்கிறது.
-ஐரேனிபுரம் பால்ராசய்யா

அன்புரசிகன்
20-08-2008, 02:24 PM
வீட்டுக்கு வீடு வாசல் படி....

கத்தாரில் இருக்கும் போது ஒரு விடையம் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒரு roundabout ற்கு பெயரே நேபாளி ரவுண்டபோட்.... காரணம் வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு கத்தாரில் உள்ள அநேக நேபாளி இனத்தவரை அந்த பிரதேசத்தில் காணலாம்... இவ்வாறு தமிழ் ரவுண்டபோட் ஒரு இடத்திலும் இல்லையே...........:cool:

ஐரேனிபுரம் பால்ராசய்யா
22-08-2008, 11:09 AM
எனது கதையை படித்து பதிலிட்ட அனைது நல்ல இதயங்களுக்கும் நன்றி

அக்னி
22-08-2008, 02:23 PM
நாம் நட்பாக நெருங்க விரும்பினாலும்,
ஏதேனும் ஆதாயத்திற்காகப் பழகுகின்றானோ என்று பார்க்கும் பலர்...
அதிகமாகப் புலம்பெயர் நாடுகளில்...

நான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்தபின்,
உண்மையான நட்போடும், உரிமையோடும்
பழகத் தொடங்கியமை மன்றத்தில் மட்டுமே...
(விதி விலக்காக மிகச் சிலர் உள்ளனர்...)

குட்டிக் கதைக்குப் பெரிய பாராட்டு,
ஐ பா ரா அவர்களுக்கு...