PDA

View Full Version : பாகிஸ்தான் அதிபர் பதவி விலகினார்aren
18-08-2008, 08:52 AM
இன்று பாகிஸ்தான் அதிபர் பெர்வெஸ் முஷாரஃப் அதிபர் பதவியிலிருந்து தாமாகவே விலகினார்.

ஓவியா
18-08-2008, 08:55 AM
அப்பாடா விட்டதுடா ...... என்று மக்கள் கொண்டாடுவார்கள்.

பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்கள்.

தகவலுக்கு நன்றியண்ணா.

ஆதி
18-08-2008, 09:09 AM
சௌதி மன்னர் சென்று முஷ்ரப்பிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார் என்று சொன்னார்கள்.. அதுமட்டுமின்றி முஷ்ரப் நாட்டை விட்டு வெளியேருவார் என்று சொல்லப்படுகிறது.. எந்த ராணுவத்தை வைத்து சர்வாதிகரம் கையுற்றாரோ அந்த ராணுவமே அவருக்கு ஆதரவு தர மறுத்துவிட்டது.. சௌதி மன்னர் சௌதியில் குடியமர அனுமதி வழங்கிவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.. பாக்கீஸ்தானைவிட்டு அவர் வெளியேறாவிட்டால்.. அந்த வழக்கு இந்த ஊழல் என்று முஷ்ரப்பை எப்படியும் சிறையுற செய்வார்கள்.. அதனால் அவர் வெளியேறித்தான் ஆக வேண்டும்.. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..

ராஜா
18-08-2008, 09:26 AM
ஆடிய ஆட்டமென்ன..!

பேசிய வார்த்தை என்ன..!

(இந்த முடிவுக்குப் பின்னால், என்னென்ன மர்மங்கள் இருக்கின்றனவோ..!)

ஓவியன்
18-08-2008, 11:16 AM
வாழ்க்கை ஒரு வட்டமென்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம்...!!

செய்திப் பகிர்வுக்கு நன்றி அன்பர்களே..!!

poornima
18-08-2008, 01:55 PM
சந்தோஷப்படுவதா துக்கப்படுவதா..
நல்லதா கெட்டதா..

என்னமோ நடக்குது மர்மமா இருக்குதே
ஒண்ணுமே புரியலை உலகத்திலே

அறிஞர்
18-08-2008, 04:13 PM
8 வருட... ஆட்டம் நின்றது.

உள்நாட்டில் பல நல்ல விசயங்களை செய்துள்ளதாக பாகிஸ்தான் நண்பர்கள் கூறினர்.

பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதே அவருக்கு சிறந்தது. சில வருடங்கள் கழித்து மீண்டும் திரும்பக்கூடும்.

arun
18-08-2008, 06:37 PM
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - இந்த வாசகம் கண்டிப்பாக முஸ்ரப்புக்கு பொருந்தும்

நவாஸ் செரீப் சென்ற சவுதிக்கே அவரும் சென்றால் அவருக்கு இந்த பழமொழி இன்னும் சரியாக பொருந்தும்

namsec
20-08-2008, 02:28 PM
விதை ஒன்று போட்டால் சுறை ஒன்ற முலைக்கும்

ஷீ-நிசி
20-08-2008, 02:38 PM
இந்த செய்தி எப்படா வரும்னு காத்திட்டு இருந்தேன்... தொலைக்காட்சியில பார்க்கும்போதே மனசு சந்தோஷமாய் இருந்தது.. என்னதான் சொல்லுங்க.. பாகிஸ்தான் மக்கள்னாலும் மனசோரம் பாசம் இருக்கத்தான் செய்யுதுங்க!!!

ஓவியா
20-08-2008, 04:58 PM
ஆனாலும் பல படித்த மேதாவிகள் இது பாகிஸ்தான் நாட்டின் கொடுரமான கருப்புதினம் என்று கருத்து கூறுகின்றனர்.

வலைப்பூக்களும் இனி பாகிஸ்தானை சுயநலவாத அரசியால்வாதிகளிடமிருந்து ஒருபோதூம் காப்பாற்ற முடியாது,, குடும்ப ஆட்சிபுரியும் லட்சாதிபதிகள் இனி கோடிஸ்வராவார்கள், கோடிஸ்வர தலைவர்கள் இனி மல்ட்டி கோடிஸ்வரராவார்கள் என்று கவலைக்கொள்கின்றனர்....

யூடியூப்பிலும் இது மறக்க முடியாத கருப்புதினம் என்றே பலரால் வர்ணிக்கப்பட்டுள்ளன!!! நாட்டுக்கு அழிவு ஆரம்பம் என்பதை போல் கருத்துக்கள் குவிகின்றான.

முகப்பை பார்த்து புத்தகத்தை எடைப் போடாதே என்பது போல் எழுதுகின்றனர்..