PDA

View Full Version : மறந்து விட்டேன் அவளை!எஸ்.எம். சுனைத் ஹஸனீ
17-08-2008, 10:39 AM
பெருக்கெடுத்தோடிய
கண்ணீரோடு வழிந்தோடி விட்டன
உன் நிதர்சனங்கள் நிறுத்தியிருந்த
நிஜமான காட்சிகளனைத்தும்

சுற்றியடித்த சுழற் காற்றில்
மிச்சங்களும் மீதிகளுமின்றி
அடியோடு பிடுங்கப்பட்டுப் போனது
ஒரு ஓரமாய் அமர்ந்து
உறுத்திய உன் நினைவுகள்.

நின்று நிதானித்து
காதை அறுத்தெடுக்கும்
எந்திர சப்தங்களில்
மே மாத குளங்களாய்
காய்ந்து கருகி
இல்லாமலே போய் விட்டன
ஓவ்வொரு குருதித் துளிகளில்
ராஜ்ஜியமிட்டுக் கொண்டிருந்த
உன் நுனி நாக்கு வார்த்தைகள்

ஏற்றம் கண்ட கணிணியிலும்
கிறுக்கத் தெரிந்த கவிதையிலும்
இழுத்து அணைத்த மன்றத்திலும்
கழுவித் துடைத்த கண்ணாடியாய்
உன உருவங்கள் உரியப்பட்டு
தெள்ளிய நீரோடையாய்
தெளிவானது மனம்

நந்தவனமெல்லாம்
சிறகடித்துச் சுற்றும்
வர்ண மிகு
வண்ணாத்திகளை விட்டு
கட்டு விரியனிடம்
காலைக் கொடுத்த
கவலை மட்டும்தான்
எஞ்சி நிற்கிறது இப்பொழுது.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

அகத்தியன்
17-08-2008, 10:45 AM
கடவுளே பாம்பின் கீழ் உறன்ங்கும் போது.. நாம் எல்லாம் எம்மாத்திரம் சுனைத்......

வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கு.

இளசு
17-08-2008, 11:02 AM
அன்று நிகழ்ந்தபோது அது சரி
இன்று நிகழும்போது இது சரி..

நாளை?

எதுவும் கடந்துபோகுமே தோழா..

எல்லாம் நன்மைக்கே வாவா!

அந்த வகை அனுபவமும் ஆசானன்றோ!
நாளை _ ? விரியன், வண்ணப்பூச்சி.. ???? அறிவார் யாரோ?

வாழ்த்துகள் ஜூனைத்!

ஷீ-நிசி
18-08-2008, 06:31 AM
ரொம்ப நன்றாக இருக்கிறது.... நண்பரே!

சில நிகழ்வுகள் நம்மை புடம் போடத்தானே!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
19-08-2008, 05:57 PM
மிக்க நன்றி தங்கள் பாராட்டுக்களுக்கு.

arun
19-08-2008, 06:32 PM
கவிதை சூப்பர் பாராட்டுக்கள்

ஆதி
19-08-2008, 06:57 PM
ஒரு அநுபவங்கள் கட்டுவிரியனையும் வண்ணத்துப் பூச்சியையும் விட்டு செல்லலாம்.. அதே அநுபவம் கட்டுவிரியனாய் வந்து வண்ணத்துப் பூச்சிகளை தின்று செல்வதும் உண்டு.. கற்கத்தானே அநுபவங்கள் காதலிலும் வாழ்விலும்..

வாழ்த்துக்கள் ஜூனைத்..

அக்னி
19-08-2008, 08:21 PM
தலை சுற்றிப் பறந்த
வண்ணத்துப் பூச்சிகளின்
அழகை,
ரசித்ததாலா.., கலைத்ததாலா...
தீண்டும் வரைக்கும்
தெரியவில்லை,
கட்டு விரியன்...

பாராட்டுக்கள் ஹஸனீ அவர்களே...

சுகந்தப்ரீதன்
21-08-2008, 01:02 PM
ரசிக்கும்போதும் ருசிக்கும்போதும் தெரிவதில்லை
கடிக்கும்போதுதான் தெரிகிறது சுற்றியது விரியனென்று..!!

வித்தியாசமான கோணம்... உங்கள் கவிதையை ஒரேமுறையில் படித்து என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.. இருமுறை மும்முறை படிக்கிறேன்... அத்தனை ஆழமான விசயங்களை சொல்லுக்குள் அடக்கி வைக்கிறீர்கள் நண்பரே..!! இப்போதுகூட சரியாக புரிந்துக்கொண்டேனா என்று தெரியவில்லை எனக்கு..!!

வாழ்த்துக்கள்... தொடருங்கள்..!!

அறிஞர்
21-08-2008, 02:19 PM
மே மாத குளங்களும்..................
கட்டு விரியனிடம் காலைக் கொடுத்ததும்.....

மறந்துவிட்டவளை பற்றிய வரிகள் அருமை... அன்பரே...

தீபா
21-08-2008, 03:08 PM
பின்றீங்க சார். சொல்வதற்கு வார்த்தையே ஞாபகம் இல்லை... தொடர்ந்து பின்னுங்க.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-08-2008, 05:42 PM
வித்தியாசமான கோணம்... உங்கள் கவிதையை ஒரேமுறையில் படித்து என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.. இருமுறை மும்முறை படிக்கிறேன்... அத்தனை ஆழமான விசயங்களை சொல்லுக்குள் அடக்கி வைக்கிறீர்கள் நண்பரே..!! இப்போதுகூட சரியாக புரிந்துக்கொண்டேனா என்று தெரியவில்லை எனக்கு..!!

வாழ்த்துக்கள்... தொடருங்கள்..!!

வெறும் வார்த்தைகளாய் சொல்லாமல் என் உள்ளத்திலிருந்து சொல்கிறேன் சுகந்த ப்ரீதன் அவர்களே. உங்கள் பின்னூட்டத்தால் மிகவும் அகம் மகிழ்ந்து போனேன். உங்களைப் போன்றோரின் தாக்கங்களால்தான் ஏதோ கொஞ்சம் எழுத கற்றுக் கொண்டு வருகிறேன். தங்கள் மற்றும் அறிஞரின் துணை இருக்க இன்னும் சிறப்பாக எழுத முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.மிக்க நன்றி.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-08-2008, 05:44 PM
பின்றீங்க சார். சொல்வதற்கு வார்த்தையே ஞாபகம் இல்லை... தொடர்ந்து பின்னுங்க.

இன்றும் அழகாய் பின்ன முயற்சி செய்கிறேன் தென்றல்.மிக்க நன்றி.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-08-2008, 05:46 PM
மே மாத குளங்களும்..................
கட்டு விரியனிடம் காலைக் கொடுத்ததும்.....

மறந்துவிட்டவளை பற்றிய வரிகள் அருமை... அன்பரே...

மிக்க நன்றி அறிஞர் ஐயா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-08-2008, 05:48 PM
தலை சுற்றிப் பறந்த
வண்ணத்துப் பூச்சிகளின்
அழகை,
ரசித்ததாலா.., கலைத்ததாலா...
தீண்டும் வரைக்கும்
தெரியவில்லை,
கட்டு விரியன்...

பாராட்டுக்கள் ஹஸனீ அவர்களே...

பாராட்டுக்களை விட உங்கள் பின்னூட்டக் கவிதை மிக்க அருமை.