PDA

View Full Version : சின்ன சின்ன கவிதைகள் 7



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
17-08-2008, 10:07 AM
சாய்த்து விட முடியாதெனினும்

மோதிப் பார்க்கத் தயங்குவதில்லை

காற்று.

ஷீ-நிசி
17-08-2008, 10:24 AM
சாய்த்து விட முடியாதெனினும்

மோதிப் பார்க்கத் தயங்குவதில்லை

காற்று.


சாய்த்து விட முடியாதெனினும்.....

எதை??

காற்று சாய்க்ககூடிய பொருட்கள் நிறைய உள்ளனவே!!!

இளசு
17-08-2008, 11:04 AM
நினைத்த எதையும் ஒரு முறை
முயன்றமட்டும் முட்டிப்பார்!

அது வீழ்ந்தால் வெற்றி..
நாம் வீழ்ந்தால் கற்றல்!

பாராட்டுகள் ஜூனைத்!

அமரன்
17-08-2008, 01:10 PM
இனி என்னத்தை சொல்ல..
பாராட்டைத் தவிர.

மோதலுக்கு காரணம்
காற்றுடன் நாமும்தான்.
-எதிர்காற்றுப்பயணம்

நாகரா
17-08-2008, 01:16 PM
சாய்த்து விட முடியாதெனினும்

மோதிப் பார்க்கத் தயங்குவதில்லை

காற்று.

சாய்ந்து விழும் சடலமாய்ப்
பொய்க்கும் மெய்யை
மெய்யாய் மெய்யாக்க
கவனமாய்ப் பார்
உயிர்ப்பை மோத
ஒரு போதும் தயங்காத
அமுதக் காற்றை

முடியுமென்று
எதையும் மோதிச் சாய்க்கும்
முரட்டுக் காற்று
"முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இனமை புகுத்தி விடும்"
என்ற திருக்குறள் போதிக்கும்
மௌன குருவோ!?

கவிதை அருமை ஹஸனீ.

ஓவியன்
18-08-2008, 11:47 AM
சாய்த்து விட முடியாதெனினும்
மோதிப் பார்க்கத் தயங்குவதில்லை
காற்று.

அடி மேல் அடியடித்தால் அம்மியும் நகருமாமே...!!

அப்படியிருக்க,
ஒரு தடவையில் சாய்க்க முடியாவிட்டாலும்
மோதத் தயங்கா மனம் இருக்கையில்
காற்றினாலும் சாய்க்க முடியாதவை உண்டோ...??

பாராட்டுக்கள் காற்றுக்கும் கவிதைக்கும்.....!! :)