PDA

View Full Version : விண்டோஸ் சகாப்தத்துக்கு சாவுமணி அடிக்கவுள்ள மிதோரி மென்பொருள் மைக்ரோசொப்ட்டால் உருவாக்கம்



புதியவன்
16-08-2008, 12:21 PM
http://www.tamilwin.net/newsimages/windows_logo.jpg
உலகளாவிய கணினித் துறையில் ஆட்சி செலுத்தி வரும் "விண்டோஸ்' மென்பொருள் பாவனைக்கு முடிவு கட்டும் வகையில், கணினி செயற்பாட்டு முறைமைக்கான "மிதோரி' எனும் புதிய மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.

இந்த புதிய "மிதோரி' கணினி செயற்பாட்டு முறைமையானது, மைக்ரோசொப்டின் பழைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து வேறுபட்டதாகும். இணையதளத்தை மையமாகக் கொண்ட இந்த மென்பொருளானது தனி நபர் கணினிகளுக்கு "விண்டோஸ்' மென்பொருளை இணைக்கப் பயன்படும் ஏனைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களில் தங்கியிராமல் சுயமாக செயற்படும் வல்லமை கொண்டதாக விளங்குகிறது.

இதன் பிரகாரம் நவீன கணினி உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு "மிதோரி' தீர்வாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. இம்மென்பொருளானது கையில் எடுத்துச் செல்லக் கூடிய "லப் டொப்' கணினிகளிலான செயற்பாட்டு குறைபாடுகள் மற்றும் தரவுகள், படங்கள், ஆவணங்கள் என்பனவற்றை பரிமாறிக் கொள்வதில் எதிர்கொள்ளும் தடைகள் என்பனவற்றுக்கு சிறந்த பரிகாரம் அளிப்பதாக அமையும் என எதிர்வு கூறப்படுகிறது.

மிக நிறை குறைந்த, காவிச் செல்லக் கூடிய கணினி செயற்பாட்டு முறைமையை உருவாக்கும் இலக்கில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள மிதோரியானது, மாறுபட்ட பல கணினி பிரயோகங்களை இலகுவாக கையாளக் கூடிய ஒன்றாக அமையும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவிக்கிறது. புதிய கணினிகளின் விற்பனையுடன் 80 சதவீதமான "விண்டோஸ்' விற்பனையும் இடம்பெற்று வருவதால், புதிதாக "மிதோரி' மென் பொருளை பாவனைக்கு கொண்டு வருவதில் பெரும் நடைமுறைச் சிக்கல் நிலவுவதாக குறிப்பிடப்படுகிறது.

நன்றி. லங்கா ஸ்ரீ

தகவல் : புதியவன்
www.thamizthai.blogspot.com (http://www.thamizthai.blogspot.com)

தங்கவேல்
16-08-2008, 01:50 PM
பி என்ற ஆபரேட்டிங் சிஸ்டம் ஒன்றினை நான் ஒரு முறை பயன்படுத்தினேன். வெகு அருமையாக இருந்தது. மிதோரி வரும்போது பார்க்கனும்.

selvamurali
16-08-2008, 02:59 PM
நல்ல தகவல்கள் நன்றி நண்பரே!

poornima
17-08-2008, 08:46 AM
மித்தோரி வருவது இருக்கட்டும்..

எக்ஸ்பி விற்பனையை நிறுத்தி விஸ்டா விற்பனையை பெருக்க இருப்பதாக வேறு அறிவித்திருக்கிறதே மைக்ரோசாஃப்ட் ..

இனி எல்லாம் விஸ்டா தானாம். ஏற்கனவே விஸ்டாவின் லட்சணம் தாங்க முடியவில்லை. எந்த பயன்பாட்டு நிரல்முறையை பயன்படுத்தினாலும் ஒரு நொட்டை ஒரு நொள்ளை சொல்லும் விஸ்டா.

எல்லாம் வியாபாரத் தந்திரம் தான்.. சாவு மணி என்பது மைக்ரோசாஃப்டுக்கு மட்டும் தனக்குத் தானே அடித்துக் கொள்வது

ஷீ-நிசி
17-08-2008, 08:58 AM
மிதோரி (mithori) என்று கூகிளில் தேடினால் ஒரு தகவலும் வரவில்லையே....


மிதோரி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் இங்கே பதியுங்கள் நண்பர்களே!

praveen
17-08-2008, 10:18 AM
புதுத்தகவல் + நமபவும் முடியவில்லை ஏனென்றால் விண்டோஸ் அடுத்த பதிப்பாக வர இருப்பது 2010ல் கீழே உள்ள சுட்டியில் இருக்கும் விண்டோஸ் 7 தான்.

http://en.wikipedia.org/wiki/Windows_7

leomohan
17-08-2008, 11:58 AM
மிதோரி (mithori) என்று கூகிளில் தேடினால் ஒரு தகவலும் வரவில்லையே....


மிதோரி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் இங்கே பதியுங்கள் நண்பர்களே!

http://en.wikipedia.org/wiki/Midori_(operating_system)

praveen
18-08-2008, 08:48 AM
http://en.wikipedia.org/wiki/Midori_(operating_system)

மேலே நீங்கள் காட்டிய சுட்டியை சொடுக்கினால் பிழையான இடத்திற்கு செல்கிறது, நான் சரிப்படுத்திய சுட்டி கீழே.

http://en.wikipedia.org/wiki/Midori_(operating_system)

அதாவது ஒரு பிராக்கெட் இறுதியில் (சுட்டியில்) விட்டுப்போனது.

பின்னர் பதிந்தது

இது சம்பந்தமாக இனையத்தில் தேடியபோது கிடைத்த, பெரிய காமடி என்னவென்றால் ஒரு லினக்ஸ் பேக் ஒன்று இந்த பெயரில் முன்னரே இருக்கிறது என்பதே :).

http://sourceforge.net/projects/midori/

அய்யா
18-08-2008, 10:10 AM
லினக்ஸ் மிகவும் நன்றாக உள்ளது.கணணிவேகமாகவும் இயங்குகிறது.