PDA

View Full Version : தொடர் கதை :தழுவிய சூரியன், நழுவிய பூமி - செயற்கை உலகம் உதயம்



selvamurali
16-08-2008, 11:24 AM
அன்பு நண்பர்களே!

அறிவியல் கலந்த ஓர் கதையை ஆசைப்பட்டு வேறொரு தளத்தில் இதே கதையை எழுதி வருகிறேன.
உங்களின் அனுமதியோடு என் கதையை இங்கேயும் பதிய ஆசைப்படுகிறேன். அனுமதி கிடைக்குமா?

ஆவலுடன்
செல்வமுரளி

அமரன்
16-08-2008, 11:42 AM
நீங்கள் இப்படிக் கேட்பதுதான் வேதனை தருகிறது. உங்கள் குழந்தையை எங்கே பெற்றால் என்ன... இங்கே வளர்ப்பதில் தவறில்லை. ஆர்வத்துடன் காத்திருக்கின்றோம் அதற்காகவும் இங்கே பிரசவிக்கப்படும் அடுத்தடுத்த உங்கள் குழந்தைகளுக்காகவும்.

selvamurali
16-08-2008, 02:41 PM
நன்றி நண்பரே!

selvamurali
16-08-2008, 02:51 PM
எத்தனையோ விஞ்ஞான கதைகளை எழுதி சமீபத்தில் காலமான திரு.சுஜாதா அவர்களை முன்மாதிரியாக கொண்டு

தழுவிய சூரியன், நழுவிய பூமி

என்ற கதையை எழுத ஆரம்பிக்கிறேன்........ உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களோடு

கதையின் கரு : பல்லாயிரம் வருடங்களுக்கு ஒரு முறை சூரியனின் உட்புறத்தில் நிகழும் அணு வெடிப்புகளின் மோதல்களால் சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் நமது பூமியை பாதிக்கும்.ஆனால் இதில் குறிப்பிட்ட அம்சம் என்னவெனில் மனிதர்களை தாக்காமல் சென்ற நூற்றாண்டின் அரிய பொக்கிசமான கம்ப்யூட்டர்களை செயலிக்க வைக்கும் தன்மையுடவை. இந்த கம்ப்யூட்டர்களின் செயலிழப்பால் நாம் மீண்டும் பழைய கற்காலத்திற்கே செல்லவேண்டிய கட்டாயமும் உருவாகும். இந்த கதிர்கள் பூமியை வந்தடைய 30 நாட்கள் உள்ள நிலையில் அந்த கதிர்களின் வீச்சுக்களிலிருந்து நமது தொழில்நுட்பத்தை நாம் எவ்வாறு காப்பற்றப்போகிறோம் என்பதே இந்த கதை!

உங்களின் ஆசிர்வாதங்களோடு இந்த கதையை எழுதுகிறேன்....

selvamurali
16-08-2008, 02:53 PM
இந்தியாவின் நில அளவை கட்டுப்பாட்டு மையம்

இந்தியாவின் நில அளவைக் கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்பக் குழு சற்றே பரப்பரப்புடன் இருந்தது. அந்த குழுவின் நடுவே அதன் தலைவர் மிஸ்டர் ஏ ஆராய்ந்து ஆராய்ந்தே முடிக்கொட்டிப்போன தனது தலையை நெருடிக்கொண்டே ஒரு வித கலக்கமான பார்வையுடன் அவர் மேஜையின் மேலே இருந்த செயற்கை கோள்கள் படங்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

ஏனெனில் இந்தியா அனுப்பியிருந்த சமீபத்திய இன்சாட் 2008 செயற்கைக் கோள் பூமியை ஆராய்ந்து அனுப்பிய புகைப்படங்களையும், ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு அனுப்பிய இன்சாட் 2007 செயற்கைக் கோள் புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சமீபத்திய நில அளவுகள் சற்றே அதிகரித்தது போல் தெரிந்தது. இதுவரை இந்தியா முழுவதும் கணக்கெடுத்து வந்துள்ள நில அளவைகளைக் கணிப்பொறியில் ஆராய்ந்த போது இந்தியாவின் காஷ்மீர், டெல்லி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் அளவுகள் மட்டும் சற்றே அதிகரித்து இருந்ததுதான் மிஸ்டர் ஏ - வின் கலக்கம் .

ஒரு வேளை தற்போது அனுப்பிய செயற்கைக் கோளின் அளவுகளில் ஏதேனும் ப்ரச்னையாக இருக்குமோ?

எப்படியிருந்தாலும் தனது மேலிடத்திற்கு இந்தத் தகவலை தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த மிஸ்டர் ஏ உடனடியாக நில அளவை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு தகவலைத் துறை சார்ந்த அமைச்சரிடம் தெரிவித்தார்.

இதைக்கேட்ட அமைச்சர் கம்ப்யூட்டர் கோளாறாருக்கும் நல்லா பாருங்க, என்று தனது பான்பராக் எச்சிலை துப்பியவாறே சொல்லவும் போனை வேகமாக வைத்தார் மிஸ்டர் ஏ.

"ஒரு தடவைக்கு நாலு தடவை நல்லா அலசி ஆராய்ந்து பார்த்தாச்சு , திரும்பத் திரும்ப பாரு சொன்னா என்னத்த பாக்க " என்றவாறே அந்த பைல்களை மேஜையில் வைத்தார்.

அதிதீவிரமான யோசனைக்கு பிறகு

திடீரென்று தனது குழுவினை அழைத்து உரையாற்றிய மிஸ்டர் ஏ, "டியர் மெம்பர்ஸ், இந்த புகைப்படங்களைச் சற்றே ஆராய்ந்து நமது கணினியில் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டு பார்த்துதான் இந்த முடிவுக்கு வந்துள்ளோம் என்றாலும் நம்மில் எங்காவது சிறு தவறுகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. இதையேன் நான் சொல்கிறேன் என்றால் ஒரு வருடத்தில் பூமியின் மாற்றங்கள் நிகழ்வது இயற்கை என்றாலும் அவை ஒரு சென்டிமீட்டர் அல்லது அதிகபட்சம் 100 மீட்டர் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இப்படி ஒரேடியாக 10 கி.மீட்டர் தூரம் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.
எனவே நாம் நம் தீர்வுகளின் முடிவுகளை மீண்டும் செயலாக்கத்திற்கு உட்படுத்த வேண்டும். எனவே நாம் ஏற்கனவே செய்த வேலையை திரும்ப செய்கிறோம். ஆனால் சிலவிதமான மாறுதல்களோடு செய்யப்போகிறோம்.

இந்த ஒப்பீட்டு மென்பொருளை உருவாக்கிய குழுவுடன் இந்த மென்பொருளை பயன்படுத்திய அளவைகளை ஒப்பிட்டு பார்த்த குழுவினர் வேலை செய்யலாம். ஏனெனில் சில இடங்களில் நாமும் அல்லது அவர்களும் எங்காவது சிறு பிழைகள் செய்ய வாய்ப்புண்டு.எனவே இந்த குழுவில் வேலைபார்க்கும் அனைவரும் அந்த குழுவினருக்காக மென்பொருட்களை உருவாக்கியவர்களுடன் இணைந்து வேலை செய்யப் வேண்டும். எங்காவது சிறிய சந்தேகம் இருந்தாலும் உடனடியாக அதை கணினியில் பதிவு செய்யுங்கள்.

இந்த தகவல்கள் அனைத்தும் மறு சோதனை செய்தாக வேண்டும். எனவே இப்போது இருக்கும் கணினியின் வேகங்கள் போறாது. எனவே அதிவேகமாக இயங்க சமீபத்தில் உருவாக்கப்பட்ட ரன்னர் கணினியில் நாம் நம் முடிவுகளை அலசிபார்க்க போகிறோம். ஏனெனில் இதன் முடிவுகள் நம்மின் தவறாய் இருந்தால் நமக்கு நல்லது. அல்லது முடிவுகள் நமக்கு நேர்மாறாய் இருந்தால் விளைவுகளை நம்மால் கணிக்க இயலாது. எனவே முடிவுகள் நமது தவறாகவே இருக்கும் என்ற நம்புவோம். இன்றிலிருந்து 24 மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி முடிவுகளை நீங்கள் சரிபார்த்தாக வேண்டும். உங்கள் வேலைகளை நீங்கள் ஆரம்பிக்கலாம்,
திரும்பவும் சொல்கிறேன் உங்களின் ஒவ்வொரு சந்தேகத்திற்கும் மதிப்புகள் அதிகம் என்பதால் நீங்கள் எந்த சந்தேகமாக இருந்தாலும் கணினியில் பதியுங்கள்.

உங்கள் வேலைகளை ஆரம்பிக்கலாம் " என்று சொல்லிவிட்டு தன் இருக்கையில் வந்தமர்ந்தார் மிஸ்டர் ஏ.

ஒரு குக்கிராமத்தையே உள்ளடக்கியது போல் இருந்தது ரன்னர் சூப்பர் கணினி.
இதன் மூலம் லட்சத்து லட்சமாயிரம் கோடிக் கணக்குகளைச் செய்யலாம் ஒரு வினாடியில்.

இதே நேரத்தில்
அமெரிக்கா பசிபிக் பெருங்கடலின் அடியில் ஒரு புதிய அண்டவெளியை உருவாக்கும் பரிசோதனையின் முடிவில் இருந்தது.
அண்டெவளியின் கருமையான இருளில் 9 கிரகங்களும் இப்போதிருக்கும் சக்தியைவிட பத்தாயிரம் மடங்கு குறைவான சக்தியை கொண்டு உருவாக்குமாறு அமைக்கப்பட்டது.

பரிசோதனையில் உச்சகட்டமாக ஹைட்ரஜனையும், ஹீலியத்தையும், காஷ்மீக், ஆல்பாக் கதிர்களை ஒன்றுக்கொன்று வினாடிக்கு ஆயிரம் மடங்கு வேகத்தில் மோதவிடும்முயற்சிகள் நடைபெற்றது.
இந்த மோதலில் முடிவுகளை கண்டறிய ரன்னர் சூப்பர் கம்ப்யூட்டர் தனது செயற்கை நியூரான்களை உசுப்பிக்கொண்டு காத்திருந்தது.

மதி
16-08-2008, 03:26 PM
அழகான கதை ஆச்சர்யங்களுடன் ஆரம்பித்துள்ளது...
சின்ன சந்தேகம்..ரன்னர் சூப்பர் கம்ப்யூட்டர் எங்கு அமைந்துள்ளது? ஏனெனில் மிஸ்டர் ஏவும் அதை பயன்படுத்த சொல்கிறார். ஆனால் பசிபிக் பெருங்கடல் அடியில் இருப்பதாகவும் இருக்கிறது. சின்ன குழப்பம். அதான்.

சீக்கிரமே அடுத்த பாகங்களையும் கொடுங்கள்..

சூரியன்
16-08-2008, 03:40 PM
நல்ல தொடக்கம் நண்பர் செல்வமுரளி விரைவில் தொடர்ச்சியை தாருங்கள்.

அமரன்
16-08-2008, 03:45 PM
அறிவியலை தொட்டு துல(ங்)க்கும் முதல் முயற்சிக்கு முதலில் என் பாராட்டுகள்.. தொட்டதெல்லாம் துலங்க வாழ்த்துகள்.

தொடக்கமே டாப் ஹியர். பொதுவாக இப்படி இருந்தால் வண்டிக்கு ஆகாதாம். விரைவில் பழுதடைந்து விடுமாம். ஆனால் சிறந்த சிந்தனை நுட்பமும் எழுத்து உதிரிப்பாகங்களும் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதால் பழுது குறையும் என்பது எனது கணிப்பு.

அமைச்சரின் மெத்தனப் போக்கைப் படித்த கணத்தில் அறிவியல் துறை அமைச்சராக ஒரு அரைவேக்காட்டை நியமிப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. நம்ம அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற அசரீரிப் பதில் அதை அடக்கியது.

இந்த அமெரிக்கா எப்பவும் இப்படித்தான் என்ற வகையில் சம்பவங்களை கோர்த்துப் பார்க்கின்றேன்.

தொடருங்கள் முரளி..

பூமியின் நிலப்பரப்பு குறைந்து வருகிறது என்ற கருத்தை மறுதலைத்து பூமியின் நிலப்பரப்பு கூடியுள்ளது என்று ஏற்படுத்திய அதிர்ச்சி ஆர்வம் சற்றும் குறையாமல் காத்திருக்கிறேன்.

selvamurali
16-08-2008, 03:58 PM
அழகான கதை ஆச்சர்யங்களுடன் ஆரம்பித்துள்ளது...
சின்ன சந்தேகம்..ரன்னர் சூப்பர் கம்ப்யூட்டர் எங்கு அமைந்துள்ளது? ஏனெனில் மிஸ்டர் ஏவும் அதை பயன்படுத்த சொல்கிறார். ஆனால் பசிபிக் பெருங்கடல் அடியில் இருப்பதாகவும் இருக்கிறது. சின்ன குழப்பம். அதான்.

சீக்கிரமே அடுத்த பாகங்களையும் கொடுங்கள்..

நன்றி நண்பரே!

ரன்னர் சூப்பர் கம்ப்யூட்டர் சிறப்பம்சங்கள் வரும் பாகங்களில் தெரியும். அனைத்தையும் முன்னமே சொல்லிவிட்டால் சிறப்பம்சம் தெரியாதல்லவா?

ஆனால் உங்களின் பதில் பதிவுகள் என்னை மேலும் சிந்திக்கதூண்டிவருகின்றன என்பதே உண்மை :)

selvamurali
16-08-2008, 03:59 PM
நல்ல தொடக்கம் நண்பர் செல்வமுரளி விரைவில் தொடர்ச்சியை தாருங்கள்.

நன்றி நண்பரே!

selvamurali
16-08-2008, 04:01 PM
அறிவியலை தொட்டு துல(ங்)க்கும் முதல் முயற்சிக்கு முதலில் என் பாராட்டுகள்.. தொட்டதெல்லாம் துலங்க வாழ்த்துகள்.
தொடக்கமே டாப் ஹியர். பொதுவாக இப்படி இருந்தால் வண்டிக்கு ஆகாதாம். விரைவில் பழுதடைந்து விடுமாம். ஆனால் சிறந்த சிந்தனை நுட்பமும் எழுத்து உதிரிப்பாகங்களும் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதால் பழுது குறையும் என்பது எனது கணிப்பு.
அமைச்சரின் மெத்தனப் போக்கைப் படித்த கணத்தில் அறிவியல் துறை அமைச்சராக ஒரு அரைவேக்காட்டை நியமிப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. நம்ம அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற அசரீரிப் பதில் அதை அடக்கியது.
இந்த அமெரிக்கா எப்பவும் இப்படித்தான் என்ற வகையில் சம்பவங்களை கோர்த்துப் பார்க்கின்றேன்.
தொடருங்கள் முரளி..
பூமியின் நிலப்பரப்பு குறைந்து வருகிறது என்ற கருத்தை மறுதலைத்து பூமியின் நிலப்பரப்பு கூடியுள்ளது என்று ஏற்படுத்திய அதிர்ச்சி ஆர்வம் சற்றும் குறையாமல் காத்திருக்கிறேன்.

நன்றி அமரன் அவர்களே

அறிஞர்
16-08-2008, 04:53 PM
அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகள் என்றாலே தனி ஆர்வம் தான். தற்காலிக தொழில் நுட்பங்களை கதைகளில் புதுத்தி.. பலருக்கு புரிய வைப்பது அருமையான பணி...

கலக்குங்க. முரளி...

selvamurali
16-08-2008, 05:11 PM
நன்றி நண்பரே!

இளசு
16-08-2008, 05:44 PM
உங்கள் அருமையான முயற்சிக்கு வாழ்த்துகள் செல்வமுரளி அவர்களே!

நண்பர் மதுரைவீரன் விஞ்ஞானத் தொடர்கதையும் இப்போது மன்றத்தில் வளர்ந்துவருகிறது. அவரின் ஆதர்சமும் சுஜாதாவே!

நிலைத்த அறிவியல் உண்மைகளை, கற்பனை + சுவை கலந்து
படிக்கத் தூண்டும் நடையில் கொடுக்கும் உங்கள் திறமைக்குப் பாராட்டுகள்.


நல்ல அறிவியல் கதைகள் நம் தமிழில் செழிக்க வேண்டும் என விரும்பிய
நம் மனமிருக்கும் சுஜாதா அவர்களுக்கு இதுவே நம் நினைவுப்பரிசு!

தொடருங்கள்.

செல்வா
16-08-2008, 10:07 PM
கவிதையாய் ஒரு தலைப்பு கதை கூறுவதோ அறிவியல் செய்திகள்.
வாழ்த்துக்கள் செல்வமுரளி.... அவர்களே.

மதி கேட்ட சந்தேகம் எனக்கும் தோன்றியது... எனினும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் தெளிவாகும் எனக் காத்திருக்கிறோம்.

அமரன்
16-08-2008, 10:36 PM
எனக்குப் புரியவில்லை செல்வா.. நீங்களும் மதியும் என்ன கேட்கின்றீர்கள்.

செல்வா
17-08-2008, 12:12 AM
இந்த தகவல்கள் அனைத்தும் மறு சோதனை செய்தாக வேண்டும். எனவே இப்போது இருக்கும் கணினியின் வேகங்கள் போறாது. எனவே அதிவேகமாக இயங்க சமீபத்தில் உருவாக்கப்பட்ட ரன்னர் கணினியில் நாம் நம் முடிவுகளை அலசிபார்க்க போகிறோம்.

உங்கள் வேலைகளை ஆரம்பிக்கலாம் " என்று சொல்லிவிட்டு தன் இருக்கையில் வந்தமர்ந்தார் மிஸ்டர் ஏ.

ஒரு குக்கிராமத்தையே உள்ளடக்கியது போல் இருந்தது ரன்னர் சூப்பர் கணினி.
இதன் மூலம் லட்சத்து லட்சமாயிரம் கோடிக் கணக்குகளைச் செய்யலாம் ஒரு வினாடியில்.

இதே நேரத்தில்
அமெரிக்கா பசிபிக் பெருங்கடலின் அடியில் ஒரு புதிய அண்டவெளியை உருவாக்கும் பரிசோதனையின் முடிவில் இருந்தது.
அண்டெவளியின் கருமையான இருளில் 9 கிரகங்களும் இப்போதிருக்கும் சக்தியைவிட பத்தாயிரம் மடங்கு குறைவான சக்தியை கொண்டு உருவாக்குமாறு அமைக்கப்பட்டது.

பரிசோதனையில் உச்சகட்டமாக ஹைட்ரஜனையும், ஹீலியத்தையும், காஷ்மீக், ஆல்பாக் கதிர்களை ஒன்றுக்கொன்று வினாடிக்கு ஆயிரம் மடங்கு வேகத்தில் மோதவிடும்முயற்சிகள் நடைபெற்றது.
இந்த மோதலில் முடிவுகளை கண்டறிய ரன்னர் சூப்பர் கம்ப்யூட்டர் தனது செயற்கை நியூரான்களை உசுப்பிக்கொண்டு காத்திருந்தது.


முதலாவது இந்தியாவில்.... இரண்டாவது பசிபிக் மகாசமுத்திரத்தில். இரண்டு இடங்களிலும் இருக்கும் கணிணி ஒன்றா? வேறா? குழப்பம் மனதில்... அதைத் தான் கேட்டேன்.

அமரன்
17-08-2008, 09:36 AM
அடப்பாவி.. இம்புட்டு நல்லவனா நீ... வெவ்வேறு இடம்.. வெவேறு கணினி. ஹைட்ரஜனையும், ஹீலியத்தையும், காஷ்மீக், ஆல்பாக் அண்டவாயுக்கள் இவை.. சரியா முரளி.

செல்வா
17-08-2008, 09:48 AM
அடப்பாவி.. இம்புட்டு நல்லவனா நீ... வெவ்வேறு இடம்.. வெவேறு கணினி. ஹைட்ரஜனையும், ஹீலியத்தையும், காஷ்மீக், ஆல்பாக் அண்டவாயுக்கள் இவை.. சரியா முரளி.

உங்களால் கூட திட்டமாய்ச் சொல்ல முடியவில்லையே?
சரியா முரளி என அவரிடம் கேட்கிறீர்கள் தானே ?
அப்படி என்றால் உங்கள் மனதிலும் குழப்பம் தானே..?
அப்படி என்றால் நான் கேட்டதும் சரிதானே ....?
குருவே.. :D

ஷீ-நிசி
17-08-2008, 09:53 AM
கலக்கு பா முரளி!

விகடன்
17-08-2008, 10:28 AM
கதைகள்ள் அனைத்துமே ஏதோ ஒருவகையில் எங்களுக்கு ஒவ்வோர் வகையான பாடத்தை புகட்டுவன. ஆனால, தாங்கள் எழுதும் ஆக்கமோ முழுக்க முழுக்க அறிவியிலை மையமாக வைத்து நகருவது போலத் தென்படுகிறது.
அட்டகாசமான ஆரம்பம். வாழ்த்துக்கள் முரளி

அடுத்தடுத்த பாகங்களையும் வாசகர்கள் படிக்க நேரமின்றி திக்குத்திணறும் வகையில் தரவேண்டும். :D

சிவா.ஜி
17-08-2008, 11:22 AM
அருமையான ஆரம்பம். கலக்கலாகத் தொடங்கியிருக்கிறீர்கள் செல்வமுரளி. சுவாரசியமாக இருக்கப்போவதற்கான தன்மை தெரிகிறது. தொடருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம். வாழ்த்துகள்.

selvamurali
17-08-2008, 12:42 PM
உங்களால் கூட திட்டமாய்ச் சொல்ல முடியவில்லையே?
சரியா முரளி என அவரிடம் கேட்கிறீர்கள் தானே ?
அப்படி என்றால் உங்கள் மனதிலும் குழப்பம் தானே..?
அப்படி என்றால் நான் கேட்டதும் சரிதானே ....?
குருவே.. :D

ஆக மொத்தம் என்னை வைச்சு காமெடி பண்ண தயாராயிட்டிங்க...ம்ம்
நடத்துங்க நடத்துங்க.......

selvamurali
17-08-2008, 12:47 PM
அடப்பாவி.. இம்புட்டு நல்லவனா நீ... வெவ்வேறு இடம்.. வெவேறு கணினி. ஹைட்ரஜனையும், ஹீலியத்தையும், காஷ்மீக், ஆல்பாக் அண்டவாயுக்கள் இவை.. சரியா முரளி.


இதோ இந்த இணைப்பில் சூரியனைப் பற்றியும், அதனுள் இருக்கும் வாயுக்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இணையத்தில் கிடைத்த தகவல்களையும், எனது கருத்துக்களையும் அடிப்படையாக வைத்தே எழுதி வருகிறேன்..... நண்பர்களே!

http://en.wikipedia.org/wiki/Sun (http://en.wikipedia.org/wiki/Sun)

அமரன்
17-08-2008, 12:48 PM
ஆக மொத்தம் என்னை வைச்சு காமெடி பண்ண தயாராயிட்டிங்க...ம்ம்
நடத்துங்க நடத்துங்க.......
காமடி இல்லை முரளி.
புதிய பாதையில் நீங்கள் செல்வது எங்களுக்கும் பலவற்றை பெற்றுத் தருகிறது. அதனைப் பற்றிய ஒரு போசாக்கு மிக்க அலசல்.

அண்டத்தில் இருக்கும் வாயுக்களான என்ற இடைச்சொருகலை கதையில் சேர்த்தால் புரிதலில் தெளிவு கிடைக்கும் அல்லவா.

மீண்டும் சொல்கிறேன்..
ஆழ்ந்து படித்து கருத்திட்டு ஊக்கம் கொடுக்கும் எண்ணமே எமக்கு.. மாறாக ஊக்கம் கெடுக்கு எண்ணமல்ல..

selvamurali
17-08-2008, 12:55 PM
காமடி இல்லை முரளி.
புதிய பாதையில் நீங்கள் செல்வது எங்களுக்கும் பலவற்றை பெற்றுத் தருகிறது. அதனைப் பற்றிய ஒரு போசாக்கு மிக்க அலசல்.

அண்டத்தில் இருக்கும் வாயுக்களான என்ற இடைச்சொருகலை கதையில் சேர்த்தால் புரிதலில் தெளிவு கிடைக்கும் அல்லவா.

மீண்டும் சொல்கிறேன்..
ஆழ்ந்து படித்து கருத்திட்டு ஊக்கம் கொடுக்கும் எண்ணமே எமக்கு.. மாறாக ஊக்கம் கெடுக்கு எண்ணமல்ல..

அமரன் அவர்களே,
இங்கே பதிவிடப்படும் அனைத்து பதிவுகளும் என்னை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும்.

விளக்கியமைக்கு நன்றி! :)

அமரன்
17-08-2008, 01:02 PM
அமரன் அவர்களே,
இங்கே பதிவிடப்படும் அனைத்து பதிவுகளும் என்னை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும்.

விளக்கியமைக்கு நன்றி! :)

அவர்களே ஐ தள்ளி வையுங்கள்.
அமரனுடன் அருகில் வாருங்கள்-விரைவில்
அடுத்த பாகத்தை தாருங்கள்..

selvamurali
20-08-2008, 08:33 AM
புதிய அண்டவெளி!

அமெரிக்கா தனது அறிவியல் ஆராய்ச்சிகளின் மேற்கட்டமாக ஓர் புதிய அண்டவெளியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் அண்டவெளி உருவான விஷயங்களை அறிந்துகொள்ள முயற்சித்தது. இதற்கு ஏற்படும் செலவு மற்றும் மனித வளத்திற்காக தனது வாண்வெளி ஆராய்ச்சிகளை சற்றே ஒத்திவைத்து இந்த முயற்சிகளை நடத்தி வந்தது. இதற்காக தனது வாழ்நாளை வாண்வெளி ஆராய்ச்சியிக்கே செலவிட்டுக்கொண்டிருந்த விஞ்ஞானி மிஸ்டர் பி, மற்றும் மிஸ்டர் சி ஆகியோரை இந்த திட்டத்தின் தலைவர்களாக அமர்த்தியிருந்தது. அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி துறை.

கடலின் மேற்பகுதியில் ஓர் பெரிய கண்ணாடி இழையை உருவாக்கி அதன் வழியே சூரிய கதிர்களை ஆங்காங்கே எதிரொளிக்க வைத்து பசிபிக் பெருங்கடலின் மையப்பகுதியில் 10000 ஏக்கர் மைல் பரப்பளவில் அமைந்துள்ள அந்த புதிய அண்டெவளி க்குள் சூரிய ஓளியை கொண்டு வந்திருந்தனர். சுற்றிலும் ஏழு அடுக்கு கட்டங்களாக பாதுகாப்பு சுவர்கள் உருவாக்கப்பட்டிருந்தன. தண்ணிரில் உள்ளேவராதபடியும், மிதக்கும்படியும், சூரிய ஒளி புகாதபடியும் உருவாக்கப்படிருந்தது அந்த அண்டவெளி

அண்டெவளியின் கருமையான இருளில் சிறு புள்ளிகளாக இருக்கும் 9 கிரகங்களும் இப்போதிருக்கும் சக்தியைவிட பத்தாயிரம் மடங்கு குறைவான சக்தியை கொண்டு உருவாக்குமாறு அமைக்கப்பட்டது.

பரிசோதனையில் உச்சகட்டமாக ஹைட்ரஜனையும், ஹீலியத்தையும், காஷ்மீக், ஆல்பாக் கதிர்களை ஒன்றுக்கொன்று வினாடிக்கு ஆயிரம் மடங்கு வேகத்தில் மோதவிடும்முயற்சிகள் நடைபெற்றது.

முதலில் குப்பைக்களிலிருந்து பெறப்பட்ட தூசுக்கள் அனைத்தும் உள்ளே உள்ள தானியங்கி மெஷின்கள் மூலம் கொண்டுவரப்பட்டு
அண்டெவளியின் வெற்றிடங்களில் ஆங்காங்கே நிரப்பப்பட்டன.ஏனெனில்
தூசுக்கள் சிறிது சிறியதாக ஒன்றிணைந்துதான் கிரகங்கள் உருவாகின என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்தது.


பின் அந்த பெரிய வட்ட வடிவகாந்தம் மெதுவாக அந்த மையத்தின் நடுவில் இறக்கப்பட்டது. பின் ஒவ்வொரு கிரகங்களும் அதன் இடத்தில் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு கிரகமும் த்திற்கும் அதின் உருவாக்க அமைப்பிருலிருந்த தனிமங்கள் கலவைகள் சேர்க்கப்பட்ட இரும்பால் அந்தந்த கிரகங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஏனெனில்

இரும்பு மட்டுமே ஒரு குறிப்பிட்ட அளவி வெப்பநிலைக்கு மேல் உருகி ஓர் தீப்பிழம்பாக தெரியும். அதே போல் அவைகள் உருகிய பின் ஓர் நிலைக்கு வரும். அதே போலத்தான் சூரியனிலிருந்து பிரிந்த கிரகங்கள் படிப்படியாக குளிர்ந்து இருகி இப்போதிருக்கும் நிலையை அடைந்திருக்கும் என்று அந்த ஆராய்ச்சி குழு நினைத்தனர்.

அதேபோல் அதற்கேற்ற உறுதியாக இருக்காது என்பதால் இரும்பை இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். அதேபோல் காந்தம் இரும்பை ஈர்க்கும் என்பதால் அந்த வட்டவடிவ காந்தத்தை மையயப் படுத்தி அதை இந்த சூரியன் மட்டும் சுற்றிவரும்படியும் மற்ற கிரகங்கள் சூரியனை சுற்றி வரும்படியும் உருவாக்கினர்.

அதேபோல் இந்தகிரகங்களின் தன்மையை கண்டுபிடிக்க ப்ரத்யோகமாக அமெரிக்கா அனுப்பியிருந்த விண்கலங்கள் ஒவ்வொரு கிரகங்களிலிருந்தும் அதிலிருந்து தனிமங்களை கண்டுபிடித்து அவற்றின் கலவைகளை அங்கிருந்தபடி வாண்வெளியில் மிதந்து கொண்டிருந்த வாண்வெளி ஆராய்ச்சி நிலையம் பெற்று பூமியில் உள்ள ஆராய்ச்சி பிரிவுக்கு அனுப்பியிருந்தன.
அதிலிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் இரும்பை கொண்டு அந்தந்த தனிமங்களை கலந்து இந்த கிரகங்களை உருவாக்கினர்.

ஆராய்ச்சியின் இறுதிகட்டமாக ஒவ்வொரு மாதிரி கிரகங்களில் உள்ள சென்சார்கள் சரியாக இயங்குகின்றவா என்று சோதனை செய்யப்பட்டன. அடுத்து அவைகள் ரன்னர் சூப்பர் கணினியுடன் ஒன்றிணைந்து அதனிடம் இருந்து தகவல்களை சரியாக பெறுகின்றவா என்று சோதித்த வண்ணம் இருந்தனர்.

இவையனைத்தையும் செய்ய உள்ள இந்த சூப்பர் ரன்னர் கணினியானது விண்வெளி ஆராய்ச்சியில் இதுவரை கண்டறிந்து அனைத்து தகவல்களையும், அனைத்து நாடுகளிலிருந்து பெற்று வைத்திருந்தது. அதோடு அதன் ஒரு பிரிவு ஒவ்வொரு நாட்டில் நடைபெறும் ஆராய்ச்சிகளின் முடிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொண்டு உடனே முடிவுகளை மேம்படுத்தும் திறைனை பெற்றிருந்தது. எனவே ஆராய்ச்சியின் ஆரம்பம் வரை எவ்வளவு தகவல்கள் வருகிறதோ அவ்வளவு தகவல்களையும் அது கிரகித்து கடைசி நேரத்தில் எல்லா கிரகங்களை தள்ளியோ அல்லது சற்று தாழ்த்தியோ வைக்கும் வசதியை பெற்றிருந்தது.

இந்த மோதலில் முடிவுகளை கண்டறிய ரன்னர் சூப்பர் கம்ப்யூட்டர் தனது செயற்கை நியூரான்களை உசுப்பிக்கொண்டு காத்திருக்க ரன்னர் கணினி தனது வேலையை ஆரம்பித்தது. அதன் செயற்கத நியூரான்களில் தான் முதலாக செய்ய வேண்டிய வேலையை தனது சர்க்யூட்களில் மின்சாரத்தை பாய்த்து தேடி அந்த ப்ரோகிராமில் உள்ள முதல் கட்டளைப்படி முதன் முதலில் அந்த மாதிரி அண்டெவளிக்கு வரும் சூரிய ஓளியை தந்து கொண்டிருந்த கண்ணாடி இழைக்கு தந்துகொண்டிருந்த மின்சாரத்தை நிறுத்தியது.....

மதி
20-08-2008, 08:45 AM
ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பாடா... கண்ணைக் கட்டுது.
அழகான கற்பனையில் அறிவியலைக் கலந்து கதையாய் கொண்டு செல்கிறீர்கள். உங்களின் கற்பனை பிரமிக்க வைக்கிறது.

மேலும் தொடருங்கள்

selvamurali
20-08-2008, 05:31 PM
நன்றி நண்பரே!

selvamurali
23-08-2008, 01:04 PM
மருத்துவர் சித்தராக முயற்சி!

இரவு நேர குளிரின் கடுமையின் கொடுமையால் இறுக்கமாக போர்வைகளை போர்த்திக்கொண்டு ஆங்காங்க தெரிந்த ராணுவ தலைகள் அது ஓர் இராணுவ மையம் என்பதை தெரிவித்தது. அந்த அடர்ந்த இரவிலும் அவர்கள் பரபரப்பாக இயங்கியது ஏதோ விபரீதம் நிகழ்ந்துள்ளது என்பதை காட்டியது.
ஒருவழியாக பரபரப்புக்கு விடைக்கொடுப்பது போல் அந்த இராணுவ ஜீப்பானது உள்ளே நுழைந்தது. உள்ளே இருந்து இறங்கிய வீரர்களின் மத்தியில் கிட்டத்தட்ட 50 வயதுடைய ஒருவர் கையில் மாட்டப்பட்ட விலங்கோடு கீழே இறங்கினார்.
சோதனைகளை முடித்துவிட்டு அவரை இராணுவ விசாரணை மையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த இராணுவ வீரர்கள் கிட்டத்தட்ட மயக்கத்தின் உச்சத்திக்கே சென்றது போல் இருந்து.

ஏனெனில் இராணுவ வீரர்கள் நக்சலைட் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது அடர்ந்த காடுகளில் சென்றுகொண்டிருந்த இவரை இராணுவத்தினர் கைது செய்து கொண்டு வந்தனர். அதோடு அவருடைய வீட்டையும் சோதனையிட்டு தேவையானவற்றை கொண்டு வந்தனர்.

அந்த சான்றிதழ்களை சோதனையிட்டபோது மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஆராய்ச்சிக்காக அரசாங்க அனுமதி பெற்ற சான்றிதழ்களும் , அந்த சான்றிதழ்களில் அவருடைய புகைப்படமும் இட்டு அரசாங்கத்தின் முத்திரையும் வைக்கப்பட்டிருந்தது. அந்த சான்றிதழை பார்த்துத்தான் அவர்களுக்கு மயக்கம் வராத குறை.
ஏனெனில் அவருடைய பிறந்த வருடம் 1900ஆண்டு என்றிருந்தது. படிப்படியாக அவருடைய சான்றிதழ்களை எடுத்துவரப்பட்டு தீவிர தேடுதலுக்குப் பிறகு அவருடைய சுய தகவல் தயாரிக்கப்பட்டது.

பெயர் : மிஸ்டர் .இ
படிப்பு : மருத்துவம், மற்றும் இயற்பியல்
பிறந்த தேதி : 1-10-1900
ஊர் : ஐதராபாத் சமஸ்தானம்

அனுமதி : காடுகளில் உள்ள மூலிகைகளை ஆராய அனுமதி வழங்கப்பட்டுள்ளது
என்று அப்போதைய நவாப்பின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த விசாரணைக்குழுவினர் சற்றே அரண்டு விட்டனர். அப்படியாயினர் இவருக்கு இன்றைய நிலவரப்படி வயது 107 இருக்க வேண்டும். ஆனால் இவரைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே, 50 வயதுள்ள நடுத்தர ஆள் போன்றுதானே இருக்கிறார் என்ற குழப்பத்தில் அவரைத் தனி அறைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அவரைப் பற்றி விசாரித்தபோது
முதலில் பேச மிஸ்டர் இ குடும் குளிருக்கு வாயை இறுக ஒட்டியிருந்த தன் உதட்டிதழ்களை சற்றே நகர்த்தி புன்னகைத்தார். பின்

" இந்த படிவத்தில் குறிப்பிட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் உண்மை என்று பேச்சை ஆரம்பித்தார். இந்த வயதிலும் கம்பீரம் குறையாமல் பேசுவது அனைவருக்கும் வியப்பளித்தது. அதுவும் தமிழில் அவர் பேச பேச குழுவினர் எங்கோ என்ன உலகம் என்றே தெரியாத உலகத்தில் பயணிப்பது போன்ற உணர்வினில் இருந்தனர்.

ஆரம்பத்தில் மருத்துவனாக பணியாற்றி வந்த நான் ஒருக்கட்டத்தில் சில நோயாளிகளுக்கு வந்த நோய்களை குணப்படுத்த முடியாமல் தினறினேன். அந்த நோய்களை குணப்படுத்த எத்தனையோ புத்தகங்களை தேடிப் படித்துக்கொண்டிருந்தபோது ஏதேச்சையாக சித்தர்கள் எழுதிய சில புத்தகங்களும் , ஓலைச்சுவடிகளையும் படிக்க நேர்ந்தது. அதன் மூலமாக அந்த நோயை குணப்படுத்தினேன்.

அதோடு நோய்களின் குணங்களை அறிந்தால்தான் அந்த நோய்க்கான குணங்களை தீர்க்க முடியும். ஆனால் அந்த சித்தர்கள் நான் வாழ்ந்த காலத்திற்கு முன்பானவர்கள் என்பதால் எனக்கும் அந்த நேரத்தில் ஓர் சந்தேகம் வந்தது. அப்படியாயின் அவர்களும் ஓர் மருத்துவரா ?, மருத்துவர்கள் என்றால் எதற்கு சித்தர்கள் என்கிறார்கள் என்ற கேள்வி என்னும் எழுந்தது. எனவேத்தான் நானும் சித்தர்களைப் பற்றிய அறிய முற்ப்பட்டு ஒரு கட்டத்தில் சித்தனாகவே ஆக ஆசைப்பட்டேன்....."

அடுத்த அத்தியாயத்தில்..........

சிவா.ஜி
23-08-2008, 02:04 PM
அசத்தலின் அடுத்த கட்டம். கதைத் துண்டுகளை எப்படி இணைக்கப்போகிறீர்கள் என்று காண ஆவலாக இருக்கிறது. 107 வயது மருத்துவ சித்தர், 50 வயது தோற்றத்தில்...ஆஹா சுவாரசியமாகப் போகிறது. தொடருங்கள் செல்வமுரளி.

செல்வா
23-08-2008, 04:38 PM
அருமை... செல்வ முரளி. மன்றத்தின் கதைப்பகுதிகள் இனி களைகட்டும். ரொம்ப நல்லா எழுதறீங்க. அபாரமான கற்பனையும் கூட... விரைந்து தொடருங்கள்.

அமரன்
23-08-2008, 05:45 PM
அருமை அருமை.. பதிக்கும் ஒவ்வொரு துண்ண்டும் எதிர்பார்ப்பைத் தூண்டும் வண்ணம் உள்ளன. நிறைய புது விசயங்களை அறியத்தருகின்றன. சில இடங்களில் வசனப்பிறழ்வுகள் எத்தப்படுகின்றன. அவற்றைக் களைந்தால் இன்னும் களை கட்டும் கதை.

இளசு
23-08-2008, 09:23 PM
பலமான பரவலான அடித்தளம். பாராட்டுகள் செல்வமுரளி அவர்களே!

தொடருங்கள்!
=======================
விண் - ண் வரும்

வான் - ன் வரும்! ( ண் -அன்று)

எனவே வாண் என்ற எழுத்துப்பிழையைத் திருத்திவிடுங்கள். நன்றி.
.

selvamurali
24-08-2008, 01:58 PM
ஊக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

selvamurali
08-09-2008, 01:32 PM
பரபரப்பான அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையம்

மாலை நேரத்திலும் அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி பிரிவு சற்றே பரபரப்பானது. பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா மற்றும் அதைச்சுற்றியுள்ள நாடுகளில் திடீரென நிலங்களின் அளவு அதிகரித்துள்ளதாக அந்தந்த நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் அமெரிக்காவிற்கு தகவல்களை தெரியப்படுத்தியதை தொடர்ந்து அவர்களின் இப்போதைய பரபரப்புக்கு காரணமாயிற்று.
ஏனெனில் இந்த ஆராய்ச்சி பிரிவுக்கு பரபரப்பு என்பது எப்போதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. திடீர் திடீரென தொடர்பு அறுந்துவிடும் . ஏனெனில் அண்டவெளியில் அவ்வப்போது நிகழும் நட்சத்திரங்களின் வெடிப்புகள் மற்றும் புகை மண்டலங்கள் ஆகியவற்றால் செய்ற்கை கோள்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும். செய்ற்கை கோள்களை மீண்டும் தொடர்புகொள்வதற்குள் அவர்கள் படும்பாடு மிக அதிகமானது. சில நாட்களாக வான்வெளியில் ஏற்படும் புகை மண்டலங்கள் மற்றும் நட்சத்திர வெடிப்பு ஏதுமில்லாததால் இந்த ஆராய்ச்சி மையம் சற்றே அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதியை வெடிவைத்து தகர்க்குமளவுக்கு இப்போதைய பரபரப்பு அவர்களை ஆட்டிப்படைத்தது.

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சற்றே குழப்பமான நிலையில் இருந்தார். ஏனெனில் காரணமே இல்லாமல் பூமியின் அளவு அதிகரிக்குமா என்பது அவர் பார்வையில் சற்றே கணிக்க முடியாததாக இருந்தது. அவர் முன் இருந்த கணிப்பொறியை உயிர்பித்து வான்வெளியில் உளவாளிகளான அவர்களது ஸ்பை செயற்கைகோள்களிடமிருந்து ஒரு வாரம் வரை விண்ணிலிருந்து பூமிக்கு சந்தேகத்திற்க்கிடமான ஏதாவது ஒன்று உள்ளே நுழைந்திருக்கிறதா? என்ற தகவல்களை கேட்டுவிட்டு அதன் முடிவுகள் தெரியும் வரை சற்றே பொறுமையாக இருக்க முயற்சித்தார். அந்த செயற்கை கோள்களும் அந்த மாதிரி ஏதும் வரவில்லை என்றும் சூரிய ஒளியின் வெப்பம் மட்டுமே அதிகரித்துள்ளது என்றும் அதன் முடிவை தெரியப்படுத்தியது.

அதே சமயத்தில் திடீரென அவர் மனதில் ஒர் யோசனை உதித்தது.
அவசர அவசரமாக இன்டர்காமை எடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு தொடர்பு தரச் சொன்னார். சில விநாடிகளுக்கு பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சகி நிலையத்தின் தலைவருடன் தொடர்பு கிடைத்தது.

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி தலைவர் தன் முன் வந்த ப்ரச்னைகள் பற்றி கூறாமல் இந்தியாவின் செயற்கை கோள்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்றும், சந்தேகத்திற்கிடமான தகவல்கள் ஏதும் இருக்கின்றதா என்றும் கேட்டறிந்தார். இந்த மாதிரி விசாரிப்புகள் ஒவ்வோரு நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துடன் உள்ள வழக்கமான விசாரிப்புகள் என்பதால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறைத்தலைவரும் சந்தேகப்படும்படியாக ஏதும் இல்லை என்றுவிட்டார்.

தொடர்பை துண்டித்துக்கொண்ட அமெரிக்க ஆராய்ச்சி மையத்தலைவர் சற்றே பெருமூச்சு விட்டார். ஏனெனில் உலகில் எந்த மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது இந்தியாவில் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தும் என்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிந்த ஒன்று. ஏனெனில் இந்தியா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் சரியாக 12 மணி நேரம் இரவு / பகல் என்று மாறுவதும், பூமியின் மையத்தில் இந்தியா மையம் கொண்டிருப்பதால் எந்தவொறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது இந்தியாவில் எதிரொளிக்கும்..........

ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவரை தொலைபேசி கூக்குரலிட்டு கூப்பிட்டது. தொலைபேசியை எடுத்த அவர் எதிர்முனையில் சொன்ன தகவல் மீண்டும் கவலைக்குள்ளாக்கியது.....
ஆம், இந்தியாவிலும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் நிலங்களில் அளவு அதிகரித்துள்ளது என்று தகவல் தான் அவரை கவலைக்குள்ளாக்கியது.

மதி
08-09-2008, 01:55 PM
நீண்ட நாட்களுக்குப் பின் தொடர்கிறீர்கள். சீக்கிரமே அடுத்தடுத்த பாகங்களைத் தாருங்கள்...!

பரபரப்பாக செல்கிறது கதை.

selvamurali
08-09-2008, 01:57 PM
அலுவலகத்தில் மட்டுமே இணைய வாய்ப்பு உள்ளது நண்பரே!. ஆனால் அலுவலக பயர்வால் நமது மன்றத்தை அணுக்க விடுவதில்லை என்பதால் வெளியே எடுத்து பதிய வேண்டிய நிலமை.

மதி
08-09-2008, 02:02 PM
அலுவலகத்தில் மட்டுமே இணைய வாய்ப்பு உள்ளது நண்பரே!. ஆனால் அலுவலக பயர்வால் நமது மன்றத்தை அணுக்க விடுவதில்லை என்பதால் வெளியே எடுத்து பதிய வேண்டிய நிலமை.

உங்களின் பங்களிப்பு மெச்சத்தக்கது. கால நேரத்துக்கு தகுந்த மாதிரி மன்றத்தில் பங்களியுங்கள். ஆனால் அதற்காக எங்களை தொடர்கதையின் நடுவில் அதிக நாட்கள் காக்க வைத்து விடாதீர்கள்.. :)

selvamurali
09-09-2008, 05:33 AM
நன்றி மதி!

தீபா
09-09-2008, 07:03 AM
கதையின் கருவை முதலிலேயே கொடுத்து சுவாரசியத்தை குறைத்துவிட்டாலும் அடுத்தடுத்து வரும் பதிவுகள் சீட் உச்சியில் அமர வைக்கிறது.

வாழ்த்துக்கள்.

selvamurali
10-09-2008, 05:50 AM
நன்றி நண்பர்களே!

மதி
10-09-2008, 07:58 AM
செல்வமுரளி.. இன்று செய்தியில் Big Bang Experiment பற்றி வந்துள்ளது. அதன் சாராம்சமும் உங்களின் கதை சம்பவமும் ஒத்துப் போகின்றது. :)
படித்தீர்களா?

selvamurali
10-09-2008, 11:12 AM
ஓ பார்த்தேனே நண்பரே!
தினமலர் தனது முகப்பு பக்கத்தில் இன்று இந்த செய்தியை தெரிவித்திருந்தது. பார்த்து தெரிந்து கொண்டேன்.

உண்மைதான்.

selvamurali
12-09-2008, 08:49 AM
செயற்கை அண்டெவளி

எத்தனையோ கோடி செலவிட்டு ஆராய்ச்சி புரிந்தாலும் இது ஓர் அடிப்படை ஆராய்ச்சித்தான் என்பது சற்றே ஆச்சர்யத்துக்குரிய விஷயம். என்னதான் இன்று ஆராய்ச்சி என்ற பெயரில் புதியனவற்றை கொண்டுவந்தாலும் அவை ஏற்கனவே ஏதோ பெயர் தெரியாத ஒன்று உருவாக்கப்பட்டதிலிருந்துதான் பரிணமித்து வருகின்றது. எனவே இதில் நாம் முன்னேற்றம் காண்பது அரிது.
எப்போது மனிதன் புதிய ஒன்றை புதியதாகவோ அதாவது புதிய ஒன்றை எதிலும் சாராமல் புதியதாக கண்டுபிடிக்கின்றானோ அன்றுதான் அவன் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தமானவன்.

கிட்டத்தட்ட 15 வருடங்களாக உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலனாக இதோ ஆரம்பித்துவிட்டது. புதிய செயற்கை அண்டெவளியின் உருவாக்கம்.



ஆராய்ச்சிப்பிரிவினர் சற்றும் பரபரப்பு இல்லாமல் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செவ்வனே செய்து வந்தனர். இதோ முதல்கட்டமாக ஆல்பா கதிர்கள் புதிய அண்டெவளிக்குள் களமிறங்கப்பட்டுவிட்டது. ஒளியின் வேகத்தில் 1% வேகத்தில் புதிய அண்டெவளிக்குள் அனைத்து கிரக உருண்டைகளின் மீதும் மோதவிடப்பட்டன.

ரன்னர் கணினியானது அனைத்து கிரக உருண்டைகளின் தகவல்களையும் அதனுள் அமைக்கப்பட்ட சென்சாரிலிருந்து தகவல்களை கிரகித்து உடனுக்குடன் மானிட்டரில் காட்டியவண்ணம் இருந்தது.

அப்போது ரன்னர் கணினியிடன் இணைக்கப்பட்ட மானிட்டரானது அப்போது நடந்த சோதனையில் முடிவுகளை வெளியிட்டபோது சூரியனிலிருந்து மட்டுமே மாற்றங்கள் தெரிந்தது. மற்ற கிரகங்களில் மாற்றங்கள் ஏதும் காணப்படவில்லை.

படிப்படியாக ஒவ்வொரு கதிர்களாக அதனதன் சிலிண்டர்களில் இருந்து புதிய அண்டவெளியை நோக்கிய பாய்ந்த வண்ணம் இருந்தது. விஞ்ஞானிகள் B, C யும் ஆராய்ச்சியின் முடிவுகளை எதிர்நோக்கிய வண்ணம் காத்திருந்தனர்.

கிட்டத்தட்ட 15 வருட உழைப்பு என்பதால் அனைத்து திட்டங்களும் முன்பே திட்டமிட்டு ப்ரச்னைகள் ஏதும் இல்லாத அளவு அவர்களின் உழைப்பு இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு பிறகு ஆராய்ச்சி முடிவுகளை ரன்னர் கணினியானது கருப்பு-வெள்ளை மானிட்டரில் வெளியிட்டது.

ஆராய்ச்சின் முடிவுகளை ஆராய விஞ்ஞானிகள் மானிட்டரில் தேடிய போது விஞ்ஞானி B & C பூமியின் மாற்றங்களை மட்டுமே ஆராய முனைந்தனர். மற்ற விஞ்ஞானிகளுக்கு இது சற்றே ஆச்சர்யத்தை கொடுத்தது.

ஆம், அவர்கள் எதிர்பார்த்தது போலே பூமி சந்திரனை சுற்றிவந்தது......

தொடரும்

selvamurali
14-09-2008, 10:16 AM
என்ன ஆயிற்று நண்பர்களே !

உங்களது விமர்சனங்கள் வரவேயில்லையே :(

மதி
15-09-2008, 03:48 AM
நண்பரே..
இரண்டு நாட்கள் மன்றம் வரவில்லை. Big Bang பற்றி கேள்வியுற்றதிலிருந்து அதைப் பற்றிய யோசனையிலுள்ள எனக்கு.. உங்களின் கடைசி வரி அதிர்ச்சி அளித்தது. நல்ல கற்பனை. மேலும் தொடருங்கள் நண்பரே.!

selvamurali
22-09-2008, 08:18 AM
நன்றி ! மதி

selvamurali
22-09-2008, 08:19 AM
விளைவுகளின் விளைவு

புதிய அண்டெவளி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அனைவரது பார்வையும் விஞ்ஞானி B & C ஆகிய இருவரின் மேலேயே இருந்தது.
கிட்டத்தட்ட 15 வருட உழைப்பில் இந்த புதிய அண்டெவளியை உருவாக்கும் முயற்சி இப்போதுதான் வெற்றிகரமாக முடிவை எட்டியுள்ளது என்ற மகிழ்ச்சி அவர்களின் இத்தனை வருட உழைப்பை ஈடு செய்தது . இந்நேரத்தில் ஆய்வு முடிவுகள் அவர்களுக்கே ஆச்சர்யமளிக்கிறது. ஆனால் விஞ்ஞானி B & C இருவரும் ஏற்கனவே இந்த முடிவுகள் எதிர்பார்த்ததுதான் என்று சொல்கிறார்கள். அப்படியானால் என்னத்தான் நடக்கிறது? என்ற பார்வையில் விஞ்ஞானி B & C இருவரையும் குழப்பத்துடன் ஏறிட்டு பார்த்தார்கள்.

ஆனால் விஞ்ஞானி B & C இருவரும் சற்றும் பதட்டமில்லாமல் மெல்லிதாக புன்னகைத்தனர்.
பின் செருமிக்கொண்டே பேச ஆரம்பித்தார்கள்......

எனது அருமை சகோதரர்களே!

நமது 15 வருட உழைப்பு இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக 15 வருடங்களாக உழைத்த நமது குழுவை மனமார பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள். உங்களது ஒவ்வொருவரின் உழைப்பும் சாதாரணமானது அல்ல என்பது எங்களுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த ஆராய்ச்சின் முடிவுகளை நாங்கள் எதிர்பார்த்தது போல் அமைந்துள்ளது எங்களுக்கும் ஆச்சர்யம்தான் . ஏனெனில் இயற்கையின் போக்கு கணக்கிட முடியாதது. கூட்டலும், கழித்தலும், வகுத்தலுக்கும் போன்ற மனதிர்களின் கணக்கிற்கு அப்பாற்பட்டது இந்த இயற்கையின் கணக்கு.

பிங் பாங் எனப்படும் அண்டவெளியில் ஏற்பட்ட மோதல்களில்தான் ஒரு பெரிய கிரகமோ அல்லது சிறிய கிரங்கங்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்தோ தான் நமது அண்டெவளி ஏற்பட்டுள்ளது என்கிறது அறிவியல்.

ஆனால் எங்களது கருத்துப்படி ஒரு பெரிய நட்சத்திரம் வேறோரு நட்சத்திரத்தோடு மோதிய மோதலில் உருவாகிய கிரகங்கள்கள்தான் இவை.
இவைகளில் ஒரு கிரகத்தின் நடுவே அமைந்ததுள்ள பகுதிகள்தான் பூமி, சந்திரன் மற்றும் வியாழன். மற்ற கிரகங்கள் இன்னோரு கிரகத்தின் பாகங்கள். அண்டவெளியின் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு வாயுக்களின் கலவையாக இருக்கும். அவ்வாறு நாம் உயிர்வாழ காரணமான இந்த உயிர் வாயுக்கள் அதிகமாக இருந்த இந்த கிரங்களின் மோதல்களின்தான் நமது கிரகமும் பின் நாமும் உருவாகியுள்ளோம்.

நமக்கு தெரிந்த சிந்திக்க தெரிந்த மனதுடன் பார்த்தால் இவைகள் விளைவுகளின் விளைவுகள் எனலாம். இந்த உலகத்தின் ஒவ்வோரு இயக்கமும் ஏதாவது ஒரு விளைவை பொறுத்தே அமைகின்றது என்பது நாம் அறிந்த உண்மை. ஏனெனில் இந்த விளைவுகள்தான் நமது முன்னோர்கள் என்றும் சொல்லலாம்.

சந்திரனின் அளவு சிறிதாயினும் அதன் ஈர்ப்பு விசை பூமியை விட அதிகமாக இருந்திருக்கிறது. ஆகையால்தான் சந்திரனை பூமி சுற்றி வந்திருக்கிறது என்கிறது எங்களது ஆராய்ச்சியும், அனுபவமும். சரி எப்படி பூமியில் உயிர்கள் உருவானது? எப்படி பூமி சந்திரனை சுற்றியது?

அடுத்த அத்தியாத்தில்

selvamurali
25-09-2008, 12:08 PM
அழிவுப்பாதையில் உலகம்

அந்த இராணுவ மையத்தில் ஓர் அணுகுண்டு வெடித்தது போல் இருந்தது. அனைவரின் இமைகளும் துடிக்கவே மறந்து போய்விட்டிருந்தது போல் இருந்தது.
ஆம் மருத்துவராக இருந்து சித்தராக முயற்சித்த விஞ்ஞானி இ இராணுவ விசாரணையில் சொன்ன தகவல் அவர்களை மேற்கண்ட நிலைமைக்கு உள்ளாக்கியது.

உலகம் அழிவுப்பாதையில் தன்னை செலுத்திக்கொண்டுள்ளது என்பதுதான் அவர் சொன்ன தகவல். மேலும் அதற்கு அவர் கூறிய விளக்கம் ஆச்சர்யத்தின் உச்சிக்கே இட்டுச்சென்று இப்படியும் இருக்கலாமோ என்று அவர்களையே கேட்க வைத்தது அவர் வார்த்தைகள்.......

மிஸ்டர் : இ யின் விளக்கம் இதோ!

~ ஆம் , இந்த உலகம் அழிவுப்பாதையை நோக்கி அடியெடுத்து வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இவ்வுலகத்தை காப்பாற்றி வரும் பல்வேறு காரணிகளை மக்கள் தங்கள் சுயலாபத்துக்காக அழித்துவருகின்றனர். இந்த காரணிகளின் சமச்சீர் நிலை மூலமாகத்தான் இவ்வுலகம் தன்னில் உள்ள ஜீவராசிகளையும் காப்பாற்றி வருகின்றன. ஆனால் இவ்வணைத்து காரணிகளும் அழிந்துவருவதால் பூமியின் சமச்சீர் நிலை பாதிக்கப்பட்டுவிட்டது...

வேண்டுமானால் ஓர் உண்மை சொல்லட்டுமா?

சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி எதனால் ஏற்பட்டது தெரியுமா?

இப்பூமியின் புவிஈர்ப்புவிசையில் ஓர் முக்கிய அங்கம் வகிப்பவை இவ்வுலகில் உள்ள மலைகளும், மரங்களும் தான்.
இந்த மலைகளின் அளவும், மரங்களின் அளவும் எப்போதெல்லாம் குறைகின்றதோ அப்போதெல்லாம் இவ்வுலகின் ஏற்படும் மாற்றங்கள் உலகின் மாற்றங்களை ஈடுகட்டக்கூடியதாக அமையும்.....

அப்படி ஈடுகட்ட கூடியதாக அமையும் மாற்றங்கள் இவ்வுலகில் வசித்து வரும் உயிரினங்களை தன்னுள் எடுத்துக்கொண்டு அந்த எடைகளை ஈடுகட்டிக்கொள்ளும்.

அப்படி பூமியின் ஏற்பட்ட மாற்றத்தை ஈடுகட்டுவதற்குத்தான் இந்த சுனாமியானது ஏற்பட்டது.

ஆம் பூமியின் மலைகளையும் ,மரங்களையும் வெட்டியதால் ஏற்பட்ட எடை குறைவும், அதனால் உண்டான புவிஈர்ப்பு விசை குறைவால் பூகம்பம் உண்டாகி அதனால் பல்வேறு உயிரினங்களையும் தன்னுள் வாங்கி அந்த எடை இழைப்பை ஈடுகட்டிக்கொண்டது.

இதற்கு ஓர் விளக்கம் ஒன்றினை உங்களது விஞ்ஞானிள் தந்திருப்பர். ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
ஆனால் அது வெளியே, இது உள்ளே

இவ்வாறு மிஸ்டர் இ விளக்கம் அளித்துக்கொணடிருந்த அதே நேரத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்த ஆராய்ச்சியாளர்கள் மானிட்டரில் தெரிந்த தகவல்களை பார்த்து பரபரப்பாகினர்.
ஏனெனில் பூமியிலிருந்து புதன் கிரகத்தை பற்றி ஆராய அனுப்பியிருந்த விண்கலத்தில் தகவல்களை சேமித்திருந்த ஹார்ட் டிஸ்க்கள் செயலிழுந்து விட்டிருந்தன.

selvamurali
20-01-2009, 06:59 PM
அச்சுறுத்தல்

நாசா ஆராய்ச்சி மையத்தின் மையத்தில் இருந்த புதன் கிரகத்தின் ஆராய்ச்சி பிரிவு வழக்கமான பரபரபில்லிருந்து பரபரப்பான பரபரப்புக்கு மாறியிருந்தது.

பூமியிலிருந்து புதன் கிரகத்தை பற்றி ஆராய அனுப்பியிருந்த விண்கலத்தில் தகவல்களை சேமித்திருந்த ஹார்ட் டிஸ்க்கள் செயலிழுந்து விட்டிருந்தன. அந்த விண்கலத்தின் உள்ளேயிருந்த ரோபோட் ஆனது தனது செயற்கை கைகளினை சற்றே உயர்த்தி மீண்டும் மீண்டும் அந்த ஹார்ட் டிஸ்க்களை விண்கலத்தின் கணிப்பொறிகளில் உள் நுழைத்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ அனைத்து ஹார்ட் டிஸ்க்களும் செயலிழந்து விட்டன.

இதனால் விஞ்ஞானிகள் குழு முதல்கட்டமாக அந்த விண்கலத்தில் இருந்து அனைத்து செய்திகளையும் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்ப உத்தரவுகளை விண்கலத்தில் இருந்த ரோபாட்களுக்கு அனுப்பினர்.

அவர்களுக்கு அடுத்தக்கட்ட அதிர்ச்சி அங்க காத்திருந்தது. ஆம் அங்கேயிருந்த ரோபாட்் செயலிழந்து விட்டிருந்தது. இந்த செயல்
விஞ்ஞானிகள் குழுவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருந்து.இப்போது ஏற்பட்டிருக்கும் ப்ரச்னை குறித்து
உடனடியாக நாசாவின் ஆராய்ச்சி பிரிவு தலைவருக்கு தகவல் அனுப்பப் பட்டது. தகவல்களை கேள்விப்பட்ட அந்த ஆராய்ச்சி பிரிவு தலைவர் மேலும் அதிர்ச்சிக்குள்ளானார்.

உலகெங்கும் சில பகுதிகளில் மட்டும் நிலபரப்புகள் கூடி வருகின்றன என்பதை கண்டறிய முடியாத போது இப்போது இந்த சேதி இன்னமும் அவரை சிரமப்பட வைத்தது.

ஆனால் அவருக்கு ஒரு விஷயம் மட்டும் நன்றாக புரிந்துவிட்டது
ஆம், பூமிக்கு இதன் மூலம் ஏதோ ஒரு ஆபத்து ஏற்பட போகிறது என்பது அவருடை அனுபவ மூளையானது தெளிவாக எடுத்துச் சொன்னது.....

இதோ அந்த ஆராய்ச்சி மையத்தில் வந்துவிட்டார்......
உடனடியாக அவருக்கு அந்த விண்கலத்தின் ப்ரச்னைகள் குறித்து அனைத்து தகவல்களும் அவருக்கெதிரே இருந்த மானிட்டரில் திரையில் காட்டப்பட்டது.

ப்ரச்னைகள் முழுவதும் தகவல்கள் சேமிக்கும் இடமான ஹார்ட் டிஸ்க்கள்தான். இதுவரை பூமியிலிருந்து அது புதன் கிரகத்திற்கு சென்றிருந்த அனைத்து தகவல்களையும் அந்த ஹார்ட் டிஸ்களில் இருந்தது. அனைத்தும் அவ்வப்போது பூமிக்கு அனுப்ப பட்டிருந்தாலும் இப்போது தான் அது வெள்ளிக்கிரகத்தை தாண்டி பயனித்துக்கொண்டிருந்தது. அந்த வெள்ளிக்கிரகத்தையும் ஆராய்ச்சி செய்த அந்த தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

விஞ்ஞானிகள் குழு தகவல்களை பூமியின் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல்களை அனுப்ப முயற்சி செய்து வருவது குறித்து குழு தலைவருக்கு கூறிய போது அவர் அந்த தரவுகள் அனைத்தும் பூமிக்கு வந்து சேர்வதற்கு ஆகும் நேரத்தை கணக்கிட்டு வெள்ளிக்கிரகத்தை ஆராய அனுப்பிய விண்கலத்திற்கு அந்த செய்திகளை மாற்ற சொன்னார்.................

அதோடு விண்வெளியின் ஏதேனும் புதிய மாறுதல்கள் நடைபெற்றதா என்பதை அறிய உலகில் உள்ள அனைத்து நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி பிரிவுக்கு தகவல் அனுப்ப உத்தரவிட்டார்...........

தொடரும்......................

selvamurali
20-01-2009, 06:59 PM
செயற்கை அண்டவெளி உதயம்

விஞ்ஞானிகள் B&C இருவரும் பூமி சந்திரனை சுற்றுவது குறித்து விளக்கம் அளித்தபின் கனத்து குரலுடன் பேச ஆரம்பித்தார்.

நண்பர்களே! முதலில் எங்களை மன்னியுங்கள். இந்த ஆராய்ச்சியின் முடிவில் மேற்கண்ட தகவல்களை உங்களுக்கு சொல்வது தவறு என்றாலும் அப்போது நாங்கள் சொல்லியிருந்தால் சிலர் சம்மதித்திருக்கமாட்டீர்கள் என்பதாலேயே இச்சோதனை முடியும் தருவாயில் இந்த தகவல்களை இப்போது நாங்கள் சொல்கிறோம்.

இப்பூமியின் முதன் முதலில் தோன்றியபோது உயிரினங்கள் தோன்றுவதற்கான சாத்தியகூறுகள் ஏதும் இல்லை என்றே நாங்கள் கருதினோம். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உருவானது ஏதாவது ஒரு விளைவுகளால்தான் என்பதில் எங்களுக்கு அசாத்திய நம்பிக்கை. இப்பூமி பந்தை தொலைதூரத்தில் இருந்து அதிவேகமாக வந்த ஏதாவது ஒரு விண்கல்லோ அல்லது வேற்று கிரகமோ மோதியதில் ஏற்பட்ட விளைவில்தான் இப்பூமியின் உயிரினங்கள் தோன்றுவதற்கு உண்டான வழி என்று நாங்கள் கருதுகிறோம்.

ஒரு சுழலும் பம்பரத்தின் மேல் வேறு ஒரு பம்பரத்தை அதிவேகமாக பம்பரத்தின்மீது மோதவிடும்மோது அந்த பம்பரமானது மேலும் வேகமாகவும் அதோடு தன்னைத்தானே மிக வேகமாகவும் சுற்றிக்கொள்கிறது. அதன்படிதான் ஏற்கனவே சுற்றிகக் கொண்டிருந்த பூமியின் மீது ஒரு விண்கல்லோ அல்லது கிரகமோ மோதியதால் ஏற்பட்ட விளைவில்தான் பூமி சந்திரனை விட பெரிதாகியுள்ளது. அதோடு பூமியின் ஈர்ப்பு விசையும் அதிகரித்ததால் பூமியின் ஈர்ப்பு விசைக்குள் சந்திரன் நுழைந்து பூமியை சுற்ற ஆரம்பித்தது.
இப்படித்தான் நடந்திருக்கும் என்ற எங்களின் கற்பனைதான் என்றாலும் இந்த சோதனையின் கடைசி கட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்.
இதோ இப்போதுள்ள நமது செயற்கை பூமியின் மீது மோதவிட இப்பூமியில் கலந்துள்ள வாயுக்களை வைத்தே நாங்கள் ஒரு விண்கல்லை உருவாக்கினோம் யாருமே அறியாமல். இதோ அந்த விண்கல் உங்களின் பார்வைக்கு என்று தங்களது ரகசிய அறையில் இருந்த அந்த செற்கை விண்கல்லை அவர்கள் காட்டியபோது அங்கிருந்த விஞ்ஞானிகள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்....
பின் இதோ நமது ஆராய்ச்சி மீண்டும் துவங்கிவிட்டது நண்பர்களே,, வாருங்கள் என்றவாறே அந்த கிரத்தை மோதவிடச் செய்ய அதன் வழிப்பாதையை பூமியை நோக்கி ஏற்படுத்தினர் விஞ்ஞானிகள் B&C.

செயற்கை அண்டெவளியின் பூமியை நோக்கி ஒரு பிரமாண்ட தோற்றமுடைய அந்த விண்கல்லை அதற்குரிய அச்சியில் அதிவேகத்தில் தன்னைத்தானே சுழலசெய்தனர்.
இதோ ஆரம்பித்துவிட்டது மோதல்,,,,
ரன்னர் கணினியானது தனது செயற்கை நியூரான்களை மீண்டும் உசுப்பிவிட்டு விட்டு மோதலுக்காக காத்திருந்தது. விஞ்ஞானிகள் அனைவரும் தங்களது பாதுகாப்பு இடத்திற்கு சென்று ரன்னரின் மானிட்டரில் அந்த மோதல்களை காண ஆர்வமுடன் காத்திருந்தனர்.

செயற்கை பூமியை நோக்கி செயற்கை விண்கல் அதிவேகமாக சுழன்றிபடி தனது பயணத்தை தொடங்கியது.... பூமியை கிட்ட நெருங்க நெருங்க அவ்விடத்தில் தோன்றிய கண்ணுக்கே புலப்படாத அலைகளை ரன்னரின் சென்சார்கள் அளவெடுத்துக்கொண்டிருக்க... பூமியை அதிவேகத்தில் மோதியது அந்த செயற்கைவிண்கல். அடுத்த வினாடியே மானிட்டரில் தெரிந்த காட்சியை பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சியில் நின்றனர். ஏனெனில் ஒன்றோடு ஒன்று மோதிய அந்த கிரகமும் விண்கல்லும் ஒன்றாக இணைந்துவிட்டதுதான் அந்த ஆச்சர்யம்...
அதோடு விஞ்ஞானிகள் இருவரும் சொன்னதுபோல் பூமி சற்று பெரிதாகிவிட சந்திரன் பூமியை சுற்றிவரும் அனைத்து கிரகங்களும் அண்டெவளியில் உள்ளதைப்போல் சுற்றிவர விஞ்ஞானிகள் வெற்றிக்களிப்பில் மிதந்தனர்.....
ஒரு வழியாக தங்களது குழுவின் தங்களது நீண்டகால ஆராய்ச்சியினை வெற்றிகரமாக முடித்தனர்...