PDA

View Full Version : மலேசியா ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இடம் பிடித்ததுஓவியா
16-08-2008, 01:08 AM
என் தாய் நாட்டுக்கு, நாளை பெய்ஜீங்கில் நடைப்பெரும் ஒலிம்பிக் 2008'ல் முதல் பதக்கம் உறுதி.

அது தங்கமா? வெள்ளியா? நாளை தெரியும் .....

விளையாட்டு : பூப்பந்து
ஆடுபவர்: Lee Chong Wei (லீ ஃசொங் வெய்)

இது ஒரு சரித்திர சாதனையாகக்கூட இருக்கலாம்.

நாளை என் நாடு ஆனந்த தாண்டவம் ஆடும்.....

நான் இப்பொழுதே :medium-smiley-080::medium-smiley-080::medium-smiley-080::medium-smiley-080:

மதி
16-08-2008, 02:03 AM
லீ சொங் வெய் வெற்றி பெற வாழ்த்துகள்...!

தீபன்
16-08-2008, 02:55 AM
அவ்வளவு நபிக்கையா... உங்கள் நம்பிக்கை நனவாக வாழ்த்துக்கள். இப்பவே ஆடி களச்சிட்டிங்கன்னா அப்புறம் நாளைக்கு ஆடேலாம போயிடபோகுது...

Mano.G.
16-08-2008, 04:11 AM
ஆமாம்
பூப்பந்து 1996ம் முதலில் ஒலிப்பிக் விளையாட்டு
போட்டியில் அறிமுகபடுத்திய போது சீடேக் சகோதரர்களின்
இளைய சகோதரர் ரஷிட் சீடெக் வெங்கல பதக்கம் பெற்றார்,
அதன் பிறகு 2008ம் பூப்பந்து ஒற்றையர் ஆட்டத்தில் இறுதி
போட்டிக்கு தகுதி பெற்றுள்ள லீ ஷொங் வெய், வென்றால்
தங்கம் தொல்வியுற்றால் வெள்ளி பதக்கங்கள் உறுதியாகிட்ட
போதிலும், இன்றைய பத்திரிக்கை செய்தியில் தங்க பதக்கத்திற்கு
உயிரை கொடுத்து போராடுவேன் என சூளுரைத்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் மலேசிய இந்தியர்கள் சிலர்
பூபந்து ஆட்டத்தில் சிறந்து விளங்கினார்கள் பஞ்.குணாலன், ஜேம்ஸ் செல்வராஜ்,
காந்தீபன். ஆனால் இப்பொழுது இளைஞர்களின் எண்ணங்களும் நோக்கங்களும்
வேறு திசை நோக்கி சென்றுவிட்டன. சமயங்களில் நாம் வாய்சொல்லில்தான்
வீரர்களோ என்று தோன்றுகிரது.

மனோ.ஜி

அமரன்
16-08-2008, 07:51 AM
பதக்கத்தை உறுதி செய்த வீராங்கனைக்கு பாராட்டும் வாழ்த்தும். தங்கமாக ஜொலிக்க முன்வாழ்த்தும் உற்சாகமும்.

aren
16-08-2008, 10:46 AM
தங்கம் வருவதற்கு என் வாழ்த்துக்கள். சிங்கப்பூருக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவிற்கும் ஒரு தங்கம் கிடைததிருக்கிறது.

இன்னும் சிறப்பாக அடுத்த ஒலிம்பிக்கில் ஜொலிக்க என் வாழ்த்துக்கள்.

Mano.G.
17-08-2008, 03:08 PM
நினைப்பது அனைத்தும் நடந்துவிட்டால்?????????

தங்கம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால் கிடைத்தது வெள்ளியே.
உலக தர வரிசையில் லிம் டான் முதல் இடம் லீ ஷொங் வெய் இரண்டாம் இடம்

இருந்தாலும் வாழ்த்துக்கள் மலேசியா


மனோ.ஜி

இளசு
17-08-2008, 03:16 PM
உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கெடுக்கிறேன் நட்புறவுகளே!

பாரதி
17-08-2008, 03:24 PM
அனைத்து நாடுகளும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஏதாவதொன்றில் வெற்றி பெற வேண்டும்.

மலேசிய வீரர் வெற்றிக்கு வாழ்த்தும் பாராட்டும்.

mukilan
17-08-2008, 03:29 PM
மலேசிய வீரரின் வெற்றிக்கு நம் வாழ்த்துகள். மலேசிய உறவுகளின் மகிழ்ச்சியில் நானும் பங்கேற்றுக் கொள்கிறேன். தீர்க்கமாக பதக்கத்தில் இடம்பெறும் முன்னரே இங்கே பதிவிட்ட ஓவியாவிற்கு பாராட்டுகள்.

சூரியன்
17-08-2008, 03:30 PM
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஓவியா
17-08-2008, 03:33 PM
வெள்ளி பதக்கம் மட்டுமா!!!

போன உலக காற்ப்பந்தாட்டத்தில் ஜீடானுக்காக சிந்திய கண்ணீரைவிட இன்று கொஞ்சம் கம்மிதான். என் கனவு கலைந்தததடி கண்ணம்மா!!! :traurig001:

இருப்பினும் வீரருக்கு என் வாழ்த்துக்கள்.


- அழுகையுடன் :traurig001:
ஓவியா.

தீபன்
17-08-2008, 05:21 PM
அடடா.... அழாதிங்க ஓவி... நேத்து முழுக்க ஆட்டம்... இன்னீக்கு முழுக்க அழுகைன்னா உடம்பு என்னத்துக்காகும்... எங்கள பாருங்க.... எந்த பதக்கமும் கிடைக்காட்டாலும் எப்பவாவது அதப்பத்தி அலட்டிக்கிறமா...
(அதிலயும் உண்மையிலேயே குறிபாத்து சுடுறது, குண்டெறிதல், தடைதாண்ண்டி ஓடுறது, பாயுறது இப்படி எத்தனையோ விளையாட்டில நாங்கதான் சாம்பியன்ஸ். )

வெள்ளிவென்ற மலேசிய மண்ணிற்கு பாராட்டுக்கள்.

arun
17-08-2008, 05:45 PM
வெற்றி பெற்ற வீரருக்கு வாழ்த்துக்கள்

அறிஞர்
18-08-2008, 12:16 AM
பதக்க பட்டியலில் இடம்பெற்ற மலேசியாவுக்கு வாழ்த்துக்கள்...

இதனால பூரிப்படையும் மலேசிய சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள்