PDA

View Full Version : உன்னைப் பார்த்த பின்பு..அமரன்
15-08-2008, 12:47 PM
உன்னைப் பார்த்த பின்பு

புதிதாக எழுத விழைந்து
புதிராக விளைந்'தேனாம்'

நான் தொடுக்கும் கவிப்பூக்'கள்'
தென்படுகின்றனவாம் காலிப்பூக்களாய்..

ஏதாவது
தெரிந்தாலும் - முகவரிகள்
சரிவரப் புரிவதில்லையாம்.

புரிய முற்பட்டாலும்-கழுத்தை
நெரித்துத் தள்ளுவதில்
முழி பிதுங்கும் நிலையாம்.

விக்கிரமாதித்தான் வேதாளமாய்
மீண்டும் மீண்டும் முயன்றால்
கண் கட்டிய நீதி தேவதையின்
கரமிருக்கும் தராசாய் தாங்களாம்..

இப்படி
இன்னும் பல குற்றச்சாட்டுகள்
உன்னைக் கண்ட என்மீது.

எப்படித்
தெரியும் அவர்களுக்கு..

உன்னைப் பார்த்த பின்பு
மின்னலைப் பிடித்து
வார்த்தை சிறையிலிட்டால்
எழுத்துகளுக்கு பின்னால்
உனது முகம் என்பது..

இளசு
16-08-2008, 07:06 AM
அமரா

இந்தக்கவிதைக்குப் பின்னும்
உனக்கு மட்டும் தெரியும் அந்த முகம் என்றானபின்

தேனும் கள்ளும் உண்டு,
மேலும் கீழும் தராசில் ஆடிய
மயக்கமோ கிறக்கமோ - என் மனதில்!

வார்த்தைகளை வசப்படுத்துபவன் என உனக்குப் பொருத்தமான ஒரு
வாழ்த்துண்டு மன்றத்தில்!
வாழ்த்துகள்!

poornima
16-08-2008, 08:58 AM
// மின்னலைப் பிடித்து
வார்த்தை சிறையிலிட்டால் //

பாராட்டுகள் அமரன்

அறிஞர்
16-08-2008, 05:01 PM
பார்த்தபின் ஏற்படும் மாற்றங்கள்
அழகான வரிகளில் கவியாய்..

அருமை அமரா.

ஷீ-நிசி
17-08-2008, 05:19 AM
எப்படித்
தெரியும் அவர்களுக்கு..

உன்னைப் பார்த்த பின்பு
மின்னலைப் பிடித்து
வார்த்தை சிறையிலிட்டால்
எழுத்துகளுக்கு பின்னால்
உனது முகம் என்பது..


மின்னலைப் பிடித்து வார்த்தை சிறையிலிட்டால் எழுத்துக்களுக்கு பின்னே உன் முகம் என்றால்.....

ஓ! மின்னல்தான் உன் முகமோ?!

கடைசி பகுதி எவரையும் கவரும்!

வாழ்த்துக்கள்!

அமரன்
17-08-2008, 12:58 PM
என்
கவிதைச் சிறைச்சாலையில் அடைபடும்
கருத்துகளைப் பற்றிய கருத்துகளும்
சிறைகளைப் பற்றிய எண்ணங்களும்
கொண்டு அவளை வடித்த கவிதை..

அவளை(அதை)ப் பார்த்த பின்னர்-என்
எண்ண மின்னல்களை சிறையிட்டால்
இப்படித்தான் தெரியும் - ஏனென்றால்
இப்படித்தான் அவளும் ..

கருத்தூன்றிய விவசாயிகளுக்கு கண்ணான நன்றிகள்..
அண்ணனின் ஊன்றலின் ஊடோடும் சுவையில் என்னை மறந்தேன்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
18-08-2008, 07:36 AM
விக்கிரமாதித்தான் வேதாளமாய்
மீண்டும் மீண்டும் முயன்றால்
கண் கட்டிய நீதி தேவதையின்
கரமிருக்கும் தராசாய் தாங்களாம்..சொல்லாடல் மிக்க அருமை அமரா. வாழ்த்துக்கள்

அமரன்
23-08-2008, 09:36 AM
நன்றி ஹசனீ

தீபா
23-08-2008, 09:48 AM
இனிமே பார்க்காதீங்க :D :D :D

அப்பறம் ரொம்ப புலம்ப ஆரம்பிச்சிடுவீங்க.

நாகரா
23-08-2008, 11:14 AM
உன்னைப் பார்த்த பின்பு


உன்னை - வள்ளல் பிரானை


புதிதாக எழுத விழைந்து
புதிராக விளைந்'தேனாம்'


புதிது - ஏழாந்திருமுறை
புதிர் - பேருக்கு சன்மார்க்கிகளான கூட்டத்திற்கு, "கடை விரித்திருக்கிறேன், கொள்வாருளர்" என்று துணிவுடன் வள்ளலின் புதிய ஏற்பாட்டை வெளியிட்டால், நான் புதிர் தானே(மரை கழன்ற)
புதிய ஏற்பாடு முரட்டு முடவன் முயன்று கொணர்ந்த தேன் தானே!


நான் தொடுக்கும் கவிப்பூக்'கள்'
தென்படுகின்றனவாம் காலிப்பூக்களாய்..


கவிப் பூக்கள் - அருளொளிக் கதிர்கள்
காலிப் பூக்கள் - வெட்டவெளியிலிருந்தே அருளொளிக் கதிர்கள் வருவதால் காலியாகத் தானே தென்படும்!


ஏதாவது
தெரிந்தாலும் - முகவரிகள்
சரிவரப் புரிவதில்லையாம்.


முகவரிகள் - மரணம், அசுத்த தேகமாம் பொய்(பேருக்கு மெய்)பழகிய பழக்க தோஷத்துக்குப் பெருவாழ்வு, சுத்த தேகமாம் மெய்(மெய்யாகவே) இப்புது முகவரிகள் சரியாகப் புரியாது தான்!


புரிய முற்பட்டாலும்-கழுத்தை
நெரித்துத் தள்ளுவதில்
முழி பிதுங்கும் நிலையாம்.


முழி பிதுங்கும் நிலை - புரிய முற்பட்டால் பர குண்டலினி இறக்கத்தால், ஊன விழி போய் ஞான விழி பிறக்கத் தளையுண்ட தலை கழன்று தனித்தலைமை நாயகனே அத்தலத்தில் 'ஐ'யாகப் பொருந்த கழுத்து நெரியுந் தானே!(தலை = தல+ஐ)


விக்கிரமாதித்தான் வேதாளமாய்
மீண்டும் மீண்டும் முயன்றால்
கண் கட்டிய நீதி தேவதையின்
கரமிருக்கும் தராசாய் தாங்களாம்..


தாங்கள் நடராஜ வள்ளலாய் ஓயாது ஆடத் தங்களைப் பிடிக்க நானும் ஓயாது முயல்கிறேன்!


இப்படி
இன்னும் பல குற்றச்சாட்டுகள்
உன்னைக் கண்ட என்மீது.

எப்படித்
தெரியும் அவர்களுக்கு..

உன்னைப் பார்த்த பின்பு
மின்னலைப் பிடித்து
வார்த்தை சிறையிலிட்டால்
எழுத்துகளுக்கு பின்னால்
உனது முகம் என்பது..


உண்மை தான், கருத்த என் எழுத்துக்களிலும் வள்ளல் உன் வெள்ளங்கி முகமே என அவர்களுக்கு(பேருக்குச் சன்மார்க்கிகளுக்கு) எப்படித் தெரியும்!

அமரரே! உம் காதல் கவிதையின் ஆழத்தில் என்னைப் பற்றிய என் பார்வை புதைந்து கிடக்கிறதே!

என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றியும் உமக்கு, தொடரட்டும் உம் காதல் யோகம்!

அமரன்
23-08-2008, 12:23 PM
எந்தப் பந்தானாலும் சிக்சராய் வெளுத்து தள்ளும் பலே ஆட்டக்காரர் அய்யா நீங்கள். அசத்தல் என்பதன் அர்த்தம் ஆழமாக அறிந்தேன். நன்றி நாகரா அவர்களே

பிச்சி
01-09-2008, 10:50 AM
ரொம்பவே வித்தியாசமான சிந்தனை அமரன் அண்ணா

அவள் முகம் பற்றி எழுதியது கிரேட்.... அழகான கவிதை.

அன்புடன்
பிச்சி