PDA

View Full Version : விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு


அறிஞர்
14-08-2008, 10:29 PM
அன்பு உறவுகளே...

நீண்ட விடுப்பில் செல்வதென்றால் இங்கு தெரிவியுங்கள்.

சிவா.ஜி
27-08-2008, 10:57 AM
பணி மாறுதலுக்காக..சவுதியிலிருந்து அமீரகம்(துபாய்) செல்கிறேன். செப்டம்பர் 15 ஆம் தேதிவரை மன்றம் வருவது சிரமமாக இருக்கும். பணியேற்றுக்கொண்டவுடன் மீண்டும் வருவேன்.

அமரன்
27-08-2008, 11:50 AM
இந்தப் பதிவேட்டில் முதலானது போல வேலைத்தளத்திலும் முதல்வனாக வாழ்த்துகள். நல்லபடியாக மன்றம் திரும்பிவரவும் வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
27-08-2008, 11:56 AM
உங்கள் முதல் வாழ்த்துக்கு மிக்க நன்றி அமரன். நிச்சயம் வருவேன். வராம.........???

பாரதி
27-08-2008, 02:16 PM
வாருங்கள் சிவா. இனிய வாழ்த்து.

நேசம்
27-08-2008, 04:12 PM
சிவா அண்ணா பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்.

ஓவியன்
27-08-2008, 05:25 PM
அமீரகமா, அப்படியே பக்கத்தில் நம்ம நாட்டுக்கும் வந்திட்டு போறது...!! :)

பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்களும்......

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-08-2008, 05:28 PM
பயணம் இனிதே நிறைவேறி வெற்றிகரமாய் மன்றம் திரும்பிட வாழ்த்துக்கள்.

இளசு
27-08-2008, 05:57 PM
புதுப்பணியில் இன்னும் சிறக்க வாழ்த்துகள் சிவா!

ஆதி
27-08-2008, 06:02 PM
நற்பயணமாய் அமைந்து.. சேரும் வேலை செம்மையாய் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா..

அறிஞர்
27-08-2008, 08:42 PM
பயணம், வேலை சிறப்பாக அமையட்டும் சிவா.ஜி.

ஓவியா
27-08-2008, 08:44 PM
புதிய வேலைக்கு என் வாழ்த்துக்கள் சிவா.ஜி அண்ணா,

முதல் மாசம் சம்பளம் எடுத்ததும் முழுவதையும் மறவாமல் எனக்கு அனுப்பி வைத்து விடுங்கள்.......:p

செல்வா
28-08-2008, 12:11 AM
வாழ்த்துக்கள் அண்ணா..... :)

:traurig001::traurig001::traurig001::traurig001:

சிவா.ஜி
28-08-2008, 05:26 AM
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மனம்நிறைந்த நன்றி. புது வேலையைவிட பாரதி, அன்பு, சுபி இவர்களையெல்லாம் சந்திக்க முடியுமே என நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

சுகந்தப்ரீதன்
28-08-2008, 05:45 AM
அண்ணா... சொல்லவே இல்லியே.. இங்க வரேன்னு இதுவரை என்கிட்டக்கூட..!!

சரி..சரி.. இப்பவே சண்டை வேணாம்... வாங்க நீங்க... அப்புறமா மத்ததையெல்லாம் பேசிக்கலாம்..!!

சிவா.ஜி
28-08-2008, 06:47 AM
உறுதியான பிறகு சொல்லிக்கொள்ளலாமென்றிருந்தேன் சுபி. இப்ப என்ன? அங்க வந்து பஞ்சாயத்து வெச்சுக்கலாம்.

அமரன்
28-08-2008, 08:57 AM
உறுதியான பிறகு சொல்லிக்கொள்ளலாமென்றிருந்தேன் சுபி. இப்ப என்ன? அங்க வந்து பஞ்சாயத்து வெச்சுக்கலாம்.

இப்படியா..
:ernaehrung004::ernaehrung004::ernaehrung004::ernaehrung004::ernaehrung004::ernaehrung004:

சுகந்தப்ரீதன்
28-08-2008, 09:08 AM
இப்படியா..
:ernaehrung004::ernaehrung004::ernaehrung004::ernaehrung004::ernaehrung004::ernaehrung004:அண்ணே.. உங்களை நாட்டாமைன்னு சொன்னதுக்கு இப்படியா.. அவையில வச்சி எங்களை விசாரிக்கறது..??:icon_p::icon_p::icon_p:

அக்னி
28-08-2008, 07:56 PM
புதிய இடத்தில்,
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்... :080402gudl_prv:

அங்கையாச்சும்,
தமிழ்மன்றத்தை (ஆபீஸ்ல),
பிளாக் பண்ணாம வச்சிருப்பாங்களா...
அங்கையாச்சும்,
யாராச்சும்,
வலர்லெஸ்ஸத் திறந்து வச்சிருப்பாங்களா...
:icon_hmm:
யோசிப்பது சிவா.ஜி... வாசிப்பது நீங்கள்...

மதுரை மைந்தன்
28-08-2008, 08:14 PM
மன்ற நண்பர்களே,

புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறேன். வரும் செப்டம்பர் 6ம் தேதி வாஷிங்டனிலிருந்து கிளம்பி வழியில் பீனிக்ஸ் நகரத்தில் எனது மகளைப் பார்த்து விட்டு சான் பிரானசிஸ்கோ வழியாக மெலபோர்ன் நகருக்கு செல்கிறேன். மன்றத்தில் இடையிடையே நேரம் கிடைக்கும் போது வருவேன்.

அக்னி
28-08-2008, 08:28 PM
பயணம், வாழ்க்கை இனிதாக அமைய வாழ்த்துகள்...

மன்றம் வர ஏதுவான சாத்தியப்பாடுகள், விரைவில் உங்களுக்கு அமையட்டும்...
மதுரை வீரன் அவர்களே... விரைந்து மன்றம் வாருங்கள்...

அமரன்
28-08-2008, 08:43 PM
நேரம் கிடைக்கும் போது மன்றம் வாருங்கள் மதுரை வீரன். புதிய தங்கிடம், புதிய பணியிடம்.. எல்லாம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்

ஓவியன்
29-08-2008, 06:36 AM
பயணம் இனிதே அமையட்டும் மதுரை வீரன்..!!

அன்பு உறவுகளுடன் இருக்கப் போகும் தருணங்கள் சந்தோசமாக அமைய என் வாழ்த்துக்களும்...!! :)

மதி
29-08-2008, 07:32 AM
பயணம் நல்லபடி அமையட்டும். பீனிக்ஸ்..எனக்கு கொஞ்சம் நெருக்கமான ஊர் வேற.. :)

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு சேர்ந்தபின் மன்றம் தொடர்ந்து வாருங்கள். உங்கள் தொடர் பாதியில் நிற்கிறது.. :)

தாமரை
29-08-2008, 08:10 AM
புதிய இடங்களில் கூடுகட்டும் பறவைகளுக்கு வாழ்த்துக்கள்..

வேடந்தாங்களுக்கு வரும் பறவைகள் கூடுகட்ட சரியான இடம் தேர்ந்தெடுத்து, கவன்ம் செலுத்து கூடுகட்டி தங்கள் இருப்பை கவனமாய் செய்துகொள்வது போல, நீங்களும் கவனம் செலுத்தி உங்கள் இருப்பை ஸ்திரப்படுட்திக் கொள்ளுங்கள். உங்கள் மீள்வரவிற்காய் காத்திருப்போம்.

நம்பிகோபாலன்
29-08-2008, 10:57 AM
உங்களின் பயணம் இனிதே அமையட்டும் மதுரை வீரன்..!!! வாழ்த்துக்கள்..

pgk53
31-08-2008, 10:13 AM
அன்பு நண்பர்களே......மூன்று வாரங்கள் விடுமுறையில் தாயகம் செல்லுகிறேன்.
அடுத்த மாத இறுதியில் சந்திப்போம்.
அனைவருக்கும் எனது புனித ரமலான் வாழ்த்துக்கள்.

ஓவியன்
31-08-2008, 11:00 AM
சென்று வாருங்கள் அண்ணா..!!
தாயகப் பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்களும்....

இளசு
31-08-2008, 12:52 PM
நல்லமுறையில் விடுப்பைக் கழித்து வாருங்கள் பிஜிகே அவர்களே!

அறிஞர்
02-09-2008, 03:17 PM
பி.ஜி.கே பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

ஓவியா
02-09-2008, 06:43 PM
அன்பு நண்பர்களே......மூன்று வாரங்கள் விடுமுறையில் தாயகம் செல்லுகிறேன்.
அடுத்த மாத இறுதியில் சந்திப்போம்.
அனைவருக்கும் எனது புனித ரமலான் வாழ்த்துக்கள்.

அண்ணா,
எல்லோரும் போல நான் வாழ்த்த போவதில்லை, மாறாக திட்ட வந்தேன். ஐயா வருவெதே ஆடிக்கும் அம்மாவாசைக்கும் இதிலே லீவுவேற.. :cool::cool::cool:.

ஓ ரமலான் விடுப்பா, சரி சரி சந்தோஷமா போய் வாருங்கள்.
விட்டில் அனைவரிடமும் தமிழ் மன்ற மக்களில் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.

இனிய ரமலான் வாழ்த்துக்கள் அண்ணா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
02-09-2008, 07:04 PM
எனது அலுவலகப் பணி மாற்றப்பட்டிருப்பதால் சிறிது நாள் மன்றத்திற்கு வர இயலாது. எனவே இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி எனது மொக்கைகளை படிக்கும் துன்பமின்றி மகிழ்சசியாக சிறிது நாள் இருந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அமரன்
02-09-2008, 09:04 PM
அடுத்து சில நாட்களுக்கு புதிரோ புதிரும் நல்ல கவிதைகள் சிலவும் காணக்கிடைக்காதா என்ற ஏக்கம் குடி வந்துவிட்டது. இருவருக்கும் இனிமையான மன்ற விடுப்புக் காலம் அமைய வாழ்த்துக்கள்.

ஓவியன்
03-09-2008, 06:02 AM
அன்பின் ஜூனைத், நீங்கள் மீள மன்றம் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.....

அக்னி
03-09-2008, 04:19 PM
pgk அவர்களின் விடுமுறை சிறப்பாக அமையவும்,
ஹஸனீ அவர்களின் பணிமாற்றம் நல்லபடியாக அமையவும்,
வாழ்த்துகள்...

தென்றல்
16-09-2008, 05:22 PM
பெரும்பான்மையான நேரங்களில் தேடலே பெரும்பான்மையாக இருப்பதால் எழுத முடிவதில்லை. அப்படியே அவசரமாக எழுத நமக்கும் வாய்க்கவில்லை. அப்படியே எழுதாமல் நட்டமுமில்லை. கூடி கும்மியடிக்க சில காலம் ஆனாலும் கும்மியடிப்பதை வேடிக்கை பார்க்கவேனும் வருகிறேன்... :D

நேரம் ஒதுக்க முடிந்தால் அவ்வப்போது எழுதுகிறேன். :icon_b:

அன்புடன்
தென்றல்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
18-09-2008, 07:16 PM
என் உயிரினும் மேலான எனது அன்புச் சகோதரரர்களுக்கு. சற்று பணி நிமித்தம் காரணமாக என்னால் அதிகம் மன்றத்திற்கு வர இயல்வதில்லை. மனங்க கவர் பதிப்பாளர் பட்டயமெல்லாம் வழங்கி உள்ளீர்கள். எனது திறமையை மெருகேற்றிக் கொள்ள் நீங்கள் அனைவரும் எனது ஒவ்வொரு உறுப்பாய் செயல்பட்டு உள்ளீர்கள் . இன்னும் சிறிது நாட்களுக்டகு முழுமையாக என்னால் மன்றம் வர இயலாது. இடை இடையே வந்து அவ்வப்போது கவிதை வழங்குகிறேன். இதற்காக தயவ கூர்ந்து என்னை மன்னிக்கவும். இந்த அன்புச் சகோதரனை எப்பொழுதும் போல் வழி நடத்தித் தாருங்கள். நன்றி.

அக்னி
18-09-2008, 09:16 PM
தேடல்களினாலேயே, நிறைவான படைப்புக்களை நிரம்பத் தர முடியும்.
சுமந்து வரப்போகும் தென்றலுக்காகக் காத்திருப்போம்.

பணி சிறக்க வாழ்த்துகள்...

*****

எஸ்.எம். சுனைத் ஹஸனீ அவர்களே...
தங்களது தொடர்ச்சியான மன்ற வருகைக்குக், காலம் அனுமதிக்கட்டும்.

உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

ஓவியா
18-09-2008, 09:53 PM
கவலை வேண்டாம் நண்பரே.

நேரம் கிடைக்கும் பொழுது வாருங்கள். படியுங்கள், படையுங்கள்.

என்றும் வெற்றித்திருமகணாக திகழ வாழ்த்துக்கள்.

***********************************************************************************************************************************

ஆமாம் ஏன் சுனிதின் பெயருக்கு மனக்கவர் பதிவாளர் வர்ணம் (ஆரஞ்சு) பூசப்படவில்லை?

தீபன்
19-09-2008, 01:52 AM
நல்லது நண்பரே. உங்கள் பணி சிறக்க வழ்த்துக்கள்.

மதுரகன்
21-09-2008, 03:13 AM
மன்னிக்கவும் அவசரமாக கொழும்பு வந்துவிட்டேன் பரீட்சை ஒன்றுக்காக..
25 அக்டோபர் வரை ஒரு நீண்ண்டடட விடுப்பு...

சூரியன்
21-09-2008, 03:35 PM
அதிக பணிப்பழு காரணமாக 15 நாள் விடுப்பில் செல்கின்றென்.
முடிந்தவரை விரைவில் மன்றம் வர முயற்சி செய்கிறேன்.

தீபன்
22-09-2008, 04:01 AM
சூரியனே போகிறதா... இப்ப மன்றம் இருட்டில்தானா... சரி சரி, விரைவில் திரும்புங்கள். (ம்ம்ம், இப்ப மன்றில் ஆதவனுமில்லை... சூரியனுமில்லை...)

அக்னி
22-09-2008, 04:08 AM
சூரியனே போகிறதா... இப்ப மன்றம் இருட்டில்தானா... சரி சரி, விரைவில் திரும்புங்கள். (ம்ம்ம், இப்ப மன்றில் ஆதவனுமில்லை... சூரியனுமில்லை...)
அதான் தீபமாய் நீங்க இருக்கீகளே...

*****

பரீட்சையை நன்றாக எழுந்துங்கள் மதுரகன்.
வாழ்த்துகள்...

*****

பணிச்சுமை சீக்கிரமே குறையட்டும்.
சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகள் சூரியன்...

ஓவியன்
22-09-2008, 05:31 AM
சூரியன், மதுரகன் உங்கள் இருவரது விடுமுறைகளும் பயன் மிக்கதாக அமைய என் வாழ்த்துகளும்.......

அதான் தீபமாய் நீங்க இருக்கீகளே...
:icon_b: :icon_b: :icon_b: :icon_b: :icon_b: :icon_b: :icon_b: :icon_b:

shibly591
26-09-2008, 11:11 AM
கொழும்பில் இருந்து ஊருக்கு கொஞ்ச நாட்கள் எங்கள் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் தொடர்ந்து இணைய முடியாமல் போகலாம்..ஆயினும் 2-3 நாட்களுக்கு ஒரு தடவை மன்றத்துடன் இணைவேன்..

தடங்கல்களுக்கு மன்னிக்கவெண்டும்..

மன்றமே எனது சுவாசம் ஆதலால் முடியுமானபோது இணைய தயாராகவுள்ளேன்..

மற்றபடி இது நீண்ட பிரிவு இல்லை..

நன்றிகள்..

ஓவியன்
26-09-2008, 12:58 PM
சென்று வாருங்கள் ஷிப்லி..!!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ரமழான் பெருநாள் வாழ்த்துக்கள்..!! :)

அமரன்
26-09-2008, 06:10 PM
ஷிப்லி...
மன்றத்தின் பெருநாள் வாழ்த்தை உங்கள் குடும்பத்தாருங்கு சொல்ங்கள். களிப்புடன் திரும்பிவாருங்கள்.

பாண்டியன்
23-10-2008, 09:46 AM
பயணம் இனிதே நிறைவேறி வெற்றிகரமாய் மன்றம் திரும்பிட வாழ்த்

ஓவியா
23-10-2008, 08:41 PM
கொழும்பில் இருந்து ஊருக்கு கொஞ்ச நாட்கள் எங்கள் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் தொடர்ந்து இணைய முடியாமல் போகலாம்..ஆயினும் 2-3 நாட்களுக்கு ஒரு தடவை மன்றத்துடன் இணைவேன்..

தடங்கல்களுக்கு மன்னிக்கவெண்டும்..

மன்றமே எனது சுவாசம் ஆதலால் முடியுமானபோது இணைய தயாராகவுள்ளேன்..

மற்றபடி இது நீண்ட பிரிவு இல்லை..

நன்றிகள்..

மன்றத்தை நேசித்த அனைவரும் இந்த மந்திரத்தைதான் ஜபிப்பார்கள்..
இந்த வார்த்தையை மனதில் வைத்துதான் '''சுவாசம்=காற்று=ஆவி''' இங்கு பல மாறுவேட ஆவிகளும் உலாவருகின்றன,
:D:D எல்லாம் மன்றத்தின் மேல் வைத்துள்ள காதல்தான். :redface::redface:

ஷிப்லிக்கு ரமடன் முடிந்து இன்னும் 2நாளில் தீபாவளி கொண்டாட போராறே :D

சூரியன்
24-10-2008, 02:03 PM
பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணா.

daks
24-10-2008, 04:50 PM
அனைவருக்கும் வணக்கம்,

நண்பர்களே, என்னுடைய ANIMATION தேர்வு வருவதினால், நான் நாளை (25/10/08) முதல் (11/11/08) வரை விடுப்பில் செல்கிறேன், அதனால் என்னால் நம் மன்றத்திற்க்கு படைப்புகளை சமர்ப்பிக்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன், யாரும் இதை பாட்டாசு வெடித்து கொண்டாட வேண்டாம் (அப்பாடா இனிமே எழுத்து பிழையுடன் தப்பு தப்பா சிறுகதை வாராது என்று) , ஹா ஹாஹா.
நான் மன்றத்தில் சேர்ந்து இன்றுடன் மூன்று நாட்கள் தான் ஆகிறது, இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து விடுப்பு கொடுங்கள்.

அமரன்
24-10-2008, 05:03 PM
மூர்த்தியின் தீபாவளி விருந்து எமக்குக் கிடையாதா?
பரவாயில்லை மூர்த்தி. சென்று வென்று இன்னும் பல படைப்புகளுடன் திரும்பி வாருங்கள்.

shibly591
24-10-2008, 05:44 PM
நெருங்கிப்பழகிய நண்பரை பிரியம் வருத்தத்தை மூன்று நாட்களே பழகிய நீங்கள் தந்திருப்பதில் புரிகிறது..உங்கள் நட்பு மனப்பான்மை..

பரீட்சை வெற்றியடைய வாழ்த்துக்கள்

இளசு
14-11-2008, 10:55 PM
மன்ற நண்பர்கள் அனைவருக்கும்,

மூன்று வார விடுப்பில் தாயகம் செல்கிறேன்..

டிசம்பர் 7 திரும்புகிறேன்..

அதன்பின் மன்றவருகை வழமைபோல் இருக்கும் என நம்புகிறேன்..

பாரதி
15-11-2008, 01:40 AM
அன்புள்ள அண்ணா,
உங்கள் பயணமும் விடுமுறையும் இனிதே அமைய வாழ்த்துகிறேன்.

ஓவியன்
15-11-2008, 02:45 AM
அன்பின் அண்ணா, தாயகப் பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்....

அமரன்
16-11-2008, 10:01 PM
அன்புள்ள அண்ணா!
பயணம் இனிதே அமைக.

நீங்கள் விடுப்பு முடிந்து வந்து
வழக்கம் போல் மன்றம் வளமாகும்
நாளுக்காக ஆவலுடன் காத்திருகிறேன்.

ஓவியா
16-11-2008, 11:22 PM
மன்ற நண்பர்கள் அனைவருக்கும்,

மூன்று வார விடுப்பில் தாயகம் செல்கிறேன்..

டிசம்பர் 7 திரும்புகிறேன்..

அதன்பின் மன்றவருகை வழமைபோல் இருக்கும் என நம்புகிறேன்..

என்னது டிசம்பர் 7 ஆ, :eek::eek::eek:

சரி ஆனந்தமாக கழித்து வாருங்கள்.

(மக்கா, டிசம்பரில் மன்றத்தில் யாருக்கோ கல்யாணம்னு பேச்சு அடிபடுதே, வதந்தி உண்மையா இருக்குமோ :D:D:D)

சூரியன்
17-11-2008, 11:30 AM
வேலை விசயமாக ஒரு வார விடுப்பில் செல்கின்றேன்.
விரைவில் மன்றம் வருவேன்.

Narathar
17-11-2008, 11:38 AM
இளசு மற்றும் சூரியனது
விடுமுறை இனிதே கழிய
வாழ்த்துகின்றேன்

சிவா.ஜி
17-11-2008, 12:23 PM
இளசு நாட்டிலிருக்கும் நேரத்திலும், மன்ற மணிகள் கூடும் நாளிலும் அங்கிருக்க முடியாதது மனதுக்கு வருத்தமாக உள்ளது.

இளசு தங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்.

சூரியனின் விடுப்பும் பயனுள்ளதாய் அமைய வாழ்த்துகள்.

mukilan
28-11-2008, 10:06 PM
நண்பர்களே, மன்ற சந்திப்பிற்காக (ஆமாவா???!!) ஒரு மாதத்திற்கு இந்தியாவில் கொட்டமடிக்க இருப்பதால் என்னால் மன்றம் அடிக்கடி வர இயலாது. எங்க ஊர்ல இணைய இணைப்பு இல்லையே.. என்ன செய்ய?

ஓவியா
28-11-2008, 11:01 PM
நண்பர்களே, மன்ற சந்திப்பிற்காக (ஆமாவா???!!) ஒரு மாதத்திற்கு இந்தியாவில் கொட்டமடிக்க இருப்பதால் என்னால் மன்றம் அடிக்கடி வர இயலாது. எங்க ஊர்ல இணைய இணைப்பு இல்லையே.. என்ன செய்ய?

சென்று வாருங்கள் கலத்தில் வென்று வாருங்கள்...... :icon_b:

வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த உண்ணத உணர்வுகளை அப்படியே சேமித்து, அகமகிழ்ந்து, இன்பமாய் மீண்டும் எங்களுடன் வந்து இணைய என் வாழ்த்துக்கள்.

என்னது ஊரில் இணைப்பு இல்லையா....... (லைன் ;) கொடுத்தாச்சுனு நினைச்சேன்) .... யோசித்து வாய் விட்டே சிரித்து விட்டேன்.... :lachen001::lachen001:

தென்றல்
29-11-2008, 04:01 AM
நண்பர்களே, மன்ற சந்திப்பிற்காக (ஆமாவா???!!) ஒரு மாதத்திற்கு இந்தியாவில் கொட்டமடிக்க இருப்பதால் என்னால் மன்றம் அடிக்கடி வர இயலாது. எங்க ஊர்ல இணைய இணைப்பு இல்லையே.. என்ன செய்ய?

உண்மையாவா? என்னால நம்பமுடியலை!!!!! :aetsch013:

தென்றல் : தவளை!! தவளை!!
ஓவி : ஆவ்வ்வ்வ்வ்

மதி
29-11-2008, 04:05 AM
சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் முகில். :)

சிவா.ஜி
29-11-2008, 04:20 AM
முகிலின் தாயக பயணம் இனிதே நடைபெற வாழ்த்துகள். கூடிய விரைவில் இணைப்பு கிடைக்க வாழ்த்துகள்(இணைய இணைப்புதானுங்கோ....)

செல்வா
04-12-2008, 01:57 PM
நானும் ஊருக்குப்போறேனுங்க... ஒரு மாதம் விடுமுறை.
எங்கள் ஊர் இணைய வசதி எந்தளவிற்கு இருக்கிறதென்றுத் தெரியவில்லை... அதைப்பொறுத்தே எனது மன்ற வருகை இருக்கும்.
எல்லாருக்கும் முன்கூட்டியே கிறிஸ்துபிறப்பு மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லிவிடுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.

அமரன்
04-12-2008, 02:26 PM
சென்று வாங்க பொறுப்பாளர்களே!

அக்னி
04-12-2008, 03:21 PM
அனைவருக்கும் விடுமுறை இனிதாக, இன்பமாக அமைய வாழ்த்துகள்.

மதி
04-12-2008, 04:42 PM
வாங்க செல்வா... சந்திக்க காத்திருக்கிறோம்.

daks
04-12-2008, 05:07 PM
பொறுப்பாளரே பொறுப்பா போய்டு திரும்பி வாங்க

ஓவியா
04-12-2008, 05:40 PM
நானும் ஊருக்குப்போறேனுங்க... ஒரு மாதம் விடுமுறை.
எங்கள் ஊர் இணைய வசதி எந்தளவிற்கு இருக்கிறதென்றுத் தெரியவில்லை... அதைப்பொறுத்தே எனது மன்ற வருகை இருக்கும்.
எல்லாருக்கும் முன்கூட்டியே கிறிஸ்துபிறப்பு மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லிவிடுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.

போய்ட்டு சந்தோசமா வாங்க.

வந்ததும், ஊரிலே என்னென்ன செய்சீங்கனு விவரமா எழுதுங்க... அதான் அந்த 'மெட்ராஸ் மீட்டீங்' அததான் சொன்னேன்.

உங்கள் ரகசியமா கவனிக்க ஆள் அனுப்பியிருக்கேன், கொஞ்சம் கவனமா இருங்க. ம்ம் சும்மா சும்மா.

மன்றத்த மறந்துட்டு குடும்பத்தாருன் ஆனதமாக குதுகளிக்க என் வாழ்த்துக்கள்.

பை டா டா.

அமரன்
04-12-2008, 09:12 PM
பை டாடா.
இதென்னது டாடா சுமோ ன்னு பயமுறுத்திட்டு..

அவரு கமெராவோட போறாராரம் எல்லாத்தையும் சுட்டுத் தள்ள

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
05-12-2008, 05:19 PM
என் உயிரினும் மேலான அன்பு மன்ற உள்ளங்களுக்கு. மிக நீண்ட நாட்களுக்குப் பின் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தொடர்பு விட்டுப் போனதற்காக தங்களிடம் மன்னிப்பும் கோருகிறேன். இப்பொழுதும் மிகச் சரியாக மன்ற வருகை புரியும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் ஓரிரு நாட்களுக்கு ஒரு முறையாவது வர முயற்சி செய்கிறேன

அமரன்
05-12-2008, 05:56 PM
வாங்க சுனைத்!
வாய்ப்பு அமையும் போதெல்லாம் வருகை புரியுங்கள்.

சிவா.ஜி
06-12-2008, 06:04 AM
போய்ட்டு நல்ல நிழற்படங்களோட திரும்பி வாங்க செல்வா. வந்ததும் ஒரு பதிவு போடுங்க எங்களுக்கெல்லாம் சந்தோஷம் ஏற்படுத்துற மாதிரி....

விக்ரம்
06-12-2008, 01:21 PM
போய்ட்டு நல்ல நிழற்படங்களோட திரும்பி வாங்க செல்வா. வந்ததும் ஒரு பதிவு போடுங்க எங்களுக்கெல்லாம் சந்தோஷம் ஏற்படுத்துற மாதிரி....
செல்வா எடுக்கற நிழற்படமா? அல்லது செல்வாவின் திருவிளையாடல்களை மற்றவங்க எடுக்கற நிழற்படமா?

ஜாக்கிரதை செல்வா!

இராஜேஷ்
08-12-2008, 03:14 AM
நன்பர்களே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்துவிட்டேன், விடுப்பு பதிவேட்டில் பதியாமல் சென்றதற்கு மண்ணிக்கவும்.

இதொ வந்துவிட்டேன் பலபுதிய படைப்புக்கலோடு. என்னை எற்றுக்கோள்ளுங்கள் நன்பர்களே!!!!!!!!

pgk53
12-12-2008, 02:15 AM
அன்பு நண்பர்களே....அனைவருக்கும் வணக்கம்.
இன்று நான் விடுமுறையில் தாயகம் புறப்பட உள்ளேன்.
ஒரு மாதம் கழித்து புத்தாண்டில் மீண்டும் சந்திப்போம்.
அனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வணக்கம்.

ஓவியா
14-12-2008, 02:25 PM
அன்புள்ளங்களே, பாசமிகு சான்றோர்களே, என் நேசமிகு சகோதர உறவுகளே, அன்பி இனிய மகளீரணி சகோதரிகளே,

நான், அனேகமாக நாளையிலிருந்து (காரணம் ஒன்றுமில்லை, சும்மாதான் மறத்துக்கு வர வேண்டாம் என்று) நீண்ட விடுப்பில் செல்ல எண்ணம் கொண்டுள்ளேன்.......

உங்கள் அனைவரையும் மிகவும் 'மிஸ்' பண்ணுவேன். இப்பவே கொஞ்சம் அழுகை வருகிறது. :traurig001:

நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக, கல்வி, செல்வம், வீரம், அழகு, பண்பு, ஆன்மீகம் மிகுந்து வாழ எனது வாழ்த்துக்கள்....

அனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் தின வாழ்த்துக்களும் இனிய 2009 புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகுக.

அன்புடன்
- ஓவியா.

Narathar
14-12-2008, 05:38 PM
Dear Ooviyah! your leave application is not granted. http://content.sweetim.com/sim/cpie/emoticons/000202C8.gif

daks
15-12-2008, 03:31 AM
அன்புள்ளங்களே, பாசமிகு சான்றோர்களே, என் நேசமிகு சகோதர உறவுகளே, அன்பி இனிய மகளீரணி சகோதரிகளே,

நான், அனேகமாக நாளையிலிருந்து (காரணம் ஒன்றுமில்லை, சும்மாதான் மறத்துக்கு வர வேண்டாம் என்று) நீண்ட விடுப்பில் செல்ல எண்ணம் கொண்டுள்ளேன்.......

உங்கள் அனைவரையும் மிகவும் 'மிஸ்' பண்ணுவேன். இப்பவே கொஞ்சம் அழுகை வருகிறது. :traurig001:

அன்புடன்
- ஓவியா.

தப்பாக நினைக்காதீங்க ஒவியா சீஸ்டர்

மன்றத்தில் சேர்ந்த எல்லாரும், மன்றத்தை தங்களில் ஒன்றாக தான் நினைக்கிறார்கள், ஏன் இங்கு இருக்கும் பல பெரிய மனிதர்கள், கை நிறைய வேலை வைத்திருப்பவர்கள், எல்லோரும் தினமுன் ஒரு முறையாவது மன்றம் வந்து போகிறார்கள். என்னுடையது இன்னும் சுத்தம், மன்றம் என்பது எனக்கு ஒரு எக்ஸ்டஸி மாதிரி ஆயிடுச்சி, இதை நான் மிகையாக சொல்லவில்லை. தினமும் ஒருமுறையாவது வந்துவிடனும் தோணும், சேர்ந்த இரண்டு மாதத்தில் இருந்து இந்த கதை தான் எனக்கு. இன்னும் பல பேரின் நிலைமை இது தான், ஆனால் மன்றத்தின் சுடர் ஆகிய நீங்கள்

நான், அனேகமாக நாளையிலிருந்து (காரணம் ஒன்றுமில்லை, சும்மாதான் மறத்துக்கு வர வேண்டாம் என்று) நீண்ட விடுப்பில் செல்ல எண்ணம் கொண்டுள்ளேன்.......

சும்மாவா????????????????, சரி சீனியர் ஆகிய நீங்கள் இந்த முடிவு சும்மா எடுத்து இருக்கமாட்டீங்கனு நல்லா தெரியுது, அப்ப நீங்க எழுதிய இரண்டாம் பத்தி உண்மை என்றால், நீங்க பதித்த முதல் பத்தியும், மூன்றாம் பத்தியும் பொய் என்று அர்த்தம். என்னுடைய வார்த்தைகள் கொஞ்சம் அளவு மீறுவதாக கூட இருக்கலாம். ஏனென்றால் மன்றத்திற்க்கு வருவதும் வராததும் அவர் அவர் விருப்பம். அதே போல வராதவரை தரதர வென இழுத்து வந்து மன்றத்தில் சேர்ப்பது எங்களின் விருப்பம். நீங்கள் தம்பீ தம்பீ, என்று கூப்பிடுவதின் உரிமையில் பதித்தேன் நன்றி. (இத நீங்க எப்ப படிச்சி, எப்ப வந்து, அய்யோ அய்யோ)

சூரியன்
15-12-2008, 06:28 AM
அக்கா என்ன இப்படி சொல்றீங்க ?
சீக்கிரம் மன்றத்துடன் இனையுங்கள்.
நீண்ட விடுப்பை, சிறிய விடுப்பாக மாற்றுங்கள்.

அன்புடன்
தம்பி சூரியன்.

நாட்டாமை
15-12-2008, 08:01 AM
நான், அனேகமாக நாளையிலிருந்து (காரணம் ஒன்றுமில்லை, சும்மாதான் மறத்துக்கு வர வேண்டாம் என்று) நீண்ட விடுப்பில் செல்ல எண்ணம் கொண்டுள்ளேன்...
அக்கா....
நீண்ட நாட்கள்... நீண்டு விடாமல்
சீக்கிரம் மன்றம் வர என் விண்ணப்பங்கள்...

ஓவியா
15-12-2008, 09:05 AM
நாரதர் அண்ணா, மூர்த்தி, சூரியன், நாட்டாமை உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

உங்கள் அன்பு கண்டு மனம் மகிழ்ந்தேன். நன்றிகள்.

சரி, அப்பப்ப வரேன், ஆனால் எப்பப்ப வருவேன் என்று சொல்லமுடியாது.

அப்படி வரவில்லையென்றால் கோவிக்கக்கூடாது மக்கா.

(விடுப்பு சொன்னாலும் அடிக்கடி மன்றம் வரும் ஒரே ஆளு ஓவியானு நினைப்பவர்களும் உண்டு)

ஆதவா
15-12-2008, 10:16 AM
அன்புள்ளங்களே, பாசமிகு சான்றோர்களே, என் நேசமிகு சகோதர உறவுகளே, அன்பி இனிய மகளீரணி சகோதரிகளே,

நான், அனேகமாக நாளையிலிருந்து (காரணம் ஒன்றுமில்லை, சும்மாதான் மறத்துக்கு வர வேண்டாம் என்று) நீண்ட விடுப்பில் செல்ல எண்ணம் கொண்டுள்ளேன்.......

உங்கள் அனைவரையும் மிகவும் 'மிஸ்' பண்ணுவேன். இப்பவே கொஞ்சம் அழுகை வருகிறது. :traurig001:

நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக, கல்வி, செல்வம், வீரம், அழகு, பண்பு, ஆன்மீகம் மிகுந்து வாழ எனது வாழ்த்துக்கள்....

அனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் தின வாழ்த்துக்களும் இனிய 2009 புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகுக.

அன்புடன்
- ஓவியா.

தாராளமாகப் போய்வாருங்கள்...

சந்தோஷமாக அனுப்பும்
ஆதவன்..

ஓவியா
15-12-2008, 10:31 AM
தாராளமாகப் போய்வாருங்கள்...

சந்தோஷமாக அனுப்பும்
ஆதவன்..

:):):):)

சூரியன்
15-12-2008, 11:07 AM
ஒரு ஆர்டரை இந்த வாரத்திற்குள் அனுப்பியாக வேண்டும் அதுவரை மன்றத்திற்கு வர சிறிய தடங்கள்,முடிந்தவரை விரைவில் வருகின்றேன்.

Narathar
15-12-2008, 12:10 PM
ஒரு ஆர்டரை இந்த வாரத்திற்குள் அனுப்பியாக வேண்டும் அதுவரை மன்றத்திற்கு வர சிறிய தடங்கள்,முடிந்தவரை விரைவில் வருகின்றேன்.

பணியும் முக்கியம்.........
எனவே அதிலும் கவனம் செழுத்துஙள், ஆனால் முடிந்தவரை மன்றம் வாருங்கள்.

அது சரி அந்த ஓடரை இன்டெர்நெட் ஊடாக அனுப்ப முடியாதா???? :aetsch013:

சூரியன்
15-12-2008, 12:17 PM
பணியும் முக்கியம்.........
எனவே அதிலும் கவனம் செழுத்துஙள், ஆனால் முடிந்தவரை மன்றம் வாருங்கள்.

அது சரி அந்த ஓடரை இன்டெர்நெட் ஊடாக அனுப்ப முடியாதா???? :aetsch013:

அந்த ஆர்டர் சம்பந்தமான கோப்புகளை மட்டுமே இன்டநெட் வழியாக அனுப்ப முடியும்.
ஆர்டரை கப்பலில்தான் அனுப்ப முடியும்.:icon_rollout:

சிவா.ஜி
02-01-2009, 04:05 PM
அன்பு நன்பர்களே, மிக அதிகமாக மன்றத்துடன் கலந்துவிட்டேன். சிறிது நாட்களுக்கு விலகியிருக்கலாமென எண்ணியுள்ளேன். மீண்டும் எப்போதாவது சந்திப்போம். அதுவரை அனைவரிடமும் விடைபெறுகிறேன். நன்றி. வாழ்த்துகள்.

நிரன்
02-01-2009, 04:36 PM
அன்பு நன்பர்களே, மிக அதிகமாக மன்றத்துடன் கலந்துவிட்டேன். சிறிது நாட்களுக்கு விலகியிருக்கலாமென எண்ணியுள்ளேன். மீண்டும் எப்போதாவது சந்திப்போம். அதுவரை அனைவரிடமும் விடைபெறுகிறேன். நன்றி. வாழ்த்துகள்.


ஏன் சிவா அண்ணா திடீர் என்று இப்படி முடிவு:medium-smiley-045::medium-smiley-045::medium-smiley-045:

தமிழ்தாசன்
02-01-2009, 04:58 PM
ஏன் சிவா.ஜி திடீர் என்று இப்படி முடிவு?????
:medium-smiley-045::medium-smiley-045::medium-smiley-045:


நன்றி நிரஞ்சன்

prajaannamalai
02-01-2009, 05:16 PM
என்ன சிவா சார்? சரி சரி கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு சீக்கிரம் வாங்க.

இளசு
02-01-2009, 08:55 PM
அன்பு சிவா
மன்றத்தில் உங்கள் பங்கு இன்றியமையாதது..

இடைவெளி அதிகமின்றி இவ்வுறவு தொடரும் என்றே நம்புகிறேன்..

படைப்புச் சுரக்கும் உங்களுக்கு நெறிகட்டாமல் அருந்தும் எங்களுக்காக...

daks
03-01-2009, 03:01 AM
சிவா அண்ணா நீங்கள் இல்லை என்றால் புதியவர்களை யார் ஊக்கவிப்பது, எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வாங்க.

Narathar
03-01-2009, 03:28 AM
ஏன் சிவா இப்படியொரு முடிவு?
தாங்கள் சீக்கிரம் மன்றம் திரும்ப வேண்டி நிற்கின்றேன்.....

தென்றல்
03-01-2009, 03:52 AM
அன்பு நன்பர்களே, மிக அதிகமாக மன்றத்துடன் கலந்துவிட்டேன். சிறிது நாட்களுக்கு விலகியிருக்கலாமென எண்ணியுள்ளேன். மீண்டும் எப்போதாவது சந்திப்போம். அதுவரை அனைவரிடமும் விடைபெறுகிறேன். நன்றி. வாழ்த்துகள்.

எதிர்பாராதது..

வேலை அதிகம் இருந்தால் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு.... மீண்டும் வாருங்கள்... (நாளைக்கே வாருங்கள்)

நேரமின்மையால் உங்கள் படைப்புகள் பல படிக்காமல் விட்டாலும் என்றாவது ருசிக்கும் ஆசையுண்டு...

சீக்கிரமே எதிர்பார்க்கும்..
தென்றல்.

ஓவியன்
03-01-2009, 04:00 AM
அன்பு சிவா, சீக்கிரமே வாருங்கள்...

இல்லையென்றால் வருவோம்...!!

சசிதரன்
03-01-2009, 04:43 AM
சீக்கிரம் திரும்பி வாங்க சிவா அண்ணா...:)

தமிழ்தாசன்
03-01-2009, 02:11 PM
வணக்கம் அன்புள்ளங்களே!

சில நாட்கள் இப்பக்கம் இணையமுடியாதிருக்கும்.

உங்கள் அன்புள்ளத்துக்கும் ஊக்கத்துக்கும்.
மிக்க மகிழ்ச்சி!

தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!
தொடர்வோம்.

நிரன்
03-01-2009, 02:47 PM
சிவா அண்ணாவும் சென்ற இவ்வேளையில்
தாங்களும் செல்கிறீர்கள்.... மிக முக்கியமாக
விடயமாகத்தான் இருக்கும்.
அவை இனிதே நடைபெறவேண்டும்.

ஆனால் வெகுநாட்கள் எடுக்காமல்
வெகு விரைவாகவே வந்திடுங்கள்

பலர் உங்கள் பணிக்காக காத்திருப்போம்....

=============================================
கவலையுடன்
நிரஞ்சன்.......

=============================================

daks
03-01-2009, 03:23 PM
சீக்கிரம் வாங்க தமிழ்தாசன்

சசிதரன்
04-01-2009, 05:59 AM
சீக்கிரம் வாங்க தமிழ்தாசன்... காத்திருக்கிறோம்..:)