PDA

View Full Version : சுதந்திர திருநாள் வந்தது..!



வசீகரன்
14-08-2008, 03:15 PM
திருநாள் ஒன்று வந்தது..!
எம் சுதந்திர திருநாள் ஒன்று வந்தது..!

சாதி.. மத.. இன... மொழிகளில்
பிரிந்து நிற்கும்
எங்களை ஒன்றிணைக்கும்
இந்தியம் சுதந்திர திருநாள்
இன்று வந்தது..!

திக்கெட்டிலும் திரிந்துநிற்கும்
எங்களை ஒருங்கினைக்கும்
ஓசை ஒன்று வந்தது..!

எம் வாழ்க்கை.. எம் வசதி..
எம் சமூகம்..
என்று சுயநலமாய் வாழும் நம்மில்
நம் நாடு நம் மனிதர்
நம் மக்கள் எனறுபொதுநலமாய்
நினைவு படுத்த நந்நாள் வந்தது..!

இங்கு நான் அமைதியாய் உறங்க
உறக்கம் தொலைத்து
எல்லையில் உறுதியாய்
நிற்கும் என் ராணுவ நண்பனை
நினைத்து பார்க்க
சுதந்திர திருநாள் வந்தது..!

நீருக்கும் நிலத்திற்க்கும் அண்டை
மாநிலத்தானிடம் கொண்ட பகைமை
மறந்து..
கண்ட சுதந்திரத்தின் சரித்திரம்
அதன் புனிதம் அறிந்து..
அதற்கென தன்னை
இழந்தவர்களின் தியாகம் புரிந்து..!

எம்மில் நிலவும் பேதமை
மடமைகளை வேரறுத்து இணைந்திருக்க..
வந்திருக்கும் சுதந்திர திருநாள்..!

கொண்ட நாட்டின் பண்பாடு
அதை மனதிற் ஏற்றி...
பாட்டொளி வீசி பறக்கும் எம் மூவர்ண கொடி
அதை போற்றி..!

வணங்கி வரவேற்போம்..!
இந்தியம் சிறக்க இரு கரமேற்போம்..!

சுதந்திரம் போற்றுவோம்...!



மன்ற உறவுகளுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களை
தெரிவித்துகொள்கிறேன்..!
வாழ்க பாரதம்...!

அமரன்
15-08-2008, 08:32 AM
நல்லதொரு கவிதை. சுதந்திரம் கடந்து வந்த பாதையையும் தற்போது அது நிற்கும் இடத்தையும் அறிந்து சுதந்திரத்தின் மாண்பை சிதைக்காத வண்ணம் ஒவ்வொருவரும் வாழவேண்டும். எல்லைப்படை தியாகிகள் எங்குமே இல்லாத நிலை உருவாக வேண்டும். மறு பிரவேசத்திற்குப் பிற்பாடு தேசபக்திப் பாடலுடன் வசீகரன் வசீகரிக்க தொடங்கி விட்டதால் இந்த நாள் இரட்டிப்பு இனிய நாள்..

மன்மதன்
15-08-2008, 11:15 AM
சாதி.. மத.. இன... மொழிகளில்
பிரிந்து நிற்கும்
எங்களை ஒன்றிணைக்கும்
இந்தியம் சுதந்திர திருநாள்
இன்று வந்தது..!

!

நாம் இந்தியர்கள்..

diwali ல் ali இருக்கிறது

ramzan ல் ram இருக்கிறது..

ஒற்றுமையாய் இருப்போம்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..!!

இதயம்
15-08-2008, 01:02 PM
மன்ற உறவுகள் அனைவருக்கும் சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்..!!

அக்னி
16-08-2008, 12:06 AM
சுதந்திரம் கிட்டும்வரைக்கும்,
போராடுபவர்கள்,
போராளிகள்...
கிட்டியபின்
தியாகிகள்...

சுதந்திரத்திற்காய்ப்
பாடுபட்ட அனைவருக்கும்,
பூத்தூவிப்,
புகழ் மாலை சூடுவோம்...

தருணத்திற்கேற்ற கவி படைத்த வசீகரன் அவர்களுக்குப் பாராட்டுக்களும், சுதந்திர தின நல் வாழ்த்துகளும்...

இளசு
16-08-2008, 07:11 AM
வாழ்த்துகள் வசீகரன்.

நாலு திரைப்படங்கள், மூன்று படப்பிடிப்புப் பார்வைகள் + பேட்டிகள் , ஒரு நகைச்சுவை பட்டிமன்றம்
= நாள் முழுதும் விடாமல் பார்த்து, சுதந்தரத்தின் மகத்துவம் போற்றச் சொல்லும் ஊடகங்கள் இன்று!

ஒரு கணம் கடந்தவற்றை நினைந்து கொஞ்சமாவது மனதை நல்லுணர்வுகளால் நிரப்பச் சொன்ன உங்கள் கவிதை -
நலிவுற்றிருக்கும் தேசப்பற்று, தேசீய உணர்வுக்கு நல்ல சொட்டு மருந்து!

நன்றியும் பாராட்டும்!

poornima
16-08-2008, 08:44 AM
நல்ல உணர்வுகள் உங்கள் கவிதையில் பாராட்டுகள் வசீகரன்..

தலை கொடுத்த அந்த அனைவருக்கும்
தாமதாய் சொல்கிறேன் என் முதல் வணக்கம்.

சிவா.ஜி
17-08-2008, 04:13 AM
சுதந்திரத்தைப் போற்றுவோமென பள்ளுபாடிய வசீகரனின் கவிதை அழகு. கிடைப்பதற்காக இழந்தவைகள் ஏராளம், கிடைத்தும் இழந்துகொண்டிப்பது தாராளம். உண்மை சுதந்திரத்தை நம்மை ஆளும் அரசியல்வாதிகளிடமிருந்து மீட்க இன்னுமோர் போராட்டம் தேவை. வாழ்த்துகள் வசீ.

ஷீ-நிசி
17-08-2008, 05:38 AM
சுதந்திர தின கவிதை நன்று வசீகரா....

அனைவருக்கும் என் வாழ்த்துக்களும்!