PDA

View Full Version : குசேலன் - சிரிப்பதற்காக மட்டும்tamilambu
14-08-2008, 04:01 PM
குசேலன் - சிரிப்பதற்காக மட்டும்
குசேலன் திரைப்படம் தொடர்பாக மின்னஞ்சலில் வந்த சில துணுக்குகள். மூலப் பதிப்பு எங்கிருந்து என்று தெரியவில்லை. சிரிப்பதற்காக மட்டுமே இங்கே தருகிறேன்.

ராமு : நம்ம கருடர் டிவில குசேலனை வச்சு புதுசா ஏதோ புரோக்ராம் பண்றாங்களே.. அதோட பேரு என்னடா?
சோமு : ஊத்திக்க போவது யாரு?
---------------------------------------


ஆசிரியர் : குசேலன் என்ன கொடுத்தாரு?
மாணவி : அல்வா கொடுத்தாரு.
ஆசிரியர் : தப்பு தப்பு!!!.. அவர் அவல் தான் கொடுத்தார்..
மாணவி : நீங்க சொல்றது அந்த காலம். நான் சொல்றது இந்த காலம்நர்ஸ் : டாக்டர் அந்த பேஸண்ட பேச்சு மூச்சு இல்லாம இருந்தாரே.. அவருக்கு என்ன shock treatment பண்ணி பேச வைச்சிங்க?
டாக்டர்: ஒண்ணுமில்லை சிம்பிளா "குசேலன்" பேஸண்ட் முன்னாடி போட்டு காட்டுனேன்.. அந்த படத்தை பாக்க முடியாம "நிப்பாட்டு"னு சொல்றதுக்காக வாயை தொறந்து பேசிட்டாரு..


உளவுத்துறை அதிகாரி1: A1 to A2 calling ஓவர் !!. பொதுவா குசேலன் ஒரு உப்புமா
படம்னு பேசிக்கிறாங்க..ஆனா குசேலன் DVD சேல்ஸ் எப்படி ஜாஸ்தியாச்சுனு விசாரிக்க
சொன்னேனே.. விசாரிச்சியா?? over..

அதிகாரி 2: A2 to A1 calling ஓவர் !! ... சார்.. அந்த DVD எல்லாம் மொத்தமா பின்லேடன் தான் வாங்குறானாம்.. அவனோட தற்கொலை படை வீரர்களோட மன வலிமை பயிற்சிக்கு குசேலனை தான் யூஸ் பண்றாங்களாம்..ஓவர் !!!ராமு : கஜினிக்கும் ரஜினிக்கும் என்னடா வித்தியாசம்?
சோமு : தனக்கு மட்டும் மொட்டை போடுறவன் கஜினி.. தமிழனுக்கெல்லாம் மொட்டை போடுறவன் ரஜினி ..மொக்கை ஸ்டாரின் பஞ்சர் ஆன பஞ்ச் டயலாக்ஸ்:

நான் எப்போ அடிப்பேன் எதுக்கு அடிப்பேன்னு யாருக்கும் தெரியாது ஆனால் அடிக்க வேண்டிய நேரத்துல கரெக்டா பல்ட்டி அடிப்பேன்.

நான் ஒரு தடவ பல்ட்டி அடிச்சா நூறு தடவ பல்ட்டி அடிச்ச மாதிரி.

நான் லேட்டா அடிச்சாலும் லேட்டஸ்டா அடிப்பேன்.

அதிகமா பல்ட்டி அடிச்ச ஆம்பிளையும் அதிகமா தண்ணி அடிச்ச பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் இல்ல.

பன்னிதான் கூட்டமா பல்ட்டி அடிக்கும் சிங்கம் தனியாவே பல்ட்டி அடிக்கும்.

அந்த ஆண்டவன் சொல்றான் இந்த அருணாச்சலம் பல்ட்டி அடிக்கிறான்.

கேட்டதுமே உதறுது இல்ல.

தீபா
14-08-2008, 04:13 PM
சிலது ஆஹா! சிலது ஓகே!! சிலது சகிக்கலை.

செல்வா
15-08-2008, 12:29 PM
முதலில் வருபவை நகைச்சுவையாக இரசிக்க வைக்கின்றன. அனால் அந்த மொட்டை மேட்டர் அதற்குப் பின் வருபவை தனிமனிதத் தாக்குதல் ரகம். படத்தை வைத்து வந்தவற்றை இரசிக்கலாம் பிறவற்றை????

திரையில் பெரும்பாலும் தன்னை வைத்தே நகைச்சுவையைக் கையாண்டு சிரிக்க வைப்பவர் ரஜினி. அவரது படங்களில் எனக்குப் பிடித்ததும் அதுவே... தனிமனிதத் தாக்குதல் இல்லாமல் நகைச்சுவை கொடுங்களேன்.

இதயம்
15-08-2008, 02:09 PM
கலைகள் மனித சந்தோஷப்படுத்த தான்..! அவற்றை மற்றவர் மனம் புண்படுத்தவோ அல்லது அவற்றால் பிறர் புண்படவோ அனுமதிக்கலாகாது. இந்த நகைச்சுவை தனிமனித தாக்குதலுக்காகவே உருவாக்கப்பட்டவை என்பது கண் கூடு..! இப்பொழுது இது போன்ற நகைச்சுவைகள்(!) விஜய் பற்றி அதிகம் இணையத்தில் காணப்படுகிறது. இது போன்ற பதிவை தவிர்க்கலாமே..!!

shibly591
15-08-2008, 07:09 PM
ரஜனி நிலை இப்படியா...??????.

உதயசூரியன்
16-08-2008, 06:51 AM
நண்பரின் இந்த திரிக்கு நேரடி தொடர்பு சிரிப்பு..இதோ......
இதை அவர் பதிக்க மறந்து விட்டார் என நினைக்கிறேன்..
இதுவும்.. அவர் எடுத்த மூலத்தில் இருந்து எடுக்க பட்டது தான்....
படித்து சிரியுங்கள்........

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

குசேலன் - 2 வருகிறது ஜாக்கிரதை...........


இடம் : குசேலன் 2 டிஸ்கசன் நடக்கும் இடம்

நேரம் : நம்ம எல்லோருக்கும் கெட்ட நேரம்......

இருப்பவர்கள் : விஜய், பி.வாசு, வடிவேலு, பேரரசு.

வரமறுப்பவர்கள் : பசுபதி, நயந்தாரா, ரஜினி

வாசு: என்ன எல்லோரும் வந்தாச்சா????? என்ன இது பாத்ரூம்ல யாரோ அழுகிற மாதிரி இருக்கு.

(விஜய் பாத்ரூமில் குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார்)

வாசு: விஜய் என்ன இது ? இன்னும் இந்தப் பழக்கம் உங்கள விட்டுப் போகலையா????? ஏன் அழறீங்க?? அட சொல்லிட்டு அழுங்க....

விஜய்: அது அது .......பூ பூபூ..........எல்லோரும் குசேலன் பாத்துட்டு இதுக்குக் குருவியே பரவாயில்லன்னு சொல்றாங்க.......எம் படத்துக்கு இப்படி திடீர்னு ஒரு பெருமை வரும்னு நான் நினைக்கவேயில்லை.......அதான்.......பூ
??ூபூ...

வடிவேலு : ஏய் எங்கள வச்சு ஒன்னும் காமெடி....கீமெடி பண்ணலியே.........

விஜய்: ண்ணா....நான் ஏங்னா காமெடி பண்ணனும்...அதான் வாசு சார் குசேலன் படத்துல 13 ரீலு காமெடியா பின்னியிருக்காராமே.........(தனக்க༢r />?ள்ளேயே சிரிக்கிறார்)

வாசு: ஆஹா குசேலன் 2 எடுக்கலாம்னு பாத்தா விடமாட்டாங்க போலியே.....தம்பி விஜய் போப்பா....போ..போ....பிரபுதேவா கூப்புடுறாரு பாரு.....வில்லு வராமலா போயிடும்....அப்ப வச்சுக்கிறேன்...

வடிவேலு எங்க யாரையும் காணோம்....பசுபதி எங்க????

வடிவேலு : அய்யா!!!!! அவரு சைக்கோ கில்லருக்குப் பயந்துக்கிட்டு சென்னைய விட்டே ஓடிப் போயிட்டேன்னு சொல்ல சொன்னாருய்யா??????

வாசு : அப்ப நயந்தாரா???

வடிவேலு : அத ஏன்யா கேட்குறீங்க.....ஏதோ நெட்ல கசமுசா படம் வந்திருக்குன்னுப் போய் பாத்தா நம்ம குசேலன் பட சீன் தான் ஓடுதாம்யா...அதான் அந்தப் பஞ்சாயத்துக்குப் போயிருக்காங்க.....

வாசு : சரி அவங்கள விடுங்க ......முதல்ல உங்க காமெடி பார்ட்ட சொல்லிற்றேன்.....குசேலன் 2 ல உங்க பொண்டாட்டிய நீங்க........

வடிவேலு : அய்யா....மறுபடியுமா????? நீங்க விடுங்கய்யா????நான் என்னோட டீம வச்சே எழுதிக்கிறேன்......நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய......

(ரஜினி வீட்டில்)

ரஜினி : சத்தி....சத்தி.... மறுபடியும் பிராப்ளம் ஸ்டார்ட் ஆயிடுச்சு.......வாசு குசேலன் 2 டிஸ்கசனுக்குக் கூப்பிடுறார்....

சத்தி : என்னது மறுபடியுமா???? தலைவா ஏற்கனவே எல்லோரும் எதோ எழவு விழுந்தா மாதிரி போன் மேலே போன்.....இன்னும் பார்ட் 2 வந்தா கிளிஞ்சுரும்.....

ரஜினி : அப்ப நான் வேணா...."பாடம் கத்துக்கிட்டேன்....இனிமே இப்படி நடக்காது"ன்னு விளக்கம் கொடுத்துரட்டுமா????

சத்தி : தலைவா.....தயவு செய்து கொஞ்ச நாளைக்கு நீங்க எந்த விளக்கமும் கொடுக்காதீங்க....இப்ப கொடுத்த விளக்கத்துக்கே என்ன பிச்சுப் புடுங்குறாங்க....அதனால பேசாம ஒரு எட்டுப் போய்ட்டு வந்துருங்க......

(மீண்டும் டிஸ்கசன் நடக்கும் இடம்)

பேரரசு : அண்ணே நான் எல்லாம் ரஜினிக்கு கதையே சொல்ல முடியாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.....ஆனா உங்க குசேலன் பாத்த பின்னாடி முடிவே பண்ணிட்டேன்...

வடிவேலு : என்னன்னு......

பேரரசு : ரஜினிய வச்சு பூஜை போட்டுறலாம்னு.....படம் பேரு "திருவேற்காடு". இது ஆடி மாசம் வேற*. சும்மா கலெக்சன அள்ளிட்லாம்........

வடிவேலு : ஆஹா ஒரு குரூப்பாத்தான்யா அலயறாங்க......

ரஜினி பேரரசு நிற்பது போலவே காட்டிக் கொள்ளாமல் நேராக வாசுவிடம் வருகிறார்...பேரரசு ஏதோ முனுமுனுத்துக் கொண்டே சென்று விடுகிறார்.

ரஜினி : வாசு குசேலன் 2ன்னு ஒரு சப்ஜெக்ட் சொல்றேன்னீங்களே.....சொல்லுங்க...
.

வாசு : "ஓப்பனிங் சீன்ல நான் உங்கள வச்சு அபூர்வராகங்கள் 2 சூட் பண்ணிக்கிட்டு இருக்கேன்"

வடிவேலு : இப்பத்தான் குசேலன் 2ன்னு சொன்னீங்க.....

வாசு : குறுக்க குறுக்க பேசுனீங்கன்னா இந்தப் படத்துல உங்களுக்கு 2 பொண்டாட்டின்னு கதை பண்ணிடுவேன் ஜாக்கிரதை..............

வடிவேலு : 2 வைபா.............

வாசு : அந்தக் காட்சில நீங்க ஒரு ஹெலிஹாப்ட்ரால முட்டிக் கதவ திறக்குறீங்க......

ரஜினி : என்னது ஹெலிஹாப்ட்ரல முட்டியா......

வாசு : அது ஒன்னும் பிரச்சினை இல்லை....சவுந்தர்யாகிட்ட சொல்லி ஆக்கர் ஸ்டுடியோல வச்சு சீ.ஜீ பண்ணிடலாம்....

வடிவேலு : யாரு ஆத்துல டால்பின் விட்டாங்களே அந்த அக்காங்களா????

(ரஜினி தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார்)

poornima
16-08-2008, 09:46 AM
கலக்குங்க.. உதயசூரியன் பாராட்டுகள்

aren
16-08-2008, 11:40 AM
ராமு : கஜினிக்கும் ரஜினிக்கும் என்னடா வித்தியாசம்?
சோமு : தனக்கு மட்டும் மொட்டை போடுறவன் கஜினி.. தமிழனுக்கெல்லாம் மொட்டை போடுறவன் ரஜினி ..இது நேரடியான தாக்குதல். இந்த மாதிரியான நேரடி தாக்குதல்களை தவிர்த்தால் நல்லது. ரஜினி ரசிகர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். யார் மனதையும் நோகடிக்காத வண்ணம் உங்கள் பதிவுகள் இருந்தால் நல்லது.

poornima
16-08-2008, 03:26 PM
விடுங்க ஆரென்'ஜி ரஜினி ரசிகர்களே நொந்து போய்தான் இருக்காங்க.. கொஞ்சம் சிரிச்சி இளைப்பாறிக்கட்டும்..

சிவா.ஜி
17-08-2008, 01:31 PM
வேலைவெட்டியில்லாதவர்கள் யாரோ விளைவித்ததை, வீனாய்க் கொண்டுவந்து இங்கே கொட்டியிருக்கிறார்கள். தேவையற்றபதிவு. இந்தத் திரியால் எந்த உபயோகமும் இல்லை. எரிச்சல்தான் வருகிறது.

தீபன்
17-08-2008, 05:32 PM
கிண்டலடிப்பதில் தனிப்பட்ட தாக்குதலென தவிர்க்கவேண்டிய அவசியமில்லை. கிளிங்டனையும் ஜார்ஜ் புஸ்சையும் கிண்டலடித்தால் ரசிக்கும் நாம் நம்மவர்களுள் நமக்கு பிடித்தவர்களை கிண்டலடிக்கும்போதுமட்டும் அதை குப்பைகள் என்பது அழகல்ல. பிடிக்காதவற்றை தவிர்ப்போம். பிடித்தவர்கள் ரசிக்கட்டுமே... அரசியல் தலைவர்களையே கேலிச் சித்திரங்களால் கடுமையாக தாக்கும் ஜனநாஜாக நாட்டில் நடிகர் ஒருவரை கிண்டல் பண்ணுவதொன்றும் பாரதூரமான குற்றமல்லவே...

மதுரகன்
17-08-2008, 06:27 PM
கிளிங்டனையும் ஜார்ஜ் புஸ்சையும் கிண்டலடித்தால் ரசிக்கும் நாம்

அவர்கள் அந்நியர்கள் என்பதாலும் எங்களிடம் மேலோங்கிளுள்ள அமெரிக்க எதிர்ப்புணர்வும்தான் உங்களை அதை ரசிக்கவைக்கிறது. அதே மன்மோகன் சிங்கையோ, வாஜ்பாயையோ இந்திராகாந்தியையோ, எம்.ஜி.ஆரையோ கருணாநிதியையோ கிண்டலடித்தால் உங்களால் சகித்துக்கொள்ள முடியுமா ஆனால் குறித்த நபர்களை பிடிக்காதோருக்கு அது இன்பமாக இருக்கும்.
அதுபோலத்தான் இதுவும் குறித்த நபரைத்தாக்குவது சிலரை தனிப்பட்ட ரீதியில் சங்கடப்படுத்தினால் ஒரு மனிதன் என்ற வகையில் அருகில் இருப்பவரையாவது சங்கடப்படுத்தாது நடப்பது எம் பொறுப்பல்லவா..?
கூறியதில் ஏதும் தவறிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்..

தீபன்
17-08-2008, 06:46 PM
அவர்கள் அந்நியர்கள் என்பதாலும் எங்களிடம் மேலோங்கிளுள்ள அமெரிக்க எதிர்ப்புணர்வும்தான் உங்களை அதை ரசிக்கவைக்கிறது. அதே மன்மோகன் சிங்கையோ, வாஜ்பாயையோ இந்திராகாந்தியையோ, எம்.ஜி.ஆரையோ கருணாநிதியையோ கிண்டலடித்தால் உங்களால் சகித்துக்கொள்ள முடியுமா ஆனால் குறித்த நபர்களை பிடிக்காதோருக்கு அது இன்பமாக இருக்கும்.
அதுபோலத்தான் இதுவும் குறித்த நபரைத்தாக்குவது சிலரை தனிப்பட்ட ரீதியில் சங்கடப்படுத்தினால் ஒரு மனிதன் என்ற வகையில் அருகில் இருப்பவரையாவது சங்கடப்படுத்தாது நடப்பது எம் பொறுப்பல்லவா..?
கூறியதில் ஏதும் தவறிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்..

நீங்கள் சொல்வதில் மன்னிக்குமளவு எந்த தவறுமில்லை நண்பரே. ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல....
நீங்கள் உதாரணத்திற்கு சொன்ன பல பிரமுகர்களில் சிலரில் எனக்கும் அபிமானமுண்டு... அதற்காக அவர்களை கிண்டலடித்தாலும் அதையும் நான் ரசிக்கும் குணமுள்ளவன். ஏன், இதில் பல தலைவர்கள்கூட தங்களைபற்றி வரும் கிண்டல்களைஇயும் ரசித்து பதிலடி கொடுப்பவர்களே. என் கருத்து என்னவென்றால் விடயத்தை உணர்வுபூர்வமாக பர்க்காமல் இயல்பாக இலகுவாக நோக்கவேண்டுமென்பதே. பிரபலங்களை கேலி செய்வதும் நகைச்சுவையில் ஒருபகுதியாகத்தான் உலகில் இடம்பெறுகிறது... இந்திய தனியார் தொலைக்காட்சிகளின் லொள்ளு சபா, நையாண்டி தர்பார் போன்ற நிகள்ச்சிகள் இத்தகைய நகைச்சுவைகளைத்தானே கையாள்கின்றன...
அபிமானிகள் சங்கடப்படுகிறார்களென்றால், ஒருவருகும் சங்கடம் வராத பதிவுகள் வேண்டுமென்றால் மன்றில் வாதங்களும் இருக்காது. உயிர்ப்பும் இருக்காது. பெரும்பாலான பதிவுகள் முடக்கப்படவேண்டியிருக்கும்.
சினிமா கிசு கிசுக்கள்பகுதியில் பல நடிகைகளை விமர்சிக்கிறோம். கிண்டலடிக்கிறோம். அப்போதெல்லாம் இக்கருத்துக்கள் வராதிருந்தது ஏன்? (உண்மையில் நானும் ரஜினியை ரசிப்பவன் தான்.)

மதுரகன்
17-08-2008, 06:46 PM
பிடித்திருந்தால் இரசிப்போம்
இல்லாட்டி விட்டிட்டு போயிற்றிருப்பொம்ல..


சகோதரன் கிஷோர் அவர்களே..
உங்களது இந்தப்பதிலுக்கும் "ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான்" என்ற திரியில் நீங்கள் இட்ட மீள்பதிப்பிற்கும் இடையான முரண்பாடுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...


பார்ப்பாரில்லை, அப்படி பார்த்தாலும் பின்னூட்டம் இடுவாரில்லை.
பிறகேன் உங்களது இந்த விக்கிரமாதித்தன் முயற்சி என்பது எனக்கு புரியவில்லை.

மதுரகன்
17-08-2008, 07:10 PM
முதலில் நான் ஏதாவது புரிந்துகொள்ளத் தவறியிருந்தால் மன்னிக்கவும்
அடுத்தது

அது உணர்பூர்வமான விடயம்.
இத் திரியின் தலைப்பே சிரிப்பதற்கு...!

அதைத்தான் நான் கூறுகிறேன்..
சிலபேர் சிரிக்கும் விடயம் சிலருக்கு உணர்வுபூர்வமாக இருந்தால் அதைத்தவிர்க்கலாமல்லவா..?

மதுரகன்
17-08-2008, 07:25 PM
அபிமானிகள் சங்கடப்படுகிறார்களென்றால், ஒருவருகும் சங்கடம் வராத பதிவுகள் வேண்டுமென்றால் மன்றில் வாதங்களும் இருக்காது. உயிர்ப்பும் இருக்காது. பெரும்பாலான பதிவுகள் முடக்கப்படவேண்டியிருக்கும்.
சினிமா கிசு கிசுக்கள்பகுதியில் பல நடிகைகளை விமர்சிக்கிறோம். கிண்டலடிக்கிறோம். அப்போதெல்லாம் இக்கருத்துக்கள் வராதிருந்தது ஏன்? (உண்மையில் நானும் ரஜினியை ரசிப்பவன் தான்.)


ரசிப்புத்தன்மைக்கு ஒரு எல்லை உண்டு..
சினிமா சம்பந்தமான விமர்சனங்கள் குறித்த நபரின் சுயத்தை விமர்சிப்பது தவறு என்பது என்வாதம்..
அடுத்தது உண்மையில் நான் கிசுகிசுக்களைப் படிப்பதில்லை..
ஏனெனில் நடிகர்கள் சினிமாவில்தான் எங்களுடன் உறவாடுகிறார்கள் அவர்களின் சுயத்தை விமர்சிப்பது தேவையற்றது என்பது என் கருத்து.

சரி ஒரு மூன்றாம் நபர் தொடர்பில் நான் மன்றநண்பர்களுடன் வாதங்களை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே அனைத்தையும் பொறுத்தருள்க..

Narathar
17-08-2008, 07:40 PM
உளவுத்துறை அதிகாரி1: A1 to A2 calling ஓவர் !!. பொதுவா குசேலன் ஒரு உப்புமா
படம்னு பேசிக்கிறாங்க..ஆனா குசேலன் DVD சேல்ஸ் எப்படி ஜாஸ்தியாச்சுனு விசாரிக்க
சொன்னேனே.. விசாரிச்சியா?? over..

அதிகாரி 2: A2 to A1 calling ஓவர் !! ... சார்.. அந்த DVD எல்லாம் மொத்தமா பின்லேடன் தான் வாங்குறானாம்.. அவனோட தற்கொலை படை வீரர்களோட மன வலிமை பயிற்சிக்கு குசேலனை தான் யூஸ் பண்றாங்களாம்..ஓவர் !!!.:lachen001:

:lachen001:

:lachen001:

:lachen001:

:lachen001:

:lachen001:

:lachen001:

:lachen001:

:lachen001:

:lachen001:

:lachen001:

:lachen001:

தீபன்
17-08-2008, 07:42 PM
ரசிப்புத்தன்மைக்கு ஒரு எல்லை உண்டு..

சகிப்பு தன்மைக்கு எல்லையுண்டென்றால் ஏற்கலாம்... ரசிப்பதற்குமா எல்லையிடுகிறீர்கள்....?


சினிமா சம்பந்தமான விமர்சனங்கள் குறித்த நபரின் சுயத்தை விமர்சிப்பது தவறு என்பது என்வாதம்..

நண்பர் தமிழம்புவின் பதிவில் இடம்பெற்ற கிண்டல்கள் எல்லாமே தனிநபரை நோக்கியில்லை... அவரின் படத்தை கிண்டலடித்தே உருவாக்கப்பட்டிருந்தது. குறித்த நபரின் சுயம் அங்கு விமர்சிக்கப்படவில்லையே....!?


அடுத்தது உண்மையில் நான் கிசுகிசுக்களைப் படிப்பதில்லை..
ஏனெனில் நடிகர்கள் சினிமாவில்தான் எங்களுடன் உறவாடுகிறார்கள் அவர்களின் சுயத்தை விமர்சிப்பது தேவையற்றது என்பது என் கருத்து.

நீங்கள் படிப்பதில்லை என்பது சரி. அதற்காக அத்தகைய பதிவுகளே தவறென்பது சரியா...?


சரி ஒரு மூன்றாம் நபர் தொடர்பில் நான் மன்றநண்பர்களுடன் வாதங்களை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே அனைத்தையும் பொறுத்தருள்க..
பொறுத்தருள்வதா...? அந்தளவுக்கு இங்க என்ன நடந்திச்சு...?:icon_ush:

மதுரகன்
17-08-2008, 07:58 PM
சகிப்பு தன்மைக்கு எல்லையுண்டென்றால் ஏற்கலாம்... ரசிப்பதற்குமா எல்லையிடுகிறீர்கள்....?
நிச்சயமாக ஓரளவுக்கு மேல் சாடப்படும்போது நகைச்சுவைகள் ரசிக்கப்படமுடியாது.. அது சகிப்புத்தன்மை அளவிலும் தங்கியுள்ளது..


நண்பர் தமிழம்புவின் பதிவில் இடம்பெற்ற கிண்டல்கள் எல்லாமே தனிநபரை நோக்கியில்லை... அவரின் படத்தை கிண்டலடித்தே உருவாக்கப்பட்டிருந்தது. குறித்த நபரின் சுயம் அங்கு விமர்சிக்கப்படவில்லையே....!?

தனிப்பட்ட சுயம் மீதான தாக்குதல் பற்றி மேலே ஆரென் அவர்கள் கூறிவிட்டார்கள்..(திரைப்படம் என்ற வரம்பு மீறி தனி நபரின் பெயர் இழுக்கப்பட்டிருக்கிறது)


நீங்கள் படிப்பதில்லை என்பது சரி. அதற்காக அத்தகைய பதிவுகளே தவறென்பது சரியா...?
நிச்சயமாக இம்மன்றத்திலுள்ள உறுப்பினர் ஒருவரைப்பற்றி கிசுகிசு எழுவதில் என்ன தவறுள்ளதோ அதே தவறுதான் நடிகர்களைப்பற்றி எழுதப்படும் கிசுகிசுக்கள்..

அவர்கள் நடிப்பை, திரைப்படங்களை விடுத்து தனிப்பட்ட வாழ்வைப்பற்றி எழுதுவது நிச்சயம் கேவலமான விடயம்..

tamilambu
17-08-2008, 11:58 PM
தனிப்பட்ட சுயம் மீதான தாக்குதல் பற்றி மேலே ஆரென் அவர்கள் கூறிவிட்டார்கள்..(திரைப்படம் என்ற வரம்பு மீறி தனி நபரின் பெயர் இழுக்கப்பட்டிருக்கிறது)


..

நீங்கள் கூறும் அந்த தனிப்பட்ட நபர் சிவாஜிராவ் என்று நினைக்கிறேன்.
அவரைப்பற்றி எனது பதிப்பில் எதுவுமே இல்லையே.....
எனது பதிப்பிலே திரைப்படம் குசேலன் பற்றியும் பிரபல தமிழ் சினிமா நடிகர் ரஜனியின் படங்களில் வந்தவை பற்றியுமே உள்ளது.

மேலும் இது எனது சொந்த ஆக்கமல்ல....
மின்னஞ்சலில் வந்த ஒரு நகைச்சுவை. எனது அறிவுக்கு அது நகைச்சுவையாக தெரிந்தது. மன்றத்தவர்களும் சிரித்து மகிழட்டுமே என்ற எண்ணத்திலேயே பதித்தேன்.

முக்கிய குறிப்பு: நானும் சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த் அவர்களின் ரசிகன்.

ஓவியா
18-08-2008, 12:03 AM
முன் குறிப்பு:
நான் ரஜினியின் நடிப்பையும் ரசிப்பேன் கலைஞரின் தமிழ் புலமையையும் ருசிப்பேன். நான் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவில்லை.
******************************************************************************************************************


இது போன்ற திரிகள்/பதிவுகள் மன்றத்திற்க்கு தேவையா என்று தெரியவில்லை. முடிவு மன்றத்தின் கைகளில்.


மிகவும் அதிகபிரசங்கி வகையை சேர்ந்திருக்கிறது இங்குள்ள நகைச்சுவைகள் சில. ரசிக்கவே முடியவில்லை, சுத்தமா சகிக்கவில்லை. இது முற்றிலும் தனி மனித தாக்குதல்களையே சார்ந்துள்ளது.


முடிந்தால் இனி இதுபோல் பதிவுகளை இங்கு யாரேனும் பதிவதை தவிறுங்கள். இதனால் மற்றவர்களின் மனம் புண்படுவைதை தவிற்க்கலாம். காரணம் இது பலர் வந்து போகும் இடம். உங்களுக்கு ரஜினியை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் சிலருக்கு அவரை மிகவும் பிடிக்கும். (ரஜினி ரசிகையான எனக்கும் சில ஜோக்குகளை படித்து மனம் புண்பட்டு விட்டது உண்மையே)


நண்பர் தமிழன்பு,
நீங்கள் புதியவர் அதனால் இப்படியான பதிவுகளுக்கு இங்கு ஆதரவு அவ்வலவாக இருக்காது என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இனி உங்களுடைய அழகிய வளமிக்க எழுத்துதிறமையில் (தமிழ் திறமை உங்ககிட்ட அதிகமாகவே இருக்கு, வாழ்த்துக்கள்) நல்ல சுயப்படைப்புகளை இங்கு வாரி வழங்கி மகிழுங்கள். நாங்களும் அதை படித்து ஆனந்தப்படுவோம்.


நன்றி.

உண்மை தோழி
- ஓவியா

mukilan
18-08-2008, 12:22 AM
அன்பு நண்பர்களே! சர்ச்சைக்குரிய விதத்தில் இந்தத் திரி செல்வதில் எவருக்குமே விருப்பம் இருக்காது என நினைக்கிறேன். பிறர் மணம் புண்படுகிறது என வெளிப்படையாகத் தெரிவித்தும் அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இதைத் தொடரக்கூடாது. பண்பட்டவர் என்ற பட்டம் பதிவுகளின் எண்ணிக்கையால் அல்ல. பண்பட்டவர்கள் பண்பட்டவர்களாகவே நடந்து கொள்ளவேண்டும். இனிமேலும் இத்திரியில் விவாதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். கூடிய விரைவில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.புரிதலுக்கு நன்றி.

tamilambu
18-08-2008, 01:35 AM
முகிலன் அவர்களே!
எனது சிறு கருத்தும் ஓவியாவுக்கு பதிலும்.

ஓவியா அவர்களே!
நீங்கள் கூறியதுபோல் என்னுடய சுய படைப்புகள் பலவற்றை இங்கே தர இருக்கிறேன்.
மேலும், இந்த மன்றத்திற்கு நான் புதியவன். இருந்தபோதிலும் மன்ற விதிகளையும் இங்குள்ள ஏனைய பதிவுகளையும் பார்த்த அடிப்படையிலேயே இந்த பதிவை இங்கே பதித்துள்ளேன். நீங்கள் கூறுவதுபோல் இது மிகப்பெரிய குற்றமாக எனக்கு இப்போதுகூட தெரியவில்லை.
நீங்கள் கூறுவதைப் பார்த்தால் சர்தார்ஜி ஜோக்குகளை என்ன செய்வது???
அதுமட்டுமல்லாமல் நடிகர் வடிவேலு நடித்த 23ஆம் புலிகேசி என்ற படத்தினை கிண்டல் செய்யும் விதமாக 23-ஆம் எலிகேசி என இங்கே ஆரம்பிக்கப்பட்ட பகுதியில் "கலக்கலா இருக்கு லெனின்."என்றுகூட நீங்கள் பின்னூட்டம் செய்திருக்கிறீர்களே....
அது தவறில்லையா??? வடிவேல் ரசிகர்கள் மனம் புண்படாதா???

சிவா.ஜி
18-08-2008, 06:00 AM
தமிழம்பு....23ஆம் எலிகேசியில் எந்த ஓரு இடத்திலாவது வடிவேலின் பெயர் வருகிறதா? சற்று மீண்டும் வாசித்துவிட்டு வாருங்கள். கற்பனைக் கதாப்பாத்திரம் வேறு, வாழும் மனிதர்கள் வேறு.

அகத்தியன்
18-08-2008, 08:35 AM
இது உண்மையில் தனிமனித தாக்குதலே, ஏன் எல்லோரும் ரஜனியின் படத்தோடு அவரை விடாமல், அவரது சொந்த விடயங்களில் மூக்கை நுழைக்கின்றனர்?
விஜயகாந்தினை எடுத்துக்கொள்ளுங்கள் நேரடியாக இப்போது அரசியலில் இருக்கிறார். அதே நேரம் படங்களிலும் நடிக்கின்றார். அவரது படங்கள் பெரிதாக இக்காலங்களில் பேசப்படவில்லை. ஆனால், அவர் அரசியலில் இருக்கின்ற இத்தருணங்களில் கூட பெரிதாக, ரஜனி போல் மெல்லப்படவில்லை. அப்படி பார்க்கின்ற போது, வேண்டுமென்றே ரஜனி மீது திட்டமிட்டு இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்றே எண்ண வைக்கின்றது.

நண்பர் தமிழம்புக்கு ஒரு விளக்கம் "இம்சை அரசன் 23ம் புலிகேசி" என்ற கதாபாத்திரம் அத்திரைப்பட இயக்குனர், திரு சிம்புத்தேவன் அவர்களால் ஆனந்தவிகடனில் நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டு, வாசகர்கள் மத்தியில் பிரபலம் பெற்றது. அதன் பின்பே அவர், அதனை வடிவேலுவினை கொண்டு திரைப்படமாக்கினார்.

aren
18-08-2008, 08:49 AM
குசேலன் சரியாக போகவில்லையாதலால் ரஜினி 10 கோடி ரூபாயை பிரமிட் நிறிவனத்திடம் கொடுத்து தியேட்டர் முதலாளிக்கும் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கச் சொல்லிவிட்டார்.

இவரல்லவா மனிதர்.

அகத்தியன்
18-08-2008, 09:02 AM
குசேலன் சரியாக போகவில்லையாதலால் ரஜினி 10 கோடி ரூபாயை பிரமிட் நிறிவனத்திடம் கொடுத்து தியேட்டர் முதலாளிக்கும் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கச் சொல்லிவிட்டார்.

இவரல்லவா மனிதர்.

இதற்காகவே நான் வாழ்நாள் முழுவதும் ரஜனி ரசிகனாய் இருப்பதில் பெருமை அடைகின்றேன்.

ஓவியா
18-08-2008, 01:11 PM
முகிலன் அவர்களே!
எனது சிறு கருத்தும் ஓவியாவுக்கு பதிலும்.

ஓவியா அவர்களே!
நீங்கள் கூறியதுபோல் என்னுடய சுய படைப்புகள் பலவற்றை இங்கே தர இருக்கிறேன்.
மேலும், இந்த மன்றத்திற்கு நான் புதியவன். இருந்தபோதிலும் மன்ற விதிகளையும் இங்குள்ள ஏனைய பதிவுகளையும் பார்த்த அடிப்படையிலேயே இந்த பதிவை இங்கே பதித்துள்ளேன். நீங்கள் கூறுவதுபோல் இது மிகப்பெரிய குற்றமாக எனக்கு இப்போதுகூட தெரியவில்லை.
நீங்கள் கூறுவதைப் பார்த்தால் சர்தார்ஜி ஜோக்குகளை என்ன செய்வது???
அதுமட்டுமல்லாமல் நடிகர் வடிவேலு நடித்த 23ஆம் புலிகேசி என்ற படத்தினை கிண்டல் செய்யும் விதமாக 23-ஆம் எலிகேசி என இங்கே ஆரம்பிக்கப்பட்ட பகுதியில் "கலக்கலா இருக்கு லெனின்."என்றுகூட நீங்கள் பின்னூட்டம் செய்திருக்கிறீர்களே....
அது தவறில்லையா??? வடிவேல் ரசிகர்கள் மனம் புண்படாதா???


நன்றி தமிழ்,

23-ம் எலிக்கும் இந்த திரிக்கும் நிரைய வேற்றுமைகள் இருக்கின்றனவே. :redface::redface: ஆதலால் அந்த திரியுடன் இதை ஒப்பிட்டு பேச வாய்ப்பு ரொம்ப குறைவே. :)

tamilambu
18-08-2008, 03:11 PM
மன்றத்தார் தனிமடலில் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் அவர்களுக்கு நான் உறுதி கூறியதற்கு அமைவாகவும் உங்களது கேள்விகளுக்கு பதில் கூறாததற்கு மன்னிக்கவும் நண்பர்களே.

ஓவியா
18-08-2008, 09:41 PM
மன்றத்தார் தனிமடலில் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் அவர்களுக்கு நான் உறுதி கூறியதற்கு அமைவாகவும் உங்களது கேள்விகளுக்கு பதில் கூறாததற்கு மன்னிக்கவும் நண்பர்களே.

:):):)