PDA

View Full Version : புதிய நிர்வாக குழு - 2008அறிஞர்
14-08-2008, 01:47 PM
அன்பு மன்ற உறவுகளே,

அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

தாங்கள் ஒவ்வொருவரின் ஈடுபாட்டால், இணையத்தில் தமிழ் மன்றம் தனக்கென ஒரு இடம் அமைத்து சீருநடை போட்டு வருகிறது.

கடந்த 16 மாதங்களை பொறுப்பாளர் பணியேற்று தங்கள் பணியை சிறப்பாக செய்த அன்பு உறவுகள் பென்ஸ், அமரன், ஓவியன், ஆதவா, அக்னி மற்றும் அன்புரசிகனுக்கு மன்றத்தின் சார்பில் நன்றிகள் பல.

ஆலோசகர்களாக இருந்து சிறந்த பணியாற்றி வரும் இளசு, இராசகுமாரன், தாமரை, பாரதி, ஆரென், மனோ.ஜி மற்றும் மன்மதனுக்கு நன்றிகள் பல.

உதவியாளராக பணியாற்றிய விராடன், செல்வா, சுகந்தப்ரீதன், சூரியன் மற்றும் பூமகளுக்கு எங்களின் நன்றிகள் உரித்தாகுகின்றது.
-----------
மன்றத்தின் வளர்ச்சிக்கு மாற்றங்கள் இன்றியமையாததாய் இருக்கிறது. அதற்காக நிர்வாக குழுவில் சில மாற்றங்களை எடுத்திருக்கிறோம்.

புதிய குழு

நிர்வாகி : அறிஞர்
பொறுப்பாளர்கள் : பென்ஸ், அமரன், மதி, சிவா.ஜி, முகிலன், செல்வா
ஆலோசகர்கள் : இளசு, இராசகுமாரன், தாமரை, பாரதி, ஆரென், மனோஜி, மன்மதன்
உதவியாளர்கள் : விராடன்

புதிய குழு அடுத்த 6 மாதங்களுக்கு தங்கள் பணியை தொடரும். மன்றம் தொடர்பான உதவிகளுக்கு நிர்வாக குழுவினரை தொடர்புகொள்ளவும்.

உதவியாளர் பணி செய்ய விரும்புகிறவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்

புதியவர்கள் பணி சிறக்க அவர்களை வாழ்த்துவோம்.

பழையவர்களுக்கு நன்றி கூறுவோம்.

பழைய பொறுப்பாளர்கள் இனி உறுப்பினர்களுடன் ஒன்றாக கலந்து பல பதிவுகளை தந்து... மன்றத்தை வளர்ப்பார்கள்.

ஷீ-நிசி
14-08-2008, 02:00 PM
வாழ்த்துக்கள் புதிய நிர்வாகிகளுக்கு!

நேசம்
14-08-2008, 02:02 PM
புதிய நிர்வாகிகளுக்கு அன்பான வாழ்த்துகள்

ராஜா
14-08-2008, 02:17 PM
இதுவரை சிறப்பாக பணியாற்றிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்..

இனி பொறுப்பேற்கவிருக்கும் புதிய நிர்வாகக்குழுவினருக்கு, வாழ்த்துகள்..!

வாருங்கள்..அனைவரும் ஒன்றிணைந்து மன்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வோம்.

அமரன்
14-08-2008, 02:22 PM
அளப்பரிய சேவையை சிறப்பாக ஆற்றி விடைபெற்றுச் செல்லும் நல் உள்ளங்களுக்கு பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகட்டும்.

புதிதாக இணைந்த உறவுகளுக்கு வாழ்த்துகள்.

இணைந்து சேவையாற்ற இருக்கும் நிர்வாக நண்பர்களுக்கு சேவையில் சிறக்க முன் வாழ்த்துக்கள்.

தொடர்ந்து சேவையாற்ற வாய்ப்புத் தந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி. உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும் வண்ணம் இயன்றவரை முயன்று செயல்பட உறுதி அளிக்கிறேன்.

ஆதவா
14-08-2008, 02:31 PM
புதிய நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துகள்.

இம்முறை ஒரு பெண் நிர்வகிப்பது சிறப்பாகக் கருதுகிறேன்.

பணிப்பளுவினாலும் இணையத்தொடர்பினாலும் பல்வேறு காரணங்களினாலும் என்னால் சரிவர பங்களிக்க இயலாமல் இருந்த பொழுது, அறிஞரிடம் ஒரு தனிமடல் கொடுத்திருந்தேன். பொறுப்பாளர் பதவியிலிருந்து விலக்கக் கோரி.. அது சற்று தள்ளிப் போனது. பின்னர் உதவியாளர்கள் நியமனத்தில் மீண்டும் ஒரு கோரிக்கை. அதுவும் தள்ளிப்போனது.. பதினாறு மாதங்கள் கழித்து இதோ!! எனக்கு சுதந்திரம். பதவியிலிருந்து விடுதலை.

பொறுப்பாளர் ஆனபின் என்ன செய்தேன் என்று திரும்பிப் பார்க்கையில்... சூனியம்தான் மிஞ்சியது. அவ்வப்போது திரிகளை மாற்றியிருக்கிறேன்.. அவ்வளவே!!! சில கார பதில்களும் கொடுத்திருக்கிறேன். ஆனால் அமரனைப் போலவோ, ஓவியனைப் போலவோ, அக்னியைப் போலவோ முழுமையாக உழைத்தது கிடையாது. அதற்கு என் இணையத் தொடர்புகளும் காரணமாக இருந்தது.

புதிய பொறுப்பாளர்கள் நியமனம் என்றதும் மனம் நிம்மதியாக இருந்தது. ஓய்வெடுக்க நான் அவ்வளவு உழைக்கவில்லை என்றாலும் ஆறுதலுக்கு சாதா சொக்காய் தேவைப்பட்டது. நீன்ன்ன்ண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு சாதாரண உறுப்பினராய் வலம் வருவது எவ்வளவு இனிமையான விசயம். (நடிகர்கள் தெருவினில் ஹாயாக நடந்து போவதைப் போல)

என்னுடன் இணைந்து பணியாற்றிய பென்ஸ், அமரன், ஓவியன், அக்னி மற்றும் அன்புரசிகனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

புதிய பொறுப்பாளர்களுக்கு என் வாழ்த்துகள்.

poornima
14-08-2008, 02:34 PM
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள். சிறப்பாக தம் பணியைச் செய்து இன்னும் மன்றம் மெருகேற அவர்கள் பங்கு இன்றியமையததாக இருக்க வாழ்த்துகிறேன்

அறிஞர்
14-08-2008, 02:37 PM
ஆதவா கருத்துக்கு நன்றி...

பழைய ஆதவாவை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.. தாங்கள் பதிவுகளை, விமர்சனக்களை அள்ளிக்கொடுக்க தான் இந்த மாற்றம்.

தொடர்ந்து கலக்குங்கள்.

leomohan
14-08-2008, 02:46 PM
புதிய நிர்வாக குழுவிற்கு அன்பான வரவேற்பு, வாழ்த்துகள்.

மன்மதன்
14-08-2008, 02:46 PM
பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்..

இணைந்து செயல்படுவோம்..

tamilambu
14-08-2008, 03:21 PM
புதிதாக நிர்வாகத்தில் செயற்படவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மேலும் இவ்வளவு காலமும் மன்ற வளர்ச்சிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.

தீபன்
14-08-2008, 03:25 PM
வாழ்த்துக்கள் புதிய நிர்வாக அங்கத்தவர்களே. உங்கள் சேவையில் தொடரட்டும் மன்றத்தின் பயணம்.

அமரன்
14-08-2008, 03:28 PM
ஆதவா..
மன்றம் மீது எனக்கிருக்கும் பற்றுக்கு காரணமான கர்தாக்களில் நீங்களும் ஒருவர். காலம் செய்த சதியால் உங்கள் மன்றவருகை குறைந்த போதும் பொறுப்பாளனாக ஓரளவு சிறப்பாகச் செயல்பட நீங்கள் எனக்கு உதவியுள்ளீர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.

காலங்கள் மாறும். கலர்களும் மாறும்.. காத்திருக்கிறேன்..

பாரதி
14-08-2008, 03:53 PM
இது வரை மன்றத்தை சிறப்பாக கவனித்து வந்த பொறுப்பாளர்களுக்கு நன்றிகளும், இனி சிறப்புற கவனிக்கப்போகும் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

பூமகள்
14-08-2008, 03:55 PM
மன்றத்தின் வளர்ச்சிப் பணியில் இதுவரை பொறுப்பேற்று உழைத்தவர்களின் இடையறாப் பணிகளை இந்த ஓராண்டு காலமாக அருகிருந்து கண்டு வியந்திருக்கிறேன்..

மன்றத்தில் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் இவர்களின் வழிகாட்டுதலும் பங்களிப்பும் வழி நடத்துதலும் அமையப் பெற்றதை அறிவேன்..

இமயம் அளவான இவர்களின் பங்களிப்புக்கும் ஈடுபாட்டுக்கும் முன்பு நானும் என்னால் இயன்ற அளவு எனது முழு ஈடுபாட்டையும் கொடுப்பேனென உறுதி மொழி எடுக்கிறேன்.

மன்றத்திற்கு ஒரு வருடம் முன்பு.. சரியாக ஆகஸ்ட் 12 ம் தேதி உள்ளே வந்து வியந்த இந்த குழந்தை இன்று உங்களால் வளர்க்கப்பட்டு பொறுப்பானவளாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கேன்..

இதற்கு மன்றத்தில் நிர்வாகக் குழுவுக்கும் மூத்த நிர்வாகக்குழுவிலிருந்து விடுப்பில் செல்லும் அன்பு சகோதர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்..!!

வாழ்த்தி ஊக்கமளித்த அனைத்து மன்ற உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

அனைவரிடத்தும் மன்றம் சிறப்புற ஒத்துழைப்பும் ஆசியும் எதிர்பார்க்கிறேன்.

நன்றிகள்.

மதுரகன்
14-08-2008, 04:32 PM
ஏற்கனவே திறம்பட தங்கள் கடமைகளை செய்து முடித்த குழுவிற்கு மன்ற உறுப்பினர் என்ற வகையில் என் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
புதியவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..

க.கமலக்கண்ணன்
14-08-2008, 05:24 PM
புதிய நிர்வாகிளுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்... நிர்வாக குழுவில் இருந்து விடைபெறும் இயக்குனர்களுக்கு நன்றிகளும் அன்புடன்...

இளசு
14-08-2008, 10:22 PM
ஓவியன், அக்னி, ஆதவா, அன்புரசிகன் -

நாவினிக்கும் நான்கு பெயர்கள்..
நம் மன்றத்தின் நான்கு தூண்கள்..
நான்கு நல்ல தம்பிகள் எனக்கு..


படைப்புகளாலும் பண்பு,அன்பு,பொறுப்பு, பணிகளாலும்
சிந்தை அள்ளிய சிறந்த மன்றப் பொக்கிஷங்கள்..


ஓவியங்கள், கவிதை, கதை, சத்தான பின்னூட்டங்கள்
மனிதநேயம் பொங்கியெழும் நேர்ப்பார்வை..

நான்கு இளஞ்சிங்கங்கள்..

என் மனதைக் கொள்ளைகொண்ட இந்த மன்றத்தங்கங்கள்
இத்தனை நாள் துயில், பசி, நோய் புறந்தள்ளி ஆற்றிய
மன்றப்பணிகளை எண்ணி பெருமிதமும் நன்றியும் கலந்த உணர்வில் மிதக்கிறேன்.

இணையக்கடலில் மன்றக்கரையில் கண்டெடுத்த இந்த நான்கு முத்துகளும்
கூடுதல் பொறுப்புகளைச் செவ்வனே ஆற்றிய சிரத்தைக்கும் பாங்குக்கும்
அண்ணனின் அன்பும் மகிழ்ச்சியும்..

சுழற்சியில் மீண்டும் உங்களைக் களப்பணியில் காணும் காலம் வரலாம்.
என்றும் மாறாப் புத்துணர்ச்சியுடன் தோள் தழுவிய உறவுகளாய்
காலம் அனுமதிக்குமட்டும் இங்கே கலந்துறவாட நானிருப்பேன்..

என் பாச முத்தங்கள் நான்கு நெற்றிகளுக்கும்!

இளசு
14-08-2008, 10:27 PM
என் அன்புக்குரிய முகிலன், சிவா, பாமகள், மதி -

புதுப் பொறுப்புக்கு என் வாழ்த்துகள்..

எடுத்த பணியைச் செவ்வனே செய்து முடிக்க என் ஆசிகள்.. ஊக்கங்கள்..


பொறுப்புச்சுமையால் படைப்புப்பணி குறையாமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு...

மன்ற முன்னோடிகள் உங்களின் எல்லாவித ஐயங்களுக்கும், உதவி தேடல்களுக்கும்
துணையிருப்பார்கள்.

என் மனமார்ந்த வாழ்த்து மாலைகள் நான்கு புதுத் தோள்களுக்கும்!

ஓவியன்
15-08-2008, 05:14 AM
பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் நியதிதானே..!! :)

புதியதாய் பொறுப்பேற்றிருக்கும் அன்பு உறவுகளுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..!!

பொறுப்பாளர் பணியென்பது, உங்கள் வழமையான மன்றப் பணிகளைப் பெரிதளவில் பாதித்து விடாது பணியாற்றுங்கள்....

நம் மன்றம் தொடர்ந்தும் புதிய வேகத்துடன் முன்னேறட்டும்...
அதற்காக நாமெல்லோரும் சேர்ந்தே உழைப்போம்...!! :)

aren
15-08-2008, 05:27 AM
இதுவரை அயராது உழைத்த பொறுபாளர்கள் ஓவியன், அக்னி, அன்பு மற்றும் ஆதவாவிற்கு என் நன்றிகள். பல பிரச்சனைகள் இருந்தாலும் அதை அழகாக கையாண்டு மன்றம் மேலும் வளர உதவிய உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

புதிதாக பதவியேற்றிருக்கும் முகிலன், சிவா, பூமகள் மற்றும் மதி ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

செல்வா
15-08-2008, 07:15 AM
சிறப்பான பணியாற்றி ஓய்வில் செல்லும் அனைவரக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

ஓவியா
15-08-2008, 08:07 AM
நிர்வாகிக்கு வாழ்த்துக்கள்.

கடமையை செவ்வேன செய்து விடைபெரும் அனைவருக்கும் நன்றிகள்.

மீண்டும் அதே பதிவியுடன் தொடர்ந்துச்செல்லும் அன்பர்களுக்கு என் பாராட்டுகள்.

புதிய கடமையாளிகளுக்கு என் ஆசிகள்.

இதயம்
15-08-2008, 12:19 PM
புது தோற்றம்..... புது மாற்றம்.. கலக்குது மன்றம்..! நம் மன்றத்தில் பதவிகள், பொறுப்புகள் எதுவும் யாருக்கும் நிரந்தரமில்லை என்பதிலிருந்தே மன்றம் நடுநிலையில் எப்பொழுதும் உயர்ந்தது என்பதை நிரூபிக்கிறது. இது வரை நம் மன்றத்தை சிறப்பாய் வழி நடத்திய பழைய பொறுப்பாளர்களுக்கு நன்றிகள். இப்பொழுது புதிதாக பொறுப்பேற்று சிறப்பாய் வழி நடத்தப்போகும் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..!

சூரியன்
15-08-2008, 12:40 PM
மன்றத்தின் புதிய நிர்வாக குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
விடைபெறும் பொறுப்பாளர்களுக்கும்,புதிதாய் இணையும் பொறுப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

அக்னி
15-08-2008, 03:57 PM
கடந்த ஒரு வருட காலம்...
மன்றத்தில் நானும் ஒரு பொறுப்பாளனாக வலம் வந்தேன்.

மன்றத்திற்குப் புதியவனாக இருந்த போதிலும், என்னை நம்பிப் பொறுப்புக்கள் தரப்பட்டன.
அதற்கேற்ப, உழைத்தேனா, பங்களித்தேனா என்பதை நான் கூற முடியாது.
ஆனால், உண்மையாக இருந்தேன் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

எனக்குப் பொறுப்பாளர் நிலை தந்த,
நிர்வாகி, நிர்வாகக்குழுவின் மூத்த உறுப்பினர்கள், மற்றும் மிக முக்கியமாக என்னைப் பரிந்துரைத்த அன்பு உறவு(கள்),
அனைவருக்கும் எனது நன்றிகள்...

பணியைச் செவ்வனே செய்ய மிகவும் வழிகாட்டிகளாக,
மன்ற நிர்வாகக் குழுவின் மூத்த உறுப்பினர்கள் இருந்தனர்.
அனைவருக்கும் எனது நன்றிகள்...

இவ்விடத்தில், பொறுப்பாளருக்குரிய செயற்பாடுகளை மிகத் தெளிவாக உணர்த்திய, வழிகாட்டிய,
ஆதவன் அவர்களுக்கு விசேட நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்...

மேலும்,
என்னுடன் சேர்ந்தும், இணைந்தும் பணியாற்றிய,
நிர்வாகக் குழுவின் அனைத்து உறவுகளுக்கும்,
எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்...

எல்லாவற்றுக்கும் மேலாக,
நிர்வாகக் குழுவின் செயற்பாடுகளுக்குத் தோள்கொடுத்து, எம்மைச் சிறப்பாகச் செயற்பட வைத்த,
எமது செயற்பாடுகளுக்கு அனுசரணையாக இருந்து, சிறப்பாக ஒத்துழைப்பு நல்கிய,
அனைத்து மன்ற உறவுகளுக்கும் நிறைந்த நன்றிகள்...

மன்றப் பொறுப்பாளரான எனது பணியில்,
எனது செயற்பாடுகள் எவருக்கேனும் வேதனையான காயங்களைத் தந்திருந்தால்,
என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்...

மீண்டும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

*****

புதிய நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கும்,

நிர்வாகி : அறிஞர்
பொறுப்பாளர்கள் : பென்ஸ், அமரன், மதி, சிவா.ஜி, முகிலன், பூமகள்
ஆலோசகர்கள் : இளசு, இராசகுமாரன், தாமரை, பாரதி, ஆரென், மனோஜி, மன்மதன்
உதவியாளர்கள் : செல்வா, விராடன்

மகத்தான மன்ற உறவுகளை,
அன்புடன் பூத்தூவி வரவேற்கின்றேன்...

திறமையான நிர்வாகக் குழு... செயற்படு திறன் மிக்க குழு...
செயற்பாடுகள் சிறக்க வாழ்த்துகளும்.., பூரண ஒத்துழைப்பும்...

நமது மன்றத்தின் வளச்சி, நமக்கு மகிழ்ச்சி...
நமது மகிழ்ச்சி, நமது மன்றத்தின் வளர்ச்சி...

அன்புரசிகன்
15-08-2008, 05:39 PM
புதிய குழுவுடன் மன்றம் வீறு நடை போடும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை... அனைத்தம் சிறப்பாக அமையும். வாழ்த்துக்கள்...

shibly591
15-08-2008, 05:43 PM
புதிய நிர்வாகக்குழுவை வரவேற்கும் அதேவேளை பழைய நிர்வாகக்குழுவிற்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்...

மதுரை மைந்தன்
15-08-2008, 07:10 PM
மன்றத்தின் புதிய நிர்வாக குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.

விடைபெறும் பொறுப்பாளர்களுக்கும்,புதிதாய் இணையும் பொறுப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

அறிஞர்
15-08-2008, 08:28 PM
கடந்த ஒரு வருட காலம்...
மன்றத்தில் நானும் ஒரு பொறுப்பாளனாக வலம் வந்தேன்.

மன்றத்திற்குப் புதியவனாக இருந்த போதிலும், என்னை நம்பிப் பொறுப்புக்கள் தரப்பட்டன.
அதற்கேற்ப, உழைத்தேனா, பங்களித்தேனா என்பதை நான் கூற முடியாது.
ஆனால், உண்மையாக இருந்தேன் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்....
சரியான நேரத்தில் தங்களின் பங்களிப்பு.. மன்றத்தின் வளர்ச்சிக்கு உதவியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தொடர்ந்து மன்றத்தில் பங்களித்து.. புதியவர்களுக்கு வழிகாட்டுவதே... மன்றத்திற்கு சிறப்பு தான்..

அக்னி
15-08-2008, 11:52 PM
மிக்க மகிழ்ச்சி அறிஞரே...
மன்ற வளர்ச்சிக்கு ஏதுவாக, ஏதுவான எனது பங்களிப்புக்கள் என்றும் தொடரும்...

சிவா.ஜி
16-08-2008, 04:13 AM
மன்றத்தின் பொறுப்பாளர்களாய் இருந்து வழிநடத்தி, வழிகாட்டிவிட்டு, இன்னும் வழிகாட்டியாய் இருக்கப்போகும், மூத்த பொறுப்பாளர்களுக்கு நன்றியுடன் வாழ்த்தும், பொறுப்பைக் கொடுத்து கௌரவித்த நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த நன்றியும் கூறி, இட்ட பணியின் பொறுப்புணர்ந்து செயல்படுவேனென உறுதியும் கூறுகிறேன்.

சுகந்தப்ரீதன்
16-08-2008, 05:16 AM
இதுவரை பொறுப்புடன் மன்றத்தை வழிநடத்தி தற்போது பணிவிடை பெற்ற உறவுகளுக்கு எனது நன்றியையும்... புதிதாக நிர்வாகத்தில் இடம்பெற்ற உறவுகளுக்கு எனது வாழ்த்தையும்.. தொடர்ந்து பணியில் நீடிக்கும் உறவுகளுக்கு எனது பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!!

உங்கள் அனைவரின் ஒத்துழைப்பில் தொடர்ந்து உயரட்டும் மன்றமும் தமிழும் என்றென்றும்..!!

உதயசூரியன்
16-08-2008, 05:25 AM
[B]பதினாறு மாதங்கள் கழித்து இதோ!! எனக்கு சுதந்திரம். பதவியிலிருந்து விடுதலை.

பொறுப்பாளர் ஆனபின் என்ன செய்தேன் என்று திரும்பிப் பார்க்கையில்... சூனியம்தான் மிஞ்சியது. அவ்வப்போது திரிகளை மாற்றியிருக்கிறேன்.. அவ்வளவே!!!
.


மன்றத்தில்.. என்னை அதிகம் பதித்தவர்களில்.. முக்கியமானவர் நீங்கள்..
உங்களின் பணி எங்களுக்கு தெரியும்..
ஆதவாவுடன் ஆயிரம் முறை சண்டையிடலாம்..
ஆனாலும் சுட்டெரிக்க மாட்டான்..

உங்கள் புகழ் என்றும் ஒலிக்கும்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

sakthim
16-08-2008, 12:00 PM
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.ஓய்வில் செல்லும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளிகிறேன்.

namsec
16-08-2008, 02:42 PM
புதிய நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள்

அறிஞர்
16-08-2008, 03:23 PM
புதிய நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள்
இரண்டு மாதம் கழித்து நண்பரை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி

அறிஞர்
23-09-2008, 02:59 PM
இன்று முதல் புதிய பொறுப்பாளராக செல்வா பொறுப்பெடுக்கிறார். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

அன்பு தோழி பூமகள் தனிப்பட்டக் காரணங்களுக்காக பொறுப்பாளர் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவர் செய்த பணிக்கு நன்றிகள் பல....

அமரன்
23-09-2008, 03:04 PM
பொறுப்பாளராக சேவையாற்றி விடைபெற்றுச் செல்லும் பூமகளுக்கு நன்றி.
புதிதாகப் பொறுப்பெடுக்கும் செல்வாவுக்கு வாழ்த்துகள். சேர்ந்து சேவையாற்றுவோம் வாருங்கள்.

அக்னி
23-09-2008, 03:10 PM
சேவையாற்றிச் செல்லும் பூமகள் அவர்களுக்கு நன்றி...

புதிய பொறுப்பாளராக இணைந்து கொண்ட செல்வா அவர்களுக்கு வாழ்த்துகள்...

shibly591
23-09-2008, 03:45 PM
பூமகளின் பணி செவ்வனே அமைந்திருந்தது..அவர் விடைபெறுவது வருத்தம்தான் என்றாலும் செல்வாவின் மீதுள்ள நம்பிக்கை வருத்தம் தணிக்கிறது..

செல்வாவுக்கு வாழ்த்துக்கள்

சுவேதா
23-09-2008, 11:46 PM
புதிய நிர்வாகக் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்

aren
24-09-2008, 01:59 AM
செல்வா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
24-09-2008, 03:48 AM
வாழ்த்துக்கள் செல்வா....

சிவா.ஜி
24-09-2008, 03:57 AM
பணியாற்றி விடை பெறும் பூமகளுக்குப் பாராட்டும் நன்றியும். பொறுப்பாளராய் பொறுப்பேற்றுக்கொண்ட செல்வாவுக்கு வாழ்த்துகள். இணைந்து மன்றத்தேர் இழுப்போம்.

மதி
24-09-2008, 04:47 AM
வாழ்த்துகள் செல்வா.

தீபா
24-09-2008, 05:51 AM
வாருங்கள் திரு.செல்வா... எதிர்பார்த்திருந்தேன். தக்க சமயம்.. இனி கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேனும்.. :D

விடைபெற்ற சகோதரி பூமகள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

விகடன்
24-09-2008, 07:12 AM
புதிதாக நிர்வாகக் குழுவில் இணைந்துகொண்ட செல்வாவிற்கு வாழ்த்துக்கள்.

அன்பு, ஓவியன், அக்னி, ஆதவன் நால்வரின் பங்களிப்பு அளப்பெரியது. பொறுப்பாளர்கள் என்ற ரீதியில் முத்திரை பதித்தவர்கள்...
நால்வருக்கும் பாராட்டுவதுடன் நன்றியும் சொல்லிக்கொள்கிறேன்.

மேலும் பூமகளுக்கும் பாராட்டுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

செல்வா
24-09-2008, 07:44 AM
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு எனது நன்றிகள்...
உங்கள் அனைவரின் உதவி இல்லாமல் என்னால் எதுவும் செய்து விட முடியாது...
எனவே உங்கள் உதவி மற்றும் ஊக்கங்களை எப்போதும் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பணியை ஏற்றுக் கொள்கிறேன்.

SathyaThirunavukkarasu
24-09-2008, 11:55 AM
புதிய நிர்வாககுழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பதவியிலிருந்து விடை பெருவொருக்கும் நன்றியுடன் வாழ்த்டுக்கள்

நம்பிகோபாலன்
24-09-2008, 12:03 PM
இது வரை மன்றத்தை சிறப்பாக கவனித்து வந்த பொறுப்பாளர்களுக்கு நன்றிகளும், இனி சிறப்புற கவனிக்கப்போகும் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்

ஓவியா
27-09-2008, 10:46 PM
அன்பின் இனிய பூமகளுக்கு,
உங்களுக்கு எங்களின் தற்க்காலிக விடுப்பின் வாழ்த்துக்கள்.

என்றாவது ஒருநாள் நீங்கள் மீண்டும் மன்றம் வருவீர்கள், முன்புபோல் ஆடிப்பாடி மகிழ்ந்து இளசுவின் பாசமழையில் நனைவீர்கள். உங்களின் ஆக்கங்களை அள்ளி வழங்கி எங்களை ஆனந்தப்படுத்துவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மன்றத்தில் உண்மை காதல் உள்ளவர்கள் ஏதாவது ஒரு பேரிலாவது வருவார்கள். நீங்களோ மன்றத்தில் அதிகமாகவே அன்பை செலுத்தி, பெற்றும் கொண்டவர். வருவீர்கள், எப்பொழுது என்பது காலத்தின் கையிலே!!

மன்றத்தில் உங்கள் பங்கு, சொல்லி அடங்காத ஒரு காவியம், உங்கள் அறிவாற்றலை கண்டு வியந்தவர்களில் நானும் உண்டு, முதல் பெண் பொறுப்பாளர் என்று சரித்திரத்திலும் இடம் பிடித்து விட்டீர்கள். அதனால் சேவைக்கு நன்றி என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை.

என் அன்பு தங்கைக்கு ஆசியுடன் விடைக்கொடுக்கிறேன். என்றும் நலமுடன் வளமுடன் வாழ்க.

********************************************************************************************************************

இனிய செல்வாவிற்க்கு,
அவ்வப்போது 'நச்' என்று பதிவுகளை மட்டுமே கொடுத்து என்னை கவர்ந்தவர் நீங்கள், பின் கொஞ்சம் கொஞ்சமாக கருத்துள்ள பின்னூட்டம் குவிந்து, மின் புத்தகத்தில் ஆரம்பித்து இன்று மன்றத்தில் ஒரு உயரிய பொறுப்பையும் பெற்று வியக்க வைத்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

கடமையில் என்றும் சிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். :icon_b:

Mathu
28-09-2008, 09:23 AM
நீண்ட நாட்களின்பின் இங்கே வர சந்தர்பம் கிடைத்திருக்கிறது,

மன்றத்தில் பல தரமான மாற்றங்கள் தெரிகிறது, அதை தரும்
பொறுப்பாளர்,நிர்வாககுளு மற்றும் மன்ற உறவுகள் அனைவருகும்
எனது வாழ்த்துகள்.

சூரியன்
28-09-2008, 10:47 AM
செல்வா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்.

வசீகரன்
30-09-2008, 04:56 AM
அன்பின் இனிய பூமகளுக்கு,
உங்களுக்கு எங்களின் தற்க்காலிக விடுப்பின் வாழ்த்துக்கள்.

என்றாவது ஒருநாள் நீங்கள் மீண்டும் மன்றம் வருவீர்கள், முன்புபோல் ஆடிப்பாடி மகிழ்ந்து இளசுவின் பாசமழையில் நனைவீர்கள். உங்களின் ஆக்கங்களை அள்ளி வழங்கி எங்களை ஆனந்தப்படுத்துவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மன்றத்தில் உண்மை காதல் உள்ளவர்கள் ஏதாவது ஒரு பேரிலாவது வருவார்கள். நீங்களோ மன்றத்தில் அதிகமாகவே அன்பை செலுத்தி, பெற்றும் கொண்டவர். வருவீர்கள், எப்பொழுது என்பது காலத்தின் கையிலே!!உண்மையிலேயே... மன்றத்தில் நான் அதிகம் நேசித்த உறவுகளில் ஒருவர் பூமகள்...
வெகு நாட்களாக அவர் மன்றத்தில் இல்லாதது மனதிற்க்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது..
மற்றொருவர் யவனிகா...! சொந்த பணிகளுக்காக அவர்கள் விடுப்பு எடுத்திருப்பார்கள்
என நினைக்கிறேன்..! மீண்டும் அவர்களை மன்றத்தில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கிறேன்...!

மதுரை மைந்தன்
30-09-2008, 12:10 PM
வாழ்த்துக்கள் செல்வா

மனோஜ்
30-09-2008, 01:46 PM
புதிய நிர்வாககுழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்
மன்றத்தை சிறப்பாக கவனித்து வந்த பொறுப்பாளர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

மன்மதன்
01-10-2008, 08:44 AM
வாழ்த்துகள் செல்வா..

வெற்றி
04-10-2008, 11:21 AM
புதிய நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..மற்றும் நன்றிகள்

பாலகன்
04-10-2008, 07:11 PM
புதிய நிர்வாகக்குழுவில் உள்ள அணைவருக்கும் என் பணிவான வணக்கங்களும்- வாழ்த்துக்களும்,

mathura
05-10-2008, 04:30 PM
பூமகளின் படைப்புகளை சுவைத்திருக்கிறேன். திற்மையான செயல்பாட்டிற்க்கு நன்றி. செல்வாவின் வருகை வளமானதாக அமைய வாழ்த்துக்கள்

கலைவேந்தன்
09-10-2008, 07:53 AM
மாற்றங்கள் மட்டுமே மாற்றமில்லாதது! அனைவருக்கும் வாழ்த்துகள்!

செல்வா
11-10-2008, 05:16 AM
வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் பணிவான நன்றிகள்...

பகுருதீன்
12-10-2008, 07:04 AM
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

பாண்டியன்
23-10-2008, 08:38 AM
இதுவரை சிறப்பாக பணியாற்றிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்..

இனி பொறுப்பேற்கவிருக்கும் புதிய நிர்வாகக்குழுவினருக்கு, வாழ்த்துகள்..!

வாருங்கள்..அனைவரும் ஒன்றிணைந்து மன்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வோம்.

ரங்கராஜன்
23-10-2008, 09:05 AM
பழைய நிர்வாகிகளே நன்றிகள், புது நிர்வாகிகளே வாழ்த்துக்கள்.