PDA

View Full Version : தேடலில்......



subas
14-08-2008, 01:45 PM
வணக்கம்! நேரங்கிடைக்கும் போதெல்லாம் கம்பியூட்டரில் தமிழை தேடுவேன் ஆனால் ''தமிழ் மண்றமே'' கிடைத்துவிடும் என்று நான் எண்ணவில்லை. மண்றத்திற்கு புதியவன். தமிழ் ''க்கு'' இளையவன் வயது 42, இதெல்லாம் என்ன ? சும்மா ஒரு வணக்கம் போட்டுவிட்டால் போதாதா அறிமுகமாவதற்கு, அதுதான் அறிமுகமாகி விட்டேனே, இனி தமிழ் பரிமாறல்கள் கலந்த விருந்துக்காய் தினமும் தமிழ் மண்றத்துக்கு வருவேன். அப்போது யார் என்று ............ எப்படியும் மண்றத்தின் தமிழ்விருந்து வேண்டும். -சுபாஸ்- http://tamilthuralel.blogspot.com/ :cool:

சுகந்தப்ரீதன்
14-08-2008, 02:41 PM
வாருங்கள்... வாருங்கள்..!!

தங்களின் தமிழ்பற்று கண்டு மனம் மகிழ்ந்தேன்..!!

தொடர்ந்து மன்றம் வந்து தமிழ்மணம் பரப்ப வேண்டுகிறேன் தங்களை..!!

அமரன்
14-08-2008, 03:03 PM
வாங்க வாங்க சுபாஸ் அவர்களே!

தமிழில் நன்றாக விளையாடுகின்றீர்கள்.

பயன் மிக்க மன்றத்தில் உங்கள் பங்களிப்பும் சேரட்டும்.
பயன் மிக்க தகவல்களை மன்றமும் உங்களில் சேர்க்கட்டும்..

வாழ்த்துகள்.

அறிஞர்
14-08-2008, 03:56 PM
வாருங்கள் அன்பரே...

தங்களுக்கு தெரிந்த தகவல்களை கொடுங்கள்.. பரிமாறிக்கொள்வோம்..

subas
14-08-2008, 03:59 PM
கண நேரத்தில் உண்மைகள் உறவாடுவதும் உள்ளங்கள் பரிமாறுவதும்
நட்பின் உருக்கத்தில் தான். காதல் கூட மெய்க்காகவே சொல்லப்படும்
மெய்யான பொய் ஆகிவிடுகிறது. எவ்வாறாயினும்,
நட்பென்னும் காட்டாற்று வெள்ளத்தில் கலந்து தமிழ்தூறலில் நனைந்து, தமிழ் மண்றத்தில் இணைந்து இரைந்து வரும் இன்ப வெள்ளத்தில் கலந்து,கரைந்து போவோமா.......? இன்று இது முதல் முயற்சி, அறிமுகம் ஆனாலும், கேழ்விகளோடு ஆரம்பித்து விடை தேடித் தொடர்ந்து உங்களின் எண்னங்களோடும் தமிழ் பரிமாறல்களோடும் நாளை முதல் தினமும் விருந்துக்காய் வருவேன் சில வேளை பரிமாறவும் செய்வேன். இன்று, இந்த இனிய அறிமுக சந்தர்ப்பத்திற்கு நன்றி.
என்றும் அன்புடன் எம்.சுபாஸ். http://tamilthuralel.blogspot.com

tamilambu
14-08-2008, 06:27 PM
வணக்கம் நண்பரே!
வாருங்கள். வந்து எம்முடன் கொண்டாடுங்கள், தமிழை!
உங்களது வார்த்தைகளில் தமிழ் விளையாடுவதைப் பார்த்தால் எனக்கு தமிழில் தட்டச்சு செய்ய பயமாக இருக்கிறது.

shibly591
15-08-2008, 05:35 PM
வரவேற்கிறேன்

அக்னி
15-08-2008, 06:55 PM
வணக்கம்!
வருக சுபாஸ் அவர்களே...
அறிமுகத்திலேயே கலாய்க்கத் தொடங்கி விட்டீர்களே...
விருந்துக்கும் வாருங்கள். விருந்து தரவும் வாருங்கள்.
அறிந்ததுமே, உங்கள் வலைப்பக்கத்தில் அறிவிக்கும், உங்கள் பண்பு சொல்கின்றது, தமிழ்மேல் உங்களுக்குள்ள அன்பை...
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

செல்வா
15-08-2008, 07:32 PM
வாருங்கள் சுபாஸ் தங்கள் வரவு நல்வரவாகுக. தங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

அகத்தியன்
16-08-2008, 08:37 AM
வாருங்கள் சுபாஷ்.. மன்றம் சார்பில் எனது வரவேற்புக்கள்

Narathar
17-08-2008, 06:43 PM
தமிழ் தேடி வந்த தமிழன் சுபாசை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

மதுரகன்
17-08-2008, 07:10 PM
வணக்கம் சுபாஸ் உங்களைப்போல தேடற்பொறியின் உதவியுடன் மன்றத்தில் நுழைந்தவன்தான் நானும் தயங்காமல் உங்கள் படைப்புக்களைத்தாருங்கள்..

இளசு
17-08-2008, 07:57 PM
வாருங்கள் சுபாஸ், சுவையான அறிமுகம்.

உங்கள் தேடல், ஆர்வத்துக்கு ஏற்ற களம் நம் மன்றம்.

ஆக்கபூர்வமான உங்கள் பங்களிப்பால் இது இன்னும் பொலியட்டும்!

வாழ்த்துகள்!

ஓவியன்
18-08-2008, 02:08 AM
வாங்க சுபாஸ், உங்கள் சில பதிவுகளிலேயே உங்கள் மனம் அறிந்தேன்..!!

உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்களை வரவேற்பதில் கொள்ளை மகிழ்ச்சி..!! :)

aren
18-08-2008, 02:15 AM
வாங்க சுபாஸ். உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

lolluvathiyar
19-08-2008, 01:29 PM
வாருங்கள் சுபாஸ் உங்களை வரவேற்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பங்களியுங்கள்

சூரியன்
20-08-2008, 01:24 PM
தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

அனுராகவன்
21-08-2008, 05:49 AM
வாழ்த்துக்களும் வரவேற்ப்பும்..
இனிதே மகிழ்விக்க ,மகிழ வாருங்கள்...